விதியின் முடிச்சு….(81 to 91)

4.6
(5)

                 அத்தியாயம் 81

 

அதோடவா விட்டேன் உங்களோட மெடிக்கல் ரிப்போர்ட்டை மாற்றி வைத்து நான் நிறையவே தப்பு பண்ணி இருக்கிறேன். உங்களை மட்டும் இல்லை தேவ் மனசையும் நான் ரொம்பவே அதிகமா காயப் படுத்தி  இருக்கிறேன் என்ற ஸ்ரீஜா, உதய்மாமா ப்ளீஸ் எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா என்றாள். என்ன உதவி ஸ்ரீஜா என்றவனிடம் தேவ் கிட்ட நீங்கள் எனக்காக பேச முடியுமா. அவன் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசுறதில்லை. எனக்கு கவலையா இருக்கு. முன்னே அவன் வந்து, வந்து பேசும் பொழுது அவனை நான் எவ்வளவோ காயப் படுத்தி இருக்கிறேன். இப்போ என் மனசு அவனைத் தான் தேடுது. அவன் கிட்ட பேசணும், அவன் கிட்ட மன்னிப்பு கேட்கனும் என்று கண்ணீர் சிந்தினாள் ஸ்ரீஜா. அவளது கண்ணீரைக் கண்டவன் என்ன ஸ்ரீஜா இது குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு தேவ் உன்னை புரிஞ்சுப்பான் நீ கவலைப் படாதே என்றான் உதய்.

 

சரிங்க மாமா என்றவளிடம் கிளம்பலாமா என்றிட சரியென்று அவளும் அவனுடன் கிளம்பினாள்.

 

கல்லூரி வளாகத்தில் அவளை சொடுக்கிட்டு அழைத்த சந்தோஷ் அருகில் சென்றவள் குட் ஈவ்னிங் சீனியர் என்றாள். அதெல்லாம் இருக்கட்டும் நீ என்ன தினம் ஒருத்தனோட காலேஜ்க்கு வருகிறாய் உனக்கு எத்தனை பாய்ப்ரண்ட் என்றிட ரோனி கடுப்பாகினாள். ஆனால் இவனிடம் எந்த வம்பும் வளர்க்க வேண்டாம் என்று நினைத்தவள் அவங்க என்னோட பாய்ப்ரண்ட் கிடையாது என்னோட கசின்ஸ். நான் என் மாமா வீட்டில் தங்கி தான் காலேஜ் வரேன். அதான் அவங்க டிராப் பண்ணுறாங்க என்றவளிடம் சரி, சரி நீ கிளம்பு என்ற சந்தோஷ் அவளை அனுப்பி வைத்து துவேஷின் பக்கம் திரும்பினான்.

 

இவள் பேசுறது பொய் மாதிரி உனக்கு தெரியுதாடா என்ற நண்பனிடம் இல்லைடா அந்த பொண்ணுக்கு இந்த பொண்ணு மேல எதுனாலும் வெறுப்பு இருக்கும்டா அதான் அப்படி சொல்லி இருக்கும் மச்சான் நீ நிஜமா லவ் பண்ண ஆரம்பிச்ச அப்படினா சந்தேகம் படக்கூடாது சரியா என்றான் துவேஷ். அதுவும் சரிதான் என்றவன் நண்பனுடன் வீட்டிற்கு கிளம்பினான்.

 

என்ன அண்ணி டல்லா இருக்கிங்க என்ற தேவச்சந்திரனிடம் ஒன்றும் இல்லை மாமா என்ற வெரோனிகா வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அண்ணா வரவில்லைனு பீலிங்க்ஸா என்ற தேவ் இடம் ச்சேச்சே அப்படி எல்லாம் இல்லை மாமா என்றவள் அமைதியாக இருந்தாள். அவளை வீட்டில் இறக்கி விட்ட தேவ் வெளியே சென்று விட்டான்.

 

ஹேய் ரோனி என்னடி சைலண்ட்டா மாடிக்கு கிளம்பிட்ட என்ற சுசீலாவிடம் ஸாரி அத்தை இப்போ உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு என்றாள் வெரோனிகா. நல்லா இருக்கேன்டி என்றவர் உனக்கு பிடிச்ச மந்தி பிரியாணி பண்ணி இருக்கேன் சாப்பிட வா என்றிட அத்தை இந்த டைம்லையா அப்பறமா சாப்பிடுகிறேனே ப்ளீஸ் என்றவள் தன்னறைக்கு சென்று மெத்தையில் விழுந்தாள்.

 

ரோனி என்று வந்த உதய் அவள் படுத்துக் கிடக்கவும் என்னாச்சும்மா என்று அவளது நெற்றியில் கை வைத்து பார்த்தான். அவள் மாமா என்றிட என்னாச்சு ரோனி என்றவன் அவளது தலையை கோதிவிட மாமா செம்ம டயர்டா இருக்கு கொஞ்சம் தூங்கட்டுமா என்றாள். என்னடி கேள்வி இது தூக்கம் வந்தால் தூங்கு என்றவன் எழுந்து கொள்ள அவனது கையைப் பிடித்தவள் உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும் என்றாள்.

 

மாமா நான் பண்ணுறது சரியா , தப்பானு தெரியலை என்றவளிடம் என்ன ரோனி என்ன பண்ணின என்றான் உதய். இல்லை மாமா போன் சைலண்ட் மோட் எடுத்து விடாமலே விட்டுட்டேன். நேற்று நைட் ஊர்மிளா போன் பண்ணிருக்கிறாள் நான் பார்க்கவில்லை இன்னைக்கு பார்த்தும் அவள் கிட்ட நான் பேசவில்லை. அது எனக்கு கொஞ்சம் அவள் மேல வருத்தம் என்றாள் வெரோனிகா.

 

எனக்கு புரியுது நான் அவளோட அண்ணி. அண்ணினா அம்மா மாதிரி. பொண்ணு தப்பு பண்ணினால் அம்மா மன்னிக்கனும் தான் ஆனால் என்றவள் அர்ஜுன் கூட கிஷோர் என்னை சேர்த்து கிண்டல் பண்ணினது தப்பு. அதற்கு அவனை அடிச்சதோட விடாமல் அவளோட மனசுலையும் என்னையும், அர்ஜுனையும் சேர்த்து தப்பா நினைச்சு என் கூட சண்டை போட்டு என்னால அதை அக்சப்ட் பண்ணிக்க முடியலை மாமா. அந்த கசப்பு மனசை விட்டு போகாமல் பொய்யா என்னால ஊர்மிகிட்ட நடிக்க முடியாது அதனால தான் நான் அவள்கிட்ட பேசவில்லை என்றாள் வெரோனிகா.

 

அவளது கையை பிடித்து தன் கைக்குள் வைத்தவன் ரோனி உன்னோட கோபமும் நியாயமானது தானே. நீ பண்ணினது தப்புனு நான் சொல்லவே இல்லை சரியா. உனக்கு எப்போ ஊர்மிகிட்ட பேசணும்னு தோன்றுகிறதோ நீ அப்போ பேசு என்றவன் சரி உனக்காக சித்தி பிரியாணி எல்லாம் செய்து வச்சுருக்காங்க என்றான். அத்தைக்காகவாச்சும் என்று இழுத்தவளிடம் ரோனி உன் அத்தைக்கு உன்னோட நிலைமை புரியும். சித்தி எப்பவுமே உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க நீ  எதையும் யோசிக்காதே. சீக்கிரம் ஊர்மிளாவை மன்னிச்சுரு என்ற உதய் அப்பறம் ஸ்ரீஜா என்று கூற வந்தவனிடம் மாமா நான் கேட்கவே இல்லையே என்றாள்.

 

நீ கேட்கவில்லை என்றாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை இல்லையா என்றான் உதய். வேண்டாம் மாமா எனக்கு அதை தெரிஞ்சுக்க எந்த ஆர்வமும் இல்லை என்றவள் சரி வாங்க சாப்பிட போகலாம் என்று அவனை இழுத்துச் சென்றாள்.

 

ஏன்டி உன் புருசன் வந்து கூப்பிட்டால் தான் நீ சாப்பிட வருவியா என்று சுசீலா கேட்டிட ஆமாம் என்னை என் புருசன் வந்து ரோனிச் செல்லம் சாப்பிட வாம்மான்னு கெஞ்சினால் தான் சாப்பிட வருவேன் என்றாள் வெரோனிகா. அடிக் கொழுப்பெடுத்த கழுதை உன்னை என் மகன் வந்து கெஞ்சனுமா பாருடா உதய் உன்னோட நிலைமையை இந்த வீட்டுக்கு வந்த புதிதில் உன்னைக் கண்டாளே பயந்து நடுங்குவாள் இப்போ வாயைப் பாரு என்று அவளது காதை சுசீலா திருகிட அத்தை ப்ளீஸ் வலிக்குது ரோனி பாவம் என்றிட நீயாடி பாவம் என் மகன் தான் பாவம் என்றார் சுசீலா.

 

ஆமாம் ஆமாம் உங்க மகன் தான் பாவம் போங்க என்ற வெரோனிகா சாப்பிட அமர்ந்தாள். என்னடி கோவிச்சுட்டியா என்ற சுசீலாவிடம் ஆமாம் கோவிச்சுக்கிட்டேன் போங்க என்றாள் வெரோனிகா. சரி சரி கோவிச்சுக்கோ , கோவிச்சுக்கோ நல்லா கோவிச்சுக்கோ என்று சுசீலா கூறிட அனைவரும் சிரித்து விட்டனர். என்ன அத்தை பொல்லாதவன் டயலாக்கா போங்க, போங்க இப்போ தான் சினிமா டயலாக் பேசிட்டு என்றவள் சிக்கன் பீஸை கடித்துக் கொண்டிருந்தாள்.

 

தேவ் உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே பேசலாமா என்றான் உதய். சரி என்று தன் அண்ணனுடன் சென்றான் தேவ்.

 

இன்னைக்கு ஸ்ரீஜா என்னை பார்க்க வந்திருந்தாங்க என்ற உதய் ஸ்ரீஜா தன்னிடம் பேசியதை கூறினான். அதைக் கேட்ட தேவ் மௌனமாக இருந்தான்.

 

என்னாச்சு தேவ் ஏன் பேச மாட்டேங்கிற என்ற உதய்யிடம் என்ன பேசனும் அண்ணா. அவளுக்கு தேவை என்றால் யாரை வேண்டுமானாலும் தூது அனுப்புவாள். அண்ணா அவள் கிட்ட பேச விருப்பம் இல்லாமல் தான் நான் பேசவில்லை. போதும் அண்ணா நிறைய பட்டுட்டேன். என்னால நீயும் நிறையா பட்டுட்டுட்ட. அவளுக்கு நான் பண்ணினது பாவம் தான் அதற்காக அவள் என்னை பழிவாங்காமல் உன்னை தான் நறைய பழிவாங்கினாள். அதை மறந்துட்டு அவளுக்காக என் கிட்ட பேசிட்டு இருக்கிற அது உன்னோட பெருந்தன்மை. அவள் உனக்கு பண்ணின விசயங்களை கூட மன்னிக்கலாம் அண்ணா ஆனால் அண்ணியை தப்பா பேசி அவங்களை தூக்கு கயிறு வரை கொண்டு போனவள் அதை எப்படி மன்னிக்க சொல்லுறிங்க. அவள் பண்ணின தப்பை உணர்ந்தவளா இருந்தால் இந்நேரம் அண்ணிகிட்ட மன்னிப்பு கேட்டிருக்கனும் அதை விட்டுட்டு இப்போ உங்க கிட்ட தூது வந்திருக்கிறாள்.

 

என்ன காரணம் தெரியுமா மாமா அவளை பயங்கரமா  விலாசிருப்பாரு. அத்தையோட நிலைமைக்கு காரணம் அவள் தான்னு அதான் அவள் என் கிட்ட பேசணும். நான் முகம் கொடுத்து பேசாத காரணம் தான் அவள் உங்க மூலமா தூது வந்திருக்கிறாள். விடுண்ணா இனிமேல் அவளை பற்றி எதுவும் பேச வேண்டாம். மனசு வெறுத்துப் போச்சு என்ற தேவ் எழுந்து சென்றான்.

 

என்ன மாமா சோகமா இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் இல்லை ரோனி தேவ் என்று தேவ் உடன் பேசியதைப் பற்றி கூறினான் உதய். ஸ்ரீஜா பண்ணின தப்பை உணர்ந்து திருந்திட்டாள் ஆனால் தேவ் என்றவனிடம் மாமா அது அவங்க பர்சனல் ப்ராப்லம். ஓரளவுக்கு மேல நாம உள்ளே நுழைய முடியாது என்றாள் வெரோனிகா.

 

இல்லை ரோனி தேவ் என்ற உதய்யிடம் மாமா ப்ளீஸ் தேவ் மாமா மனசுலயும் சில வருத்தங்கள் இருக்கும். காயங்கள் இருக்கும் எல்லா காயங்களும் மாறனும் அதுவரை ஸ்ரீஜா பொறுமையா தான் இருக்கனும். அவங்க காலடியில் கிடந்தப்போ அவரோட அருமை தெரியவில்லை ஏறி மிதிச்சு போனாங்க இப்போ அவரோட விலகல் அவங்களை காயப் படுத்துது. எல்லாம் நல்லதுக்கு தான் பிரிவு தான் அன்பை அதிகமாக்கும். அதனால் நாம கண்டுக்க வேண்டாம் என்றாள் வெரோனிகா.

 

சரி ரோனி என்றவனிடம் நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனா மாமா என்றவளிடம் நிச்சயம் இல்லை ரோனி. நான் கூட என்ன இந்த தேவ் இப்படி சொல்லிட்டானேன்னு நினைச்சேன் நீ சொல்லவும் தான் புரியுது என்றான் உதய் . சரிங்க மாமா என்றவள் தூங்கலாமா என்றிட என்னடி காலேஜ் போக ஆரம்பிச்சதும் உன் ரொட்டீன் வொர்க் மறந்து போச்சா என்றான் உதய்.

 

மாமா என்ன ரொட்டீன் வொர்க் என்றவளை முறைத்தவன் படிக்கிறது தான் என்றிட ஐயோ, மாமா இப்போ ஒன்றும் நீங்க என்னோட வாத்தியார் இல்லை என்றாள் வெரோனிகா. எப்பவுமே உன்னோட வாத்தியார் தான் புத்தகத்தை எடுத்துட்டு வா என்றவனை பாவம் போல பார்த்தவள் புத்தகங்களை எடுத்து நீட்டிட அவன் வழக்கம் போல அவளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தான்.

 

என்ன ரோனி இது காலேஜ் போன பிறகும் இந்த வாத்தியாரு பிரம்பை எடுத்துக்கிட்டு முன்னே வந்து படி , படின்னு உயிரை வாங்குகிறாரு. இதற்கு தான் வாத்தியாரை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க கூடாது என்று புலம்பினாள் வெரோனிகா.

 

             அத்தியாயம் 82

என்னடி புலம்பல் என்றவனிடம் ஒன்றும் இல்லை மாமா என்றாள் பாவமாக. அவளைப் பார்த்து சிரித்தவன் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தான். மாமா பாடம் முடிச்சது தானே என்றவளிடம் ஆமாம் என்றான் உதய். அப்பாடா என்றவள் கொஞ்ச நேரம் சும்மா ஒரு வாக்கிங் போகலாமா என்றிட ஏன் ரோனி தூங்குற நேரத்தில் என்றான் உதய்.

 

ப்ளீஸ் மாமா என்றவளிடம் சரி வா என்று  அவளை அழைத்துச் சென்றான் உதய். என்ன ரோனி திடீர்னு தனியா வாக்கிங் என்றான் உதய். ஏன் மாமா என் கூட வர பிடிக்கவில்லையா என்றவளை முறைத்தவன் என்னடி திமிரா என் ஆயுள் முழுக்க உன் கூட இப்படியே நடந்தாலும் எனக்கு சந்தோசம் தான்டி என்றான் உதய்.

 

மாமா என்னை ஏன் காலேஜ் சேர்த்து விட்டிங்க பேசாமல் கரஸ்பான்டன்ட் கோர்ஸ்ல சேர்த்து விட்டுருக்கலாமே என்றவளைப் பார்த்து சிரித்தவன் ஏன் என்னாச்சு என்றான். நான் கல்யாணம் ஆகாத பொண்ணுனு நினைச்சு சீனியர் ஒருத்தன் எனக்கு வலை வீசிட்டு இருக்கிறான் என்றாள் வெரோனிகா. ரோனி அவன் உனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் பிரச்சனை பண்ணினால் என்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன்.

 

பொண்ணுனு இருந்தால் பசங்க பின்னாடி வரத் தான் செய்வாங்க அதுக்காக எல்லாம் பொண்ணுங்களை அடுப்படிக்குள்ள பூட்டி வச்சுக்க முடியுமா சொல்லு. நீ நல்லா படிக்கனும். உன் ஆசைப் படி பெரிய எழுத்தாளரா, இல்லை டீச்சரா வரணும். நம்ம ஸ்கூலுக்கே நீ டீச்சரா வந்தால் எனக்கும் பெருமை என்றான் உதய்.

 

அவன் என்ன பண்ணினான் என்றவனிடம் ஷாலினிகிட்ட என்னைப் பற்றி விசாரிச்சுருக்கான். கார்த்திகா கிட்டையும் விசாரிச்சுருக்கான். ஷாலினிக்கு நம்ம கல்யாணம் பற்றி சொல்லிட்டேன். ஆனால் கார்த்திகாவுக்கு தெரியாது தெரியவும் வேண்டாம்னு நான் சொல்லவில்லை. அந்த பைத்தியம் என்னையும், பிரகாஷ் மாமாவையும் சேர்த்து ஷாலினிகிட்ட தப்பா சொல்லிருக்கு. ஷாலினி என்கிட்ட சொல்லிட்டாள் என்ற வெரோனிகாவிடம் ரோனி இதோ பாரு நீ எதையும் யோசிக்காதே.

 

இந்த உலகத்தில் உன்னை யாரு என்ன பேசினாலும் பேசுறவங்க கிட்ட தான் குறை. என் ரோனி மேல நான் என் உயிர் இருக்குறவரை சந்தேகம் படமாட்டேன். அதனால நீ கண்டதையும் யோசிக்காமல் படி. அந்த பையன் எதாச்சும் தொந்தரவு கொடுத்தால் பார்க்கலாம். அவன் இதுவரை உன் கிட்ட நேரடியா எந்த பிரச்சனையும் பண்ணாத பட்சத்தில் நாம எதுவும் பண்ண வேண்டாம் சரியா என்றான் உதய்.

 

சரிங்க மாமா வீட்டுக்கு போகலாமா என்றவளிடம் அடுத்த வாரம் அர்ச்சனா கல்யாணம் அப்போ ஊர்மிளா வருவாள் என்றான் உதய். வரட்டும் மாமா அவளோட அக்கா, அண்ணா இரண்டு பேருக்குமே கல்யாணம் அவள் இல்லாமல் எப்படி சொல்லுங்க என்ற வெரோனிகா நாளை மறுநாள் தாலிக்கு தங்கம் உருக்கும் விசேசம் இருக்கே அதற்கு நான் தயாராகனும் என்றவள் சரி, சரி வாங்க போகலாம். நேரத்தோட தூங்கினால் தான் நீங்களும், நானும் நாளைக்கு ஸ்கூலுக்கும், காலேஜ்க்கும் போகனும் என்றவளுடன் அவனும் வீட்டிற்கு வந்தான்.

 

என்ன இந்து ஏன் இங்கே வரச் சொன்ன என்ற பிரகாஷிடம் பொழுது போகவில்லை அதான் என்றவள் அவனை முறைத்திட ஸாரிடி செல்லம் ஸ்கூலில் கொஞ்சம் அட்மிசன் வேலை போயிட்டு இருக்கு அதான் உன்னை எங்கேயும் வெளியில் அழைச்சுட்டு போக முடியவில்லை என்றான் பிரகாஷ். 

 

இதோ பாரு பிரகாஷ் நீ என்னை வெளியில் அழைச்சுட்டு போக வேண்டாம் ஒரு பத்து நிமிசம் தினமும் என் கிட்ட பேசு அது போதும் என்றவளின் நெற்றியில் முட்டியவன் இன்னும் ஒரு வாரம் தான் இந்த சங்கு கழுத்தில் மாமன் தாலி கட்டிட்டால் பத்து நிமிசம் என்ன மணிக்கணக்கா பேசிகிட்டே இருக்கலாம் என்றான் பிரகாஷ். மணிக்கணக்கா பேசப் போறியா என்ற இந்திரஜாவைப் பார்த்து கண்ணடித்தவன் ஆமான்டி பொண்டாட்டி பேசத் தான் போறேன். 

 

பேசாத பேச்சுக்கள் எல்லாம்

பேசுகிறேன் கண்மணி

வார்த்தைகளால் அல்ல எனது

மெய்க் காதலால்…..

 

என்று கவிதை சொன்னவனிடம் கவிதை எல்லாம் நல்லா தான் சொல்லுற ஆனால் அவள் யாரு கண்மணி என்ன கள்ளக்காதலா என்ற இந்திரஜாவிடம் அடிப்பாவி கண்மணினு நான் உன்னைத் தான்டி சொன்னேன். என் கண்ணின் மணியே என்ற பிரகாஷிடம் அதான பார்த்தேன் மவனே எவளாவது சக்காளத்தியை சேர்க்கனும்னு நினைச்ச அம்புட்டு தான் உன்னை துண்டு துண்டா வெட்டி காக்காய்க்கு போட்டுருவேன் என்றாள் இந்திரஜா.

 

கொலைக்கேஸ்ல உள்ள போயிருவடி கொலை கார சிறுக்கி என்றவனிடம் மாம்ஸ் அதெல்லாம் நீ இன்னொரு சக்காளத்தியை தேடாமல் இருக்கும் வரை தான் என்ற இந்திரஜா சரி பிரகாஷ் நேரம் ஆச்சு நீ போயி தூங்கு. நாளைக்கு ஸ்கூலுக்கு போகனும்ல என்றாள்.

 

சரி இந்து நீயும் போயி நிம்மதியா தூங்கு என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட அவள் சிரித்து விட்டு தன்னறைக்கு சென்றாள்.

 

என்னடி ஏன் டல்லா இருக்க என்ற அர்ச்சனாவிடம் என்னனு தெரியலை விவேக் நான்கு நாட்களாக போன் பேசவே இல்லை. நான் போன் பண்ணினாலும் அவர் எடுக்கவே இல்லை. எனக்கு மனசு சரியில்லை இந்து என்றாள் அர்ச்சனா. என்னாச்சு அர்ச்சனா என்ன பிரச்சனை ஏன் போன் எடுக்கவில்லை என்ற இந்திரஜாவிடம் அவரோட ப்ரண்ட்ஸ் கூட ட்ரக்கிங் போனாரு. சந்தோசமா ப்ரண்ட்ஸ் கூட பார்ட்டி பண்ணிட்டு இருக்கட்டும், அப்பறம் ஹில்ஸ்ஸ்டேசன் அதான் சிக்னல் ப்ராப்லம்னு தொல்லை பண்ண வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் இன்னமும் போன் பண்ணாமல் இருக்கிறதை நினைக்கும் பொழுது கொஞ்சம் கஸ்டமா இருக்கு என்றாள் அர்ச்சனா.

 

விடுடி நாளைக்கு கண்டிப்பா உன் கிட்ட பேசுவாரு என்ற இந்திரஜாவிடம் இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் இந்த நேரத்தில் இவர் வேற போன் கூட பேசாமல் கவலையா இருக்குடி என்றாள் அர்ச்சனா.

 

அர்ச்சனா கவலையை விடு எல்லாம் பேசுவாரு. என்னடி பயம் உனக்கு உன் கல்யாணத்திற்கு இரண்டு வீட்டு பக்கமும் எந்த பிரச்சனையும் இல்லாத பொழுது என்ன தயக்கம் என்றாள் இந்திரஜா. கண்டதையும் யோசிக்காமல் தூங்கு அர்ச்சு என்ற இந்திரஜா உறங்க ஆரம்பித்தாள்.

 

அர்ச்சனாவின் மனம் பதை பதைத்து கொண்டு இருந்தது. அவளுக்கு உறக்கமும் வரவில்லை.

 

என்னப்பா இது கல்யாணம் ஒரு வாரம் இருக்கும் பொழுது இப்படி கை, காலில் அடிபட்டு வந்திருக்க என்ற தனலட்சுமியிடம் அம்மா ஒன்றும் பிரச்சனை இல்லை என்றான் விவேக். என்னப்பா இது என்ற தனசேகரனிடம் என்னப்பா பண்ணட்டும் ஆக்சிடென்ட் ஆகிருச்சு நல்ல வேலை அடி பலமா இல்லை என்ற விவேக்கிடம் சரிப்பா நீ ஓய்வு எடு  என்றார் தனசேகரன்.

 

விவேக் பயங்கர யோசனையுடன் அமர்ந்திருந்தான். அவனது கண்கள் கண்ணீரை சிந்தியது. அர்ச்சனா ஐயம் ஸாரி என்றவன் அவளது புகைப்படத்திற்கு முத்தமிட்டான்.

 

சொல்லுங்க விவேக் என்ன விசயம் என்ற உதயச்சந்திரனிடம் நேரில் பேசனும் இன்னைக்கு மீட் பண்ணலாமா என்றான் விவேக். சரிங்க என்றவன் அவன் சொன்ன இடத்திற்கு கிளம்பினான். ரோனி இன்னைக்கு பிரகாஷ் கூட காலேஜ் போறியா என்ற உதய்யிடம் என்னாச்சு மாமா என்றாள் வெரோனிகா.

 

விவேக் என்னை பார்க்கனும்னு சொன்னாரு என்றவனிடம் நீங்க தனியா போக வேண்டாம் நீங்களும், தேவ் மாமாவும் போயிட்டு வாங்க என்றாள் வெரோனிகா. நானும் அதான் நினைச்சேன்  பிரகாஷும் வந்தால் நல்லா இருக்கும் ஆனால் விவேக் தனியா பேசணும்னு பிரியப் படுகிறார் ரோனி என்றான் உதய். சரி மாமா அப்போ நான் பிரகாஷ் மாமா, இல்லை தேவ் மாமா யார் கூடவாச்சும் காலேஜ் போகிறேன் என்ற வெரோனிகா கிளம்பினாள்.

 

ரோனி நீ இன்னைக்கு என் கூட காலேஜ் வருகிறாயா என்ற அர்ச்சனாவிடம் சரிங்க அண்ணி என்ற வெரோனிகா அவளுடன் கல்லூரிக்கு கிளம்பினாள். நீங்க ஏன் அண்ணி என்றவளிடம் எனக்கு காலேஜ்ல ஒரு வொர்க் இருக்கு. அதான் என்ற அர்ச்சனா ஏதோ யோசனையுடன் வர என்னாச்சு அண்ணி ஏன் சோகமா இருக்கிங்க. நீங்க கல்யாணப் பொண்ணு ஆனால் அந்த கலையே உங்க முகத்தில் இல்லையே என்றாள் வெரோனிகா.

 

மனசு சங்கடமா இருக்கு ரோனி விவேக் என்கிட்ட பேசி நான்கு நாளாச்சு என்று வருந்தினாள் அர்ச்சனா. காலையில் மாமாகிட்ட பேசினவரு ஏன் அண்ணிகிட்ட பேசவில்லை என்று யோசித்தாள் வெரோனிகா.

 

அர்ச்சனா அவளை விட்ட பிறகு தனது வேலையை கவனித்தாள். தனது வேலை முடிந்த பிறகு வெரோனிகாவிடம் சொல்லி விட்டு அர்ச்சனா சென்று விட்டாள்.

 

என்ன விவேக் சொல்லுறிங்க இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் இப்போ போயி கல்யாணம் வேண்டாம்னு சொன்னால் என்ன அர்த்தம். அர்ச்சனாவோட மனசை எப்படி கொல்ல சொல்லுறிங்க. ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்தாச்சு நாளைக்கு தாலிக்கு தங்கம் உருக்கும் விசேசம் இருக்கு எப்படி விவேக் என்றான் உதய்.

 

உதய் இந்த விசயத்தை சொல்லும் போது நான் எத்தனை வேதனையோட இருப்பேன்னு நீங்களும் புரிஞ்சுக்கனும். அர்ச்சனா மேல உயிரையே வச்சுருக்கிறவன் நான். டிரக்கிங் போன இடத்தில் நடந்த இந்த விசயம் என்னோட வாழ்க்கையையே புரட்டிப் போட்டுருச்சு. என்னால அர்ச்சனாவுக்கு துரோகம் பண்ண முடியாது. அவளுக்கு இந்த கல்யாணம் நிற்கப் போறது வலியைத் தான் கொடுக்கும். ஆனால் இந்த கல்யாணம் நடந்தால் காலம் முழுக்க அர்ச்சனாவுக்கு துரோகம் பண்ணிட்டேனேங்கிற குற்றவுணர்ச்சி என்னை கொன்னுரும் என்றான் விவேக்.

 

விவேக் என்ன பேசுறிங்க என்ற உதய் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம்னு முடிவு எடுக்க வேண்டாம். நீங்கள் இதைப் பற்றி அர்ச்சனா கிட்ட பேசுங்க என்ற உதய்யிடம் இல்லை உதய் என்னால முடியாது. அர்ச்சனாவை என்னால ஃபேஸ்  பண்ண முடியாது. நீங்களே அவள்கிட்ட சொல்லி புரிய வைங்க. 

 

என்னோட காதல் அவளுக்கு வரமா இருந்தால் பரவாயில்லை சாபமா மாறிடக் கூடாது என்றான் விவேக். என் வீட்டில் நான் நடந்த விசயங்களை சொல்லப் போகிறேன் நீங்களும் சொல்லுங்க என்ற விவேக்கிடம் விவேக் எனக்காக ஒரு நாள் பொறுத்துக்கோங்க அப்பறமா இதைப் பற்றி உங்க வீட்டில் சொல்லுங்க என்றான் உதய்.

 

சரிங்க உதய் என்ற விவேக் சென்று விட உதய்க்கு தான் அன்றைய நாளே ஓடவில்லை. அர்ச்சனா அவன் மீது கொண்ட காதல் எவ்வளவு ஆத்மார்த்தமானது. எப்படி அவளது மனதை உடைப்பது என்று வருந்தினான் உதய். என்ன பண்ணலாம் என்று அவன் பலவாறு யோசித்தபடி வீட்டுற்கு சென்றான்.

 

           

 

                  அத்தியாயம் 83

 

என்ன மாமா என்ன யோசனை என்ற வெரோனிகாவின் மடியில் விழுந்து அழ ஆரம்பித்தான் உதய். மாமா என்னாச்சு என்றவள் அவனைத் தூக்கி கண்ணீரைத் துடைத்திட அவனது அழுகை மட்டும் நிற்கவே இல்லை. மாமா என்னாச்சு மாமா என்றவளிடம் எப்படி சொல்லுவேன் ரோனி அர்ச்சனா மனசுல கல்யாணத்தைப் பற்றி எத்தனை கனவுகள் வச்சுருக்கிறாள். அவளோட மனசை நான் எப்படி உடைப்பேன் என்று அழுத உதயச்சந்திரனிடம் மாமா ப்ளீஸ் அழாமல் என்ன விசயம்னு சொல்லுங்க என்று கெஞ்சினாள் வெரோனிகா.

 

விவேக் டிரக்கிங் போனாருனு அர்ச்சனா சொன்னாளே ஞாபகம் இருக்கா என்ற உதய்யிடம் இருக்கு மாமா அங்கே என்ன என்றாள் வெரோனிகா. டிரக்கிங் போன இடத்தில் எதிர்பாராத விதமா ஒரு ஆக்சிடென்ட் ஆச்சு என்றதும் பதறினாள் வெரோனிகா. அவருக்கு காயம் பலமா  இல்லை ரோனி ஆனால் அந்த விபத்தில் படக்கூடாத இடத்தில் அடிபட்டு அவருக்கு என்றவன் சொல்லத் தயங்கினான். மாமா எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்றவளிடம் விவேக்னால தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாதாம் ரோனி என்று கூறினான் உதய்.

 

அர்ச்சனாவோட எதிர்காலம் தன்னால பாதிக்க கூடாதுன்னு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுறாரு ரோனி எனக்கு என்ன பண்ணுறதுன்னே புரியலை என்றான் உதய். மாமா அப்படி எல்லாம் எடுத்தோம், கவிழ்த்தோம்னு கல்யாணத்தை நிறுத்த முடியாது இருங்க யோசிக்கலாம் என்ற வெரோனிகா தேவ் மாமாவை கொஞ்சம் வரச் சொல்லுங்க என்றாள்.

 

தேவ் எதற்கு ரோனி என்றவனிடம் மாமா தேவ் மாமாவை கூப்பிடுங்க என்றாள் வெரோனிகா. சரி என்ற உதய் தன் தம்பிக்கு போன் செய்து வரச் சொன்னான்.

 

என்ன அண்ணா இங்கே வரச் சொல்லிருக்க அண்ணி வேற கூட இருக்காங்க என்ன விசயம் என்றான் தேவ். மாமா நாங்க சொல்லப் போற விசயத்தில் உங்களுடைய ஆலோசனை கட்டாயம் வேண்டும் என்ற வெரோனிகா விவேக் கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட்டை தேவச்சந்திரனிடம் கொடுத்தாள்.

 

அதை வாங்கி பார்த்தவன் அதிர்ந்து இது யாரோட ரிப்போர்ட் அண்ணி என்றான். விவேக் அண்ணாவோட ரிப்போர்ட் என்ற வெரோனிகா , விவேக் உதயச்சந்திரனிடம்  பேசியவற்றை சொன்னாள்.

 

அதைக் கேட்ட தேவ் யோசனையாக வெரோனிகாவைப் பார்த்தான். மாமா விவேக் அண்ணாவோட பிரச்சனையை குணப்படுத்த முடியுமா என்றிட அண்ணி அவரை இன்னொரு முறை இந்த டெஸ்ட் எல்லாம் எடுக்க சொல்லனும். ஸ்கேன் எல்லாம் பார்த்துட்டு தான் தெளிவா சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றும் அத்தனை பெரிய பிரச்சனையா இருக்காது க்யூர் பண்ணிரலாம்னு தான் தோனுது அந்த ரிப்போர்ட்டை பார்த்தபடி தேவ் சொன்னான்.

 

அர்ச்சனாவோட மனசை உடைக்க வேண்டாம் அண்ணா யோசிக்கலாம் என்ற தேவ் இடம் இல்லை மாமா இதில் மனசை உடைக்க என்ன இருக்கு. அண்ணிகிட்ட விவேக் அண்ணாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனு சொல்லலாம். இது அவங்க வாழ்க்கை அவங்க தான் முடிவு எடுக்கனும். யாரோட மனசும் உடைய வேண்டாம். கல்யாணத்திற்கு அப்பறம் இப்படி ஒரு பிரச்சனை விவேக் அண்ணாவுக்கு வந்திருந்தால் நாம என்ன பண்ணி இருப்போம் சொல்லுங்க. அவங்களுக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுப்போமா என்றவள் அண்ணிகிட்ட பேசலாம் என்றாள்.

 

ரோனி நீ என்ன பேசுற என்ற உதய்யிடம் இல்லை அண்ணா அண்ணி பேசுறது தான் சரி. இந்த விசயத்தில் பாதிப்பு என்னம்மோ அர்ச்சனாவுக்கு தான் அவள் தான் எந்த முடிவா இருந்தாலும் எடுக்கனும் என்றான் தேவ். சரி நீங்க சொல்லுறிங்க நானும் சம்மதிக்கிறேன் என்றான் உதய். அர்ச்சனாகிட்ட யாரு சொல்லுறது என்ற உதய்யிடம் நானே சொல்கிறேன் மாமா என்றாள் வெரோனிகா. சரி ரோனி என்றவனிடம் எல்லாமே நல்லதா நடக்கும் மாமா என்றாள் வெரோனிகா.

 

என்ன ரோனி  என்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு நீ எதையோ தீவிரமா யோசிச்சுட்டு இருக்க என்றாள் அர்ச்சனா. அண்ணி என்னோட ப்ரண்ட் ஷாலினி இருக்காளே அவங்க அக்காவுக்கு கல்யாணமாம் என்றவளிடம் நல்ல விசயம் தானே ரோனி என்றாள் அர்ச்சனா. ஆனால் அந்த கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை அண்ணி என்ற வெரோனிகாவிடம் ஏன் என்ன காரணம் என்றாள் அர்ச்சனா. 

 

அண்ணி அவங்களோட வருங்கால கணவருக்கு ரீசன்ட்டா ஒரு விபத்து ஏற்பட்டிருக்கு. அதில் படக் கூடாத இடத்தில் அடிபட்டு குடும்ப வாழ்க்கைக்கு அவர் தகுதி இல்லாதவர்னு டாக்டர் சர்டிபிகேட் கொடுத்திருக்காரு என்றாள் வெரோனிகா.

 

அந்தப் பொண்ணுக்கு எப்படி அரேஞ் மேரேஜா என்ற அர்ச்சனாவிடம் இல்லை அண்ணி லவ் மேரேஜ் தான் என்றாள் வெரோனிகா. ஆனால் அந்த மாப்பிள்ளை தன்னால இந்தப் பொண்ணோட வாழ்க்கை வீணா போக கூடாதுன்னு யோசிச்சு கல்யாணத்தை நிறுத்த சொல்லுறாராம் என்றாள் வெரோனிகா.

 

அந்தப் பொண்ணு நம்பர் கொடு ரோனி நான் பேசுகிறேன் என்றாள் அர்ச்சனா. என்ன பேசுவிங்க அண்ணி என்ற வெரோனிகாவிடம் அந்த பையனையே அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லுவேன் ரோனி என்றாள் அர்ச்சனா. 

 

அண்ணி அது எப்படி சரியா வரும் அவங்க இரண்டு பேருடைய வாழ்க்கையும் ஏதோ மெசின் போல ஆகிடாதா கல்யாணம் பண்ணிக்கிறதே அவங்க சந்தோசமா வாழத் தானே. குழந்தை , குட்டினு வாழத் தானே என்றாள் வெரோனிகா.

 

அந்தப் பையனோட மனசுக்காக அவள் எதையும் இழக்கலாம் ரோனி. செக்ஸ் வாழ்க்கைக்கு தேவை தான் அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது மட்டும் வாழ்க்கை இல்லை. அவனுக்கு நாளைக்கே ஏதாவது அதிசயம் நடந்து அந்த பிரச்சனை தீர்ந்து விட்டால் இரண்டு பேரும் சந்தோசமா வாழலாம் இல்லையா. அதை ஏன் அந்தப் பொண்ணு யோசனை பண்ணக் கூடாது.

 

வாழ்க்கை இப்படியே நிற்காது ரோனி என்ற அர்ச்சனாவிடம் அட்வைஸ் பண்ணுறது ஈஷி அண்ணி அவங்க அவங்க இடத்தில் இருந்து வாழ்ந்தால் தான் அந்த வலி தெரியும் அண்ணி. 

 

அந்தப் பொண்ணுக்கும் உணர்ச்சிகள் இருக்குமே அவளால் எப்படி உணர்ச்சிகளை கொன்னுட்டு வாழ முடியும் என்றாள் வெரோனிகா. ரோனி இன்னைக்கு இருக்கிற மருத்துவ வளர்ச்சியில் அந்தப் பொண்ணோட கணவருக்கு உண்டான பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்யலாம்.

 

உணர்ச்சிகளுக்கு அடிமையாகி காதலை கொன்று புதைக்க சொல்கிறாயா ரோனி என்ற அர்ச்சனாவிடம் சரிங்க அண்ணி அந்தப் பொண்ணோட இடத்தில் நீங்களும், அவங்க கணவர் இடத்தில் விவேக் அண்ணாவும் இருந்தால் என்ன பண்ணுவிங்க சொல்லுங்க என்றாள் வெரோனிகா.

 

என் உயிரே போனாலும் என் விவேக்கை விட்டு பிரிய மாட்டேன். செக்ஸ் இல்லாமல் கூட என்னால வாழ முடியும் என் விவேக் இல்லாத ஒரு வாழ்க்கையை ஒரு நாளும் நான் கனவுல கூட நினைத்து பார்க்க மாட்டேன் என்றாள் அர்ச்சனா.

 

விவேக் அண்ணா உங்களை பிரியனும்னு முடிவு எடுத்துட்டாரே அண்ணி என்றாள் வெரோனிகா. என்ன சொல்லுற ரோனி என்ற அர்ச்சனாவிடம் அண்ணி விவேக் அண்ணா தான் நான் சொன்ன கதையில் வரும் மாப்பிள்ளை என்றாள் வெரோனிகா.

 

அர்ச்சனா இறுக்கமான முகத்துடன் அவளைப் பார்த்தவள் ஓங்கி அவளது கன்னத்தில் அறைந்தாள். என்னடி பேசுற என்றவளிடம் அண்ணி நான் சொல்வது சத்தியம் என்று விவேக் உதய்யிடம் பேசியதை சொன்னாள் வெரோனிகா.

 

ரோனி நீ சொல்லுறது நிஜமா என்ற அர்ச்சனாவிடம் சத்தியம் அண்ணி நான் ஏன் உங்க கிட்ட பொய் சொல்லப் போகிறேன் என்று அழுதாள் வெரோனிகா. அர்ச்சனா அவளைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

என்னடா சொல்லுற இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் இப்போ போயி கல்யாணத்தை நிறுத்துங்கனு சொன்னால் என்ன அர்த்தம் விவேக். உன் விருப்பம் படி தானே இந்த கல்யாணம் நடக்கப் போகுது. அர்ச்சனா நீ காதலிச்ச பொண்ணு தானடா என்றார் தனசேகரன். ஆமாம் அப்பா அர்ச்சனா நான் காதலிச்ச பொண்ணு தான் இப்பவும், எப்பவும் காதலிக்கிற பொண்ணு தான் அவளோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னா இந்தக் கல்யாணம் நடக்க கூடாதுப்பா என்ற விவேக் தனது பிரச்சனையை கூறினான்.

 

என்னப்பா சொல்லுற என்ற தனசேகரனிடம் நிஜம் தான் அப்பா என்றவன் என்னால என் அர்ச்சனாவோட வாழ்க்கை கேள்விக்குறியா மாற வேண்டாம் அவள் நல்லா இருக்கனும் என்றான் விவேக்.

 

விவேக் ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்தாச்சுடா என்ற தனசேகரனிடம் பத்திரிக்கை தானப்பா கொடுத்திருக்கோம் தாலி கட்டவில்லையே அதனால தான் சொல்கிறேன் இந்த கல்யாணம் நடக்கவே வேண்டாம். நிறுத்திடலாம் என் அர்ச்சனா வாழனும் எந்த குறையும் இல்லாமல் சந்தோசமா வாழனும் என்றான் விவேக்.

 

அப்பா நம்ம லாவண்யாவோட கல்யாணம் பிக்ஸ் ஆன பிறகு மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்சனைனா நீங்க என்ன பண்ணி இருப்பிங்க. பரவாயில்லைன்னு கல்யாணம் பண்ணி கொடுத்துருப்பிங்களா சொல்லுங்க. அர்ச்சனா வாழ வேண்டிய பொண்ணுப்பா என்னால அவளோட வாழ்க்கை பாதிக்க கூடாது என்றான் விவேக்.

 

விவேக் என்ற தனசேகரனிடம் அப்பா ப்ளீஸ் நீங்களே நெடுமாறன் மாமாகிட்ட போயி பேசுங்க. சொல்லி புரிய வைங்க. இது அர்ச்சனாவோட வாழ்க்கை என்றான் விவேக்.

 

அர்ச்சனாவோட வாழ்க்கை சரி அப்போ உன்னோட வாழ்க்கை என்ற தனசேகரனிடம் அப்பா நான் எப்பவுமே உங்க மகனா வாழ்ந்துட்டு போகிறேன் என்ற விவேக் தன்னறைக்கு சென்றான்.

 

அங்கு அவன் அறையில் இருந்த நிச்சயதார்த்த போட்டோவைக் கண்டவனது கண்கள் கண்ணீரை சிந்தியது. அவளுடனான அழகான நினைவுகள் இம்சிக்க அவனது மனம் ரணமானது.

 

எததனை சந்தோசமாக அவனது விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தாள் அவள். அதை நினைக்க , நினைக்க அவனுக்கு வேதனையாக இருந்தது.

 

அர்ச்சனாவும் தனதறையில் தன்னவனின் நினைவுகளில் மூழ்கினாள். விடிய , விடிய உறக்கம் இல்லாமல்  யோசித்துக் கொண்டே இருந்தாள் அர்ச்சனா.

 

என்ன ரோனி அர்ச்சனா என்ன சொன்னாள் என்றான் உதய். நடந்தவற்றை கூறிய வெரோனிகா கண்ணீர் சிந்திட அழாதே ரோனி என்றான் உதய். என்னால முடியலை மாமா அர்ச்சனா அண்ணி பாவம் மாமா அவங்க வாழ்க்கையில் எந்த சிக்கலும் வரக் கூடாது என்று அழுதவளை சமாதானம் செய்தான் உதய். அவர்களும் விடியும் வரை உறங்கவில்லை.

 

அர்ச்சனாகிட்ட ரோனி பேசிட்டாள் தேவ் என்ற உதயச்சந்திரன் வெரோனிகா கூறியவற்றை தம்பியிடம் சொன்னான். அண்ணா இந்த விசயத்தில் அர்ச்சனா தான் முடிவு எடுக்கனும் அவள் எடுக்கப் போற முடிவு எப்படிப் பட்டதா இருக்கும்னு தான் தெரியவில்லை என்றான் தேவ்.

 

புரியுது தேவ் என்ற உதய் ஏதோ சொல்ல வாயெடுக்க அண்ணா என்று வந்தாள் அர்ச்சனா. அர்ச்சனா என்ற தேவ்,  உதய் இருவரின் அருகில் வந்தவள் அண்ணா கிளம்பலாமா என்றாள். எங்கே  அர்ச்சனா திடீர்னு கிளம்ப  என்ற உதய்யிடம் விவேக் சொன்ன படி இந்த கல்யாணத்தை நிறுத்த சம்மதம்னு சொல்லிட்டு வந்துரலாம் அண்ணா என்றாள் அர்ச்சனா.

 

                        

                 அத்தியாயம் 84

 

அர்ச்சனா என்ன சொல்லுற என்ற உதய்யிடம் விவேக் ஆசை அது தானே அண்ணா வாங்க கிளம்பலாம் என்றாள் அர்ச்சனா. அண்ணி என்ற வெரோனிகாவிடம் ரோனி அமைதியா நீயும் என்கூட வா என்றாள்.

 

வாம்மா அர்ச்சனா என்ன விசயம் நீயும் வந்திருக்க உன் அண்ணன்கள் கூட என்ற தனலட்சுமியிடம் ஆண்ட்டி உங்க பையனை கூப்பிடுங்க ப்ளீஸ் என்றாள் அர்ச்சனா. என்ன விசயம் அர்ச்சனா என்றவளிடம் தயவுசெய்து கூப்பிடுங்க ப்ளீஸ் என்றாள் அர்ச்சனா.

 

விவேக் என்ற தனலட்சுமியின் குரலில் அறையை விட்டு வந்தவன் அர்ச்சனா நிற்பதைக் கண்டு அதிர்ந்து போனான். என்ன மிஸ்டர் விவேக் என்னை இங்கே இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லையா என்றாள் அர்ச்சனா. 

 

அர்ச்சனா அது என்றவனை கூர்மையாக பார்த்தவள் அர்ச்சு இப்போ அர்ச்சனா ஆகிட்டேனா வெல் உங்க கிட்ட இதை நான் எதிர்பார்த்தது தான் விவேக் என்றவள் ஏன் விவேக் இப்படி பண்ணுனிங்க என் அண்ணன்கிட்ட சொல்லிருக்கிங்க இந்த கல்யாணம் வேண்டாம்னு உங்களை கிட்டத்தட்ட மூன்று வருசமா காதலிச்சேன். ஒரு நிமிசத்தில் தூக்கி எறிய எப்படி மனசு வந்துச்சு அந்த அளவுக்கு நான் வேண்டாதவளா போயிட்டேனா விவேக் என்றாள் அர்ச்சனா.

 

அர்ச்சு என்னை புரிஞ்சுக்கோ நம்ம கல்யாணம் நடந்தால் என்று கூற வந்தவனிடம்  என்ன செக்ஸ் வச்சுக்க முடியாதா விவேக் . உடம்பு சுகம்  தான் ஒரு பொண்ணுக்கு முக்கியம்னா அதற்கு ஏன் ஒரு ஆம்பளை தேவை அதான் வித விதமா பொம்மை விற்குதே. ஏன் விவேக் என்னை இவ்வளவு மலிவா நினைச்சுட்டிங்க நான் காதலிச்சது உன்னோட உடம்பை இல்லை மனசை. நீங்க என்னை காதலிச்சிங்கனு நம்பினேன் என் உடம்பை தானே காதலிச்சுருக்கிங்க அதனால தானே என்னை தூக்கிப் போட்டுட்டிங்க என்றவளிடம் அர்ச்சு நான் உன்னை தூக்கி போடலைம்மா என்னை புரிஞ்சுக்கோடி இன்னைக்கு நீ ஆயிரம் டயலாக் பேசலாம் செக்ஸ் இல்லாமல் வாழ முடியாதா, இருக்க முடியாதான்னு ஆனால் இந்த உறுதி காலம் செல்ல செல்ல உடைஞ்சுரும்மா. உன்னோட வாழ்க்கையே ஏதோ எந்திரமா மாறிடும் புரிஞ்சுக்கோ. நான் நினைச்சுருந்தால் இந்த விசயத்தை மறச்சுட்டு உன்னை கல்யாணம் பண்ணி இருக்க முடியும் ஆனால் நான் என் அர்ச்சனாவை ரொம்ப அதிகமா நேசிக்கிறேன் உனக்கு என்னால துரோகம் பண்ண முடியாது. என்னோட காதல் உனக்கு வரமா இல்லாமல் போனாலும் சாபமா மாறிடக் கூடாது அதனால தான் சொல்கிறேன் நீ என்னை மறந்துரு என்றான் விவேக்.

 

விவேக் என்னடா நடக்குது இங்கே கல்யாணத்தை ஏன் நிறுத்த சொல்லுற என்ற தனலட்சுமியிடம் அம்மா எனக்கு நடந்த ஆக்சிடென்ட்ல என்றவன் தனக்கு உள்ள பிரச்சனையை கூறினான். இப்போ சொல்லுங்கம்மா என்னால எப்படி அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்க முடியும். அவளோட மொத்த வாழ்க்கையையும் வீணடிக்க எனக்கு மனசு இல்லைம்மா என்றான் விவேக்.

 

போதும் நிறுத்துங்க விவேக் ஒரு விசயம் சொல்லுங்க உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை எனக்கு ஏற்பட்டிருந்தால் என்னை விட்டுட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிப்பிங்களா என்றாள் அர்ச்சனா. சொல்லுங்க விவேக் என்றவளிடம் இல்லை என்று தலையாட்டினான் விவேக். அப்பறம் நான் மட்டும் எப்படி விவேக் வேற கல்யாணம் பண்ணிப்பேன் என்னை ஏங்க நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறிங்க. விவேக் என்னைப் பாரு நமக்கு குழந்தைகளே இல்லைனா கூட பரவாயில்லை எத்தனையோ குழந்தைகள் அம்மா, அப்பா இல்லாமல் இருக்காங்க அதில் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம். இல்லையா நமக்கு குழந்தைகளே வேண்டாம் சாகுற வரை உங்களுக்கு நான் குழந்தை, எனக்கு நீங்க குழந்தை நாம சந்தோசமா வாழலாம் விவேக். ப்ளீஸ் விவேக் புரிஞ்சுக்கோங்க இந்த கல்யாணம் நடக்கனும் இல்லைன்னா அர்ச்சனா செத்துருவாள் விவேக் என்றாள் அர்ச்சனா.

 

அர்ச்சனா ப்ளீஸ் என்ற விவேக்கிடம் ரோனி அவர்கிட்ட சொல்லு ரோனி என்று அர்ச்சனா அழுதிட அவளை அண்ணி அழாதிங்க என்று அணைத்துக் கொண்டாள் வெரோனிகா.

 

விவேக் உங்களுக்கு உள்ள பிரச்சனையை கட்டாயம் கியூர் பண்ணிரலாம் என்று தேவ் கூறிட அவன் ஏதோ சொல்ல வந்தான். விவேக் ப்ளீஸ் நம்ம கல்யாணம் நடக்கனும் அவ்வளவு தான் என்றாள் அர்ச்சனா.

 

விவேக் அதான் அர்ச்சனா இத்தனை தூரம் சொல்லுறாளேடா நீ ஏன் அவளை புரிஞ்சுக்க கூடாது என்ற தனலட்சுமியிடம் என்னம்மா பேசுறிங்க நீங்க அர்ச்சனா இடத்தில் நம்ம லாவண்யா இருந்தாலும் இப்படித் தான் பேசுவிங்களா. உங்க மகன்னு வரும் போது அர்ச்சனா வாழ்க்கையை பழி கொடுக்க துணிஞ்சுட்டிங்க அப்படித் தானே என்றான் விவேக். விவேக் நான் அப்படி சொல்லவில்லை என்ற தனலட்சுமியிடம் அம்மா போதும் ப்ளீஸ் என்றவன் உதய் தயவு செய்து அர்ச்சனாவுக்கு புரிய வைங்க. இது வாழ்க்கை விளையாட்டு இல்லை அவளுக்கு புரிய வைங்க. தயவு செய்து உங்க தங்கச்சியை கூட்டிட்டு கிளம்புங்க என்றான் விவேக். 

 

விவேக் ப்ளீஸ் தயவு செய்து புரிஞ்சுக்கோங்க என்ற அர்ச்சனாவிடம் அர்ச்சு ப்ளீஸ் நான் உன் காலில் விழறேன் தயவு செய்து என்னை மறந்துட்டு உனக்குனு ஒரு வாழ்க்கையை தேடிக்கோ என்றான் விவேக்.

 

பைத்தியமாடா நீ நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் திரும்ப, திரும்ப சொன்னதையே சொல்லிட்டு இருக்க முட்டாள் புரிஞ்சுக்கோடா நீ இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லை என்றாள் அர்ச்சனா. அர்ச்சு ப்ளீஸ் புரிஞ்சுக்கோம்மா என்றவனது கன்னத்தில் பளார் , பளாரென அறைந்தவள் கோபமாக சென்று விட விவேக் கண்கள் கலங்கியபடி அப்படியே அமர்ந்து விட்டான்.

 

அண்ணா அண்ணி கிட்ட பேசுங்க ,அவங்களை புரிஞ்சுக்கோங்க என்ற வெரோனிகாவிடம் இல்லைம்மா அவள் போகட்டும். கல்யாணம் நின்றால் ஒரு நாள் தான் அழுவாள். கல்யாணம் நடந்தால் வாழ்க்கை முழுக்க அழுவாள் என்ற விவேக் சென்று விட உதய், ரோனி, தேவ் மூவரும் அர்ச்சனாவைத் தொடர்ந்து சென்றனர்.

 

என்ன சொல்லுறிங்க சம்மந்தி இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்தாச்சு இப்போ போயி கல்யாணம் வேண்டாம்னு சொன்னால் என்ன அர்த்தம் என்றார் நெடுமாறன். அவரிடம் விவேக் கூறிய விசயங்களை சொன்ன தனசேகரன் இப்போ சொல்லுங்க சம்மந்தி எப்படி இந்த கல்யாணம் நடக்கும். அர்ச்சனா சின்னப் பொண்ணு அவன் மேல உள்ள காதலால் இந்த கல்யாணம் நடக்கட்டும்னு சொன்னாலும் நாம எப்படி நடத்தலாம்.  வாழ்க்கை முழுக்க அந்தப் பொண்ணு அழனுமா சம்மந்தி கல்யாணத்தை நிறுத்திடலாம் என்றார் தனசேகரன்.

 

வீட்டிற்கு வந்த அர்ச்சனா உடைந்து அழ ஆரம்பித்தாள். உதய் அப்பா சொல்லுறது எல்லாம் நிஜமா என்ற மலர்கொடியிடம் ஆமாம் அம்மா என்றான் உதய். மலர்கொடி அப்படியே அமர்ந்து விட விவேக் சொன்னால் இந்த கல்யாணம் நின்னுடுமா நான் சொல்லனும் இந்தக் கல்யாணம் நிற்காது. எனக்கும் , விவேக்குக்கும் கல்யாணம் நடக்கும். நடக்கனும் என்றால் அர்ச்சனா. 

 

என்னடி பேசுற எப்படி இந்த கல்யாணம் நடக்கும் என்ற மலர்கொடியிடம் நடக்கனும் நடந்தே தீரனும் என்றாள் அர்ச்சனா. அர்ச்சு என்னடி பேசுற என்ற சுசீலாவிடம் விவேக் இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லை சித்தி என்றாள் அர்ச்சனா.

 

அத்தை அண்ணியை புரிஞ்சுக்கோங்க அவங்களால எப்படி விவேக் அண்ணனை உடனே தூக்கி எறிய முடியும் என்ற வெரோனிகாவிடம் என்னத்த புரிஞ்சுக்க ரோனி. நீ என்ன பேசிட்டு இருக்க. இது என்ன சாதாரண விசயமா அவளோட எதிர்காலமே கேள்விக்குறியா போயிரும் இந்த கல்யாணம் நடந்தால் நீ இதில் எல்லாம் தலையிடாதே. என் பொண்ணோட வாழ்க்கை விசயம் எந்த முடிவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன். 

 

தூக்கி எறியத் தான் வேண்டும் காலம் முழுக்க நரக வாழ்க்கையை உன்னால வாழ முடியுமாடி என் பொண்ணு ஏன் வாழனும் . அதிகப் பிரசங்கி தனமா எல்லா விசயத்திலும் மூக்கை நுழைக்காமல் போடி உன் வேலையை பார்த்துகிட்டு என்று மலர்கொடி கோபமாக கேட்டிட வெரோனிகா அமைதியாகினாள்.

 

அம்மா அவளை ஏன் திட்டுறிங்க அவள் என்னோட அண்ணி என் வாழ்க்கையை பற்றி பேச அவளுக்கும் உரிமை இருக்கு என்ற அர்ச்சனாவிடம் வாயை மூடுடி. அவள் உனக்கு சப்போர்ட் பண்ணுறதால அண்ணிங்கிற அவளும் என் பக்கம் இருக்கிற நியாயத்தை பேசினால் அண்ணினு சொல்லுவியா வாயை மூடு அர்ச்சனா என்றார் மலர்கொடி.

 

அம்மா போதும் இது என்னோட வாழ்க்கை என் வாழ்க்கைக்கான முடிவை நான் தான் எடுப்பேன். நிச்சயம் பண்ணின தேதியில் எனக்கும், விவேக்கிற்கும் கல்யாணம் நடக்கும், நடக்கனும் என்றாள் அர்ச்சனா.

 

அம்மா இந்த பிரச்சனை கியூர் ஆக வாய்ப்பு இருக்கும்மா என்ற தேவ்விடம் சரிடா கியூர் ஆகாமல் போயிட்டால் என் பொண்ணோட வாழ்க்கை என்றார் மலர்கொடி. 

 

இதோ பாரு தேவ் ரோனிக்கு சொன்னது தான் உனக்கும். என் மகளோட வாழ்க்கை எனக்கு முக்கியம். யாரு என்ன சொன்னாலும் சரி இந்த கல்யாணம் நடக்காது. அர்ச்சனா வாழ்க்கையை பற்றிய முடிவை நீங்க யாரும் எடுக்க வேண்டாம் என்றார் மலர்கொடி கோபமாக.

 

அம்மா கொஞ்சம் பொறுமையா இருங்க அர்ச்சனா சம்மதிச்சாலும் விவேக் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கப் போறதில்லைன்னு சொல்லிருக்காரு ஆனால் நீங்க எல்லோரையும் காயப் படுத்துற மாதிரி பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை என்றான் உதயச்சந்திரன்.

 

என்ன உதய் ரோனியை சொன்னதும் உனக்கு கோபம் வருதா என்ற மலர்கொடியிடம் அம்மா நான் என்று ஏதோ சொல்ல வந்தவனிடம் உதய் நீ போ அம்மாவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் நெடுமாறன். 

 

என்ன ஆச்சி  வரச் சொன்னிங்களாமே என்ன விசயம் என்ற வெரோனிகாவிடம் ரோனி உன் அத்தை என்ற கல்யாணிதேவியிடம் ஆச்சி அத்தைக்கு என்னை திட்ட உரிமை இல்லையா என்ன . நானே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை நீங்கள் ஏன் என்றாள் வெரோனிகா. என்னை சமாளிக்க பொய் சொல்லாதே ரோனி உன் அத்தை பேசினது உன்னை காயப் படுத்திருக்குனு எனக்கும் தெரியும். அவள் ஒரு அம்மா. எங்கே தன் மகளோட வாழ்க்கை பட்டுப் போயிருமோன்னு பயப்படுகிறாள் என்ற கல்யாணிதேவியிடம் புரியுது ஆச்சி ஆனால் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க இதே பிரச்சனை அர்ச்சனா அண்ணியோட கல்யாணம் முடிந்த பிறகு ஏற்பட்டிருந்தால் நாம என்ன பண்ணிருப்போம். அண்ணியை அப்பவும் விவேக் அண்ணாகிட்ட இருந்து பிரிச்சு வைப்போமா என்றாள் வெரோனிகா.

 

ரோனி அது எப்படி என்ற கல்யாணிதேவியிடம் இப்பவும் அது தான் ஆச்சி அவங்க இரண்டு பேரும் சேரனும் ஆச்சி. அண்ணியோட மனசு நிச்சயம் மாறாது அவங்களை நாம புரிஞ்சுக்கனும் என்றாள் வெரோனிகா.

 

என்ன புரிஞ்சுக்கனும் ரோனி என்ற மலர்கொடியைக் கண்டவள் அதிர்ந்து நின்றாள்.

 

              அத்தியாயம் 85

 

என்னடி என்ன புரிஞ்சுக்கனும் உன்கிட்ட நான் அப்பவே சொன்னேன் அதிகப் பிரசங்கித் தனமா நடந்துக்காதேன்னு ஆனால் நீ கேட்கவே மாட்டியாடி. சொல்லு என் பொண்ணு வாழ்க்கையை முடிவு பண்ண நீ யாரு. அர்ச்சனாவோட எதிர்காலம் கேள்விக்குறியா நிற்கிறதை பார்க்க உனக்கு என்ன அத்தனை ஆனந்தமா என்ற மலர்கொடியிடம் அத்தை அது என்று இழுத்தவளிடம் போதும் நிறுத்து. சும்மா காதல், கன்றாவின்னு அவளை கொம்பு சீவி விடாமல் போ போயி படிக்கிற வேலையை மட்டும் பாரு அதை விட்டுட்டு அர்ச்சனா வாழ்க்கையில் முடிவெடுக்க வந்த அப்படினா உனக்கு மரியாதை இல்லை சொல்லிட்டேன் என்றார் மலர்கொடி.

 

மலர் என்ன பேசுற ரோனி உன்னோட மருமகள் என்ற கல்யாணிதேவியிடம் அர்ச்சனா என்னோட மகள் அத்தை என்றார் மலர்கொடி. அர்ச்சனாவோட வாழ்க்கையை கெடுக்க தான் மருமகள் வாய்ச்சுருக்கா என்றார் மலர்கொடி கோபமாக.

 

அத்தை என்ன பேச்சு இது நான் ஏன் அண்ணியோட வாழ்க்கையை கெடுக்கப் போகிறேன் என்றவளிடம் நல்லா நடிக்கிற ரோனி. நீ அவள் நல்லா வாழனும்னு நினைச்சிருந்தால் போ போயி அர்ச்சனா மனசை மாற்று அதை விட்டுட்டு அண்ணியை புரிஞ்சுக்கோங்க , வச்சுக்கோங்கனு தேவையில்லாமல் பேசிட்டு இருக்காதே என்றார் மலர்கொடி.

 

என்னம்மா இங்கே என்ன பிரச்சனை என்ற உதயச்சந்திரனிடம் உதய் உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி வை என் பொண்ணோட வாழ்க்கை விசயம் இது அதில் இவள் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் எடுக்கிற முடிவை மாற்ற முயற்சி பண்ண வேண்டாம்னு சொல்லு என்றார் மலர்கொடி.

 

ரோனி உன்னை நான் படிக்க தானடி சொன்னேன் நீ ஏன் இங்கே வந்து தேவையில்லாத பேச்செல்லாம் பேசிட்டு இருக்க என்றான். மாமா அது நான் எதுவும் தப்பா என்று கூறும் முன் அவளது கன்னத்தில் பளாரென அறைந்தான் உதய்.

 

உதய் என்ன பழக்கம் அவளை ஏன் அடிச்ச என்ற மலர்கொடியிடம் அவள் என்னோட பொண்டாட்டிமா அவளை கண்டிக்கிற உரிமை என்னுடையது. உங்க மகளோட எதிர்காலம் பற்றி அவள் இனிமேல் கருத்து சொல்லக் கூடாதே அதான் இந்த அடி அவளுக்கு.

 

இந்த அடி ஞாபகம் இருக்கும் வரை அவளும் உங்க மகளோட எதிர்காலம் பற்றி எந்த கருத்தும் சொல்ல மாட்டாள் என் மேல மரியாதை இருந்தால் என்றான் உதய்.

 

வெரோனிகா அமைதியாக தன்னறைக்கு சென்று படுத்து விட்டாள். ஏன்டா இப்போ அவளை அடிச்ச என்ற மலர்கொடியிடம் என்னால அவளை மட்டும் தான்மா அடிக்க முடியும். என்னம்மா உங்க பிரச்சனை இப்போ அர்ச்சனா விவேக்கை கல்யாணம் பண்ணிக்க கூடாது தானே சரி இப்போ எனக்கு பதில் சொல்லுங்க இதே பிரச்சனை அர்சசனா, விவேக் இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆன பிறகு வந்திருந்தால் என்ன பண்ணுவிங்க.

 

இவன் கூட நீ வாழ்ந்த வாழ்க்கை போதும் என் மகளா என் வீட்டிலே இருன்னு அவளுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுப்பிங்களா என்றான் உதய். உதய் அப்படி ஒரு நிலைமை வரக் கூடாதுன்னு தான் இப்போ இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்கிறேன். என் மகளோட எதிர்காலம் சூன்யமா போயிறக் கூடாதுன்னு ஒரு அம்மாவா என்னோட கவலை உனக்கு இப்போ புரியாது. நாளைக்கு உனக்கும் ஒரு பொண்ணு பிறந்து அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் புரியும் என்ற மலர்கொடி கோபமாக சென்று விட்டார்.

 

உதய் என்ற கல்யாணிதேவியிடம் சொல்லுங்க அப்பத்தா என்றான் உதய். ரோனிகிட்ட நான் தான் மலர் பேசினதுக்கு மனசுல வச்சுக்காதேன்னு பேச ஆரம்பித்தேன். அப்போ தான் அவள் சொல்ல வந்தால் அதற்குள் மலர் வந்து அவளை கண்ணாபின்னானு பேசி விட்டுட்டாள். அதை புரிஞ்சுக்காமல் நீயும் அவளை அடிச்சு ஏன் உதய் அவளை அடிச்ச என்றார் கல்யாணி.

 

அப்பத்தா எனக்கு எல்லாமே புரியுது ஆனால் ரோனி இனி இந்த விசயத்தில் தலையிட வேண்டாம்னு தான் அவளை அடிச்சேன். என்னால அவளை மட்டும் தான அப்பத்தா அடிக்க முடியும். அம்மா பேசுறது தப்புனு தெரியும். அவங்க பேசினது பொறுக்க முடியாமல் தான் ரோனியை அடிக்க வேண்டியதா போச்சு அவளை நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைப் படாதிங்க என்ற உதய் தன்னறைக்கு சென்றான்.

 

புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்தவளின் அருகே அவன் வர அவள் எழுந்து பால்கணிக்கு சென்று விட்டாள்.

 

ரோனி என்று அவன் அழைத்திட அவள் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க என்னடி என் மேல கோபமா என்றான் உதய். உங்க மேல கோபம் பட நான் யாரு , இந்த வீட்டு விசயங்களில் தலையிட எனக்கு உரிமை இல்லாத போது நான் எப்படி உங்க மேல கோபம் பட முடியும் சொல்லுங்க என்றாள் வெரோனிகா.

 

ரோனி அம்மா பேசினது என்றவளிடம் நான் தான் அதிகப் பிரசங்கியாச்சே மாமா அப்பறம் என்ன விடுங்க இனிமேல் இந்த வீட்டில் என்ன நடந்தாலும் நான் எதையும் கண்டுக்க மாட்டேன் என்றவளிடம் அவன் ஏதோ சொல்ல வர  எனக்கு தலைவலிக்குது நான் படுத்துக்கிறேன் மாமா என்றவள் சென்று மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

 

ரோனி ஏன்டி நீயும் என்னை காயப்படுத்துற என்ற உதய்யிடம் நான் யாரையும் காயப்படுத்தவில்லை மாமா. எல்லோரும் தான் என்னை காயப் படுத்துறாங்க அத்தை ஒரு நிமிசத்தில் என்னை தூக்கி எறிஞ்சுட்டாங்களே மாமா அண்ணியோட வாழ்க்கை கெட்டுப் போகனும்னு நான் நினைப்பேனா நான் அந்த அளவு மோசமானவளா சொல்லுங்க. அண்ணி விவேக் அண்ணா மேல உயிரையே வச்சுருக்காங்க அதனால தான் கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை  பண்ணுங்கன்னு நான் சொன்னேன் அது தப்பா மாமா. நீங்களும் என்னை கை நீட்டி அடிக்கிறிங்க என்றவள் அழுது , அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து போனாள். அவனது விரல் தடங்கள் வேறு கன்னத்தில் பதிந்திருக்க அவளை கவலையுடன் பார்த்தான் உதய்.

 

ரோனி அம்மா என்றவனிடம் அதான் சொல்லாமல் சொல்லிட்டாங்களே மாமா மகள் வேற , மருமகள் வேறனு அப்பறம் என்ன விடுங்க. இனிமேல் நான் அர்ச்சனா அண்ணி விசயத்தில் தலையிடவே மாட்டேன் என்றாள் வெரோனிகா. 

 

ரோனி என்றவனிடம் இல்லை மாமா நான் இந்த வீட்டோட மருமகள். மூத்த மருமகள் அதனால தான் இது என் வீடு, என் குடும்பம்னு அளவுக்கு அதிகமா உரிமை எடுத்துட்டேன். அது எவ்வளவு பெரிய தப்புனு அத்தை சொல்லி புரிய வச்சுட்டாங்க. நான் அதிகப்பிரசங்கித்தனம் பண்ணவில்லை மாமா இது என் குடும்பம்ங்கிற அக்கறையில் தான் யோசிச்சேன். பேசினேன் எல்லாமே தப்புனு சொன்ன பிறகு நான் என்ன பண்ண முடியும் என்றவள் கண் கலங்கினாள்.

 

ரோனி என்னால உன்னை புரிஞ்சுக்க முடியுது ஆனால் அம்மாவோட இடத்தில் இருந்து என்ற உதய்யிடம் மாமா சத்தியமா எனக்கு யார் மேலையும் எந்த கோபமும் இல்லை. என்னோட எல்லை எதுன்னு அத்தை இன்னைக்கு புரிய வச்சுட்டாங்க என்றவள் சென்று படுத்துக் கொள்ள ரோனி ஸாரிடி என்றான் உதய். எதற்கு மாமா என்னை அடிச்சதுக்காகவா நீங்க என்னை அங்கே இருந்து அனுப்ப தான் அடிச்சிங்கனு புரியாத அளவுக்கு நான் குழந்தை இல்லை. அத்தையோட பேச்சை நிறுத்த தான் நீங்கள் என்னை அடிச்சிங்க அது எனக்கும் தெரியும்.

 

எனக்கு உங்க மேல நிறையவே மரியாதை இருக்கு மாமா அதனால இனிமேல் அர்ச்சனா அண்ணி விசயத்தில் நான் தலையிட மாட்டேன் என்ற வெரோனிகா அமைதியாக படுத்து விட்டாள்.

 

என்ன பண்ணிட்டு இருக்க மலர் நீ என்ற நெடுமாறனிடம் என்னங்க நீங்களும் உங்க பொண்ணுக்கு சப்போர்ட்டா என்றார் மலர்கொடி. மலர் நான் பேசுறது அர்ச்சனாவைப் பற்றி இல்லை வெரோனிகாவைப் பற்றி. அவள் நம்ம மருமகள் , நம்ம உதய் மனைவி இந்த வீட்டில் அந்த பொண்ணுக்கு எல்லா உரிமையும் இருக்கு அதை நீ மறந்துட்டு நீ என் பொண்ணு விசயத்தில் தலையிடாதே, அதிகப் பிரசங்கித்தனம் பண்ணாதேன்னா என்ன அர்த்தம் மலர்.

 

அர்ச்சனாவுக்கு அம்மா நீதான் உன் மகளோட வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு நீ கவலைப் படுவது நியாயம் தான். ஆனால் அதற்காக நம்ம மருமகளுக்கு அர்ச்சனா வாழ்க்கையில் அக்கறை இல்லைன்னு நீ பேசுனது பெரிய தப்பு.

 

இன்னும் எத்தனை நாளைக்கு நீயும், நானும் வாழப் போறோம் சொல்லு நம்ம காலத்திற்கு பிறகு அர்ச்சனாவுக்கு ஒரு கஷ்டம், நஷ்டம்னா யாரு தாங்குவாங்க உதய் தான் தாங்கனும். அதற்கு வெரோனிகாவோட ஒத்துழைப்பும் வேண்டும். அதை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் வார்த்தையை விட்டுட்டியே மலர்.

 

நீ காயப் படுத்தினது வெரோனிகாவை மட்டும் இல்லை நம்ம பையன் உதய்யையும் சேர்த்து தான் என்ற நெடுமாறன் அர்ச்சனாகிட்ட நீ கண்டிப்பு காட்டின அப்படினா அவள் உன்னை மீற தான் நினைப்பாள். பொறுமையா இரு என்ற நெடுமாறன் விவேக் போல ஒரு பிள்ளை நமக்கு மருமகனா கிடைக்காமல் போவது பெரிய இழப்பு என்றார்.

 

என்னங்க சொல்லுறிங்க என்ற மலர்கொடியிடம் பின்ன இல்லையா அவர் நினைச்சுருந்தால் நம்ம கிட்ட அவரோட பிரச்சனையை சொல்லாமலே இந்த கல்யாணத்தை நடத்திருக்கலாம். ஆனால் நம்ம பொண்ணோட எதிர்காலம் கெட்டுப் போக கூடாதுன்னு அவளுக்காக யோசிச்சு இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்காரு அந்த மனசுனால தான் அர்ச்சனா அவர் மேல பைத்தியமா இருக்கிறாள் என்றார் நெடுமாறன்.

 

நம்ம பொண்ணோட எதிர்காலம் முக்கியம் தான் நான் மறுக்கவே இல்லை ஆனால் அவளை ரொம்ப வளைக்காதே நாணல் கூட ஒரு அளவுக்கு மேல வளைச்சா உடைஞ்சுரும். அர்ச்சனாவை அவள் போக்கிலே விடு அவளாவே புரிஞ்சுக்குவாள்.  சரி நேரம் ஆச்சு தூங்கு என்ற நெடுமாறன் படுத்துக் கொண்டார்.

 

அர்ச்சனா என்ற இந்திரஜாவின் அலறலில் அனைவரும் எழுந்து அர்ச்சனாவின் அறைக்கு ஓடிட அங்கு வாயில் நுரை தப்ப மயங்கி கிடந்தாள் அர்ச்சனா. அவளருகில் கிடந்த விசபாட்டிலை கண்ட அனைவரும் பதறி அவளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

 

என்னங்க இந்தப் பொண்ணு என்று அழுத மலர்கொடியிடம் அழுங்கம்மா நல்லா அழுங்க அவளை இந்த முடிவுக்கு தள்ளினது நீங்கள் தான் என்று தேவ் கத்திட தேவ் நீ அம்மாவை திட்டாமல் அர்ச்சனாவுக்கு என்னனு பாரு என்ற உதய் தம்பியை அந்த அவசரசிகிச்சை பிரிவு அறைக்குள் அனுப்பி வைத்தான்.

 

               அத்தியாயம் 86

 

அர்ச்சனாவைத் தேடி அறைக்கு சென்றாள் இந்திரஜா. அர்ச்சு ஏய் அர்ச்சு என்னடி இப்படி உட்கார்ந்திருக்க சாப்பிடாமல் கூட என்ற இந்திரஜா அர்ச்சனாவை உலுக்கிட அப்படியே மெத்தையில் சரிந்தாள் அர்ச்சனா. அருகில் தூக்கமாத்திரை குப்பி உருள்வதைக் கண்டவள் பதறி அர்ச்சனா என்று அலறினாள்.

 

இந்திரஜாவின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் பதறி அடித்துக் கொண்டு வந்தனர். இந்து என்னாச்சு என்ற உதயச்சந்திரனிடம் மாமா அர்ச்சனா இந்த பாட்டிலில் இருந்த மொத்த மாத்திரையையும் சாப்பிட்டாள் மாமா என்றிட அச்சச்சோ என்று பதறிய உதய் தேவ்வை பார்த்தான். தேவ் அர்ச்சனாவின் நாடித் துடிப்பை சோதித்து பார்த்தவன் அண்ணா பல்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும் என்றிட தூக்கு உதய் என் பொண்ணை என்று பதறினார் மலர்கொடி.

 

உதய் தன் தங்கையை தூக்கிக் கொண்டு காரில் அமர வைக்க பிரகாஷ் காரை இயக்கினான். பிரகாஷ் கொஞ்சம் வேகமா போப்பா என்று மலர்கொடி பதறிட உதய் தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகு அர்ச்சனா அவசரசிகிச்சை பிரிவு அறைக்கு கொண்டு செல்லப் பட்டாள். என்னங்க நம்ம பொண்ணுக்கு ஒன்றும் ஆகாது தானே  என்ற மலர்கொடியிடம் என்ன ஒன்றும் ஆகாதா அவள் சாப்பட்டது கிட்டத்தட்ட அறுபது தூக்க மாத்திரை என்ற தேவ் மனுஷியாம்மா நீங்க அந்தப் பொண்ணை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே நீங்கள் தான் என்றான்.

 

தேவ் நீ போ போயி அர்ச்சனாவோட ட்ரீட்மென்ட்டை பாரு என்று தம்பியை அனுப்பி வைத்த உதய் தன் தங்கைக்கு எதுவும் ஆக கூடாது என்று இறைவனை வேண்டினான்.

 

உறக்கம் வராமல் தவித்தவனின் மனமோ பதை பதைப்பாகவே இருந்தது. என்னாச்சு எனக்கு ஏன் அர்ச்சனாவுக்கு எதுவும் ஆனது போலவே தோன்றுகிறது பேசாமல் அர்ச்சனாவுக்கு போன் பண்ணலாமா என்று நினைத்தவனின் மொபைல் போன் ஒலித்திட அதில் அர்ச்சனாவின் பெயர் தெரியவும் அதை அவன் எடுக்கவில்லை. என்னை மன்னிச்சுரு அர்ச்சு எங்கே உன்கிட்ட பேசினால் நான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்வேனோன்னு பயமா இருக்கு என்று மனதால் அவளிடம் மன்னிப்புக் கேட்டவன் அமைதியாக திரும்ப அவனது மொபைல் மெசேஜ் டோனை வெளியிட்டது. அதில் அர்ச்சனாவின் எண்ணிலிருந்து வாய்ஸ்மெசேஜ் வந்திருக்க அதை ஓபன் செய்து ஆடியோவை ஓட விட்டான் விவேக்.

 

என்ன விவேக் என்கிட்ட பேசக் கூட பிடிக்கவில்லையா , கடைசியாக ஒரே ஒரு முறை உங்க குரலை கேட்கனும்னு ரொம்ப ஆசைப் பட்டேன். அது நிறைவேறாது போல என்னை மன்னிச்சுருங்க விவேக் நான் உங்களை விட்டு போகப் போறேன். என்னோட வாழ்க்கையே நீங்கள் மட்டும் தான்னு நான் முடிவு பண்ணி ரொம்ப காலம் ஆச்சு விவேக் . நீங்க உங்க முடிவை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் என்னால என்னோட முடிவை மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த உடம்பில் உயிர் இருந்தால் தானே என் அம்மா உங்களை மறக்க சொல்லி என்னை கட்டாயப் படுத்துவாங்க . அவங்களுக்கு அவங்க பொண்ணோட எதிர்காலம் சிறப்பா அமையனுமாம் பாவம் அவங்களுக்கு தெரியலை என் எதிர்காலமே நீங்க தான்னு. உங்களை எப்படி மறப்பேன் அதான் உங்களை மறக்கிறதை விட என் உயிரை துறக்கிறது பெட்டர்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ நான் செத்தாலும் என் மனசுல, உயிர்ல, ஆன்மால என்னோட விவேக் கலந்துருப்பாரு. உங்க நினைவுகளோட நான் திரும்பி வர முடியாத தூரத்திற்கு போகப் போகிறேன் விவேக். என்னோட உயிரற்ற உடலை ஒரு பார்க்க நீங்க வருவிங்கனு நம்புகிறேன். என்னோட கடைசி ஆசை விவேக் என் உடம்புக்கு நீங்க தான் கொள்ளி வைக்கனும் அது மட்டும் போதும் என்று விசும்பலுடன் அந்த ஆடியோ முடிந்திருந்தது.

 

அர்ச்சனா ஐயோ என்று பதறியவன் அவளது எண்ணிற்கு மீண்டும் போன் செய்திட போன் சுவிட்ச் ஆப் என்று வரவும் பதறியவன் வேக வேகமாக தனது பைக்கை எடுத்துக் கொண்டு அவளது வீடு நோக்கி விரைந்தான்.

 

மருத்துவமனையில் மொத்த குடும்பமும் சோகமே உருவாக அமர்ந்திருக்க வேக வேகமாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதில் இருந்து பலத்த காயங்களுடன் இறக்கி கொண்டு வரப் பட்ட இளைஞனின் முகத்தை பார்த்த வெரோனிகா மாமா விவேக் அண்ணா என்று கத்திட அந்த ஸ்ட்ரெக்சர் அருகே சென்றான் உதய்.

 

விவேக், விவேக் உங்களுக்கு என்று பதறிய உதய்யின் கையைப் பிடித்த விவேக் அர்ச்சனா எப்படி இருக்கா என்று மெல்லிய குரலில் பேச முடியாமல் கேட்டு விட்டு மயங்கினான்.

 

அண்ணா , அண்ணா என்று வெரோனிகா பதறிட அவன் அவசரசிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்லப் பட்டான். உதய் உடனடியாக தனசேகரனின் எண்ணிற்கு போன் செய்திட அவர் போனை அட்டன் செய்தார். சொல்லுங்க தம்பி என்ற தனசேகரனிடம் அங்கிள் விவேக்கிற்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு உடனே வாங்க என்று அந்த மருத்துவமனையின் பெயரை கூறினான் உதய்.

 

அவர் உடனே பதறியடித்துக் கொண்டு லட்சுமி என்று கத்திட என்னங்க என்று வந்தார் அவரது மனைவி தனலட்சுமி. லட்சுமி நம்ம விவேக்கிற்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சாம் என்றவர் வேகமா கிளம்புமா என்றதும் ஐயோ என்னங்க சொல்லுறிங்க என் பையனுக்கு என்னங்க ஆச்சு என்று அழ ஆரம்பித்தார் தனலட்சுமி.

 

அவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிட அங்கு ஒருபுறம் அர்ச்சனா, மறுபுறம் விவேக் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

 

தம்பி என் பையன் என்ற தனசேகரனிடம் அங்கிள் கவலைப் படாதிங்க அவருக்கு ஒன்றும் ஆகாது ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு என்றிட எப்படி தம்பி கவலைப் படாமல் இருக்க சொல்லுறிங்க என்னோட ஒரே பையன்பா அவன். அவனுக்கு கடவுள் ஏன் இப்படி தண்டனைக்கு மேல தண்டனை கொடுக்கிறாரு. இப்போ தான் ட்ரக்கிங் போறேன்னு சொல்லி அடிபட்டு வந்தான். படக்கூடாத இடத்தில் அடிபட்டு குடும்ப வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவன்னு டாக்டர் சொல்லி ஆசை ஆசையா காதலிச்ச பொண்ணோட நடக்க இருந்த கல்யாணம் நின்று போயி இப்போ அவனே ஆக்சிடென்ட் ஆகி உயிருக்கு போராடிட்டு இருக்கிறானே என்று கதறினார் தனலட்சுமி.

 

ஆமாம் நீங்க எல்லோரும் என்ற தனசேகரனிடம் அர்ச்சனா  தூக்கமாத்திரை சாப்பிட்டாள் அங்கிள் என்று அழுத உதய்யிடம் ஐயோ, கடவுளே ஏன் தான் இப்படி எல்லோருக்கும் சோதனை மேல சோதனை கொடுக்கிறாயோ என்று புலம்ப ஆரம்பித்தார் தனலட்சுமி.

 

விவேக் வீட்டில் தானே இருந்தான் என்ற தனலட்சுமியிடம் அது தான் ஆண்ட்டி எங்களுக்கும் புரியவில்லை. அவர் ஏன் இந்த நேரம் வெளியே வந்தாரு அதுவும் எங்க வீட்டுக்கு போற வழித்தடத்தில் தான் விபத்து நடந்திருக்குனு இன்ஸ்பெக்டர் சொன்னாரு என்ற உதய்யிடம் என் பையன் பிழைச்சுருவான் தானே தம்பி என்றார் தனலட்சுமி.

 

நிச்சயம் பிழைச்சுப்பாரு அண்ணி நம்ம பிள்ளைங்க இரண்டு பேரும் கட்டாயம் பிழைப்பாங்க என்று கண்ணீர் விட்டார் மலர்கொடி.

 

என்னடா பண்ணி வச்சுருக்க என்ற கௌதமிடம் பின்ன என்ன அண்ணா நம்ம சௌமியா இருக்கும் போது எவளோ அர்ச்சனாவாம் அர்ச்சனா அதான் அவனை டிரக்கிங் கூட்டிட்டு போனேன். போன இடத்தில் ஆக்சிடென்ட் பண்ணினேன். அவனுக்கு எந்த பிரச்சனையுமே இல்லை நான் தான் ரிப்போர்ட்டை மாற்றி வச்சுது. அவனே இப்போ அவனோட கல்யாணத்தை நிறுத்திட்டான் என்று சிரித்தான் விக்னேஷ். 

 

விக்கி இது தப்புடா என்ற கௌதமிடம் எது தப்பு சின்ன வயசுல இருந்து இவனுக்கு தான் பொண்ணை கட்டிக் கொடுக்கனும்னு அம்மா கனவை வளர்த்து வச்சுருப்பாங்க அந்த கனவை இவன் ஈஷியா எவளோ அர்ச்சனாவை காதலிக்கிறேன்னு கலைச்சு விடுவான் என்னை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்லுறியா. அம்மா தினம் ,தினம் எப்படி அழுது கண்ணீர் விடுறாங்க தெரியுமா இனி எந்த அர்ச்சனா அவனை கல்யாணம் பண்ணிக்கிறாள்னு பார்க்கிறேன்.

 

இனி நம்ம சௌமியாவைத் தானே அவன் கல்யாணம் பண்ணிக்கனும் என்றான் விக்னேஷ். ஏன்டா இப்படி ஒரு வேலை பார்த்து வச்ச அவன் அந்தப் பொண்ணை எவ்வளவு காதலிக்கிறான் தெரியுமா என்றான் கௌதம். ஆமாம் பெரிய காதல் வாயில் அசிங்கமா எதாச்சும் வார்த்தை வந்திடப் போகுது காதோல் பண்ணுறாங்க பெரிய காதோல் கருமாந்திரம் என்ற விக்னேஷ் கோபமாக தன் அண்ணனை முறைத்திட சரிடா அந்தப் பொண்ணு அர்ச்சனா அவனை கட்டிக்க மாட்டாள் சரி. நம்ம சௌமியாவை மட்டும் அவன் எப்படி கல்யாணம் பண்ணிப்பான் என்றான் கௌதம். அது நாம தான் அவனை சம்மதிக்க வைக்கனும் அது அப்பறம் பார்க்கலாம். முதலில் அந்த அர்ச்சனாவை இடத்தை காலி பண்ண வைக்கனும் அந்த வேலை முடிஞ்சுருச்சு என்றான் விக்னேஷ்.

 

விக்கி நீ பண்ணினது தப்பு என்ற விவேக்கிடம் அண்ணா நம்ம தங்கச்சியோட வாழ்க்கைக்காக நான் செய்த காரியம் உனக்கு தப்பா பட்டால் நான் ஒன்றும் சொல்ல முடியாது என்றான் விக்னேஷ்.

 

விருப்பம் இல்லாத பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்தால் அவன் நம்ம தங்கச்சியை சந்தோசமா வாழ வைப்பானா சொல்லு ஏன்டா இதை யோசிக்க மாட்டேங்கிற நீ என்ற கௌதமிடம் அண்ணா நீ தான் தேவை இல்லாமல் யோசிக்கிற நீ எதையும் உளராமல் இருந்தாலே சரி என்ற விக்னேஷ்  ஏதோ சொல்ல வர என்னங்க என்று பதறியபடி ஓடி வந்தாள் லாவண்யா.

 

என்னாச்சு லாவண்யா என்ற கௌதமிடம் என்னங்க என் அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சாம் அப்பா போன் பண்ணினாரு என்று அவள் பதறிட ஐயோ, என்ன சொல்லுறிங்க அண்ணி என்று விக்னேஷும் பதறினான்.

 

லாவண்யா மருத்துவமனை பெயரை சொல்லிட கௌதம் ,விக்னேஷ் இருவரும் அவளுடன் கிளம்பினர்.

 

என்ன சரவணா எப்போ நம்மளைப் பற்றி உங்க வீட்டில் சொல்லப் போறிங்க என்றாள் கனிமொழி. சொல்லுறேன் கனி சீக்கிரமே என்றவனிடம் ஆமாம் இப்படியே தான் ஆறு மாசமா சொல்லுறிங்க எனக்கும் வயசாகுதுல என் வீட்டில் இப்பவே எங்க ஐயா, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு. வாரவனை பூராம் கை நெட்டை, கால் குட்டைன்னு ஆயிரத்தெட்டு நொட்டை சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். என் அம்மாவுக்கு என் மேல பயங்கர கடுப்பு சீக்கிரம் உங்க வீட்டில் சொல்லி என் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வாங்க என்றாள் கனிமொழி.

 

சரி,சரி கட்டாயம் நாளைக்கே அப்பா, சித்தப்பாகிட்ட பேசுறேன் என்ற சரவணன் நேரம் ஆச்சு நீ வீட்டுக்கு கிளம்பு என்றதும் அவளும் கிளம்பினாள்.

 

                அத்தியாயம் 87

 

என்ன கனி இத்தனை நேரம் எங்கே ஊரைச் சுத்திட்டு வருகிறாய் என்றார் அவளது அம்மா செல்வராணி. பார்த்தால் தெரியலையா கண்மாயில் துணி துவைச்சு எடுத்துட்டு , அப்படியே குளிச்சுட்டு வரேன் என்ற கனிமொழியிடம் ஏன்டி ஒரு பாவாடை , தாவணி துவைக்க இரண்டு மணி நேரமா. ஏம்மா கண்மாயில் என்ன நீச்சல் அடிச்சு விளையாடினியா என்ன என்றவரிடம் என்ன ராணி என் மகளை வறுத்தெடுக்கிற என்று வந்த சொக்கலிங்கத்திடம் ஆமாம் உங்க பிள்ளையை வறுத்தெடுத்துட்டாலும் என்ற செல்வராணி மூத்தவளை பார்த்திங்களா என்றார்.

 

ஆமாம் அப்படியே பார்த்து கொஞ்சி குலாவிட்டு தானே இருக்கிறோம் ஏன்டி நீ வேற அவ புருசன்காரனும் கூடவே வந்தால் எப்படி பிள்ளைகிட்ட பேசுறதாம். கதிர் தான் என்னை பார்த்துட்டு தாத்தானு ஓடி வந்தான் என்றார் சொக்கலிங்கம்.

 

இன்னும் என்னவாம் முறைப்பு நம்ம வீட்டுக்கு வந்த மருமகனுக்கு என்ற செல்வராணியிடம் அதான் எனக்கும் புரியலை. அதான் வினோதாவை எல்லோரும் ஏத்துக்கிட்டாச்சே இப்பவும் இப்படி முறைச்சுட்டு திரிந்தால் என்ன பண்ணுறது என்ற சொக்கலிங்கம் நம்ம கனிக்கு ஒரு வரன் வந்திருக்கு. நாளைக்கு நாள் நல்லா இருக்கு பொண்ணு பார்க்க வரச் சொல்லுவோமா என்றார். அந்த மகாராணிகிட்ட சொல்லுங்க அப்பறம் மாப்பிள்ளை நெட்டையா இருக்கான், குட்டையா இருக்கான் , கருப்பா இருக்கான் , வெள்ளையா இருக்கான்னு ஆயிரம் குறை சொல்லிட்டு இருப்பாள் என்ற செல்வராணியிடம் விடு ராணி கனி சின்னப் பொண்ணு அதற்கு என்ன தெரியும் என்ற சொக்கலிங்கம் நான் அண்ணன் வீடு வரை போயிட்டு வரேன் என்றார் சொக்கலிங்கம்.

 

என்ன தேனு உன் அப்பாகிட்ட பேசவில்லையா என்ற சக்திவேலை முறைத்தவள் என்ன கொழுப்பா அவரைப்  பார்த்தும், பார்க்காத மாதிரி நீங்க நடந்து வந்துட்டு பேசலையாவா என்றாள் தேன்மொழி. அதான் உன் மகன் போனானே நீயும் போக வேண்டியது தானே என்றான் சக்திவேல்.

 

அவன் குழந்தை அதனால பிரச்சனை இல்லை நான் அப்படியா நான் மட்டும் போயிருந்தால் நீங்க என்னை சும்மா விட்டுருப்பிங்களா இப்போ தான் என்றவளிடம் அவன் ஏதோ சொல்ல வர போதும் உங்க நக்கல் பேச்சை கேட்க எனக்கு விருப்பம் இல்லை என்றாள் தேன்மொழி.

 

என்ன தேனு கோவிலுக்கு போயிட்டு வர இத்தனை நேரமா என்ற பூங்கொடி  மூன்று பேரும் சாப்பிட வாங்க என்று அழைத்திட எனக்கு பசி இல்லை அத்தை உங்க மகனுக்கு எடுத்து வைங்க என்றாள் தேன்மொழி. என்னாச்சுடி என்ற பூங்கொடியிடம் ரோனி போன் ஏதும் பண்ணினாளா என்றாள் தேன்மொழி.

 

என்னடி பேச்சை மாத்துறியா என்ற பூங்கொடியிடம் அதெல்லாம் இல்லை நீங்க அவருக்கு சோத்தை போடுங்க என்று விட்டு சென்று விட்டாள் தேன்மொழி.

 

என்னாச்சு தம்பி என்ற பூங்கொடியிடம் ஒன்றும் இல்லை சித்தி என்றவன் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றான்.

 

என்னடி கோவிலில் அண்ணனை பார்த்தியா என்ற பூங்கொடியிடம் பார்த்தாலும் அப்படியே பேச விட்டுட்டு தான் மறுவேலை பார்க்கிறாங்க எரிச்சலா இருக்கு அத்தை என்றாள் தேன்மொழி. 

 

எனக்கும் என் அப்பா, அம்மா, தங்கச்சி கூட பேசணும்னு எல்லாம் ஆசை இருக்காதா என்றவளிடம் விடும்மா எல்லாம் சரியாகும். அதற்காக நீ பட்டினி கிடந்தால் எப்படி சாப்பிடு வா உனக்காக இல்லைனாலும் உன் பிள்ளைக்கு அம்மா நீ நல்லா இருக்கனும் அதற்காக சாப்பிடு என்றார் பூங்கொடி.

 

அம்மா அண்ணாக்கு என்னாச்சு என்று வந்த லாவண்யாவிடம் நடந்த விசயங்கள் அனைத்தையும் கூறினார் தனலட்சுமி. என்னம்மா சொல்லுறிங்க அண்ணியும் சூசைட் அட்டன் பண்ணிட்டாங்களா ஐயோ, கடவுளே என்று நொந்து கொண்டாள் லாவண்யா.

 

தன் தம்பியை தனியே இழுத்து வந்த கௌதம் இப்போ திருப்தியாடா நாயே நீ பண்ணின காரியத்தால அந்தப் பொண்ணு அர்ச்சனா தூக்கமாத்திரை சாப்பிட்டு, இப்போ விவேக் வேற ஆக்சிடென்ட் ஆகி இருக்கான். ஏன்டா அவனோட ரிப்போர்ட்டை மாற்றி வைத்தாய். பாரு இப்போ  நீ பண்ணின காரியத்தால இரண்டு உயிர் ஊசலாடிகிட்டு இருக்குடா பாவி என்றான் கௌதம்.

 

என்ன சொல்லுறிங்க நீங்க இவரு என்ன பண்ணினாரு என்ற குரலில் அதிர்ந்து போயினர் கௌதம், விக்னேஷ் இருவரும்.   என்ன பண்ணினாரு இவரு என்ற வெரோனிகாவிடம் ஒன்றும் இல்லை என்று சமாளித்தான் கௌதம்.

 

என்ன ஒன்றும் இல்லை எந்த ரிப்போர்ட்டை மாற்றி வச்சிங்க உண்மையை சொல்லுங்க இல்லை இப்பவே போயி எல்லோர்கிட்டையும் சொல்லிருவேன் என்றாள் வெரோனிகா.

 

என்ன சொல்லுவ போ போயி சொல்லிக்கோ என்று விக்னேஷ் கூறிட டேய் வாயை மூடுடா என்றவன் இதோ பாரும்மா நாங்க பேசினதை நீ தப்பா நினைச்சுட்ட என்றவன் அவளிடம் ஏதோ சொல்ல வர போதும் திரும்ப, திரும்ப பொய் சொல்லாதிங்க. விவேக் அண்ணாவோட ரிப்போர்ட்டைமாற்றி வச்சது அப்போ நீங்க தானா. ஏன் இப்படி பண்ணுனிங்க உங்களால எங்க வீட்டில் எத்தனை பிரச்சனை தெரியுமா என்றவள் உங்களை சும்மா விட மாட்டேன் என்று கோபமாக செல்ல எத்தனிக்க அவளது காலை தன் காலால் தட்டி வாரி விட்டான் விக்னேஷ். தடுக்கி விழுந்தவளின் பின் மண்டை தரையில் அடித்திட அப்படியே மயங்கி சரிந்தாள் வெரோனிகா.

 

ஏய் விக்கி என்னடா பண்ணிட்ட நீ என்ற கௌதமிடம் நீ சும்மா இரு இப்போ மட்டும் இவள் உண்மையை சொன்னாள் அவ்வளவு தான் மொத்த குடும்பமும் என்னை கொன்னுருவானுங்க இப்போதைக்கு இவளை ஆஃப் பண்ணிட்டால் போதும் என்றான் விக்னேஷ்.

 

ஏன்டா ஒரு பொய்யை மறைக்க பல பொய் சொன்னது போல நீ தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டு இருக்கடா அந்தப் பொண்ணுக்கு தலையில் அடிபட்டு இரத்தம் வருது பாரு என்ற கௌதமை இழுத்துச் சென்றான் விக்னேஷ்.

 

அவள் செத்தால் நமக்கென்ன நமக்கு நம்ம தங்கச்சி வாழ்க்கை தான் முக்கியம் என்றவனது கன்னத்தில் பளாரென அறைந்தவன் மனுசனாடா நீ ச்சீ என்று வெரோனிகா விழுந்த இடத்திற்கு வந்தான் கௌதம்.

 

வெரோனிகாவைத் தேடி வந்த இந்திரஜா கண்டதோ படிக்கட்டு ஏறும் இடத்தில் ஒரு மூலையில் தலையில் அடிபட்டு மயங்கி கிடந்த வெரோனிகாவைத் தான். இது அந்த மருத்துவமனையின் பின்புறம் உபயோகப் படுத்தாத பழைய படிக்கட்டு. ரெஸ்ட்ரூம் சென்றிருப்பாளோ என்று நினைத்து வந்தாள் இந்திரஜா. அங்கு கிடந்தவளைக் கண்டு பதறிய இந்திரஜா ரோனி, ரோனி என்று அவளது கன்னம் தட்டிட கௌதமும் வந்துவிட்டான். அண்ணா கொஞ்சம் இவளை தூக்குங்களேன் என்று பதறினாள் இந்திரஜா.

 

அவனும் அவளைத் தூக்கி வந்திட அவளைக் கண்ட மொத்த குடும்பமும் பதறியது. அவளை பரிசோதித்த மருத்துவர் பின்னந்தலையில் அடிபட்ட காயத்திற்கு தையல் போட்டு மருந்து கட்டினார்.

 

டாக்டர் ரோனி என்ற உதய்யிடம் அவங்களுக்கு பயப்படுற மாதிரி ஒன்றும் இல்லை. இன்னும் அரை மணி நேரத்தில் கண் விழிச்சுருவாங்க. ஒரு ஸ்கேன் மட்டும் பார்க்கனும் என்றிட சரிங்க டாக்டர் என்று கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டான் உதய்.

 

கௌதமும் நல்ல வேளை இந்தப் பொண்ணுக்கு எதுவும் ஆகவில்லை என்று நினைத்தவன் லாவண்யாவிடம் கூட சொல்லாமல் நேராக வீட்டுக்கு வந்தான்.

 

விக்னேஷ் தன் அறையில் கூண்டுப் புலியாக இங்கும், அங்கும் நடந்து கொண்டிருந்தான். அவனது அறைக்கதவு தட்டப்படவும் கதவைத் திறந்தான். திருப்பதிக்கு போயிருந்த அவனது அம்மா சகுந்தலாவும், அப்பா சந்திரமோகனும்,  தங்கை சௌமியாவும் நின்றிருந்தனர்.

 

என்னடா கௌதம், லாவண்யா யாரையும் காணோம் என்ற சகுந்தலாவிடம் நீங்க எப்போ வந்திங்க என்றான் விக்னேஷ். இப்போ தான்டா வந்தோம் என்ற சகுந்தலா கௌதமும், லாவண்யாவும் எங்கேடா என்றார்.

 

விவேக்கிற்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு அதான் அங்கே போயிருக்காங்க என்றான் விக்னேஷ். என்னடா சொல்லுற விவேக்கிற்கு ஆக்சிடென்ட்டா அச்சச்சோ என்று பதறினார் சகுந்தலா. விடுங்கமா செத்து தொலையட்டும் நம்ம சௌமியாவை வேண்டாம்னு சொன்னவன் தானே என்ற விக்னேஷின் கன்னத்தில் பளார், பளாரென அறைந்த சகுந்தலா என்னடா பேசுற என் அண்ணனோட ஒரே மகன் விவேக். உன் தங்கச்சியக கட்டிக்கவில்லைனா அவன் சாகனுமா என்னடா புத்தி இது அதுவும் இத்தனை கொடூரமான புத்தி என்றார் சகுந்தலா.

 

அம்மா என்றவனை அடி வெளுத்தான் கௌதம். டேய், ஏன்டா அவனை இப்படி அடிக்கிற என்ற சகுந்தலாவிடம் இந்த பொறுக்கி பண்ணி வச்சுருக்கிற வேலைக்கு என்றவன் பற்களைக் கடித்துக் கொண்டு தம்பியை மேலும் அடித்தான். கௌதம் அவன் என்ன பண்ணினான்னு தெளிவா சொல்லு என்ற சந்திரமோகனிடம் நடந்த அத்தனை விசயங்களையும் சொல்லி முடித்தான் கௌதம்.

 

என்னடா இது ஏன்டா இப்படி பண்ணி வச்சுருக்க ஏற்கனவே விவேக் ரிப்போர்ட்டை மாற்றி பெரிய தப்பு பண்ணிருக்க. அதோட விடாமல் அந்த வெரோனிகா பொண்ணை வேற கீழே தள்ளி விட்டு ஏன்டா இத்தனை கொடூரமா நடந்துகிட்ட என்ற சந்திரமோகன் அவனை அடிக்க பாய அடிங்கப்பா நல்லா அடிங்க. சின்ன வயசுல இருந்து அவன் தான் உன் புருசன்னு சொல்லி, சொல்லி சௌமியா மனசுல ஆசையை வளர்த்திங்க. இப்போ என்னடான்னா அவன் அந்த அர்ச்சனாவை காதலிக்கிறேன்னு வந்து நிற்கிறான். அவனை எவளையாவது கட்டிக்கிட்டு சந்தோசமா இருந்துட்டு போகட்டும்னு வாழ்த்த எனக்கு மனசு வராது.

 

என் தங்கச்சி வாழ வேண்டிய வாழ்க்கையை எவளோ எப்படி வாழலாம் என்று கத்தினான் விக்னேஷ். முட்டாள் அதற்காக நீ இப்படி தப்பு மேல தப்பு பண்ணுவியா அந்தப் பொண்ணு வெரோனிகா கண் விழிச்ச பிறகு நீ பண்ணின எல்லா விசயத்தையும் எல்லோர்கிட்டயும் சொல்லிட்டாள் என்றால் என்னடா பண்ணுவ என்றான் கௌதம்.

 

அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் அந்த விவேக் என் தங்கச்சி தவிர வேற ஒரு பொண்ணு கழுத்தில் தாலி கட்டுறதை நான் அனுமதிக்கவே மாட்டேன் என்றான் விக்னேஷ்.

 

என்னம்மா இவன் என்ற கௌதமிடம் விடுப்பா அவன் கிடக்கிறான் நீ வா நாம உடனே ஹாஸ்பிடல் போகலாம். அந்தப் பொண்ணு வெரோனிகா கைல, காலில் விழுந்தாவது இவன் பண்ணின கேவலத்தை மன்னிச்சு வெளியே சொல்ல வேண்டாம்னு கெஞ்சலாம் என்றார் சகுந்தலா.

 

விவேக் சொல்லிருக்கான்மா அந்தப் பொண்ணு கொஞ்சம் நல்ல மாதிரினு போயி பேசலாம் என்ற கௌதம் தன் தாய்,  தந்தையுடன் அந்த மருத்துவமனைக்கு சென்றான்.

 

எங்கே போனிங்க கௌதம் என்ற லாவண்யாவிடம் அப்பா, அம்மா வந்துட்டாங்க அதான் கூப்பிட போனேன் லாவண்யா விவேக் எப்படி இருக்கான் என்றிட இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை. ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு என்றாள் லாவண்யா.

 

                    அத்தியாயம் 88

 

மருத்துவர் சொன்னது போல் ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்தாள் வெரோனிகா. ரோனி என்று கண்கள் கலங்கியபடி நின்ற உதயச்சந்திரனிடம் மாமா ஏன் அழறிங்க என்றவள் தலையைப் பிடித்திட ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே ரோனி என்றான் உதய். உனக்கு ஒன்றும் இல்லைம்மா என்றவனிடம் மாமா அண்ணி எப்படி இருக்காங்க, விவேக் அண்ணா எப்படி இருக்காங்க என்றாள்.

 

ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு ரோனி என்றவன் உனக்கு எப்படி ரோனி அடிபட்டுச்சு. அந்த படிக்கட்டு தான் யூஸ் கிடையாதே அங்கே நீ ஏன் போன என்ற உதயச்சந்திரனிடம் அவள் ஏதோ கூற வர தம்பி பாவம் அந்தப் பொண்ணு இப்போ தான் கண் விழிச்சுருக்கு நீங்க இப்படி கேள்வி  மேல கேள்வி கேட்கிறிங்களே என்று சகுந்தலா கூறிட ஸாரி ரோனி நீ ரெஸ்ட் எடு என்றவன் அவளது  நெற்றியில் கை வைத்தான். மாமா அது என்றவள் ஏதோ சொல்ல வர அர்ச்சனா இருந்த ஐசியு அறையில் இருந்து மருத்துவர் வருவதாக கௌதம் கூறிட உதய் சென்று விட்டான்.

 

வெரோனிகாவின் அருகில் வந்த சகுந்தலா அம்மாடி உன் காலைப் பிடிச்சு கேட்கிறேன் என்று அவளது காலை பிடித்திட ஐயோ , என்ன பண்ணுறிங்க நீங்க காலை விடுங்க என்றாள் வெரோனிகா. தப்பில்லைம்மா நீ தான் பெரிய மனசு பண்ணி என் அண்ணன் குடும்பத்து உறவு அறுந்து போயிராமல் காப்பாத்தனும். எனக்கு என் அண்ணன்னா உசுரு அவரு குடும்பமும், என் குடும்பமும் எப்பவுமே ஒற்றுமையா இருக்கனும்னு தான் நான் ஆசைப்படுகிறேன். அதனால என் பொண்ணு  சௌமியாவை விவேக்கிற்கு கல்யாணம் பண்ணி வைக்க ரொம்பவே ஆசைப்பட்டேன். அது நடக்காதுன்னு தெரிஞ்சு என் மனசை தேத்திக்கிட்டேன். ஆனால் என் மகன் இப்படி ஒரு காரியத்தை பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கவில்லைம்மா. இப்போ மட்டும் விக்கி பண்ணின எல்லா தப்பையும் நீ வெளியில் சொன்னால் என் அண்ணன் என்னை ஒதுக்கிருவாரும்மா அதனால தயவுசெய்து என் குடும்ப மானத்தை காப்பாத்தும்மா. விவேக் கண் முழிச்சதும் எப்பாடு பட்டாவது இந்த கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன் இது சத்தியம் என்றார் சகுந்தலா.

 

உங்க மகன் பண்ணினது என்ன சின்ன தப்பாம்மா இவ்வளவு சாதாரணமா மன்னிப்பு கேட்கிறிங்க. உங்க மகன் பண்ணின காரியத்தால இரண்டு உயிர் அங்கே ஊசலாடிட்டு இருக்கு. இரண்டு உயிரை விட உங்க குடும்ப மானம் முக்கியமா. உங்க மகனை சரியா வளர்த்திருந்திங்கனா இன்னைக்கு இத்தனை பெரிய கஷ்டம் எங்க வீட்டுக்கு வந்துருக்குமா.

 

என் அத்தைக்கு எல்லா உண்மையும் தெரிந்தால் மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும் அதனால நான் சொல்லித் தான் ஆகனும் என்னை மன்னிச்சுருங்க. என் குடும்பமே உங்க மகன் வச்ச கொள்ளியில் சிதறி கிடக்கு அது உங்களுக்கு தெரியுமா.

 

என் நாத்தனார் உயிருக்கு போராடிட்டு இருக்கிறாள். ஒரு வாரத்தில் கல்யாணம்னு சந்தோசமா இருந்தவ மனசுல இந்த கல்யாணம் நடக்கவே கூடாதுன்னு எல்லோரும் இடியை இறக்கி அவளுக்கு மனசு வலிச்சு இனி உயிரோடவே வாழக் கூடாதுன்னு அறுபது தூக்கமாத்திரை சாப்பிட்டு சாக கிடக்கிறாள். என் நாத்தனார் செத்துப் போயிட்டால் உங்க மன்னிப்பு அவளை திருப்பி கொடுத்துருமா சொல்லுங்க. உங்க மகன் பண்ணினது கிரிமினல் குற்றம் சத்தியமா மன்னிப்பு கிடையாது நான் போலீஸ்ல கம்ப்ளையண்ட் பண்ண தான் போறேன். அவன் கம்பி எண்ணினால் மட்டும் தான் அவனுக்கு புத்தி வரும் என்றாள் வெரோனிகா கோபமாக.

 

ரோனி என்று உதய் வரவும் சகுந்தலா, கௌதம் இருவரும் சென்று விட்டனர். என்னாச்சு மாமா அண்ணிக்கு என்ற வெரோனிகாவிடம் ஸ்டமக் வாஷ் பண்ணிருக்காங்க ஆனாலும் கொஞ்சம் க்ரிடிகல்னு தான் டாக்டர் சொல்லி இருக்காரு என்று உதய் சொல்லிட அண்ணிக்கு ஒன்றும் ஆகாது மாமா என்றாள் வெரோனிகா.

 

சரி உனக்கு எப்படி அடிபட்டுச்சு என்றவனிடம் மாமா  என்றவள் நடந்த விசயங்கள் அனைத்தையும் கூறினாள். சகுந்தலா வந்து பேசியது வரை .

 

என்ன திமிர் அவனுக்கு ரிப்போர்ட்டை மாற்றி வச்சது மட்டும் இல்லாமல் உன்னை தள்ளி விட்டு அவனை என்று பற்களைக் கடித்த உதய்யிடம்  மாமா ப்ளீஸ். அவனை அடிக்கிறதால என்ன ஆகப் போகுது நீங்க தேவ் மாமாவையும், பிரகாஷ் மாமாவையும் கொஞ்சம் வரச் சொல்லுங்க என்றாள் வெரோனிகா.

 

அண்ணி என்று தேவ் வந்து விட மாமா பிரகாஷ் மாமா எங்கே என்றாள் வெரோனிகா. சொல்லுங்க அண்ணி என்று பிரகாஷும் வந்து விட்டான். நடந்த நிகழ்வுகளை கூறிய வெரோனிகா மாமா இப்போ நாம இந்த உண்மையை சொன்னால் பொய் சொல்கிறோம்னு அவங்க சொல்ல வாய்ப்பு இருக்கு அந்த விக்னேஷ் பெரிய கிரிமினலா இருப்பான் போல. அவன் தப்பிக்க அவன் என்ன வேண்டுமானாலும் பண்ணுவான் போல அதனால கொஞ்சம் அமைதியா தான் நாம இதை சரி பண்ண முடியும்.

 

விவேக் அண்ணாவுக்கு தப்பான ரிப்போர்ட் கொடுத்த அந்த ஹாஸ்பிடலில் முதலில் விசாரிப்போம். அதற்கு தேவ் மாமா நீங்க தான் ஹெல்ப் பண்ணனும். என்றவள் தன் திட்டத்தை கூறிட பிரகாஷ் சரிங்க அண்ணி என்று அவள் சொன்ன வேலையை செய்ய கிளம்பினான். தேவ் தான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ஆரம்பித்தான்.

 

ரோனி அவங்க மற்ற வேலையை பார்க்கட்டும். அந்த விக்னேஷை என்ன பண்ணனுமோ அதை நான் கவனிச்சுக்கிறேன் என்ற உதய் நீ ரெஸ்ட் எடு என்று விட்டு வெரோனிகா அடிபட்டு கிடந்த அந்த பழைய மாடிப் படிக்கட்டு அருகே சென்று பார்த்தான்.

 

சிசிடிவி கேமரா இருப்பது போல் தெரியவில்லை. என்ன இருந்தாலும் விக்கி தனசேகரனின் தங்கை மகன்  ஆதாரம் இல்லாமல் பழி சுமத்த முடியாது. ஆனால் அவனை சும்மாவும் விட முடியாது. அவன் ஒருவன் செய்த தவறால் மட்டும் தான் அர்ச்சனா, விவேக், வெரோனிகா மூன்று பேருக்கும் பிரச்சனை. உதய் இருக்கும் கோபத்திற்கு அந்த விக்கி மட்டும் கையில் கிடைத்தானென்றால் அடித்தே கொன்று விடுவான். ஆனால் என்ன செய்வது சூழ்நிலை சரியில்லையே அதனால் அவன் மௌனமாக இருக்கிறான்.

 

என்ன விக்கி நீ இப்படி பண்ணிட்ட என்ற சௌமியாவிடம் வேற எப்படி பண்ணுவாங்க சௌமி அவனை மனசுல நினைச்சுட்டு நீ காத்துட்டு இருக்கும் பொருது அவன் என்னடான்னா வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னால் சும்மா விட முடியுமா என்றான். 

 

என்ன நான் விவேக் அத்தானை மனசுல நினைச்சுட்டு இருந்தேனா உனக்கு யாருடா சொன்னாங்க என்றாள் சௌமியா. அவனை மனசுல நினைக்காமல் தான் V ன்னு உன் கையில் பச்சை குத்திருக்கியா என்றான் விக்னேஷ்.

 

பைத்தியமாடா நீ  V ன்னு பச்சை குத்தினால் அது விவேக்குனு அர்த்தமா. முட்டாள் நான் வேற ஒருத்தனை லவ் பண்ணுறேன். என்னோட கொலிக் விஷ்ணு. அவன் கையில் சௌமியாவை S ன்னு பச்சை குத்திருப்பான். என் கையில் விஷ்ணுவை V ன்னு பச்சை குத்திருப்பேன். இந்த விசயம் அண்ணிக்கு தெரியும். அவங்க தான் விவேக் அத்தான் கல்யாணம் முடிஞ்சதும் அம்மா, அப்பாகிட்ட பேசுறதா சொன்னாங்க அது புரியாமல் அறிவு கெட்ட முண்டம். உன் இஸ்டத்திற்கு என்ன பண்ணக் கூடாதோ எல்லாத்தையும் பண்ணி வச்சுட்டு ஏன்டா இப்படி பண்ணி தொலைஞ்ச என்றாள் சௌமியா.

 

சௌமியா என்ன சொல்லுற அன்னைக்கு நான் கேட்டப்ப ஆமாம் விவேக் அத்தான் பெயர்தான்னு சொன்ன என்ற விக்னேஷிடம் வேற எப்படி சொல்லுவாங்க. அப்போ விவேக் அத்தானுக்கும், அர்ச்சனாவுக்கும் கல்யாணம் முடிவு பண்ணாத சமயம். அப்பவே நான் விஷ்ணு பற்றி சொல்லி இருந்தால் என்னை கட்டாயப் படுத்தி எங்கே விவேக் அத்தான் தலையில் கட்டி வச்சுருவிங்களோன்னு பயத்தில் நீ கேட்டப்ப ஆமான்னு சொன்னேன். ஆனால் நீ இப்படி ஒரு கேவலத்தை பண்ணுவன்னு நான் என்ன கனவாடா கண்டேன் என்றவள் தன் சகோதரனை திட்டி தீர்த்தாள்.

 

போ, போயி நீயாவே அத்தை , மாமா காலில் விழுந்து மன்னிப்பு கேளு என்ற சௌமியாவிடம் அப்படி எல்லாம் என்னால மன்னிப்பு கேட்க முடியாது அதான் அம்மா போயிருக்காங்களே அவங்க கிட்ட இருந்து முதலில் நல்ல தகவல் வரட்டும் என்ற விக்னேஷ் தன்னறைக்குள் அடைந்து கொண்டான்.

 

விவேக்கிற்கு தலையில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர் வெளியே வந்தார். இன்னும் இருபத்திநான்கு மணி நேரம் கழித்து தான் எதையும் சொல்ல முடியும் என்று கூறி விட்டு சென்றார் மருத்துவர். அர்ச்சனாவின் நிலை இன்னும் கவலைக்கிடம் தான்.

 

ஒரு நாள் முழுதாக கழிந்து போனது. மலர்கொடி ஒரு புறம் மகளை நினைத்து அழுது தவித்திட மறுபுறம் தனலட்சுமி தன் மகனை நினைத்து அழுது புலம்பினார்.

 

ரோனி இப்போ உனக்கு தலை வலி எப்படி இருக்குடி என்ற சுசீலாவிடம் பரவாயில்லை அத்தை என்றவள் நான் வீட்டுக்கு போகட்டுமா என்றாள். ஏன்மா என்ற சுசீலாவிடம் உங்க எல்லோருக்கும் சாப்பாடு ரெடி பண்ணனுமே என்ற வெரோனிகாவிடம் அம்மா பார்த்துப்பாங்க ரோனி நீயே வீக்கா இருக்கன்னு டாக்டர் சொல்லி இருக்காரு. உனக்கு ஹாஸ்பிடல் ஒத்துக்கலைன்னு நாம வீட்டுக்கு போறதுனா போகலாம் என்ற இந்திரஜாவிடம் இல்லைக்கா பிரச்சனை இல்லை நான் இங்கேயே இருக்கேன். அண்ணி கண் விழிக்கிற வரை என்றவள் தன் மாமியாரை பார்த்தாள்.

 

அவரும் மருமகளை பார்த்தவர் என்னை மன்னிச்சுரு ரோனி உனக்கு ஒன்றும் இல்லைன்னு சந்தோசம் இருந்தாலும்  அதை கொண்டாடுற நிலைமையில் உன் அத்தை இல்லை அர்ச்சனா கண்ணை திறக்கனும் என்று நினைத்து அழுதவரின் அருகில் செல்ல மனம் விரும்பினாலும் தான் ஏதாவது சொல்ல வந்து அதை அவர் தவறாக புரிந்து கொண்டு மீண்டும் ஒரு சண்டை வந்து விடுமோ என்ற பயத்தில் வெரோனிகாவும் மலர்கொடியின் அருகே செல்லவில்லை.

 

என்னாச்சு ஸ்ரீஜா என்ன யோசணை என்ற வசுந்தராவிடம் அம்மா அர்ச்சனாவுக்கு ஒன்றும் ஆகாது தானே என்றாள் ஸ்ரீஜா. ஒன்றும் ஆகாதுடி அவள் நல்லபடியா பிழைச்சுருவாள் என்ற வசுந்தரா இந்தா இந்த வெங்காயத்தை கொஞ்சம் வெட்டு என்றிட அவளும் தன் அன்னைக்கு சமையல் வேலையில் உதவியாக இருந்தாள்.

 

அம்மா ஒரு விசயம் சொல்லுங்க அந்த வெரோனிகா மேல அத்தை கோபம் பட்டது நியாயமா என்றாள் ஸ்ரீஜா. நியாயம் இல்லை தான்டி இப்போ ஏன் உனக்கு இந்த சந்தேகம் அர்ச்சனா மாத்திரை சாப்பிட்டு முழுசா ஒன்றரை நாள் ஆச்சு இன்னும் கண் விழிக்கவில்லையேங்கிற கவலை எனக்கு. உனக்கு எப்பவும் வெரோனிகாவைப் பற்றி தான் யோசனை என்று மகளை கடிந்தார் வசுந்தரா.

 

              அத்தியாயம் 89

 

அந்த வெரோனிகா அப்படி என்னடி உனக்கு பாவம் பண்ணினாள். எப்போ பாரு அவள் தலையை உருட்டிட்டே இருக்க என்ற வசுந்தரா மகளை திட்டிவிட்டு சமையல் வேலையை கவனித்தார்.

 

அம்மா நான் அவளை திட்ட என்று ஏதோ கூற வந்த ஸ்ரீஜாவிடம் வாயை மூடு ஸ்ரீஜா. அந்தப் பொண்ணும் அடி பட்டு ஹாஸ்பிடலில் தான் இருக்கிறாள் கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்க அவளை நீ மறந்துரு. உன் வாழ்க்கையை எப்படி சரி பண்ணுறதுன்னு மட்டும் யோசி என்ற வசுந்தரா தன் வேலையை கவனித்தார்.

 

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று காது கொடுத்து கேட்க கூட நீங்களும் தயாராக இல்லை. உங்க மருமகனும் தயாராக இல்லை என்ற ஸ்ரீஜா கோபமாக சென்று விட்டாள்.

 

என்ன மாமா எதாவது பிரயோஜனமா என்ற வெரோனிகாவிடம் எல்லாமே பழம் தான் ரோனி என்ற உதய் தன் தம்பிகளை பார்த்தான். அவர்களும் புன்னகையுடன் அவளை பார்த்தனர்.

 

மாமா அண்ணியோட நிலைமை என்ற வெரோனிகாவிடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் கண் முழிச்சுருவாள் பயப்படாதிங்க அண்ணி என்றான் தேவ்.

 

விவேக் இருந்த அறையில் இருந்து செவிலியர் ஒருவர் வேகமாக வந்து மருத்துவரை அழைத்துச் செல்ல அனைவரும் பதற்றமாகினர்.

 

வெளியே வந்த மருத்துவர் விவேக் கண் விழித்து விட்டதாக கூறிட தனலட்சுமி, தனசேகரன், லாவண்யா மூவரும் திருப்தி அடைந்தனர்.

 

லாவண்யா மலர்கொடியின் அருகில் வந்து ஆன்ட்டி கவலைப் படாதிங்க அண்ணன் கண் விழிச்சது போல அண்ணியும் கண் விழிச்சுருவாங்க என்றாள். என் பொண்ணும் சீக்கிரம் கண் விழிக்கனும்மா என்று மலர்கொடியும் கண்ணீர் விட்டார்.

 

அவரது வேண்டுதல் இறைவனின் செவிகளில் விழுந்து விட்டது போல அர்ச்சனாவும் கண் விழித்தாள்.

 

மொத்த குடும்பமும் சந்தோசமாக இருந்தனர். இருவரும் உயிர் பிழைத்து விட்டதில்.

 

விக்னேஷ் ஏதோ யோசனையுடன் இருந்தான். வீட்டின்அழைப்பு மணி ஒலித்திட கதவை திறந்தாள் சௌமியா. வாசலில் இரண்டு கான்ஸ்டபிள் நின்றிருக்க என்ன வேண்டும் சார் என்றாள் சௌமியா. இங்கே விக்னேஷ் என்று கேட்டிட என் அண்ணன் தான் என்றவள் விக்னேஷை அழைத்தாள்.

 

பாஸ்போர்ட் வெரிபிகேஷன் என்று நினைத்து அவள் விக்னேஷை அழைத்திட அவனும் வந்தான். நீங்க தான் விக்னேஷா என்ற கான்ஸ்டபிளிடம் ஆமாம் சார் என்றான் விக்னேஷ்.

 

தம்பி ஒரு சின்ன விசாரணை கொஞ்சம் ஸ்டேசன் வரை வர முடியுமா என்று அவனை அழைத்து இல்லை இழுத்துச் சென்றனர்.

 

அவர்கள் அவனை இழுத்து செல்வதைக் கண்டு பதறிய சௌமியா சார் என்ன விசயம் என்றிட எதுவா இருந்தாலும் ஸ்டேசனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிக்கோங்க மேடம் என்று சொல்லி விட்டு சென்றனர்.

 

சௌமியா வேக வேகமாக தன் அண்ணன் கௌதமிற்கு போன் செய்தாள்.

 

கண்விழித்த விவேக் முதலில் சொன்ன பெயர் அர்ச்சனா தான். அர்ச்சனா என்றவனிடம் அவளுக்கு ஒன்றும் இல்லைப்பா, கண் விழிச்சுருவாள் என்று தனலட்சுமி கூறிட அந்த நேரம் அங்கு வந்த இந்திரஜா அர்ச்சனா கண் விழிச்சுட்டாள் என்றாள்.

 

கடவுளே சந்தோசம் என்ற தனலட்சுமி மருமகளை காண சென்றார். அர்ச்சனா ஏன்டி இப்படி பண்ணின என்ற மலர்கொடியிடம் எதற்காக என்னை காப்பாத்துனிங்க என்றாள் அர்ச்சனா.

 

அர்ச்சு என்னடி இது என்ற மலர்கொடியிடம் வேற என்ன சொல்ல சொல்லுறிங்க விவேக் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்றவள் ஏன் என்னை காப்பாத்துனிங்க என்று கத்தினாள்.

 

மேடம் என்னாச்சு ஏன் கத்துறாங்க என்ற செவிலியரிடம் சிஸ்டர் அவங்களை போகச் சொல்லுங்க என்று கத்தினாள் அர்ச்சனா. எனக்கு எதுனாலும் விச ஊசி போட்டு கொன்னுருங்க என்று கத்தியவளிடம் விச ஊசி போட்டு நீ செத்துப் போயிட்டால் உன் விவேக்கை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க என்று வந்தான் உதய்.

 

அதான் அம்மா சம்மதிக்க மாட்டாங்களே, அம்மா சம்மதிச்சாலும் விவேக் சம்மதிக்கனுமே என்றவள் கண்கள் கலங்கிட அவரும் சம்மதிப்பாரு, அம்மாவும் சம்மதிப்பாங்க என்ற தேவ் ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டினான்.

 

இது தான் விவேக்கோட ஒரிஜினல் ரிப்போர்ட். அந்த ரிப்போர்ட் போலி என்ற தேவ் விக்னேஷ் செய்த கேவலமான வேலையை கூறினான். என்ன சொல்லுற தேவ் என்ற மலர்கொடியிடம் ரோனி அண்ணி தான் அம்மா இதை கண்டு பிடிச்சாங்க அதனால தான் அவங்களுக்கு தலையில் அடிபட்டு எல்லாம் அந்த  விக்னேஷ் செய்த வேலை தான் என்று ஒன்று விடாமல் கூறினான்.

 

என்னப்பா இது அந்த பையன் நம்ம ரோனியை தள்ளி விட்டானா. உதய் அவனை சும்மாவா விட்ட என்ற நெடுமாறனிடம் அவன் நம்ம மாப்பிள்ளையோட அத்தை மகன் அவனை நான் அடிக்கப் போயி அதனால அர்ச்சனாவோட கல்யாணத்தில் திரும்ப பிரச்சனை வந்துட்டாள் என்ன பண்ணுறது அதனால அவன் மேல போலீஸ் கம்ப்ளையண்ட் கொடுத்துட்டேன் அப்பா என்றான் உதய்.

 

இது சம்மந்திக்கு தெரியுமா உதய் என்ற கல்யாணிதேவியிடம் பிரகாஷ் சொல்லிட்டான் அப்பத்தா அவரும் கம்ப்ளையண்ட் கொடுக்க சொல்லிட்டாரு. என்  தங்கச்சி வாழ்க்கையில் சிக்கலை உண்டு பண்ணி, அதை கண்டு பிடிச்ச என் ரோனியை தள்ளி விட்டவனை என் கையாலையே அடிச்சுக் கொல்லனும் போல வெறி இருக்கு ஆனால் சூழ்நிலை சரி இல்லை என்றான் உதய்.

 

விடு உதய் அவன் பண்ணின தப்புக்கு சட்டம் தண்டிக்கட்டும் நமக்கு நம்ம அர்ச்சனாவும், மாப்பிள்ளையும் குணமாகிட்டாளே போதும் என்றார் இளமாறன்.

 

என்ன சொல்லுறிங்க சித்தப்பா விவேக்கிற்கு என்னாச்சு என்று பதறிய அர்ச்சனாவிடம் நீ மாத்திரை போட்ட விசயம் தெரிஞ்சு உன்னை பார்க்க வந்தவருக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு. ஆபரேசன் பண்ணி இருக்கு. கை, கால் வேற ப்ராக்சர் என்ற தேவச்சந்திரனிடம் அண்ணா நான் என் விவேக்கை பார்க்கனும் என்றாள்.

 

அவரை விட்டுட்டு சாகனும்னு தானே மாத்திரை போட்ட இப்போ என்னடி அவரை பார்க்கனும் என்ற சுசீலாவிடம் சித்தி அது என்ற அர்ச்சனாவைக் கட்டிக் கொண்ட சுசீலா மகளின் கன்னத்தில் ஒரு அறை அறைந்து விட்டு மீண்டும் அவளை அணைத்து அழ ஆரம்பித்தார்.

 

உன்னை உன் அம்மா பெத்துருக்கலாம்டி உன்னை மாரிலும், தோளிலும் போட்டு வளர்த்தவடி நான் என்னை விட்டு எப்படி அர்ச்சனா உனக்கு சாக தைரியம் வந்துச்சு. அம்மா உன்னை பெத்தவங்க அர்ச்சனா அவங்க உன் எதிர்காலம் நல்லா இருக்கனும்னு ஆசைப் பட உரிமை இல்லாதவங்களா சொல்லு. நீ இப்படி ஒரு முடிவை எடுத்து எங்க எல்லோரையும் மீளாத் துயரத்தில் தள்ள பார்த்தியேடி என்று கலங்கினார் சுசீலா.

 

சித்தி அப்படி இல்லை என்றவளிடம் போடி பேசாதே என்று கலங்கிய சுசீலா அக்கா இவள் கிட்ட சொல்லுங்க இனிமேல் என் கிட்ட இவள் பேசக் கூடாது  என்ற சுசீலாவை கட்டிக் கொண்டார் மலர்கொடி.

 

நானாவது அழுதுட்டேன் அர்ச்சனா உன் சித்தி துக்கத்தை மனசுக்குள்ள வச்சுக்கிட்டே இருந்தாள். அதான் நீ கண் திறந்ததும் கொட்டி விட்டாள் என்ற மலர்கொடி உனக்கு என்னடி விவேக்கை தானே கல்யாணம் பண்ணிக்கனும் தாராளமா பண்ணிக்கோம்மா. இது ஏதோ தேவ் அந்த ரிப்போர்ட்டை காட்டினதால அம்மா சொல்லுறேன்னு நினைக்காதே அர்ச்சு உன்னோட உயிரையே போக்கிக்க நீ துணிஞ்சுட்ட அப்போ நீ அவர் மேல எத்தனை அன்பு வச்சுருப்ப அம்மா உன்னோட காதலை புரிஞ்சுகிட்டேன் செல்லம் என்று மகளைக் கட்டிக் கொண்டு அழுதார் மலர்கொடி.

 

என்ன சொல்லுறிங்கப்பா என்ற விவேக்கிடம் உன்னோட ரிப்போர்ட்டை மாற்றி வச்சது விக்னேஷ் தான்.  பிரகாஷ் போயி எல்லாமே விசாரிச்சுட்டு வந்துட்டாரு அது மட்டும் இல்லை அந்தப் பொண்ணு வெரோனிகாவை கீழே தள்ளி விட்டு மண்டையை உடைச்சுருக்கான். அவர் என் கிட்ட என்ன பண்ணலாம்னு கேட்டாரு போலீஸ் கம்ப்ளையண்ட் கொடுங்கனு சொல்லிட்டேன் விவேக் என்றார் தனசேகரன்.

 

என்னங்க இது விக்கி உன் தங்கச்சி மகன் என்ற தனலட்சுமியிடம் விவேக் என்னோட மகன் லட்சுமி. என் மகனை விட என் தங்கச்சி மகன் எனக்கு ஒசத்தி கிடையாது. என் மகனோட எதிர்காலத்தையே அழிக்க நினைச்சுருக்கான் படுபாவி.

 

அவனை எப்படி சும்மா விடுவது என்று கொதித்தார் தனசேகரன். அப்பா என்ன சொல்லுறிங்க என்ற லாவண்யாவிடம் நடந்த அனைத்தையும் கூறினார் தனசேகரன். பார்த்திங்களா கௌதம் விக்கி பார்த்த வேலையை என்ற லாவண்யாவிடம் அவருக்கு தான் முன்னமே தெரியுமே லாவண்யா என்றார் தனசேகரன்.

 

என்னப்பா சொல்லுறிங்க , கௌதம் அப்பா என்ன சொல்லுறாரு அப்போ விக்கி பண்ணின காரியம் உங்களுக்கு முன்னமே தெரியுமா ஏன் இப்படி பண்ணுனிங்க அப்போ நீங்களும் கூட்டு சேர்ந்து தான் என் அண்ணனோட வாழ்க்கையை அழிக்க நினைச்சிங்களா என்று லாவண்யா கத்திட ஐயோ, இல்லை லாவண்யா அந்த படுபாவி எல்லாம் பண்ணிட்டு தான் என்கிட்டையே சொன்னான்.

 

அவன் சொன்ன நேரம் தான் விவேக்கிற்கு ஆக்சிடென்ட் ஆச்சுனு நீ சொல்லி அழுத என்ற கௌதமிடம் சரிங்க ஆனால் இரண்டரை நாளா இந்த விசயம் தெரிஞ்சும் என் கிட்ட கூட மூச்சு விடாமல் இருந்திருக்கிங்க இல்லை . நீங்க மட்டும் தான் இதில் கூட்டா இல்லை உங்க அம்மாவையும் கூட்டு சேர்த்துக்கிட்டிங்களா  என்று லாவண்யா ஏதோ கூற வர கௌதமின் போன் இசைத்தது.

 

என்ன சொல்லுற சௌமியா  என்ற கௌதம் சரி இதோ வரேன் என்றவன் நேராக தன் தந்தை சந்திரமோகனிடம் வந்தான். அப்பா விக்கியை போலீஸ் அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிருக்காங்களாம் என்ற கௌதமிடம் என்ன சொல்லுற கௌதம் என்று பதறினார் சகுந்தலா.

 

எதற்கு பதறிட்டு இருக்கிற சகுந்தலா அவன் பண்ணின தப்புக்கான தண்டனை இது. உன் அண்ணன் என் கிட்ட கேட்டுட்டு தான் போலீஸ் கம்ப்ளையன்ட் கொடுக்க சம்மதிச்சாரு. அவரு பையனோட வாழ்க்கையையே அழிக்க பார்த்திருக்கான் உன் மகன். அதோடவா அந்தப் பொண்ணு வெரோனிகாவை கொலை பண்ண வேற பார்த்திருக்கான் அதான் அவனை போலீஸ் அரஸ்ட் பண்ணிருக்காங்க என்றார் சந்திரமோகன்.

 

அப்பா அவன் தப்பே பண்ணி இருந்தாலும் என்னுடைய தம்பி என்றான் கௌதம். அதனால அவனை வெளியில் எடுக்கப் போறியா நீங்கள் இப்படி அவன் தப்பு பண்ணினாலும் மன்னிச்சு ஏற்றுக் கொள்வதால் தான் அவன் தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டே இருக்கிறான். இந்த முறை தண்டனை அனுபவிக்கட்டும் அப்போ தான் அவன் திருந்துவான்.

 

சகுந்தலா உனக்கு உன் அண்ணன் உறவு காலம் முழுக்க தொடரணும்னு நீ ஆசைப் பட்டால் உன் மகன் இந்த முறை தண்டனை அனுபவிச்சே ஆகனும் என்றார் சந்திரமோகன் கறாராக.

 

          அத்தியாயம் 90

 

விக்னேஷ் வெரோனிகாவை தள்ளி விட்ட சிசிடிவி பதிவுகளை சேகரித்து அதையும் உதயச்சந்திரன் கம்ப்ளையண்டில் ஆதாரமாக கொடுத்திட விக்னேஷின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவிடப் பட்டது.

 

சகுந்தலா மகனை நினைத்து வருந்தினாலும் கணவரின் கறாரான முடிவில் மௌனமாக கண்ணீர் வடித்தார்.

 

விக்னேஷிற்கு எதிரான ஆதாரங்கள் வலுவானதாக இருப்பதால் கௌதமாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தம்பியை வெளியே எடுக்க அவன் முயற்சி செய்த பொழுதிலும் முயற்சி பலன் அளிக்கவில்லை. விக்னேஷை வெளியில் எடுக்க முயற்சி செய்து லாவண்யாவின் கோபத்திற்கு ஆளானான்.

 

நாட்கள் அதன் போக்கில் கடந்து சென்றது. விவேக் எழுந்து நடக்கவே இரண்டு மாத காலம் ஆகும் என்பதால் திருமண தேதி தள்ளி வைக்கப் பட்டுவிட்டது.

 

இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. அர்ச்சனா மருத்துவமனையே கதியென்று கிடந்தாள். விவேக்கை அவள் தான் முழுக்க, முழுக்க கவனித்துக் கொண்டாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஏன் அர்ச்சு எனக்காக எல்லாமே பார்த்து , பார்த்து செய்கிறாய் என் கிட்ட மட்டும் பேசவே மாட்டேங்கிற என்றான் விவேக். உங்க கிட்ட எதற்காக பேசணும் விவேக் எவனோ காட்டுன போலி ரிப்போர்ட்டை நம்பி என்னை மறந்துருன்னு சொன்னவரு தானே நீங்க. ஒரு விசயம் சொல்லுங்க செக்ஸ் தான் வாழ்க்கையா அது இல்லாமல் வாழ முடியாதா என்றிட அர்ச்சு நான் என்றவன் ஏதோ சொல்ல வர பேசாதிங்க. நீங்க தான் என் புருசன் இந்த ஜென்மத்தில். உங்களை கல்யாணம் பண்ணிக்க எந்த எல்லைக்கும் இந்த அர்ச்சனா போவாள். ஆனால் உங்களை நான் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்கவே மாட்டேன். சும்மா ஏதாச்சும் பேசி என்னை கோபம் படுத்தாதிங்க என்றவள் அமைதியாக அவனுக்கு வேண்டியதை கவனித்தாள்.

 

அவளது கோபம் நியாயமானது தானே அவளை தனது செயல் எந்த அளவிற்கு காயப் படுத்தி இருந்தால் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்திருப்பாள். என்னை மன்னிச்சுரு அர்ச்சு என்றவனை அமைதியாக பார்த்தவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

 

என்னக்கா ஏன் டல்லா இருக்கிங்க என்ற சுசீலாவிடம் இல்லை சுசீ இந்த ரோனி இப்போ எல்லாம் கீழே வரவே மாட்டேங்கிறாள். சாப்பிட மட்டும் தான் வருகிறாள். முன்னே எல்லாம் சாப்பிடும் பொழுது தொண தொணனு எதாவது பேசிகிட்டே இருப்பாள். அத்தை,அத்தைனு நம்ம இரண்டு பேரோட முந்தானையை தானே சுத்திட்டு இருப்பாள். இப்போ எல்லாம் என் கிட்ட பேசுறதே இல்லை என்று வருந்தினார் மலர்கொடி.

 

அவள் அதிகப் பிரசங்கி தனமா எதுவும் நடந்துக்க வேண்டாம்னு நினைத்து விட்டாளோ என்னவோ என்ற சுசீலா சமையலை கவனிக்க என்ன சுசீ குத்தி காட்டுகிறாயா என்றார் மலர்கொடி. அப்படித் தான் வச்சுக்கோக்கா என்ற சுசீலா நீ அன்னைக்கு பேசினது ரொம்ப தப்புக்கா. ரோனி யாரு நம்ம மருமகள், நம்ம உதய்யோட மனைவி அவளுக்கு நம்ம குடும்ப விசயங்களில் இல்லாத உரிமையா. அர்ச்சனா உன்னோட பொண்ணு தான் ஆனால் ரோனி அர்ச்சனாவோட அண்ணி.

 

அர்ச்சனா வாழ்க்கையில் முடிவெடுக்க, கருத்து சொல்ல ரோனிக்கு உரிமை இல்லையா என்ன. ஆனால் நீங்க என்ன சொன்னிங்க ரோனியை அர்ச்சனா விசயத்தில் தலையிடவே கூடாதுன்னு சொன்னிங்க. அது அவளை எவ்வளவு தூரம் காயப்படுத்தி இருக்குனு எனக்கு தெரியவில்லை. ஆனால் பயங்கரமா காயப் படுத்தி இருக்கு. அதான் அவள் இப்போ எல்லாம் வீட்டில் எந்த விசயத்திலும் மூக்கை நுழைப்பதே இல்லை.

 

ஏன் இந்து கிட்ட கூட முன்னே மாதிரி பேசுறது இல்லையாம் என்றார் சுசீலா வருத்தமாக.

 

சுசி நான் அர்ச்சனாவோட அம்மா டீ. அவளோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைத்தது தப்பா என்ற மலர்கொடியிடம் அர்ச்சனா விசயத்தில் உங்க மேல எந்த தப்பும் இல்லைக்கா ஆனால் ரோனி கிட்ட நீங்க நடந்துக்கிட்ட முறை தப்பு. அவள் சின்னப் பொண்ணு அவளை தான் நிறைய காயப் படுத்திட்டிங்க உங்க வார்த்தையால என்ற சுசீலா அவள் தான் வந்து பேசவில்லை சரி நீங்க போயி பேசலாமே உங்க மருமகள் தானே என்றார்.

 

ஏன் அவளா அத்தைன்னு வந்தால் ஏன்டி என் கிட்ட பேசுறனு கேட்டுட போறேனா என்ன என்றார் மலர்கொடி. பாருக்கா இப்போ கூட மாமியார் அதிகாரம் கொடி கட்டி பறக்குது போல என்றார் சுசீலா.

 

அதிகாரம் இல்லை சுசி குற்றவுணர்ச்சி தான். நான் பேசினால் அவள் பேசுவாள். ஆனால் அவளுக்கு அடிபட்டு இருந்தப்ப நான் அவளை சரியா கவனிச்சுக்கவில்லை, ஏன் அவள் கிட்ட சரியா பேசவும் இல்லை அந்த வருத்தம் அவளுக்கு இருக்கும் தானே. எனக்கே என் மேல கோபம் , கோபமா வருது.

 

அவள் மனசுலையும் வருத்தம் இருக்கும் தானே, அதான் கொஞ்சம் ஆறப் போட்டு பேசலாம்னு இருக்கேன் என்றார் மலர்கொடி. சரிக்கா உங்க விருப்பம் என்ற சுசீலா சமையல் வேலையை கவனித்தார்.

 

ரோனி என்ற உதயச்சந்திரனிடம் என்ன மாமா என்ன விசயம் என்றாள் வெரோனிகா. ஏன் இப்போ எல்லாம் ரூம் உள்ளேயே அடைஞ்சு கிடக்கிறாய் என்றான் உதய். இல்லையே நான் படிச்சுட்டு தானே இருக்கேன். நீங்க தானே சொன்னிங்க படிப்பு தான் பர்ஸ்ட்னு அதான் இப்போ எல்லாம் உங்க பேச்சை நான் கேட்டு நல்ல பொண்ணா நடந்துக்கிறேன் என்றாள் வெரோனிகா.

 

என்னடி என் கிட்டையே நடிக்கிறியா உன்னால என் கிட்ட எதையும் மறைக்க முடியாது அதனால சொல்லு என்ன விசயம் என்றான் உதய். ஐயோ , மாமா நான் ஏன் நடிக்கனும், அதற்கான அவசியம் என்ன என்றவளிடம் அம்மா மேல கோபமா இருக்க அப்படித் தானே என்றான் உதய்.

 

அவங்க மேல கோபம் பட நான் யாரு மாமா. மாமியார் மேல கோபத்தை காட்ட மருமகளுக்கு உரிமை இருக்குதா என்ன என்றாள் வெரோனிகா. ரோனி என்ன இது அவங்களை உன் அம்மான்னு சொல்லுவ என்றவனிடம் என் மனசுல இப்பவும் அவங்க என் அம்மா தான் ஆனால் அவங்க மனசுல நான் வேற தானே மாமா என்றவள் கலங்கிய கண்களை மறைக்க வேறு புறம் திரும்பினாள்.

 

என்ன தான் நான் பெத்த அம்மாவை நினைச்சு பழகினாலும் அவங்க பொண்ணோட வாழ்க்கைன்னு வரும் பொழுது நான் உரிமை இல்லாத ஒருத்தியா தானே போயிட்டேன் விடுங்க மாமா அதை ஏன் பேசிகிட்டு என்றவளது கையை தன் கைக்குள் வைத்தவன் ரோனி அம்மா ஏதோ கோபத்தில் பேசிட்டாங்க. அன்னைக்கு நீ என்ன சொன்ன அவங்க என் அம்மா மாதிரி. என் அம்மா திட்டினால் கோவிச்சுக்குவேனான்னு தானே கேட்ட என்றான் உதய்.

 

இப்பவும் எனக்கு அவங்க மேல எந்த கோபமும் இல்லை மாமா. ஆனால் வருத்தம் இருக்கு அதான் ஒதுங்கி இருக்கேன். அப்பறம் அர்ச்சனா அண்ணி விசயத்தில் என்னை தலையிடக் கூடாதுன்னு சொன்னது நீங்கள் தான். எனக்கு உங்க மேல நிறைய மதிப்பும், மரியாதையும் இருக்கு அதனால தான் நான் ஒதுங்கி இருக்கேன்.

 

அண்ணி கல்யாணம் நல்லபடியா நடந்து முடியட்டும் மற்ற விசயங்களை அப்பறம் பார்க்கலாம் என்றாள் வெரோனிகா.

 

ரோனி என்னடி இது அன்னைக்கு அம்மா உன்னை திட்டினாங்கனு என்றவனிடம் மாமா நீங்க கோபத்தில் சொன்னிங்களோ, நிதானத்தில் சொன்னிங்களோ சொன்ன வார்த்தை மாறப் போறதில்லை தானே என்றவள் அந்த பேச்சை விடுங்க மாமா எனக்கு படிக்கனும் என்றவள் அமைதியாக புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தாள்.

 

என்ன அண்ணா ஏன் டல்லா இருக்க என்ற பிரகாஷிடம் ஒன்றும் இல்லை பிரகாஷ் என்றான். அண்ணிக்கு என்னாச்சு இப்போ எல்லாம் என் கிட்ட கூட பேசுறதே இல்லை என்ற பிரகாஷிடம் அவள் என்கிட்டையே சரியா பேசுறதில்லை அதை நான் யார் கிட்ட சொல்லுவேன் என்று மனதிற்குள் நினைத்தவன் தம்பியிடம் வேறு பதிலை சொன்னான்.

 

அவளுக்கு கொஞ்சம் படிப்பு வேலை இருக்காம் அதான் மேடம் எப்பவும் பிஸியாவே இருக்காங்க என்ற உதய் சரி அர்ச்சனா எங்கே என்றான். அவள் ஹாஸ்பிடலில் தான் இருப்பாள் இந்த நேரம்.

 

தேவ் அண்ணா கூட தானே வருவாள் என்ற பிரகாஷ் அண்ணா நாளை மறுநாள் மாப்பிள்ளைக்கு டிஸ்சார்ஜ் என்றான் . 

 

அதனால என்ன பிரகாஷ் அதான் கல்யாண தேதியை தள்ளி வச்சுட்டோமே என்ற உதய்யிடம் அதற்கு இல்லை அண்ணா அர்ச்சனா மாப்பிள்ளையை அவங்க வீட்டில் போய் பார்த்துக்கிறேன்னு சொல்கிறாள். அம்மா, பெரியம்மா இரண்டு பேருமே அது தப்பு, கல்யாணத்திற்கு முன்னே பொண்ணு அங்கே போயி தங்க கூடாதுன்னு சொல்லுறாங்க. ஆனால் அர்ச்சனா பிடிவாதம் பிடிக்கிறாள். அதனால் அண்ணி கிட்ட சொல்லி அர்ச்சனா கிட்ட பேச சொல்லலாம்னு அம்மாவுக்கு ஒரு யோசனை என்றான் பிரகாஷ்.

 

அம்மாவும், சித்தியும் சொல்லியே கேட்காதவள் ரோனி சொல்லியா கேட்கப் போகிறாள் என்றான் உதய். கண்டிப்பா கேட்பேன் அண்ணா என்று வந்த அர்ச்சனாவிடம் என்ன கேட்ப என்றான் பிரகாஷ்.

 

என் அண்ணி என்ன சொன்னாலும் கேட்பேன் என்றவளிடம் அண்ணி வயசென்ன அவங்க சின்னப் பொண்ணு. அம்மா, பெரியம்மா சொல்லியே நீ கேட்க மாட்ட என்ற பிரகாஷிடம் பிரகாஷ் அண்ணா என்ன என்னை கிண்டல் பண்ணுறிங்களா. சின்னப் பொண்ணாவே இருந்தாலும் ரோனி என்னோட அண்ணி இல்லையா. அண்ணியும், அம்மாவும் வேற இல்லையே என்றாள் அர்ச்சனா.

 

அண்ணா அப்பா, அம்மா நம்ம கூட எத்தனை காலம் கூட வருவாங்க. அண்ணன்களும், அண்ணிகளும் தானே எனக்கும், என் தங்கச்சிக்கும் துணை என்ற அர்ச்சனாவிடம் அடிப்பாவி தங்கச்சி இப்படி ஒரு சுயநலம் இருக்குதா இந்த விசயத்தில் என்று சிரித்தான் பிரகாஷ்.

 

அண்ணா இதில் சிரிக்க என்ன இருக்கு பொண்ணா பிறந்தால் கடைசி வரை பிறந்த வீட்டு சொந்தம் வேண்டும். அம்மா , அப்பாவுக்கு பிறகு அண்ணன்கள், அண்ணிகள் உறவு தானே பிறந்த வீட்டு சொந்தம் என்று சிரித்தாள் அர்ச்சனா.

 

என்ன அர்ச்சனா என் அண்ணனுக்கும், தம்பிக்கும் ஏதோ கிளாஸ் எடுத்துட்டு இருக்கிற என்று வந்த தேவச்சந்திரனிடம் ரோனி அண்ணி சொன்னால் அர்ச்சனா கேட்பாளான்னு அண்ணன் கேட்டாரு அதற்கு தான் இத்தனை பெரிய லெக்சர் என்றான் பிரகாஷ்.

 

அண்ணி சொன்னால் கேட்டு தானே ஆகனும் என்ற தேவ்விடம் அப்படிச் சொல்லு அண்ணா என்றாள் அர்ச்சனா. ஏய் என்ன இரண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டிங்களா நான் எப்போ அண்ணி சொல்வதை கேட்க கூடாதுன்னு சொன்னேன் என்ற பிரகாஷை பார்த்து சிரித்தனர் உதய், தேவ், அர்ச்சனா மூவரும்…

 

                  அத்தியாயம் 91

 

என்ன ஆச்சி கூப்பிட்டிங்களா என்ன விசயம் என்றாள் வெரோனிகா. என்னடி நீ இப்போ எல்லாம் நான் கூப்பிட்டால் மட்டும் தான் என்னை பார்க்க வருகிறாய். அத்தனை தூரம் நீ பெரிய மனுஷி ஆகிட்டியா என்ன என்றார் கல்யாணிதேவி.

 

ஆச்சி அப்படி எல்லாம் இல்லை எனக்கு படிக்கிற வேலை இருந்துச்சு என்றாள் வெரோனிகா. சரி ரோனி நல்லா படி என்றவர் உன்னை வரச் சொன்னது நான் இல்லை உன் மாமியார் தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னாள் என்றார் கல்யாணிதேவி.

 

வா மலர், வா சுசீ உங்க மருமகள் வந்து விட்டாள். அவள் கிட்ட என்ன பேசணுமோ பேசுங்க என்ற கல்யாணிதேவி அமைதியாகிட வெரோனிகாவின் அருகில் வந்த சுசீலா ரோனி ஒரு உதவி பண்ணுடி என்றார்.

 

என்ன அத்தை நான் என்ன பண்ணனும் என்றிட இந்த அர்ச்சனா மாப்பிள்ளையை அவரோட வீட்டிலே போயி கவனிச்சுக்கிறேன்னு சொல்லிட்டு பிடிவாதம் பண்ணிட்டு இருக்கிறாள். நீ அவள்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லி புரிய வை ரோனி என்றார் சுசீலா.

 

நான் எப்படி அத்தை அண்ணிகிட்ட பேசுறது நீங்களே சொல்லிக்கோங்க என்றாள் வெரோனிகா. நீ அவளோட அண்ணி ரோனி நீ தான் சொல்லனும் என்றார் சுசீலா. நீங்க சந்துரு மாமாகிட்ட சொல்லி சொல்லச் சொல்லுங்க அத்தை அண்ணி கேட்டுப்பாங்க என்றாள் வெரோனிகா.

 

என்னடி இது அவள் உன்னோட நாத்தனார்டி நீ சொன்னால் என்ன என்றார் சுசீலா. இல்லை அத்தை நான் போயி எதுவும் சொல்லி அண்ணி என்னை பார்த்து  என் விசயத்தில் தலையிட நீ யாருன்னு கேட்டால் என்ன பதில் சொல்லுவேன். நான் எதுனாலும் அதிகப் பிரசங்கித் தனமா பண்ணிட்டால் எல்லோருக்குமே சங்கடம் தானே அத்தை தான் ஏற்கனவே சொல்லிட்டாங்களே அவங்க பொண்ணு வாழ்க்கை சம்பந்தப்பட்ட விசயங்களில் நான் தலையிடக் கூடாதுன்னு அதனால ப்ளீஸ் அண்ணிகிட்ட நீங்களே சொல்லிருங்க அத்தை என்றாள் வெரோனிகா.

 

என்ன ரோனி பழிவாங்குறியா என்ற மலர்கொடியிடம் ஐயோ அத்தை நான் என்ன பழி வாங்குறேன். நான் எதுனாலும் தப்பு பண்ணிட்டேனா என்ற வெரோனிகாவிடம் நான் தான்டி தப்பு பண்ணிட்டேன். அன்னைக்கு இருந்த கோபத்தில் ஏதோ சொல்லிட்டேன். ஏன்டி எனக்கு உன்னை திட்ட உரிமை இல்லையா என்ன என்றார் மலர்கொடி.

 

என்னை அடிக்க கூட உங்களுக்கு உரிமை இருக்கு அத்தை எனக்கு தான் எந்த உரிமையும் இல்லைன்னு சொல்லிட்டிங்க அது தான் மனசு கஸ்டமா இருக்கு என்றவள் அத்தை ப்ளீஸ் உங்களை கையெடுத்து கும்பிடுறேன் இனிமேல் அர்ச்சனா அண்ணி விசயமா நான் என்னோட எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன். அதற்காக அண்ணி மேல எனக்கு பாசம் இல்லைன்னு அர்த்தம் இல்லை. அவங்க மேல நிறைய அன்பு இருக்கு , பாசம் இருக்கு ஆனால் அவங்க விசயத்தில் தலையிட எனக்கு உரிமை இல்லை என்றவள் நான் அதிகப்பிரசங்கித்தனமா எதுனாலும் பேசி இருந்தால் என்னை மன்னிச்சுருங்க அத்தை என்று விட்டு கிளம்பி விட்டாள்.

 

என்ன அத்தை அவள் ரொம்ப பெரிய மனுஷியாட்டம் பேசிட்டு போகிறாள். என் பொண்ணோட வாழ்க்கையில் முடிவு எடுக்க நான் இவளுக்கு மட்டும் இல்லை என் மூன்று பசங்களுக்கு கூட ஏன் என் கூடப் பிறந்த தங்கச்சி சுசீலாவுக்கே ஏன் உங்களுக்கே அந்த உரிமையை அன்னைக்கு கொடுக்கவில்லையே. அப்போ உங்களுக்கும் என் மேல கோபமா என்ன என்றார் மலர்கொடி.

 

எங்க கிட்ட நீ உரிமை இல்லைன்னு பேசவில்லையே மலர். ரோனி உன்னோட மருமகள். சுசீலா உன் தங்கச்சி. வித்தியாசம் இருக்கே. மருமகளை நீ மகளா பார்க்கிறேன்னு சொன்னவள். அதே போல தான் பார்த்த நான் மறுக்கவில்லை ஆனால் நீ பெத்த பொண்ணுனு வரும் பொழுது ரோனியை நீ காயப் படுத்திட்ட அவள் சின்னப் பொண்ணு மலர். அவளோட காயத்தை அவள் மறைக்க முயற்சி பண்ணினாலும் முடியாமல் இப்போ கொட்டிட்டாள். விடு அவளாவே சரியாகிருவாள் என்றார் கல்யாணிதேவி.

 

அத்தை நான் அன்னைக்கு என்ற மலர்கொடியிடம் உன் இடத்தில் இருந்து பார்த்தால் உன் மேல எந்த தப்பும் இல்லை. அதே போல ரோனி இடத்தில் இருந்து பார்த்தால் அவள் மேலையும் எந்த தப்பும் இல்லை என்ற கல்யாணிதேவி நீ எதையும் யோசிக்காதே. எல்லாம் நல்லதே நடக்கும் என்றார்.

 

என்ன உதய் அமைதியா இருக்க என்ற மலர்கொடியிடம் நான் என்ன பதில் சொல்லனும்னு நினைக்கிறிங்க அம்மா என்றான் உதய். என்னப்பா இப்படி பேசுற என்ற மலர்கொடியிடம் வேற எப்படி பேசனும் அன்னைக்கு நீங்க தானே வெரோனிகாவை அர்ச்சனா விசயத்தில் தலையிடக் கூடாதுன்னு சொன்னிங்க அதை தான் இப்போ வரை அவள் செய்கிறாள். உங்களுக்கு தேவைனா அவள் வேண்டும், தேவை இல்லைனா அவள் வேண்டாம் அப்படித் தானே. ரோனி பேசினதில் எந்த தப்புமே இல்லை.

 

அந்தச் சின்னப் பொண்ணு என்னம்மா அதிகப்பிரசங்கித்தனம் பண்ணினாள்.  இது அவளோட குடும்பம், இது அவளோட வீடு, இங்கே உள்ளவங்க அவளோட உறவுகள் அவங்க எல்லோர் மேலையும் முழு உரிமையும் அவளுக்கு இருக்குனு நினைச்சது தப்பா. அர்ச்சனாவோட வாழ்க்கையில் உங்களை விட அதிகமான அக்கறை அவளுக்கு இருந்ததால தான் அந்த பொறுக்கி விக்னேஷ் பண்ணின துரோகத்தை கண்டு பிடிச்சு அதற்கு பரிசா தலையில் ஐந்து தையலையும் வாங்கினாள் என்றான் உதய்.

 

உதய் அம்மா அன்னைக்கு கோபத்தில் என்று ஏதோ சொல்ல வந்தவரிடம் கோபமா இருந்தாலும் அன்னைக்கு ரோனியை நீங்கள் ரொம்பவே காயப் படுத்திட்டிங்கம்மா அது அவளோட மனசுல ரொம்பவே அழமா பாதிக்கப் பட்டிருக்கு அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க அவளாவே சரியாகிருவாள் என்றான் உதய்.

 

அவளோட கோபம் என்ற மலர்கொடியிடம் அவளுக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லைம்மா அத்தை நம்மளை வேற ஆளா பார்க்கிறாங்களேன்னு வருத்தம் தான் என்ற உதய் சரிம்மா அதை விடுங்க அர்ச்சனாகிட்ட நான் பேசுறேன். நான் சொன்னாலும் என் தங்கச்சி கேட்பாள் என்ற உதய் தன்னறைக்கு சென்றான்.

 

மாமா என்றவளிடம் என்ன ரோனி என்றான் உதய். மாமா அர்ச்சனா அண்ணி விவேக் அண்ணாவை அவங்க வீட்டிற்கே போயி பார்த்துக்கனும்னு அடம் பிடிக்கிறாங்களாம். கல்யாணத்துக்கு முன்னே பொண்ணு புருசன் வீட்டுக்கு போக கூடாதுன்னு அத்தையும், சின்ன அத்தையும் நினைக்கிறாங்க. அதனால அண்ணி கிட்ட சொல்லி அங்கே போக வேண்டாம்னு சொல்லுறிங்களா என்றாள் வெரோனிகா.

 

ஏன் ரோனி உன்னோட அண்ணிகிட்ட நீயே சொல்லலாமே என்றான் உதய். எனக்கு பயமா இருக்கு மாமா என்றவளது கண்கள் கலங்கிட ஏய் ரோனி என்னடி இது அழுதுட்டு இருக்க என்றவன் அவளது கண்களை துடைத்து விட ஆரம்பத்தில் ஊர்மிகிட்ட அதிக உரிமை எடுத்துக்கிட்டேன் அவள் என்னை பார்த்து நீ யாரு என் விசயத்தில் தலையிடன்னு கேட்டாள். அப்பறம் அத்தையை என் அம்மாவா தான் நினைத்தேன். அவங்களும் என் மகளோட விசயத்தில் தலையிட நீ யாருன்னு கேட்டாங்க நான் அதிலே ரொம்ப உடைஞ்சுட்டேன் மாமா. இனி நான் எதுனாலும் சொல்லி அர்ச்சனா அண்ணியும் என் விசயத்தில் தலையிட நீ யாருடின்னு கேட்டால் சத்தியமா என்னால தாங்கிக்க முடியாது மாமா என்று அழுதாள் வெரோனிகா.

 

ரோனி அப்படி இல்லைடி அர்ச்சனா உன்னை அப்படி எல்லாம் சொல்ல மாட்டாள் என்ற உதய்யிடம் இல்லை மாமா எனக்கு யார் மேலையும் நம்பிக்கை இல்லை நாளைக்கு நீங்களும் கூட அப்படி சொல்லிட்டால் நினைக்கவே உடம்பெல்லாம் உதறுது மாமா என்றவளை கட்டிக் கொண்டவன் பைத்தியமாடி உனக்கு. நீ என் பொண்டாட்டி ரோனி என்னோட உயிர், உலகம், வாழ்க்கை எல்லாமே நீ தானடி உன்னை போயி நான் அப்படி கேட்பேனா சொல்லு என் உயிரே போனாலும் அப்படி சொல்ல மாட்டேன்டி என்றான்.

 

அவனது மார்பில் முகம் புதைத்து கண்ணீர் விட்டவளை நிமிர்த்தியவன் ஏன் ரோனி அப்படி கேட்ட என் மேல சந்தேகம் படுகிறாயா என்ற உதய்யிடம் சத்தியமா இல்லை மாமா என்னால தாங்க முடியலை அதான் என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவன் நீ அழக்கூடாது. உன் சந்துரு மாமா எப்பவுமே உன் கூட தான் இருப்பேன் என்றிட அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள் வெரோனிகா.

 

சரி ரோனி நீ அர்ச்சனாகிட்ட பேச வேண்டாம். நானே பேசுறேன் ஆனால் நீ மத்தவங்க கிட்ட எப்படியோ என் கிட்டையாச்சும் சிரிச்சு சந்தோசமா பேசுடி. நாம  இரண்டு பேரும் ஒரே அறையில் தான் இருக்கோம். என்கிட்ட கூட இப்போ எல்லாம் நீ முகம் கொடுத்து பேசுறது இல்லை உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் ரோனி என்றான் உதய்.

 

ஸாரி மாமா உங்களை காயப் படுத்தனும்னு நான் எதுவும் செய்யவில்லை என்னோட மனசுல சில விசயங்கள் ஆழமா பதிஞ்சு என்னை ஒரு நிலையில் இருக்க விட மாட்டேங்குது அதனால தான் என்றவள் இனிமேல் நான் எந்த விசயத்தையும் யோசிச்சு உங்களை விட்டு விலக மாட்டேன் மாமா என்றவள் அவனது மார்பில் முத்தமிட அவளது நெற்றியில் முத்தமிட்டான் உதயச்சந்திரன்.

 

சரி ரோனி நாம வெளியில் போகலாமா. ரொம்ப நாள் ஆச்சு நாம வெளியில் போயி என்றவனிடம் சரிங்க மாமா என்றவள் உடை மாற்றி வந்தாள். என்னடி சேலை கட்டிருக்க என்றவனிடம் ஏன் மாமா சேலை நல்லா இல்லையா என்றாள் வெரோனிகா.

 

என் ரோனிச் செல்லதருக்கு என்ன டிரஸ் போட்டாலும் அழகு தான் என்றவன் நாம பைக்ல போகலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா சேலை கட்டிட்டு வந்துருக்க என்றான் உதய். என்ன மாமா காமெடி பண்ணுறிங்களா சேலை கட்டினால் பைக்கில் போக முடியாதா என்ன என்றவளிடம் யாருடி சொன்னது போக முடியாதுன்னு.

 

மை டியர் மக்கு பொண்டாட்டி நாம கொஞ்சம் லாங் டிரைவ் போகனும் அதனால சுடிதார் போட்டுட்டு வா. அதுவும் இல்லாமல் சேலையில் நீ ரொம்ப அழகா இருக்கியா உன் புருசனுக்கு லவ் பீலிங்க்ஸை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை அப்பறம் மாமா விரதத்தை இன்னைக்கே முடிச்சுருவேன் என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் உதய்.

 

அட பொறுக்கி மாமா உன்னை என்று அவள் அவனை அடிக்க விரட்டிட அவளிடம் பிடிபட்டான். அவனது காதை திருகிக் கொண்டே மாட்டினிங்களா என்ன சொன்னிங்க லவ் பீலிங்க்ஸா என்றவளது இடையில் பட்டென்று கிள்ளியவன் அவள் சுதாரிக்கும் முன்னே அவளது கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யூ ரோனி கீழே வெயிட் பண்ணுறேன் சீக்கிரம் வா என்று சொல்லி விட்டு ஓடிச் சென்றான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!