வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௪ (4)

4.9
(14)

அம்பு – ௪ (4)

வில்விழி சொன்னதை கேட்டு “ம்ம்.. இன்ட்ரஸ்டிங்.. உங்க அந்த கண்டிஷன்ஸை கொஞ்சம் எனக்கு புரியிற மாதிரி டீடெய்ல்டா சொல்றீங்களா மேடம்?”

அவள் அருகில் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து நெற்றியை விரலால் நீவிய படியே அவள் முகத்தில் ஆராய்ச்சியாக தன் பார்வையை மேய விட்டு இந்திர தனுஷ் கேட்க..

அவளோ தான் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து எழுந்து இருக்கையின் பின்னால் எதிர்ப்புறமாய் திரும்பி சாய்ந்து நின்றவள் கையை மார்பிற்கு குறுக்காய் கட்டிக்கொண்டு “ம்ம்.. சொல்றேன்..” என்றபடி அவனை திரும்பி கீழ்கண்ணால் தீர்க்கமாகப் பார்த்தாள்..

அவனுக்கு முன்னே இருந்த மேஜையில் அவன் விரல்கள் தாளமிட்டுக் கொண்டே இருக்க அவள் பதிலுக்காக காத்திருந்தவன் அவள் முகத்தையே கூர்ந்து பார்த்திருந்தான்..

அவளோ தொண்டை  செருமியபடி அவன் புறம் திரும்பி “ம்க்கும்.. என்னோட கண்டிஷன்சை கேட்க ரொம்ப ஆவலா இருக்கீங்க போல இருக்கு..” என்று சொல்ல

“நீயும் என் குழந்தையும் என்னோட இருப்பீங்கன்னா அது எப்படிப்பட்ட கண்டிஷனா இருந்தாலும் அதை செய்யறதுக்கு நான் ரெடியா தான் இருக்கேன்..”

“நான் சொல்லப் போற கண்டிஷன்ஸை ஃபாலோ பண்ணறது உங்களுக்கு அவ்வளவு ஈஸியா இருக்காது இந்தர்.. ரொம்ப கஷ்டமா இருக்கும்.. இன்ஃபேக்ட் உங்க பேசிக் கேரக்டரையே மாத்திக்கற மாதிரி இருக்கும்.. அது மட்டும் இல்லாம உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு இந்த கண்டிஷன்ஸை ஃபாலோ பண்றது எல்லாம் அவ்வளவு சுலபமா இருக்கும்ன்னு எனக்கு தோணல.. அதனால அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க..”

அவள் உறுதியான குரலில் சொல்ல

“அப்படி என்ன மேடம் கன்டிஷன்? நிலாவை வானத்தில இருந்து தூக்கிட்டு வா.. இல்லன்னா ஆறு கடல் ஏழுமலை தாண்டி இருக்கிற பூவை பறிச்சிட்டு வான்னா சொல்ல போறீங்க? நீங்க கண்டிஷனை சொல்லுங்க.. அதை எப்படி ஃபாலோ பண்றதுன்னு நான் பார்த்துக்கிறேன்..”

அவனும் அழுத்தமான பார்வையோடு சொல்ல அவளோ தன் மார்பின் குறுக்காய் கையை கட்டி மிடுக்காய் அமர்ந்தவள்

“ஓகே.. நீங்க இவ்ளோ கான்ஃபிடன்ட்டா இருக்கீங்கன்னா சரிதான்.. லெட் மீ புட் இட் ஸ்ட்ரெய்ட்”

“என்னோட முதல் கண்டிஷன் இப்ப நான் உங்களோட வர்றது ஒரு டெம்ப்ரரி அரேஞ்ச்மெண்ட் தான்.. வெறும் ஆறு மாசத்துக்கு தான் உங்களோட வந்து இருப்பேன்.. இந்த ஆறு மாசத்துல என்னோட கண்டிஷன்ஸை நீங்க கரெக்டா ஃபாலோ பண்ணுனீங்கன்னா… எனக்கு உங்க மேல நிஜமாவே ஒரு கான்ஃபிடன்ஸ் வந்தா.. நம்ப வாழ்க்கை இந்த ஆறு மாசம் தாண்டி கன்டினியூ ஆகும்.. இல்லேன்னா ஒருவேளை இந்த ஆறு மாசத்துக்கு பிறகும் எனக்கு உங்களோட வாழ பிடிக்கலைன்னா அடுத்த நாளே நம்ம ரெண்டு பேரும் ம்யூச்சுவல் கன்ஸென்ட்டோட டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிடுவோம்.. டிவோர்ஸ் அப்ளை பண்ணின அடுத்த நிமிஷம் உங்களை விட்டு என் குழந்தையையும் எடுத்துக்கிட்டு பிரிஞ்சி போயிடுவேன்..”

தலையை முன்னிருந்து பின்னாய் கோதியவன் ஒரு ஆழ்ந்த மூச்சோடு “ஹூ..ம்..  சேலஞ்ச்.. அதுவும் என்கிட்ட..? உன் விஷயத்தில மிஸ் ஆகும்னு நெனைக்கறியா?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க

“ம்ம்.. சேலஞ்ச் தான்.. நீங்க இதுல எவ்வளவு கான்ஃபிடன்ட்டா இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது.. நான் ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கேன்.. உங்களால இந்த சேலஞ்சை கம்ப்ளீட் பண்ணவே முடியாதுன்னு..”

அவள் வார்த்தையில் திமிரும் கர்வமும் உறுதியும் கலந்து இருக்க

“இருக்கலாம்.. அந்த கான்ஃபிடன்ஸ் என்னை விட்டுட்டு போறதுக்கு முன்னாடி நீ பார்த்த இந்த்ரதனுஷோட குவாலிட்டிஸை வெச்சு உனக்கு வந்து இருக்கலாம்.. ஆனா இப்ப இருக்குற இந்த்ர தனுஷ் வேற மாதிரி.. சரி நீ கன்டிஷன்ஸை சொல்லு..”

“என்னோட மத்த கண்டிஷன்ஸ் சொல்றதுக்கு முன்னாடி நான் இங்கே எதுக்கு வந்தனோ, அதை பத்தி ஃபர்ஸ்ட் பேசிடுறேன்” என்றவள் குரலை செருமி

“இந்த்ர தனுஷ் அகாடமியோட ஓனர்ஷிப்பை கம்ப்ளீட்டா சம்யுக்தா அகாடெமிக்கு மாத்திக்கிறதா டீல் பேசத்தான் நான் இங்க வந்தேன்.. இந்த பார்ட்னர்ஷிப்லாம் எங்களுக்கு ஒத்து வராதுன்னு சொல்லிட்டு இதுக்கு ஓகேனா ஆர்ச்சரி அகாடெமியோட கம்ப்ளீட் ஓனர்ஷிப் எங்களுக்கு மாத்தறதா இருந்தா டீல் பேசலாம்னு வந்தேன்..”

“ம்..ஹூம்.. மறுபடி மறுபடி வில்லின்னு நிரூபிக்கிறியேடி.. அதெப்படி முழுசா இந்த ஆர்ச்சரி அகாடமியை உங்க கிட்ட அப்படியே அல்வா மாதிரி தூக்கி குடுத்துடுவோம்னு நெனைச்சீங்க நீங்களும் உங்க சம்யுக்தா மேடமும்…”

“ம்ம்.. நீங்க பார்ட்னர்ஷிப்புக்காக சம்யுக்தா மேடமை அப்ரோச் பண்ணவுமே அகாடமியில ஏதோ பெரிய பிராப்ளம்ன்னு புரிஞ்சுது.. அதான் முழுசா ஓனர் ஷிப்ட் கேட்டு வாங்கலாமேன்னு நினைச்சோம்.. ஆஸ்திரேலியால இருக்கிற அகாடமியோட ரெண்டு சென்டரை நான் தான் இன்சார்ஜா இருந்து இதுவரைக்கும் பார்த்துக்கிட்டேன்.. இப்போ மேடமோட பொண்ணு படிப்பை முடிச்சுட்டாங்க.. சோ  அவங்க அங்க எல்லாத்தையும் பாத்துக்குறாங்க.. அதான் எனக்கே எனக்குன்னு இந்த அகாடமியை வாங்கி கொடுக்கணும்னு மேடம் நினைச்சாங்க.. எனக்கும் இந்த அகடமியை வாங்கி இதோட ஓனரா இருக்குறதுல ஏதோ பெருசா அச்சீவ் பண்ண மாதிரி ஒரு ஃபீலிங்.. அதான் இந்த ஆப்பர்ச்சூனிட்டிய மிஸ் பண்ணிட கூடாதுன்னு..”

அவள் அவனை ஆழமாய் விழி சுருக்கி  பார்த்தபடி சொல்லிக் கொண்டிருக்க அவள் செவிகளிலோ மூன்று வருடங்கள் முன்னே அவள் கேட்ட வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன..

“பொட்ட புள்ளைங்க வீட்டை பார்த்துட்டு குடும்பத்தை பார்த்துட்டு புருஷனுக்கு வேணுங்கறதை செஞ்சுகிட்டு வீட்டோட இருக்காம இது என்ன வெளியில போய் போட்டில கலந்துக்கிறேன் ஜெயிக்கறேன்னு பேசிக்கிட்டு.. அதுவும் இந்த மாதிரி நிலைமையில.. ம்ஹூம்.. இதெல்லாம் சரியா படல.. இந்திரா.. உன் பொண்டாட்டியை வீட்டோட அடக்கி வைக்கற வழியை பாரு.. ஏதோ நீ கெஞ்சி கேட்டுக்கிட்டியேன்னு தான் அந்த அகாடமில ஆர்ச்ரி கிளாசுக்கு இவ போறதுக்கு நான் பர்மிஷன் கொடுத்தேன்.. ஆனா அதுக்காக இந்த மாதிரி அவ இஷ்டத்துக்கு ஊர் ஊரா திரியறதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது.. சொல்லி வை..”

“இந்த வீட்டு பொம்பளைங்க இது வரைக்கும் வெளியில போய் வேலை செஞ்சதும் கிடையாது.. இந்த வீட்டு ஆம்பளைங்க இப்படி அவங்களை வேலைக்கு அனுப்பி அவங்க சம்பாதிக்கற பணத்துல வாழற அளவுக்கு எந்த விதத்திலயும் குறைஞ்சும் போயிடல..  வீட்ல மட்டும் இல்ல.. வேலை செய்யற இடத்துலயும் நாம தான்டா ராஜாவா இருக்கணும்.. பொம்பளைங்களுக்கு அடி பணிஞ்சு போனா அப்புறம் அவங்களுக்கு நம்ம கூஜா தூக்கிட்டு திரிய வேண்டியது தான்.. என் புள்ள எங்க இருந்தாலும் சிங்கமா இருக்கணும் டா.. சுண்டெலியா இருக்க கூடாது..”

இப்போதும் அந்த வார்த்தைகள் அவள் மனத்திரையில் ஓடும் போது அவள் கண்களில் அந்த வார்த்தைகளால் அவள் மனதில் ஏற்பட்ட வடுக்களின் வலியும் கோவமும் எரிதணலாய் பிரதிபலிக்க தான் செய்தது..

அவள் சொன்ன பதிலில் அவன் எண்ணங்களும் அந்த நாளை தான் அசை போட்டுக் கொண்டிருந்தன..

அழுத்தமாய் கண்களை மூடி திறந்தவன் “புரியுது.. சம்யுக்தா மேடமை விட இந்த ஆர்ச்சரியை வாங்குறதுல உனக்கு தான் இன்ட்ரஸ்ட் அதிகமா இருக்கு போல.. ஆனா இப்ப கூட இன்னொருத்தருக்கு இதுல பார்ட்னர்ஷிப் கொடுக்கலாம்னு நாங்க நெனச்சதுக்கு காரணம் நான் தான்..  ஏற்கனவே வேற ஒரு ஹ்யூஜ் லாஸ்னால ஒரு ஃபினான்ஷியல் க்ரைஸிஸ் இருந்தது.. இந்த நேரம் என்னால அகடமியோட ஆக்டிவிட்டீஸ்ல அதோட மெயின்டனன்ஸ்ல அட்மினிஸ்ட்ரேஷன்ல ஒழுங்கா ஃபோக்கஸ் பண்ண முடியல.. நீ போனதுல இருந்து உயிரே போயிடுச்சுடி.. குறை உயிராய் ஆயிட்டேன்.. போனவ என் உயிர் துடிப்பு என்னோட நாடி நரம்புல ஓடிக்கிட்டு இருந்த வேகம் என் நிதானம் எல்லாத்தையும் சேர்த்து இல்ல தூக்கிட்டு போயிட்ட..? ஒன்னும் இல்லாதவனா அப்படியே உயிரை உருவிவிட்ட மாதிரி இருந்தேன்.. ஒவ்வொரு நாளும் நீ இல்லாம கடக்கிறது எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையா இருந்துச்சுன்னு எனக்கு தான் தெரியும்.. என்னால எந்த வேலையிலயும் ஒழுங்கா ஃபோக்கஸ் பண்ண முடியல.. ஷார்ட்டா சொல்லணும்னா நீ போனதிலிருந்து நான் ஒரு நடைப்புணமா ஆயிட்டேன் டி.. நாளுக்கு நாள் அகாடெமியை ஒழுங்கா பாத்துக்க முடியாம அதுல ஸ்டுடென்ட் ஸ்ட்ரெந்த் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது.. இப்போ ஒரு பத்து பதினைஞ்சு பேர் தான் இருக்காங்க..  அகாடெமியை ஒரேடியா க்ளோஸ் பண்ணிடலாமான்னு கூட நெனைச்சேன்.. லக்ஷ்மன் தான் கொஞ்சமா மேனேஜ் பண்ணி ஓரளவுக்கு அகாடமி நடத்துறதுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கான்.. நான் ஃபுல்லா அவுட் ஆப் ஃபோகஸ்ல போயிட்டேன்.. அப்பதான் அகாடமியை இழுத்து மூடலாம்னு பேசிட்டு இருந்தப்போ லக்ஷ்மண் இந்த ஐடியாவை கொடுத்தான்.. இன்னொருத்தரோட பார்ட்னர்ஷிப் வச்சுக்கலாம்ன்னு யோசிச்சோம்.. அப்பதான் சம்யுக்தா மேடம் ஞாபகம் வந்தது..”

“எல்லாம் சரி தான்.. ஆனா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாதா? சம்யுக்தா மேடமோட ஆர்ச்சரி அகாடெமில ஃபுல்லா லேடிஸ் மட்டும்தான் இருக்காங்க.. அங்க ஆம்பளைங்களுக்கு வேலை கிடையாது.. அதனாலதான் உங்களோட பார்ட்னர்ஷிப் பண்றதுல அவங்களுக்கு கொஞ்சம் யோசனையா இருந்தது.. ஃபுல்லாவே வாங்கிட்டா மத்த சென்டர்ஸ் மாதிரி இதுவும் கம்ப்ளீட்டா எங்க மேனேஜ்மென்ட் கீழே வந்துரும்.. அதாவது ஒன்லி லேடிஸ் மேனேஜ்மென்ட்.. அதான் அப்படி யோசிச்சோம்..”

“சாரி.. அப்படி எந்த ஐடியாவும் எங்களுக்கு கிடையாது.. அப்படி முழுசா தான் கொடுக்கணும்னா அதுக்கு இழுத்த மூடிட்டு போயிருப்போம்… நாங்க ஆரம்பிச்சு வளர்த்த இந்த அகாடமியை கடைசி வரைக்கும் உயிர்ப்போட வச்சிருக்கணும்ன்றதுக்காக தான் இந்த பார்ட்னர்ஷிப் பத்தி யோசிச்சோம்..”

“ஓகே ஓகே.. ஒரு நிமிஷம்.. வெயிட் மிஸ்டர் இந்தர்.. இதுக்கு முன்னாடி இப்படி யோசிச்சோம்ன்னு தான் சொன்னேன்.. ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லைன்னு நெனைக்கிறேன்.. நீங்க என்னை உங்க லைஃப் பார்ட்னரா இருக்க சொல்றதுனால ம்ம்.. பார்ட்னர்ஷிப் வேணாம்னு தோணுது.. அதுக்கு பதிலா  உங்களோட வைஃப் எனக்கு இந்த அகடமியோட முழு பொறுப்பை.. தட் இஸ் இதோட கம்ப்ளீட் ஓனரஷிப்பை ட்ரான்ஸ்ஃபர் பண்ணணும்.. இதுதான் என்னோட முதல் கன்டிஷன்..”

அவனை நிமிர்வாய் புருவம் உயர்த்திப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தாள் பெண் அவள்..

அவன் புருவம் சுருக்கி அவளை உருத்து பார்த்து “புரியல.. யூ மீன் கம்ப்ளீட் ஓனர்ஷிப்..?” என்று விழி விரித்து கேட்க

“எஸ்.. கம்ப்ளீட் ஓனர்ஷிப்.. அகாடமி சம்பந்தப்பட்ட எல்லாத்திலயும் நான் தான் முடிவெடுப்பேன்.. யாரும் என்னோட டெசிஷன்ல தலையிடக்கூடாது.. யாரும்ன்னா யாரும்..” அழுத்தமாய் சொன்னாள் அந்த கடைசி இரண்டு வார்த்தைகளை..

“நீங்க.. உங்க அப்பா.. உங்க தம்பி.. யாருமே தலையிடக்கூடாது..”

“ம்ம்.. இன்னொரு முக்கியமான ஆளை விட்டுட்டியே… உங்க அக்கா மான்விழி அவ தலை இடலாமா..?”

“அதை விடுங்க.. அதை நான் பார்த்துக்கிறேன்.. அது என் இஷ்டம்.. இந்த கன்டிஷன்க்கு ஓகேன்னா சொல்லுங்க.. ஐ வில் மூவ் ஆன் டு த நெக்ஸ்ட் ஒன்”

அவள் தீர்க்கமாய் அவனைப் பார்த்துக் கொண்டே அவன் பதிலுக்கு காத்திருக்க அவன் யோசனையாய் அமர்ந்து கொண்டு அவளை கூர்ந்து பார்த்த படி தன் தாடியை விரல்களால் வருடி கொண்டிருந்தான்..

வேறு வழியின்றி ஒருவாறு அரை மனதாய் “ஓகே.. நான் எப்படியாவது அகாடமியோட ஃபுல் ஓனர்ஷிப்பை என் பேரில இருந்தும் அப்பா பேர்ல இருந்தும் மொத்தமா உன் பேருக்கு மாத்தறேன்..” என்றான்..

இந்த நிபந்தனையை எப்படி நடைமுறை படுத்துவது என்ற யோசனையுடனேயே அவன் இருக்க அவளோ அடுத்த இடியை கூலாக இறக்கினாள் அவன் தலையில்..

“ஓகே.. அப்ப என் ரெண்டாவது கன்டிஷனை சொல்லிடறேன்.. அகாடெமில மட்டும் இல்ல.. இந்த ஆறு மாசமும் வீட்டுலயும் ஐ வில் பீ த மாஸ்டர் ஆஃப் தி ஹவுஸ்.. அங்கயும் எவ்ரிதிங்க் வில் பீ ஆன் மை ஆர்டர்.. புரியலையா? அந்த வீட்டில குடும்ப தலைவர் இல்ல குடும்ப தலைவி தான் எல்லாத்தையும் பார்ப்பாங்க..” என்றாள் மிடுக்காய் ஒரு  புன்னகையோடு அவனை நேர் கொண்டு பார்த்தபடி..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!