வேந்தன்… 11

5
(3)
வேந்தன்… 11
இப்போவெல்லாம் பெரிய அத்தியாயமா தரேன்ல 😍
வீட்டுக்குள் செல்லும்போதே “டாட், மாம்” இருகைகளையும் இறகைப் போல விரித்தவாறே தாய் தந்தையைத் தேடிச் சென்றான்.
“எப்பதான் மெச்சூர்டா நடந்துக்கப் போறான்?” சிபின் பதினைந்து வயது சிறுவன் போலவே கலாட்டா செய்யும் துருவ்வைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நிச்சயம் ஆதங்கம்தான் இருந்தது. தன்னோடு வந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாமே என அவன் அட்வைஸ் பண்ணாத நாளில்லை.
“மாம் டாட்” துருவ் குரல் எங்கெங்கும் எதிரொளிக்க அதற்கு பதில் தர யாரையும் காணோம்.
தான் வருகிறேன் என்று தெரிந்தால் அம்மா வாசலிலேயே காத்திருப்பார்களே, எங்கே போனாங்க, அவனுக்கு ஏமாற்றம் உண்டானது.
சின்னப் பிள்ளையைப் போல முகம் வாடியது அவனுக்கு, அம்மா என்னைத் தேடவே இல்லையா, பிடிவாதம் கலந்த கோபத்தில் கால்களை நிலத்தில் பதித்து நின்றவனுக்கு கோபம். அம்மா என்னை கண்டுக்கவே இல்லை என்பது போல, கண்டதையும் கற்பனை பண்ணினான். 
“அம்மா எங்க இருக்கீங்க?” அவன் இருக்குமிடம் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. 
“மாம் டாட்” துருவ் தேடும் குரல் கேட்டும் பதில் சொல்லாமல் இருந்தாள் அவன் தாய் மிரா.
மகனின் குரல் கேட்டும் பதில் சொல்லாமல் இருக்க காரணம் மிருதுளா அவள் வாயை பொத்தி இருந்ததுதான். “ம்ம்ம்” மகனுக்கு பதில் தர முடியாது மிரா தவித்து நின்றாள்.
“நல்லா தேடட்டும் அத்த” மிருதுளா குறும்பு சிரிப்புடன் சொல்ல.
“ஏய் விடுடி” மிருதுளாவிடம் இருந்து சிரமப்பட்டு தப்பித்த மிரா. “எல்லாம் உன்னால. வந்ததும் என்னைத்தான் தேடுவான். காணம்னதும் பிள்ளை தவிச்சுப் போவான்” மிருதுளா கன்னத்தை நிமிண்டி கண்டித்தவள் அங்கிருந்தே
“துருவ் இங்கே இருக்கேன்” சத்தமாக சொன்னாள்.
“அச்சோ அத்தை அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாமுன்னு பார்த்தா நீங்க கெடுத்துட்டீங்க” மிருதுளா செல்லமாக சலித்துக் கொண்டாள்.
மிராவின் குரல் சமையல் அறையிலிருந்து கேட்க ஒரே எட்டில் அங்கே வந்து விட்டான் துருவ்.
“மாம் லவ் யூ சோ மச், மிஸ் யூ. சோ மச்” தாயின் கன்னத்தில் முத்தமிட்டு குழந்தையாய் கொஞ்சினான்.
“துருவ் கண்ணா ட்ரிப் எப்படி இருந்துச்சு?” மிரா விசாரித்தாள்.
“சூப்பரா போச்சுமா. பென்டாஸ்டிக்” துருவ் சிலாகித்து சொன்னான்.
“ஆஹான் ஆனால் சார் பயந்து ஓடி வந்த மாதிரியே இருக்கே” மிருதுளா குரல் அவனுக்குப் பின் ஒலிக்க.
“நீ கண்டியாடி” என்றவன் தனக்கு முன் இருந்தவளை அவள் சுதாரிக்கும் முன்னர் கட்டியணைத்து கைகளில் தூக்கினான்.  
“அம்மே! அம்மே!. டேய் கலர் மண்டையா இறக்கி விடுடா” மீனாய் துள்ளி குதித்த மிருதுளா
“வொயிட் டாகி இறக்கி விடுடா என்னைய” கால்களை அடித்து துள்ளியவளை சோபாவில் தொப்பென தூக்கி வீசியனான் துருவ்.
பில்லோவ் போலவே எகிரி எழுந்தவள் “உன்னைய இன்னைக்கு விட்டேன்னா பாருடா. டேப்லெட் டப்பி”  அவனை அடிக்கப் பாய்ந்தவளை,
“வாடி வா” என அட்டகாசமான குறும்பு சிரிப்புடன் மீண்டும் தூக்கிக்கொள்ள இருகைகளையும் நீட்டினான் துருவ்.
“போடா டேய்” மிருதுளா அவன் கைக்கு சிக்காமல் வெளியே ஓடிவிட்டாள்.
தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடியவளை புன்னகையுடன் பார்த்தவன், “மாம். டாட் எங்கே?” சோபாவில் அமர்ந்த தாயின் மடியில் படுத்தவாரு கேட்டான்.
“அப்பா மீட்டிங் இருக்குன்னு போனாரு. இப்ப வர்ற நேரம்தான்” மகனிடம் சொன்னவளின் விழிகளும் வாயிலைத்தான் பார்த்தது. எப்போது வருவார் என்று.
சிபின் இப்பொழுது ஆர்யனின் பிஸ்னஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறான். அதனால் ஆர்யன் மொத்தமாக விலகாமல் கொஞ்சம் கொஞ்சமாய் விலகினான் மகனுக்கு சிரமம் தராமல். சிபினும் புத்தி கூர்மையுடன் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான்.
துருவ் விளையாட்டுப் பையனாகவே இன்னும் இருக்க, மிளிராவுக்கும் துருவ்வைக் கண்டிப்பதில் விருப்பமில்லாமல் போக, இப்போதைக்கு துருவ் வாழ்க்கையை அனுபவிக்கிறான்.
ஆரியன் வீட்டுக்குள் வருவது அவன் கார் ஹாரன் மூலம் தெரிந்தது. மனைவிக்கு நான் வந்துவிட்டேன் என்று சொல்வது போல ஸ்பெஷலாக ஹாரன் அழுத்துவான்.
அதுவரை தன்னிடம் பேசிக்கொண்டிருந்த தாயின் பேச்சு சுவிட்ச் போட்டாற் போல நின்றுவிடவும், துருவ் கண்டுகொண்டான். தந்தை வந்துவிட்டார் என்று.
“டாட்” துள்ளலாக கூறியவன் ஆரியன் தாங்கள் அமர்ந்திருந்த சோபாவில் அமர வரவும் கால்களை தூக்கி அமர வழிவிட்டு, அவனின் மடியில் போட்டுக்கொண்டான்.
“டாட் நம்ம மூணு பேரும் லாங் டிராவல் போகலாமா?” துருவ் ஆவலாகக் கேட்டான்.
“இப்பதான வந்த?” ஆர்யன் விசாரித்தாலும் எங்கே போகலாம் என்பது போல மகனைப் பார்த்தான்.
“இருந்தாலும் உங்ககூடவும் போகணும் டாட்” என்று சொன்னவன் “ஜில்லுன்னு மலைப்பிரதேசம் ஓகேவா டாட்”
“ஓகே தான்” ஆர்யன் மனைவியின் சம்மதத்தை அவள் விழிகள் பார்த்து சொல்ல.
அங்கே வந்த சிபின், துருவ்வை மடியில் படுக்க வைத்து, அவனது கேசத்தை வருடி விடும் தாயையும், பதங்களை மிருதுவாக பிடித்துவிடும் தந்தையையும் ஒரு பார்வை பார்த்தவன், ‘இவங்களோட’ தலையை உலுக்கி தன்னைக் கன்ட்ரோல் செய்தான்.
ஆர்யன் ஒரே ஒரு வார்த்தை துருவிடம் “கொஞ்சம் பொறுப்பா இருடா” என்று சொன்னால் அவனும் உடனே கேட்டுக் கொள்வான்.
ஏனெனில் தந்தையின் சொல்லில் அத்தனை மதிப்பு ஆனால் ஆரியன் அதைச் சொல்ல மாட்டான். எந்த வேலையாக இருந்தாலும் தானே விருப்பப்பட்டு அதை செய்தால்தான் முன்னேற முடியும் என்று நினைப்பவன் அவன்.
அத்தை மகன்கள் கபில் சரத் இருவரையும் அப்படித்தான் நடத்தினான். அதுவும் சரத் குறும்புக்காரன், துருவ்வும் அவனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருப்பர். இப்பொழுது அவர்களாகவே தந்தையின் தொழிலைக் கவனித்துக் கொள்கிறார்கள்.
துருவ்வும் அப்படித்தான் இப்போதைக்கு சந்தோசமாக இருக்க விடுங்கள் என்கிறான்.
“சிபின் சாப்பிடறியா?” மிளிரா மகனை அழைத்தாள்.
மொபைலில் கவனமாக இருந்தவன் நிமிர்ந்து அவர்களைப் பார்க்க, அவர்களின் அப்போதைய சந்தோசத்தைக் கெடுக்க விரும்பாமல், “ஒண்ணாவே சாப்பிடலாம்மா” என்றுவிட்டான்.
“மாம் எனக்கு ஊட்டி விடுங்க. நானே சாப்பிட்டு பசியே அடங்கலை” துருவ் உதட்டைப் பிதுக்கி சிறுபிள்ளை போலக் குற்றம் சாட்ட.
“அச்சோ என் தங்கம்” மிளிரா அவன் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினாள்.
“மாம்!” சிபினுக்கு பொறுக்கவே முடியவில்லை. அவனால் துருவ் போல ஒட்டி உறவாட முடியாது. ஆனால் தாய் தந்தையின் அன்பை முழுமையாக ஏற்றுக்கொள்வான். தாயின் கொஞ்சல்களை அனுபவிப்பான்.
தன்னால் முடியாததை இவன் செய்கிறானே என்பது போல, புகைச்சல் கிளம்பியது அவனுக்கு. “டேய் கிளம்பி ஆபீஸ் வாடா” சிபின் கடுப்புடன் முறைத்தான்.
“நோ வே ப்ரோ. இன்னும் பார்க்க வேண்டியது இருக்கே” பட்டென மறுத்துவிட்டான்.
“சிபின் இன்னைக்கு மீட்டிங்ல” என்று ஆர்யன் சிபினிடம் உரையாட ஆரம்பிக்க.
துருவ்வின் மூடிய விழிகளுக்குள் தான் வாங்கிய அடியின் மிச்சம் வந்து போனது. தங்கத் தட்டிலேயே செல்லமாக வளர்ந்தவனுக்கு இந்த அடி சாதாரணமான ஒன்று இல்லை. அடியே வாங்கியது இல்லை இதுவரை.
மூடிய இமைகளை மேலும் இறுக்க மூடியவன், தாடை இறுகியது. இருந்தாலும் பெண்ணாயிற்றே போனால் போகட்டுமென விட்டுவிடத் தயாராக இருந்தான் துருவ்.
தேவையில்லாமல் ஒரு பெண்ணை காயப்படுத்திட அவனுக்கு மனதில்லை.
சகோதரனையே பார்த்தவன், தந்தை அழைக்கவும் “டாட் சொல்லுங்க” நிமிர்ந்து அமர்ந்தான்.
“தூத்துக்குடியில் பிஸ்னஸ் ஆரம்பிக்கற ஐடியா உனக்கு இருக்கா? ஆத்மா அப்பா என்கிட்ட விசாரிச்சார்” ஆரியன் மகனிடம் கேட்டான்.
“என்ன டாட் பண்ணலாம்?” சிபின், இந்தப் பேச்சில் அதிர்ந்து பின் இயல்பான துருவ்வின் முகத்தை ஆராய்ந்தான்.
“போய் பாரு. பிடிச்சிருந்தா யோசிப்போம்”
“ஓகே டாட்” என்றவன் “மாம் நான் குளிச்சுட்டு டிரெஸ் மாத்திட்டு வரேன். சாப்பிடலாம்” சொல்லிவிட்டு தன் அறைக்கு செல்ல.
சிபின் சென்றதும் பட்டென கண்களை திறந்தவன் “ஸ் யப்பா போயிட்டான்” நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
அதைக் கண்ட மிராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஏனெனில் ஆரியன் ஒரு காலத்தில் இப்படித்தான் கறாராக இருப்பான். அவனது தலை தெரிந்தாலே வீடு அமைதியாகி விடும்.
மகன் பிறந்ததில் இருந்துதான் தன் பிடிவாதங்களை தளர்த்தியிருக்கிறான்.
பழைய நினைவுகளில் முகம் கனிய அமர்ந்திருந்த மனைவியை அணைத்துக் கொண்டான் ஆரியன்.
“துருவ் நீயும் போய் குளிச்சுட்டு வா. பசிக்குது எங்களுக்கும்” மகனை அனுப்பி வைத்தாள் மிரா.
இரண்டு மகன்களையும் அனுப்பி வைத்தவள், “துருவ் கன்னத்தில் தழும்பு இருக்கு பார்த்தீங்களா?” கலக்கமாய் கேட்டாள்.
“அதான் மிரா எனக்கும் புரியலை. அடிவாங்கும் அளவுக்கு இவன் தப்பு பண்ண மாட்டானே” ஆரியன் குழம்பினான்.
“அதான். எனக்கும் குழப்பமா இருக்குங்க. சிபின் கோபக்காரன் ஆனால் துருவ் பூச்சிக்கு கூட கெடுதல் பண்ண மாட்டானே” மிரா கண்கள் கலங்கிப் போனது.
“சரி விடு அவனே சொன்னா பாத்துக்கலாம்” ஆரியன் மனைவியை தேற்றினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!