விதியின் முடிச்சு…(74)

4.7
(6)

ரோனி என்றவனிடம் என்ன மாமா என்றாள் வெரோனிகா. உன்னை நினைத்தால் எனக்கு நிஜமாவே ஆச்சர்யமா இருக்கு நீயும் சின்னப் பொண்ணு தானே ஆனாலும் உன்னோட மெச்சுரிட்டி என்றவனிடம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் மாமா எல்லாமே என்றவள் மாமா இப்படியே நாம ரூம்ல இருந்தாள் நிச்சயதார்த்த வேலையை யாரு பார்க்கிறதாம் சொல்லுங்க என்றாள் வெரோனிகா.

 

உத்தரவு மகாராணி நீங்கள் சொல்லி நான் மறுப்பேனா இப்பொழுதே வேலையை பார்க்கிறேன் என்றவன் கிளம்பிட மாமா நல்லா நடிக்கிறிங்க என்றவள் சிரித்து விட்டு அவனுடன் கீழே சென்றாள்.

 

என்ன ரோனி அக்கா இப்பவும் ரொமான்ஸா என்ற இந்திரஜாவிடம் ஐயோ, அக்கா நீங்க என்னை ரோனினே கூப்பிடுங்க என்றவள் ரொமான்ஸ் தான் உங்க அளவுக்கு இல்லை என்றிட அடிப்பாவி நான் எங்கேடி ரொமான்ஸ் பண்ணினேன். உன் கொளுந்தன் ஒரு டியூப்லைட் என்றாள் இந்திரஜா.

 

அச்சோ என்ன இப்படி சொல்லுறிங்க இந்து அக்கா எங்க பிரகாஷ் மாமா பெட்டர்மாஸ்லைட் ஆச்சே என்றாள் வெரோனிகா. என்ன அண்ணி பெட்டர்மாஸ்லைட் என்று வந்த பிரகாஷிடம் ஹும் குண்டுபல்பு என்றாள் இந்திரஜா. கலகலவென சிரித்தாள் வெரோனிகா .

 

என்னடி நீ என்னம்மோ குண்டுபல்புங்கிற, அண்ணி சிரிக்கிறாங்க என்ன விசயம் என்ற பிரகாஷிடம் மாமா எனக்கு ஒன்றும் தெரியாது. நான் பச்சைப் பிள்ளை எதுவா இருந்தாலும் உங்க ஆளுகிட்ட கேட்டுக்கோங்க என்ற வெரோனிகா ஓடியே விட்டாள்.

 

என்னடி என்ன விசயம் என்றவளிடம் நத்திங் மாம்ஸ் நீ போயி மாப்பிள்ளை வீட்டாளுங்களை கவனி என்றாள் இந்திரஜா. சரி என்னம்மோ ஓரகத்திகள் சேர்ந்து கூடி பேசுறிங்க நடத்துங்க நடத்துங்க நான் போயி என் தங்கச்சி குடும்பத்தை கவனிக்கிறேன் என்று சென்று விட்டான் பிரகாஷ்.

 

தனசேகரன், தனலட்சுமி தம்பதியரை வரவேற்று பாசமாக உபசரித்தாள் வெரோனிகா. லாவண்யாவிடமும் அவளது குழந்தையுடனும் நன்றாக பேசினாள்.

 

பெரியவர்கள் பேசி நிச்சயதாம்பூலம் மாற்றிக் கொண்டனர். அர்ச்சனா விவேக் கைவிரலிலும், விவேக் அர்ச்சனாவின் கைவிரலிலும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அர்ச்சனா மனம் முழுக்க சந்தோசமாக இருந்தாள். மொத்த குடும்பமும் சந்தோசமாக விசேசத்தை நடத்தினர்.

 

 

என்னம்மா அதற்குள்ள கிளம்பனுமா என் கூட ஒரு இரண்டு நாள் இருக்க கூடாதா என்ற வெரோனிகாவிடம் என்ன ரோனி நீ உனக்கு தெரியாதா நம்ம வீட்டில் ஆடு, மாடு, கோழி எல்லாமே இருக்கு. நீ ஒரு பிள்ளைனா அதுங்களும் பிள்ளைகள் தானே உன் பெரியம்மா வினோதா பிள்ளையை பார்த்துக்கனும்னு இங்கே வந்துட்டாங்க. தேனு பாவம் அவளால தனியா சமாளிக்க முடியுமா சொல்லு, பிள்ளையை பாத்துக்கிட்டு வீட்டையும் தனியா அவளால முடியுமா சொல்லு. எனக்கும் ஆசை தான் என் மகளை பக்கத்திலே வச்சு பார்த்துக்கனும்னு ஆனால் என்ன பண்ண நீயும் காலேஜ் போகனுமே என்றார் பூங்கொடி .

 

சரிங்கம்மா என்றவளிடம் நீ நல்லா படிக்கனும் அம்மு. மாப்பிள்ளை உன்னை படிக்க வைக்கிறது பெரிய விசயம் உனக்காக இல்லைனாலும் அவருக்காக நீ நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும் என்றார் பூங்கொடி.

 

சரிங்கம்மா என்றவள் தன் அன்னையைக் கட்டிக் கொண்டு பிரியா விடை கொடுத்தாள். தன் தந்தையின் அருகில் வந்தவளின் தலையை கோதி விட்ட கதிரேசன் எனக்கு பெருமையா இருக்கு ரோனி ஆரம்பத்தில் நம்ம பிள்ளை சின்னப்பிள்ளை எப்படி இந்த குடும்பத்தில் வாழப் போறாளோன்னு பயமா இருந்துச்சு. ஆனால் நீ குடும்பம் நடத்துற அழகை கண்ணார பார்த்துட்டேன். எல்லோரையும் அனுசரித்து அதுவும் இந்த வயசில் ரொம்பவே பெரிய விசயம் ரோனி என்றார். அவள் புன்னகைக்க நீ எப்பவும் சந்தோசமா இருப்படா தங்கம் என்ற கதிரேசனும் மகளிடம் விடைபெற்றார்.

 

 

அர்ச்சனா அண்ணி விசேசம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அடுத்து உங்க நிச்சயம் தான் என்ற வெரோனிகாவிடம் எங்களுக்கு நிச்சயம் எல்லாம் வேண்டாம் நேரா கல்யாணம் தான் அண்ணி என்றான் பிரகாஷ். அவள் சிரித்து விட அவ்வளவு அவசரமாடா உனக்கு என்று மகனது காதை திருகினார் சுசீலா.

 

ஐயோ மம்மி ஏன் இப்படி என்னுடைய காதில் ஓட்டை போட பார்க்கிற என்ற பிரகாஷ் சிணுங்கிட அவனது காதை விட்டார் சுசீலா.

 

சரிங்க அத்தை தூங்கலாமா என்ற வெரோனிகாவிடம் தூக்கம் வருதா ரோனி என்றார் மலர்கொடி. ஆமாம் அத்தை என்ற வெரோனிகா தன்னறைக்கு சென்றாள்.

 

என்ன மாமா தூங்காமல் என்ன யோசனை என்றவளிடம் எனக்கு தூக்கம் வரவில்லை ரோனி கொஞ்சம் வேலை இருக்கு நீ தூங்கு என்ற உதயச்சந்திரன் தனது லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

என்ன தேவ் தனியா என்ன பண்ணிட்டு இருக்க என்று வந்த நெடுஞ்செழியனிடம் என்னை மன்னிச்சுருங்க மாமா என்றான் தேவ். ஏன் மாப்பிள்ளை என்றவரிடம் உங்க பொண்ணை நான் டிவோர்ஸ் பண்ணலாம்னு இருக்கிறேன் என்றான் தேவ். ஏன்பா இந்த முடிவு அவள் மேல நீ உயிரையே வச்சுருந்தியே என்றார் நெடுஞ்செழியன். இப்பவும் அவள் மேல நான் என் உயிரையே தான் வச்சுருக்கேன் மாமா. ஆனால் அவள் பண்ணின தப்புக்கள் எல்லை மீறுது என்றவன் அவள் உதயச்சந்திரனின் மெடிக்கல் ரிப்போர்ட்டை மாற்றி வைத்த கதையை சொல்லிட என்ன தேவ் சொல்லுற இந்த அளவுக்கு ஸ்ரீஜா போவாளா என்றார் நெடுஞ்செழியன்.

 

இதை விட கூட போவாள் மாமா அவளோட வெறி அவளுக்கு கிடைக்காத ஒரு விசயம் வேற யாருக்கும் கிடைக்க கூடாதுங்கிற வெறி. அவள் உண்மையாவே உதய் அண்ணாவை காதலிச்சு இருந்தால் நிச்சயம் இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்கவே மாட்டாள் என்றவன் என்னால அவளை மாற்றவே முடியலை மாமா. அவளோட அன்பை பெற நான் எத்தனையோ முயற்சி பண்ணி பார்த்து விட்டேன். ஆனாலும் என்னால அவளை மாற்ற முடியவில்லை. அதனால தான் இந்த முடிவுக்கு வந்தேன். நீங்க என்ன சொல்கிறீர்கள் என்றான் தேவ்.

 

நான் சொல்ல என்னப்பா இருக்கு என் பொண்ணு உன்னை தண்டித்தால் கூட ஒரு நியாயம் இருக்கு. உன்னால தான் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லை. ஆனால் உதய் அவன் கிட்ட என்ன தப்பு இருக்கு சொல்லப் போனால் இந்த விசயத்தில் அதிக பாதிப்பே அவனுக்கு தான். அவனை கல்யாணமேடை வரை வர வைத்து பிடிக்கவில்லைனு சொல்லி அசிங்கப் படுத்தினாள். அதுவே பெரிய அடி அதோட நிற்காமல் ச்சே எனக்கு என் பொண்ணை நினைத்தாலே எரிச்சலாக இருக்கிறது. அதை விட அவளை சரியாக வளர்க்காத காரணம் என் மேலையே எனக்கு கோபம் கோபமா வருது என்றவர் உன்னோட இந்த முடிவு கூட நல்லதுக்கு தான் தேவ் என்றார் நெடுஞ்செழியன்.

 

 

என்னை மன்னிச்சுருங்க மாமா என்றவனிடம் மன்னிக்க என்ன மாப்பிள்ளை இருக்கு. எல்லோருக்குமே ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கை அமைவதில்லை. கிடைத்த வாழ்க்கையை நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கனும் அந்தப் பக்குவம் ஸ்ரீஜாகிட்ட இல்லை. நீ அவளை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு பண்ணின காரியம் அவளை இத்தனை மோசமான பெண்ணா மாற்றும்னு நான் கனவில் கூட நினைக்கவில்லை என்ற நெடுஞ்செழியன் எந்த முடிவாக இருந்தாலும் எனக்கு சம்மதம் தேவ். ஆனால் நிலாவுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதை மனசுல வச்சுக்கோ என்றார்.

 

நிச்சயம் மாமா நிலா என்னுடைய உயிர். என் மகளை எப்பவும் என்னால பிரியவும் முடியாது. விட்டுக் கொடுக்கவும் முடியாது என்றான் தேவ். சரி மாப்பிள்ளை ரொம்ப நேரம் ஆச்சு வீட்டுக்குள்ள போகலாம் என்ற நெடுஞ்செழியனுடன் வீட்டிற்கு வந்தான் தேவ்.

 

 

ஊர்மிளா ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்தாள். ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் கூட அவளது சிந்தனையை கலைக்கவில்லை. ஊர்மி என்ற அவனது குரல் கூட நான்கு முறை அவன் அழைத்த பிறகு தான் அவளது செவிகளில் விழுந்தது.

 

வந்துட்டியா அர்ஜுன் என்றவளிடம் என்ன விசயம் ஊர்மி ஏன் என்னை வரச் சொன்ன என்றான் அர்ஜுன். ஒன்றும் இல்லை என்றவள் அன்னைக்கு கிஷோர் சொன்னது என்று இழுத்திட அது அவனுங்க கற்பனை என்றான் அர்ஜுன். அப்போ நீ ரோனியை என்று இழுத்தவளிடம் ரோனி என்னோட ப்ரண்ட். பெஸ்ட் ப்ரண்ட் அவ்வளவு தான் ஊர்மி. எனக்கு உன்னை விட, கிஷோர், விஷால், நிகிலாவை விட ரோனியை தான் ரொம்ப பிடிக்கும் அவள் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் என்றான் அர்ஜுன்.

 

அர்ஜுன் என்ற ஊர்மிளா ஏதோ சொல்ல வந்து தயங்கிக் கொண்டே இருந்தாள். என்னாச்சு ஊர்மி என்றவனிடம் ஐயம் ஸாரி நீ இதை எப்படி எடுத்துப்பனு எனக்கு தெரியவில்லை. இன்னும் இரண்டு நாளில் நீ டெல்லி போயிருவ, நான் கான்பூர் போயிருவேன் . அப்பறம் சொல்ல முடியுமான்னு தெரியவில்லை அதான் என்றவள் எனக்கு உன்னை பிடிச்சுருக்கு அர்ஜுன். நாம படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நான் ஆசைப் படுகிறேன் என்றாள் ஊர்மிளா.

 

என்னை லவ் பண்ணுறியா ஊர்மிளா என்றவனிடம் ஆம் என்று தலையை ஆட்டினாள் ஊர்மிளா. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை ஊர்மி ஆனால் ஒன்று நீ என்னோட ப்ரண்ட் இதுவரை அப்படித் தான் நினைத்தேன். நீ இப்போ என்னை லவ் பண்ணுறதா சொல்ற எனக்கு இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் கொடுக்கிறாயா ஊர்மி என்றான் அர்ஜுன். நான் யோசிக்கனும் என்றவனிடம் தாராளமா யோசி அர்ஜுன் என்ற ஊர்மிளா வீட்டிற்கு கிளம்பினாள்.

 

அர்ஜுன் நேராக தன் நண்பர்களை பார்க்க சென்றான். என்ன மச்சி என்ன யோசனை என்ற விஷாலிடம் ஊர்மிளா சொன்ன விசயத்தை கூறினான் அர்ஜுன். பாருடா இந்த ஊர்மியோட கல் மனசிலும் ஒரு காதலா என்ற கிஷோரை முறைத்த அர்ஜுன் இந்த வாயால தான் அவள்கிட்ட அறை வாங்கின அப்போ கூட திருந்த மாட்டியே சொரனை கெட்ட நாயே என்றிட மச்சி ஊர்மி யாரு நம்ம ப்ரண்ட் . நாளைக்கே உன்னை கட்டிக்கிட்ட பிறகு அண்ணி. அண்ணிங்கிறது அம்மா மாதிரி அம்மா அடிச்சதுக்கெல்லாம் யாராவது பீல் பண்ணுவாங்களா சொல்லு என்ற கிஷோரிடம் யப்பா சாமி நான் இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள்ள நீ கல்யாணம் லெவலுக்கு போயிட்ட கொஞ்சம் சும்மா இருடா என்றான் அர்ஜுன்.

 

என்ன முடிவு பண்ணப் போற அர்ஜுன் என்ற விஷாலிடம் எனக்கு புரியலைடா யோசிக்கனும் என்றவன் சரிடா அம்மா வெயிட் பண்ணுவாங்க நான் கிளம்புறேன் என்று அர்ஜுன் தன் வீட்டிற்கு கிளம்பினான் .

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!