விதியின் முடிச்சு…(75 to 80)

4.8
(8)

அத்தியாயம் 75

 

 

அர்ஜுன் என்ற கிரிஜாவிடம் சொல்லுங்கம்மா என்றான் அர்ஜுன். என்ன யோசனை இன்னும் இரண்டு நாளில் ஊருக்கு போறதை பற்றியா என்றார் கிரிஜா. என்னை பிரிந்து நீங்கள் எப்படிம்மா இருப்பிங்க என்றவனின் தலை கோதிய கிரிஜா அவனிடம் கண்ணா , நீ படிக்க தானே போகிறாய். அம்மாவுக்கு சந்தோசம் தான்டா உன் அப்பா போன பிறகு எனக்கு இருக்கிற ஒரே துணை நீ மட்டும் தான். உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டியது அம்மாவுடைய கடமை. இப்ப கூட நீ உன்னுடைய எதிர்காலத்தை நோக்கி தானே பயணப்படுற அதில் வருத்தம் படலாமா. அம்மாவுக்கு சந்தோசம் தான் அர்ஜுன் என்றார் கிரிஜா.

 

சரி என்ன யோசனை என்றவரிடம் அம்மா ஊர்மிளா என்னை லவ் பண்ணுகிறாளாம் என்றவன் தன் அம்மாவின் முகத்தை பார்த்தான். நீ என்ன சொன்ன அர்ஜுன் என்ற கிரிஜாவிடம் யோசிக்கனும்னு சொன்னேன் அம்மா என்றான் அர்ஜுன்.

 

உனக்கு ஊர்மிளாவை பிடிச்சுருக்கா என்ற கிரிஜாவிடம் ஊர்மி என்னோட ப்ரண்ட் அதை தான்டி இதுவரை நான் யோசிச்சது இல்லை. இப்பவும் யோசிக்க முடியவில்லை. என்னவோ தடுக்குது. அவளை ப்ரண்ட்டா மட்டுமே பார்த்துட்டேன் என்றவனிடம் உனக்கு இந்த நிமிசம் வரை ஊர்மிளா மேல காதல் இல்லை தானே என்றார் கிரிஜா.

 

இல்லைம்மா என்றவனிடம் வராதவரை சந்தோசம் தான் அர்ஜுன். ஊர்மிளாகிட்ட தெளிவா நீ சொல்லிடு அவள் உனக்கு வெறும் ப்ரண்ட்னு என்றார் கிரிஜா. சரிங்கம்மா என்றவனிடம் என்னப்பா அம்மா சொன்னதும் சரின்னு சொல்லிட்ட ஏன் அம்மா அப்படி சொன்னேன்னு கேட்க மாட்டியா என்றார் கிரிஜா.

 

அம்மா எனக்கு விருப்பம் இருந்து நீங்க வேண்டாம்னு சொன்னால் கூட காரணம் கேட்கலாம். ஆனால் எனக்கே ஊர்மிளா மேல இன்ட்ரஸ்ட் இல்லை அப்படி இருக்கும் பொழுது எதற்காக காரணம் கேட்கப் போகிறேன் என்றான் அர்ஜுன்.

 

சிரித்த கிரிஜா ஏன்டா இப்படி இருக்க என்று விட்டு உன் மனசுல ஊர்மிளா மேல ஆசை இல்லைன்னு சொன்னதால மட்டும் தான் இந்த காரணம் சொல்கிறேன். அவள் ரொம்ப நல்ல பொண்ணு தான் அர்ஜுன். ஆனால் அவளோட பார்வை ஆரம்பமே சந்தேகம். கிஷோருடைய இயல்பே எல்லோரையும் கிண்டலா பேசுறது தான். அவன் உன்னையும், ரோனியையும் கிண்டலா சொன்னது தப்பு தான். அதற்கு அவள் கோபம் பட்டு கிஷோரை அடிச்சது கூட ஓகே. ஆனால் ரோனி கூட சண்டை போடுறது கொஞ்சம் அதிகம் தான். 

 

ரோனி அவளோட அண்ணி. அவளையும், உன்னையும் சேர்த்து அவளோட மனசுல கற்பனை பண்ணிக்கிட்ட காரணத்தால மட்டும் தான் அவள் ரோனி கூட சண்டை போட்டிருக்கிறாள். நாளைக்கு ஒரு வேளை நீ ஊர்மிளாவை கல்யாணம் பண்ணிக்கிற சூழ்நிலை வந்தால் வெரோனிகா கூட பேசித் தான் ஆகனும். இன்னும் சொல்லப் போனால் அவள் உன்னோட ப்ரண்டும் கூட அப்போ ஊர்மிளா அதையும் தப்பா புரிஞ்சு எதாவது வார்த்தை தடித்து விட்டால் எல்லோருக்குமே மனக்கசப்பு. 

 

நல்ல நட்பு முறியனும். ஆனால் இப்போ இந்த காதல் உனக்கு வேண்டாம்னு நீ முடிவு பண்ணினதால ஊர்மிளாவோட நட்பும் தொடரும். வெரோனிகாவோட நட்பும் தொடரும். எப்பவுமே யாருக்கும் பாதகம் இல்லை பாரேன் என்றிட மம்மி என்ன இவ்வளவு யோசிக்கிறிங்க. 

 

 

அனுபவம் அர்ஜுன் என்றவர் இதோ பாரு அர்ஜுன் அம்மா உன்னை ஏதும் குழப்பவில்லையே என்றிட ஐயோ அம்மா நான் எப்பவுமே தெளிவா தான் இருக்கிறேன். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்ற அர்ஜுன் நான் நாளைக்கே ஊர்மிகிட்ட தெளிவா சொல்லிடுறேன் என்றான். ஒருவேளை உனக்கு ஊர்மிளாவை பிற்காலத்தில் பிடித்தாலும் அம்மாவுடைய ஆதரவு உனக்கு உண்டு என்றார் கிரிஜா. தாங்க்ஸ் அம்மா என்றவன் சரி வாங்க சாப்பிட என்றான்.

 

 

என்ன பண்ணுற ரோனி சாப்பிட வா என்ற சுசீலாவிடம் அத்தை ஒரு ஐந்தே நிமிடம் இதை மட்டும் முடிச்சுக்கிறேன் என்றாள் வெரோனிகா. என்னடி பேக் பண்ணிட்டு இருக்க என்ற சுசீலாவிடம் ஊர்மியும் சரி, அர்ஜுனும் சரி வெளியூருக்கு படிக்க போறாங்களே அதான் இரண்டு பேருக்கும் கிப்ட் பேக் பண்ணிட்டு இருக்கிறேன் என்றாள் வெரோனிகா.

 

என்னடி கிப்ட் என்ற சுசீலாவிடம் அதை ஊர்மி தான் பார்க்கனும். இதை அர்ஜுன் தான் பார்க்கனும். கிப்ட் அவனுக்கு தானே என்றவளது காதை திருகிய சுசீலா சரிடி வா என்றிட அந்த நேரம் வந்த ஊர்மிளா அர்ஜுனுக்கு நீ எதற்காக கிப்ட் பண்ணுற ரோனி என்றாள்.

 

அவன் என்னோட ப்ரண்ட் என்ற வெரோனிகா கிப்ட் பாக்ஸை எடுத்து உள்ளே செல்ல அவளை விரட்டி வந்த ஊர்மிளா என்ன பண்ணுற ரோனி நீ என்றாள். என்னாச்சு உனக்கு என்ற வெரோனிகாவிடம் எனக்கு ஒன்றும் இல்லை அர்ஜுனுக்கு கிப்ட் கொடுக்க என்ன அவசியம் என்றாள் ஊர்மிளா.

 

என்ன பேசுற ஊர்மி அவன் என்னோட ப்ரண்ட் அவன் வெளியூருக்கு படிக்கப் போகிறான். அதான் ஒரு சின்ன ப்ரசன்டேசன். மாமாகிட்ட சொல்லிட்டு தான் நான் பேக் பண்ணிட்டு இருந்தேன் என்ற வெரோனிகாவை முறைத்தாள் ஊர்மிளா.

 

ரோனி அர்ஜுனுக்கு நீ எந்த கிப்ட்டும் கொடுக்க கூடாது என்றவளை அமைதியாக பார்த்த வெரோனிகா சரி ஊர்மி நான் கொடுக்கவில்லை என்ற வெரோனிகா தன் அறைக்கு சென்றாள்.

 

மாமா சாப்பிட வாங்க என்ற வெரோனிகாவை தன்னருகில் அமர வைத்தவன் நாம ஷாப்பிங் போகனும் ரோனி என்றான் உதய். ஏன் மாமா என்றவளிடம் என்ன ரோனி நீ மூன்று நாளில் உனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகுது. அதனால உனக்கு டிரஸ் எல்லாம் எடுக்க வேண்டாமா என்றான் உதய்.

 

அதான் ஏற்கனவே நிறைய இருக்கே என்றவளிடம் அதெல்லாம் போதாது ரோனி. அதுவும் இல்லாமல் அதெல்லாம் டெய்லி யூஸ் கிடையாது. அதனால தான் என்றவனிடம் மாமா அப்போ ஊர்மிக்கு என்றாள் வெரோனிகா. உன் நாத்தனார் பாசத்திற்கு அளவே இல்லையாடி நேற்று தான் உன் மாமா அவளுக்கு இரண்டு சூட்கேஸ்ல வைக்கிற அளவுக்கு டிரஸ் வாங்கி கொடுத்திருக்கிறாரு அதனால நீ உதய் கூட போயி ஷாப்பிங் பண்ணிட்டு வா என்றார் சுசீலா.

 

சரிங்க அத்தை என்றவளிடம் சரிம்மா இரண்டு பேரும் சாப்பிட்டு போங்க என்ற சுசீலா செல்ல பின்னாலே உதய், ரோனி இருவரும் சாப்பிட வந்தனர்.

 

ஊர்மிளா ஏதோ சிந்தனையுடனே அமர்ந்திருக்க என்னடி சாப்பிடாமல் சாப்பாட்டை விரலால் கிண்டிட்டு இருக்க என்றார் சுசீலா. பசி இல்லைம்மா என்றவள் பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றாள். 

 

 

என்ன யோசனை ரோனி என்றவனிடம் மாமா ஊர்மி வந்து அர்ஜுனுக்கு ஏன் நீ கிப்ட் பண்ணுறனு கேட்டாள். கிப்ட் பண்ணக் கூடாதுனு வேற சொன்னாள் என்றாள் வெரோனிகா. ஏன் அப்படி சொன்னாள் என்று தெரியவில்லை என்றவளிடம் பொசசிவ் என்றான் உதய். மாமா என்றவளிடம் ஆமாம் ரோனிஎன்றான் உதய். ஊர்மிக்கு அர்ஜுன் கிட்ட என்ன பொசசிவ் என்று ரோனி கூறிட அவள் அவனை லவ் பண்ணுறாள் ரோனி என்றான் உதய்.

 

என்ன சொல்றிங்க மாமா என்றவளிடம் ஆமாம் ரோனி என்றவன் அவள்கிட்ட பேசியதை கூறிட மாமா லவ் பண்ணுறது தப்பா என்றாள். தப்பில்லை ரோனி ஆனால் அந்த லவ் அவளோட படிப்பை பாதிக்க கூடாது என்றவன் நம்ம லவ் உன்னோட படிப்புக்கு பாதிப்பு வராமல் எனக்கும், உனக்கும் பார்த்துக் கொள்ள தெரியும். உனக்கு அந்த மெச்சுரிட்டி இருக்கு ஊர்மிக்கு அது இருக்குதான்னு தெரியவில்லை பார்க்கலாம் என்றவன் அந்த மாலின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினான்.

 

மாமா போதும் இத்தனை எதற்கு என்றவளிடம் ரோனி சொல்கிறேன்ல சும்மா இரு என்றவன் அவளுக்கான உடைகளை பார்த்து பார்த்து அவன் செலக்ட் செய்தான். அவளோ அவனை ரசித்தபடி நின்றாள்.

 

என்னடி நிற்க சொல்லிட்ட என்ற பிரகாஷிடம் அங்கே பாரு உதய் மாமா ரோனிக்கு எப்படி செலக்ட் பண்ணிட்டு இருக்காருனு நீயும் தான் இருக்கியே நீ வேஸ்ட் பிரகாஷ் என்றாள் இந்திரஜா. அடிப்பாவி நீ நல்லா வருவடி உனக்கு இந்த டிரஸ் நான் தான்டி வாங்கி கொடுத்தேன் என்ற பிரகாஷிடம் அதான் சொல்றேன் உன் செலக்சன் வொர்ஸ்ட் என்றாள் இந்திரஜா.

 

அவளை அவன் முறைத்திட விடு மாம்ஸ் சும்மா சும்மா முறைச்சுகிட்டு முறைப் பையன் தான் அதற்காக எப்போ பாரு முறைச்சுட்டு சுத்துவியா என்ற இந்திரஜா ரோனியை நெருங்கினாள்.

 

என்ன ரோனி இப்படியா மாமாவை கடிச்சு திங்கிற மாதிரி பார்ப்ப என்று இந்திரஜா கேட்டிட சுதாரித்தவள் இல்லைக்கா என்று வெட்கம் கொண்டாள். உதய் சிரித்து விட்டு தன் வேலையில் கண்ணாக இருந்தான்.

 

ஆமாம் நீங்க எங்கே இங்கே என்ற வெரோனிகாவிடம் நாளைக்கு நம்ம ஸ்கூல் ஸ்டாப் ஒருத்தங்களுக்கு கல்யாணம் அண்ணி. அதான் பிரசன்டேசன் வாங்க வந்தேன் என்றான் பிரகாஷ்.

 

 

 

பிரசன்டேசன் வாங்க வரும் போது கூட இந்து அக்கா துணைக்கு வரனுமோ பிரகாஷ்மாமா என்ற வெரோனிகாவிடம் ஐயோ அண்ணி அவளுக்கு டிரஸ் வாங்க வந்தாள் என்றான் பிரகாஷ். வெரோனிகா சிரித்து விட, பிறகு நால்வரும் ஒன்றாக ஷாப்பிங் முடித்து விட்டு டின்னரும் முடித்த பிறகு வீட்டிற்கு வந்தனர்.

 

 

என்ன மாமா இது இவ்வளவு நேரம். மதியம் வீட்டை விட்டு கிளம்பினோம். இப்போ நேரத்தை பாருங்க என்றவளிடம் விடு ரோனி அம்மாவும், சித்தியும் எதுவும் சொல்ல மாட்டாங்க என்றவன் மனைவியுடன் தன் அறைக்கு சென்றான்.

 

என்ன சொல்லுறிங்க என்ற வசுந்தராவிடம் நிஜம் தான் தேவ் ,ஸ்ரீஜாவை விவாகரத்து பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கிறான் என்றார் நெடுஞ்செழியன். என்ன திடீர்னு என்ற வசுந்தராவிடம் , ஸ்ரீஜா உதய் மெடிக்கல் ரிப்போர்ட்டை மாற்றிய சங்கதியை சொல்ல என்னங்க சொல்லுறிங்க அவள் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தாள். ஏற்கனவே அண்ணிக்கு இவளை சுத்தமா பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில் உதய்க்கு இப்படி ஒரு காரியத்தை இவள் செய்திருப்பது அண்ணிக்கு தெரிந்தால் நம்ம இந்துவோட கல்யாணமும் அடி படுமே. இவளால இன்னும் எத்தனை கேவலத்தை அனுபவிக்கப் போறோமோ என்ற வசுந்தரா நெஞ்சைப் பிடித்தபடி விழுந்தார்.

 

வசு , வசு எழுந்திரும்மா என்று பதறிய நெடுஞ்செழியன் தேவ் என்று கத்திட மாமா என்னாச்சு என்று தேவ் ஓடி வந்தான். உன் அத்தை என்றவர் அழுதிட தேவ் வந்து வசுந்தராவை பரிசோதித்து பார்த்தான். மாமா பல்ஸ் குறையுது உடனே ஹாஸ்பிடல் போகனும் என்ற தேவ் பிரகாஷ் , உதய் என்று சத்தமிட அவர்கள் இருவரும் வந்தனர். என்னாச்சு மாமா அத்தைக்கு என்ற உதயச்சந்திரனிடம் பேசிட்டு இருந்தவ திடீர்னு நெஞ்சைப் பிடித்த படி விழுந்து விட்டாள் உதய் என்ற நெடுஞ்செழியன் அழ ஆரம்பித்தார்.

 

 

                    அத்தியாயம் 76

 

 

மாமா அழாதிங்க அத்தைக்கு ஒன்றும் ஆகாது என்ற உதயச்சந்திரன் நெடுஞ்செழியனை சமாதானம் செய்தார். அவளைப் பெத்த நான் குத்துக்கல்லாட்டம் இருக்கிறேனே என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா கடவுளே என்று கல்யாணிதேவி ஒருபுறம் அழுது கொண்டிருக்க அத்தை வசுந்தராவுக்கு ஒன்றும் ஆகாது என்றார் மலர்கொடி. அக்கா சொல்லுறது தான் அத்தை அண்ணிக்கு எதுவும் ஆகாது என்று சுசீலாவும் கூறினார்.

 

ஸ்ரீஜா ஒரு ஓரமாக அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளை யாருமே கண்டு கொள்ளவில்லை. இந்திரஜாவை அர்ச்சனா, பிரகாஷ் , வெரோனிகா மூவரும் சமாதானம் செய்து கொண்டிருந்தனர். உதய், நெடுமாறன், இளமாறன் மூவரும் நெடுஞ்செழியனை சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

 

தேவ் அவசர சிகிச்சைப் பிரிவு அறையில் இருந்து வெளியே வந்தான். என்னாச்சு தேவ் என்ற உதய்யிடம் அத்தைக்கு ஹார்ட் அட்டாக் அண்ணா என்றவன் ஆஞ்சியோ பண்ணியாகனும் என்றிட சீக்கிரம் அதற்கு ஏற்பாடு பண்ணுடா என்று மலர்கொடி கூறிட தேவ் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்தான்.

 

 

ஸ்ரீஜா தன் தந்தையின் அருகில் வந்தாள். அப்பா என்றவளை முறைத்தவர் தயவுசெய்து என்னை அப்படி கூப்பிடாதேம்மா என் பொண்ணு நீ. உன்னைப் பெற்று உனக்கு உயிர் கொடுத்த உன்னோட அம்மா சாக கிடக்கிறாள். அதற்கு காரணம் நீ தான். எனக்கு என் பிள்ளைகளை விட என் மனைவி தான் முக்கியம். அவள் ஒருத்தி தான் என் வாழ்க்கையோட ஆதாரம். சுவரில்லாமல் சித்திரம் யாராலும் வரைய முடியாது. என் வசுந்தரா இல்லாமல் போனால் மறு நிமிசமே நானும் இல்லாமல் போயிருவேன். உன்னை மாதிரி ஒரு பெண்ணை பெத்த பாவத்திற்கு நாங்க கண்ணை மூடிடுறோம். நீ இப்படியே நீயும் வாழாமல், அடுத்தவங்களையும் வாழவிடாமல் இருக்க என்ன எல்லாம் பண்ணனுமோ எல்லாத்தையும் பண்ணு என்று நெடுஞ்செழியன் கூறினார்.

 

அப்பா என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர் உன்னால் தான் ஸ்ரீஜா உன்னால் மட்டும் தான் உன் அம்மா சாகப் போகிறாள் நீ பண்ணின காரியம் என்று ஏதோ சொல்ல வந்த நெடுஞ்செழியனின் அருகில் வந்த உதய் மாமா ப்ளீஸ் நீங்க கொஞ்சம் நிதானமா இருங்க என்றான்.

 

இப்ப கூட உன்னை எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப் படுத்த விரும்பாமல் அவன் என்னைத் தடுக்கிறான் என்ற நெடுஞ்செழியன் கோபமாக அவளை பார்த்து விட்டு உதய் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தார்.

 

பெரியப்பா கவலைப் படாதிங்க பெரியம்மாவுக்கு ஒன்றும் ஆகாது என்ற வெரோனிகா தேவ் மாமா அவங்களை ஆபரேசன் தியேட்டருக்கு கூட்டிட்டு போகும் முன்னே கொஞ்சம் பார்க்கலாமா இந்த விபூதி மட்டும் வச்சு விட்டுறேனே ப்ளீஸ் என்றாள். சரிங்க அண்ணி வாங்க என்றவன் அவளை வசுந்தரா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

 

 

அண்ணி அத்தையை தொந்தரவு பண்ணாமல் பார்த்துட்டு போகனும் என்றவன் நகர அவனது கையை பிடித்தவள் தேவ் மாமா நீங்களும் இங்கேயே இருங்க என்ற வெரோனிகா வசுந்தராவின் நெற்றியில் விபூதி வைத்து விட்டு பெரியம்மா நான் பேசுறது உங்களுக்கு கேட்கும்னு நம்புகிறேன் என்றாள். கண்களை மெல்ல உருட்டிய வசுந்தரா கேட்கிறது என்பது போல தலையை அசைத்தார்.

 

இது எங்க ஊரு கருப்பணசாமி கோவில் விபூதி. உங்களுக்கு உடம்பு சரியாகிட்டா நாம குடும்பத்தோட கோவிலுக்கு போயி பொங்கல் வச்சு, கிடா வெட்டி நேத்திக்கடன் செலுத்துறதா வேண்டி இருக்கிறேன். அப்பறம் பெரியம்மா உங்க நெஞ்சைப் பிழியுற விசயம் என்ன. உங்களுக்கு ஸ்ரீஜா மேல உள்ள அளவு கடந்த பாசம். உங்க உயிருக்கு உயிரான மகளோட எதிர்காலம் கேள்விக்குறியா மாறிடும்ங்கிற கவலை தானே. அந்தக் கவலையை விடுங்க என்ற வெரோனிகா தேவ்மாமா நீங்களும் பெரியம்மா கிட்ட சொல்லுங்க நீங்க எந்த சூழ்நிலையிலும் ஸ்ரீஜாவை பிரிய மாட்டேன்னு சொல்லுங்க என்றாள். அண்ணி என்றவளிடம் பெரியம்மா கையில் சத்தியம் பண்ணுங்க தேவ் மாமா ப்ளீஸ் என்று வெரோனிகா கெஞ்சிட சரிங்க அண்ணி என்ற தேவ் அத்தை உங்களுக்காக நான் ஸ்ரீஜாவை விவாகரத்து பண்ணுற முடிவில் இருந்து மாறிட்டேன். எங்களுக்கு நீங்கள் வேண்டும் அத்தை. நிலாவுக்கு அவளோட பாட்டி வேண்டும் ப்ளீஸ் அத்தை என்றான் தேவ். உங்க உடம்பு ஆபரேசனுக்கு ஒத்துழைக்க வேண்டும் நீங்கள் மனசு தைரியமா இருக்கனும் என்றிட பெரியம்மா தைரியமா இருப்பாங்க தேவ் மாமா என்றவள் வசுந்தராவின் கையைப் பிடித்துக் கொண்டு இந்து அக்கா கல்யாணம் பற்றி நீங்க கவலையே பட வேண்டாம். பிரகாஷ் மாமாவுக்கும், இந்து அக்காவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க எந்த கவலையும் படக் கூடாது சரியா என்றவள் நீங்க இல்லாமல் இந்து அக்கா கல்யாணம் நடக்காது. உங்க மனசை திடமா வச்சுக்கோங்க என்றவள் உணர்ச்சிவசப் படக்கூடாது என்று விட்டு தேவ் மாமா போகலாம் என்றாள். சரிங்க அண்ணி என்று அவளை அழைத்து வந்தான் தேவ்.

 

தேவ் நான் அம்மாவை பார்க்கனும் என்ற ஸ்ரீஜாவிடம் வேண்டாம் அவங்க ஹார்ட் பேசன்ட் அடிக்கடி எல்லோரும் பார்க்கிறது நல்லதில்லை. இப்போ தான் அண்ணி பேசினதில் அவங்க கொஞ்சம் தெளிவா ஆகி இருக்காங்க நீ போயி பேசி அவங்களை கொன்னுடாதே என்ற தேவ் வசுந்தராவின் ஆபரேசனுக்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தான்.

 

வெரோனிகா அனைவரையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். இந்து அக்கா எவ்வளவு நேரம் அழுதுட்டு இருப்பிங்க சாப்பிட வாங்க பெரியம்மாவுக்கு ஒன்றும் ஆகாது என்றிட இல்லை ரோனி எனக்கு பசிக்கவில்லை என்றாள் இந்திரஜா. இந்து அவள் தான் சொல்கிறாளே அத்தைக்கு ஒன்றும் ஆகாதுடி என்ற அர்ச்சனாவும் அவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்.

 

 

ஊர்மிளா யோசனையுடன் அர்ஜுனை பார்க்க கிளம்பினாள். எங்கே போகிறாய் ஊர்மி என்ற பிரகாஷிடம் அண்ணா நான் நாளைக்கு ஊருக்கு போகனுமே அதான் சில பொருட்கள் வாங்கனும் அதான் என்றிட சரி ஊர்மி நீ கிளம்பு என்றான் பிரகாஷ்.

 

 

என்ன ஊர்மி என்ற அர்ஜுனிடம் அர்ஜுன் உன்னோட பதில் என்றாள் ஊர்மிளா. ஊர்மி தயவு செய்து என்னை மன்னித்து விடு என்னால உன்னை நல்ல தோழியா மட்டும் தான் நினைக்க முடிகிறது. அதைத் தான்டி என்னால யோசிக்கவே முடியவில்லை. என்னை புரிந்து கொள் ஊர்மிளா என்றவனை கலங்கிய விழிகளுடன் பார்த்தாள் ஊர்மிளா.

 

ஊர்மி ப்ளீஸ் அழாதே என்றவனிடம் நான் அழவில்லை அர்ஜுன் என்றவள் சரி நான் கிளம்புகிறேன் என்றிட ஊர்மி நீ என்னை புரிஞ்சுக்கிட்டியா என்றான் அர்ஜுன். நீ என்னோட நல்ல தோழி. நாம இரண்டு பேரும் கடைசி வரை நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்றவனிடம் நண்பர்கள் காதலர்களாக மாறினாள் தப்பா அர்ஜுன் என்றாள் ஊர்மிளா.

 

ஊர்மி ப்ளீஸ் புரிந்துகொள். அது தப்பே இல்லை ஆனால் என்னோட மனசு இப்போ காதலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வரவில்லை. நான் படிக்கனும். என் அம்மா எத்தனை அவமானங்களை சந்திச்சு என்னை படிக்க வைத்து இருக்காங்கனு உனக்கு தெரியாதா சொல்லு. அவங்களுக்கு நான் நல்ல மகனா இருக்கனும். அவங்க ஆசை நான் நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போகனும். அதை முதலில் நிறைவேற்றனும் அப்பறம் தான் இந்த காதல் எல்லாம் என்றவனை முறைத்தவள் ரோனி மேல மட்டும் உனக்கு காதல் எப்படி வந்துச்சு அர்ஜுன் என்றாள்.

 

ஊர்மி புரியாமல் பேசாதே என்னோட வயசு அப்படி , அதற்காக பொறுப்பில்லாமல் நான் காதல்னு சுத்திட்டு இருக்கவில்லை. ரோனி மேல வந்தது காதல் இல்லை ஒரு விதமான இன்பாச்சுவேசன் அதை ஏன் நீ லவ்னு நினைக்கிற. எப்போ அவளுக்கு கல்யாணம் ஆன விசயம் தெரிய வந்ததோ அந்த நிமிசத்தில் இருந்து அவள் எனக்கு நல்ல தோழி மட்டும் தான். உனக்கே தெரியும் அவள் உதய் சாரை எவ்வளவு லவ் பண்ணிட்டு இருக்கிறாள்னு அப்படி இருக்கும் பொழுது விளையாட்டுக்கு கூட அவளையும், என்னையும் தப்பா கற்பனை பண்ணிக்காதே என்ற அர்ஜுன் ஊர்மி நீ எப்பவுமே என்னோட பெஸ்ட் ப்ரண்ட்.

 

நீ மனசை போட்டு குழப்பிக்காதே தெளிவா இரு. நல்லா படி அப்பறம் ஆல் தி பெஸ்ட் என்றவன் கிளம்பலாமா என்றான். சரி அர்ஜுன் என்றவள் என்னைக்காவது உனக்கு என்னை காதலிக்கிற ஐடியா இருந்தால் சொல்லிடு என்றாள். ஊர்மி நிச்சயம் அப்படி ஒரு நினைப்பு என் மனசுல வந்தால் உன்கிட்ட சொல்ல எனக்கு என்ன தயக்கம் என்றவன் இது என்னோட கிப்ட். நீ நல்லபடியா படிக்கனும் . எதையும் யோசிச்சு உன்னை குழப்பிக்க கூடாது என்ற அர்ஜுனிடம் சரி அர்ஜுன் என்றவள் ஸாரி அர்ஜுன் உன் மேல நான் அதிக உரிமை எடுத்ததுக்கு என்ற ஊர்மிளா ரோனி இந்த கிப்ட்டை உனக்காக ரெடி பண்ணி வச்சுருந்தாள். நான் தான் அவள் கிட்ட உனக்கு இதை கொடுக்க கூடாதுன்னு சொன்னேன். 

 

அவள் சரின்னு சொல்லிட்டாள். எனக்கு ஒரு மாதிரியா போச்சு. உன் மேல நான் வளர்த்துக்கிட்ட பொசசிவ்நஸ் காரணமா அவள் என் அண்ணிங்கிறதையே மறந்து அவளை நிறைய காயப் படுத்தி விட்டேன். அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. இந்த கிப்ட் அவள் உனக்காக ரெடி பண்ணினது இதை இப்போ நான் உங்க இரண்டு பேருடைய தோழியா இதை உன்கிட்ட சேர்க்கிறேன் என்றாள் ஊர்மிளா.

 

ஊர்மி நீ ரோனியை புரிஞ்சுக்கிட்டது நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோசம் என்றவன் சரி ஊர்மி நீ பத்திரமா வீட்டுக்கு போ என்றவன் ஒரு நிமிசம் என்று ஒரு கிப்ட்டை நீட்டினான். இது என்னோட கிப்ட் நீ ஊருக்கு போற இல்லையா அதற்காக என்றவன் அவளிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்தான்.

 

ஊர்மிளாவிற்கு வருத்தம் தான் ஆனால் காதல் என்பது ஒருவரை கட்டாயப் படுத்தி வர வைக்க கூடாது என்பதும் அவளுக்கு புரிந்து இருந்தது. அவள் தனது தவறுகளுக்காக தோழியான அண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்க நினைத்து வீட்டிற்கு சென்றாள்.

 

 

அம்மா ரோனி எங்கே என்ற ஊர்மிளாவிடம் அவள் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறாள். ஏதோ வாங்கனும்னு சொன்னியே வாங்கிட்டியா என்ற சுசீலாவிடம் அத்தைக்கு இப்போ எப்படி இருக்கு என்றாள் ஊர்மிளா. ஆஞ்சியோ பண்ணிட்டு இருக்காங்க. நீ ஊருக்கு போகனும் இல்லையா அதான் உனக்கு உதவலாம்னு அர்ச்சனாவும், நானும் வீட்டுக்கு வந்தோம் என்ற சுசீலா தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

 

 

 

            அத்தியாயம் 77

 

 

என்ன ரோனி ஏன் டல்லா இருக்க என்ற உதயச்சந்திரனிடம் மாமா வீட்டுக்கு போகனும் என்றவளிடம் என்ன பிரச்சனை ரோனி அத்தைக்கு ஆபரேசன் முடிஞ்சதும் போயிரலாம் என்றவனிடம் மாமா வயிற்று வலி மாமா போகனும் ப்ளீஸ் என்றவளிடம் ஸாரி ரோனி மறந்துட்டேன் என்றவன் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்.

 

என்னப்பா இரண்டு பேரும் வந்துட்டிங்க என்ற சுசீலாவிடம் ரோனிக்கு வயிற்றுவலி சித்தி என்றிட சரிப்பா அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ ஹாஸ்பிடல் கிளம்பு என்றார் சுசீலா.

 

வெரோனிகா சென்று குளித்து விட்டு தன்னறையில் படுத்து விட்டாள். அவளறைக்கு வந்த ஊர்மிளா அவள் உறங்குவதைக் கண்டு அமைதியாக சென்று விட்டாள்.

 

வசுந்தரா பிழைத்து விட்டார். அவருக்கு இருந்த ஆபத்து விலகியது. அனைவரும் கொஞ்சம் சந்தோசம் அடைந்தனர். ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

 

வீட்டிற்கு வந்த உதய் வெரோனிகாவின் அருகில் வந்தான். உறங்கும் மனைவியின் நெற்றியில் கை வைத்திட அவள் விழித்துக் கொண்டாள். மாமா எப்போ வந்திங்க என்றவள் பெரியம்மாவுக்கு எப்படி இருக்கு என்றிட அத்தை பிழைச்சுட்டாங்க ரோனி என்றான். சந்தோசம் என்றவள் டயர்டாக இருந்திட எதாச்சும் சாப்பிட்டாயா என்றான் உதய்.

 

சாப்பிட்டேன் மாமா அத்தை இப்போ தான் சாப்பாடு கொடுத்தாங்க , ஜூஸ் கூட இருக்கு பாருங்க என்றவளின் கன்னத்தில் கை வைத்தவன் ஹாஸ்பிடல் போகலாமா என்றான் . மாமா இது ஒரு பிரச்சனையா இது இயல்பு தானே இதற்கு போயி ஹாஸ்பிடல் போயிட்டு நீங்க போயி சாப்பிடுங்க . பாருங்க எவ்வளவு டயர்டா இருக்கிங்கனு என்றவளது நெற்றியில் முத்தமிட்டவன் ஐ லவ் யூ ரோனி. உனக்கு உடம்பு சரி இல்லைனாலும் கூட என்னை கவனிக்க நீ தவறுனதே இல்லை என்றான் உதய்.

 

உங்களை கவனிக்கிறதை விட வேற என்ன பெரிய வேலை எனக்கு என்றவளது வாயில் விரலை வைத்தவன் பேச ஆரம்பித்தால் பேசிட்டே இருப்ப நீ தூங்கு முதலில் என்றான். நீங்க சாப்பிடலை என்றவளிடம் சாப்பிட்டு தான்டி வந்தேன் நீ படுத்துக்கோ நான் குளிச்சுட்டு வந்துடுறேன் என்றவன் குளியலறைக்குள் சென்றான்.

 

 

 

குளித்து முடித்து வந்தவன் உறங்கும் மனைவியின் நெற்றியில் முத்தமிட அவள் கண் விழித்தாள். என்னடி நீ தூங்கவில்லையா என்றவனிடம் இல்லை மாமா சும்மா தான் கண்ணை மூடி இருந்தேன் என்றவளைப் பர்த்து சிரித்தவன் எனக்கும் டயர்டா இருக்கு ரோனி என்று அவளை அணைத்தபடி உறங்கினான்.

 

 

அடுத்த நாள் ஊர்மிளா கான்பூருக்கு சென்று விட்டாள். அர்ஜுன் டெல்லிக்கு சென்று விட்டான்.

 

அடுத்தடுத்த நாட்கள் வேகமாக கடந்து சென்றது. வெரோனிகா கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

 

மாமா நீங்க ஸ்கூலுக்கு போகும் வழியில் என்னை டிராப் பண்ணிடுங்க என்றவனிடம் நிச்சயம் ரோனி என்றவன் அவளுடனே கிளம்பினான்.

 

என்ன அண்ணா அண்ணியும், நீங்களும் ஒரே கலரில் டிரஸ் என்ற பிரகாஷிடம் இனிமேல் அப்படித்தான் பிரகாஷ் மாமா. முன்னே தான் நான் ஸ்கூல் பொண்ணு அதனால யூனிபார்ம் போட்டேன். இப்போ காலேஜ் கேர்ள் அதனால என் சந்துரு மாமா சர்ட் கலருக்கு மேட்சிங்கா நானும் டிரஸ் போடுவேனே என்று சிரித்தாள் வெரோனிகா. ஏய் வாயாடி வாயடிச்சது போதும் கிளம்பு நேரம் ஆச்சு என்றான் உதய்.

 

சரிங்க மாமா என்றவள் வீட்டில் அனைவரிடமும் சொல்லி விட்டு கணவனுடன் கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

ரோனி என்ன தாலிச்செயினை மறைக்காமல் இருக்க என்றவனிடம் ஏன் மறைக்கனும் அப்போ எனக்கு பதினேழு வயசு. நான் மைனர்பொண்ணு அதனால தாலியை மறைச்சேன். இப்போ நான் மேஜர் அதோட என் சந்துரு மாமாவை பயங்கரமா லவ் பண்ணுறேன். அப்போ அவர் கட்டின தாலியை நான் ஏன் மறைக்கனும் , அப்பறம் இது செயின் தானே மாமா . யாராவது தாலிச்செயின் தான்னு கண்டுபிடித்தாலும் ஐ டோண்ட் கேர் என்றவள் சிரித்திட சரிடி நீ மறைக்கவே வேண்டாம் என்றான் உதய்.

 

ஐ லவ் யூ சந்துரு மாமா என்றவளிடம் லவ் யூ டூ ரோனிம்மா என்றான் உதய். சரி, சரி காலேஜ் வந்துருச்சு இறங்கு என்றவனிடம் ச்சே அதுக்குள்ள வந்துருச்சு வெரி பேட் நான் என் சந்துரு மாமா கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டே வரலாம்னு நினைச்சேனே என்றாள் வெரோனிகா. உன் சந்துரு மாமா கூட வீட்டுக்கு வந்த பிறகு மணிக் கணக்கா பேசலாம் இப்போ நீ காலேஜ் உள்ளே போ என்றான் உதய். சரிங்க மாமா பாய் என்றவள் கல்லூரிக்குள் நுழைந்தாள்.

 

ஹேய் ரோனி என்ற குரலில் திரும்பிட கார்த்திகா நின்றிருந்தாள். ஹாய் கார்த்திகா என்றவளிடம் நீயும் இந்த காலேஜ் தானா என்றவளிடம் ஆமாம் தமிழ் லிட்ரேச்சர் என்றாள் வெரோனிகா. அப்போ கம்ப்யூட்டர்சயின்ஸ் இல்லையா.

 

உன் சந்துரு மாமா கம்ப்யூட்டர்சயின்ஸ் தானே என்ற கார்த்திகாவைப் பார்த்து சிரித்தவள் அவங்க கம்ப்யூட்டர்சயின்ஸ் படிச்சா நானும் படிக்கனுமா என்ன. நான் என்ன படிக்கனும்னு நான் தான் முடிவு பண்ணனும் கார்த்திகா என்றவள் நீ எந்த டிபார்ட்மென்ட் என்றாள். கெமிஸ்ட்ரி என்ற கார்த்திகா தனது வகுப்பிற்கு சென்றாள்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!