கார் பண்ணை வீட்டினுள் சென்று நிற்க, வீட்டின் வெளியே அரவமில்லாமல் ஒரு பைக்கும்,
அந்த எச்சரிக்கை டேஸ் எல்லாம் எனக்கு அவசியமே இல்லையென்பது போல ஒரு ஸ்கூட்டி கேட்டின் அருகே வந்து நின்றது. அதற்கு மேல் உள்ளே வரமுடியாது கேட் இழுத்து சாத்தப்பட்டது காவலரால்.
வீட்டின் உரிமையாளன் சொல்வதைக் கேட்பது மட்டும்தானே அவன் வேலை, அதை சரியாகவே செய்தான்.
நிழல் போல தன் பின்னே அலைபவனை ஏற்கனவே தெரியும். ஆத்மாதான் இவனை நியமித்திருப்பான் என்பதும் தெரியும் இவனுக்கு. சரிதான் தனக்கு பாடிகார்டாக சுத்தட்டுமே என்று அலட்சியமாக விட்டுவிட்டான்.
ஆனால் நளிரா ஏறியதில் இருந்து ஒரு பெண்ணும் தங்கள் வாகனத்தையே தொடர்ந்து வரவும் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான். இவங்களை என்ன பண்ணலாம்? விரல்களால் தாளம் தட்டியவாறே சற்று யோசித்தான். சரி வரட்டும் இன்னைக்கு மொத்தமா முடிச்சுப்போம் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
இந்த மீன் வாசத்துல இன்னும் எவ்ளோ நாள் சுத்துறது? கடுப்பாய் நினைக்கவும் மீன் வாசம் இன்னும் நாசியில் மிச்சமிருப்பது போல உடல் சிலிர்த்தான். நேற்று படாதபாடுபட்டுப் போனான். வேறு வழி, இங்கே வாழும் நளிர்பெண்ணைத்தானே அவனுக்குப் பிடிச்சிருக்கு, அந்த நினைப்பில் அவனுடைய அழுத்தமான உதடுகளில் சிறு புன்னகை உதயமானது.
காரை நிறுத்தியும் அவள் இறங்காது போகவே, சுற்றி அவள் பக்கம் வந்தான். காரின் கதவைத் திறந்தவன் “என்ன ஹனி அத்தான் வந்தாதான் இறங்குவியோ?” கண்சிமிட்டி சிரித்தவனைத் தவிப்பாகப் பார்த்தவளுக்கு மனதிற்குப் பிடிக்காத இந்தப் பயணம் குற்ற உணர்வையே தந்தது.
பெற்றவர்களுக்குத் தெரியாமல் ஒரு ஆடனுடன் ஊர் சுத்திட்டு இருக்கிறோமோ, தப்பு செய்யும் வலி நெஞ்சுக்குள் ஊடுருவியது. ஆனாலும் இப்படி தன்னை வர வைப்பவனை ஏதாவது சொல்லி நிறுத்தியாகணுமே. இப்படியே இந்த சந்திப்பை தொடரவும் முடியாதே.
“என்ன ஹனி. காரிலேயே குடும்பம் நடத்திடலாமா? அதுக்கு இந்தக் கார் சரிவராதே. நெக்ஸ்ட் டைம் கார் மாத்திடலாம்” அவன் பேச்சில் முகம் அருவெறுப்பில் சுளிய, கூசிப்போனாள். தப்பான ஒருவனை நம்பி ஆளில்லா இடந்துக்கு வந்துவிட்டோமோ பாவையின் மனம் மருள, ஒரு முடிவோடு அவனை நோக்கினாள்.
“எனக்கு உங்ககிட்ட பேசணும்” நான்கு யோசித்து அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள் காருக்குள் அமர்ந்தபடியே, அவளால் அவனை சமாளிக்கவே முடியாமல் போனது.
வாய் திறந்து பேசவே விடாமல் அழுத்தக்காரனாய் இப்படியும் ஒருவன் இருப்பானா? அவனை நினைக்கவே கண்களைக் கட்டியது.
“பேசலாம் ஹனி. அதுக்குத்தானே இங்கே வந்திருக்கோம். வா வா” என்று சொன்னவன் அவளை எப்போதும் போல கைகளில் தூக்கிக் கொள்ள முயல.
“எனக்கு கால் இருக்கு. நடந்து வரேன்” இரு கைகளையும் நீட்டி கால்களைத் தொட்டுக் காட்டினாள்.
“வெல். எனக்கு கைகள் வலுவாய் இருக்கே. அப்போ தூக்கிக்கறேன்” நமட்டு சிரிப்புடன் அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு நடந்தான் சிபின்.
தோழியை துள்ளத் துள்ள அவன் தூக்கிக்கிட்டு போவதை பார்த்த சுபிக்கு இதற்கு மேலும் இந்த விஷயத்தை மறைப்பதற்கு எண்ணமில்லை. அதனால் நளிராவின் பெற்றோர்களுக்கு அழைத்துவிட்டாள்.
மண்டபத்தின் ஏற்பாடுகளை சம்மந்தியோடு சேர்ந்து கவனித்துக்கொண்டு இருந்த ராஜன் சுபி போன் செய்யவும் எடுத்துப் பேசினார்.
“சொல்லுப்பா நளிரா அங்கதான இருக்கா?” எடுத்தவுடனே கேட்டார்.
“அங்கிள்” ஆரம்பித்த சுபி எல்லாவற்றையும் விளக்கமாக சொல்ல.
நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்தவரிடமிருந்து போனை வாங்கிய ராகவன், விவரத்தை தானும் கேட்டுவிட்டு எங்கே இருக்கிறார்கள் என்று விசாரித்துத் தெரிந்தவர்,
“நாங்க அங்கதான் வரோம்மா. நீ ஜாக்கிரதையா இருந்துக்க” எச்சரிக்கை செய்துவிட்டு தாமதிக்காமல் கிளம்பினார்.
“வாங்க நாம போகலாம்” நால்வரும் சுபி சொன்ன இடத்திற்கு விரைந்தார்கள்.
இங்கே சிபினோ வந்த வேலையை மறந்து போனான்.
அவளை வெகு அருகில் பார்த்தவனின் ஆறாம் அறிவு செயலிழக்க, இதழ்களில் முத்தமிட்டுவிட்டான்.
அவனை நம்பி வந்ததுக்கு காரணமே நேற்று அவன் சுண்டு விரல் கூட தன் மீது படவில்லை. எப்படி அழைத்து வந்தானோ அப்படியே அழைத்துப் போனான். அதனால்தான் கண்ணியவான் என்று நம்பி அவனுடன் வந்தாள்.
ஆனால் இப்பொழுது அவன் செய்த காரியத்தில், அலறிவிட்டாள்.
அவனிடம் தன்மையாக பேசணும் என்று நினைத்து வந்தது அவளுக்கும் மறந்து போக. அவளைத் திருமணம் பேச அழைத்து வந்தது அவனுக்கும் நினைப்பில் இல்லாமல் போயிருந்தது.
அவனிடமிருந்து விலகி நின்ற நளிரா “யாரு என்னன்னு கூடத் தெரியாது. எனக்கு உங்க பேரும் ஊரும்னு எதுவும் தெரியாது” பேசியவளுக்கு அப்போதுதான் ஒன்று தோன்றவும் அவனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள் “முதல்ல என்னோட பேர் உங்களுக்கு தெரியுமா?” அவளது விழிகளில் கண்டிப்பாய் இவனுக்குத் தெரிந்திருக்கும் என்றே தோன்றியது.
தான் பணிபுரியும் இடம், தன் வீடு ஏன் தோழியின் வீடு முதற்கொண்டு அவனுக்குத் தெரிந்திருக்கிறதே. அப்படியெனில் பெயர் தெரியாது போகுமா? அவனையே பதிலுக்காகப் பார்த்தாள்.
“ஒருவேளை அறிமுகம் ஆகிட்டா டச் பண்ண விடுவியா? அப்போ வா ஹனி பழகிக்கலாம்” இரண்டு கைகளையும் அணைப்பது போல நீட்டி அருகில் வந்துட்டே, கள்ளச்சிரிப்புடன் வினவினான்.
அவன் கைக்கு அகப்படாது தள்ளி நின்றளுக்கு இதயம் படபடவென அடித்துக்கொண்டது, ஒரு மனுஷன் இப்படியுமா அடாவடியா இருப்பான், தலைசுற்றி நின்றாள் நளிரா,
“மைகாட். நீங்க… நீங்க” பேசவும் நா எழும்பவில்லை அவளுக்கு. இவனை பார்த்ததில் இருந்தே வாயடைத்துப் போய் நிற்பதும், ஒண்ணுமே புரியாம புலம்பித் தவிப்பதும்தானே நடக்கிறது.
இடது கரத்தை தலையில் வச்சு நின்னுட்டாள் நளிர்பெண். அந்த நேரத்திலும் பழமொழி வேறு மனதில் உதயமாக, இப்போ இது தேவையாக்கும்? ஒரே தட்டாக தட்டி அதை அடக்கினாள்.
இவனை சமாளிக்கறதா இல்ல பழமொழியை யோசிக்கவா? அவனையே விழி அகலாது, ‘என்னை விட்டுடுடா அழுதுருவேன்’ என்பது போலப் பார்த்து வைத்தாள்.
“அதெல்லாம் போகப்போகத் தெரிஞ்சுப்போம். இப்போ வா கிஸ் பண்ணப் பழகிப்போம்” அவள் அருகில் அவன் வர.
“இதப் பாருங்க. நான் ஒரு சாதாரணப் பொண்ணு. உங்க ரேஞ்சுக்கு சுட்டுப் போட்டாலும் சரிப்பட்டு வரவே மாட்டேன். ஊருக்குள்ள உங்களுக்குன்னு ஒரு அழகி எங்கிட்டாவது இருப்பா. சார் மனசு வச்சுத் தேடினால் பட்டுன்னு கண்ணுக்கு சிக்குவா” அவன் கைக்குள் அகப்படாமல் நகர்ந்து நகர்ந்து சென்றவள் குணமாய் அவனுக்கு புத்திமதி சொல்லவும்.
“வாவ் ஹனி. குட் அட்வைஸ்” அவன் கண்களை சிமிட்டி சுவாரசியமான பார்வையுடன் சிலாகிக்க.
“பார்த்தீங்களா டக்குன்னு புரிஞ்சுக்கிட்டீங்க. சரி கதவை திறந்துவிடுங்க நான் ஓடிடறேன்” கதவுப் பக்கம் நடந்தாள். அவளை விட்டால் இப்படியே பொடி நடையாய் நடந்து போகவும் தயார்.
“அட்வைஸ் பண்ண ஹனியைப் போக விடுறதா? நெவர்” அவளை அப்படியே கட்டி அணைத்து சுவற்றோரம் நிப்பாட்டினான்.
அவள் பாதங்களுக்கு அடியில் தன் பாதங்களை வம்படியாக வைத்து அவளைத் தன் பாதத்தின் மீது நிப்பாட்டினான். என்னமோ அக்கம் பக்கம் நிற்க இடமேயில்லாதது போலத்தான், அவளை நெருக்கியடித்து நின்றவனுக்கும், தான் அதிகப்படியாக நடந்து கொள்வது புரியத்தான் செய்தது.
ஆனால் பெண்ணவளின் அருகாமையும், ரோஜாப்பூ போல ஈரம் பூசிய இதழ்கள் அவனை கிட்டே வான்னு தூண்டில் போட்டு இழுக்க, அவளது கன்னத்துடன் கன்னம் உரசினான் கொதிக்கும் உணர்வுகள் அவள் காதோரம் சுடு மூச்சாய் பட்டுத் தகிக்க. ஆண் வாசனையே உணராதவள் அவன் அத்துமீறலில் பட்டுப் புழுவாய் துடித்து நின்றாள்.
“ஹனி, ஐ காண்ட்…” கழுத்தோரம் முத்தம் வைத்து பிதற்ற.
“கடவுளே! ப்ளீஸ் என்னை விடுங்க. என்னால இது முடியாது. நீங்க நினைக்கறது போல பொண்ணு இல்ல நான். செத்துப் போவேன்” அவன் மீது தன் மேனியை படர விடாது சுவற்றோடு சுவராக அப்பி நின்றவள் ஏங்கி ஏங்கி அழுதுவிட்டாள்.
“எங்கப்பா அம்மா ரொம்ப பாவம். நானில்லாம துடிச்சுப் போய்டுவாங்க. ஏதும் பண்ணிடாதீங்க” அழுகைக்கு இடையே திக்கி திணறி அவள் பேசும் வார்த்தைகளை செவியில் வாங்கியவன், அதை புரிந்து கொள்ள முயற்சி செய்து தோற்றான்.
தங்கத்தட்டிலும் எந்நேரம் முகத்தில் சந்தோசப் புன்னகை தவழ வலம் வரும் தாயைக் கண்டிருந்தவனுக்கு நளிர்பெண்ணின் அழுகை மொழி புரியத்தானில்லை.
“கிஸ் பண்ணும் போது அழாத ஹனி. உன்னோட இந்த முகம்? பார்க்கவே இரிடேட்டிங்கா இருக்குடி, உப்பு கரிக்குது கிஸ் பண்ணுறப்ப” அவளது அழுகை மனதை வருத்த, அதை ஆறுதல் சொல்லியோ அல்லது மானே தேனேன்னு கொஞ்சியோ பாவையின் முகத்தில் புன்சிரிப்பை கொண்டு வரலாம்.
ஆனால் மனதில் பட்டதை அப்படியே கரடுமுரடாக பேசுபவன் இப்போதும் அதையே பேசி வைத்தான்.
“எனக்கும்தான் பிடிக்கவே இல்லங்க. ஒரு ஆம்பளையோட இப்படி நெருக்கமா நிக்கறதை அருவெறுப்பா நினைக்கறேன். உங்களை பாத்ததில இருந்து டெட்டால் கலந்த தண்ணியிலேதான் குளிக்கறேன். மஞ்சள் வேப்பிலையை அரைச்சு கொதிக்கற தண்ணியில் கலந்து குளிக்கறேன். அப்போவும் உங்க கைப்பட்ட தீட்டு உடம்பெல்லாம் ஒட்டிக்கிட்டு என்னைய அணு அணுவா சாகடிக்குது” தன் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே மதித்திடாத மிருகமாகவே தென்பட்டான் அவளுக்கு.
“வாட்? டேமிட் இனியொரு வார்த்தை பேசுன சாவடிப்பேன்டி” அவள் கழுத்தைப் பற்றியவன் அப்படியே தூக்கி நிறுத்திவிட்டான்.
அவனது வலிமைக்கு முன் நளிர்பெண்ணின் மென்மை தோற்றுப் போக விழிகள் சொருகியது.
அரைகுறை நிதானத்தில் இருந்தவளை கட்டிலில் தள்ளியவன், “என்னைப் பார்த்தா ரோட்டுல போற பொண்ணுங்ககிட்ட அசிங்கம் பண்ணுற பொறுக்கி மாதிரி தெரியுதாடி உனக்கு. என்னோட மனசு உனக்கு புரியலையாடி?” கேட்டுக் கேட்டு அவளை வதைக்கும் நோக்கில் செய்த காரியம் ஒவ்வொன்றும் அவளை மரணக் குழியில் தள்ளுவது ஒன்றே குறியாக இருந்தது.
“பிடிச்சிருக்குன்னு உன் பின்னாலயே வந்த என்னை பார்த்து அருவெறுப்பா இருக்குன்னு சொல்லிட்டடி. மொத்தமா எடுத்துகிட்டா அப்போ என்ன சொல்லுவ.
தீட்டுன்னு டெட்டால் போட்டு குளிக்கறவளாடி. இதோ என் விரல்கள் உன்னோட மொத்த உடம்பிலும் படுதே, இப்போ எதுல விழுந்து குளிப்ப?
என்ன வார்த்தை சொல்லிட்டடி?” தன்னை பார்த்து அவள் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனைக் கொன்று தீர்க்க, அதன் ரணம் தாங்காது அவளைக் குதறியெடுத்தான் மனித மிருகமாய்.
அவனை எதிர்க்கக் கூட வலு இல்லாது அவன் கைகளுக்குள் அடங்கியிருந்தவள் விழிகளில் கண்ணீர் அருவியாய் வலிந்தது.
“ஐயோ.. தப்பு.. தப்பு” அவள் உதடுகள் விடாது முணுமுணுத்தது.
முழுக்க முழுக்க உக்கிரமாய் இருந்தவனுக்கு எச்சரிக்கை விடும் நோக்கில் அபாய மணியாக ஓசையெழுப்பியது மொபைல். அவன் அன்னையின் அழைப்புக்கென்றே பிரத்தியேக இசையை வைத்திருக்க, மீண்டும் மீண்டும் ஓசையெழுப்பி அவனை அழைத்தது.