அத்தை அத்தை என்று கத்திக் கொண்டிருந்த வெரோனிகாவிடம் என்னடி ஏன் இப்படி கத்திட்டு இருக்க என்றார் சுசீலா. எனக்கு இரட்டைஜடை போட்டு விடுங்க என்னால தனியா இவ்வளவு முடியையும் கட்டிக்க முடியாது என்றாள் வெரோனிகா.
ஏன்டி இவ்வளவு முடி வளர்த்து வச்சுருக்க கொஞ்சத்தை வெட்ட வேண்டியது தானே என்ற அர்ச்சனாவிடம் ஹான் நல்லா சொல்லுவிங்க எனக்கு முடினா ரொம்ப பிடிக்கும். எவ்வளவு எண்ணெய் தேய்ச்சு என் அப்பத்தா ஆசை ஆசையாய் வளர்த்த முடி தெரியுமா என்றவள் போங்க நான் ஆச்சிகிட்டேயே போயி தலை வாரிக்கிறேன் என்று கல்யாணிதேவியின் அறைக்கு சென்றாள் வெரோனிகா.
ஆச்சி நேரம் ஆச்சு சீக்கிரம் கட்டிவிடுங்க என்று பறந்தவளிடம் ஏன்டி பள்ளிக்கூடமே நம்மளோடது தான் அப்பறம் எவன்டி உன்னை உள்ளே விட மாட்டேன்னு சொல்லுறது என்றவர் அமைதியா இரு என்று அவளுக்கு இரட்டை ஜடையை பின்னி விட்டார்.
ரொம்ப தாங்க்ஸ் ஆச்சி என்றவள் கல்யாணி பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சாமி கும்பிடச் சென்றாள். பூஜை அறையில் சாமி கும்பிட்ட பிறகு தன் அறைக்கு சென்றவள் யூனிபார்ம் உள்ளே தாலிச்செயின் தெரியாமல் பின் குத்தி மறைத்தாள். மெல்லிய டாலர்செயின் மட்டும் வெளியில் தெரிந்தது.
கிளம்பிட்டியா என்ற உதயச்சந்திரனிடம் கிளம்பிட்டேன் என்றாள். சரி நீ அர்ச்சனா கூட பைக்கில் போ அவள் உன்னை ஸ்கூலில் டிராப் பண்ணிட்டு காலேஜ் போகட்டும் என்றான். ஊர்மிளா என்றவளிடம் அவள் சைக்கிளில் தான் வருவாள் என்றான்.
எனக்கும் சைக்கிள் வாங்கி கொடுங்களேன் நானும் நாளையில் இருந்து ஊர்மிளா கூடவே ஸ்கூலுக்கு போறேன் என்றாள்.
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். உங்க ஊரில் எந்த டிராபிக்குமே இல்லை அதனால நீ ப்ரீயா சைக்கிள் ஓட்டிருப்ப இங்கே அப்படி இல்லை கொஞ்ச நாள் ஆகட்டும் அப்பறமா உனக்கு சைக்கிள் வாங்கித் தரேன் என்ற உதயச்சந்திரன் ஈவ்னிங் அர்ச்சனா வரவில்லைனா பிரகாஷ் கூட வீட்டுக்கு வந்திரு என்றான்.
நீங்க கூட்டிட்டு வர மாட்டிங்களா என்றவளைப் பார்த்தவன் நான் சொல்லுறதை மட்டும் நீ கேளு எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் என்றான்.
அவள் மௌனமாக சிடுமூஞ்சி என்று அவனை திட்டிவிட்டு தனது ஸ்கூல்பேக்கை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினாள்.
மாமா , அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று நெடுமாறன், மலர்கொடி காலிலும் ; இளமாறன், சுசீலா காலிலும் விழுந்தாள். அவளுக்கு நால்வரும் விபூதி வைத்து விட்டனர். கல்யாணிதேவியிடமும் ஆசிர்வாதம் வாங்கி விட்டு அக்கா போகலாமா என்று அர்ச்சனாவிடம் கேட்டிட சரி வா போகலாம் என்று அவளை அழைத்துச் சென்றாள் அர்ச்சனா.
அக்கா சாயங்காலம் வந்துருவீங்க தானே என்றவளிடம் இல்லை ரோனி சாயங்காலம் நீ பிரகாஷ் அண்ணா கூட வந்துரு என்றாள். ஹும் சரிக்கா என்றவள் ஸ்கூல் வாசல் வரவும் இறங்கிக் கொண்டாள். பாய் அக்கா என்று அர்ச்சனாவிடம் கூறி விட்டு ஸ்கூலுக்குள் சென்றாள்.
ஊர்மிளாவும் அந்த நேரம் வந்து விட ரோனி என்றிட திரும்பியவள் வந்துட்டியா ஊர்மி நல்லவேளை நீ வந்துட்ட எனக்கு க்ளாஸ்ரூம் வேற தெரியாது என்றாள் வெரோனிகா. நோ ப்ராப்லம் ரோனி வா போகலாம் என்ற ஊர்மிளாவுடன் சென்றாள் வெரோனிகா.
எனக்கும் ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுங்கனு அப்பாகிட்ட கேட்கிறேன். மாட்டேன்னு சொல்லிட்டாரு இல்லைனா நம்ம இரண்டு பேரும் ஒன்றாகவே வந்திருக்கலாம் என்றாள் ஊர்மிளா.
உன் அண்ணாகிட்ட நான் சைக்கிள் கேட்டதுக்கே வேண்டாம்னு சொல்லிட்டாங்க நீ பைக் வாங்கித் தரவில்லைனு புலம்புற என்றாள் வெரோனிகா.
உனக்கு அப்போ சைக்கிள் ஓட்டத் தெரியுமா என்ற ஊர்மிளாவிடம் புல்லட்டே ஓட்டுவேன் என்றாள் வெரோனிகா. ஏய் நீ சரியான பயந்தாங்கொள்ளினு என் அம்மாவும், பெரியம்மாவும் சொன்னாங்க என்ற ஊர்மிளாவிடம் எனக்கு யாராச்சும் அதட்டலா பேசினால், சண்டை போட்டால் பயமா இருக்கும். மத்தபடி நான் தைரியமான பொண்ணு தான் கரப்பான்பூச்சிக்கே பயப்பட மாட்டேன்னா பார்த்துக்கோயேன் என்றாள் வெரோனிகா.
டேய் இங்கே பாருடா கரப்பான்பூச்சிக்கே பயப்படாத வீராங்கனை என்றான் ஒருவன். டேய் கிஷோர் வாயை மூடு பல்லை உடைச்சுருவேன் என்றாள் ஊர்மிளா. என்ன ஊர்மி நியூ அட்மிசனா என்றவனை முறைத்தவள் ஆமாம் இப்போ என்ன என்றாள் ஊர்மிளா.
ரோனி நீ வா என்று வெரோனிகாவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் ஊர்மிளா.
யாருடா இவள் இந்த ஊர்மி இவ்வளவு உரிமையா கையைப் பிடிச்சு கூட்டிட்டு போகிறாள் என்ற கிஷோரிடம் யாராவது அவளுடைய ரிலேட்டிவ் பொண்ணா இருக்கும்டா என்ற விஷால் அது என்ன பெயர் ரோனி என்றிட எங்க வீட்டு நாய்க்குட்டியோட பெயர் என்று சிரித்தான் கிஷோர்.
டேய் ரொம்ப ஓவரா ஓட்டாதிங்கடா என்ற அர்ஜுனைப் பார்த்த கிஷோர் என்ன மச்சான் ஹீரோயிசம் காட்டுறியா புதுப் பொண்ணு வேற பார்க்க அழகா இருக்கு நூலு விடுறியா தங்கம் என்றான் . டேய் பொறுக்கி வாயிலே மிதிச்சுருவேன் முதல் பீரியட் அந்த சிடுமூஞ்சி சித்தப்பன் கோனவாயன் கெமிஸ்ட்ரி பீரியட் முதல்ல கிளாஸுக்கு போகலாம் வாங்கடா என்று தன் தோழர்களை வகுப்பறைக்கு அழைத்துச் சென்றான் அர்ஜுன்.
ரோனி இங்கே இருக்கிற பக்கிகள் சரியான அராத்து பிடிச்சவனுங்க அதனால யார்கிட்டையும் எந்த பேச்சும் வச்சுக்காதே என்ற ஊர்மிளா இவள் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் நிகிலா என்றாள்.
ஹாய் என்ற ரோனியிடம் ஹலோ வெரோனிகா என்ற நிகிலா இவளோட கசின் தானே நீ என்றிட ஆமாம் என்றாள் வெரோனிகா.
ஓஓ உன்னோட கசினா ஊர்மி என்ற கிஷோரிடம் ஆமாடா இப்போ என்ன என்றாள் ஊர்மிளா. ஒன்றும் இல்லை ஊர்மி நீ உன் வேலையைப் பாரு என்ற அர்ஜுன் ஏன்டா குரங்கு சும்மா இருக்க மாட்டியா என்று தன் நண்பனை திட்டினான்.
என்ன மச்சி சார் புதுப் பொண்ணை பார்த்ததும் ரொம்ப நல்ல பிள்ளையா மாறிட்டாரு என்ற கிஷோரிடம் நானும் அதான் மச்சி பார்த்துட்டு இருக்கேன் என்ற விஷால் இவனை அப்பறம் பார்த்துக்கலாம் கெமிஸ்ட்ரி வந்துருச்சு என்றான்.
ரோனி பர்ஸ்ட் ஹவர் கெமிஸ்ட்ரி என்ற ஊர்மிளா நான் கொடுத்த அசைன்மென்ட் எல்லாம் எழுதிட்ட தானே என்றிட அதெல்லாம் பக்கா ஊர்மி என்றாள் வெரோனிகா.
குட்மோர்னிங் சார் என்று மாணவர்கள் கோரஸாக கூறிட குட்மோர்னிங் என்று கூறி அனைவரையும் அமரச் சொன்னார் வேதியியல் ஆசிரியர் வேதாச்சலம்.
எக்ஸாம் லீவு எல்லாம் என்ஜோய் பண்ணிட்டிங்களா என்ற வேதாச்சலம் சரி எல்லோரும் அசைன்மென்ட் எடுத்து டேபிளில் வைங்க என்றார்.
வெரோனிகாவைப் பார்த்தவர் நீ தான் நியூ அட்மிசனாம்மா என்றிட எஸ் சார் என்றாள். ஓகே நீ அசைன்மென்ட் எழுதிட்டியா என்றவரிடம் எழுதிட்டேன் சார் என்றாள். குட் என்றவர் சரி உட்காரு என்று கூறி விட்டு எல்லோரும் அசைன்மென்ட் சப்மிட் பண்ணுங்க என்றார்.
எந்த பிரகஸ்பதி அசைன்மென்ட்டை மறந்து வீட்டில் வச்சுட்டு வந்தது என்ற வேதாச்சலம் அனைவரது அசைன்மென்டையும் செக் செய்தார்.
கிஷோர் , விஷால் என்று அவர் அழைத்திட சாரி சார் அசைன்மென்ட் மறந்து வீட்டில் வச்சுட்டு வந்துட்டோம் என்றிட தெரியுமே சார் நீங்க அசைன்மென்டை வீட்டில் வச்சுட்டு வருவிங்கனு என்ற வேதாச்சலம் நீங்க மட்டும் ஏன்டா கிளாஸுக்கு வந்திங்க நீங்களும் வீட்டிலே இருக்க வேண்டியது தானே.
நியூ அட்மிசன் பொண்ணு கூட ஒழுங்கா எழுதிட்டு வந்திருக்கு உங்களுக்கு எழுத வலிக்குது இரண்டு பேரும் வெளியில் போங்கடா என்றதும் வகுப்பறையின் வாயிலில் சென்று நின்றனர்
என்ன ஊர்மி அவங்களை வெளியில் போகச் சொன்னாரு அவனுங்க வாசல் பக்கத்திலே நிற்கிறானுங்க என்றாள் வெரோனிகா. வாசலை விட்டு போனால் வேதா அவங்க காலை உடைச்சுருவாரு என்ற நிகிலா.
அவரு வெளியே போகச் சொன்னாலும் கிளாஸ் வாசலில் இல்லை அந்த போர்டு பக்கத்தில் தான் இருந்தாகனும் என்ற நிகிலா போக போக வேதா பற்றி புரிஞ்சுக்குவ. பாராட்டிட்டாருனு ரொம்ப நல்லவருனு நினைக்காதே சரியான இம்சை டெஸ்ட் வச்சே கொன்னுரும் என்று புலம்பினாள் நிகிலா.
ரோனி பேசாதே அமைதியா இருக்கனும் அவர் கிளாஸ் எடுக்கப் போகிறார் என்றாள் ஊர்மிளா. சரி ஊர்மி என்ற வெரோனிகாவும் அமைதியாக பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.
வேதாச்சலம் பாடம் நடத்த ஆரம்பித்தார். அமைதியாக பாடத்தை கவனித்த வெரோனிகா அவர் சொன்ன நோட்ஸ் எல்லாம் சரியாக எழுத ஆரம்பித்தாள்.
எல்லாம் புரியுது தானே என்றவரிடம் சார் ஒரு டவுட் என்று வெரோனிகா எழுந்திட ஐயோ போச்சு என்றாள் ஊர்மிளா.
என்ன டவுட் என்ற வேதாச்சலத்திடம் அவள் தன் சந்தேகத்தை சொல்ல வந்த நேரம் சரியாக பெல் அடித்தது. கிளாஸ் முடிஞ்சது அடுத்த கிளாஸில் உன் டவுட்டை கேளும்மா என்ற வேதாச்சலம் வகுப்பை விட்டு கிளம்பினார்.
ஏய் லூசு ஏன்டி டவுட் கேட்கப் போன என்ற ஊர்மிளாவிடம் ஏன்டி எனக்கு புரியவில்லை அதனால அவர்கிட்ட டவுட் கேட்டேன் அதில் என்ன தப்பு என்றாள் அப்பாவியாக.
வந்த அன்னைக்கே வேதாவோட கோபத்திற்கு ஆளாகி எங்க கூட வெளியில் வந்து நின்னிருப்ப என்றான் கிஷோர்.
ஹான் என்றவளிடம் அவருக்கு எல்லோருக்கும் புரியுற மாதிரி தான் கிளாஸ் நடத்துவாருனு ஒரு நம்பிக்கை. அதனால டவுட் கேட்டால் அவருக்கு பிடிக்காது.
விஷால் டென்த்ல கிளாஸ் டாப்பர் இப்போ கெமிஸ்ட்ரி ஜஸ்ட் பாஸ் தான் காரணம் லாஸ்ட் இயர் கெமிஸ்ட்ரியில் ஏதோ டவுட் கேட்கிறேன்னு அவரையே குழப்பி விட்டுட்டான். அதில் இருந்து பாதி நாள் அவுட்ஸ்டாண்டிங் தான் என்றாள் ஊர்மிளா.
அப்போ நாம யார்கிட்ட டவுட் கேட்கிறது என்ற வெரோனிகாவிடம் வேதாகிட்ட தான் என்றாள் நிகிலா. என்னடி குழப்புறிங்க என்ற ரோனியிடம் அவர்கிட்ட டியூசன் சேரனும். டியூசன்ல நீ என்ன டவுட் கேட்டாலும் சிரிச்ச முகத்தோட சொல்லிக் கொடுப்பாரு. கிளாஸ்ரூம்ல டவுட் கேட்டால் நீ செத்த என்ற நிகிலா நீ எப்போ டியூசன் சேரப் போற என்றாள்.
டியூசனா என்ற வெரோனிகா திருதிருவென முழித்திட ஈவ்னிங் பெரியப்பாகிட்ட சொல்லி நாளைக்கே சேர்ந்துக்கோ ரோனி என்றாள் ஊர்மிளா. சரி என்று தலையை ஆட்டினாள் வெரோனிகா.
அன்றைய தினம் அடுத்தடுத்த வகுப்புகள் எல்லாம் அமைதியாக கடந்திட வெரோனிகா நொந்து போனாள். கெமிஸ்ட்ரி டியூசன், மேத்ஸ்டியூசன் , பிசிக்ஸ் டியூசன் மட்டும் தானா இல்லை இன்னும் இங்கிலிஷ், தமிழ், கம்ப்யூட்டர்சயின்ஸ்னு எல்லா சப்ஜெக்ட்டுக்கும் டியூசன் போகனுமா என்று புலம்பினாள் வெரோனிகா.
ரோனி பயப்படாமல் சாப்பிடு மேத்ஸ், கெமிஸ்ட்ரி மட்டும் தா
ன் கம்பல்சரி மத்த சப்ஜெக்ட் பயப்படாதே என்ற ஊர்மிளா சாப்பிட ஆரம்பித்தாள்.
…..தொடரும்….