கழுத்தில் மென் ரோஜா இதழ்களை வைத்து யாரோ வருடுவது போல் இருக்க கண்ணை திறந்த இந்தர் தன் கண்முன் கண்ட காட்சியில் கொஞ்சம் திக்குமுக்காடி தான் போனான்..
விழி அவன் கழுத்து வளைவில் இதழ்களால் முத்த ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தாள்..
உடலில் மோக உணர்வுகளை அந்த இதழ் வருடல்கள் தட்டி எழுப்பி விட தன் கரங்களால் அவளை கட்டி இழுத்து முத்த கணைகளால் அவளை திணறடிக்க முயன்றவனுக்கு தன் கைகளை கொஞ்சமும் அசைக்கவே முடியவில்லை..
புரியாமல் நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்.. தன் துப்பட்டாவால் கைகளை கட்டிலோடு சேர்த்து கட்டி இருந்தாள் அவள்..
“ஹேய் விழி.. என்னடி பண்ணி இருக்க? இப்ப எதுக்குடி என் கையை இப்படி கட்டி போட்டு இருக்க? என்ன..? என்னை பழி வாங்குறயா?”
அவன் கேட்க அவன் இதழ்களை தன் சுட்டு விரலால் மூடியவள் “இந்த இந்தரோட காதல் இம்சை எனக்கு ரொம்ப பிடிக்கும் தான்.. ஆனா இப்போ வித்தியாசமா இந்த வில்விழி தன்னோட காதல் விளையாட்டை விளையாட போறா.. அமைதியா சமத்து பிள்ளையா அதை என்ஜாய் பண்ணுவியாம்.. ஓகேவாடா இந்தர் பையா..” அவள் கேட்கவும்
வில்விழியின் இந்த வித்தியாசமான காதல் லீலை உள்ளுக்குள் அவனுக்கு கிளுகிளுப்பையும் ஒரு விதமான குறுகுறுப்பையும் உண்டாக்கினாலும் அவள் அன்பு தளைக்குள் அடங்கி இருக்க முடியாமல் முரண்டு பிடித்தான் அவன்..
“ஏய்.. இங்க பாரு.. இதெல்லாம் சரி கிடையாது.. மரியாதையா என் கையை கழட்டி விடுடி.. என்கிட்டயே வராம இதுக்கு நீ தள்ளியே இரு.. அது பரவால்ல.. ஆனா இப்படி கொடுமை படுத்தாதடி என்னை..”
புலம்பினான் அவன்.. அவளோ இரக்கமற்றவளாய் மாறி இருந்தாள்..
தலையை இடவலமாய் ஆட்டியவள் “ம்ஹூம்..” விழிகளால் அவனை கிறக்கமாக பார்த்து அளந்து கொண்டே சொன்னவள்
“இன்னைக்கு இந்தர் கம்ப்ளீட்டா இந்த விழியோட கண்ட்ரோல்ல தான்.. ஒன்னும் பண்ண முடியாது.. ரொம்ப துள்ளாதடா.. அப்படியே படுத்திருடா இந்து..”
அவன் கன்னத்தை விரலால் வருடியபடி அவள் சொல்லிவிட அவனுக்கோ உள்ளே ஆண்மை வேர்கள் எல்லாம் தீப்பற்றி எரிய தொடங்கின..
இந்தர் தனக்குள் நிகழும் இளமை போராட்டத்தை சமாளித்தபடி அவளை மிரட்டி கொண்டே இருக்க அதெல்லாம் அவளுக்கு செவிகளில் விழவே இல்லை.. முழுவதுமாய் அவனை ஆளும் வேலையில் இறங்கி இருந்தாள் அவள்..
நெற்றியில் தொடங்கி மெல்ல அவன் கண்கள் நாசி கன்னம் என்று முத்த மழையால் அவனை நனைத்து அவனுள் மோகத்தீயை மூட்டி விட்டவள் மெல்ல மெல்ல அவன் இதழ்களை மொத்தமாய் தன் இதழ்களால் ஆக்கிரமித்துக் கொண்டாள்..
தன் இமைகளை மூடியவன் அவளின் காதல் சித்திரவதைகளை எதிர் வினைகள் எதுவும் காட்டாது உறுமல்களோடும் முனகல்களோடும் அனுபவித்து இருந்தான்..
“இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு இருக்குடி உனக்கு.. ஆறு மாசம் முடியட்டும்.. ஆனா இது கூட ஒரு மாதிரி நல்லா தான்டி இருக்கு வில்லி..” என்று கரகரக்கும் மோக குரலில் சொல்லிக் கொண்டிருந்த நேரம்
அவன் கழுத்து வளைவில் அவள் தன் இதழ்களால் கோலமிட தொடங்க அவனுக்குள்ளிருந்து ஒரு வித மோகமுனகலுடன் கூடிய உறுமல்..
தன் கை விரல்களின் துடிப்பையும் தாபத்தையும் தாளமுடியாமல் தனக்குள் நிகழும் இன்பவேதனையை அவன் வெளிப்படுத்த அதுவே வில்லிழியை இன்னும் கிறங்கடித்தது..
மேலும் மேலும் முன்னேறியவளுக்கோ ஒரு நிலையில் தாபம் முற்றி அவளுக்கும் அவனின் எதிர் வினை வேண்டியிருக்க அவன் கைகளை பிணைத்திருந்த கட்டிலிருந்து விடுவித்திருந்தாள் அவள்..
அடுத்த நொடி முழுதுமாய் வேறு வழியின்றி தன் காதல் தலைவனின் ஆளுமைக்குள் அடங்கி போனாள் அவனின் வில்லி..
கட்டிலில் அவளை அப்படியே பிரட்டிப் போட்டு அவள் மீது முழுதுமாய் அழுத்தமாய் படர்ந்திருந்தான் இந்தர்..
எப்போதும் கட்டவிழ்த்து விட்ட காளையாய் அவளை மோக விளையாட்டுக்களில் திணறடிப்பவன் இப்போது தாபம் கூடி தவித்து போயிருந்த அவன் ஆண்மையின் எழுச்சியில் சீறும் வேங்கையாய் மாறி இருந்தான்..
இவ்வளவு நாளாய் அவளை பிரிந்து இருந்த விரகம் மொத்தமாய் தீரும் மட்டும் அவளை மீண்டும் மீண்டும் முழுவதுமாய் களவாடி அவளில் இருந்த அத்தனை அழகு பொக்கிஷங்களையும் ஆசையையும் காதலையும் மோகத்தையும் முனகல்களையும் தனக்கே தனக்கான உடமையாக்கிக் கொண்டவன் அவளின் விரகதாபத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தான்..
எப்போது கட்டிலில் இருந்து இருவரும் தரைக்கு வந்தார்கள் என்று அவர்களுக்குத்தான் வெளிச்சம்.. உறங்கிக் கொண்டிருக்கும் மகள் விழித்து விடக்கூடாது என்று மோகத்தின் உச்ச நிலையிலும் தன் காதல் களத்தை நிலத்துக்கு மாற்றி இருந்தான் பாசமிகு தந்தை அவன்..
அவன் மார்பில் முகம் புதைத்த படி இரவு முழுவதும் அவனை அணைத்த படியே அவளை மறந்து உறைந்து போனாள் வில்விழி.. மூன்று வருடங்களாக அவனைப் பிரிந்திருந்த ஏக்கத்தையும் தாபத்தையும் தீர்த்துக் கொள்ள அந்த ஒரு இரவு அவளுக்கு போதவில்லை தான்..
அவளை தனக்குள் இறுக்கி கொண்டிருந்த இந்தரின் அணைப்பில் அழுத்தம் ஏகத்துக்கும் கூடி இருந்தது.. இனி அவளை எப்போதும் தன்னை விட்டு பிரிய விடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தது போல் தனக்குள் புதைத்து கொண்டான் அவளை..
இருவர் எண்ணங்களிலுமே மூன்று வருடங்களுக்கு முன்னால் அவர்களின் பிரிவுக்கு காரணமாய் இருந்த நிகழ்வுகளின் நினைவுதான்..
இந்தர் மேல் மாறா காதல் மனம் முழுதும் நிறைந்திருக்க பல கனவுகளோடு தான் எல்லா பெண்களையும் போல தன் புகுந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாள் வில்விழி..
மான்விழியோ உள்ளே நுழையும் போதே அங்கே வாசலில் இருந்த ஷ்யாம் கர்ணாவை பார்த்து பயந்து தான் போனாள்..
திருமணத்திற்கு முன் அவளும் ப்ருத்வியும் பலமுறை சந்தித்திருந்தார்கள் தான்.. அப்போது பிருத்வியின் வாய்மொழியாகவே அவனுக்கு குதிரை ஏற்றத்தின் மேல் இருந்த காதலைப் பற்றி தெரிந்து கொண்டவள் கொஞ்சம் அரண்டு தான் போனாள்..
ஆனால் அவள் தான் பிருத்வியிடம் மனதை முழுதாய் தொலைத்திருந்தாளே.. அவன் எப்படி இருந்தானோ அப்படியே அவனை ஏற்க துணிந்தாள் அவள்.. ப்ருத்வி மேல் அவள் வைத்திருந்த மாறா காதல் அவளுக்கு அந்த துணிவை தந்திருந்தது..
எப்படியாவது தன் பயத்தை தனக்குள் அழுத்திக்கொண்டு வாழ்ந்து விடலாம் என்ற தைரியத்தில் தன் பயத்தை பற்றி அப்போதைக்கு பிருத்வியிடம் கூட அவள் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை..
ஆனால் இன்று அந்த வீட்டில் ஷ்யாம் கர்ணாவை பார்த்தபோது அவளையும் மீறி அவளுக்குள் ஒரு நடுக்கம்..
அந்த விபத்து நடந்து முடிந்து முதல் இரண்டு வருடங்கள் நாளாக நாளாக அவளுக்குள் இருக்கும் இந்த பயம் சரியாகி விடும் என்று தான் நினைத்தார்கள் பரிமேலழகரும் வாசுகியும்..
ஆனால் இரண்டு மூன்று வருடங்கள் ஓடியும் அவளுக்குள் அந்த பயம் விடாது அதிகமாகி இருக்க அவளை மருத்துவ ஆலோசனைக்கு அனுப்பினார்கள்..
எங்கேயோ ஒரு மூலையில் குதிரையின் குளம்புகளின் சத்தம் கேட்டாலோ இல்லை அதன் பிம்பம் தெரிந்தாலோ அலறிக்கொண்டு அந்த இடத்தில் இருந்து ஓடுபவள்.. புத்தகத்தில் படமாய் குதிரை இருந்தால் கூட மிரண்டு விடுபவள்.. இப்போது குதிரையை பார்த்தால் அமைதியாக ஒதுங்கி செல்லும் அளவிற்கு அந்த ஆலோசனை அமர்வுகளால் முன்னேறி இருந்தாள்..
ஆனாலும் அவளுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது.. வீட்டுக்குள் நுழையும் போது பிருத்வியின் கையை இறுக்கமாக பிடித்தபடி மிரண்ட விழிகளோடு ஷ்யாம் கர்ணாவை பார்த்தபடியே வாயிலின் இன்னொரு பக்கத்தில் ஒட்டி ஒடுங்கி சென்றவளை புரியாமல் பார்த்தார்கள் மார்க்கண்டேயனும் சகுந்தலாவும்..
அவர்களிடம் விஷயத்தை தெரிவித்த போது “அது ஒன்னும் பிரச்சனை இல்ல.. இப்ப என்ன அவ வீட்டுக்குள்ள சமைச்சுக்கிட்டு குடும்பத்தை பார்த்துட்டு இருக்க போறா.. குதிரை கிட்ட அவளுக்கு என்ன வேலை..? அவ வேலை உண்டு அவ உண்டுன்னு வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும்.. வெளியே போனா தானே குதிரையை பாக்கணும்.. அதுக்கு அவ்வளவு அவசியம் இருக்காது.. அப்படியே எப்பயாவது பிருத்வி கூட்டிட்டு போனான்னா அவன் தான் கூட இருக்க போறானே.. அவன் சமாளிப்பான்..” என்றார் மார்க்கண்டேயன்..
பெண்ணிற்கு அந்த பயம் இருந்தால் ஒன்னும் பிரச்சனை இல்லை.. பிள்ளைகளுக்குத்தான் அப்படி எல்லாம் பயம் இருக்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் அவருக்கு..
இதைக் கேட்ட வில்விழி வழக்கம் போல பொங்கி எழுந்து ஏதோ சொல்லப்போக அவள் பின்னால் நின்றிருந்த வாசுகி “ஏய் மலரு.. எதுவும் சொல்லிடாத.. இன்னைக்கு தான் வீட்டுக்குள்ள வந்திருக்கே.. பேசாம இருக்கணும்.. எங்க கிட்ட பேசுற மாதிரி இங்கேயும் பேசாத..” என்றார்..
இந்தரும் அவளிடம் “ஆமாம் மலர்.. அப்பாவை யாருமே இந்த வீட்டில எதிர்த்து பேச மாட்டோம்.. நீயும் பேசாதடி..” என்றான் அவள் காதில் கிசுகிசுத்தபடி..
ஆனால் ப்ருத்வி பேசினான்..
“அப்பா என்னப்பா சொல்றீங்க? அவ சின்ன வயசுல அவ்வளவு சூப்பரா ஹார்ஸ் ரைட் பண்ணுவாளாம்.. இப்படி பயந்துகிட்டு அந்த ஸ்கில் எல்லாம் அப்படியே தொலைச்சுருக்கா.. அவளை எப்படியாவது பழையபடி மாத்தணும்னு நான் நெனச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்க என்னடான்னா அவ வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும்னு சொல்றீங்க..?”
“டேய் ப்ருத்வி.. அவளுக்கே அதுக்கு இஷ்டம் இல்லைன்றப்போ நீ எதுக்கு அவளை ஃபோர்ஸ் பண்ற? இந்த வீட்டு பழக்க வழக்கத்துக்கு பொண்ணுங்க ஹார்ஸ் ரைடரா இருக்கறதெல்லாம் ஒத்து வராது.. அவ எப்படி இருக்காளோ அப்படியே இருக்கட்டும்.. அதுதான் இந்த வீட்டுக்கு நல்லது.. நான் சொன்னது புரியுதில்லை.?”
மார்க்கண்டேயன் மிரட்டலாய் கேட்க அவ்வளவு தான்.. ப்ருத்வியும் முணுமுணுத்தபடியே அடங்கிப் போனான்.. அதற்கு மேல் அந்த வீட்டில் யாருமே அடுத்த வார்த்தை பேசமாட்டார்களே..
வில்விழிக்கோ முதல் நாளே ஆயாசமாய் இருந்தது..
“கடவுளே.. இந்த வீட்ல பேசுறதுக்கு கூட சுதந்திரம் இருக்காது போல இருக்கே.. ரொம்ப கஷ்டம் டி மலரு.. உன் வாயை எப்படி அடக்கி வைக்க போறே.. தப்பா ஏதாவது நடந்தா என்னால பேசாம இருக்கவே முடியாதே..”
மனதிற்குள் புலம்பியவளுக்கு மார்க்கண்டேயனோடு தன்னால் ஒத்துப்போக முடியுமா என்று சந்தேகமாகவே இருந்தது..
அதற்கேற்றார் போல் முதல் நாள் இரவு சாப்பாட்டு மேஜையில் தன் இயல்பான குணத்தை காட்டியதால் மார்க்கண்டேயனின் பிடித்தமின்மையை சம்பாதித்துக் கொண்டாள்.. அவருக்கு மான்விழி செல்ல மருமகளாகிப் போனாள்.. அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டாள்.. பயந்த சுபாவம் உடைய அவள் தான் அந்த வீட்டுக்கு ஏற்ற மருமகள் என்று முடிவே செய்து இருந்தார் மார்க்கண்டேயர்..
மார்க்கண்டேயரோடு முதல் நாளே வில்லிழிக்கு சிறு பிணக்கு ஏற்பட்டிருக்க அடுத்த நாளோ அவள் வாழ்க்கையின் ஒரே கனவு சிதறி போகும் நிலை ஏற்படவும் அரண்டு போனாள் அவள்..
திருமணமாகி வந்த அடுத்த நாள் இந்தரிடம் “இந்தர்.. நான் உங்களோட வீட்ல இருக்கிற அந்த ஆர்ச்சரி ரேஞ்சை பார்க்கணுமே.. கூட்டிட்டு போறீங்களா?”
அவன் தோளில் கைகளை மாலையாய் போட்டுக்கொண்டு அவள் கேட்க அவனோ “இப்படி சும்மா கேட்டால்லாம் கூட்டிட்டு போக முடியாது..” என்றான் புருவம் உயர்த்தி..
“ஓ.. அப்படியா? அப்ப எப்படி சார் கேக்கணும்?”
அவள் கேட்க “கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்து கேட்கலாம்.. இல்ல அதைவிட பெட்டர்.. நல்லா இறுக்கமா கட்டிக்கிட்டு அழுத்தமா என் லிப்ஸ்ல அப்படியே உன் லிப்ஸ் ஒட்டிக்கிற மாதிரி ஒரு கிஸ் கொடுத்து கேட்கலாம்.. இப்படி கேக்குறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு..”
அவன் கீழ் உதட்டை கடித்த படி அவளை ஒரு மார்க்கமாய் பார்த்த படி சொல்லிக் கொண்டிருக்க அவளோ அவனை மேல் கண்ணால் பார்த்தபடி அரை மயக்க விழியோடு
“ம்ம்.. கொடுத்து கேட்டா போச்சு..” என்றவள் தன் கால் விரல்களால் எக்கி அவன் கன்னத்தருகே தன் இதழை கொண்டு போக அவனோ அவள் இதழ் பதிவிற்காக ஆர்வமாய் கண்ணை மூடி காத்துக் கொண்டிருக்க
சட்டென அவன் கன்னத்தில் தன் பற்கள் பதிய அழுத்தமாய் கடித்து வைத்தவள் “நீ எனக்கு ஆர்ச்சரியை காட்டவே வேண்டாம்.. நான் அத்தைகிட்டே கேட்டு போய் பார்த்துக்கிறேன்..” என்று அவனில் இருந்து விலகப் போக
“அடிப்பாவி ராட்சசி.. என்னை கடிச்சுட்டு ஓடுற.. நீ கடிச்சதுக்கு உனக்கு ரிட்டன் கிஃப்ட் கொடுக்க வேண்டாம்? நில்லுடி..” என்று அவள் கையை பிடித்து இழுக்க
அவன் மார்போடு மோதி நின்றவளின் முகத்தைப் பற்றியவன் அவள் தனக்கு கன்னத்தில் கொடுத்த பரிசை அவளின் இதழ்களுக்கு இன்னும் அழுத்தமாய் கொடுத்திருந்தான்..
அவள் இதழ்கள் ரத்த சிவப்பாகி போக அவளோ “டேய் காட்டான்.. இப்படியாடா என் லிப்ஸை கடிச்சு வைப்பே..?” என்று தன் உதட்டை விரலால் பிடித்து இழுத்து காட்டி கேட்க
“இந்த அழகான மோகினி பிசாசு என்னை கன்னத்துல கடிச்சு வெறி ஏத்திச்சுல்ல..? அதுக்கு பதிலா இந்த காட்டான் இப்படித்தான் கடிச்சு வைப்பேன்..”
தன் அணைப்பிலிருந்து அவளை விலக விடாமல் இடைவளைத்து பிடித்திருந்தவன் “இருடி.. நானே மருந்து போட்டுவிடுறேன்..” என்று அவள் இதழ் நோக்கி குனிய
“ஒன்னும் வேணாம்.. முதல்ல ஆர்ச்சரி ரேஞ்சை காட்டுங்க.. அகடமில சேர்ந்த புதுசுல பிராக்டிஸ் பண்ணும்போது எவ்வளவோ தடவை கைல அடிபட்டு இருக்கு.. அது மாதிரி கல்யாணமான புதுசுல பட்ட இந்த அடியோட வலியை தாங்கிக்குறேன்..”
“சோ.. வலியோட கன்டினியூயசா ஆர்ச்சரி ப்ராக்டிஸ் பண்ணி எக்ஸ்பர்ட் ஆன மாதிரி மேடம் இதுலயும்..”
அவன் ஒரு மார்க்கமாய் குரலில் மோகம் இழையோட அவள் இதழ்களை விரலால் வருடியபடி கேட்க அவளோ “சீய்.. போடா பொறுக்கி..” என்று அவனில் இருந்து விலகி அறையை விட்டு வெளியே வந்தாள்..
அவள் பின்னாலேயே வந்தவன் “இருடி.. ஓடாதே.. வீட்ல ஒரு இன்டோர் ரேஞ்ச் அவுட்டோர் ரேஞ்ச் ரெண்டும் இருக்கு.. வா.. உனக்கு ரெண்டுத்தையும் காட்டுறேன்..” என்று அவள் கரம் பிடித்து முதலில் உள்ளரங்க வில்வித்தை களத்துக்கு அழைத்துப் போனான்..
அரங்கத்தைப் பார்த்தவள் அதன் கட்டமைப்பில் பிரமித்து போனாள்..
அங்கே இருந்த வில்களையும் அம்புகளையும் எடுத்து பார்த்தவள் “என்கிட்ட ரிகர்வ் பௌவ் மட்டும் தான் இருக்கு.. ஆனா நீங்க எல்லா பௌவ்வும் வச்சிருக்கீங்க.. சூப்பர்.. நான் இனிமே இது எல்லாத்தையும் ஷூட் பண்ண ப்ராக்டிஸ் பண்ண போறேன்..”
ஒரு அம்பை பார்த்த படி அவள் சொல்லிக் கொண்டிருக்க அந்த அம்பை அவள் கைகளில் இருந்து வாங்கியவன்
“இதை கேட்கணுமா பொண்டாட்டி.. நீ என் மலரு.. என்னை விட உனக்கு இந்த ஆர்ச்சரி ரேஞ்சுல நிறைய உரிமை இருக்கு டி.. தாராளமா நீ இங்க பிரக்டிஸ் பண்ணலாம்.. நானே உனக்கு சொல்லி தரேன்..” என்றான்..
“அய்யோ வேணாம்பா..” என்றாள் அவள்..
“ஏன்டி.. நான் நல்லா தான்டி சொல்லி தருவேன்.. வேணும்னா போய் வித்யாவை கேட்டுப்பாரு..”
“நீ நல்லா தான் சொல்லி தருவ.. எனக்கு தெரியும்.. ஆனா அது மத்தவங்களுக்கு.. எவ்வளவு வருஷம் ஆனாலும் உன்கிட்ட என்னால ஆர்ச்சரி கத்துக்க முடியாது..”
“அது ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மேடம்..?” விடை தெரிந்து கொண்டே வேண்டுமென்றே அவளை அவன் கேட்க
அவளோ “சார் கிட்ட ஆர்ச்சரி கத்துக்கிட்டா சார் எனக்கு ஆர்ச்சரியா சொல்லி தருவீங்க? வேற ஏதோ தானே சொல்லி கொடுப்பீங்க..?” என்று கேட்க
தன் கையில் இருந்த அம்பின் கூர்பகுதியால் அவள் கன்னத்தை மெல்ல வருடியவன் “அப்படி என்ன மேடம் நான் சொல்லிக் கொடுப்பேன்?” மோகம் பூத்த கண்களோடு அவன் கேட்க
அவளோ அவன் கண்களையே பதிலுக்கு பார்த்தபடி “ம்ம்ம்.. கண்ணால அம்பு விடுறது எப்படின்னு சொல்லிக் கொடுப்பீங்க.. அப்புறம் பார்வையாலேயே அம்பு விட்டு ஹார்ட்டுங்கற டாக்கெட்டோட கோல்டன் ரிங்ல ஷூட் பண்ணி அதை எப்படி அடையறதுன்னு சொல்லிக் கொடுப்பீங்க.. அப்பறம்..” சொல்லிக் கொண்டே போனவளை தடுத்து நிறுத்தினான் அவன்..
அவன் கேட்க அவளோ மையலுடனேயே அவனை பார்த்து “ஆர்ச்சரி கிளாஸ்னா எப்பவும் நான் ரெடி தான்..” என்றாள் குரலில் சற்றும் கிறக்கம் குறையாமல்..
அவனோ அவள் கையோடு கை சேர்த்து வில்லில் அம்பை வைத்து நாணை பூட்டி மெல்ல குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி அம்பை செலுத்தி இருந்தான்..
அடுத்த அம்பை நாணேற்றியவனின் இதழ்கள் அவள் கழுத்தில் ஊர்ந்த படி அடுத்த கணையை செலுத்தி இருக்க அது எங்கு சென்று விழுந்தது என்று பார்க்க கூட முடியவில்லை வில்விழியால்..
அவள் பூமியில் இருந்தால் தானே அம்பை பற்றி கவலைப்படுவதற்கு.. அவள் தான் இந்தரின் இதழ்களால் கட்டப்பட்ட ஒரு மாய லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாளே..
தன்னை மறந்து அவன் முத்தக்கணைகளில் அவள் மூழ்கிப் போய் இருக்க அவனோ அடுத்த அஸ்திரத்தோடு தயாராக இருந்தான்..
அவனுடைய கைகள் அவள் கைகளோடு பிணைந்து அந்த அஸ்திரத்தை ஏந்தியிருக்க அவன் இதழ்களோ அவள் இதழ்களோடு சேர்ந்து அவள் உள்ளே மோகம் என்னும் அஸ்திரத்தை மொத்தமாய் பாய்ச்சிக் கொண்டிருந்தது..
இதழ் முத்தம் முடியும் தருவாயில் கையில் இருந்த கணையை விடுதலை செய்தவன் அவள் கண்களையே பார்த்த படி தன் அணைப்புக்குள் அவளை இறுக்கியபடி நிற்க அவளோ சட்டென எய்த அம்புகள் அத்தனையும் எங்கே போய் விழுந்து இருக்கின்றன என்று பார்க்க அவன் புறமிருந்து திரும்பியவள் பிரமித்து போனாள்..
அத்தனை அம்புகளும் சரியாக இலக்கு பலகையின் நடுவில் இருந்த தங்க வளையத்தை சென்றடைந்திருந்தன..
வியப்பில் விழி விரித்தவள் “பலே ஆளுதான் நீ.. ஆர்ச்சரில தான் எக்ஸ்பர்ட்னு பார்த்தா லவ் ஆர்ச்சரிலயும் அந்த மன்மதனையே தோக்கடிச்சிடுவ போல இருக்கு.. ரெண்டுத்துலையுமே குறி தப்பாது போலயே..”
அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் காதல் பித்து முற்றி போனவன் அவள் இடை வளைத்து தன்னோடு நெருக்கியபடி “எப்பவுமே குறி தப்பாதுடி.. எங்க போய் எப்படி அடிக்கணுமோ சரியா அங்க போய் குறி தவறாம அடிச்சுடும்..” என்றான்..
“சரி சரி.. ஆர்ச்சரி ஃபீல்டை பெட்ரூம் ஆக்குனது போதும்.. எனக்கு உன் அவுட்டோர் ரேஞ்சை பாக்கணும்.. கூட்டிட்டு போ.. அங்க இந்த சேட்டை எல்லாம் பண்ண கூடாது.. சொல்லிட்டேன்.. கைய கால வச்சிட்டு சும்மா இருக்கணும்.. இது ஏதோ ஒரு க்ளோஸ்ட் ரூமுக்குள்ள இருக்கறதுனால ஓகே.. ஆனா அங்கல்லாம் இந்த மாதிரி எதுவும் பண்ணி மத்தவங்க முன்னாடி என்னை நெளிய வைக்காத..”
“ஏன்னே தெரியல மலரு.. நீ செய்யாத பண்ணாத கொடுக்காத வைக்காதன்னு சொல்றது எல்லாமே எனக்கு செய்யு.. பண்ணு.. கொடு.. வையின்னு சொல்ற மாதிரியே கேக்குது..”
அவன் புருவம் சுருக்கி சொல்ல “கேட்கும்.. கேட்கும்.. இந்த காதை திருகிவிட்டா எல்லாம் சரியா கேட்கும்..” என்று அவன் காதை இழுத்து திருகிவிட “அடிப்பாவி ராட்சசி.. காதை விடுடி..” என்று சொல்லி சிரித்தவன் “சரிவா.. அவுட்டோர் ரேஞ்சுக்கு போகலாம்..” என்று அவளை தோளணைத்து அழைத்துச் சென்றான்..
அங்கேயும் அவள் கையில் வில்லையும் அம்பையும் பிடிக்க வைத்து அவளுக்கு அதை செலுத்த கற்றுக் கொடுக்க எத்தனிக்க சரியாக மார்க்கண்டேயன் அந்த நேரம் அங்கே வந்தார்..
“டேய் இந்தர்.. மலர் இங்க என்னடா பண்றா? அவளுக்கு ஆர்ச்சரி ரேஞ்சுல என்ன வேலை..?”
மலரோ அவர் கேட்ட கேள்வி சரியாகத்தான் தன் காதில் விழுந்ததா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..