என்ன அத்தை என்னாச்சு ஏன் டல்லா இருக்கிங்க என்ற தேன்மொழியிடம் ஒன்றும் இல்லை தேனு ரோனி இன்னைக்கு போனே பண்ணவில்லை அதான் என்றார் பூங்கொடி. அத்தை அவள் போன் பண்ணவில்லைனா அவளுக்கு எதுவும் பிரச்சனைனு அர்த்தமா நீங்க ஏன் கவலைப்படுறிங்க என்றாள் தேன்மொழி.
மனசுக்கு ஏதோ தப்பா படுது தேனு அதான் என்ற பூங்கொடி சரி வா வேலையை பார்க்கலாம் என்று சென்று விட்டார்.
என்னாச்சு இவளுக்கு ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு உம்முனு இருக்கிறாள் என்ற சுசீலாவிடம் யாரு அத்தை என்றாள் வெரோனிகா. இந்த ஊர்மிளா தான் நேற்று ராத்திரியில் இருந்து இப்படித் தான் இருக்கிறாள் என்றார் சுசீலா.
என்னாச்சு ஊர்மி ஏன் ஒரு மாதிரி இருக்க என்று அவளது தோளில் கை வைத்த வெரோனிகாவின் கையை தட்டிவிட்ட ஊர்மிளா எழுந்து கொண்டாள். ஏய் உன்னைத் தான் என்ற வெரோனிகா அவளை பின்தொடர்ந்து சென்றாள்.
என்னாச்சு ஊர்மி ஏன் என் மேல கோபம் படுகிறாய். நான் என்ன தப்பு பண்ணினேன் என்றவளை முறைத்தவள் நீ எந்த தப்பும் பண்ணவே இல்லை. நான் தான் எல்லா தப்பும் பண்ணினேன் என்று கோபமாக சொல்லி விட்டு அவள் சென்றாள். ஊர்மி நில்லு நான் பேசிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போனால் என்ன அர்த்தம் என்றவளிடம் உன் கிட்ட பேச பிடிக்கவில்லைனு அர்த்தம் என்றாள் ஊர்மிளா.
என்ன சொல்லுற ஊர்மி நான் உன்னோட அண்ணி என்றவளை முறைத்தவள் அண்ணினா உன்னோட அதிகாரத்தை அண்ணனோட நிப்பாட்டிக்கோ என்கிட்ட காட்ட வேண்டாம் என்றாள் ஊர்மிளா.
ஊர்மி என்ன பேச்சு இது என்ற சுசீலாவிடம் விடுங்க அத்தை என்ற வெரோனிகா அமைதியாகி விட்டாள். என்னடி இது கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவள் உன் அண்ணி என்று பற்களைக் கடித்தார் சுசீலா. அண்ணினா அவளுக்கு அடங்கி போகணுமா. எனக்குனு பிரைவசியே இல்லையா என்னாச்சு, நொன்னாச்சுனு கேட்டுக்கிட்டே இருக்கிறாள் என்றாள் ஊர்மிளா.
அவளுக்கும் , எனக்கும் ஒரே வயசு தானே அப்பறம் என்ன அண்ணி என்ற ஊர்மிளாவின் கன்னத்தில் பளாரென அறைந்தார் சுசீலா. என்னடி பேச்சு இதெல்லாம் நீ ஏன் இப்படி பேசிட்டு இருக்கிறாய். உன் வயசுனா அவள் உன் அண்ணன் பொண்டாட்டி இல்லையா வயசுக்கு மரியாதை இல்லைனாலும் உறவுக்கு மரியாதை கொடுக்கனும் அது உனக்கு புரியாதா என்ற சுசீலாவிடம் அத்தை ப்ளீஸ் விடுங்க ஏன் அவளை அடிச்சிங்க என்றாள் வெரோனிகா.
அவங்க என்னோட அம்மா என்னை அடிப்பாங்க, கொல்லுவாங்க உனக்கு என்ன வந்துச்சு நீ சும்மா இருக்கமாட்டியா எல்லா விசயத்திலும் பஞ்சாயத்து பண்ண வராதே என்ற ஊர்மிளாவை மேலும் அடிக்க கை ஓங்கினார் சுசீலா.
அத்தை ப்ளீஸ் என்ற வெரோனிகா அவரைத் தடுத்திட இவளுக்காக என்னையே அடிக்கிறிங்க என்னை விட இவள் தான் உங்களுக்கு உசத்தி என்றாள் ஊர்மிளா. ஊர்மி நீ என்ன பேசுற உனக்கு என்ன பிரச்சனைனு தானே கேட்டேன். அதற்கு நீ பதில் சொல்லாமல் ஏன் தேவையில்லாமல் பேச்சை வளர்க்கிற என்ற வெரோனிகாவிடம் உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதாடி என்னோட பிரச்சனையே நீ தான்.
என்னைக்கு நீ இந்த வீட்டுக்கு வந்தியோ அன்னைக்கே வீட்டில் என்னை எல்லாரும் மறந்துட்டாங்க. எதற்கெடுத்தாலும் ரோனி, ரோனி, ரோனி தான். இங்கே தான் இப்படினா ஸ்கூலில் கூட என்னோட ப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் இப்போ நீ தான் உசத்தி உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை. இப்போ நான் கான்பூர் போறேன் இனி நீ இந்த வீட்டில் நல்லா மகாராணியா இரு ஊர்மிளாங்கிற ஒருத்தியை பிரிய போகிறோம்கிற கவலை கூட இங்கே யாருக்கும் கிடையாது என்றிட வெரோனிகா அவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
ஊர்மி என்ன பேசுற நீ என்ற சுசீலாவிடம் நான் ஒன்றும் தப்பா பேசவில்லையே இந்த வீட்டில் நடக்கிறதை தானே சொன்னேன் என்றவள் இனிமேல் நீங்க தயவுசெய்து என் கிட்ட பேசவே பேசாதிங்கம்மா என்ற ஊர்மிளா தன்னறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
சுசீலாவின் அருகில் வந்த மலர்கொடி சுசீ விடு அவள் சின்னப் பொண்ணு ஏதோ கோபத்தில் பேசி விட்டாள். அவளை விடு அவளாகவே சரியாகிருவாள் என்றார். அக்கா ரோனி என்ற சுசீலாவிடம் அவளுக்கு எல்லாம் புரியும் , புரியலைனா உதய் புரிய வைப்பான் என்றார் மலர்கொடி.
என்னாச்சு ரோனி ஏன் இப்படி இருக்கிறாய் என்ற உதயச்சந்திரனிடம் எனக்கு என்ன மாமா நான் நல்லா தான் இருக்கிறேன் என்ற வெரோனிகா மாமா காலேஜ் திறக்க இன்னும் இரண்டு வாரம் டைம் இருக்கு தானே என்றிட ஆமாம் ரோனி ஏன் கேட்கிற என்றான் உதய். நான் ஒரு இரண்டு வாரம் அம்மா வீட்டில் போயி இருக்கட்டுமா என்றாள் வெரோனிகா.
ஊர்மிளா பேசினதை மனசுல வச்சுருக்கியா ரோனி என்றவனிடம் அவள் ஊருக்கு போகிறாள் மாமா. அடிக்கடி வர முடியாது அதனால அவள் இங்கே இருக்கிற இரண்டு வாரமும் இந்த வீட்டில் நான் வருவதற்கு முன்னே எப்படி இருந்தாளோ அப்படியே இருக்கட்டும். அதை தானே அவள் விரும்புகிறாள் என்றாள் வெரோனிகா.
ரோனி அது என்றவனிடம் எனக்கு அவள் மேல கோபமோ, வெறுப்போ எதுவுமே இல்லை. அவளோட ஆசையை நிறைவேற்றும் கடமை, பொறுப்பு எனக்கும் இருக்கு தானே.
எனக்கும் என் அம்மாவை பார்க்கனும்னு ஆசையா இருக்கு என்றவளிடம் ஸ்கூலில் அட்மிசன் வேலை நடந்துட்டு இருக்கு ரோனி இல்லைனா உன் கூட நானும் வருவேன் என்றான் உதய். நீ அவசியம் ஊருக்கு போகனுமா என்றவனிடம் போகனும் மாமா நீங்க என்னை பஸ் ஏற்றி விடுங்க நான் பஸ்ல போயிக்குவேன் என்றாள் வெரோனிகா.
அது இல்லை ரோனி என்றவனிடம் மாமா நான் ஒன்றும் குழந்தை இல்லை. என்னால தனியா போயிட்டு வர முடியும். இங்கே பஸ் ஏறினால் அங்கே போயி இறங்கி வீட்டிற்கு போயிருவேன். இல்லையா பஸ் ஸ்டாப்பபுக்கு அண்ணன் வரப் போகுது அப்பறம் என்ன என்ற வெரோனிகாவிடம் சரி என்ற உதய் நீ பஸ்ல போக வேண்டாம் நானே உன்னை கொண்டு போயி விட்டுட்டு வரேன் என்றான் உதய்.
இல்லை மாமா வேண்டாம் என்றவளிடம் நான் தான் சொல்கிறேனே ரோனி அப்பறம் என்ன என்றான் உதயச்சந்திரன். சரிங்க மாமா என்றவள் தனது உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
ரோனி என்று வந்த அர்ச்சனாவிடம் சொல்லுங்க அண்ணி என்றாள் வெரோனிகா. எங்கே கிளம்பிட்ட என்ற அர்ச்சனாவிடம் அம்மாவை பார்க்கனும் போல இருக்குனு மாமாகிட்ட சொன்னேன் அண்ணி ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு மாமா சொன்னாரு. அதான்கிளம்பிட்டு இருக்கேன் என்றாள் வெரோனிகா.
உனக்கு ஊர்மி மேல கோபமா என்ற அர்ச்சனாவிடம் இல்லையே ஏன் கேட்கிறிங்க நான் திடீர்னு ஊருக்கு போகிறதாலையா நிச்சயம் இல்லை அண்ணி என்றவள் எனக்கு என்னம்மோ அம்மாவை பார்க்கனும் போல இருக்குனு நேற்றே மாமாகிட்ட சொன்னேன். அதான் இன்னைக்கு அழைச்சுட்டு போகிறேன்னு சொன்னாங்க என்ற வெரோனிகா துணிமணிகளை எடுத்து வைத்தாள். சரி ரோனி பத்திரமா போயிட்டு வா.
இன்னும் ஒரு வாரத்தில் என்னோட என்கேஜ்மென்ட் அது முடிச்சுட்டு நீ ஊருக்கு போகலாமே என்ற அர்ச்சனாவிடம் அண்ணி உங்க என்கேஜ்மென்ட்க்கு கட்டாயம் நான் இருப்பேன் என்றாள் வெரோனிகா.
அர்ச்சனா சென்ற பிறகு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் வெரோனிகா.
என்ன உன் பிரச்சனை அண்ணிகிட்ட ஏன் கத்திட்டு இருந்த என்ற பிரகாஷிடம் நான் ஒன்றும் இந்து அண்ணிகிட்ட எதுவும் சத்தம் போடவில்லையே என்றாள் ஊர்மிளா. கடுப்பான பிரகாஷ் ஏய் நான் அண்ணினு சொன்னது வெரோனிகா அண்ணியை என்றான். அவள் யாரு எனக்கு உதய் அண்ணா வொய்ப் அவ்வளவு தான் உன் மனைவி மட்டும் தான் எனக்கு அண்ணியாக முடியும். நீ தானே என் கூடப் பிறந்த அண்ணன் என்றாள் ஊர்மிளா.
ஏய் என்ன பேச்சு இது கூடப் பிறந்த அண்ணன், கூடப் பிறக்காத அண்ணன்னு பைத்தியமா ஊர்மி நீ நம்ம வீட்டில் அம்மா, பெரியம்மா, அப்பா, பெரியப்பானு பிரிச்சு என்னைக்காவது நடந்திருக்கிறோமா நீ என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்க என்றான் பிரகாஷ்.
உண்மையை பேசினால் நான் லூசா சரி நான் சோகமா இருக்கிறேன்னு நீ என்கிடம பேச வந்தியே உதய் அண்ணா, தேவ் அண்ணா இரண்டு பேரும் வந்தாங்களா. ஏன் அர்ச்சனா அக்கா கூட வரவில்லையே அப்பவே புரிய வேண்டாமா என்ற ஊர்மிளாவிடம் பைத்தியம் மாதிரி பேசாதே ஊர்மி அப்பறம் அறைஞ்சுருவேன். நீ என்ன பேசிட்டு இருக்கனு புரிஞ்சு தான் பேசுறியா என்றவனிடம் எல்லாம் புரிஞ்சு தான் பேசுகிறேன் என்ற ஊர்மிளா தயவுசெய்து என்னை கொஞ்சம் தனியா விடு என்றாள். பிரகாஷும் அவளது அறையை விட்டு வெளியே வந்தான்.
என்ன சொல்கிறாள் என்ற சுசீலாவிடம் விடுங்கம்மா அவளோட பேச்சே சரியில்லை. அவளுக்கு என்ன ஆச்சு ஏன் அண்ணி மேல இத்தனை பொறாமை எதுவுமே புரியவில்லை என்ற பிரகாஷ் சென்று விட்டான்.
என்ன இளமாறா யோசனையா இருக்கிறாய் என்ற நெடுமாறனிடம் காலையில் வீட்டில் நடந்த பிரச்சனை பற்றி தான் அண்ணா யோசிக்கிறேன். ஊர்மிளாவுக்கு என்ன ஆச்சு ஏன் அவள் நம்ம ரோனிகிட்ட அப்படி பேசினாள் என்றார். சின்னப் பொண்ணு இளமாறா அவள் போக போக சரியாகிருவாள் என்றார் நெடுமாறன். நம்ம மருமகள் கூட சின்னப் பொண்ணு தானே அண்ணா என்ற இளமாறனிடம் நம்ம மருமகள் கிட்ட உள்ள தெளிவு ஊர்மிகிட்ட இல்லைப்பா. அதனால நம்ம மருமகள் அதை பெரிய விசயமா எடுத்துக்காது நீ கவலையை விடு என்றார் நெடுமாறன். சரிங்க அண்ணா என்ற இளமாறன் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
என்ன யோசணை என்ற தேவ்விடம் ஒன்றும் இல்லை என்றான் உதய். காலையில் வீட்டில் நடந்த பிரச்சனை பற்றியா என்றவனிடம் இல்லை அது ஒரு விசயமே கிடையாது நான் யோசிக்கிறது வேற விசயம் என்றான் உதய். என்ன சொல்லுற என்ற தம்பியிடம் தன் மனதில் இருந்த விசயத்தை கூறியவன் நான் தப்பு பண்ணுகிறேனோ என்றிட லூசு மாதிரி பேசாதே அண்ணா என்றான் தேவ். இது நிஜமா இருக்க வாய்ப்பே இல்லை என்றவனிடம் நிஜமா இருக்க கூடாதுன்னு தான் நான் திரும்பவும் என்றிட சரி நீ எதையும் யோசிக்காதே அண்ணியோட நல்ல மனசுக்கு எந்த குறையுமே வராது அண்ணா ப்ளீஸ் என்ற தேவ்
தன் அண்ணனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
…..தொடரும்….