வேந்தன்… 43

4.5
(15)
வேந்தன்… 43
எவ்வளவு உக்கிரமா மிரட்டிட்டு இருக்கோம். இவளானால் ரெஸ்ட் ரூம் போறேன்னு சொல்றாளே! அவளையே கடுப்பாய் முறைத்தான்.
“ப்ளீஸ் அர்ஜென்ட்” ஒற்றை விரலை உயர்த்தி அவன் முன் காட்டிட.
“போய்த் தொலை” அவளை விடுவித்தான்.
அவன் விடுவித்த அடுத்த கணம் அருகில் இருந்த ஜன்னலை நோக்கி ஓடினாள் அவனிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு.
“ஏய்” கைக்கெட்டிய முந்தானையை பற்றிட, பின் எதுவும் குத்தாததால், ஒரே சுற்றில் எளிதாய் அவன் கைக்குப் போய்விட்டது.
ஒரு செக்கன் நின்று அவனைப் பார்த்தவள், இவன் கையில சிக்கி அவதிப்படுறதுக்கு பேசாம தப்பிச்சு ஓடிடலாம் என்று ஜன்னல் வழியாக வெளியே இறங்கி விட்டாள். கதவை இழுத்து க்ளோஸ் பண்ணி விட்டாள்.
அவன் மீதிருக்கும் பயத்தில் எங்கே இருக்கோம் என்ன பண்ணிட்டு இருக்கோம் என்பதையும் மறந்தவள் அப்படியே அமர்ந்தாள் தரையில்.
கையில் இருக்கும் புடவையை முகத்தில் பதித்து அவளது வாசனையை நுகர்ந்தவனுக்கு அவள் மீது தாபம் கிளர்ந்துவிட, ஓடிப்பிடித்து விளையாடும் அவள் மீது ஊடல் வந்தது…
தரையில் அமர்ந்திருந்தவளுக்கு படபடவென வந்தது. விடியும் வரை இங்கயே இருந்துட்டு, காலைல தப்பிச்சு ஓடிப்போயிடலாம்னு நினைச்சவளுக்கு அந்த நேரத்திலும் ‘உயிரே தப்பிச்சு எப்பிடியாவது ஓடிரு’ ன்னு வடிவேல் பாடும் பாடல் நினைவுக்கு வரவும். “அய்யோ எனக்கு புத்தியே வராதா?” தலையில் கைவைச்சு அமர்ந்தவளுக்கு, கண்களை கரித்துக்கொண்டு வந்தது.
தான் எப்படி பூவாக வளர்ந்து இப்படி ஒரு சைத்தான்கிட்டே வந்து மாட்டிக்கிட்டோமே” கண் கலங்கியவளுக்கு ஒரு வார்த்தை தான் வேண்டாம்னு சொல்லியிருந்தால் அப்பா சரின்னு இந்தக் கல்யாணம் வேண்டாம்னு விட்டிருப்பார் என்பது நிச்சயம்.
ஆனால் நெஞ்சோரத்தில் அவன் மீதான துளி நேசம் அரும்பாய் மொட்டு விட்டிருக்க, அவனது நெருக்கமும், யாரும் காணாத தன் அந்தரங்கத்தை அவன் அறிந்துவிட்டதும் என எல்லாம் சேர்ந்து இனி அவன்தான் எல்லாம் என முடிவெடுத்தாள்.
நெஞ்சோரத்தில் அரும்பாய் துளிர்த்த நேசம் நறுமணம் வீசும் பூவாய் மலருமா? அன்றி மொட்டிலேயே கருகிப் போகுமா? காலம்தான் இதற்கான பதிலைத் தர வேண்டும்.
புடவையை படுக்கை மீது எறிந்தவன் அது அழகாய் படர்ந்து பரவி மஞ்சத்தை அலங்கரிக்க.
புடவை இருக்கும் இடத்தில் பெண்ணவளை கற்பனை செய்தவனின் மோகம் கட்டவிழத் திமிறி நின்றது. கேசத்தை விரல்களால் கலைத்து விட்டவன் பெண்ணவளை நாடிச் சென்றான்.
முழங்காலில் முகம் புதைத்து ஒடுங்கி அமர்ந்திருந்தவள், தலைக்கு மேல் ஏதோ சப்தம் கேட்டிடவும் விறுக்கென தலையை உயர்த்திப் பார்த்தவள், ஜன்னல் கததை வெளியே இழுத்து சாத்தியிருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
வேந்தன் கதவை நோக்கி வேகமாக நடந்தான்.
“ஏய் அங்க என்ன பண்ணுற. உள்ள வாடி” அதட்டலாய் ஒலித்த குரலில் இன்னும் ஒடுங்கி அமர்ந்தாள்.
“கதவு வெளியே சாத்தியிருக்கவும் “ஏய் பைத்தியமே. லூசாடி நீ” பற்களை கடித்தவாறே தலையில் கைவைத்து நின்றுவிட்டான்.
ஜன்னல் கதவை எளிதாக கழட்டி எடுத்திட முடியும்.
அல்லது தட்டினாலோ உடைத்தாலோ எடுக்க முடியும்.
ஆனால் இது மூன்றயும் செய்திடவே முடியாது. வெளியே அமர்ந்திருப்பவள் நிச்சயம் தடுமாறிக் கீழே விழுந்துவிடுவாள்.
ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த லைட்டை ஆன் பண்ணியவன், “ஹனி கதவை திற” சினத்தை கடினப்பட்டு அடக்கி நார்மல் குரலில் சொன்னான்.
ஆனாலும் அவளால் அதை எளிதில் கண்டறிய முடிய, “முடியாது” என்று மறுத்தாள்.
வேந்தன் கதவை நோக்கி வேகமாக நடந்தான்.
“கதவை திற,” அவனது குரல் கடுமையாக ஒலித்தது.
“முடியாது!” என்றவள் அதிர்ச்சியுடன் பின்னால் நகர்ந்தாள்.
அவன் சிரித்தான். “என்கிட்டேயிருந்து தப்பிக்கலாம்னு நினைக்கிறயா?”
“கண்டிப்பா. உங்ககிட்ட என்னால இருக்கவே முடியாது போல. பேசியே கொல்றிங்க” அவள் குரலை மட்டும் அவனுக்கு அனுப்பினாள்.
ஜன்னலின் அருகே வந்தவன் “அங்கே நீ எவ்வளவு நேரம் இருக்க முடியும்?” பேச்சில் அத்தனை எள்ளல்.
அவளது இதயம் வேகமாக துடித்தது. “நான்…” திக்கினாள். அவன் கூறுவதும். உண்மைதானே.
“கதவை திறடி. இல்லன்னா” அவன் முடிக்காது நிறுத்திவிட்டு சிரிப்பை மட்டும் தர.
அவள் மூச்சு நின்றது. “இல்லைன்னா?” அவன் பேச்சும் சிரிப்பும் பயத்தைதான் தந்தது.
வாரே வாவ். மவளே இப்ப செத்தடி நீ” கீழுதட்டைக் கடித்தவனிடமிருந்து விவகாரமான புன்னகை உதயமாக,
“செல்லக்குட்டி அப்படியே கொஞ்சம் கீழ எட்டிப்பாருடி தங்கமே” ஜன்னல் பக்கம் காதை வைத்து அவளுக்கு கேட்கமாறு கத்திச் சொன்னான்.
அதுவரை இருட்டுக்குள் நன்கு வசதியாக அங்கே அமர்ந்திருந்தவளுக்கு, தான் அமர்ந்திருந்த இடம் பற்றி எதுவும் தெரியவில்லை. ஜன்னலுக்கும் கீழே கைப்பிடி சுவரு போல கொஞ்சம் நீட்டி விடப்பட்டு இருக்க, அவள் அமர அந்த இடம் போதுமானதாக இருந்தது.
ஆனால் அவன் லைட் ஆன் பண்ணிவிட்டு, அவளை எட்டிப் பார்க்கச் சொல்லவும், தன்னைப் போல கீழே எட்டிப் பார்த்தவளுக்கு, பயத்தில் இதயமே தொண்டைக்குழி வழியாக எகிறி வெளியே விழும் அளவுக்கு சத்தம் போட்டுக் கத்திவிட்டாள்.
இரண்டாவது மாடியில் அவர்கள் இருக்கவும், கீழே விழுந்தால் இருக்குற நாலு எழும்பில் ரெண்டு முறிவது நிச்சயம். இருக்குற வேதனையில் இதுவும் சதி பண்ணனுமாக்கும். அவளுக்கு வாழ்க்கையே வெறுத்தே போச்சு.
எட்டி எட்டிப் பார்த்துவிட்டு தலையை உயர்த்தி தான் வந்த வழியை நிமிர்ந்து பார்க்கவும், சத்தியமாய் அதுவும் உயரமாகத்தான் இருந்து வைத்தது.
தப்பிக்கும் வெறியில் எப்படியோ இறங்கி வந்துட்டாள்தான். ஆனால் திரும்பி அங்கே போகவேண்டுமானால் கொஞ்சம் முடியாத காரியம் போலவே பிரம்மிப்பு வந்தது.
அவளது கத்தல் அவன் காதில் விழவும், “ஹாஹாஹா தப்பிக்கவா செய்யற. கத்துடி நல்லா கத்து” அவ்வளவு வன்மம் அவன் குரலில்.
“டார்லிங் என்ன பண்ணுறடி” அவ்வளவு நக்கல் அவனிடம்.
“என்னங்க காப்பாத்துங்க” எவனிடமிருந்து தப்பிக்க நினைச்சமோ அவனிடமே காப்பாத்த சொல்லிக் கெஞ்சும் நிலை எதிரிக்கும் வரக்கூடாது என்று நொந்து போனாள்.
“நீயாதான போன. நீயா வெளிய வா. இல்லைன்னா அங்கயே கிட” என்றுவிட்டான் இரக்கமே இல்லாத அரக்கன்.
அவளுக்கு வேறு வழியே இல்லாமல் செய்துவிட்டான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!