வேந்தன்… 41
மக்களே முதல் அத்தியாயத்தில் நான் சொன்னது உங்களுக்கு நினைப்பிருக்கும்னு நினைக்கறேன். கதை இனி ஆரம்பிக்க போகிறது. எப்படி வேணாலும் போகலாம்.
சிபின் அறையில் தனித்திருந்தாள் நளிரா.
பெற்றவர்களும் சென்றுவிட, ஏனோ இங்கே எந்த பாதுகாப்பு உணர்வும் சரிவர கிடைக்காதது அச்சமாக உணர்ந்தாள். அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் அமரவும் அச்சம் தடுக்க அங்கே இருந்த நீள்இருக்கையில் அமர்ந்தாள்.
விழிகளால் அறையை அளவிட்டவளுக்கு அதன் பிரம்மாண்டமும் ஆடம்பரமும் பார்க்கவும், தான் இங்கே பொருந்தாததைப் போலவே தோன்றியது.
சிபினை சந்தித்த தருணங்கள் யாவுமே நெஞ்சில் திகிலை தரும் அனுபவங்கள்தாம். அவனது அதிரடியை எதிர்கொள்ள முடியாது திணறி நிற்பாள் நளிரா.
இங்கே வந்தது முதலே அவனது ஒதுக்கத்தை மறைமுகமாக உணர்ந்தவளுக்கு இடைப்பட்ட காலங்களில் என்னவாகியிருக்கும் என்ற நினைப்பு வந்தது.
மருமகளாய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பெண், கொஞ்ச காலத்துக்கு மருத்துவமனை, கெட்டது இதுக்கெல்லாம் போகக்கூடாது என்று வாணியும் மிராவுமே சொல்லியிருக்க, மருத்துவமனையில் இருக்கும் துருவ்வை பார்த்து வர முடியவில்லை அவளுக்கு.
துருவ் பற்றிய கவலையில் இருக்கிறார்கள். அதனால் நீயும் கவனமா இருடியம்மா என்று மனோகரியும் புத்திமதி சொல்லியிருப்பதால் அவளுக்கு சிபினின் ஒதுக்கம் பற்றி எந்த சந்தேகமும் வரவில்லை.
வீட்டில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, கொஞ்சி குலாவிட முடியுமா என்று மனதை தேற்றிக்கொண்டாள். ஆனாலும் ஒரு சிறு புன்னகையை கூடவா தரமுடியவில்லை. அவனை நம்பித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்ற எண்ணம் மனதை குத்திக் குதறியது.
கதவைத் திறந்து சிபின் உள்ளே வரவும், நெஞ்சுக்குள் குளிர்நடுக்கம் ஊடுருவ, அவன் செவ்விழிகளில் வெளிப்பட்ட சினத்தின் வெப்பம் அவளை சுட, தானாய் எழுந்து நின்றாள். அவனது ஒதுக்கத்தில் தன்னையே சுமையாக உணர்ந்தாள் அவ்விடத்தில்.
அறிமுக சிரிப்பை கூட சிந்தாமல் இதென்ன பார்வை? அவளின் உள்ளம் துடித்துப் போக, அவனையே விழி அகற்றாமல் பார்த்தாள்.
அவனோ அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல், “டாமிட் இதொன்னுதான் கேடு” என்று படுக்கையில் இருந்த விரிப்பை இழுத்துக் கீழே தள்ளிவிட. அவள் காலடியில் வந்து விழுந்தது வெள்ளை நிற விரிப்பு.
பதறி பின் நகர்ந்து நின்றவள், தேகம் மொத்தமும் நடுங்கிப் போக, அவனையே மிரட்சியுடன் நோக்கினாள். ராட்சசன் ஒருவனோடு தனித்திருப்பதைப் போல உணர்ந்தவளுக்கு, படுக்கையில் கண்களை மூடிப் படுத்திருந்தவனைப் பார்க்கவும், இங்கே என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை.
அவனுக்கோ மனதில் புயல்காற்றே வீசியது. மருத்துவமனைக்குச் சென்று துருவ்வை பார்த்துவிட்டுத்தான் வந்தான். அவனால் தன்னுடையவளை இன்னொருவன் விரும்புவதை சகிக்கவே முடியவில்லை. அது தன்னுடன் பிறந்த சகோதரனே ஆயினும் நெருஞ்சி முள்ளாகக் குத்திற்று.
இரட்டையர்கள் என்பதால் ஒரே மாதிரி உடையணியச் சொல்லி மிரா அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் சிபின்க்கு அது பிடிப்பதே இல்லை. தவறியும் மற்றவர்களின் காப்பியாக இருக்கவே மாட்டான்.
அப்படியிருக்கையில் தன் காதலியின் மீது இன்னொருவனின் பார்வை விழுந்ததில் சினந்து போனான்.
தன் சகோதரன் என்பதற்காக தியாகம் செய்ய முடியாதே. வாழ்நாள் முழுவதும் தன்னுடையவள் இன்னொருவனோடு வாழ்வதை பார்த்து மகிழும் மடையனும் அல்லவே.
அதெநேரம் துருவ் மீது வைத்திருக்கும் பாசமும் அவனை வதைத்தது.
விட்டுத் தரமுடியாத காதலுக்கும், சகோதர பாசத்துக்கும் இடையில் சிக்கி சின்னபின்னமானது அவனது இதயம்.
விழிகளில் இரத்தமென சிவந்து செவ்வரி நரம்போட, இறுகிய முகமும், அசைவற்ற நிலையில் படுத்திருந்தவனுக்கு அத்தனை பழியையும் அவள் மீதுதான் போடத் தோன்றியது.
எல்லாம் இவளாலதான் என்று அவள் மீது மொத்தக் கோபமும் குமிந்தது.
அவனுக்கு என்னாச்சோன்னு கவலையில் நின்றிருந்தாள் நளிரா.
“என்னங்க” நளிரா அவனை அழைக்க.
“என்ன?” சீறியவாறே வேகமாய் அவன் அருகில் வந்ததை கண்டு அவள் மிரண்டு பின் வாங்கிட.
“இப்ப என்னடி உன்கூட படுக்கணுமோ?” சட்டையை கழட்டி அவள் மீது வீசிவிட்டு அவள் அருகில் சென்றான்.
தேகமெங்கும் சுடு நீரை கொட்டிய மாதிரி எரிந்தது அவளுக்கு. என்ன
வார்த்தை சொல்லிட்டான்.
“ஆம்பளைங்களை மயக்கறது, அப்புறம் அவனுங்களை பின்னாடியே அலைய வைக்கிறது. வேண்டாம் வேண்டாம்னு விலகிப் போறது போல நடிக்க வேண்டியது. அப்புறம் வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறது. இப்போ என்னடி உன்னை திருப்தி செய்யணும் அதான?” கேட்டவன் அவளை தன் கோபங்களுக்கு வடிகாலாக்கிட வார்த்தைகளை வாரி இறைத்தான் அவள் மீது.
கருநாகத்தின் விசமாய் கொத்திக் குதறும் வார்த்தைகளில்
நளிராவின் சுவாசம் தடைபட்டது, அவளது கால்கள் தானாய் பின்னே செல்ல. அவளது கனவுகள் அனைத்துமே அவனது ஒவ்வொரு காலடியிலும் மிதிபட்டு நசுங்கியது.
உற்சாகமாய் வானில் சிறகடித்துப் பறந்த என்னை
ஒர் நொடியில் தரையிறக்கினாயே?…
என்னிடம் வந்து தஞ்சம் கொள் என்று ஆகாயம் ஆசைகாட்டிதே,
இறக்கைகளை விரித்துப் பறக்கவும் முடியாது,
மரத்தின் உச்சியில் இருக்கும் தன் கூட்டினுள் ஒண்டவும் முடியாது.
இல்லாத சிறகை விரித்துப் பறக்கும் முயற்சியில் தோற்று கீழே விழுந்தேனே…
என்னுடைய ஆசைகள் புதைந்திட்ட கனவுகளாய் புதைந்து போனதே…
ஆகாய வானில் வீசும் காற்றில் அதன் சுகத்தில் உலாவிட ஆசைகொண்டு, விழிகள் ஏக்கமாய் நோக்கினாலும், தாழ் நோக்கியே தள்ளிவிடப் பார்க்கிறதே.
ஒரு நாள் பறப்பேன் என்ற நம்பிக்கை மட்டுமே வீழும் கண்ணீர் துளிகளாய்… ஆனால் ஓர் நாள் இதுவும் கடந்து கடிதே விரைந்து சமர் புரிவேனே…
Post Views: 416