அமைதியான மைதானம். அய்யோ அம்மான்னு கத்தினாலும் காப்பாத்த ஒரு ஈ காக்கா அங்கே வராது.
பங்குனி வெய்யில் வேறு சுள்ளுன்னு காய்ந்தது. தன் கண்ணுக்கு எதிர்க்க ரெண்டு பேர் வசமா சிக்கிடவும், “மவனே மாட்டுனியாடா?” என்று குதூகலமாக சுட்டெரிக்க ஆரம்பித்தது.
“டேய் ரவி, நாம எதுக்குடா இங்க தொங்கிக்கிட்டு இருக்கோம்” ஆத்மா தன் தலைக்கு கீழே கண்ணாடி பீஸ் ஒரு பிளாஸ்டிக் சீட்டில் கொட்டி வைக்கப்பட்டிருக்க கண்டு பீதியுடன் கேட்டான்.
“ஏண்டா கட்டிப்போடுறதுன்னு ஆச்சு. நல்ல கயிரா பார்த்து கட்டலாம்ல, பஞ்சத்துல அடிப்பட்டவன் இத்துப் போன கயிறுல கட்டிவச்சிருக்கான்” ஆத்மா இன்னைக்கு நான் காலி என்பது போல வியர்த்து வடிந்தான்.
ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டு வந்திருக்கவன் யாருன்னு வேற தெரியல. கண்டிப்பா இங்க இருக்கறது யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் கடலில் ப்ரைவேட் போட்டில் சுத்தும் பொழுதுதான் சிக்கியிருக்கிறார்கள். அதுவும் நல்ல குடி போதையில். இது மட்டும் பெத்தவங்களுக்கு தெரிந்தது இவர்கள் காலிதான். இதுல இந்த எருமை வேற காமெடின்னு எரிச்சலைக் கிளப்புது.
அப்போது அவர்கள் மீது ஒரு பந்து மோதி எறிந்தவனின் கைக்கே செல்ல. பந்து வந்த திசையை நோக்கியவர்களின் விழிகள் அதிர்ந்தது. ஆம் அவன் சிபின்தான்.
அதன் பிறகே சுற்றுமுற்றும் பார்க்க, இது சிபினின் விளையாட்டு மைதானம் என்பது புத்திக்கு உரைத்தது.
சிபினின் தனிப்பட்ட பிளே கிரவுண்ட் அது. அடிக்கடி அங்கே வருவான், அந்நேரத்திற்கு தோன்றுவதை விளையாடுவான்.
எதிலாவது முடிவுகள் எடுக்கத் தடுமாறினால் இங்கேதான் வந்து நிற்பான். யாருக்கும் அனுமதியில்லை இங்கே. ஆரியன் எப்போதாவது வருவான், மகனுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுவதற்கு. தவிர்த்து துருவி நண்பர்கள் இருவருடன் வருவான் விளையாடுவதற்கு.
“நண்பா நீயாடா” ஆத்மா நம்ப முடியாது தனக்கு நேர் நிற்பவனை பார்த்தான்.
“சிபின் எங்க மேலயே கை வச்சிட்டடா. இதுக்கு நீ” ரவிக் பேச முடியாமல் கொந்தளிக்க.
சிபினின் இன்னொரு பக்கத்தை இவர்கள் மட்டுமே அறிவார்கள். சிபினுக்கு எடுபுடி வேலை செய்பவர்கள் சாட்சாத் இவர்களே. ஆனால் துருவ்க்கு நெருங்கிய நண்பர்கள்.
“எதுக்கு மச்சி இந்த கொலைவெறி?” ரவிக் பணிவாக கேட்டான்.
“துருவ் கன்னத்தில் என்ன காயம். யாரு அவனை அடிச்சா?” சிபின் அழுத்தமாய் கேட்க.
ரவிக் உளரும் முன்னர் ஆத்மா முந்திக்கொண்டான் “யாரும் இல்லைடா. அவன் கன்னத்தில் இடிச்சுகிட்டான்” என்று சொன்னவனுக்கு அந்தப் பெண்ணை காட்டிக்கொடுக்க மனதில்லை. பாவம் அப்பாவிப் பெண்ணாக தெரிகிறாள். அவளை காட்டிக்கொடுத்து தப்பு செய்யக்கூடாதென விஷயத்தை மறைத்தான்.
ஆனால் ரவிக்கோ சிபின் மீது உள்ள அபிமானத்தில் உண்மையை போட்டுடைத்தது மட்டுமில்லாமல் நளிரா இருக்கும் வீடியோவையும் காட்டினான்.
நான் விசாரிச்சேன்னு துருவ் காதுக்கு போகக்கூடாது புரியுதா… என்ற கேள்வியோடு அவர்களை விடுவித்தான் சிபின்.