வேந்தன்… 44
மக்களே முதல் அத்தியாயத்தில் ஒரு டிஸ்க்ளைமர் தந்திருக்கேன்🙈 மறந்துருக்க மாட்டிங்கன்னு நினைக்கறேன்.
அங்கயே கிடன்னு அவன் சொல்லி விடவும், இவளுக்கு பயம். பிறந்த வீட்டினரின் கைகளுக்குள்ளேயே வளர்ந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டில் கணவனின் அவதாரம் மிரட்சியைத் தந்தது. அதுவும், தானே தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்பதால் குற்றம் குறையேன எதுவும் சொல்லவும் முடியாது.
சுவற்றோடு சுவராக நெருக்கியடிச்சுகிட்டு நின்றவளுக்கு பிடிமானம் ஏதுமில்லை. இறங்கும் பொழுது ஏதோ ஒரு வேகத்தில் எட்டிக் குதித்து இறங்கியாயிற்று.
இப்பொழுது பார்த்தால் தலைக்கு மேல் ஜன்னல் இருந்து வைக்க. கீழே பார்த்தால் பாதாளம் போன்ற உயரம்.
“பேய்கிட்ட தப்பிச்சு வந்து உசுரோட சமாதி ஆகப் போறேன்” அவளது புலம்பல் அவன் காதுகளில் விழுந்தாலும் இரக்கம் காட்டவில்லை அவளிடம்.
“பேய் என்ன பண்ணும்னு பாருடி” தனக்குள் சொன்னவனுக்கு இன்னும் அவளை மிரட்டிப் பார்க்கலாமேன்னு எண்ணம் வந்தது.
“பேசாம அவரைக் கூப்பிட்டுக்கலாம். வேற வழியே இல்லை” முடிவெடுத்தவளுக்கு இப்படியொரு முடிவு தனக்கு வருவதில் விருப்பமே இல்லை. அதனால் அவனையே நாடிட உறுதி எடுத்தவள் அவனை அழைத்தாள்.
“என்னங்க, பிளீஸ் ஹெல்ப் மீ” குரல் தந்தாள் அவனுக்கு.
அவனோ ஜன்னல் அருகிலேயே நின்றவன் அவளுக்கு பதில் தரவில்லை.
“ஏங்க, இருக்கீங்களா?” திரும்பவும் அழைத்தாள்.
“அப்போ எப்படியோ போய்க்கன்னு நிஜமாவே அம்போன்னு விட்டுட்டு போயாச்சா?” தன்னை இப்படித் தவிக்க விடுபவனின் மீது ஆதங்கமே பெருகியது அவளுக்கு.
தங்கள் ஊரில் வெயில் வதைக்க, அங்கே பழகியவளுக்கு இந்த ஊரின் குளிர் நடுக்கம் கொடுத்தது.
வெளியே குளிர் வாட்டியெடுக்க, மெல்லிய உடைகள் குளிரை இன்னும் அதிகமாக்கவே செய்தது. இருகைகளையும் மார்போடு அணைத்துக் கட்டிக்கொண்டு வெடவெடவென நடுங்கியவளின் பற்கள் தந்தியடித்தது.
வீட்டை சுற்றிலும் ஆளுயர மரம் உயர்ந்து வளர்ந்திருந்ததால் காற்றுக்குப் பஞ்சமில்லை அங்கே. குளிர் காற்று உடலை ஊடுருவ, தேகம் முழுவதும் ஊசியாய் குத்தியது பனிக்காற்று. கைகால்கள் விரைத்துப் போக, அவளது மூச்சக் காற்றுக்கும் சிரமமானது.
“என்னால முடியலைங்க. குளிருது” அவனிடம் கெஞ்சினாள்.
அவன் இருக்கும் அரவமே கேட்காது போக, “என்னங்க” தரையை எட்டிப் பார்க்கப் பார்க்க, பயம் அதிகரிக்கவே செய்தது. மீண்டும் அவனை அழைத்தாள்.
அவனது அரவம் கூடக் கேட்காது போக, “அவருக்கு என்னைப் பிடிக்கவே இல்ல. அதான் இப்படியெல்லாம் சித்ரவதை பண்ணுறார்” கண்கள் கலங்க உதடுகள் அழுகையில் பிதுங்கியது. விசும்பல் ஒலி அவன் காதில் விழவும்தான் அசைந்தான் அவனும்.
அவள் மீது எந்த அளவிற்கு கோபம் வருகிறதோ அந்த அளவிற்கு காதலும் மிகுதியாகவே இருக்க, அவனால் அவள் அழுகை சப்தத்தைக் கேட்க முடியவில்லை, தனக்கு எதிராக செயல்படும் மனதை நிந்தித்தவன் “ஜன்னலை நீதான் திறக்கணும்டி” மிருதுவாய் சொன்னான்.
அவனது குரல் ஒலிக்கவும், பரபரப்பாய் நிமிர்ந்தவள், “ஆனால் எனக்கு எட்டலையே” நலிந்த குரலில் சொன்னாள்.
“கொஞ்சம் முயற்சி பண்ணுடி. தைரியமா பண்ணு”
அவன் சொன்னது போலவே எக்கிப் பிடித்து கைப்பிடியைப் பிடித்தவளுக்கு இப்பொழுது அந்தரத்தில் தொங்குகிறோம் என்பது மனதில் உரைக்கவும், “பயமா இருக்குங்க” அவனை அழைத்தாள்.
“லாக் எடுத்து விடுடி. நான் இங்கதான் இருக்கேன்”
வலது கையை உயர்த்தி எப்படியோ திறந்துவிட, “திறந்துட்டேன்”
அவனுக்கும் லாக் ஓபன் ஆகும் சப்தம் கேட்டிட, ஜன்னல் கதவை மெதுவாய் திறந்தவன் கண்டது வவ்வால் போல தொங்கிக் கொண்டிருக்கும் தன்னவளைத்தான்.
“ஹாஹாஹா” கன்னத்தில் குழி விழ வாய்விட்டே நகைத்தவனின் அழகில் இருக்கும் நிலை மறந்து ரசித்தாள் நளிர்ப்பெண்.
“ஓகே நான் உன்னை காப்பாத்துறேன். ஆனால் ஒரு கண்டீசன்” வெறும் ரவிக்கை இன்ஸ்கர்ட் மட்டுமே அணிந்து பயத்தில் மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க நின்ற பெண்ணை குனிந்து பார்த்தவனின் பார்வையில் வர்ணஜாலங்கள் பிரதிபலிக்க.
அரைகுறை ஆடையில் அவனின் பார்வைக்கு விருந்தாகி நிற்கிறோம் என்பதெல்லாம் நளிர்பெண்ணிற்கு உரைக்கவே இல்லை. இங்கே இருந்து தப்பினால் போதுமே என்றிருந்தது.
அதும் முன்னே இருந்த நிலைக்கு இப்பொழுது முற்றிலும் மோசமாக இருந்தாள். ஜன்னல் கம்பியை பற்றிக்கொண்டு தொங்கினாள் அந்தரத்தில்.
“ப்ளீங்க கண்டீசன் போடுற நேரமா இது. எப்படின்னாலும் நீங்க சொன்னதைத்தான் நான் கேட்டாகனும். அப்புறம் எதுக்கு இதெல்லாம்” இறைஞ்சினாள் அவனிடம்.
“எனக்கு நீ வேணும். உன்னை என்ன கொடுமை பண்ணாலும் சரிதான். ஆனால் படுக்கையில் என்கிட்டே முழு விருப்பத்தோடு நீ இருக்கணும். உன்னோட முகத்துல சந்தோசம் மட்டுமே இருக்கணும்” ஈவு இரக்கமே இல்லாமல் பெண்ணிடம் தன் கோரிக்கையை நிர்பந்தித்தான்.
“என்ன சொல்றிங்க?” அப்போதுதான் சற்று முன் அவனது அரக்கத்தனமான பேச்செல்லாம் நினைவுக்கு வரவும், இவனிடம் சிக்கி குற்றுயிராவதற்கு, பாதாளத்தில் விழுவதே சரிதானோ? அவளது விழிகள் அச்சமாய் அவனையே வெறித்துப் பின் தரையை நோக்கியது.
“ஏன் இப்படிப் பேசுறீங்க. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்?” வேதனையுடன் கேட்டவளின் விழிகளில் கண்ணீர் அருவியாய் கொட்டிட. என்ன பாவம் செய்தோம்? இப்படியொரு வாழ்க்கை கிடைச்சிருக்கே நொந்து அழுதவளின் கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தன் பிடியை தளர்த்தியது.
“கல்யாணம் பண்ணும் முன்னே யோசிச்சிருக்கணும் நளிரா. நிறைய வாய்ப்பு உனக்குக் கொடுத்தேன். இவனைக் கட்டிக்கறதா? வேண்டாமா?. ஒதுங்கிப் போறானே? இப்படி நிறைய கேள்விகளை உனக்குள்ள உருவாக்கினேன். ஆனால் நீயாதான் என்கிட்டே வந்து சிக்கியிருக்க” குனிந்து அவளது இடையில் இருகரங்களையும் வைத்தவன் அப்படியே அவளை மேலே தூக்கிவிட்டான்.
தூக்கிய விசையில் அவனது இடையின் இருபுறமும் கால்களைப் போட்டமர்ந்தவள், கீழே விழுந்துவிடுவோமோ என்ற மிரட்சியில் கழுத்தில் கைகளைக் கோர்த்துக் கொண்டாள்.
ஏற்கனவே நாடிநரம்பெல்லாம் மோகக் கூச்சலிட, கன்னியவளை எப்போதடா சுகிப்போம் என்று பொறுமையை இழந்து கொண்டிருந்தவனுக்கு அவள் தன் மீது அமர்ந்த விதத்தில் மொத்தக் கோபமும் கழிந்து போக, அவளை அப்போதைக்கு மன்னித்துவிட்டான்.
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா என்று பாடல் வரிகளே இருக்கே. இவன் அதை சரியாகப் பின்பற்றினான்.
வெற்றிடையில் முரட்டு விரல்கள் அழுந்திட, பெண்ணவளின் முன் அழகில் இவனது முகம் பதிந்தது “வாஹ் பர்பெக்ட் ஹனி” அங்கேயே செத்து விடுபவன் போலே முகத்தை அழுந்தப் புரட்டினான்.
“என்னங்க” அவனது அத்துமீறலில் தவித்துப் போன பெண், அவன் மீதிருந்து இறங்கிடத் துடித்தாள்.
“உஷ்ஸ்ஸ் ஹனி. அத்தான் சொல்லுடி” மீசைமுடிகளும் பற்களும் அங்கே உரசிட, பதிந்திட, நளிர்பெண்ணிற்கு மொத்தமும் மறந்து போக, அவனது கேசத்தை இறுகப் பற்றிக்கொண்டாள் தன் கைகளால்.
குளிருக்கு அவன் தேகத்தின் வெப்பமும் இதமாய் இருக்கவும், அப்படியே கட்டிக்கொண்டாள் அவனை.
“யாஹ் ஹனி. மை டார்லிங்” பிதற்றியவன் அவளோடு மஞ்சத்தில் சரிந்தான்.
தன் மீது மொத்தமாய் சரிந்து படர்ந்தவனை தாங்கிக் கொண்டவளின் கரங்களோடு தன் கரம் கோர்த்து, படுக்கையோடு அழுந்தப் பற்றியவனின் விழிகள் வேட்கையில் நிறம் மாறியிருக்க, “ஏய் கண்ணை திறந்து என்னைப் பாருடி. உன்கிட்ட பேசணும்” அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, அவள் விழிகளோடு தன் விழிகளை கலந்தான்.
வெகு அருகில் அவன் முகம். அவன் விழிகளை நேருக்கு நேர் பார்க்க முடியாது பார்வையை அலைபாய விட.
“ஹேய் என்னோட கண்ணைப் பாருடி” அழுத்தமாய் வந்தது வார்த்தைகள்.
“ம்ம்ம்” மெல்லிய முனகளோடு தயக்கமாய் அவனை அவள் பார்த்திட.
“இன்னொரு சான்ஸ் உனக்குத் தரேன். வேண்டாம்னா உங்க வீட்டு மக்களோட சேர்ந்து உங்க வீட்டுக்கே போயிக்க” சொல்லி நிறுத்தினான்.
காலையிலதான் கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ளே இதென்ன பேச்சு? அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் நளிரா.
“எனக்கு உன்னைப் பார்த்தா காயப்படுத்தாம இருக்க முடியாதுடி. எப்போ என்ன வேணாலும் நடக்கும். ஒருவேளை என்னோட மனநிலை மாறும் வரை உங்க வீட்டுலே இருந்தாலும் சரி. இல்ல என்ன ஆனாலும் என்கூடவே இருந்தாலும் சரிதான்” அவள் நாடியைப் பற்றியவன்,
“என்கூடவே இருந்தன்னு வை இவனோட வாழறதுக்கு செத்துரலாம்னு நினைக்கற அளவுக்கு போகும். இப்போ கூட ஜன்னல் வழியா எட்டிக் குதிச்சியே?” அவள் மார்பில் தன் முகம் புதைத்தவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான், மனதுக்குள் பெரும் தவிப்போடு. ‘என்னை விட்டுப் போயிராதடி’ அவன் மனது ஆங்காரமாய்க் கூச்சலிட்டுக் கதறியது. ஒருவேளை அவளிடம் இதைக் கூறியிருந்தால் அவனுக்காக உயிரைத் தரவும் சித்தமாயிருந்திருப்பாள்.
போயிடலாம்தான். ஆனால் அப்பா அம்மா நிலை என்னாகும். தன் மீது உயிரையே வைத்திருப்பவர்களின் மனநிலையை நோகடிப்பதா?
அவன் முதுகில் தன் கரங்களை படர விட்டவளின் விழிகளில் கண்ணீர் அரும்ப. அதை அப்படியே அடக்கினாள்.
அவள் கரங்கள் தன்னை அணைக்கவும், அவள் தன்னோடு இருக்க சம்மதித்துவிட்டாள் என்பதை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்டவனுக்கு, இப்பொழுதுதான் மூச்சே வந்தது எனலாம்.
“உனக்கு ஓகேவா?” கேட்டான்.
“ம்ம்ம் உங்ககூட இருக்கேன்” சம்மதித்தாள்.
தன் வாழ்க்கை இனி நிம்மதியாகக் கழிந்திடாது என்பது மட்டும் நிச்சயமாக, தனக்கு ஏன் இப்படியொரு நிலைமை வரணும்?
தன் மீது பரவிப் படர்ந்தவனின் ஆளுமையில் தேகம் உருகி அவன் ஆசைக்கு வளைந்து கொடுத்தாலும் மனதில் ஆயிரம் குழப்பங்கள் அணிவகுத்தது.
“எனக்கும் உங்ககூடப் பேசணும்” அவனை தடுத்தாள் நளிரா.
Post Views: 622