ஏன்டி உன் புருசன் வந்தான்னா உன்னை திட்டுவான்டி போ போயி எழுது என்ற மலர்கொடியை பாவமாக பார்த்தாள் வெரோனிகா.
அத்தை ஏன் இப்படி என் சந்தோசத்தை கெடுக்கிறிங்க அவர் வீட்டில் இருக்கும் பொழுது தான் எப்போ பாரு படி, எழுதுனு ஏதோ ஹெட்மாஸ்டர் போல படுத்தி எடுக்கிறாரு. கல்யாணம் ஆன இந்த இரண்டு வாரத்தில் இன்னைக்கு தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன் அது உங்களுக்கு ஏன் தான் பிடிக்க மாட்டேங்குதோ என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சரி நான் என் ரூமுக்கு போறேன் என்றாள்.
அடியே உடனே முகத்தை தூக்கி வச்சுக்காதே என்ற மலர்கொடி சரி உனக்கு என்ன வேண்டும் சாப்பிட என்றார். நீங்கள் இன்னைக்கு ரெஸ்ட் எடுங்க தினம் தினம் நீங்க தானே சமைக்கிறிங்க என்றாள் வெரோனிகா.
அடியேய் நாங்க சமைக்காமல் வேற யாருடி சமைக்கிறது என்றார் சுசீலா. நான் சமைக்கிறேன் அத்தை என்றவளிடம் உனக்கு புடவையே கட்டத் தெரியாது நீ சமைக்கப் போறியா என்றார் மலர்கொடி.
அத்தை புடவை கட்டுறது வேற டிப்பார்ட்மென்ட் . சமையல் அது வேற டிப்பார்ட்மென்ட். வயலில் அறுப்பு காலத்தில் அம்மா, பெரியம்மா இரண்டுபேருமே வயல்காட்டிற்கு போயிருவாங்க. தேனு அண்ணியும் சில சமயம் அவங்க கூட வயலுக்கு போயிறுவாங்க.
அக்கா ஹாஸ்டலில் தானே படித்தாள் அப்போ நான் மட்டும் தான் வீட்டில் இருப்பேன். அறுப்பு நடக்கும் பொழுது வேலைக்கு வந்த எல்லோருக்குமே சமைக்கனும். என் அம்மா, பெரியம்மா இரண்டு பேருக்குமே பெரும்பானை சாப்பாடுக்கு அளவு தெரியாது எங்க அப்பத்தா இருக்கும் போது நானும், அவங்களும் சேர்ந்து தான் சமைப்போம். அப்பத்தா கைப் பக்குவம் அப்படியே எனக்கும்னு அப்பா சொல்லுவாங்க என்றவளது கண்கள் கலங்கிட என்னாச்சுடி என்றார் சுசீலா.
என் அப்பத்தா பத்தி பேசவும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்றவள் சரி விடுங்க இன்னைக்கு நானே சமைக்கிறேன் என்றவள் இரண்டு மாமியாரையும் வெளியில் தள்ளி விட்டு கட கடவென சமைக்க ஆரம்பித்தாள்.
ஏன்டி காய்கறியாவது வெட்டித் தரோம்டி என்ற மலர்கொடியிடம் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
என்னக்கா இவள் இப்படி இருக்கிறாள் என்ற சுசீலாவிடம் இவளைத் தானே அப்பாவினு சொன்ன பாரேன் அவன் கிளம்பினதும் அவள் போட்ட ஆட்டத்தை என்ற மலர்கொடி அவள் எப்பவுமே இப்படியே சந்தோசமா இருக்கனும் என்றார்.
நம்ம உதய்க்கு சரியான ஜோடி இவள் தான் என்ற சுசீலாவிடம் ஜாடிக்கேத்த மூடி தான் என்று சிரித்தார் மலர்கொடி.
என்ன மருமகளுகளா சமைக்காமல் என்ன சிரிப்பு என்ற கல்யாணிதேவியிடம் நாங்களும் இப்போ மாமியார் ஆகிட்டோம் அத்தை என்ற சுசீலா எங்க மருமகள் இப்போ சமைக்கிறாள் என்றார்.
எதேய் அந்த சின்னக்குட்டி சமைக்கிறாளா ஏன்டி நாங்க சாப்பிடுறதா என்ன என்றார் கல்யாணிதேவி. அத்தை அவள் சின்னப் பொண்ணு முதல் முதலா சமைக்கனும்னு கேட்டிருக்கிறாள் அதான் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே என்றார் சுசீலா.
சரி சரி என்ற கல்யாணிதேவியும் தன் மருமகள்களுடன் சேர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தார். என்ன அப்பத்தா நீங்க அம்மா, சித்தி இரண்டு பேரையும் உட்கார வச்சு பேசிட்டு இருக்கிங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் அப்பா, சித்தப்பா, அண்ணன்கள் எல்லோரும் சாப்பிட வந்துருவாங்களே என்றாள் அர்ச்சனா.
உங்க அப்பா, சித்தப்பா, அண்ணன்கள் எல்லோரும் பட்டினியா கிடக்கட்டும் என்ற சுசீலாவிடம் அப்போ நாம என்றாள் ஊர்மிளா. நாம இன்னைக்கு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி சாப்பிடலாம் என்றார் மலர்கொடி.
ஐஐஐ சூப்பர் பெரியம்மா என்ற ஊர்மிளா அம்மா எனக்கு சிக்கன்பிரியாணி என்றிட சிக்கன் பிரியாணியா இருடி உனக்கு ஐஸ் பிரியாணி தான் என்றார் சுசீலா.
என்ன மம்மி பழையசோறா என்று உதட்டை பிதுக்கிய ஊர்மிளாவைப் பார்த்து சிரித்த கல்யாணிதேவி உன் அண்ணி என்ன சமைக்கிறாளோ அது தான் இன்னைக்கு சாப்பாடு என்றார்.
என்னது அண்ணி சமையலா ஐய்யய்யோ நான் மாட்டேன்பா அக்கா நமக்கு ஆன்லைன்ல எதாச்சும் ஏன் பழையசோறு கூட ஆர்டர் பண்ணுக்கா என்றாள் ஊர்மிளா.
பழையசோறுக்கு எதுக்குடி ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுறிங்க அக்கா, தங்கச்சி இரண்டுபேரும் ஆளுக்கு ஒரு தட்டை எடுத்துக்கிட்டு இரண்டு தெரு சுற்றினாளே போதும் மொத்தக் குடும்பத்துக்குமே பழையசோறு கிடைக்கும் என்ற சுசீலாவைப் பார்த்து மலர்கொடியும் , கல்யாணிதேவியும் சிரிக்க ஆரம்பித்தனர்.
என்ன பழையசோறு என்று வந்த வெரோனிகாவைப் பார்த்த சுசீலா உன் நாத்தனாருக்கு பழையசோறு வேண்டுமாம் ரோனி என்றிட என்ன ஊர்மி உனக்கு பழையசோறுனா ரொம்ப பிடிக்குமா என்றாள் வெரோனிகா.
ஐய்யோ மக்கு ரோனி அவங்க என்னை கலாய்க்கிறாங்க என்ற ஊர்மிளாவிடம் ஓஓ அப்படியா சரி சரி என்றவள் அத்தை சாப்பாடு ரெடி என்றிட எல்லோரும் வந்த பிறகு சேர்ந்து சாப்பிடலாம் என்ற மலர்கொடி நீ போயி கொஞ்ச நேரம் எழுதுடி உன் புருசன் வந்து திட்டப் போறான் என்று மலர்கொடி கூறிட சரிங்க அத்தை என்ற வெரோனிகா சென்று எழுத ஆரம்பித்தாள்.
அண்ணா என்ற பிரகாஷிடம் என்ன பிரகாஷ் என்றான் உதயச்சந்திரன். வீட்டுக்கு கிளம்பலாமா என்றவனிடம் சரி கிளம்பலாம் என்றான். அப்பா, சித்தப்பா என்றிட அவங்க ஏற்கனவே கிளம்பிட்டாங்க என்றான் பிரகாஷ்.
என்ன மேடம் நீங்க இன்னும் கிளம்பவில்லையா என்ற பிரகாஷிடம் பைக் பஞ்சர் சார் என்றாள் வினித்ரா. சரி அப்போ எப்படி போவிங்க என்ற பிரகாஷிடம் ஆட்டோ எதாச்சும் வருதானு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றாள்.
அண்ணா என்ற பிரகாஷிடம் அவங்களை நான் டிராப் பண்ணிட்டு வரேன் நீ வெயிட் பண்ணு என்றதும் ஓகே அண்ணா என்ற பிரகாஷ் அலுவலக அறையில் லேப்டாப்பில் ஏதோ வேலையை கவனித்துக் கொண்டு இருந்தான்.
அவளது அப்பார்ட்மென்ட் வாசலில் அவளை இறக்கி விட்ட உதயச்சந்திரன் கிளம்ப எத்தனிக்க தாங்க்ஸ் சார் என்றாள். இட்ஸ் ஓகே மேடம் என்றவன் கிளம்ப எத்தனிக்க ஒரு காபி குடிச்சுட்டு போகலாமே சார் என்றாள் வினித்ரா.
இல்லை மேடம் லஞ்ச் டைம் ஆச்சு இப்போ போயி காபி இன்னொரு நாள் பார்க்கலாம் என்றவனிடம் அப்போ லஞ்ச் சாப்பிட்டு போங்க என்றாள் வினித்ரா.
இட்ஸ் ஓகேங்க வீட்டில் அம்மா வெயிட் பண்ணுவாங்க நான் கிளம்புகிறேன் என்றவன் கிளம்பி விட வினித்ரா தான் சோகமாகினாள். ச்சை என்ன இந்த மனுசன் கொஞ்சம் கூட பிடி கொடுத்தே பேச மாட்டேங்கிறாரு என்று நினைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றாள்.
என்ன மேடம் யாரோ ஒருத்தன் கூட பைக்ல வந்து இறங்கிருக்கிங்க என்ற பவித்ராவிடம் ஏய் அவர்தான்டி உதய் சார். என்னோட கொலிக் என்ற வினித்ரா தன் வேலையைக் கவனித்தாள். வெறும் கொலிக் மட்டுமா என்றவளிடம் எனக்கு விருப்பம் தான் அங்கே என்னனு தெரியலையே என்ற வினித்ரா சரிடி சாப்பாடு எடுத்து வை என்று சாப்பிட ஆரம்பித்தாள்.
என்ன அண்ணா விட்டுட்டிங்களா என்ற பிரகாஷிடம் உன்னோட இந்த சோசியல் சர்வீஸ் எல்லாம் நீயே பார்த்துக்கோ பிரகாஷ் என்றான் உதயச்சந்திரன். ஸாரி அண்ணா என்ற பிரகாஷ் தன் அண்ணனுடன் வீட்டிற்கு கிளம்பினான்.
என்னப்பா வந்துட்டிங்களா என்ற மலர்கொடியிடம் பசிக்குது பெரியம்மா சாப்பாடு எடுத்து வைங்க என்ற பிரகாஷ் டைனிங் டேபிளிற்கு சென்றான்.
என்ன பண்ணிட்டு இருக்க என்ற குரலில் நிமிர்ந்த வெரோனிகா கையில் இருந்த நோட்டை மூடி வைத்து மறைத்தாள். என்ன அது என்ற உதயனிடம் ஒன்றும் இல்லையே என்றவளின் கையில் இருந்த அந்த நோட்டை பறித்தவன் அதைத் திறந்து பார்த்தான்.
உன்னை என்ன செய்ய சொன்னால் நீ என்ன பண்ணிட்டு இருக்க உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா இதான சொல்லப் போறிங்க என்றவள் நான் எல்லாமே ஓரளவுக்கு எழுதி முடிச்சுட்டேன்.
மைண்ட் ரிலாக்ஸ் பண்ண தான் டிராயிங் பண்ணிட்டு இருந்தேன் என்றாள் வெரோனிகா. அவன் சிரித்து விட்டு எப்பவும் உன்னை திட்டுறது மட்டும் தான் என்னோட வேலைனு நினைச்சியா என்றவனிடம் இல்லை எப்பவும் நீங்க திட்டிட்டு தானே இருப்பிங்க என்றாள்.
நல்லா வாய் பேச ஆரம்பிச்சுட்ட என்றவன் சாப்பிட வா என்றிட அமைதியாக அவனுடன் வந்தாள்.
வா உதய், வா ரோனி என்ற சுசீலா இருவருக்கும் உணவினை பரிமாறினார். அவங்க முதலில் சாப்பிடட்டும் அத்தை என்றவளிடம் நீயும் உட்கார்ந்து சாப்பிடு என்றான் உதயச்சந்திரன்.
அவளும் அமைதியாக அமர்ந்திட அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். சுசீ இன்னைக்கு சாப்பாடு பிரமாதமா இருக்கே என்றார் நெடுமாறன். இந்த கத்தரிக்காய் கூட்டு சூப்பர், கீரைப் பொறியல், இது என்ன அவியல்கறி சூப்பரா இருக்கே என்ற நெடுமாறன் பாயாசம் கூட சூப்பரா இருக்கு என்றார்.
ஆமாம் சித்தி ஏதோ டிபரென்ட் தெரியுதே நிஜமாவே நீங்க தான் சமைச்சிங்களா இல்லை எதாவது ஹோட்டலில் ஆர்டர் பண்ணிங்களா என்றான் உதயச்சந்திரன்.
ஆமாம் ஹோட்டல் தான் உதய் செஃப் பெயர் கூட வெரோனிகாஉதயச்சந்திரன் என்றார் சுசீலா. அவன் புரியாமல் பார்த்திட இன்னைக்கு சமையல் உன் பொண்டாட்டி தான்டா கண்ணா என்றார் கல்யாணிதேவி.
நீ தான் சமைச்சியா என்றவனிடம் ஆமாம் என்று தலையை ஆட்டினான். அப்போ நீ என்றவனிடம் இல்லைங்க நான் பாதிக்கு மேல எழுதிட்டேன் என்றாள். உன்னை எப்பவுமே படி படினு நான் சொல்லவே இல்லை நான் சொல்ல வருவதை காதில் வாங்கிட்டு அப்பறம் பதில் சொல்லு என்றவன் சாப்பாடு நல்லா இருக்கு நேரம் கிடைக்கும் பொழுது அர்ச்சனா, ஊர்மிளாவுக்கும் கூட சமையல் கற்றுக்கொடு.
ஏன் எனக்கும், பிரகாஷ்க்கும் கூட சொல்லிக் கொடு என்றவனிடம் சரிங்க என்றாள் வெரோனிகா.
என்ன உதய் இத்தனை வருசமா சமைக்கிற சித்தி , அம்மாகிட்ட கூட நீயும், உன் தம்பி, தங்கச்சிகளும் சமைக்க கற்றுக் கொள்ள நினைக்கவில்லை. இந்த மகாராணிகிட்ட தான் கற்றுக் கொள்ளனுமா என்றார் சுசீலா.
உங்க சமையல் சாப்பிடுறது மாதிரி இருந்தால் அவனே கத்துட்டு இருப்பானேமா என்று இளமாறன் கூறிட என்ன என்றார் சுசீலா. அந்த ரசத்தை எடுக்கச் சொன்னேன் சுசீலா என்ற இளமாறன் மௌனமாகிட அனைவரும் சிரித்தனர்.
அப்பாவும், பெரியப்பாவும் உங்க கிட்டையும், பெரியம்மாகிட்டையும் சமையல் கத்துக்குவாங்க அம்மா. நாங்க எங்க அண்ணிகிட்டையே கத்துக்கிறோம் என்றான் பிரகாஷ்.
ஏன்டி உன்னை ஒரு நாள் கிட்சனுக்குள்ள விட்டதுக்கு எங்கள் சமையலை வெறுக்க வச்சுட்டியே என்ற மலர்கொடியை பாவமாக பார்த்தாள் வெரோனிகா.
அத்தை அது என்றவளிடம் அம்மா உன்னை கிண்டல் பண்ணுறாங்க பேசாமல் சாப்பிடு என்றான் உதயச்சந்திரன்.
நிஜமாவே உன் சமையல் நல்லா இருந்துச்சு என்றவனிடம் தாங்க்ஸ்ங்க என்றாள். சரியென்று அவன் திரும்பிட ஒரு நிமிசம் என்றாள்.
.
என்ன என்றவனிடம் உங்களை எப்படி கூப்பிட என்றாள். புரியலை என்றவனிடம் ஏங்க, என்னங்க இப்படி கூப்பிடும் போது ஒரு உறவுமுறையே வர மாட்டேங்குது உங்க தம்பியை பிரகாஷ்மாமானு தான் கூப்பிடுறேன் உங்களை என்று இழுத்தாள்.
என்ன சொல்லு என்றவனிடம் தயாமாமானு கூப்பிடவா என்றவளிடம் என்ன சொன்ன என்றான். தயாமாமா என்றவளிடம் அப்படிலாம் கூப்பிட வேண்டாம். என்னை எதற்கு நீ முறை வச்சு கூப்பிடனும் ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு. உன் மனசுல தேவை இல்லாத எந்த கற்பனையும் வளர்த்துக்காதே என்றவன் கோபமாக சென்று விட்டான்.
அவன் காதுகளில் தயாமாமா என்ற குரல் மீண்டும் , மீண்டும் கேட்டிட அவனது மனம் அமைதியை இழந்து தவித்தது.
…..தொடரும்…