வேந்தன்… 32
வரிசையாக இரண்டு கார் பண்ணை வீட்டின் முன் வந்து நின்றது.
அதிலிருந்து ஆத்மா, ரவிக் இருவரும் இன்னொரு காரில் ஆரியன் மிரா இருவரும் இறங்கினார்கள்.
“வாவ், கடல் பாருங்களேன். நைஸ் வியூ” மிரா காம்பவுண்ட் சுவற்றின் வெளியே தெரிந்த அலைகடலை ரசித்தாள்.
“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” அருகில் சென்று ரசிக்கும் ஆவல் அவள் விழிகளில் மின்னியது.
“நம்ம வீடுதான் மிராம்மா. உங்க பையன் விலைக்கு வாங்கியாச்சு” விஷயத்தை மட்டும் சொன்னவன், மற்றதை தொண்டைக்குள் முழுங்கினான்.
இப்படியே வெளிய சொல்லாம முழுங்கி முழுங்கி ஒரு நாள் மொத்தமா கக்கிட போறேன்,
“தாங்க மாட்டீங்கடாவ்” வாய்விட்டு சொன்னவன் சட்டென வாயைப் பொத்தினான் மிரா பார்ப்பதை அறிந்து. “ஆத்தி வாயை விட்டுட்டேனே” முழித்தான்.
“என்ன சொன்ன?” மிரா விசாரித்தாள் அவன் பாவனையைக் கண்டு புரியாமல்.
“இந்த வீடு உங்களுக்குத்தான் மிராம்மா. எப்போ வேணாலும் சுத்திப் பார்க்கலாம்” சமாளித்தான்.
“வாவ் சூப்பர்டா” மிரா வியக்க.
அவர்களிடமிருந்து தள்ளி வீட்டை விட்டு வெளியே நடந்தவனுக்கு சிபின் இந்த வீட்டை விலைக்கு வாங்கிய சங்கதி மாமா மூலம் காதுக்கு வந்தது. அதும் அவன் எவ்வளவு பணிவாக வீட்டைக் கேட்டு வாங்கினான் என்று மாமா சொல்லக் கேட்டு இவனுக்கு முகத்தை எங்க கொண்டு வைக்கன்னு தெரியாமல் போனது. நல்ல வேலை நேர்ல வந்து சொல்லாம விட்டார், இந்த மட்டிலும் நிம்மதி இவனுக்கு.
ஆக மொத்தம் ஆத்மாவுக்கு தூத்துக்குடி மாமா பொண்ணு கிடைக்காது என்பதில் அத்தனை உறுதி. பொண்ணு பார்க்கத்தான் நண்பர்களை இங்கே அழைத்து வந்தது, “வந்த இடத்தில் அண்ணனும் தம்பியும் நல்லா செஞ்சு விட்டுட்டீங்கடா” பொண்ணு கிடைக்காத சோகத்தில் வாய்விட்டுப் புலம்பிய ஆத்மா வீட்டிலிருந்து வெளியே வரவும் அவனுடைய ஆள் ஓடிவந்தான்.
“மார்னிங் சார்” அவன் வணக்கம் சொல்லவும்.
“மார்னிங்கா இது?” ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தவன், வெயில் பளிச்சுன்னு கண்ணைப் பறிக்க, “சரி ஏதோ ஒண்ணு. நீ விஷயத்தைச் சொல்லு இன்னைக்கு என்ன குண்டு வச்சிருக்க?” விசாரித்தான்.
“அது பெரிய சம்பவம் சார்”
“என்னத்த பண்ணி வச்சான்?” நினைக்கவே இவனுக்கு தொண்டை அடைத்தது.
“சார் ஒரு பொண்ணைத் தூக்கிட்டு உள்ளே போனாருங்க. அந்தப் பொண்ணு வரமாட்டேன்னு கத்துச்சு. கடத்திட்டு வந்திருக்கார்ன்னு தோணுது”
“மைகாட்” ஆத்மா தலையில் கைவைத்து நின்றான். இந்த அளவுக்கு போயிட்டானா கண்களைக் கட்டியது.
இதுக்கே அசந்து போனா எப்படிடா ராஜா. அடுத்த குண்டு மிச்சமிருக்கு, என்பது போல சிரிப்பை அடக்கியவன்,
“அந்தப் பொண்ணும் பாலோவ் பண்ணிட்டே வந்தாங்க சார். யாருக்கோ கால் பண்ணி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அநேகமாய் அவங்க வீட்டுலன்னு தோணுது” இவன் கூறக் கூற ஆத்மாவுக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
ஆரியன் மிராவின் மனநிலை பாதிக்காதவாறு எல்லாவற்றையும் சரி பண்ணியாகணுமே யோசித்தவன் “சரி நீ போ. யாராவது வந்தா எங்களுக்கு உடனே கால் பண்ணி விவரம் சொல்லு” சொன்னவன் சற்று தள்ளி ஸ்கூட்டியின் மீது அமர்ந்திருந்த சுபியையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.
சுபி இவர்களையே தீவிரவாதியைப் போல முறைத்துப் பார்க்கவும், சட்டென்று விழிகளை திருப்பியவனுக்கு,
அப்ப இன்னைக்கு தரமான சம்பவம் இருக்குது என்றே தோன்றியது.
“என்ன நடக்கப் போகுதோ தெரியலையே. துருவ் இருந்தா கூட சமாளிக்கலாம் அவனும் வரலை”
கடலை ஒரு பார்வை பார்த்தவன், நமக்குத்தான் நீச்சல் நல்லா தெரியுமே எட்டிக்குதிச்சு ஓடிடலாமா? அவன் யோசனை கண்டபடி போனது.
“ஆத்மா” ரவிக் அழைக்க. யோசனை கலைந்து “சரி சமாளிப்போம்” ஒரு தெளிவும் வராமல் ஓரளவு தெளிவானான்.
“டேய் கூப்பிட்டுட்டே இருக்கேன்” முதுகில் அடித்தான் ரவிக்.
“நாயே எதுக்குடா அடிச்ச?” இருக்கும் கடுப்பில் ரவியை நன்றாக மொத்தி எடுத்தான்.
“மெதுவாத்தாண்டா அடிச்சேன்” ரவி வலியுடன் சொல்ல.
“இங்க வாடா” அவனை இழுத்துப் போனவன், நான் பெற்ற இன்பத்தை நீயும் பெருக என்ற நல்லெண்ணத்தில் நடந்ததை புட்டுப் புட்டு வைத்தான்.
“என்னடா இதெல்லாம்?” ரவிக் துக்கப்பட்டான்.
“அதான் அப்பவே உன்னை எச்சரிக்கை பண்னேன். கேட்டியா?” ஆத்மா விசாரத்துடன் நண்பனை முறைத்தான்.
“அவனுக்கும் லவ் வந்திருக்குடா. சந்தோஷப்படனும் இதுக்கு” ரவிக் முகத்தில் மலர்ச்சி.
“இவனுக்கு லவ் வந்திருக்கு. அப்ப அந்தப் பொண்ணுக்கு?” கொலை வெறியோடு நண்பனை ஆராய்ந்தான்,
‘இந்தப் பூச்சியை முதல்ல மருந்து வச்சுக் கொல்லனும். அப்பத்தான் நாடு உருப்படும்’ என்ற அளவுக்கு ரவியை நினைத்தால் ஆத்திரமாக வந்தது அவனுக்கு.
“ஆன்டி ஹீரோ லவ்னா இப்படித்தான் மச்சி இருக்கும். அடமெண்ட் லவ்” பற்கள் அனைத்தையும் காட்டிச் சிரித்தான் ரவி.
“வெட்கமே இல்லல்ல உனக்கு?” ஆத்மா மணிக்கட்டை உயர்த்தினான் அவனை அடிப்பதற்கு தயாராக.
“இடுக்கண் களைவதாம் நட்பு. நம்ம வள்ளுவரே சொல்லியிருக்கார் மச்சி. அப்ப நாம அவனோட லவ்கு சப்போர்ட் பண்ணுவோம்”
என்றவன் தன்னை அடிக்க வந்தவனைப் பார்த்து மிரண்டு போக, சரியாக மிராவிடமிருந்து அழைப்பு வந்து தப்பித்தான்.
“ரவி” மிரா அழைக்கவும்
“தப்பிச்சுட்டென்” அங்கிருந்து ஓடியே போனான் ரவிக்.
“இவனை துணைக்கு கூப்பிட்டன் பாத்துக்க” ஆத்மா தன் வீதியை நொந்து கொண்டே வீட்டினுள் சென்றான்.
ஆர்யன் மிராவிடம் வந்தவன் “மிராம்மா உங்க மருமகளும் இங்கதான் இருக்காங்க” என்று மறைக்காமல் கூறிவிட்டான். வருவது வரட்டுமே என்று துணிந்தான்.
“அடடே பரவாயில்லை. வந்ததுக்கு மருமகளையும் பார்த்துடலாம்” என்று சந்தோஷப்பட்டவர் அறியவில்லை இன்றே திருமணப் பேச்சும் முடிந்துவிடுமென்று.
“ஆமாமா ரொம்பப் பரவாயில்லைதான்” முனகிய ஆத்மாவுக்கு சிபினின் அடாவடித்தனத்தில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. ஒரு பெண்ணை பிடிக்கிறதென்றால் உரிய முறையில் அவகிட்டயே தன் மனதை எடுத்துச் சொல்லணும்.
அவளுக்குப் பிடிக்கவில்லையென்றால் நல்லவிதமாக விலகிடணும்.
அதைவிட்டுட்டு அவளைத் தொந்தரவு செய்வதும் கட்டாயப்படுத்துவதும், இப்படியும் இருக்கணுமா இவன். வெளிப்படையாய் நண்பனைப் பற்றி அவனைப் பெற்றவர்களிடம் சொல்வதற்கு மனம் வரவில்லை அவனுக்கு.
வீட்டினுள் சென்றவர்கள் மகனைத் தேட, அவனோ அங்கு ஒரு பெண்ணின் மனதைக் குற்றுயிராக்கிக் கொண்டிருந்தான்.
ஆத்மா மிராவின் மொபைலை வாங்கி அவன் அழைக்க, அழைப்போசை சிபினின் காதை எட்டியது ஒருவழியாக.
அவளிடமிருந்து விலகியவன் போனை எடுத்துப் பார்த்து அதிர்ந்து போனான். “மைகாட்! என்ன பண்ணி வச்சிருக்கேன் நான்?”
‘மாம்!’ தாயின் அழைப்பை என்றுமே கட் செய்தது இல்லை அவன். அதனால் அழைப்பை வெறித்துப் பார்த்தான்.
தன் மனம் கவர்ந்த பெண்ணை நோகடித்து விட்டோமே. அம்மா மட்டும் கால் பண்ணாமல் இருந்தால் இந்நேரம் அவளைக் கலங்கப்படுத்தி இருந்திருப்போமே, அவளையே வெறித்தது அவன் விழிகள்.
இடது கையால் கேசத்தை அழுந்தக் கோதியவனுக்கு வாழ்வின் முதல் முறையாக நடுக்கம் பிறந்தது.
மலரை நோகாமல் பறித்தால்தான் சுகந்தமாக இருக்கும் என்ற பாடத்தை மறந்து தவறு இழைத்துவிட்டான்.
தான் தனது தனக்கு மட்டுமே என்ற எண்ணத்தில் பெண்ணின் மனதை சுக்கு நூறாக உடைத்தே விட்டான்.
“ஹேய்!” அவள் தோள்களை இருகையாலும் பற்றியவன் அவள் அருகில் அமர முயல.
இருகைகளையும் கூப்பியவள் அவனைத் தள்ளி நிற்குமாறு விழிகளால் இறைஞ்சினாள். “பிளீஸ் இதுக்கும் மேல தாங்க முடியாதுங்க” விம்மலுடன் முகம் பொத்திக் கதறியவளை எப்படித் தேற்றுவது?
“நீ அருவெறுப்பா இருக்குன்னு சொன்னதும் தப்புப் பண்ணிட்டேன். உன்னை ஹர்ட் பண்றது என்னோட நோக்கமில்ல” விளக்கம் கொடுக்க முயன்றவனின் சொல் அவள் காதுகளை அடையவேயில்லை.
அவன் விளக்கம் தந்த லட்சணத்தில் இன்னுமே துக்கம் பெருகி வந்தது அவளுக்கு.
“பண்ணுறதையும் பண்ணிட்டு இப்ப தப்பை என் மேல போடுறீங்களா? அப்போ அப்போ” எதிரில் நின்றவனை எரிக்கும் சக்தி அவள் விழிகளில் இருந்திருந்தால் இந்நேரம் அவன் பஸ்பம் ஆகியிருப்பான்.
அழுகை அழுகை அழுகை இதுமட்டும்தான் அவளிடமிருந்தது.
போர்வையை நெஞ்சோடு இழுத்துத் தன்னை மறைத்தவளுக்கு மானக்கேடாய் போனது. இப்படி ஒரு நிலையில் ஒருவன் முன் இருப்போம் என்று கனவில் கூட அறிந்திருக்கவே மாட்டாள்.
பெற்றவர்களுக்குத் தெரியாமல் இவனை நம்பி வந்ததற்கு நல்லா தண்டனை கிடைச்சாச்சு, நினைப்பே வேதனையை இன்னும் கூட்டிட,
“அய்யோம்மா” தலையில் அடித்துக்கொண்டவள் வாய்விட்டுக் கதறி அழுதாள்.
அவள் கண்ணீரைத் தாங்க முடியாமல் அவள் எச்சரிக்கையையும் மீறி அவள் அருகில் அமர்ந்தான் சிபின்.
பாய்ந்து அவன் சட்டைக் காலரைப் பற்றி இழுத்தவள், “ஏன்? ஏண்டா இப்படிப் பண்ணுன? உன்னை நம்பித்தானே உன்கூட வந்தேன். ஐயோ” தலைதலையாக அடித்து அழுத பெண்ணை எப்படி சமாதானப் படுத்துவது? புரியாது தவித்து நின்றான்.
அன்னை திரும்பவும் கால் பண்ண, பார்த்தவனுக்கு இப்போ இது தேவையா? என்றிருந்தது.
இப்போதைய மனநிலையில் எது பேசினாலும் அது தப்பாகவே போகும் என்பது விளங்கிட, அவர்களை திருப்பி அனுப்பலாம் என்று போனை ஆன் செய்து பேசினான்.
“மாம்” என்று அழைக்க.
“கண்ணா நளிரா இங்கதான் இருக்கா போலவே. வரச்சொல்லுப்பா நான் பேசுறேன் அவக்கூட” பெரிய குண்டாக அவன் தலையில் போட்டார்.
“மைகாட். இவங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றவனின் பார்வை ஜன்னல் வழியாக வெளியே பாரத்திட. அங்கே தொலைவில் அவனை கண்காணிக்க ஆத்மா பணித்த ஆள் நிற்பது தெரிந்தது.
“வரேன் மாம்” சொல்லிவிட்டு போனை வைத்தவன், இன்னும் விடாமல் அழுதவளை பார்த்து அவள் உடைகளை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
“அம்மா வந்திருக்காங்க. உனக்கு ஹெல்ப் பண்ண அவங்களை வரச் சொல்லட்டுமா?” கனிவாகக் கேட்டான்.
“நோ… நோ பிளீஸ் வேண்டாம் வேண்டாம்” விழிகள் அச்சத்தில் மறுக்க, கால்களை நெஞ்சோடு குறுக்கி அமர்ந்தாள்.
அவளது செயலில் இவனது கர்வம் அப்படியே தூளாக உடைந்து நொறுங்க, நெற்றியில் கைவைத்து தன்னையே நொந்துகொண்டான்.
தன்னுடைய உடை ஒரு சிறிதும் கசங்காது இருக்கக் கண்டவனுக்கு, எல்லை மீறும் முன் சுதாரித்துவிட்டோமே சிறிய அளவில் நிம்மதியானான். தாயின் அழைப்புக்கு நன்றியும் சொல்லிக் கொண்டான் மனதில்.
“ஓகே ஓகே ஹனி. இந்த டிரெஸ் போட்டுக்கோ. பட் மாம் உன்னைத்தான் பார்க்க வந்திருக்காங்க. அவங்ககிட்ட நீ பேசித்தான் ஆகணும் புரியுதா?”
“என்னால முடியாது. யாரையும் பார்க்கவோ பேசவோ நான் விரும்பலை” ஆத்திரமாய்க் கத்தினாள் நளிரா.
“ஆனால் இதுக்கு ஒரு முடிவு வேணுமே ஹனி. நான் இப்போ உன்கிட்டே நடந்துகிட்ட விதம் தப்புதான். பட் என்னால உன்னை இப்படியே விட முடியாது. எனக்கு நீ வேணும் ஹனி. கட்டாயம் எனக்கு நீ வேணும்” அவன் குரலில் இருந்த அழுத்தம் அவளை உறுத்தவே,
நிமிர்ந்து அவனை நோக்கியவளின் விழிகளில் வெறுப்பே மீதமிருந்தது.
“சத்தியமா என்னால உங்களை ஏத்துக்கவே முடியாது. உங்களுக்கு கிடைக்க மாட்டேன் நான்” கத்தினாள் நளிரா.
“அது உன்னோட கையில் இல்லை ஹனி. நீ எனக்குத்தான். எனக்கு மட்டும்தான்” அவன் விழிகள் அவள் வெற்றுத் தோள்களின் மீது படிய.
போர்வையை இழுத்து நன்றாக போர்த்தியவள், அவனை முறைக்க, “பொறுக்கி” என்று முனகியது அவள் உதடுகள்.
“ஒரேயடியா வேண்டாம்னு சொல்லாத ஹனி. டைம் எடுத்துக்கோ. யோசிச்சு சொல்லு” அவளது அத்தனை பேச்சுக்களுக்குப் பிறகும் அவன் கோபமில்லாமல் சொல்ல.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நிஜமா எனக்கு உங்க மேல எந்த ஆசையும் விருப்பமும் இல்லைங்க. அதோட நீங்க பண்ண வேலையால் பயம்தான் வருது எனக்கு. எனக்காக காத்திருக்காதீங்க”
“அப்பா அம்மா உன்கிட்டே பேசுவாங்க ஹனி. அப்போ தயவுசெய்து இதே பதிலை சொல்லாதே” என்று விலகியவனுக்கு அவளை விட்டுப் போக மனமே இல்லை.
வணக்கம் மக்களே. என்னால fb ல ஆகட்டிவ்வா இருக்க முடியலை. தினமும் வாட்சப் சேனல்ல நான் தரும் கதைகளின் அப்டேட் பதிவு பண்ணிடுவேன். அதனால நோட்டிப்பிகேசன் வேணும்னா என்னோட வாட்சப் சேனல்ல பாலோவ் பண்ணிக்கோங்க.