“ஆமா குடும்பத் தலைவி தான்.. சொல்லப்போனா குடும்ப தலைவிகள்.. நான்.. உங்க அம்மா.. உங்க தம்பி பொண்டாட்டி.. அதாவது என் அக்கா.. அப்புறம் ஃபாரின்ல படிக்கிற உங்க தங்கச்சி.. நாங்க நாலு பொண்ணுங்க தான் அந்த வீட்டில என்ன நடக்கும் எப்ப நடக்கும் எப்படி நடக்கும்னு டிசைட் பண்ணுவோம்.. இத்தனை நாள் நீங்க.. உங்க தம்பி.. உங்க அப்பா.. மூணு பேரும் என்னல்லாம் பண்ணிட்டு இருந்தீங்களோ அது அத்தனையும் இனிமே நாங்க நாலு பேரும் சிறப்பா செய்வோம்.. அதே மாதிரி இத்தனை நாள் எங்களுக்கு இருந்த அத்தனை ரோல்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸிபிளிட்டீஸூம் அப்படியே உங்களுக்கு ட்ரான்ஸ்பர் ஆயிடும்..”
“என்ன சொல்ற? நீ டிசைட் பண்ணுவேன்னு சொன்னது நடக்க சான்ஸ் இருக்கு.. ஆனா நீ இப்ப சொல்றதுக்கு முதல்ல எங்க அம்மா ஒத்துக்கணும்.. அப்படியே எங்க அம்மா ஒத்துக்கிட்டாங்கன்னாலும் உங்க அக்கா அதான் என் தம்பி பொண்டாட்டி இப்ப நம்ம வீட்ல இல்ல.. உங்க அம்மா வீட்ல இருக்கா..”
“என்ன..? எங்க வீட்டிலயா? அப்ப சின்ட்டூ..?”
அவள் கேட்க “சின்ட்டூ அவ கூட தான் இருக்கான்.. ப்ரித்வியும் மானுவும் பிரிஞ்சு தான் இருக்காங்க..”
“என்ன ஆச்சு? ஏன் பிரிஞ்சு இருக்காங்க? நானாவது உங்க அப்பா சொல்றதை கேட்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்.. அப்பப்ப அவரை மீறி ஏதாவது பண்ணிட்டு அப்புறம் அவர் பேசுற பேச்சுல நொந்து போயிட்டு இருந்தேன்.. ஆனா மானு எப்பவுமே ரொம்ப அமைதியானவளாச்சே.. உங்க அம்மா மாதிரியே உங்க குடும்பத்துக்கு சிக்குன இன்னொரு அடிமை தானே அவ? உங்க வீட்டில உங்க அப்பா என்ன சொல்றாரோ அப்படியே ஃபாலோ பண்ணுவாளே.. அப்புறம் என்ன ப்ராப்ளம்..”
“உங்க அக்கா அங்க இருந்து போனதுக்கு காரணம் ஷ்யாம் கர்ணா..”
“ஓ மை காட் .. அவ ஒரு லூசு.. சரியான பயந்தாங்கொள்ளி.. அவளை நான் எப்படியாவது எங்க வீட்டுலருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்.. ஆனா இப்ப நான் சொன்ன கண்டிஷன்ல எந்த சேஞ்சும் இல்லை..”
“ஊர்மிளா நெக்ஸ்ட் மந்த் படிப்பு முடிச்சிட்டு வர போறா.. அப்பா அவ போகும்போதே அவ படிப்பை முடிச்சிட்டு வந்த உடனே அவளுக்கு கல்யாணம்னு சொல்லித்தான் அனுப்பி இருந்தாரு.. ஆக்சுவலா விஷ்வாவை தான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு அப்ப ப்ளான்.. ஆனா…”
“இதுக்கு உங்க தங்கச்சியை அப்படியே ஒரு பெரிய பாழுங்கெணறா பாத்து புடிச்சு தள்ளி விட்டுடுங்க.. அவ அப்படியே ஒரேடியா செத்துப்போயிடட்டும்.. அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவ தெனம் தெனம் சித்திரவதை அனுபவிக்கறதுக்கு நீங்களே உங்க கையாலே அவ கழுத்தை நெறிச்சு கொன்னு போட்டுருங்க..” கோபமாய் கத்தினாள் வேல்விழி..
“புரியுது.. ஆனா விஷ்வாவை பத்தி இப்பதான் நல்லா தெரிஞ்சு போச்சே.. அதான் இப்ப வேற மாப்பிள்ளை பார்த்துட்டாரு… எங்க ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி மாப்பிளை பார்த்து இருக்கிறார்.. அப்பாவோட ஃப்ரெண்ட் பையன் தான்.. அவங்க கார்மெண்ட் பேக்டரி வச்சிருக்காங்க.. உனக்கு கூட அந்த அங்கிளை தெரியும்.. சக்கரவர்த்தி அங்கிள்..”
அவன் முடிக்கும் முன்பே “ம்க்கும்.. சுத்தம்.. ஒரு ஜெயில்ல இருந்து இன்னொரு ஜெயிலுக்கு மாத்த போறீங்க.. அவ்வளவு தானே..?”
அவள் சலிப்பாக கேட்க “அது அப்பா முடிவு பண்ணது..”
“ஹலோ.. இவ்வளவு நேரமா நான் பேசிட்டு இருந்தது எதுவுமே உங்களுக்கு புரியலையா? உங்க அப்பா முடிவு பண்ணது எதுவுமே இனி அந்த வீட்ல நடக்காதுங்கறது தான் என்னோட கண்டிஷனே.. அதனால ஊர்மிளா இங்க வந்த அப்புறம் அவ யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறாளோ எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறாளோ அப்பதான் பண்ணிக்குவா.. அவ ஏதாவது வேலைக்கு போகணும்னு நினைச்சா போவா.. இதுல முடிவு சொல்றது.. முடிவெடுக்கறது அவளாதான் இருக்கணும்.. அப்படியே அட்வைஸ் பண்ணறதுன்னா நானு.. எங்க அக்கா.. உங்க அம்மா.. மூணு பேரும் பண்ணிக்கறோம்.. நீங்க உங்க அப்பா அப்புறம் உங்க தம்பி மூணு பேரும் நாங்க என்ன சொல்றோமோ அதை கேட்டு நடந்துக்கிட்டா போதும்.. ஓகேவா..?”
அவள் தீர்க்கமாய் சொல்ல அவளை ஆயாசமாய் பார்த்தான் அவன்.. வீட்டில் இதை சொன்னால் பெரிய ப்ரளயமே நடக்கும் என்று அவனுக்கு தெரியாதா என்ன..?
அவளுக்கோ இன்னும் கூட கோவம் அடங்கவில்லை..
“அந்தப் பொண்ணு எம் பி ஏ படிச்சிட்டு வர்றா.. அவளை ஒரு ரெண்டு வருஷம் கூட ஃப்ரீயா விட்டு வேலை பார்க்க விடாம அவளை கல்யாணம் பண்ணி கொடுத்து வீட்டோட அடைச்சு வைக்க பாக்குறீங்க.. உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?”
அவனை வெறுப்போடு பார்த்தபடி கேட்டாள் அவள்..
“ஹேய்.. ஊர்மி ஊருக்கு போறதுக்கு முன்னாடி நான் அப்பா கிட்ட என்ன பேசினேன்னு உனக்கு தெரியாதா? அவளுக்காக நானும் ப்ரித்வியும் எவ்ளோ பேசினோம்.. அவ படிச்சுட்டு வந்து வேலைக்கு போகட்டும்.. கல்யாணம் கொஞ்ச நாள் கழிச்சு அவ விருப்பத்தையும் கேட்டு பண்ணிக்கலாம்னு தானே நாங்க சொன்னோம்.. ஆனா அப்பா அக்செப்ட் பண்ணலையே.. என்ட் ஆஃப் த டே அவ அவரோட பொண்ணு.. அவரு முடிவு பண்ணிட்டாரு.. அதுக்கு மேல நாங்க என்ன பண்ண முடியும்? நான் அவர்கிட்ட சொல்லி தான் பார்க்க முடியும்.. அதுக்கு மேல அவர் முடிவை நான் எப்படி மாத்த முடியும்னு நினைக்கிறே..?”
“அவர் அவளுக்கு அப்பான்னா நீங்க அவளுக்கு அண்ணன்.. ஏன் அவளுக்காக நீங்க முடிவு எடுக்க கூடாதா? ஃபர்ஸ்ட் நீங்களும் உங்க அப்பாவும் எதுக்கு முடிவு எடுக்கணும்? அவ மேஜர் தானே..? அவ வாழ்க்கை எப்படி இருக்கணும்னு அவளுக்கு முடிவெடுக்க தெரியாதா? அப்ஸர்டா இருக்கு நீங்க பேசுறது.. இப்பவே சொல்லிடறேன்.. அவ கல்யாண முடிவை அவ தான் எடுப்பா.. அப்படி அவ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லும் போது அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலையை வேணும்னா உங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து செய்யட்டும்.. அதுவும் கூட அந்த மாப்பிள்ளையை அவளுக்கு பிடிச்சிருந்தா தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்.. ஒருவேளை அவ யாரையாவது லவ் பண்ணா அந்த பையனை பத்தி விசாரிக்கிற வேலையை நம்ம எல்லாருமே பண்ணலாம்..”
“சரி.. பார்த்துக்கலாம்.. இப்ப உன் கண்டிஷன் எல்லாம் முடிஞ்சுதா..?”
“இன்னும் இல்லையே..”
“இன்னும் என்னடி கண்டிஷன்?”
“என்ன அதுக்குள்ளே இவ்வளவு அலுத்துக்கறீங்க? இன்னும் ரெண்டு கண்டிஷன் இருக்கு.. ஒன்னு இனிமே வீட்ல வேலை எல்லாம் ஆம்பளைங்க செய்யணும்.. உங்களோட அகடமி ஃபேக்டரி இது எல்லாத்தையும் லேடிஸ் நாங்க பாத்துக்கறோம்.. எல்லா வீட்டு வேலையும் செஞ்சு நீங்க வெளியில போயிட்டு வரும்போது உங்களை எப்படி நாங்க ராஜா மாதிரி பாத்துக்கிட்டோமா அதே மாதிரி நாங்க வெளில போயிட்டு வரும்போது எங்கள நீங்க ராணி மாதிரி பாத்துக்கணும்.. வந்த உடனே பெரிய கப்ல காஃபி கொடுக்கணும்.. குளிச்சிட்டு வந்தா இல்ல மூஞ்சி கை கழுவிட்டு வந்தா கையில டவல் கொண்டு வந்து கொடுக்கணும்.. இந்த மாதிரி நாங்க என்ன எல்லாம் பண்ணிட்டு இருந்தோமோ அது அத்தனை வேலையும் நீங்க பண்ணனும் சமையல் உட்பட.. இன்னொரு முக்கியமான வேலை இருக்கு.. குழந்தைங்களை பாத்துக்குறது.. சின்ட்டூவையும் சக்தியையும் அவங்களோட அப்பாவான நீங்களும் உங்க தம்பியும் தான் பாத்துக்கணும்.. ஓகேவா..?”
அதைக் கேட்டு அப்படியே விழி விரித்து வாயை பிளந்து அமர்ந்திருந்தான் இந்தர்..
“அப்படியே அந்த கடைசி கன்ஷனையும் சொல்லிடு மா.. மொத்தமா ஷாக் ஆகிக்கறேன்..” என்றவனை இதழுக்குள் அடக்கிய சிரிப்போடு பார்த்தவள்
“ம்ம்.. லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்.. நான் உங்களுக்கு பொண்டாட்டியா வாழ தான் வரப் போறேன்.. ஆனா நமக்குள்ள அது எனக்கு விருப்பம் இருந்தா தான் நடக்கும்..”
அவனுக்கு புரிந்துவிட இதழுக்குள் சிரிப்பை அடக்கி “அதுவா? அதுன்னா எது?” என்று குறும்பு பார்வையோடு கேட்க
அவனை தீவிரமாய் முறைத்தவள் “ஆஹான்.. உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரியல இல்ல..? இதை நான் நம்பணும்..”
அவள் அவனை முறைத்துப் பார்த்து கேட்க “இருக்கிற கண்டிஷனுக்குள்ளே இதுதான் ரொம்ப கஷ்டமான கண்டிஷனா இருக்கும் போலயே.. உன்னை பாத்தாலே என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்க முடியாது .. சரி விடு.. இனிமே பர்மிஷன் கேட்டு தொடணுங்கற? அவ்வளவுதானே? அதெல்லாம் ஈசியா பெர்மிஷன் வாங்கிடுவோம் இல்ல?”
அவன் ஒற்றை கண்ணடித்து சொல்ல அவளோ புருவம் சுருக்கியவள் “நீங்க பர்மிஷனே கேட்க வேண்டாம்.. எனக்கு தோணும்போது நானே..”
“ஹலோ.. நானா உங்கள அப்ரோச் பண்ணும் போது தான் நமக்குள்ள எதுவா இருந்தாலும் நடக்கும்.. நீங்களா என்னை எப்பவும் தொடக்கூடாதுன்னு சொல்ல வந்தேன்.. சொல்ல வர்றதை முழுசா கேக்காம லூசு மாதிரி பேச வேண்டியது..”
அவள் உதட்டை சுழித்தபடி சொல்ல
“யாரு..? நானு..? லூசு மாதிரி பேசுறேனா..? நீ சொன்ன கன்டிஷனை வெளியில போய் சொல்லி பாரு.. யாரு லூசுன்னு தெளிவா சொல்லிடுவாங்க… மத்த கண்டிஷன் எல்லாம் கூட ஓகே.. அந்த கடைசியா ஒரு கண்டிஷன் சொன்ன பாரு.. வெளங்கும்.. நல்லா தெளிவா பேசுற டி நீ.. ராட்சசி”
அந்த கடைசி வார்த்தையை உதட்டுக்குள் முணுமுணுத்து கொண்டவன் உதட்டை பிதுக்கியபடி தலையை நாலா பக்கமும் ஆட்டி அலுப்பாய் சொல்ல “ஆமா எப்பவும் காய்ஞ்ச மாடு கம்புல பாய்ஞ்ச மாதிரி தானே பாய்வீங்க..? இப்ப கூட என்னை அறைஞ்சிட்டு அடுத்த நிமிஷம் கிஸ் பண்றீங்க.. இதெல்லாம் இனிமே நடக்காது.. என்னை அறையறது பத்தில்லாம் கனவுல கூட நெனைக்காதீங்க.. கிஸ் பண்றதுக்கும் நீங்களா என் பக்கமே வரக்கூடாது.. நானா உங்க பக்கம் வந்தா அப்படி வரணும்னு எனக்கு தோணுனா பாத்துக்கலாம்..” என்றவளை பாவமாய் பார்த்து வைத்தான் அவன்..
“இதெல்லாம் ரொம்ப அநியாயம் டி..” என்க அவளுக்கு உள்ளுக்குள் அவன் முக பாவனை பார்த்து சிரிப்பு தான் வந்தது..
வந்தது முதல் அவன் பேசிக் கொண்டிருந்த பாவம் என்ன? இப்போது அவன் கெஞ்சிக் கொண்டு இருக்கின்ற பாவனை என்ன? அவளுக்கு ஏனோ அப்போதே அவனை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல தான் இருந்தது.. அவ்வளவு க்யூட்டாக தெரிந்தான் அவள் கண்களுக்கு..
தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டவள் “இவன் கிட்ட இப்பவே சரண்டர் ஆயிடுவேன் போல இருக்கே.. கண்ட்ரோல் டி விழி.. கொஞ்சமாவது இவன் கிட்ட கெத்து மெயின்டைன் பண்ணனும்.. இல்லனா மொத்தமா நம்மளை சாய்ச்சிடுவான்.. ரவுடி..” என்று அவனை ஆழ்ந்து பார்த்தபடியே தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்..
“இப்ப சொல்லுங்க.. என் கண்டிஷனுக்கெல்லாம் ஓகேவா… ? ஓகேன்னா இப்பவே கெளமபலாம்..”
அவளை ஒரு பெருமூச்சோடு பார்த்தவன் “ம்ம்.. கெளம்பலாம்.. அம்மா அப்பாவை நான் கன்வின்ஸ் பண்றேன்.. ஆனா மான்விழியை..”
“அவளை நான் கூட்டிட்டு வர்றேன்.. நீங்க கவலைப்படாதீங்க..” என்றாள் இடையிட்டு..
“ப்ரித்விக்கும் ஊர்மிக்கும் இதுல எதுவும் ப்ராப்ளம் இருக்காது.. சரி வா போலாம்..” என்றவன் வெளியே வந்து தன்வியிடம் தன் குழந்தையை பெற்றுக்கொண்டு தன் வீட்டுக்கு பல யோசனைகளுடனேயே முதலில் ப்ரித்வியுடன் இது பற்றி பேசவேண்டும் என்று நினைத்தபடி வில்விழியுடன் கிளம்பினான்..