வேந்தன்… 26

4.4
(7)

வேந்தன்… 26

 

பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அந்தக் காரின் சொகுசும் ஆடம்பரமும் வியப்பைக் கொடுத்தாலும், அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவே இல்லை.

 

அவனது கம்பீரமான தோற்றமும், திமிர் பார்வையும், சிரிப்பை தராத இறுகிய உதடுகளும், தனக்கு மதிப்பை தருமென மற்றவர் நம்பும், எந்த அணிகலனும் அணிய விரும்பாத அலட்சியதிமிர் அவன் நிமிர்வான தோற்றத்திலேயே தெரிந்தது.

 

அவனையே ஒரு செக்கன் ஊன்றி கவனித்தவளுக்கு, தன்னிடம் அத்துமீறுபவன் நிச்சயம் தங்களைப் போல சாமான்யன் இல்லையெனப் புரிய, ஒருவித நடுக்கம் உள்ளூற எழுந்தது.

 

தன்னையே நோக்கிடும் அவள் விழிகளோடு தன் விழிகளை கோர்த்தவன் என்னவென ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டிட, சட்டென விழி தாழ்த்தியவளுக்கு, இவன் அழைத்ததும் வந்துவிட்டோமே என்று அவமானமாகவும் இருந்தது.

 

அவனை பார்க்கவே கூடாதென வெளியே பார்வையை செலுத்திட. oபிடிக்காத ஒரு பயணத்தில் ரசிப்பதற்கு மனம் வருமா.

வெளிப்புற காட்சிகளில் வெறுமனே விழிகளைப் பதித்திருந்தவளுக்கு, யாரென்றே தெரியாத ஒருவனோடு, கட்டாயத்தின் பெயரில் பயணம் செய்ய நேரிட்டது உறுத்தலையே கொடுத்தது. அவன் யார், பெயரென்ன, ஊரென்ன எதுவுமே தெரியாது. எதற்காக இப்படிப் படுத்தி எடுக்கிறான் மண்டை காய்ந்தது.

 

என்கூட நீ வந்தே ஆகணும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியவனை முறைத்துப் பார்க்கக் கூட பயமாக இருந்தது அவளுக்கு.

 

அவன் போனில் யாருடனோ பேசுவதும், கழுகுவிழிப் பார்வை தன்னையே ஆழ்ந்து விழுங்குவதும் நச்சென உரைக்கவே, பயப்பந்து அடிவயிற்றில் உருள, மிரண்டு போனாள் மான் விழியாள். கார் நிற்பது கூடத் தெரியாது, முகத்தை இருகரங்களாலும் முகம் பொத்தி யோசித்தவளுக்கு,

 

ஆணின் முரட்டு அணைப்பும் அவனது மூச்சுக்காற்றும் இன்னும் தேகத்தை விட்டுப் போகாமலிருக்க, ஆணின் நெருக்கத்தை புதிதாய் உணர்ந்தவளுக்கு, அவனது வலிய அணுகுமுறை மிரட்சியைக் கொடுத்தது.

 

இத்தனைக்கும் அவன் அடிக்கவில்லை, இதை செய்வேன் என்று மிரட்டவோ பிளாக் மெயில் பண்ணவோ இல்லை. ஆனால்?…

 

இவனிடம் தன்னைப் பற்றி எப்படியாவது எடுத்துச் சொல்லனும். இவன்கிட்டே இருந்து தன்னை விடுவிக்கனும் என்பதை மனதுக்குள் உருப்போட்டாள்.

 

அவன் காரை விட்டிறங்கவும்தான் சுயம் வந்தவள் தானும் இறங்கி அவனை பார்த்திட, அவனோ அவள் இறங்கி தன் அருகில் வருவாள் என்று நம்பிக்கை கொண்டு கடலைத்தான் பார்த்திருந்தான்.

 

ஆனால் அவளோ அங்கிருந்து விலகி நடந்தவள் அங்கே நின்றிருந்த ஆட்டோவில் ஏறிவிட்டாள்.

 

“அண்ணா சீக்கிரம் போகணும்” சொன்னவள் ஆட்டோ கிளம்பவும், திரும்பி அவன் நிற்குமிடம் பார்க்க,

 

நின்ற இடத்திலிருந்தே அவள் செல்வதை அவன் பார்த்திருக்க. நெஞ்சில் கத்தி ஊடுருவுவது போல அச்சத்தை கொடுத்தது அவனது தோற்றம். அவனது தீ விழிப்பார்வையில் அஞ்சி மிரண்டவள், முன்புறம் திரும்பிவிட்டாள்.

 

“எவ்வளவு தைரியம்?” வார்த்தைகளை கடித்து துப்பியவன் காரில் ஏறிக் கிளம்பினான். ஆட்டோ சென்ற திசையில் கார் சீறிப் பாய்ந்தது.

அவளிடம் தன் மனதைக் கூறிடத்தான் இன்று வந்திருந்தான். ஆனால் அவளோ ஒருமுறைக்கு இருமுறை தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிடவும், கோபக்காரனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது.

 

“எங்கேம்மா போகணும்?” டிரைவர் கேள்வியில் நளிரா முழித்தாள்.

 

‘இப்போ எங்கே போறது? வீட்டுக்குப் போனால் அக்கா வீட்டுலே இருந்து வந்திருப்பாங்க. இவன் அங்கே வரமாட்டான்னு சொல்றதுக்கும் இல்லையே. இதோ இப்போதானே அதை நேரில் கண்டிருக்கிறாள். வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டானே.

 

யாராவது வந்திருந்தால்? நினைக்கவே பதரியது. எப்போ இவன் கண்ணில் பட்டமோ அப்போ இருந்தே தான் பயந்து பயந்து சாவது புரிய. இதற்கு ஒரு முடிவு வராதா? ஆயாசமாய் இருந்தது அவளுக்கு.

 

“என்னம்மா எங்க போகணும்னு கேட்டா ஒழுங்கா பதில் சொல்லாம, ஆட்டோல ஏறிட்டு தூங்கறீங்களா?” டிரைவர் அதட்டிக் கேட்டிட.

 

“அண்ணா போங்க சொல்றேன்” சொன்னவள் தன்னுடைய போனை எடுக்கப் போக. அதுசமயம்தான் தன் கையில் எதுவுமே எடுத்துக்கிட்டு வரவில்லை என்பது உரைத்தது. ஆட்டோவுக்கு தரக்கூட பணமில்லையே. தலையில் கைவைச்சு அமர்ந்தவளுக்கு இப்போ வீட்டுக்கு போவதை தவிர்த்து வேறு வழி இல்லையென்றே தோன்றியது.

 

அதை சொல்வதற்காக தலைநிமிர, எதிரே நேருக்கு நேராக வந்து நின்றது சிபினின் கார்.

 

ஆட்டோ டிரைவர் மட்டும் பிரேக் போடாவிட்டிருந்தால் இந்நேரம் பரலோகத்திற்கு ஒரு டூர் போய் வந்திருக்கலாம்.

 

டிரைவருக்கு பேச்சே வரவில்லை, தண்ணி பாட்டிலை எடுத்தவர் தண்ணியை வாய்க்குள் அப்படியே ஊற்றிட,

 

பாவையவளோ இதயமே வெடித்துப் போகுமளவு அச்சத்தில் உறைந்து போனாள்.

 

காரிலிருந்து இறங்கியவன் ஆட்டோவின் அருகே வர, தன்னை நிமிர்ந்தும் பாராது மழைக் கோழியாய் நடுங்கி ஆட்டோவின் கம்பியை இறுகப் பற்றி அமர்ந்திருந்தவள் அருகே குனிந்தான்.

 

“சீன் கிரியேட் பண்ணாம என்கூட வருவேன்னு நம்பறேன்” அடக்கப்பட்ட குரலில் அத்தனை சீற்றம். அதுவே அச்சத்தில் உறைய வைத்திட, அழுகையில் உதடு பிதுங்கியது அவளுக்கு.

 

“ஹேய்! மூச். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணேன்னு வை. நேத்து பீச்சில நடந்ததை இப்ப நடத்திக் காட்டுவேன். என்னடி இவனுக்கு ப்ரீ சோவ் காட்டிடலாமா?”

 

“அய்யோ!” நளிரா விழிகள் தெறிக்க அவனை வெறித்தாள்.

 

“லுக்! யார் பார்த்தாலும் ஐ டோன்ட் கேர். பட் யூ?… வர்றியா இல்ல தூக்கிட்டு போகட்டுமா?” அவன் அவள் காதோரம் அழுத்தமான சொல்லில் உரைத்திட.

 

“நோ” மறுத்தவளுக்கு அவன் அருகாமையில் அழுகை வர, கண்கள் கலங்கிப் போனது.

 

“தூக்கிட்டு போக நான் ரெடி. பட் நமக்குள் நடக்கறது ஊருக்கே தெரியும்” அவளுக்கு யோசிக்கவே நேரம் தராமல் அவன் பேசிட.

 

“ஏம்மா இவரு உங்களுக்கு தெரிஞ்சவரா?” டிரைவர் அக்கறையில் கேட்க.

 

இல்லைன்னு சொல்லி ஹெல்ப் கேட்கலாமா? நப்பாசையில் விழிகள் மின்னிட அவள் தலைநிமிர,

 

“ம் சார் கேட்கறார் பாரு பதில் சொல்லு. வீட்டுல விட்டுருவார். அண்ட் நானும் அங்கயே வரேன்” என்று வில்லத்தனமாய் அவளைப் பார்த்து சிரித்துச் சொல்லிவிட்டு அவன் தன் காரை நோக்கிச் செல்ல.

 

அவன் சொல்லிவிட்டுப் போன விஷயம் புரியாத அளவுக்கு இவள் ஒன்றும் முட்டாள் இல்லையே. நீ முன்னாடி போ. நான் பின்னாடி வாரேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றது நன்றாகவே புரிந்து போனது.

 

ஆட்டோவில் இருந்து இறங்கியவள் அவன் காரை நோக்கி நடந்தாள், வேறு வழியே இல்லை அவளுக்கு.

 

கார் செல்லும் வேகத்தில் எகிறி வெளியே விழுந்து விடுவோமோ என்று தோன்றவே, அவன் அருகில் அமர்ந்திருந்தவள், கண்களை இறுக மூடி கடவுளை துணைக்கு அழைத்தாள்.

 

அவன் கோபத்தின் அளவும் புரிய, எதற்கென்று தெரியாமையே ஜன்னலோரம் ஒடுங்கி அமர்ந்திருந்தாள்.

 

கார் அந்த பண்ணை வீட்டினுள் நுழைய, நிறுத்தியவன், அவள் புறம் வந்து கதவை திறந்தவன் அவளை கைகளில் தூக்கிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!