விதியின் முடிச்சு…(92 to 100)

5
(3)

அத்தியாயம் 92

எப்போ பாரு உங்களுக்கு இதே வேலையா போச்சு என்றவளைப் பார்த்து கண்ணடித்தான் உதய். போங்க மாமா என்று சிணுங்கியவளிடம் ரோனி உன் கிட்ட மட்டும் தானடி இப்படி எல்லாம் விளையாட முடியும் என்றான் உதய்.

எப்போ பாரு இப்படியே போக்கிரித்தனம் பண்ணுங்க ஆனால் ஊனால் இடுப்புல கிள்ளிட்டு கன்னத்துல இச்சு வச்சுகிட்டு என்றவள் செல்லமாக கோபித்துக் கொள்ள அதை ரசித்தவன் அவளது கையை தன் கைக்குள் வைத்தபடி ஐ லவ் யூ ரோனி என்றான்.

அப்பப்பா ரொம்ப நாள் கழிச்சு சொல்லுறிங்க என்றவளிடம் மகாராணி தான் என்கிட்ட பேசுறதே இல்லையே அப்பறம் எப்படி சொல்லுறதாம் என்றான் உதய்.

 

நான் பேசலைனா நீங்க வந்து பேசுறது என்றவளிடம் ஏன் நான் உன்கிட்ட பேச வரவே இல்லை ஹூம் என்றவன் எத்தனை தடவைடி உன்கிட்ட நெருங்கி வருவது ஒன்று புத்தகத்தை தூக்கி வச்சுட்டு இருப்ப , இல்லையா பெட்ல திரும்பி படுத்துப்ப நான் என்ன பண்ணட்டும். எப்போ தான் மகாராணி மனசு இறங்கி வருவிங்கனு காத்திருந்தேன் என்றவனிடம் ஸாரி மாமா என்றாள் வெரோனிகா.

உன்னோட ஸாரி எல்லாம் எனக்கு வேண்டாம் ரோனி. கணவன் , மனைவிக்குள்ள இந்த தாங்க்ஸ், ஸாரி எல்லாமே தேவை இல்லாத வார்த்தைகள் என்னை காயப் படுத்தவும் சரி, காதலிக்கவும் சரி உனக்கு இல்லாத உரிமையா சொல்லு.

வீட்டு பிரச்சனைகள் எதுவும் நம்ம உறவுக்குள்ள சின்ன விரிசலைக் கூட ஏற்படுத்தி விடக் கூடாது. வீட்டு பிரச்சனைகளை உன்னோட மனசுல போட்டு  குழப்பி நம்மளோட சந்தோசமான வாழ்க்கையில் நீயாவே ஒரு சிக்கலை உருவாக்கிடாதே என்றான் உதய்.

வீட்டில் உள்ள பிரச்சனைகளை இனிமேல் நான் கவனிச்சுக்கிறேன். நீ உன்னோட படிப்பையும், என்னையும் கவனிச்சுக்கிட்டாலே போதும் என்றவனிடம் சரிங்க மாமா என்றாள் வெரோனிகா.

என்னடி நான் பக்கம் , பக்கமா பேசிட்டு இருக்கேன் நீ சரிங்க மாமான்னு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுற என்றவனிடம் முன்னே எல்லாம் நான் தான் பக்கம், பக்கமா பேசுவேன் அப்போ நீங்க என்ன சொல்லுவிங்க ஓகே வெரோனிகா என்று அவனைப் போல மெமிக்ரி செய்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் ஓஓ மேடம் பழி வாங்குறிங்களோ என்றிட அட ஆமாம் அப்படித் தான் வச்சுக்கோங்க என்றவள் மாமா சாப்பாடு வந்துருச்சு என்றாள். சரி சாப்பிடலாம் என்றவன் மனைவியுடன் சேர்ந்து உணவு உண்டு விட்டு அடுத்து எங்கே போகலாம் ரோனி என்றான்.

லாங்க் டிரைவ்னு சொன்னிங்க என்றவளிடம் அட ஆமாம் லாங்க் டிரைவ் எங்கே போகலாம் மகாபலிபுரம் போகலாமா என்றான் உதய். இல்லை மாமா வேண்டாம் நாம அவ்வளவு தூரம் போக வேண்டாம் வீட்டுக்கு போகலாமே என்றவளிடம் என்னடி இது உன்னை சமாதானம் பண்ண வெளியில் கூட்டிட்டு வந்தால் திரும்ப வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு இருக்க என்றான் உதய்.

அதெல்லாம் எப்பவோ சமாதானம் ஆகிட்டேன் என்றவள் மெல்ல முணகிட எப்படி சமாதானம் ஆனிங்க மேடம் என்றான் உதய்.

அதான் இடுப்பை கிள்ளி கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டிங்களே அப்பவே ரோனி சமாதானம் ஆகிட்டாள் என்றிட அடடா இவ்வளவு தானா என் பொண்டாட்டி ஒரு கிள்ளுக்கும், கிஸ்ஸுக்குமே சமாதானம் ஆகிட்டாளா என்று சிரித்தவனது தலையில் கொட்டியவள் போடா மாமா என்றாள். என்னடி இது போடா மாமாவா என்றவனிடம் ஆமாம் போங்க என்றவள் பைக்கில் அமர்ந்திட அவளை சினிமா தியேட்டருக்கு அழைத்துச் சென்றான் உதய்.

 

என்ன மாமா இது நடு சாமம் வரை வீட்டுக்கு போக மாட்டிங்க போல என்றவளிடம் என்னடி இது இன்னைக்கு தான் ரொம்ப நாளைக்கு அப்பறம் வெளியே வந்திருக்கோம். ஜாலியா நல்லா சுத்திட்டு போகலாமே என்றவன் தியேட்டருக்குள் அவளுடன் நுழைய பவித்ரா, வினித்ரா இருவரும் அதே தியேட்டருக்கு வந்திருந்தனர்.

 

உதய்யின் கையை தன் கைகளால் கட்டிக் கொண்டபடி அவனது தோளில் சாய்ந்தபடி அமர்ந்து படம் பார்க்கும் வெரோனிகாவைப் பார்த்த வினித்ராவின் மனம் வலிக்கத் தான் செய்தது. ஆனால் அதை பெரிது படுத்தாமல் படத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

என்னாச்சு வினி என்ற பவித்ராவிடம் நத்திங்க்டி என்றாள் வினித்ரா. வினி உன்னோட வாழ்க்கை அது இல்லை என்ற பவித்ராவிடம் நிச்சயமா அது என்னோட வாழ்க்கை இல்லை என்று சிரித்தவள் க்யூட் கப்பிள் என்றாள்.

அந்தப் பொண்ணு நிஜமாவே கியூட் தான் வினி அவள் கிட்ட  பிருந்தா டாக்டர்கிட்ட டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டப்போ பேசி இருக்கேன். ரொம்ப குழந்தைத் தனமான பொண்ணு அதே நேரத்தில் மெச்சுருட்டியாவும் இருப்பாள் என்றாள் பவித்ரா. எனக்கும் தெரியும் பவி அவள் என்னோட ஸ்டூடண்ட் என்ற வினித்ரா படத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

 

படம் பார்த்து முடித்த பிறகு இருவரும் வீட்டிற்கு வந்தனர். என்ன ரோனி இப்போ தான் வரிங்க சாப்டிங்களா என்ற சுசீலாவிடம் சாப்பிட்டோம் அத்தை என்றாள் வெரோனிகா. சரிம்மா நீங்க போயி தூங்குங்க என்றவர் பால் வேண்டுமா என்றார். இல்லை சித்தி வேண்டாம்  நீங்க போயி தூங்குங்க தேவைப் பட்டால் ரோனி பார்த்துப்பாள் என்றான் உதய். சரிப்பா என்ற சுசீலா தன்னறைக்கு சென்றார்.

 

என்னப்பா நீங்க அவன் பண்ணின தப்புக்கு தான் இத்தனை நாள் ஜெயிலில் இருக்கிறானே மாமாகிட்ட பேசி அந்த உதய் கிட்ட பேச சொல்லுங்க. விக்கி மேல கொடுத்த கம்ப்ளையண்டை வாபஸ் வாங்க சொல்லலாமே என்ற கௌதமிடம் என்ன கௌதம் விளையாடுறிங்களா. விக்கி பண்ணினது என்ன சின்ன விசயமா என் அண்ணனோட வாழ்க்கையையே அழிக்க துணிஞ்சுருக்கான் என்றாள் லாவண்யா.

 

அதோடவா விட்டான் அந்தப் பொண்ணு வெரோனிகாவை  வேற கீழே தள்ளி விட்டு தேவையா இதெல்லாம் அதனால அப்பாவே மனசு மாறி விக்கியை வெளியே எடுக்க நினைத்தாலும் நான் விட மாட்டேன் என்றாள் லாவண்யா.

என்ன பேசுற லாவண்யா விக்கி உன்னோட கொளுந்தன் என்ற சகுந்தலாவிடம் விவேக் என்னோட அண்ணன் அத்தை என்றாள் லாவண்யா. நீ வாழறது என்னோட வீட்டில் என்ற சகுந்தலாவிடம் ஓஓ அப்போ என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுறிங்க. என்ன என்னை விரட்டி விட்டு என்னை திரும்பவும் சேர்த்துக்கனும்னா விக்கி மேல கொடுத்த கம்ப்ளையண்ட்டை வாபஸ் வாங்கனும்னு மிரட்ட போறிங்க அப்படித்தானே என்றாள் லாவண்யா.

நான் எப்போ அப்படி சொன்னேன் லாவண்யா என்ற சகுந்தலாவிடம் அப்போ நீங்க சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம் அத்தை. நான் வாழ்றது உங்க வீடு தான். நீங்க தானே என் புருசனை பெத்திங்க அப்போ நான் இந்த வீட்டில் தான் வாழ முடியும் என்றாள் லாவண்யா.

லாவண்யா ஏன் பேச்சை வளர்த்துகிட்டே இருக்க அவங்க என்னோட அம்மா, உன்னோட மாமியார் அந்த மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் வாய்க்கு, வாய் எதிர் வாதம் பண்ணிகிட்டு இருக்க. பெரியவங்க ஒரு வார்த்தை கூட , குறைய சொல்லிட்டால் அதற்கு அர்த்தம் கண்டு பிடிச்சு உடனே சண்டை போடணுமா என்ன என்றான் கௌதம்.

அதானே நீங்க என்னைக்கு எனக்கு சப்போர்ட் பண்ணி பேசிருக்கிங்க எப்போ பாரு உங்க அம்மாவுக்கு தானே சப்போர்ட் பண்ணுவிங்க என்ற லாவண்யா கோபமாக தன்னறைக்கு சென்று விட்டாள்.

அப்பா அவள் கிடக்கிறாள் நீங்க மாமாகிட்ட பேசுங்க என்ற கௌதமிடம் எப்படி பேச சொல்லுற , இல்லை எந்த முகத்தை வச்சுகிட்டு போயி பேசுவேன். லாவண்யாவுக்கே இத்தனை கோபம் விக்கி மேல இருக்கும் பொழுது உன் மாமாவுக்கு கொஞ்சமாகவா இருக்கும் அதனால இந்தப் பேச்சை இத்தோட விடு. விக்கி பண்ணின தப்புக்கு தண்டனை கிடைக்கனும் அப்போ தான் அவனும் திருந்துவான் என்றார் சந்திரமோகன். என்னங்க நீங்க என்ற சகுந்தலாவிடம் விடுங்கம்மா அப்பா சொல்லுறதும் நியாயம் தானே என்ற கௌதம் தன் அன்னையை சமாதானம் செய்தான்.

 

என்ன விவேக் யோசனை என்ற தனசேகரனிடம் அப்பா உதய் கிட்ட பேசணும் என்றான் விவேக். எது விசயமா கல்யாண விசயமாவா என்ற தனசேகரனிடம் இல்லைப்பா விக்கி விசயமா என்றான் விவேக். அவன் விசயமா பேச என்ன இருக்கு என்ற தனசேகரனிடம் அப்பா விக்கி நம்ம சகுந்தலா அத்தை பையன். லாவண்யாவோட கொளுந்தன். அவனை சிறையில் வைத்திருப்பது நம்ம லாவண்யா வாழ்க்கையில் நிம்மதியை கெடுத்துருமோன்னு ஒரு பயம் என்றான் விவேக்.

அவன் பண்ணின வேலையால் தான் நீ இப்போ இந்த நிலையில் இருக்க. இரண்டு வாரத்திற்கு முன்னமே நடக்க வேண்டிய கல்யாணம் இரண்டு மாதம் வரை தள்ளி போயிருக்கு. அவனால் நீ மட்டும் பாதிக்கப் படவில்லை. அர்ச்சனா, வெரோனிகா இரண்டு பேரும் பாதிக்கப் பட்டிருக்காங்க.

நாம சொன்னால் உதய் கேட்கலாம் ஆனால் நம்ம மேல உள்ள மரியாதை போயிரும் விவேக். நம்ம மருமகளுக்கும் நம்ம குடும்பத்து மேல ஒரு அதிருப்தி வந்துரும். அது தேவையா சொல்லு அட்லீஸ்ட் உன்னோட கல்யாணம் நல்லபடியா நடந்து முடியும் வரையாவது விக்கி ஜெயிலில் இருக்கட்டும். அப்போ தான் அவனால எந்த தொல்லையும் வராது. கல்யாணம் நல்லபடியா நடக்கனும் என்றார் தனசேகரன். சரிங்கப்பா என்ற விவேக் உறங்க ஆரம்பித்தான்.

 

என்ன ரோனி தூங்கலாமா என்றவனிடம் இல்லை மாமா எதற்கு தூங்கனும் விடிய , விடிய முழிச்சுட்டு இருக்கலாமே கேட்கிறார் பாரு கேள்வி லூசு மாமா தூக்கம் வருது என்றவளிடம் என்னடி சொன்ன லூசு மாமாவா உன்னை என்றவன் அவளை விரட்டிட அந்த அறைக்குள்ளே ஓடிக் கொண்டிருந்தாள் வெரோனிகா.

அவளை எட்டிப் பிடித்தவன் பின்னிருந்து அணைத்தபடி மோதி நின்றான். அவளது காது மடலில் ஊதிட மெல்ல சிலிர்த்தவள் திரும்பி அவனது மார்பில் முகம் புதைத்து அவனை அணைத்துக் கொண்டாள். மனைவியை தன்னோடு அணைத்தவன் விளக்கையும் அணைத்து விட்டு அவளுடன் மெத்தையில் சரிந்தான்.

 

என்னடி தூங்காமல் என்ன யோசனை பண்ணிட்டு இருக்க என்றாள் இந்திரஜா. இந்து நான் கேட்டு ரோனி எதையாவது மறுப்பாளா என்றாள் அர்ச்சனா. அவளா அதுவும் நீ கேட்டு சத்தியமா மறுக்க மாட்டாள் என்றாள் இந்திரஜா. ஆமாம் உன் பெரிய அண்ணிகிட்ட அப்படி என்ன கோரிக்கை வைக்கப் போறிங்க நாத்தனாரே என்றாள் இந்திரஜா.

 

அது ஒன்றும் இல்லை அண்ணியாரே என்னோட அண்ணிங்க நீங்கள் எப்படி என்னோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிறிங்களோ அதே போல நானும் என் நாத்தனார் வாழ்க்கையில் சிக்கல் வரக்கூடாதுன்னு நினைக்கலாம் இல்ல என்றாள் அர்ச்சனா.

தாராளமா நினைக்கலாமே என்ற இந்திரஜா என்ன விசயம் என்றாள்.

 

அத்தியாயம் 93

 

இல்லை இந்து ரோனிகிட்ட சொல்லி அந்த விக்கி மேல கொடுத்த கம்ப்ளையன்ட்டை வாபஸ் வாங்க சொல்லலாம்னு என்ற அர்ச்சனாவிடம் தயவுசெய்து இதை ரோனிகிட்ட கேட்காதே அர்ச்சு என்றாள் இந்திரஜா. என்ன பேசுற இந்து அந்த விக்கி லாவண்யாவோட கொளுந்தன் என்றாள் அர்ச்சனா.

ஏன் அர்ச்சனா இன்னும் கல்யாணம் முடிஞ்சு அந்த வீட்டுக்கே நீ போகவில்லை அதற்குள்ள உன்னோட புருசன் வீட்டு சொந்தத்திற்கு பிரச்சனை வரக் கூடாதுன்னு இத்தனை தூரம் யோசிக்கிறியே அந்த விக்கி பொறுக்கி தள்ளி விட்டதில் ரோனியோட உயிருக்கு எதுவும் ஆபத்து வந்திருந்தாலும் இப்படி தான் நடந்துக்குவியா என்றாள் இந்திரஜா.

இந்து அப்படி எதுவும் என்று ஏதோ சொல்ல வந்த அர்ச்சனாவிடம் ஏன் அப்படி எதுவும் நடக்கவில்லைன்னு சொல்லுறியா நான் போயி பார்க்காமல் இருந்திருந்தால் இரத்தம் அதிகமா வெளியேறி அதுவும் நடந்திருக்கும். அவள் விழுந்து கிடந்த இடம் ஒரு கார்னர் அங்கே இருந்து அவன் இன்னும் போர்ஸா தள்ளி விட்டிருந்தால் மாடியில் இருந்து கீழே கூட விழுந்திருப்பாள். அப்போ ரோனிக்கு எதாவது ஆகி இருந்தால் என்ன பண்ண முடியும். அவளை கொலை பண்ண பார்த்தவன் எந்த தண்டனையும் அனுபவிக்காமல் ஜாலியா வெளியே சுத்தனுமா என்றாள் இந்திரஜா.

நீ ஏன் அர்ச்சு இத்தனை சுயநலமா இருக்க. அவள் சின்னப் பொண்ணு அவள்கிட்ட உங்க அம்மா தான் மகள் வாழ்க்கைன்னு வரும் பொழுது சுயநலமா பேசினாங்க, இப்போ நீயும் உன்னோட வாழ்க்கைக்காக சுயநலமா யோசிக்கிற என்றாள் இந்திரஜா.

நீ உன் புருசன் வீட்டு உறவுகளை நேசி தப்பே இல்லை அதற்காக பிறந்த வீட்டு உறவுகளை தண்டிக்காதே என்றாள் இந்திரஜா கோபமாக.

இந்து எதற்காக இத்தனை கோபம் நான் ஒன்றும் தப்பா கேட்கவில்லையே என்ற அர்ச்சனாவிடம் நீ கேட்டது தப்பு தான் அர்ச்சு அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது. வெரோனிகாவே மனசு மாறி அந்த விக்கியை வெளியே எடுக்க சம்மதிச்சாலும் நான் சம்மதிக்க மாட்டேன்.  நீ என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை என்றாள் இந்திரஜா.

இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு இந்து சரி விடு தூங்கலாம் என்றாள் அர்ச்சனா. இதோ பாரு அர்ச்சு என்ன இவள் இத்தனை கடுமையா நடந்துக்கிறாளேன்னு நினைக்காதே அந்த விக்கி எல்லாம் பயங்கரமான கிரிமினல் அவன் தண்டனை அனுபவிக்கத் தான் வேண்டும் என்றாள் இந்திரஜா.

 

சரிங்க அண்ணியாரே எனக்கும் புரியுது இதைப் பற்றி நிச்சயம் ரோனி அண்ணிகிட்ட பேச மாட்டேன் போதுமா என்றாள் அர்ச்சனா. குட் கேர்ள் என்ற இந்திரஜா சரி வா தூங்கலாம் என்று அவளுடன் பேசியபடி உறங்கினாள்.

 

என்ன யோசனை என்ற ஸ்ரீஜாவிடம் பதில் ஏதும் பேசாமல் ஒருமுறை பார்த்து விட்டு மீண்டும் தன் யோசனையைத் தொடர்ந்தான் தேவ். தேவ் நான் உன்கிட்ட தானே கேட்கிறேன் என்றவளிடம் அப்படியா ஸாரிங்க நீங்க ஏதோ சுவர்ருக்கிட்ட பேசிட்டு இருக்கிங்கனு நினைத்தேன் என்றான் தேவ்.

தேவ் ஏன் இப்படி பண்ணுற நான் உன்னோட பொண்டாட்டி என்றவளிடம் ஓஓ அப்படியா ஸாரிங்க நான் மறந்துட்டேன் என்றவன் குழந்தை நிலாவை அணைத்தபடி படுத்துக் கொள்ள ஸ்ரீஜா தான் நொந்து கொண்டாள்.

கடவுளே இவன் ஏன் தான் இப்படி பிகேவ் பண்ணுறானோ பைத்தியக்காரப்பயல் என்று கணவனை திட்டி விட்டு தானும் குழந்தையின் அருகில் படுத்துக் கொண்டாள்.

என்ன மலர் தூங்காமல் அழுதுட்டு இருக்க என்ற நெடுமாறனிடம் இன்று உதய், ரோனி இருவரும் பேசியதை கூறினார் மலர்கொடி. என்னை என் மருமகள் இவ்வளவு வெறுத்துட்டாளேங்க அர்ச்சனா விசயத்தில் நான் நடந்துகிட்டது ஒரு அம்மாவா தப்பா என்றார் மலர்கொடி. அம்மாவா உன்னோட நியாயத்தை அர்ச்சனாகிட்ட கடுமையா எடுத்து சொல்லலாம். ஆனால் வெரோனிகாவை இந்த விசயத்தில் தலையிட உனக்கு உரிமை இல்லை, அதிகப்பிரசங்கித்தனம் பண்ணாதேன்னு நீ சொன்ன பார்த்தியா அது மகா தப்பு. உன்னை விட சின்னப் பொண்ணு தானே, மருமகள் தானேன்னு நீ பேசினாலும் உன் மகள் வாழ்க்கை, உன் மகள் வாழ்க்கைன்னு அழுத்தி , அழுத்தி சொன்ன பார்த்தியா அது தான் பிரச்சனை. அப்போ நான் மகள் இல்லையா வெறும் மருமகள் தானா அப்படின்னு வெரோனிகாவுடைய மனசு அடி வாங்கிருச்சு.

மலர் நீ கை நீட்டி அடிச்சுருந்தால் கூட அந்தப் பொண்ணு அதை மறந்திருக்கும் ஆனால் நீ அடிச்சது வார்த்தையால. அதனால உதய் சொன்னது போல நீ அமைதியா இரு காலம் எல்லா காயங்களையும் ஆற்றி விடும் என்றார் நெடுமாறன்.

 

அதிகாலை உறக்கத்தில் இருந்து எழுந்த உதய் குழந்தை போல அவனது மார்பில் தலை வைத்து உறங்கும் மனைவியை ரசித்தான். அவளது நெற்றியில் முத்தமிட அவள் கண் விழித்தாள்.

என்ன மாமா விடிஞ்சுருச்சா என்றவள் வேகமாக எழப் பார்க்க ஏய் என்னடி அவசரம் இரு சீக்கிரம் எழுந்து என்ன பண்ணப் போற என்றான் உதய். காலேஜ் போகனும்ல என்றவளை முறைத்தவன் ஆமாம் ஞாயிற்றுக்கிழமை என் மாமனார் உனக்கு காலேஜ் திறந்து வச்சுருக்காரு என்றிட ஸாரி மாமா என்று நாக்கை கடித்தாள்.

ஸாரி சொல்லக் கூடாதுன்னு சொன்னேன்லடி என்றவன் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிட சரி, சரி ஓகே ஸாரி வாபஸ் என்றாள் வெரோனிகா.

 

சரி அப்போ கொஞ்சம் தூங்கு என்றவன் அவளை அணைத்துக் கொள்ள அவளும் அவனது மார்பில் கண் மூடினாள்.

மாமா என்ற வெரோனிகாவிடம் என்ன ரோனி என்றான் அவளது தலையை கோதியபடி. நான் ஒன்று சொன்னால் கேட்பிங்களா என்றவளிடம் இல்லை கேட்கமாட்டேன் என்றான் உதய். மாமா விளையாடாதிங்க நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன் என்றவளிடம் சீரியஸாவா என்னம்மா சொல்லுற ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணட்டா என்று அவளை நக்கலடித்தான் உதய்.

போடா மாமா என்றவள் எழுந்து கொள்ள அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டவன் சரி, சரி சொல்லு  என்றான்.

மாமா திட்டக்கூடாது என்றவளிடம் திட்டுற மாதிரி எதுவும் சொல்லப் போகிறாயா என்ன என்றான் உதய். ஆமாம் என்றவள் அந்த விக்னேஷ் மேல கொடுத்த கம்ப்ளையண்ட்டை வாபஸ் வாங்கிடலாமா என்றாள்.

பைத்தியமாடி நீ அவன் உன்னை கொலை பண்ண பார்த்திருக்கான். என் ரோனியை கொலை பண்ண பார்த்திருக்கான். அவனை சும்மா விடுறதா அவனை என் கையாலையே அடிச்சு கொல்லனும்னு நினைச்சுட்டு இருந்தேன். உன் பேச்சை கேட்டு தான் சட்டத்தோட பிடியில் ஒப்படைச்சுருக்கேன். அவனுக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்றான் உதய் கோபமாக.

மாமா ஏன் இத்தனை கோபம் உங்களுக்கு என்றவளிடம் ரோனி அவன் தொட்டது என் ரோனியை என்றான் உதய். மாமா நான் அவனுக்காக ஒன்றும் இப்போ பேசவில்லை. நம்ம அர்ச்சனா அண்ணிக்காக என்றாள் வெரோனிகா.

என்ன சொல்லுற என்றவனிடம் அந்த விக்னேஷ் யாரு விவேக் அண்ணாவோட தங்கச்சி லாவண்யாவோட கொளுந்தன். அவனை நாம இப்போ கம்ப்ளையண்ட் கொடுத்து ஜெயிலில் தள்ளியதால அந்த லாவண்யாவோட வாழ்க்கையில் எதுனாலும் சிக்கல் வர வாய்ப்பு உண்டு. அதனால அந்த பொண்ணுக்கு ஏற்படுற அந்த கோபம் நம்ம அர்ச்சனா அண்ணி மேல திரும்பினால் நல்லாவா இருக்கும் சொல்லுங்க.

பிறந்த வீட்டு சொந்தங்கள் எப்படி அண்ணிக்கு  முக்கியமோ அதே போல புகுந்த வீட்டு சொந்தங்களும் முக்கியம் தானே. அவங்க விவேக் அண்ணா கூட வாழ அந்த வீட்டுக்கு போகும் பொழுது எந்த மனக்கசப்பும் இருக்க கூடாது. அதனால தான் என்றாள் வெரோனிகா.

நீங்க இப்படி பண்ணுங்க அந்த விக்னேஷ்கிட்ட ஸ்டேசன்ல வச்சு எழுதி வாங்கிருங்க. இனிமேல் அவன் இது போல ஒரு தப்பை எப்பவுமே பண்ணக் கூடாதுன்னு என்ற வெரோனிகாவிடம் ரோனி ரொம்ப நல்லவளா இருக்காதே இந்த உலகம் உன்னை காயப் படுத்திட்டே தான் இருக்கும் என்றான் உதய்.

மாமா இது என் குடும்பம். என் நாத்தனார் கல்யாணம் ஆகி போற இடத்தில் எந்தக் குறையும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். அது தான் நம்ம எல்லோருக்கும் நிம்மதி என்றவளிடம் இந்த உலகம் ரொம்ப சுயநலமானது ரோனி. திரும்பவும் சொல்கிறேன் இவ்வளவு நல்லவளா இருக்காதே என்றான்.

மாமா அந்த கம்ப்ளையண்ட் என்று இழுத்தவளிடம் அதான் மகாராணி ஆர்டர் போட்டீங்களே மீறவா முடியும் என்றவன் எனக்கு துளியும் இஸ்டம் இல்லை ரோனி என்றான் உதய். மாமா என்றவள் சிணுங்கிட சிணுங்காதடி நான் நாளைக்கு போயி கம்ப்ளையண்ட் வாபஸ் வாங்கிடுறேன் என்றான் உதய்.

 

என்ன அண்ணா யோசனை என்ற பிரகாஷிடம் உதய் வெரோனிகா தன்னிடம் கூறிய விசயத்தைப் பற்றி சொன்னான். அண்ணா அவனை விடலாம்னு முடிவு பண்ணிட்டியா என்ற பிரகாஷிடம் உன் அண்ணியோட முடிவு அது. எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை என்றான் உதய்.

அர்ச்சனாவுக்காக அவனை விட்டுடலாம்னு சொல்லிட்டு இருக்கிறாள் என்ற உதய்யிடம் அண்ணா  அர்ச்சனாவுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் தப்பில்லை. ஆனால் அன்னைக்கு அந்த பொறுக்கி தள்ளி விட்டதில் அண்ணிக்கு எதுனாலும் தப்பா நடந்திருந்தால் என்ன பண்ணிருக்க முடியும். அவனை எப்படி தான் விட சொல்லி இந்த அண்ணி சொன்னாங்களோ என்றான் பிரகாஷ்.

பிரகாஷ் உன் அண்ணி சொல்லுற விசயம் சரி தான் ஆனாலும் நம்மளால அக்சப்ட் பண்ணிக்க முடியவில்லை என்ற உதய் நம்ம அர்ச்சனாவுக்காக இந்த ஒரு முறை நாம விட்டுக் கொடுக்கலாம். தேவ் கிட்டையும் சொல்லிரு என்றான் உதய். சரிண்ணா என்ற பிரகாஷின் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்ட உதய் பிரகாஷ் நம்ம தங்கச்சிக்காக தானடா விடு என்றிட அவனும் தலையை ஆட்டினான்.

 

நிலா போ போயி உன் பெரியம்மாவை கூட்டிட்டு வா என்று ஸ்ரீஜா குழந்தை உதயநிலாவை உதயச்சந்தி்ரனின் அறை வாசலில் விட்டாள்.

 

குழந்தை கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் ஓடியது. பெயம்மா, பெயம்மா என்று அறைக்குள் சுற்றிக் கொண்டிருக்க குழந்தையின் குரல் கேட்டு பால்கணி ஊஞ்சலில் அமர்ந்திருந்த வெரோனிகா எழுந்து வந்தாள். நிலாக்குட்டி என்ற வெரோனிகாவை கட்டிக் கொண்டாள் உதயநிலா.

 

பட்டு என்றவள் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட குழந்தையும் அவளது கன்னத்தில் முத்தமிட்டது. குழந்தையின் பட்டுக் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டவள் ஒரு சாக்லேட்டை எடுத்து கொடுத்திட அவள் மடியில் அமர்ந்தபடி உண்ண ஆரம்பித்தாள் உதயநிலா.

 

அத்தியாயம் 94

நிலாக்குட்டி சாக்லேட் பிடிச்சுருக்கா என்ற வெரோனிகாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் உதயநிலா. ஓஓ பாப்புக்கு பிடிச்சுருக்கா என்று குழந்தையை கொஞ்சிக் கொண்டு குழந்தையோடு விளையாடிக் கொண்டு இருந்தாள்.

 

அடடா நிலாக்குட்டி நீங்க உங்க பெரியம்மா கூட என்ன பண்ணிட்டு இருக்கிங்க என்று வந்தான் உதயச்சந்திரன். பெயப்பா என்று அவனது கழுத்தைக் கட்டிக் கொண்ட நிலா அவனது கன்னத்தில் முத்தமிட அச்சோ பாப்புக்குட்டியோட சாக்லேட் எல்லாம் பெரியப்பா கன்னத்தில் ஒட்டிருச்சு என்ற வெரோனிகா அவனது கன்னத்தை துடைக்கப் போக ஏய் ரோனி துடைக்காதே அது என் செல்ல மகளோட எச்சில் இருக்கட்டும் என்றான் உதய்.

அப்போ உங்க பெரியப்பா கன்னத்தில் இன்னும் சாக்லேட் முத்தம் கொடு நிலா நல்லா எறும்பு கடிக்கட்டும் என்றாள் வெரோனிகா.

 

எறும்பெல்லாம் பெரியப்பாவை கடிக்காது நிலா ஒரு வீங்கிப்போன வெறிநாய் இருக்கு. அது தான் சாக்லேட்டிற்காக என்னைக் கடிக்கும் என்றவனை முறைத்தவள் நான் வெறி நாயா இருங்க இப்பவே உங்களை கடிச்சு தின்னுடுறேன் என்றவள் அவனது கன்னத்தை கடித்திட ஆஆ விடுடி என்றவன் கத்திட வெறிநாய்னு சொன்னா இப்படித்தான் என்றாள் வெரோனிகா. அவள் ஒரு பக்கம் கடித்திட மறுபக்க கன்னத்தை உதயநிலாவும் கடித்திட ஆஆ குட்டிம்மா உன் பெரியம்மா கூட்சேர்ந்து நீயும் குட்டி நாயா மாறிட்ட ஆஆ பாவி நீ தான் கடிக்கிறனா என் மகளுக்கும் கடிக்க சொல்லி கொடுத்துருக்க என்றவன் இரண்டு பக்கமும் கன்னத்தை தேய்தான்.

ஒரு பக்கம் குட்டி தேவதையின் பல் தடம் , மறு பக்கம் அன்பு மனைவியின் பல் தடம் அவனுக்கு வலித்தாலும் இரண்டுமே சுகம் தான். மாமா பேசாமல் நிலாவை நம்மளே வச்சுப்போமா என்ற வெரோனிகாவிடம் நம்ம கிட்ட தானே இருக்கிறாள் என்றான் உதய்.

இல்லை மாமா பாப்பாவை இன்னைக்கு முழுக்க நான் என் கூடவே வச்சுக்கட்டுமா நாம பாப்பாவை கூட்டிட்டு வெளியே போயிட்டு வருவோமா என்றாள் வெரோனிகா.

அதற்கு ஸ்ரீஜா சம்மதிக்கனுமே என்ற உதயச்சந்திரனிடம் எனக்காக நீங்க அவங்க கிட்ட கேளுங்களேன் ப்ளீஸ் என்று கெஞ்சினாள் வெரோனிகா. உனக்காக மட்டும் இல்லை நமக்காக நான் கேட்கிறேன் என்றவன் வெளியே வர மாமா நான் இன்னைக்கு என் ப்ரண்டோட வீட்டில் ஒரு பங்க்சனுக்கு போறேன் நிலாவை கொஞ்சம் பார்த்துக்க முடியுமா என்றாள் ஸ்ரீஜா.

சரி நானே பார்த்துக்கிறேன் என்று ஸ்ரீஜாவிடம் பதில் அளித்த வெரோனிகா ஸ்ரீஜா கொண்டு வந்த நிலாவின் உடைகளை வாங்கிக் கொண்டாள்.

அவள் உன்கிட்டையே இருக்கட்டும் ரோனி என்று நினைத்த ஸ்ரீஜா கணவனின் அருகில் சென்றாள். தேவ் என்று அவள் அழைத்திட அவன் அமைதியாக மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். மீண்டும் அவனை அழைத்திட அவன் திருப்பி பார்த்தான். நான் என் ப்ரண்டோட வீட்டு பங்க்சனுக்கு போகிறேன். வர ஒரு வாரம் ஆகும் நிலாவை கொஞ்சம் பார்த்துக்கோ என்றாள்.

நீ திரும்பி வராமல் போனாலும் கூட என் மகளை என்னால பார்த்துக்க முடியும். இது என்ன புதுப் பழக்கமா இருக்கு மகாராணி எங்கேயும் போகும் போநு சொல்லிட்டெல்லாம் போக மாட்டிங்களே என்றான் தேவச்சந்திரன்.

தேவ் ஒரு நிமிசம் நில்லு என்றவள் அவனது கையை பிடித்திட நின்றான். என்ன என்று அவள் புறம் திரும்பிட அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள் ஐயம் ஸாரி தேவ் என்றவளை அவன் பிரித்திட முயல ஒரு ஐந்து நிமிசம் ப்ளீஸ் தேவ் என்றாள் ஸ்ரீஜா. ஐந்து நிமிடத்திற்கு பிறகு அவனை பிரிந்தவள் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

என்னாச்சு இவளுக்கு என்று நினைத்தவனின் சிந்தனையை கலைத்தது அவனது மொபைல் போனின் சத்தம். மருத்துவமனையில் இருந்து போன் வரவும் தேவ் சென்று விட்டான்.

 

என்னடி பண்ணிட்டு வந்திருக்க என்றாள் சுமித்ரா. என்ன பண்ணிட்டு வந்திருக்கேன்னா வீட்டில் எல்லோருக்கும் சொல்லிட்டா வர முடியும் என்றாள் ஸ்ரீஜா. தப்பு ஸ்ரீஜா என்ற சுமித்ராவிடம் இது தான் சரிடி எனக்கு உள்ள பிரச்சனை தெரிந்தால் நிச்சயம் தேவ் என்னை நல்லாவே பார்த்துப்பான். ஏன் என் மொத்த குடும்பமுமே பார்த்துப்பாங்க ஆனால் அது தேவ்க்காக இல்லை என் அம்மாவுக்காக பார்த்துப்பாங்க. நிஜமா என் மேல அன்பு வராது அந்த அளவுக்கு அந்த வீட்டில் எல்லோரையும் காயப் படுத்தி இருக்கிறேன். குறிப்பா அந்த வெரோனிகாவை என்னைக்கோ என்னை காதலிச்ச உதய் மாமாவை கல்யாணம் பண்ணிகிட்டால்ங்கிற ஒரே ஒரு காரணத்திற்காக அவளை நான் பேசின பேச்சு கொஞ்ச நஞ்சம் இல்லை என்று வருந்தினாள் ஸ்ரீஜா.

அவள் கிட்ட மன்னிப்பு கேட்கனும் கட்டாயம் ஒரு நாள் கேட்பேன் என்ற ஸ்ரீஜா  சரி சுமி எத்தனை மணிக்கு கிளம்புகிறோம் என்றாள் ஸ்ரீஜா. கிளம்பலாம் ஸ்ரீஜா என்ற சுமித்ரா இது உன்னோட ரிப்போர்ட் பத்திரமா வச்சுக்கோ என்றிட தாங்க்ஸ்டி இத்தனை நாளா இதை பத்திரமா வச்சுருந்த்துக்கு என்றாள் ஸ்ரீஜா.

 

என்னாச்சு மாமா அவங்களுக்கு என்னைப் பார்த்து பாசமா சிரிச்சாங்க என்ற வெரோனிகாவிடம் யாருக்கு, என்னாச்சு என்றான் உதய். ஸ்ரீஜா அக்காவுக்கு என்றவள் உறங்கும் நிலாவின் தலையை கோதி விட தெரியலையே ரோனி ஒருவேளை ஸ்ரீஜா உன்னை லவ் பண்ணுறாளோ என்னவோ என்றான் உதய். மாமா என்ன நக்கலா என்று சிணுங்கியவளிடம் நக்கல் இல்லைம்மா விக்கல் என்றவள் கக் என் விக்கல் எடுப்பது போல் செய்திட அவனது தலையில் நங்கென்று கொட்டினாள். அடிப்பாவி புருசனை அடிக்கிற உன்னை என்றவன் அவளை விரட்ட பார்த்திட மாமா  பாப்பா தூங்குகிறாள் நம்ம விளையாட்டு எல்லாம் அப்பறம் வச்சுக்கலாம் என்றாள் வெரோனிகா கண்டிப்புடன்.

சரிங்க ரோனி மேடம் என்றவன் பவ்யமாக கூறிட அவனைப் பார்த்து சிரித்தாள். உறங்கும் குழந்தை உதயநிலாவின் நெற்றியில் அவன் குனிந்து முத்தமிட மாமா என்ன பண்ணுறிங்க பாப்பா தூங்கிட்டு இருக்கிறாள். குழந்தைகள் தூங்கும் பொழுது அவங்களுக்கு முத்தம் கொடுக்க கூடாது என்றாள் வெரோனிகா.

ஏன் என்றவனிடம்  குழந்தைக்கு ஆகாது மாமா என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டவன் குட்டி  பாப்பாவுக்கு தானே கொடுக்க கூடாது அதான் பெரிய பாப்பாவுக்கு கொடுத்தேன் என்றவனிடம் ஷ்ஷப்பா என்ன மாமா இது இப்படி நேற்றிலிருந்து என் துப்பட்டாவை பிடிச்சுட்டே சுத்துறிங்க என்றவளை தன்னோடு அணைத்தவன் ஏன்டி பிடிக்கவில்லையா என்றான்.

பிடிச்சுருக்கு ரொம்ப என்றவள் மாமா நிலாவை பாருங்க எவ்ளோ கியூட்டு என்றவனிடம் ஆமாம் நம்ம செல்லப் பொண்ணு ரொம்ப கியூட் தான் என்றான் உதய். சரி அப்போ நாமலும் நிலா மாதிரி ஒரு கியூட்டான பாப்பாவை பெத்துக்கலாமா என்ற வெரோனிகாவிடம் பெத்துக்கலாமே என் ரோனி பாப்பா டிகிரி முடிச்சதும் என்றான் உதய்.

 

அதற்கு இன்னும் இரண்டரை வருசம் ஆகுமே என்றவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் அதுவரை நிலாக்குட்டி இருக்காளே என்றவன் என் செல்ல மக்குப் பொண்டாட்டி நீ சர்கஸ்ல வரும் சிங்கம் , புலி போல உன்னை ரிங் மாஸ்டர் மாதிரி நான் குச்சியை வச்சு விரட்டிகிட்டே இருந்தால் தான் ஒழுங்கா படிப்ப கொஞ்சம் ப்ரீயா விட்டாலும் படிப்புக்கு முழுக்கு போட பார்ப்ப என்றவன் ரோனி நம்ம வாழ்க்கையில் நிறைய காதல் இருக்கு. அது மட்டும் போதாது நீயும் நல்லா படிச்சு முன்னேறனும் என்றான்.

மாமா சின்னதா ஒரே ஒரு கேள்வி தானே கேட்டேன் அதற்கு இவ்வளவு பெரிய லெக்சரா மீ பாவம் மாமா என்றவளின் காதை திருகியவன் ஏன்டி வாயாடி நீ பாவமா கொன்னுருவேன் உன்னை என்றவனது கன்னத்தில் அவள் முத்தமிட்டதும் அவன் அமைதியாகிட அவனை பார்த்து கண்ணடித்து விட்டு ஓடியே விட்டாள்.

 

என்ன ரோனி ரொம்ப ஹாப்பியா இருக்க போல என்ற இந்திரஜாவிடம் அப்படிலாம் இல்லையே என்றவள் ரொம்ப, ரொம்ப ஹாப்பியா இருக்கேன் அக்கா என்றாள். உன்னோட இந்த ஹாப்பிக்கு காரணம் என்ன என்ற இந்திரஜாவிடம் இன்னைக்கு முழுக்க நிலாக்குட்டி என் கூடவே இருக்கப் போகிறாள் என்றவள் ஸ்ரீஜா அக்காவே அவளை பார்த்துக் கொள்ள முடியுமான்னு கேட்டாங்க என்றாள் வெரோனிகா.

ஓஓ அதான் போல வானம் இருட்டிட்டு வருகிறது என்றாள் இந்திரஜா. அக்கா உங்களுக்கு சேட்டை அதிகம் என்ற வெரோனிகா இந்திரஜாவிடம் சந்தோசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.

 

என்னாச்சு அவளுக்கு திடீர்னு எந்த ப்ரண்ட் வீட்டிற்கு போனாள் என்று யோசித்தவனுக்கு இன்று அவளது செயல்கள் வித்தியாசமாக இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. இன்று மட்டும் இல்லை சில நாட்களாகவே ஸ்ரீஜாவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களை அவன் கவனிக்கத் தான் செய்தான்.

அவளாக முதல் முறை இன்று அணைத்தது அவனுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தாலும் அவளது இந்த மாற்றம் எதனால் என்ற யோசனையும் உடன் வந்தது.

 

வீட்டிற்கு வந்தவன் அறையில் குழந்தை இல்லாமல் போகவும் நிலா , நிலா என்று அழைத்துக் கொண்டே வர ஐயோ , தேவ் மாமா ஏன் கத்திட்டு இருக்கிங்க பாப்பா அவங்க பெரியப்பா கூட தூங்கிட்டு இருக்கிறாள் என்றாள் வெரோனிகா.

ஸாரி அண்ணி என்றவனிடம் ஸ்ரீஜா அக்கா எப்போ வராங்க என்றிட தெரியலை அண்ணி என்றான் தேவ். என்ன மாமா நீங்க இப்படி இருக்கிங்க பாப்பா பகலில் சமத்து குட்டியா இருந்துப்பா ராத்திரி அம்மா வேண்டாமா போங்க போயி போன் பண்ணுங்க என்றாள் வெரோனிகா. சரிங்க அண்ணி என்றவன் அவளது எண்ணிற்கு போன் செய்ய போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

என்ன இவள் போனை ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணினாள். எங்கே போயிருப்பாள் என்று நினைத்தவன் அண்ணி அவளோட போன் சுவிட்ச் ஆஃப்னு வருது என்றான். சரி அப்போ நேரில் போயி கூட்டிட்டு வாங்க அவங்க ப்ரண்ட் வீடு உங்களுக்கு தெரியும் தானே என்ற வெரோனிகாவிடம் எந்த ப்ரண்ட் வீட்டுக்கு போயிருக்கான்னு தெரியலை என்றான் தேவ்.

என்ன சொல்லுறிங்க தேவ் மாமா அவங்க எங்கே போனாங்கனு அப்போ நீங்க கேட்கவே இல்லை அப்படித் தானே என்றவள் என்னாச்சு உங்களுக்கு அவங்க மேல கோபம் இருக்கலாம் அதற்காக எப்படி வேண்டுமானாலும் போன்னு விட்டுருவிங்களா என்றாள் வெரோனிகா கோபமாக.

ரோனி நீ ஏன் கோபம் படுற எனக்கு தெரிஞ்சு அக்கா அந்த சுமித்ரா வீட்டுக்கு தான் போயிருப்பாள். அவளை தவிர ஸ்ரீஜாவுக்கு பெஸ்ட் ப்ரண்ட் யாரும் இருக்க மாட்டாங்க என்ற இந்திரஜா மாமா நீங்க அந்த சுமித்ரா வீட்டிற்கு போயி பாருங்க என்றாள்.

 

அவன் சென்ற நேரம் சுமித்ரா வீட்டில்…..

 

அத்தியாயம் 95

 

சுமித்ராவின் வீட்டிற்கு வந்த தேவச்சந்திரனுக்கு பெரிய அதிர்ச்சியாக சுமித்ராவின் வீடு பூட்டிக் கிடந்தது. எங்கே போயிருப்பாங்க என்றவனின் மூளைக்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. காலையில் ஸ்ரீஜா சொன்ன விசயம். ஏதோ தோழியின் வீட்டு விசேசத்திற்காக ஒரு வாரம் செல்வதாக அல்லவா கூறினாள் என்று நினைத்தவன் சரி என்று மீண்டும் அவளுக்கு போன் செய்தான்.

அவள் எடுத்தபாடில்லை இந்த முறையும் சுவிட்ச்ஆஃப் என்று வரவும் கடுப்பானவன் இவளெல்லாம் எதற்கு போன் வச்சுருக்காள் என்று மனைவியை திட்டி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.

என்ன நிலாம்மா இன்னும் தூக்கம் போகவில்லையா என்ற உதயச்சந்திரன் குழந்தையை எழுப்பிட சிரித்துக் கொண்டே உதயநிலா திரும்பி திரும்பி படுத்துக் கொண்டிருந்தாள்.

என்ன மாமா நீங்க எழுந்துட்டிங்க பாப்பா இன்னும் எழும்பலையா என்றவள் குட்டிம்மா எழுந்திருங்க நாம குளிக்கப் போகலாம் என்று உதயநிலாவை தூக்கிக் கொண்டாள் வெரோனிகா.

அது என்ன பாப்பாவை மட்டும் தான் குளிக்க ஊத்துவிங்களா பாப்பாவோட பெரியப்பாவை யாரு கவனிக்கிறது பெரியம்மா என்று மனைவி அவளின் தோள் பட்டையில் முகம் வைத்தவன் கேட்டிட அடடா நிலாக்குட்டி இன்னைக்கு உங்க பெரியப்பா என்னம்மோ ஐந்து வயது பிள்ளையா மாறி பெரியம்மாவை இம்சை பண்ணிட்டு இருக்காரே என்னவா இருக்கும் என்றாள் வெரோனிகா. குழந்தை அவளை புரியாமல் பார்த்து சிரிக்க அவளை கட்டிக் கொண்டிருந்த அவளது கணவனோ பெரியப்பாவுக்குள்ள இருந்த லவ்வர் பாய் இன்னைக்கு கொஞ்சம் அதிகமா வெளியில் வருகிறான்னு சொல்லுடா தங்கப்புள்ளை என்றான் உதய்.

வருவான் , வருவான் பிச்சுருவேன் இன்னைக்கு பாப்பா கூட ஜாலியா வெளியே சுத்தப் போறோம் அவ்வளவு தான் என்றவள் அவனை தள்ளி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். குழந்தையுடன் விளையாடிக் கொண்டே அவளை குளிக்க வைத்தவள் குழந்தையை துடைத்து விட்டு பொட்டு வைத்து , புது கவுன் போட்டு அழகு படுத்தினாள்.

ரோனி போதும் பாப்பா சின்னக் குழந்தை அவளை படுத்தாதே என்றிட என்னோட செல்ல மகளை நான் அழகு படுத்துறேன். உங்களுக்கு பொறாமை என்றவள் குழந்தையை அவனிடம் கொடுத்து இரண்டு பேரும் வெளியே போங்க என்றாள் .

ஏன்டி என்றவனிடம் நான் டிரஸ் சேஞ்ச் பண்ணனும் மாமா போங்க என்று அவனை தள்ளி விட்டாள். அவனும் சென்று விட்டான்.

என்ன அண்ணா பெரியப்பாவும், பொண்ணும் ஒரே கலரில் டிரஸ் சூப்பர் என்றாள் அர்ச்சனா. இன்னைக்கு நிலாக் குட்டி கூட வெளியே போறோம் அதான் என்ற உதய் தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அடடே பெரியம்மாவும் அதே கலர் சேலை கட்டிருக்காங்க போல என்ற அர்ச்சனாவைப் பார்த்து புன்னகைத்தவள் மாமா நான் ரெடி என்று கணவனின் அருகில் வந்தாள். அத்தை நாங்க போயிட்டு வரோம் என்று இரண்டு மாமியார்களிடமும் சொல்லி விட்டு கணவனுடனும், மகளுடனும் கிளம்பினாள் வெரோனிகா.

ரொம்ப கியூட்டா இருக்குல இந்த பேம்லி என்ற அர்ச்சனாவிடம் ரொம்ப, ரொம்ப கியூட். கூடிய சீக்கிரத்தில் ரோனிக்கும் ஒரு பேபி வந்துச்சுனா இன்னும் கூட கியூட் என்றாள் இந்திரஜா.

 

சீக்கிரமே வந்துரும் போல என்று அர்ச்சனா கிண்டலடித்திட வரட்டும், வரட்டும் உன் மகளுக்கு மாப்பிள்ளை வரட்டும் என்ற இந்திரஜாவும் அர்ச்சனாவை நக்கலடித்தாள்.

 

அப்பறம் ரோனி என்ன திடீர்னு புடவை என்றவனிடம் மாமா நாம இப்போ ஒரு குழந்தையோட வெளியே போகிறோம். நிலாக்குட்டிக்கு அப்பா, அம்மா போல இருக்க வேண்டாமா என்றவளைப் பார்த்து சிரித்தவன் உனக்கு ரொம்ப பெரிய ஆசைடி என்றான். மாமா அம்மாவா ஆகனும்னு எல்லா பொண்ணுங்களுக்குமே ஆசையா தான் இருக்கும்.

உங்க கிட்ட சொல்லுறதுக்கு என்ன கதிர் சின்ன குழந்தையா இருக்கிறப்ப அவனை அண்ணிகிட்ட கொடுக்கவே மாட்டேன். நானே தான் தூக்கி வச்சுப்பேன். அப்போ எல்லாம் எனக்கு ஆசையா இருக்கும் நமக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகிருச்சுனா இது போல ஒரு குழந்தை நம்மகிட்ட எப்பவுமே இருக்குமேன்னு இந்த ஆசை எப்போ தெரியுமா வந்துச்சு  நான் எட்டாவது படிக்கும் போது என்றவள் சிரித்திட அடிப்பாவி உனக்கு குழந்தைகள்னா அவ்வளவு பிடிக்குமா என்றான்.

பின்ன பிடிக்காமல் எங்க ஊரில் வயலுக்கு அறுப்பு வேலைக்கு போறவங்க குழந்தைகளை மேக்சிமம் ஸ்கூல் லீவு விட்டால் நான் தான் பார்த்துப்பேன். குழந்தைங்க பண்ணுற எல்லாமே அழகு தான் மாமா. அதுவும் நிலாக்குட்டி சோ சுவீட் என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவள் குழந்தையை கொஞ்சிக் கொண்டே இருந்தாள்.

ஏய் என்னடி இப்படி கொஞ்சுற நீ கொஞ்சுற கொஞ்சில் பாப்பாவுக்கு ஜுரமே வந்துரும் போல என்றவனிடம் ஐயோ மாமா விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதிங்க பாப்பா நல்லா இருக்கனும் என்றாள் வெரோனிகா.

ஸ்ரீஜா அக்கா எப்படி இவளை நம்ம கிட்ட கொடுத்துட்டு போனாங்களோ அப்படியே பத்திரமா இவளை அவங்க கிட்ட கொடுக்கனும் என்ற வெரோனிகா குழந்தையுடன் பேச ஆரம்பித்தாள்.

குழந்தையுடன் கொஞ்சி கொஞ்சி பேசிடும் வெரோனிகாவை பார்த்தவனின் மனம் பூரித்தது. அவனுக்கும் ஆசை தான் தன்னவளின் ஜாடையில் தனக்கும் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆனால் மனைவி அவளின் படிப்பும் முக்கியம் அல்லவா அதனால் அவனும் யோசிக்கிறான். அவன் யோசித்தால் மட்டும் போதுமா இறைவனும் அவனைப் போலவே யோசிப்பாரா என்ன. இறைவனின் கருணை தானே குழந்தையே.

 

என்ன ஸ்ரீஜா யோசிச்சுட்டே இருக்க என்ற சுமித்ராவிடம் என் பொண்ணு நிலாவோட ஞாபகமா இருக்கு சுமி. ஒரு வாரம் அவளை பிரிஞ்சு என்னால இருக்க முடியுமா. இல்லை நிலாவால தான் என்னை பிரிஞ்சு இருக்க முடியுமா எனக்கு கவலையா இருக்கு என்றவளின் கையை ஆதரவாக பிடித்த சுமித்ரா நிலா கூட நீ காலம் முழுக்க இருக்கனும் ஸ்ரீஜா அதற்கு இப்போ உனக்கு இந்த டிரீட்மென்ட் ரொம்ப முக்கியம் என்ற சுமித்ரா ப்ளைட் இன்னும் பத்து நிமிசத்தில் லேண்ட் ஆக போகுது அப்பறம் நீ உன் வீட்டுக்கு போன் பண்ணி நிலாவோட குரலை கேளு என்றாள் சுமித்ரா.

 

இல்லை சுமி நிலாவோட குரலை கேட்டால் என்னால் ட்ரீட்மென்ட்ல இருக்க முடியுமான்னு தெரியலைடி. என்னோட ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு நான் என் மகளை பார்த்துக்கிறேன். தேவ் என்னோட பொண்ணை பத்திரமா தான் பார்த்துப்பான். உதய் மாமா, வெரோனிகா இரண்டு பேருமே நிலாவை நல்லா பார்த்துப்பாங்க அந்த நம்பிக்கை இருக்கு என்றாள் ஸ்ரீஜா.

 

எங்கே தான்டி போன என்று நினைத்த தேவ் மீண்டும் அவளுக்கு போன் செய்திட இந்த முறை போனை அட்டன் செய்தாள் ஸ்ரீஜா. எங்கே இருக்க என்றவனிடம் தேவ் நான் தான் சொன்னேனே ப்ரண்ட் வீட்டில் பங்க்சன் அதான் கேரளா வந்திருக்கேன் என்றவள் நிலாவை பத்திரமா பார்த்துக்கோ என்று மட்டும் சொல்லி விட்டு போனை வைத்தாள்.

திமிர் பிடிச்சவள் என்று மனைவியை திட்டி விட்டு வீட்டிற்கு சென்றான் தேவச்சந்திரன்.

 

அவனால் ஏனோ இன்று அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளை இத்தனை நாட்கள் ஏன் ஒதுக்கி வைத்தான் என்றே புரியவில்லை. அவள் மீது கோபம் கொள்ள எனக்கு என்ன தகுதி இருக்கிறது. அவளது வாழ்க்கையை கெடுத்தவன் நான். என் மீது எப்படி அவளுக்கு காதல் வரும். வெறுப்பு தானே வரும் அதை புரிந்து தானே இத்தனை நாட்கள் அவளை ஒதுங்கி வாழ்ந்தேன் அவள் என்னை மட்டும் காயப்படுத்தினால் பிரச்சனை இல்லை அண்ணி பாவம் அவங்க என்ன பாவம் பண்ணினாங்க அவங்களை வார்த்தையால் காயப் படுத்தியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால் தான் அவள் மீது கோபம், ஆத்திரம்.

அவளை பார்க்கமல் எப்படி இந்த ஒரு வாரத்தை கடத்த போகிறேன் என்று நினைத்தவனின் மனம் ரணமாக வலித்தது. தனது பர்ஸில் இருந்த அவளது போட்டோவை பார்த்தவன் இப்ப இல்லைடி எப்பவுமே தேவ் லவ் ஒன்லி ஃபார் யூ ஸ்ரீஜா. அது உனக்கும் தெரியும் என்றவன் என்னை புரிஞ்சுப்பியாடி என்றான்.

அவளும் அதே நேரம் தனது கைப்பையில் இருந்த அவனது புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்டில் ஐ லவ் யூ தேவ். அதை உன் கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தெரியலைடா. சாவோட விளிம்பில் இருக்கும் பொழுது தான் எனக்கு உன்னோட அருமை புரியுது. நீ என்னை நெருங்கி, நெருங்கி வந்தப்போ உன்னை நான் ரொம்பவே காயப் படுத்தினேன். இப்போ எனக்கு உன்னோட அருகாமை வேண்டும் தேவ் ஆனால் நீ இப்போ என்னை விட்டு தூரமா போயிட்ட என்று நினைத்தவளது கண்கள் கலங்கியது.

தான் இருக்கும் இடமும், சூழ்நிலையும் கருதி ஸ்ரீஜா மௌனம் காத்தாள். ஸ்ரீஜா வா என்று சுமித்ரா அழைத்தவுடன் மருத்துவரைக் காண சென்றாள் ஸ்ரீஜா. அவளது ரிப்போர்ட்டை பார்த்து விட்டு மீண்டும் ஒருமுறை அவளை முழுவதுமாக பரிசோதித்த மருத்துவர் அவளது மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார்.

 

என்ன பெரியம்மா நீங்க தூங்காமல் இருக்கிங்க மாத்திரை எடுத்துக்கிட்டிங்களா என்ற வெரோனிகாவிடம் அதெல்லாம் சரியா எடுத்துக்கிட்டேன்மா என்றவர் நிலா என்றிட சாப்பிட வச்சு தூங்க வச்சுட்டேன் என்றாள் வெரோனிகா. ரொம்ப தாங்க்ஸ்மா ரோனி என்ற வசுந்தராவை முறைத்தவள் அவள் என்னோட பொண்ணு அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவதற்கு எல்லாம் தாங்க்ஸ் சொல்லுவிங்களா என்றாள்.  வெரோனிகாவின் கன்னத்தில் கை வைத்த வசுந்தரா உனக்கு ரொம்பவே நல்ல மனசும்மா என்றார்.

சரி ஸ்ரீஜா அக்காவுக்கு போன் பண்ணுனிங்களா பெரியம்மா எப்போ வராங்களாம் என்றாள் வெரோனிகா. அவள் போன் எடுக்க மாட்டேங்கிறாள் ரோனி ஏன் தான் இந்தப் பொண்ணு இப்படி இருக்கிறாளோ என்றார் வசுந்தரா.

 

அவங்க மேல எந்த தப்பும் இல்லை பெரியம்மா எல்லாம் காலமும், நேரமும் தான். அவங்க ஆசைப்பட்ட வாழ்க்கை இல்லாமல் போனதோட வலி தான் இத்தனை தூரம் அவங்களை இப்படி மாத்திருச்சு. இயல்பா அவங்க கெட்டவங்க இல்லையே அதனால அக்கா சீக்கிரம் மாறிடுவாங்க நீங்க தூங்குங்க என்றாள் வெரோனிகா.

தேவ் இன்னும் வீட்டிற்கு வரவில்லையே அதான் என்ற வசுந்தராவிடம் தேவ் மாமா வந்தால் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றவள் வசுந்தராவை அனுப்பி விட்டு ஹாலில் அமர்ந்திருந்தாள்.

என்ன ரோனி நீ இன்னும் தூங்காமல் என்ன பண்ணுற என்று வந்தார் மலர்கொடி. இல்லை அத்தை தேவ் மாமா இன்னும் வரவில்லை அதான் என்றவளிடம் நீ நாளைக்கு காலேஜ் போகனும்டி போ போயி தூங்கு நான் பார்த்துக்கிறேன் என்றார் மலர்கொடி. இல்லை அத்தை பரவாயில்லை என்றவளிடம் சொல்றேன்லடி நான் பார்த்துக்கிறேன் நீ போ என்றார் மலர்கொடி. சரிங்க அத்தை என்றவள் தன்னறைக்கு சென்றாள்.

 

மலர்கொடி அன்று இரவு முழுக்க காத்திருந்தும் தேவ் வரவே இல்லை….

 

 

அத்தியாயம் 96

என்ன ரோனி வேலை எல்லாம் முடிஞ்சதா என்ற உதயச்சந்திரனிடம் எனக்கு என்ன வேலை மாமா இருக்கு அதான் என் இரண்டு மாமியாரும் வீட்டில் எல்லா வேலையும் பார்த்துடுறாங்களே என்றவள் பாப்பா தூங்கிட்டாளா என்றாள்.

திடீர்னு எழுந்துட்டாள் அம்மா , அப்பானு சிணுங்கினாள் தட்டிக் கொடுத்ததும் திரும்ப தூங்கிட்டாள் என்றான் உதய்.

ஆமாம் தேவ் வந்துட்டானா என்ற உதய்யிடம் இல்லை மாமா அவருக்காக தான் வெயிட் பண்ணினேன் அத்தை வந்து என்னை தூங்க சொல்லிட்டாங்க. தேவ் வந்தால் நான் பார்த்துக்கிறேன் நீ போ ரோனின்னு சொல்லிட்டாங்க அதான் வந்துட்டேன் என்றாள் வெரோனிகா.

என்ன மேடம் உங்க மாமியார் மேல கோபம் எல்லாம் போயிருச்சா என்ற உதய்யிடம் எனக்கு எப்போ என் மாமியார் மேல கோபம் வந்துச்சு சின்னதா ஒரு வருத்தம் இருந்துச்சு இப்போ அதெல்லாம் சரியாகிருச்சு என்றவள் சரி தூங்குங்க என்றாள். இருவரும் குழந்தை நிலாவை அணைத்தபடி உறங்கினர்.

மலர் இன்னும் தூங்காமல் இங்கே ஏன் உட்கார்ந்திருக்க மணியை பாரு மூன்றரை என்று வந்த நெடுமாறனிடம் தேவ் இன்னும் வீட்டிற்கு வரவில்லைங்க அதான் என்றார் மலர்கொடி. அவனுக்கு போன் பண்ணி கேட்டுட்டு நீ படுத்து தூங்கு. இவ்வளவு நேரம் இப்படியே நீ ஷோபாவில் உட்கார்ந்தபடி தூங்கினால் முதுகு வலி வரப் போகுது என்றவர் மகனுக்கு போன் செய்தார்.

அட்டன் செய்தவனிடம் தேவ் எங்கே இருக்க என்றார் நெடுமாறன். அப்பா நான் ஒரு ஆபரேசன் விசயமா வெளியூர் போயிட்டு இருக்கேன் மன்னிச்சுருங்க ரொம்ப அர்ஜன்ட் அதனால தான் போன் பேச முடியவில்லை என்றான் தேவ்.

சரிப்பா இதை முன்னமே ஒரு போன் பண்ணி நீ சொல்லி இருக்கலாம். உன் அம்மா தான் தூங்காமல் உனக்காக காத்துட்டு இருக்கிறாள் என்ற நெடுமாறன் பார்த்து , பத்திரமா போயிட்டு வாப்பா என்று மகனுக்கு அறிவுரை சொல்லி விட்டு போனை வைத்தார்.

 

மலர் அவன் வெளியூர் போயிட்டு இருக்கானாம் நைட் வர மாட்டான் நீ வா வந்து தூங்கு என்று மனைவியை அழைத்துச் சென்றார் நெடுமாறன்.

என்ன விவேக் ஏதோ யோசனையா இருக்க என்ற தனசேகரனிடம் உதய் விக்கி மேல கொடுத்த கம்ப்ளையன்ட்டை வாபஸ் வாங்கிட்டாராம். விக்கி வீட்டுக்கு வந்து விட்டான்னு லாவண்யா போன் பண்ணினாள் என்ற விவேக்கிடம் ஏன் திடீர்னு அந்தப் பையன் கம்ப்ளையண்ட்டை வாபஸ் வாங்கினாரு என்றார் தனசேகரன்.

தங்கச்சி வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கனும்னு நினைப்பாரு போல என்ற விவேக் இப்போ என் தங்கச்சி தான் பிரச்சனை பண்ணுது. விக்கி வந்தவுடனே லாவண்யா அவனை கண்டமேனிக்கு திட்டி அத்தை கூட பயங்கர சண்டையாம். காலையில் கிளம்பி வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கு என்க்கு என்ன பண்ணுறதுன்னு தெரியவில்லை என்றான் விவேக்.

நாமளே போயி பேசிட்டு வரலாம் விவேக். உன்னால முடியலைனா நீ வீட்டில் இருப்பா நான் போயிட்டு வரேன் என்ற தனசேகரனிடம் இல்லைப்பா என்னால இப்போ கொஞ்சம் நடக்க முடியுது. நானும் வரேன் என்றவனிடம் சரி இப்போ நீ தூங்கு என்ற தனசேகரன் தன்னறைக்கு சென்றார்.

லாவண்யா நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரி கிடையாது. அந்த உதய் தான் கம்ப்ளையண்ட்டை வாபஸ் வாங்கிருக்காரு என்ற கௌதமிடம் நீங்களும் உங்க அம்மாவும் போயி அங்கே மிரட்டி இருப்பிங்க கம்ப்ளையண்ட் வாபஸ் வாங்கவில்லைனா உங்க பொண்ணு கல்யாணத்தில் பிரச்சனை பண்ணுவோம்னு இல்லையா என்னை விரட்டி விட்டுருவேன்னு உங்க அம்மா எங்க அப்பாவை மிரட்டிருப்பாங்க அதான் அவங்க கம்ப்ளையன்ட்டை வாபஸ் வாங்கிருப்பாங்க என்றாள் லாவண்யா கோபமாக.

லாவண்யா பொறுமையா இரு நம்ம பாப்பா மேல சத்தியம்டி நானும், அம்மாவும் விக்கி விசயமா யாரையுமே பார்க்கவில்லை என்னை நம்பு என்றான் கௌதம். நம்புறதா உங்களையா உங்க தம்பி பண்ணின கேவலமான விசயத்திற்கு துணை போனவரு தானே நீங்க என்றாள் லாவண்யா.

லாவண்யா சத்தியமா அவன் பண்ணின எதுவுமே எனக்கு தெரியாதுடி. பண்ணின பிறகு தான் என்கிட்ட சொன்னான் என்ற கௌதமிடம் அவன் சொன்னதும் என்கிட்ட தானே நீங்க சொல்லி இருக்கனும். அவன் பண்ணின தப்பால தான் என் அண்ணனோட கல்யாணம் இப்படி தள்ளி போயிருக்கு என்றவள் இன்னும் கோபமாக திட்டிக் கொண்டிருக்க கௌதம் எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.

பாருடா எப்படி பேசுகிறாள்னு சொந்த அண்ணன் பொண்ணு அவளே என்னை மதிக்க மாட்டேங்கிறாள் என்று வருந்திய சகுந்தலாவிடம் நம்ம மகன் பண்ணின காரியம் அப்படி சகுந்தலா என்று சந்திரமோகனும் சொல்லிட உங்களுக்கு எப்பவுமே விக்கியை பிடிக்காது.

அவனை பார்த்திங்க தானே போலீஸ் அடிச்சுருப்பாங்க போல என்ற சகுந்தலா மகனின் உடலில் இருந்த காயங்களுக்கு உமியை வறுத்து ஒத்தடம் கொடுத்தார்.

விக்னேஷ் மனதில் வன்மம் கொஞ்சமும் குறையவில்லை. அந்த வெரோனிகாவையும், அவளோட புருசனையும் என்ன பண்ணுறேன்னு பாருங்க என்று மனதிற்குள் சூளுரைத்தான்.

 

என்னடா சொல்லுற நீயும் , தேன்மொழியோட தங்கச்சியும் காதலிக்கிறிங்களா என்ற வசந்தியிடம் ஆமாம் அம்மா எனக்கு அவளை தான் பிடிச்சுருக்கு கட்டி வைங்க என்றான் சரவணன். உனக்கு நம்ம ரோனியோட சின்ன நாத்தனார் அந்த பொண்ணு கூட வட நாட்டுக்கு படிக்க போயிருக்கே அதை கேட்கலாம்னு நான் நினைச்சுட்டு இருக்கேன் நீ என்னடான்னா உன் அண்ணன், அக்கா இரண்டைப் போலவே உருப்படாமல் அந்த குடும்பத்திலே போயி விழறேன்னு சொல்லுற என்றார் வசந்தி.

அம்மா போதும் இந்தப் பேச்சை விடுங்க என் கல்யாணம் கனிமொழியோட தான் நடக்கும். அது மட்டும் இல்லை உங்களோட பகல்கனவிற்கு என்னோட வாழ்க்கையை என்னால பழி கொடுக்க முடியாது. அந்தப் பிள்ளை ஊர்மிளா சின்னப்பிள்ளை அதைப் போயி நான் கல்யாணம் பண்ணிக்கவா உங்களுக்கு அறிவு இருக்கா, இல்லையா வினோதா ஓடிப்போனதால தான் ரோனிக்கு அவளை விட பத்துவயசு மூத்தவரை கட்டி வச்சோம். அதே போலவா என்றவன் அப்பா மாமாகிட்ட நீங்களும், சித்தப்பாவும் போயி பேசி எனக்கும், கனிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க பாருங்க அவ்வளவு தான் நான் சொல்லுவேன் என்றான் சரவணன்.

 

தம்பி என்னப்பா இது என்ற கதிரேசனிடம் அண்ணன் அவன் தான் இத்தனை பிடிவாதமா இருக்கானே அதனால நான் என் மச்சுணன் கிட்ட பேசுறேன் என்றார் கதிரேசன். இல்லை என்று ஏதோ சொல்ல வந்த வசந்தியிடம் நீ மறுக்கிறதால அவனோட பிடிவாதம் தான் அதிகமாகும். உன் பொண்ணு பண்ணிட்டு போன அசிங்கமே போதும் அவனையும் ஓட வச்சுராதே என்ற கணேசன் தன் தம்பியிடம் திரும்பி கதிரேசா நீ சொக்கு கிட்ட பேசு. என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போம் என்றார்.

 

என்னடி சொல்லிட்டு இருக்க ஏற்கனவே ஒருத்தியை அந்த குடும்பத்தில் கட்டிக் கொடுத்து நாங்க சீரழியுறது போதாதா இப்போ உன்னையைவும் அந்த குடும்பத்தில் கட்டி கொடுக்க அது என் உயிர் இருக்கிற வரை நடக்காது என்றார் செல்வராணி.

 

அம்மா புரிஞ்சுக்காமல் பேசாதே என்னால சரவணன் இல்லாமல் வாழ முடியாது என்றாள் கனிமொழி. அப்போ செத்துருடி உன்னை அந்த பழிகாரி வசந்தி கிட்ட  கட்டிக் கொடுத்துட்டு தினம், தினம் நீ எப்படி இருக்கியோ, ஏது இருக்கியோன்னு நான் நொந்து, நொந்து சாகுறதை விட நீ செத்து போனால் இரண்டு நாள் அழுதுட்டு அடுத்த வேலையை பார்ப்பேன்.

ஒருத்தி இல்லை உன் அத்தை பூங்கொடியோட சேர்த்து இரண்டு பேரு அந்த குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு போயி கஷ்டப் படுறது போதாதா இவளும் அவனை ஆசைப் பட்டுட்டாளாம். அவன் மேல இருக்கிற ஆசையால தான் வார மாப்பிள்ளையை பூராம் கை நொட்டை, கால் நொட்டைன்னு சொல்லி விரட்டி விட்டியா இனி வரும் மாப்பிள்ளைக்கு எதுனாலும் குறை சொல்லு உன்னை கொன்று குழியில் புதைச்சுடுறேன் என்றார் செல்வராணி கோபமாக.

 

என்ன சொல்லுற சொக்கு நம்ம பிள்ளை அந்த சரவணனை ஆசைப் படுதா என்றார் கந்தசாமி. ஆமாம் அண்ணே ஏற்கனவே ஒருத்தியை கட்டிக் கொடுத்துட்டு படுற வேதனை பத்தாதா சின்னவளையும் அங்கே கொடுத்து சீரழியனுமான்னு ராணி கேட்கிறாள் என்றார் சொக்கலிங்கம்.

ராணி சொல்லுறதில் தப்பென்ன கொளுந்தனாரே என்ற தெய்வானை ஆத்தா மருமகளே என்னை நீ கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை என்று வினோதாவிடம் சொல்லி விட்டு தனது கொளுந்தனார் சொக்கலிங்கத்தின் பக்கம் திரும்பினார்.

வசந்தி மாதிரி ஒரு மாமியார்காரிகிட்ட ஏற்கனவே நம்ம புள்ளை தேன்மொழி படுற சித்ரவதை பத்தாதா இப்போ சின்னவளையும் கொடுத்துட்டு இந்தப் பிள்ளையையும் பார்க்க முடியாமல், பேச முடியாமல் தவிக்கனுமா என்றார் தெய்வானை.

அத்தை நீங்க என் அம்மாவை நம்ப வேண்டாம் என் தம்பியை நம்பி கனியை கட்டிக் கொடுங்க என்ற வினோதாவிடம் இப்படித்தான்மா உன் சித்திகாரி தேன்மொழியை சக்திவேலை நம்பி கொடுங்க அண்ணான்னு வந்து கேட்டாள். நம்பி தான் பொண்ணை கட்டி கொடுத்தோம் ஆனால் உன் அண்ணன் என்ன பண்ணினாரு அவரோட அம்மா பேச்சை கேட்டு தானே ஆடினாரு அதே போல உன் தம்பியும் பண்ண மாட்டாருன்னு என்னம்மா நிச்சயம் என்றார் தெய்வானை.

அத்தை அது என்ற வினோதாவிடம் அண்ணி ப்ளீஸ் நீங்க அமைதியா இருங்க என்ற செல்வம் சித்தப்பா சரவணன் சக்தி மாதிரி கிடையாது என்றான். தம்பி இப்போ உன் சித்தி சம்மதிக்க மாட்டேங்கிறாள் எனக்கு நல்லாவே தெரியும் மூத்தவரு போல அவரு தம்பி இல்லை  தான் ஆனால் அம்மா பேச்சை கேட்டுட்டு நாளைக்கு அவரும் மாறிட்டா இரண்டு பொண்ணை பெத்து இரண்டு பேரோட முகத்தையும் பார்க்காமல் அனாதையா வாழனுமா சொல்லு. அப்படி என்னப்பா அவசியம் மூத்தவள் தலையெழுத்து இனி மாத்த முடியாது. ஆனால் இளையவளை கண்டிப்பா அந்த குடும்பத்தில் கொடுக்க மாட்டேன் என்றார் சொக்கலிங்கம் தீர்மானமாக.

 

பூங்கொடி கிளம்பு என்ற கதிரேசனிடம் எங்கே கிளம்ப என்றார் பூங்கொடி. உங்க அண்ணன் வீட்டுக்கு தான் நம்ம சரவணனுக்கு உன் அண்ணன் மகள் கனிமொழியை பொண்ணு கேட்க என்றார் கதிரேசன். இப்படித்தான் சக்தி தேனு மேல ஆசைப் படுகிறான்னு போயி பொண்ணு கேட்டோம் கொடுத்தாங்க அதற்கு பிறகு தேன்மொழிக்கு பிறந்த வீட்டு உறவு அறுந்து போனது தான் மிச்சம் இப்போ அதே போல கனிமொழிக்கும் நடக்கனுமான்னு என் அண்ணி என்னை செருப்பால அடிச்சது போல கேள்வி கேட்பாங்க எந்த முகத்தை வச்சுகிட்டு நான் பதில் சொல்லுவேன் சொல்லுங்க என்றார் பூங்கொடி.

 

அத்தியாயம் 97

பூங்கொடி சரவணன் நம்ம மகன் இல்லையா என்ற கதிரேசனிடம் நம்ம மகன் தான் நான் மறுக்கவில்லை ஒருவேளை தேன்மொழி கூட என் அண்ணன் குடும்பத்தோட உறவு நல்லபடியா இருந்தால் நாம இப்போ பொண்ணு கேட்கலாம் ஆனால் தேன்மொழியை தான் உங்க அண்ணி என் அண்ணன் குடும்பத்தோட ஒட்டும் இல்லாமல், உறவும் இல்லாமல் ஆக்கிட்டாங்களே அதனால் என்னால் என் அண்ணன் வீட்டுக்கு வந்து பேச முடியாது. என்னை மன்னிச்சுருங்க என்றார் பூங்கொடி.

பூங்கொடி என்று ஏதோ சொல்ல வந்த கதிரேசனிடம் இதோ பாருங்க சாமி சரவணன் நல்லவன் தான் ,ஏன் சக்திவேல் கூட நல்லவன் தான் ஆனால் உங்க அண்ணி மோசமானவங்க. அதை உங்களால் மறுக்க முடியுமா என்ற பூங்கொடி நான் என் அண்ணன் வீட்டுக்கு வர மாட்டேன். நீங்கள் கேட்டு உங்க மச்சுணன் பொண்ணு கொடுத்தார்னா சந்தோசமா கல்யாணம் பண்ணி வைங்க என்று உறுதியாக கூறினார். கதிரேசனாலும் பூங்கொடியை கட்டாயப் படுத்த முடியவில்லை. அமைதியாக சென்று விட்டார்.

சரவணா என்ற தேன்மொழியிடம் சொல்லுங்க அண்ணி என்றான் சரவணன். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா என்றாள் தேன்மொழி. தாராளமா பேசலாம் அண்ணி என்றவனிடம் என் தங்கச்சியை தயவுசெய்து மறந்துருங்க என்றாள் தேன்மொழி.

என்ன சொல்லுறிங்க அண்ணி என்ற சரவணனிடம்  நிஜமாகத் தான் சொல்கிறேன் சரவணா என் தங்கச்சியும் இந்த வீட்டுக்கு வாழ வந்தாள் என்றால் என் அம்மா , அப்பா கட்டாயம் அநாதையா மாறிடுவாங்க. நான் தான் உங்க அம்மாவோட கட்டாயத்தின் பெயரில் என் அப்பா, அம்மா கூட எந்த உறவும் இல்லாமல் இருக்கிறேன். அதே போல என் தங்கச்சியும் நிற்கனுமா சொல்லுங்க அவளாவது அவங்களுக்கு உறவா இருந்துட்டு போகட்டுமே ப்ளீஸ் என்றாள் தேன்மொழி.

அண்ணி நீங்கள் என்னை நம்பலாம் நிச்சயமா நான் அண்ணனை போல இருக்க மாட்டேன் என்ற சரவணனை கசந்த புன்னகையுடன் பார்த்தவள் உங்க அண்ணனும் என்னை கல்யாணம் பண்ணிக்கும் பொழுது சொன்னது தான் . கல்யாணத்திற்கு பிறகு அவங்க உன்னோட அப்பா, அம்மா இல்லை என்னோட அப்பா, அம்மான்னு . ஆனால் உங்க அம்மா வச்சது தானே சட்டமா போச்சு. இப்போ கூட அவங்களுக்கு நீங்க கனியை கல்யாணம் பண்ணிக்கிறதில் எந்த விருப்பமும் இல்லை. அவங்க ஆசையில் மண் அள்ளிப் போட்டவள்னு என் தங்கச்சி மேல கோபமும், ஆத்திரமும் தான் வரும். நிச்சயம் அவளையும் அடுத்த தேன்மொழியா மாற்ற தான் பார்ப்பாங்க என்றாள் தேன்மொழி.

அண்ணி உங்களுக்கு என் அம்மாவை மட்டும் தான் தெரியுமா, கனிமொழி பற்றி தெரியாதா. அவள் உங்களைப் போல அமைதியா இருக்கிறவளா சொல்லுங்க. என் அம்மாவுக்கு கனிமொழி தான் சரியான மருமகள். உங்களுக்கும், மாமா குடும்பத்திற்கும் உள்ள உறவை சரி செய்து நம்ம இரண்டு குடும்பத்திற்கும் ஒரு பாலமா எங்களுடைய கல்யாணம் இருக்கும்னு நாங்க இரண்டு பேரும் நம்புகிறோம்.

 

அதனால் நீங்க வருத்தப் பட வேண்டாம். என்னால இந்த ஜென்மத்தில் உங்க தங்கச்சியை மறக்க முடியாது. பெரியவங்க சம்மதத்தோட எங்கள் கல்யாணம் நடக்கனும்னு எங்களுடைய ஆசை. அது எங்கள் இஸ்டப் படி தான் நடக்கனும்னு விதி இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது.

அண்ணி நீங்கள் என்னோட அம்மா மாதிரி உங்களுக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கிறேன் என் அண்ணன் வேண்டுமானாலும் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்திருக்கலாம். நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். கனிமொழி தான் என் மனைவி. என்னோட உயிர் உள்ளவரை கனிமொழியோட அப்பா, அம்மாவை என் அப்பா, அம்மாவா தான் பார்ப்பேன். என்னை நீங்கள் முழுதாக நம்பலாம் என்றான் சரவணன்.

 

மனைவி அவள் படும் துயரம் கண்டு பறிதவித்தான் தேவச்சந்திரன். என்ன சுமித்ரா இதெல்லாம். அவள் தான் எனக்கு தெரிய வேண்டாம்னு சொன்னாள் என்றால் நீங்களும் மறைப்பிங்களா. மேடம் என்ன அத்தனை பெரிய அதிபுத்திசாலியா சென்னையில் ட்ரீட்மென்ட் எடுத்தால் எனக்கு தெரிஞ்சுரும்னு திருவனந்தபுரம் வந்துருக்காங்களோ என்றான் தேவ்.

தேவ் அப்படி இல்லை அவள் என்று சுமித்ரா ஏதோ கூற வர போதும்ங்க என்றவன் நல்லவேளை அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற டாக்டர் சினேகா என்னோட ப்ரண்ட் . அவளுக்கு என்னோட கல்யாண போட்டோவை எப்பொழுதோ அனுப்பி வைத்தது இப்பொழுது உதவி பண்ணி இருக்கு என்றவன் நீங்க போங்க சுமி இனி என் ஸ்ரீஜாவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்றான் தேவ்.

 

சினேகா அவள் என்ற தேவச்சந்திரனிடம் ட்ரீட்மென்ட் ப்ராசஸ் உனக்கு தெரியாதா தேவ். அவங்க ரொம்ப டயர்டா இருக்காங்க கொஞ்சம் பார்த்துக் கொள் என்றாள் சினேகா. அவளை க்யூர் பண்ணிரலாமா என்றவனிடம் ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ் தான் தேவ். க்யூர் பண்ணிரலாம் டோன்ட் வொரி என்ற சினேகா தனது அறைக்கு சென்று விட்டாள்.

 

வாடிய கொடியாக கிடந்த ஸ்ரீஜாவைக் கண்ட தேவ் துடித்துப் போய்விட்டான். ஸ்ரீஜா என்று அவளருகில் வந்தவனைக் கண்டவள் தேவ் நீ எப்படி இங்கே என்றவளை இருந்த கோபத்திற்கு அடித்து விடலாம் போல இருந்தது அவனுக்கு.

அவளது உடல் நிலை காரணமாக அவளை சும்மா விட்டான் தேவ். பைத்தியமாடி நீ என் கிட்ட ஏன்டி மறைச்ச என்றான் தேவ். நீ தான் இப்போ எல்லாம் என்கிட்ட பேசுறதே இல்லையே தேவ் அப்பறம் எப்படிடா சொல்ல முடியும் என்றவளின் கைகளைப் பிடித்தவன் ஸாரி ஸ்ரீஜா என்று அவளது கைகளால் தன் கன்னத்தில் அறைந்தவன் தப்புடி எல்லாமே என்னோட தப்புடி.

என்னை மன்னிச்சுருடி நீ சைக்கார்டிஸ்ட் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டது கூட எனக்கு தெரியும் ஸ்ரீஜா. ஆனால் நீ ப்ரஸ்ட்கேன்சர்ல அவதி படுகிறாய்னு தெரியாமல் போச்சுடி என்றவன் கண்ணீர் விட அழாத தேவ் எனக்கு ஒன்றும் இல்லை என்றாள் ஸ்ரீஜா.

என்னை மன்னிச்சுரு ஸ்ரீஜா என்றவன் மனைவி அவளது பாதம் பற்றி கண்ணீர் வடித்திட நீ தான் தேவ் என்னை மன்னிக்கனும். நான் உன்னை எவ்வளவு காயப் படுத்தினேன். அதற்கெல்லாம் கடவுள் கொடுத்த தண்டனை என்றவளது வாயில் தனது கையை வைத்தவன் அப்படி சொல்லாதே ஸ்ரீஜா. அந்த கடவுள் தண்டிக்கனும்னா என்னை தண்டிக்கட்டும் என் ஸ்ரீஜா நல்லா இருக்கனும் என்றவனைக் கட்டிக் கொண்டவள் அழ ஆரம்பித்தாள்.

 

ஸ்ரீஜா அழாதடி என்றவனிடம் என்னை கொஞ்சம் அழ விடு தேவ் என்றவள் அவன் மார்பில் சாய்ந்து அழுது தீர்த்தாள். என்னை மன்னிச்சுருடா உன்னோட உண்மையான அன்பை பலமுறை நான் உதாசினப் படுத்தி இருக்கேன் என்றவளிடம் இல்லைடி அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ எதையும் யோசிக்காதே. உனக்கு கேன்சர் ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ் தான். அதனால பெரிய பிரச்சனை இல்லை என்றவன் மனைவியை ஆறுதல் படுத்தினான்.

 

உன்னோட ட்ரீட்மென்ட் இனி இங்கே வேண்டாம் ஸ்ரீஜா என்றவனிடம் தேவ் பொறுமையா இருடா என்றாள் ஸ்ரீஜா. இப்போதைக்கு வீட்டில் யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் . இப்போ தான் அர்ச்சனா பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கு. அவளோட கல்யாணம் நல்லபடியா முடியட்டும் . என்னோட விசயம் தெரிந்தால் கல்யாணம் சந்தோசமா நடக்குமான்னு தெரியாது அதனால இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்றாள் ஸ்ரீஜா.

 

என்ன சொல்லுற ஸ்ரீஜா என்றவனிடம் தேவ் முதல்ல அழறதை நிறுத்துடா நான் ஒன்றும் செத்துப் போகவில்லை என்றவள் என்னால இதுவரை நம்ம வீட்டில் எந்த நல்லதும் நடந்தது இல்லை. அட்லீஸ்ட் கெட்டது நடக்காமல் இருந்தால் நிம்மதி. அர்ச்சனாவோட கல்யாணம் எத்தனையோ பிரச்சனையை தாண்டி வந்துருக்கு அதனால கல்யாணம் முதலில் முடியட்டும் என்றாள் ஸ்ரீஜா.

சரி ஸ்ரீஜா என்றவன் மனைவி அவளது ட்ரீட்மென்ட் முடியும் வரை அவளை உடன் இருந்து ஒரு அன்னையாக மாறி பார்த்துக் கொண்டான். ஸ்ரீஜாவும் கணவனின் அரவணைப்பில் சீக்கிரமே தேறி வந்தாள்.

 

என்ன யோசனை ரோனி என்ற உதய்யிடம் மாமா ஸ்ரீஜா அக்கா ஊருக்கு போயி இன்றுடன் ஐந்து நாட்கள் ஆச்சு. இந்த தேவ் மாமாவும் ஏதோ ஆபரேசன் விசயமா போகிறேன்னு சொல்லிட்டு போயும் ஐந்து நாள் ஆகுது. நிலாவைப் பாருங்க அப்பா, அம்மா இரண்டு பேரையும் பிரிஞ்சு எத்தனை ஏக்கமா இருக்கிறாள்னு. மனசுக்கு வருத்தமா இருக்கு என்று வருந்தினாள் வெரோனிகா.

நீங்க கொஞ்சம் தேவ் மாமாவுக்கு போன் பண்ணி எப்போ வராங்கனு கேளுங்க குழந்தை ஏங்கிப் போயி இருக்கிறாள் . இப்படியோ போனால் குழந்தைக்கு ஜுரம் வந்துரப் போகுது என்றாள் வெரோனிகா.

தேவ் போன் எடுக்க மாட்டேங்கிறான் ரோனி. எனக்கும் புரியுது ஆனால் நம்ம பாப்பா தானே நாம இருக்கோமே என்றவனிடம் மாமா புரியாமல் பேசாதிங்க பாப்பாவை நான் பாத்துக்க மாட்டேன்னு எப்போ சொன்னேன். அவளை பார்த்துக்க இன்னும் ஒரு வாரம் கூட நான் லீவு போட தயார். ஆனால் பிள்ளை அவங்க அப்பா, அம்மா மேல ரொம்ப ஏக்கமா இருக்கிறாள்.

என்ன தான் நான் அவளை பத்திரமா பார்த்துகிட்டாலும் அவளோட அம்மா இல்லையே அது அவளுக்கும் தெரியும் அதனால தான் சொல்கிறேன். பாப்பாவை பார்த்துக் கொள்வதில் எனக்கு பிரச்சனை இல்லை ஆனால் அவளோட ஏக்கம் தீரனும்னா ஸ்ரீஜா அக்கா வந்தாகனும் என்றாள் வெரோனிகா.

அவள் சொல்றது தான் உதய் சரி இத்தனை பேர் இருந்தாலும் பெத்தவள் இருந்தால் தான் பிள்ளைக்கு சந்தோசம். அவளுக்கு அவள் அம்மா சோட்டு இருக்கு அதனால நீ தேவ்க்கும், ஸ்ரீஜாவுக்கும் திரும்ப போன் பண்ணு என்றார் மலர்கொடி.

 

அவன் இருவருக்குமே போன் செய்து பார்த்து விட்டான். முழுவதும் ரிங் போனதே தவிர இருவருமே எடுத்து பேசும் சூழ்நிலையில் இல்லை.

தேவ் போன் விடாமல் அடிக்குது எடுத்து பேசேன் என்ற ஸ்ரீஜாவிடம் இல்லை ஸ்ரீஜா அண்ணா தான் போன் பண்ணுறான். இப்போ நீ இருக்கிற நிலைமையில் நான் எதுவும் உளறிடுவேனோன்னு பயமா இருக்கு என்றான் தேவ்.

உனனோட உடம்பு ரொம்ப வீக்கா இருக்குடி நீ எதையும் யோசிக்காமல் ரெஸ்ட் எடு அண்ணாகிட்ட நான் அப்பறம் பேசிக்கிறேன் என்றான்.

என்னாச்சு உதய் என்ற வசுந்தராவிடம் இரண்டு பேருமே போன் எடுக்க மாட்டேங்கிறாங்க என்றவன் ரோனி இன்னும் இரண்டு நாள் போகட்டும் ஒரு வாரத்தில் ஸ்ரீஜா வந்துருவேன்னு சொல்லிருக்காள் தானே பார்த்துக்கலாம் என்றான் உதய்.

 

தேவ், ஸ்ரீஜா பிரச்சனை ஒருபுறம் இருக்க கான்பூரில் இருந்து ஊர்மிளா என்ற புயலும் வீட்டிற்கு வந்து சேர்ந்தது இனி கான்பூர் போக மாட்டேன் என்று. அது என்ன ஏழரையை கூட்டிட்டு வந்துருக்கோ

 

அத்தியாயம் 98

 

ரோனி நிலாவை நான் பார்த்துக்கிறேன் நீ காலேஜ் கிளம்பு என்ற இந்திரஜாவிடம் பரவாயில்லை அக்கா இன்னைக்கு ஒரு நாள் தான் காலேஜ். அப்பறம் லீவு தானே அவளை விட்டுட்டு போனால் என்னால அங்கே நிம்மதியா இருக்க முடியாது என்றாள் வெரோனிகா.

சரி ரோனி என்ற இந்திரஜா சென்று விட காலிங் பெல் சத்தம் கேட்டது. கதவை திறந்த சுசீலா எதிரில் நின்ற மகளைப் பார்த்து அதிர்ந்து போனார். ஊர்மிளா என்றவரிடம் எதுவும் பேசாமல் தன்னறைக்கு சென்று விட்டாள் ஊர்மிளா.

ஏய் நில்லுடி என்ன திடீர்னு வந்துட்ட என்றவரிடம் நான் இனிமேல் அங்கே போக மாட்டேன் என்றாள் பிடிவாதமாக. அது தான் ஏன் என்ற சுசீலாவிடம் நான் இஞ்சினியரிங் படிக்க மாட்டேன். அதுவும் ஐஐடியில் நிச்சயம் படிக்கவே மாட்டேன். என்னை திரும்ப கான்பூர் போக சொன்னிங்கனா நான் செத்துப் போயிருவேன் என்றாள் ஊர்மிளா தீர்மானமாக.

என்னடி இவள் இப்படி சொல்லிட்டு போறாள். இந்த வீட்டில் இப்போதைக்கு இருக்கிற பிரச்சனை எல்லாம் போதாதா இவள் வேற என்ன ஏழரையை இழுத்துட்டு வந்தாளோ என்று புலம்பிய சுசீலா சமையலைக் கவனிக்க ஆரம்பித்தார்.

 

ஊர்மிளா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆனது. வீட்டில் யாருடனும் சரியாக பேசாமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள் ஊர்மிளா.

மாமா என்னாச்சு இவளுக்கு திடீர்னு ஏன் கான்பூரில் இருந்து வந்து விட்டாள் என்ற வெரோனிகாவிடம் தெரியலை ரோனி என்ற உதய் ஹாஸ்டலில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துருக்கிறாள் . சித்தப்பா போயி என்ன ஏதுன்னு விசாரிச்சுருக்காரு. சரியா எந்த தகவலும் இல்லை என்ற உதய் நீ தான் அவள் கிட்ட பேசிப் பாரேன் என்றான்.

மாமா அவள் என்கிட்ட சரியா பதில் சொல்லுவாளான்னு தெரியலையே என்ற வெரோனிகா சரி மாமா உங்களுக்காக நான் போயி பேசுகிறேன் என்றவள் பாப்பாவை பார்த்துக் கோங்க என்று உதயநிலாவை அவனிடம் கொடுத்து விட்டு ஊர்மிளாவின் அறைக்கு சென்றாள்.

அவள் தன்னறையில் சுருண்டு அழுது கொண்டிருந்தாள். ஊர்மி என்று அவளது தோளைத் தொட அவ்வளவு தான் வெரோனிகாவை கட்டிக் கொண்டு அழுது தீர்த்து விட்டாள்.

 

ரோனி அம்மாகிட்ட சொல்லு இனிமேல் நான் அந்த காலேஜ்க்கு போக மாட்டேன். நான் இனி அந்த ஊருக்கு போகவே மாட்டேன் என்று அழுதவளிடம் என்னடி பிரச்சனை ஏன் இப்படி அழற என்ற வெரோனிகாவிடம் ஊர்மிளா அங்கே போனால் நானும் செத்துருவேன் ரோனி அந்த ஹாஸ்டலில் பேய் இருக்கு அந்த சஹானா என்னை கழுத்தை நெறிச்சு இங்கே பாரு ரோனி என் கழுத்தெல்லாம் காயம் எனக்கு பயமா இருக்கு நான் போக மாட்டேன். அங்கே போனால் நிச்சயம் செத்துருவேன் அம்மா, அப்பா கிட்ட சொல்லு ரோனி ப்ளீஸ் , ப்ளீஸ் நீ என் ப்ரண்ட் தானே நான் அங்கே போக மாட்டேன் பேய் இருக்கு என்றவள் அழ ஆரம்பிக்க ஊர்மி ரிலாக்ஸ் அழாதடி சரி நீ அங்கே போக வேண்டாம் காம்டவுன் என்ற வெரோனிகா அவளைத் தட்டிக் கொடுக்க அவளது மடியில் தலை வைத்து உறங்கினாள் ஊர்மிளா.

 

அவள் உறங்க ஆரம்பித்ததும் எழுந்து வந்தவளிடம் என்ன சொல்லுறா ரோனி என்றார் சுசீலா. அவள் ரொம்ப பயந்து போயிருக்காள் அத்தை அவளோட ஹாஸ்டல் ரூமில் பேய் இருக்கு, அந்த சஹானா என்னை கொன்னுருவாள் என்னை தயவுசெய்து அங்கே அனுப்பாதே ரோனி எனக்கு ஐஐடி வேண்டாம். நான் அங்கே போயி படிக்க மாட்டேன்னு ஒரே அழுகை என்றாள் வெரோனிகா.

சஹானா அவளோட ரூம் மெட்னு சொல்லி இருக்கிறாள் ரோனி என்ற அர்ச்சனாவிடம் அந்தப் பொண்ணை ஏன் பேய்னு சொல்லிட்டு இருக்காள் அண்ணி என்றாள் வெரோனிகா. தெரியலையே ரோனி என்ற அர்ச்சனா அண்ணா என்ன பண்ணலாம் என்றாள்.

சித்தி தப்பா எடுத்துக்க மாட்டிங்கனா ஒரு விசயம் பண்ணலாம் என்ற உதய்யிடம் என்னப்பா என்றார் சுசீலா. நம்ம ஊர்மியை சைக்கார்டிஸ்ட் கிட்ட அழைச்சுட்டு போகலாமா. அவள் சைக்கலாஜிக்கலா அபெக்ட் ஆகிருக்காள்னு தோன்றுகிறது என்றான் உதய். ஏன்டா இதெல்லாம் எங்க கிட்ட கேட்கனுமா அவள் உன் தங்கச்சி அவளுக்கு என்ன பண்ணனும்னு உனக்கு தெரியாதா என்ன என்ற இளமாறன் நாளைக்கே அழைச்சுட்டு போயிட்டு வா என்றார்.

 

சரிங்க சித்தப்பா என்றவன் தனது தோழி பிருந்தாவிற்கு போன் செய்து ஊர்மிளாவிற்காக அப்பாயின்மென்ட் வாங்கினான்.

அத்தை இன்னைக்கு இவள் கூட யாராவது இருக்கனும் என்றிட ரோனி பாப்பாவை நான் பார்த்துக்கிறேன் அவள் உன்கிட்ட தான் கொஞ்சம் நல்லா பேசுகிறாள் அதனால நீ அவள் கூடவே இரும்மா என்றார் வசுந்தரா. சரிங்க பெரியம்மா என்ற வெரோனிகா ஊர்மிளாவின் அருகிலே இருந்தாள்.

 

என்ன சொல்லுறிங்க மச்சான் இது சரி வராது என்றார் சொக்கலிங்கம். சரவணன் நல்ல பையன் என்ற கதிரேசனிடம் தப்பா எடுத்துக்காதிங்க மாப்பிள்ளை ஏற்கனவே உங்க மகன் மூத்தவருக்கு ஒருத்தியை கட்டிக் கொடுத்துட்டு நாங்க பட்டது போதாதா என்ன ஆனாலும் சரி என் இளைய மகளை உங்க மகனுக்கு கட்டி கொடுக்க முடியாது. நீங்கள் என்னை தப்பா நினைச்சாலும் சரி, இல்லை தேன்மொழி, பூங்கொடி இரண்டு பேரோட வாழ்க்கையை பணயம் வச்சு மிரட்டினாலும் சரி என்னோட மகள் சின்னவளை உங்க அண்ணன் மகனுக்கு கட்டி கொடுக்க மாட்டேன் என்றார் சொக்கலிங்கம் உறுதியாக.

அம்மா நான் கோவிலுக்கு போயிட்டு வரேன் என்ற கனிமொழியை முறைத்த செல்வராணி என்னடி அவன் கூட ஓடிப் போகலாம்னு நினைக்கிறியா என்றார் செல்வராணி.

நான் ஓடிப் போயித் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு விதி இருந்தால் அதை உங்களால தடுக்க முடியாது அம்மா என்றவள் இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை. நான் சாமி கும்பிடத் தான் போறேன் என்றவள் கோவிலுக்கு கிளம்பினாள்.

என்னடி நீ வர இவ்வளவு நேரமா என்ற சரவணனிடம் உன் மாமியாரை ஏமாத்திட்டு வர வேண்டாம். என் அம்மாவுக்கு இருக்கிற அறிவுக்கு கரைக்ட்டா கேட்டுருச்சு என்னடி அவன் கூட ஓடிப் போக போறியான்னு அதை சமாளிச்சுட்டு வருவதற்குள் போதும், போதும்னு ஆகிருச்சு என்றவள் வண்டியை எடு மச்சான் கிளம்பலாம் என்றாள் கனிமொழி.

 

என்னடி சொல்லுற அப்போ நாம ஊரை விட்டு ஓடிப் போறது என் மாமியாருக்கு தெரிஞ்சுருச்சா சரி சரி கிளம்பலாம் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

 

எதற்கு மச்சான் இப்போ திடீர்னு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்ன என்ற கனிமொழியிடம் இல்லை கனி சித்தப்பா உங்க அப்பாகிட்ட போயி பேசிருக்காரு நம்ம கல்யாணத்தை பற்றி. என் மாமனாரு சம்மதிக்க மாட்டேன்னு முடிவாக சொல்லிவிட்டார். அப்பறம் என்ன பண்ணட்டும். எப்படியும் வீட்டுக்கு வந்தவுடன் உன்னை ஹவுஸ் அரஸ்ட் பண்ணுவாங்க. அப்பறம் அவசரம், அவசரமா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க அதான் என்றான் சரவணன்.

அப்படி மட்டும் எவனையாவது கட்டி வச்சாங்க ஒன்று நான் செத்துருவேன். இல்லையா அவனை கொன்னுருவேன். என் வாழ்க்கை உன் ஒருத்தன் கூட மட்டும் தான் மச்சான் என்றவளிடம் லூசுச் சிறுக்கி நீ ஏன்டி சாகனும் நாம கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழத் தான் போகிறோம் என்ற சரவணன் பஸ் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்தி விட்டு அந்த பேருந்தில் அவளுடன் அமர்ந்தான்.

எங்கே போகிறோம் மச்சான் என்றவளிடம் கேரளா போகிறோம்  இந்த பஸ் அங்கே தான் போகுது என்றான் சரவணன். அங்கே போயி  என்றவளிடம் நம்ம கல்யாணம் பத்மநாபசாமி கோவிலில் நடக்கனும்னு விதி போல என்றான் சரவணன்.

அவள் சிரித்து விட்டு இப்போ அங்கே நமக்கு யாரைத் தெரியும் என்றாள் கனிமொழி. என்னோட காலேஜ் ப்ரண்ட் ஒருத்தன் அங்கே தான் அறநிலையத்துறையில் வேலை பார்க்கிறான். நான் ஏற்கனவே நம்ம விசயம் பற்றி நான் சொல்லி இருக்கேன். எப்போ வேண்டுமானாலும் வா சரவணான்னு சொல்லி இருக்கான் அதனால பயம் இல்லை என்ற சரவணன் அவளை ஆறுதல் படுத்தினான்.

 

உனக்கு கஸ்டமா இருக்கிறதா கனி என்றவனிடம் என்ன மச்சான் நீ உன் கூட சேர்ந்து சாகுறதுனாலும் எனக்கு சம்மதம் தான் நாம வாழத் தானே போகிறோம் கசக்குமா என்ன என்றாள் கனிமொழி. அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் தனது நண்பன் மணிகண்டனுக்கு போன் செய்து தான் வரும் தகவலை சொன்னான். அவனும் எல்லா ஏற்பாடுகளும் செய்வதாக கூறி அதற்கான வேலையை கவனித்தான்.

 

என்னப்பா ஆச்சு என்ற கணேசனிடம் சொக்கு சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு  அண்ணா என்றார் கதிரேசன். சரிப்பா விடு என்ற கணேசன் நம்ம பயகிட்ட சொல்லி அந்தப் பிள்ளையை தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லி வைப்போம்.

 

அண்ணே சரவணன் கேட்பானா என்ற கதிரேசனிடம் வேற என்னப்பா பண்ணுறது பொண்ணை பெத்தவரு உங்க மகனுக்கு என் புள்ளையை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு அவரை நாம கட்டாயப் படுத்த முடியுமா சொல்லு. நம்ம பயலுக்கு சூழ்நிலையை எடுத்து சொல்லி புரிய வைப்போம் என்றார் கணேசன். சரிங்கண்ணே என்ற கதிரேசன் தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

 

என்ன சொல்லுற ராணி அவளை ஏன் தனியா வெளியே அனுப்புன என்றார் சொக்கலிங்கம். இன்னைக்கு வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போகணும்னு பிடிவாதமா அடம் பிடிக்கிறவள் கிட்ட நான் என்ன சொல்ல முடியுமுங்க. உங்க செல்ல மகள் நான் சொல்லுறதை என்னைக்கு கேட்டிருக்கிறாள் என்றார் செல்வராணி.

 

அவளை அடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வைக்காமல் இப்போ பாரு கோவிலுக்கு ஐந்து மணிக்கு போனாள்னு சொன்ன இப்போ மணி ஏழு  இன்னும் வரவில்லை என்ற சொக்கலிங்கம் மகளைத் தேடி கோவிலுக்கு கிளம்பினார்.

 

என்ன சொல்லுறம்மா கனியை காணோமா என்ற தேன்மொழி இங்கே சரவணனையும் நான் மதியத்தில் இருந்து பார்க்கவே இல்லை. இருங்க அத்தை கிட்ட கேட்டுட்டு போன் பண்ணுறேன் என்ற தேன்மொழி போனை வைத்தாள்.

 

அத்தை என்ற தேன்மொழியிடம் என்ன தேனு என்றார் பூங்கொடி. சரவணன் எங்கே என்றவளிடம் தோட்டத்திற்கு போறேன்னு சாயங்காலம் போனான் இன்னும் வரவில்லையா என்றார் பூங்கொடி.

 

அம்மா போன் பண்ணுச்சு கனி கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாளாம். இன்னும் வீட்டுக்கு வரவில்லையாம் என்றாள் தேன்மொழி. என்ன சொல்லுற தேனு என்ற பூங்கொடி சரவணனுக்கு போன் செய்தார். போனை அவன் எடுத்தபாடில்லை .

என்ன அத்தை என்ற தேன்மொழியிடம் அவன் போனை எடுக்க மாட்டேன்கிறான் தேனு என்றார் பூங்கொடி.

 

அத்தியாயம் 99

 

என்ன அத்தை சொல்லுறிங்க போன் எடுக்கவில்லையா ஐயோ, கடவுளே உங்க பையன் சொன்னது போல செஞ்சுட்டாரு அவளை எங்கேயோ கூட்டிட்டு போயிட்டாரு என்று பதறினாள் தேன்மொழி.

தேனு பதறாதடி பார்க்கலாம் என்ற பூங்கொடி சக்திவேலிற்கு போன் செய்தார். சொல்லுங்க சித்தி என்றவனிடம் சரவணன் உன் கூட இருக்கானா சக்தி என்றார் பூங்கொடி. இல்லை சித்தி என்ன விசயம் என்றிட கனிமொழியையும் காணவில்லை என்று கூறினார் பூங்கொடி. நான் பார்க்கிறேன் சித்தி என்றவன் தம்பியை தேடிச் சென்றான்.

கதிரேசன், கணேசன் ஒரு புறம் தேடிட வசந்தியோ வீட்டில் பத்ரகாளி போல அமர்ந்திருந்தார். தேன்மொழியை வசை பாட ஆரம்பிக்க பூங்கொடி தேன்மொழிக்கு சப்போர்ட்டாக பேசிட வாக்குவாதம் முற்றி விட்டது.

இங்கு சொக்கலிங்கம் மகளை காணாமல் தேடிட தனது அண்ணன் கந்தசாமி, அவரது மகன்கள் பிரபு, செல்வம் என அவர்கள் ஒரு பக்கம் தேட ஆரம்பித்தனர்.

செல்வராணி தனக்கு இருந்த ஆத்திரத்தில் கணேசனின் வீட்டிற்கு வந்து வசந்தியுடன் சண்டையிட பூங்கொடி இருவரையும் சமாதானம் செய்ய முயன்று தோற்று விட்டார். இரண்டு தரப்பிலும் வார்த்தைகள் தடிக்க குடும்பமே அல்லோலப் பட்டு விட்டது.

இதை எல்லாம் அறியாத காதல்ஜோடிகள் தங்களின் எதிர்காலம் பற்றி கனவு கண்டபடி பேருந்தில் பயணமாகிக் கொண்டிருந்தனர்.

 

என்ன ரோனி நீ மேனேஜ் பண்ணிப்ப தானே என்ற உதயச்சந்திரனிடம் என்ன மாமா இது என்னை என்ன காட்டுக்குள்ளேயே விட்டுட்டு போறிங்க. நம்ம வீட்டில் நம்ம வீட்டாளுங்க கூட தானே விட்டுட்டு போறிங்க நான் பார்த்துக்கிறேன்.

நீங்க போயி தேவ் மாமாவுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுகிட்டு போன் பண்ணுங்க அவரு சொன்னது போல நான் வீட்டில் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்றாள் வெரோனிகா.

அவளது நெற்றியில் முத்தமிட்டவன் ஐ லவ் யூ ரோனி என்றிட ஐ லவ் யூ டூ சந்துருமாமா என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.  நீ ஊர்மிளா பக்கத்திலே இரு. நாளைக்கு ஈவ்னிங் அவளை நீயும் பிரகாஷும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. பிருந்தாகிட்ட எல்லாம் பேசிட்டேன் என்றவன் மனைவியை ஒருமுறை அணைத்து விட்டு அவளிடம் விடைபெற்று சென்றான்.

 

என்ன இது இந்த அம்மா இரண்டு நாளாவே போனே பண்ணாமல் இருக்காங்க என்று நினைத்தவள் தனது அன்னை பூங்கொடிக்கு போன் செய்தாள்.

மொபைல் போன் விடாமல் ஒலித்திட அதை அட்டன் செய்தான் கதிர்ரூபன். கதிரு அப்பத்தா எங்கேடா என்ற வெரோனிகாவிடம் ரோனி அத்தை இங்கே வீட்டில் ஒரே சண்டை என்றவன் அப்பத்தா அத்தை போன் என்று பூங்கொடியிடம் கொடுத்து விட்டு ஓடினான்.

அம்மா என்ற வெரோனிகாவிடம் சொல்லு ரோனி எப்படி இருக்க என்றார் பூங்கொடி. என்னம்மா உங்க குரலில் சுரத்தே இல்லாமல் பேசுறிங்க என்ன விசயம் என்றாள் வெரோனிகா. என்னத்த சொல்ல சொல்லுற ரோனி நம்ம சரவணன் கனிமொழியை கூட்டிட்டு ஊரை விட்டு ஓடிப் போயிட்டான்.

உன் பெரியம்மா மொத்த குடும்பத்தையும் ஆட்டி படைக்குது. செல்வராணி அண்ணிக்கும், உன் பெரியம்மாவுக்கும் பெரிய சண்டை உன் பெரியம்மா அவங்களை அடிக்க போயி அதை தடுக்க வந்த தெய்வானை அண்ணியை கீழே பிடிச்சு தள்ளி அவங்க மண்டை உடைஞ்சு கடைசியில் வினோதா வந்து அவங்க அம்மாகிட்ட சண்டை போட்டு ஒரே அமளி, துமளி ஆகிருச்சு.

தேனு தான் பாவம் உன் பெரியம்மா பேசுற பேச்சை காது குடுத்து கேட்க முடியவில்லை என்று நொந்து கொண்டார் பூங்கொடி.

 

என்னம்மா இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு என் கிட்ட சொல்லவே இல்லை என்ற வெரோனிகாவிடம் என்னடா ரோனி சொல்ல சொல்லுற உன் வீட்டிலே ஏகப் பட்ட பிரச்சனை இதில் நம்ம வீட்டு பிரச்சனையையும் சொல்லி உன்னை ஏன் கலவரப் படுத்தனும்னு தான்டா சொல்லவில்லை என்றார் பூங்கொடி.

சரவணா அண்ணன் பற்றி எந்த தகவலும் தெரியலையாம்மா என்ற வெரோனிகாவிடம் ஆமாம் ரோனி எங்கே போனான்னே தெரியலை என்ற பூங்கொடி சரி ரோனி நான் அப்பறம் பேசுகிறேன் என்று போனை வைத்தார்.

 

என்ன தேனு நீ ஏன் இப்படி அழுதுட்டே இருக்க என்ற சக்திவேலிடம் என்னால அழ மட்டும் தானே முடியும் வேற என்ன பண்ண முடியும். உங்க அம்மா பேசுற பேச்சை எல்லாம் நீங்களும் கேட்டுட்டு தானே இருக்கிங்க உங்க தம்பி என்ன பச்சைக் குழந்தையா அவரை என் தங்கச்சி ஏமாற்றி கூட்டிட்டு போக இதே உங்க தங்கச்சி ஓடிப்போனப்பவும் இதே மாதிரி தான் என் அண்ணன் ஏமாற்றி கூட்டிட்டு போனான்னு பேசினாங்க. அது எப்படிங்க உங்க அம்மா பெத்த பிள்ளைகள் மட்டும் அப்பாவி என் குடும்பத்தில் பிறந்த எல்லோரும் ஏமாத்துக்காரவங்க அப்படித் தானே.

நல்லவேளை நம்ம கல்யாணம் காதல் கல்யாணம் இல்லை இல்லைன்னா நானும் உங்களை ஏமாத்தி என் வலையில் விழ வச்சுட்டேன்னு சொல்லிருப்பாங்க என்ற தேன்மொழி அழ ஆரம்பித்தாள்.

தேனு அழாதடி அம்மா பற்றி உனக்கு தெரியாதா அதை என்னால மாற்ற முடியுமா சொல்லு. சித்தியைவே அந்த பாடு படுத்தும் என்றவனிடம் என்னங்க உங்க அம்மா ஒன்றும் வானத்தில் இருந்து ஒன்றும் குதிக்கவில்லை. நீங்க என்னை கண்ட்ரோல் பண்ணுற மாதிரி உங்க அப்பா அவங்களை கண்ட்ரோல் பண்ணி வச்சுருந்தா இந்த ஆட்டம் போட மாட்டாங்க. உங்க அப்பா தான் அவங்களை கண்டிக்கவில்லை நீங்களாவது கண்டிக்கலாமே.

உங்க தங்கச்சியோட மாமியார் மண்டையை உங்க அம்மா உடைச்சு விட்டுருக்காங்க அவள் இவங்க பெத்த பொண்ணு தானே. அவளோட வாழ்க்கை அந்த வீட்டில் தானே அதை ஏன் உங்க அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. நீங்களும் கேட்கப் போறதில்லை. உங்க அம்மாவும் திருந்த போறதில்லை.

 

உங்க தம்பியால என் அப்பா, அம்மா தான் அசிங்கப் பட்டு போயி நிற்கிறாங்க என்று கண்ணீர் வடித்தாள் தேன்மொழி. தேனு அம்மாகிட்ட யாராலையும் பேச முடியாதுடி இப்போ நான் போயி கேட்டால் அது என்ன சொல்லும் என்னடா உன் பொண்டாட்டி உனக்கு தலையணை மந்திரம் போட்டு விட்டாளான்னு கேட்கும். அப்படி ஒரு மகன் கிட்ட கேட்கலாமாங்கிற அறிவு கூட அதுக்கு கிடையாது. எப்படியாவது பேச்சுல தான் ஜெயிக்கனும் அது மட்டும் தான் அதோட குறிக்கோளா இருக்கும் என்னால என்னடி பண்ண முடியும் என்றான் சக்திவேல்.

 

 

அப்போ என்னை அத்து விட்டுருங்க என்றாள் தேன்மொழி. தேனு என்றவனது சட்டையை பிடித்தவள் நிஜமாத் தான் சொல்கிறேன் என்னை அத்து விட்டுருங்க உங்க அம்மாவோட அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது.  என்னால இதுக்கு மேல தாக்குப் பிடிக்க முடியாது சாமி , நீங்களும் உங்க அம்மாவை தட்டி கேட்க மாட்டிங்க கல்யாணத்திற்கு முதல்நாள் என்கிட்ட என்ன சொன்னிங்கனு ஞாபகம் இருக்கா என் அப்பா , அம்மாவுக்கு மூத்த மருமகனா இல்லாமல் மூத்த மகனா இருந்து பார்த்துப்பேன்னு சொன்னிங்க அதை செய்திங்களா. மருமகனா கூட நடந்துக்கலையே என்னைப் பெத்தவங்க  கிட்ட நான் பேசக்கூடாதுன்னு உங்க அம்மா கண்டிசன் போட்டப்ப நீங்களும் அமைதியா தானே இருந்திங்க. நீங்க எப்பவுமே உங்க அம்மாவுக்கு மகனா தான் நடந்துருக்கிங்க. எனக்கு ஒரு பிள்ளை கொடுத்ததை தவிர மற்ற எந்த இடத்திலும் எனக்கு புருசனா நடந்ததே இல்லை. போதும் என் தங்கச்சி தான் என் அப்பா, அம்மாவை கை விட்டுட்டு ஓடிட்டாள். நானாவது இனி வரும் காலத்தில் என் அம்மா, அப்பாவுக்கு பொண்ணா வாழ்ந்துட்டு போறேன் என்றாள் தேன்மொழி.

தேனு இது தான் உன் முடிவா என்ற சக்திவேலிடம் வேற என்ன பண்ண சொல்லுறிங்க இப்போ கூட உங்க அம்மாவை கண்டிக்க மனசு வராதப்போ நான் என்ன பண்ணட்டும். உங்களுக்கு உங்க அம்மா தான் வேண்டும் என்றால் என்னை விட்டுருங்க. நான் வேண்டும்னா என்னை என் அப்பா, அம்மா வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க. என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்த சமயத்தில் நான் துணையா இருக்கனும் என்றாள் தேன்மொழி.

சரி தேனு எனக்கு நீயும் வேண்டும் , என் அம்மாவும் வேண்டும். அவங்க என்னை பெத்தவங்க அவங்களை தூக்கி போட முடியாது. அதற்காக இனி உன்னை இழக்கவும் என்னால முடியாது. நீ கிளம்பு நானே உன்னை அத்தை, மாமா வீட்டில் விட்டுட்டு வரேன் என்ற சக்திவேல் மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான்.

 

எங்கே கிளம்பிட்டிங்க மகாராணி சீவி, சிங்காரிச்சு என்ற வசந்தியிடம் என் அப்பா வீட்டுக்கு போறேன் என்றாள் தேன்மொழி. எதே உன் அப்பன் வீட்டுக்கு போறியா போடி அப்படியே போயித் தொலைஞ்சுரு திரும்ப என் வீட்டு படிவாசலை நீ மிதிக்க கூடாது என்றார் வசந்தி.

அக்கா என்ன பேசுறிங்க அவள் இந்த வீட்டோட மருமகள் அவளை வர வேண்டாம்னு எப்படி சொல்லுவிங்க என்ற பூங்கொடியிடம் ஓஓ உன் அண்ணன் பொண்ணுக்கு சப்போர்ட்டா என்ற வசந்தி என் மகனை இழுத்துட்டுப் போன அந்த ஓடுகாலியை பெத்த இவள் ஆத்தாகாரிக்கு எம்புட்டு கொழுப்பு இருந்தால் என் வீட்டு படியேறி வந்து என் கூட மல்லுக்கு நின்றிருப்பாள். அந்த திமிர் பிடிச்சவளை பார்க்க இவள் கிளம்புறா இவளை திரும்ப என் வீட்டுக்குள்ள விட நான் என்ன ஏமாந்த சிறுக்கியா என்றார் வசந்தி.

 

அக்கா தப்பா பேசாதிங்க நம்ம சரவணன் ஒன்றும் பச்சைப் பிள்ளை கிடையாது இருபத்தி எட்டு வயசு இளந்தாரிப்பயல் தான் அவன் விருப்பம் இல்லாமல் கனிமொழி அவனை கடத்திட்டு போனது போல பேசுறிங்க என்ற பூங்கொடியை ஏதோ சொல்ல வாயெடுத்தார் வசந்தி.

கனிமொழி ஓடுகாலின்னா உன் பொண்ணு வினோதாவும் ஓடுகாலி தானம்மா. கனி தம்பியை மயக்கி இழுத்துட்டுப் போனதாவே வச்சுக்குவோம். அப்போ அன்னைக்கு வினோதாவும் பிரபுவை மயக்கி இழுத்துட்டு ஓடிருக்காள் அப்படித் தானே என்றான் சக்திவேல்.

சக்தி வினோதா உன் தங்கச்சி , கூடப் பிறந்தவளை இப்படித் தான் அசிங்கமா பேசுவியா என்ற வசந்தியிடம் கனிமொழி தேன்மொழியோட தங்கச்சி. என்னோட மச்சினிச்சி அப்போ அவளும் கூடப் பிறந்த பிறப்பு கணக்கா தான் உங்க பொண்ணை ஒற்றை வார்த்தை சொன்னதும் இவ்வளவு துடிக்கிறிங்களே கனிமொழியை நீங்க எவ்வளவு கேவலமா பேசுறிங்க அப்போ அவளோட அம்மாவுக்கும் இப்படித் தானே துடிச்சுருக்கும்.

நீங்க பெத்தால் சக்கரக்கட்டி, அடுத்தவங்க பெத்தால் சுண்ணாம்புக்கட்டினு பேசுறது ரொம்ப தப்பு மா என்றான் கோபமாக.

 

அத்தியாயம் 100

 

சக்தி என்ன பேசுற என்ற வசந்தியிடம் என்ன பேசுறேன்னா என்ன அர்த்தம். நம்ம வீட்டுப் பையன் ஒன்றும் பச்சை மண்ணு இல்லை அவன் தான் அந்தப் பிள்ளையை இழுத்துட்டு ஓடிருக்கான். நீங்க என்னடான்னா கனிமொழியை திட்டுறிங்க, தேன்மொழியை திட்டுறிங்க, சித்தியை திட்டுறிங்க போதாக் குறைக்கு என் மாமியாரையும் திட்டுறிங்க. அவங்க பொண்ணை ஒழுக்கமா வளர்க்காமல் தான் தேன்மொழியை நான் கல்யாணம் பண்ணிகிட்டேனா. நான் தான் அவள் வேண்டும்னு பிடிவாதமா இருந்தேன் அவள் அவங்க அப்பா, அம்மா பேச்சை கேட்டு தான் எனக்கு கழுத்தை நீட்டினாள். ஒரு பிள்ளை அப்படி, ஒரு பிள்ளை இப்படி ஆனால் நீங்கள் என்னம்மோ ஒழுக்கமா பொண்ணை வளர்த்தது போல செல்வராணி அத்தையை பேசுறிங்க.

கல்யாணம் முடிஞ்சு ஆறு மாதத்தில் உங்க மகளுக்கு குழந்தை பிறந்துச்சே அப்போ உங்க பொண்ணை நீங்க எப்படி வளர்த்திருக்கிங்க உங்களை அவங்க யாராவது இப்படி கேட்டிருந்தால் என்னம்மா பண்ணிருப்பிங்க நாக்கை பிடுங்கிட்டு செத்துருப்பிங்களா எப்போ பாரு அடுத்தவங்களை பேசி , பேசி நோகடிச்சுட்டு ஏன்மா இப்படி இருக்கிங்க.

இத்தனை நாளா உங்க பேச்சுகு மரியாதை கொடுத்து தேன்மொழியை அவளோட பிறந்த வீட்டுக்கு அனுப்பாமல் நான் பண்ணின தப்பு போதும். இப்போ கனியும் எங்கே இருக்கிறாள்னு தெரியவில்லை. இனி தேனு தான் அவங்க அப்பா, அம்மாவுக்கு ஆறுதலா, ஆதரவா இருக்கனும். அதனால நான் அவளை அங்கே அழைச்சுட்டு போறேன். இல்லை விட மாட்டேன் இன்னும் இவளை பேசி, பேசியே மூலையில் உட்கார வைப்பேன்னு நீங்கள் பிடிவாதமா இருந்திங்கனா ஏற்கனவே உங்க மகள் உறவு அறுந்து போனது மாதிரி தான். சரவணன் எங்கே போனான்னு தெரியலை. நான் ஒருத்தன் தான் இப்போதைக்கு உங்களுக்கு உருத்து . என்னையையும் உதறிட்டு இருக்கனும்னு நீங்க விருப்பப்பட்டால் நானும் என் மாமனார் வீட்டுக்கே போயிருவேன்.

எனக்கு அது அசிங்கம் இல்லை மருமகனா இல்லாமல் மகனா அவங்களை பார்த்துப்பேன் என்றான் சக்திவேல்.

என்ன சக்தி என்னையை மிரட்டி பார்க்கிறியா என்ற வசந்தியிடம் இப்போ தான்டி என் மகன் சரியா பேச ஆரம்பிச்சுருக்கான். உன்னோட வாய்க்கு  பயந்து குடும்பம் அழிஞ்சு போயிரக் கூடாதுன்னு நான் பொறுமையா போனேன். அதே போல என் பிள்ளைகளும், மருமகளும் இருக்கனும்னு அவசியம் இல்லையே.

உன்னோட கொட்டத்தை அடக்கனும்னா இப்போ சக்தி எடுத்திருக்கிற முடிவு தான் சரி என்றார் கணேசன்.

என்னங்க அவன் தான் என்னம்மோ பெரிய இவனாட்டம் பேசிட்டு போறான் நீங்களும் அவனுக்கு ஏந்துக்கிட்டு பேசிட்டு இருக்கிங்க என்று கோபமாக கத்தினார் வசந்தி.

ஏன்டா என்னடா என்னைக்கும் இல்லாத திருநாளா உனக்கு பொண்டாட்டி குடும்பத்து மேல அக்கறை எல்லாம் இவளால தான். நீ தானடி என்னம்மோ பேசி என் மகனை தூண்டி விட்டு என்னையை எதிர்த்து பேச வைக்கிற என்று தேன்மொழியை வசை பாட ஆரம்பித்தார் வசந்தி.

அம்மா போதும் அவள் ஒன்றும் உன்னை மாதிரி கிடையாது. உன்னோட அராஜகத்தை ஐந்து வருசமா பொறுத்துட்டு தானே இருந்தாள். நீ அவளை பேசினால் பரவாயில்லை அவங்க அம்மாவை ஏன் தப்பா பேசுற என்ற சக்தியிடம் ஓஓ உன் மாமியாகாரியை பேசவும் உனக்கு வீரம் வந்து விட்டதா என்று அசிங்கமான வார்த்தை ஒன்றை கூறி சக்தியை திட்டிட ச்சீ என்றாள் தேன்மொழி.

என்னங்க போதும் இத்தோட விடுங்க என் அம்மா என்ன பாவம் பண்ணினாங்க இவ்வளவு கீழ்த்தனமா என் அம்மாவை பேசனும்னு என்ன இருக்கு என்று அழுத தேன்மொழியை அணைத்துக் கொண்ட பூங்கொடி அக்கா நீங்களும் ஒரு பொண்ணை பெத்தவங்க தான். உங்க மகள்கிட்ட உங்களைப் பற்றி எங்க அண்ணி பேசினால் எப்படி இருக்கும் ஏன் இப்படி ஆத்திரத்தில் அறிவை இழந்துட்டு பேசுறிங்க என்றார் பூங்கொடி.

பார்த்திங்களா தம்பி உங்க பொண்டாட்டி பேசுறதை என்னை அசிங்கப் படுத்தி பேசுகிறாள் நான் என்ன உன்னை மாதிரி உன் சம்மந்தி வீட்டுக்கு போயி நாள்கணக்காவா தங்கிட்டு வரேன் என்று ஏதோ சொல்ல வர அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார் கணேசன். ஏன்டி என்னடி பேசிட்டு இருக்க நானும் பொறுமையா போயிட்டு இருந்தால் முதலில் தேனுவை பேசின, அப்பறம் தேனு அம்மாவை பேசின , இப்போ பூங்கொடியை பேசுற.

நீ ஒருத்தி தான் இந்த உலகத்தில் உத்தமியாடி புருசனுக்கு அடங்காத பொம்பளை நீயெல்லாம் அடுத்தவங்களை பேசலாமாடி என்ற கணேசன் வசந்தியை அடி , அடியென அடி வெளுத்து விட்டார்.

அண்ணா அவங்களை விடுங்க என்று கதிரேசன் தடுக்க முயன்றும் அவரால் தடுக்க முடியவில்லை. இடைவாரை உருவிய கணேசன் மனைவியை அடி வெளுத்து விட்டார்.

அப்பா விடுங்க போதும் என்ற சக்தியிடம் அவளாடா பாவம் அவள் வாயை கிழிச்சு தைக்கலை என் பேரு கணேசனே இல்லை என்றவரது கோபம் எல்லையைக் கடந்து விட வசந்தி தான் துடித்துப் போனார்.

திருமணம் முடிந்து இந்த முப்பத்தி இரண்டு வருடத்தில் முதன் முறையாக கணவனின் கோபத்தை பார்த்திருக்கிறார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை போல அவரது கோபம் வசந்தியை நிலைகுழையச் செய்தது.

 

சக்தி நீ மருமகளை அழைச்சுட்டு போ அவங்களுக்கு தைரியம் சொல்லு இனி இவளால என் மருமகளுக்கு எந்த தொந்தரவுமே வராது. பூங்கொடி அந்த சாக்கடை பேசினதுக்கு என்னை மன்னிச்சுரும்மா என்ற கணேசனிடம் இல்லை மாமா பரவாயில்லை விடுங்க என்ற பூங்கொடி தன்னறைக்கு சென்று விட்டார்.

சக்திவேல் தேன்மொழியை அழைத்துக் கொண்டு அவனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டான்.

பூங்கொடி என்ற கதிரேசனிடம் என்ன என்ன வேண்டும் உங்களுக்கு. உங்க அண்ணி எத்தனை பெரிய வார்த்தை சொல்லிட்டாங்க பாருங்க. நம்ம மருமகன் நமக்கு மகன் மாதிரி அவரோட என்னை ச்சே இனி எப்படிங்க என் மருமகன் கிட்ட என்னால பேச முடியும். உங்க அண்ணி மோசமானவங்கனு தெரியும் ஆனால் இவ்வளவு கீழ்த்தனமா பேசுற சாக்கடைன்னு இப்போ தான் புரிஞ்சது.

இதோ பாருங்க இனிமேல் என்னால் இந்த வீட்டில் உங்க அண்ணி கூட வாழ முடியாது. நாம தனியா போகனும் என்றார் பூங்கொடி. நானே இதை சொல்ல தான் உன்னை கூப்பிட்டேன் பூங்கொடி. இன்னைக்கு மருமகனோட சேர்த்து வச்சு பேசினவங்க நாளைக்கே என் அண்ணனையும் , அண்ணன் பசங்களையும் சேர்த்து வச்சு பேச மாட்டாங்கனு என்ன நிச்சயம். நம்ம துணிமணிகளை எடுத்து வை இனிமேல் நாம தோப்பு வீட்டிலே இருக்கலாம் என்றார் கதிரேசன்.

 

என்னங்க என்ற பூங்கொடியிடம் எனக்கு என் அண்ணன் ரொம்ப முக்கியம் தான் ஆனால் அதே நேரத்தில் என் பொண்டாட்டியோட மரியாதை ரொம்ப, ரொம்ப முக்கியம். அண்ணி ஒரு நிமிசத்தில் உன் கூட நான் வாழ்ந்த பத்தொன்பது வருச வாழ்க்கையை அசிங்கப் படுத்திட்டாங்க என்று கண்ணீர் விட்டார் கதிரேசன்.

என்னை மன்னிச்சுரு பூங்கொடி அண்ணி ஒவ்வொரு முறை உன் கூட சண்டை போட்டப்போ எல்லாம் பொறுமையா போ, விட்டுக் கொடுத்துப் போன்னு உன்கிட்ட எத்தனையோ முறை சண்டை போட்டிருக்கேன். ஆனால் அண்ணி அதை எல்லாம் அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு இவ்வளவு கேவலமா உன்னை பேசுவாங்கனு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கவில்லை என்னை மன்னிச்சுரு பூங்கொடி என்று மனைவியின் காலில் விழப் போனவரை தாங்கிப் பிடித்த பூங்கொடி என்னங்க தயவு செய்து அழாதிங்க என்று கணவரை அணைத்தார்.

இப்போ என்னங்க துணிமணியை தானே எடுத்து வைக்கனும். நான் எடுத்து வைக்கிறேன் கிளம்பலாம் நீங்க மாமாகிட்ட சொல்லிட்டு வாங்க என்றார் பூங்கொடி.

 

அண்ணா என்று வந்த கதிரேசனிடம் இந்தாப்பா தோப்பு வீட்டு சாவி என்றார் கணேசன். அண்ணா என்ற கதிரேசனிடம் இவளோட நாக்கு ஒரு விசப் பூச்சிக்கு சமம். இவளை நான் வேற அடிச்சுருக்கேன் அதுவும் பூங்கொடிக்கு ஏந்துகிட்டு. அதனால இந்த வெறி பிடிச்ச மிருகம் அடுத்து என்ன எல்லாம் பேசும்னு  எனக்கு நல்லாவே தெரியும் என் விதி இவளை கல்யாணம் பண்ணிகிட்ட பாவத்திற்கு அனுபவிக்கிறேன்.

நீயும், உன் பொண்டாட்டியும் இதற்கு மேல அசிங்கப் பட வேண்டாம். நீயும், பூங்கொடியும் தோப்பு வீட்டில் இருங்க என்றார் கணேசன். தன் அண்ணனை கட்டிக் கொண்ட கதிரேசன் அவரிடம் கூறி விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு தோப்பு வீட்டிற்கு சென்று விட்டார்.

 

அத்தை என்னை மன்னிச்சுருங்க என்ற வினோதாவிடம் நீ என்னம்மா தப்பு பண்ணின உன் அம்மா எப்படிப் பட்டவள்னு எனக்கு தெரியாதா விடு என்ற தெய்வானை மகனிடம் திரும்பி பிரபு அவளை எதுவும் சொல்லி காயப் படுத்திராதே என்றார்.

வினோதா அழுது கொண்டிருக்க நீ ஏன் அழற என்றான் பிரபு. என் அம்மாவால தானே எல்லாம் என்ற வினோதாவிடம் வினோ நீ புரிஞ்சு தான் பேசுறியா உன் அம்மாவை பற்றி என் அம்மாவுக்கு இல்லை என் மொத்த குடும்பத்திற்குமே நல்லா தெரியும். அவங்க குணம் தெரிஞ்சும் சித்தி அவங்க கிட்ட மல்லுக்கு போனது தப்பு அதோட விளைவு அம்மா தலையில் தையல் என்றவன் தம்பி அழறான் பாரு பசியாற்று என்றான்.

உனக்கு என் மேல கோபம் இல்லையா பிரபு என்ற வினோதாவிடம் நீ என்னடி தப்பு பண்ணின உன் மேல கோபத்தை காட்ட எனக்கு மட்டும் இல்லை அப்பா, சித்தப்பா, சித்தி, செல்வம் யாருக்குமே உன் மேல கோபம் கிடையாது. லூசு மாதிரி எதையும் யோசிக்காதே என்ற பிரபு அறையை விட்டு வெளியே சென்றான்.

 

அம்மா என்ற தேன்மொழியை கட்டிக் கொண்டு அழுதார் செல்வராணி. அந்த சிறுக்கி பண்ணிட்டு போன காரியத்தை பார்த்தியா தேனு என் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சுட்டு ஓடிப் போயிட்டாள் என்று கதறி அழுதார் செல்வராணி.

மாமா என்னை மன்னிச்சுருங்க என்ற சக்திவேலிடம் நீங்க என்ன பண்ணுனிங்க மருமகனே என்றார் சொக்கலிங்கம் . எல்லா தப்புக்கும் மூலக் காரணம் நான் தானே. நான் மட்டும் என் அம்மா பேச்சை கேட்டு நடக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை இன்னைக்கு சரவணனும், கனியும் ஓடிப் போயிருக்க மாட்டாங்களே என்று வருந்தினான் சக்திவேல்.

 

இதுவரை எப்படியோ மாமா நான் பெத்த என் மகன் கதிர்ரூபன் மேல சத்தியமா சொல்கிறேன். இனி உங்களுக்கு நான் மருமகன் இல்லை மூத்த மகன் என்று கண் கலங்கினான் சக்திவேல்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!