என்ன சொல்லுற நிகிலா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் ரோனி இதனால தான் ஊர்மி கிஷோரை அடித்தாள் என்றாள் நிகிலா. சரி நிகி தாங்க்ஸ்டி காரணத்தை சொன்னதுக்கு என்ற வெரோனிகாவிடம் ஊர்மி என்னோட போன் கூட எடுக்க மாட்டேங்கிறாள் ரோனி என்றாள் நிகிலா.
நான் பார்த்துக்கிறேன் நிகி நாளைக்கு அவளே உன் கிட்ட பேசுவாள் என்ற வெரோனிகா போனை வைத்தாள்.
என்ன ரோனி கிளம்பிட்டியா என்ற உதயச்சந்திரனிடம் பதிலே சொல்லாமல் எதையோ யோசித்தபடி இருந்தாள் வெரோனிகா. ஏய் ரோனி உன்னைத் தான் கிளம்பலாமா என்றான் உதய். எங்கே மாமா என்றவளிடம் என்னாச்சுடி உனக்கு உங்க வீட்டுக்கு போகிறதா முடிவு பண்ணி இருந்தோமே ஒரு இரண்டு மணி நேரம் வேலையா நான் வெளியில் போயிட்டு வருவதற்குள் மறந்துட்டியா என்ன என்றான் உதய்.
மாமா ஊர்மிளாவோட கோபத்திற்கு காரணம் தெரிஞ்சுருச்சு என்றாள் வெரோனிகா. என்ன காரணம் என்றவன் சரி அதனால நீ ஊருக்கு போகிற முடிவை மாத்திக்கிட்டியா என்றறான். உதயச்சந்திரனிடம் மாமா ஊர்மிக்கு புரிய வைக்கனும் மாமா என்றவள் நிகிலா சொன்ன விசயத்தை கூறினாள்.
அதை கேட்ட உதயச்சந்திரன் அமைதியாக வெரோனிகாவைப் பார்த்தான். என்ன மாமா அப்படி பார்க்கிறிங்க அர்ஜுன் என்னோட ப்ரண்ட் அது, இதுனு பேசினேன். இப்போ அவனே என்று அவள் சொல்ல வரும் முன் அவளது வாயில் விரலை வைத்தவன் இதில் உன்னோட தப்பும் எதுவும் இல்லை. அர்ஜுனோட தப்பும் எதுவும் இல்லை.
இந்த வயசுல ஒரு பொண்ணு மேல ஈர்ப்பு வருவது சாதாரண விசயம் ரோனி. அவன் உன்னை தொல்லை பண்ணாமல் உனக்கு நல்ல நண்பனா தானே இருந்திருக்கிறான். அவன் மேலையும் எந்த தப்பும் கிடையாது. கிஷோர் விளையாட்டுக்கு பேசின விசயத்தை ஊர்மி ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டாள். அவள் கிட்ட நான் பேசி புரிய வைக்கிறேன் ரோனி அப்பறம் நீ அர்ஜுன் கிட்ட கோபம் படாதே என்றான் உதய்.
இல்லை மாமா நான் அவன் கிட்ட கோபம் எல்லாம் பட மாட்டேன் நீங்க ஊர்மிகிட்ட பேசுங்க என்ற வெரோனிகா பேக்கில் இருந்த துணிகளை அலமாரியில் அடுக்கினாள்.
என் மேலையும் கோபமா ஊர்மிளா என்ற உதயச்சந்திரனிடம் இல்லை என்று தலையை ஆட்டினாள் ஊர்மிளா. என்ன பிரச்சனை உனக்கு கிஷோர் பேசினது தப்பு தான். அதற்காக நீ அவனை அடிச்சுட்ட அப்பவே அந்த பிரச்சனை முடிஞ்சுருச்சே. எதற்காக நீ ரோனி மேல கோபமா இருக்கிறாய் என்றான் உதய்.
அவள் மேல எனக்கு என்ன அண்ணா கோபம் என்ற ஊர்மிளா ஜன்னலை பார்த்திட நான் சொல்லட்டுமா உனக்கு அர்ஜுன் மேல ஒரு க்ரஷ் இருக்கு என்றான் உதய்.
அண்ணா என்று அதிர்ந்தவளை அமைதியாக தன்னருகில் அமர வைத்தவன் உன்னோட ப்ரண்ட்ஸ்ல அர்ஜுன் உனக்கு ஸ்பெஷல்னு எனக்கு தெரியும் இப்போ நடந்த பிரச்சனையை ரோனி சொன்னதுமே நான் புரிஞ்சுகிட்டேன். காலையில் உன்னை அறியாமலே நீ வார்த்தையை விட்டுட்ட வீட்டிலும் எல்லாம் ரோனி தான், ப்ரண்ட்ஸ் மத்தியிலும் எல்லாம் ரோனி தான்னு நீ ப்ரண்ட்ஸ்னு சொன்னப்பவே எனக்குள்ள ஒரு பொறி தட்டுனுச்சு இப்போ புரிஞ்சுருச்சு என்றான் உதய்.
அண்ணா அது என்றவளிடம் ஊர்மி லவ் பண்ணுறது தப்புனு நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதற்கான பக்குவமும், காலமும் இது இல்லை. நீயும் படிக்கனும், அவனும் படிக்கனும் இப்போதைக்கு நீங்க இரண்டு பேரும் உங்க எதிர்காலத்தை நோக்கி முன்னேற பாருங்க.
நீ கேட்கலாம் உன் பொண்டாட்டிக்கும் என் வயசு தானே, நீங்க மட்டும் காதலிக்கலாமான்னு எங்களோட காதல் கட்டாயத்தால உருவானது. அவளுக்கும் , எனக்கும் திருமணம் முடிந்த பிறகு உருவான காதல். நம்ம குடும்ப சூழ்நிலையால தான் வெரோனிகா எனக்கு மனைவியாகிட்டாள். அதை மாற்ற முடியாது. ஆனாலும் அவளோட எதிர்காலத்திற்கான முயற்சியும் படிப்பு தான். அதை அவள் சரியா தான் செய்கிறாள். நீ அவள் மேல உன்னோட கோபத்தை காட்டினது தப்புனு நான் சொல்லவில்லை. அவள் உன்னோட ப்ரண்ட் அதனால நான் தலையிட மாட்டேன். ஆனால் ஒரு அண்ணனா உன்னோட மனசுல உள்ள ஆசை இப்போ தேவையானதான்னு நான் யோசிக்கிறேன்.
உன்னைக் குறை சொல்லனும்னு இதை சொல்லவில்லை உனக்கும் , வெரோனிகாவுக்கும் வயது ஒன்று தான் ஆனால் பக்குவம் வேற வேற. அவள் இந்த வீட்டிலும் சரி, உன்னோட ப்ரண்ட்ஸ் கூடவும் சரி உன்னோட இடத்தை எடுக்கவே இல்லை. அவளும் இணைத்திருக்கிறாள் அவ்வளவு தான் .
நீ இன்னும் இரண்டு வாரத்தில் ஹாஸ்டல் போற அதுவரை நீ சந்தோசமா இருக்கனும்ங்கிறது என்னோட ஆசை. அது ரோனி இருந்தால் நடக்காதுன்னு நீ நினைத்தால் சொல்லு அவளை நான் அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சுடுறேன் என்றான் உதய்.
ஐயோ, அண்ணா நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. கோபத்தில் என்ன பேசுகிறோம்னு தெரியாமல் என்ற ஊர்மிளாவிடம் எதையும் யோசிக்காதே ஊர்மி. இப்போ உனக்கு இந்த காதல் எல்லாம் முக்கியம் இல்லை. படிப்பு தான் என்ற உதய் சரி நீ இன்னும் சாப்பிடலைனு சித்தி சொன்னாங்க வந்து சாப்பிடு என்று தங்கையை அழைத்து வந்தான் உதய்.
என்ன யோசனை எப்போ யார் குடியை கெடுக்கலாம்னா என்ற தேவச்சந்திரனை முறைத்த ஸ்ரீஜாவின் முகத்தில் அந்த ரிப்போர்ட்டை தூக்கி எறிந்தான் தேவ். நீயெல்லாம் மனித பிறவி தானாடி எது எதில் உன் வன்மத்தை காட்டனும்னு விவஸ்தை இல்லையாடி. நீ ஏன்டி இவ்வளவு சீப்பா நடந்துக்கிற அப்படி என்னடி பாவம் பண்ணினான் என்ன திமிர் இருந்தால் இப்படி ஒரு வேலை பண்ணி இருப்ப என்று அவளது கன்னத்தில் பளார், பளாரென அறைந்தான்.
அவள் அவனை முறைத்தபடி நின்றிருக்க பதில் பேசுடி இன்னும் எத்தனை காலம் தான் இப்படியே அரக்கியா நடந்துட்டு இருப்ப என்றிட அவள் பதிலே பேசாமல் இருந்தாள்.
பதில் பேசுடி ஏன் இப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணின என்றிட உன் அண்ணனுக்கு கல்யாணமே நடக்க கூடாதுன்னு தான்டா அப்படி பண்ணினேன் என்றாள் ஸ்ரீஜா.
ஏன்டி உனக்கு இவ்வளவு வன்மம் என்றவனிடம் வன்மம்தான் அந்த மனுசனோட வாழ்க்கையில் இன்னொருத்தி எப்பவுமே வரக் கூடாதுங்கிற வன்மம். நான் வாழ முடியாத வாழ்க்கையை யாருமே வாழக் கூடாது. என்னால முடியலை தேவ் ஏதோ ஒரு வேகத்தில் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன் ஆனால் என்னால நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை இன்னொருத்தியை வாழ விடுற அளவுக்கு அவ்வளவு பெரிய மனசு எனக்கு இல்லை. அவரோட வாழ்க்கையில் எப்பவுமே நான் ஒருத்தி மட்டும் தான் இருக்கனும்னு தான்அப்படி ஒரு கேவலமான வேலையை பார்த்தேன்.
நம்ம கல்யாணம் முடிஞ்ச ஆறு மாதத்தில் தயா மாமாவுக்கு ஒரு ஆக்சிடென்ட் நடந்துச்சு அந்த ஆக்சிடென்ட் அப்போ தான் அவரோட ஆண்மை போயிருச்சுனு ஒரு போலி ரிப்போர்ட் ரெடி பண்ண சொல்லி என்னோட ப்ரண்ட் ரோஸி கிட்ட சொல்லி உன் அண்ணனோட ரிப்போர்ட்டை மாற்றினேன். என் ஆசைப்படியே அவரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாருன்னு நினைச்சு நானும் திருப்தியா இருந்தேன்.
ஆனால் அந்த வெரோனிகா எங்கே இருந்து வந்தாள் பீடை அவளால தான் என்னோட எண்ணம் தவிடுபொடியானது என்ற ஸ்ரீஜா ஆனாலும் நான் பண்ணின ரிப்போர்ட் அவரை அவள் கிட்ட நெருங்க விடாமல் பண்ணும்னு நம்பினேன் என்றவளது கன்னத்தில் பளார் , பளாரென மீண்டும் அறைந்தவன் ஏன்டி நீ எல்லாம் என்ன பிறவிடி.
என் அண்ணனோட ஒரிஜினல் ரிப்போர்ட் அவன் கையில் இப்போ இருக்கு என்ற தேவ் உன் ப்ரண்ட் ரோஸி மாட்டிக்கிட்டாள்.
உன் மேல எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சுடி த்தூ நீ எல்லாம் ஒரு பொண்ணு. உன் முகத்தில் விழிப்பதே அசிங்கம் என்று கோபமாக சென்று விட்டான் தேவ்.
என்னாச்சு அண்ணா உங்க அறையில் ஏதோ சத்தம் என்ற பிரகாஷிடம் ஒன்றும் இல்லை பிரகாஷ் என்ற தேவ் தம்பியுடன் வெளியே சென்றான்.
அடுத்தடுத்த நாட்கள் வேகமாக கடந்து விட வெரோனிகா ஊர்மிளாவிடம் பேசுவதில்லை. ஊர்மிளாவும் அவளிடம் பேசுவதில்லை.
அண்ணி ரொம்ப அழகா இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் நீயும் இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்க ரோனி என்றாள் அர்ச்சனா.
அர்ஜுன், நிகிலா, விஷால், கிஷோர் நால்வரும் வர அவர்களையும் வரவேற்று உபசரித்தாள் வெரோனிகா.
பம்பரமாக தனது நாத்தனாரின் விசேசத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த வெரோனிகாவை அழைத்த பூங்கொடி என்னடி பூ இவ்வளவு கம்மியா வச்சிருக்க என்று மகளுக்கு பூ வைத்து விட்டார். என்னம்மா அதான் நான் வச்சுருக்கேனே என்றவளிடம் அதெல்லாம் போதுமா தலை நிறைய வைத்தால் தான் என் மகளுக்கு அழகா இருக்கும் என்ற பூங்கொடி உன்னோட ஓரகத்தி எங்கே என்றார்.
அவங்களை ஏன்மா தேடுறிங்க என்றவளிடம் இல்லைம்மா உனக்கு மட்டும் பூ வைத்து விட்டு அந்தப் பொண்ணுக்கு கொடுக்காமல் விடக் கூடாதுல என்றிட நான் கூட உங்க பொண்ணுக்கு ஓரகத்தி தான் சித்தி என்று வந்த இந்திரஜாவிடம் ஆமாம்மா நீயும் தான் என்ற பூங்கொடி அவளுக்கு பூவை வைத்து விட்டார். அக்காவுக்கு நான் கொடுத்துடுறேன் என்ற இந்திரஜா பூவை வாங்கிக் கொண்டாள்.
என்ன மாமா இப்போ எல்லாம் நீங்க டல்லாவே இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் நீ சந்தோசமா இருக்கியா ரோனி என்றான் உதய். ஏன் இந்த கேள்வி அதுவும் இப்போ என்றவளை தன்னருகில் அமர வைத்தவன் சொல்லு நீ சந்தோசமா இருக்கியா என்றிட ரொம்ப, ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் மாமா என்றாள் வெரோனிகா.
ரோனி உன்கிட்ட என்னால எதையும் மறைக்க முடியாது இந்த விசயம் உன்னை காயப் படுத்தும்னு தெரியும் ஆனாலும் என்னால மறைக்க முடியாது என்றவன் ஸ்ரீஜா செய்த வேலையை கூறி திரும்பவும் டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட்டை காட்டினான் உதய்.
அதை வாங்கி ஓரமாக வைத்தவள் எனக்கு தெரியும் மாமா என்றாள். என்ன சொல்லுற ரோனி என்றவனிடம் தேவ் மாமா சொன்னாரு. என்கிட்ட மன்னிப்பு கேட்டாரு. ஸ்ரீஜாவோட குணம் எப்பவும் மாறாது மாமா. அவங்களை திருத்த நினைக்காமல் ஒதுங்கி போறது தான் நமக்கு நல்லது என்றவள் இன்னைக்கு அர்ச்சனா அண்ணிக்கு நிச்சயதார்த்தம். சந்தோசமா அதற்கு தயாராகுங்கள் என்ற வெரோனிகாவை பெருமையாக பார்த்தான் உதயச்சந்திரன்.