குளிரில் நனைந்த தேகம் அவனது வெப்பச் சூட்டை விரும்பினாலும் அவளால் அதை முழுமையாக ஏற்க முடியவில்லை. அவனுடன் பேசவேண்டும், தன்னுடைய கேள்விகளை அவனிடம் கேட்டால்தான் நிம்மதியாக இருக்கும் போலத் தோன்றியது. இந்த உறவின் அடிப்படையே அந்தக் கேள்விக்கான பதில் கிடைப்பதில்தான் இருந்தது.
“எனக்கு” அவள் பேச முயன்றபோது, அவன் திடீரென அவளின் உதடுகளைத் தன் உதடுகளால் பூட்டினான். அவளின் இதயம் நிசப்தமாய்த் துடித்தது.
வன்மையான இதழ் முத்தத்தில் மூச்சுக்கு திணறியவளை பாவம் பார்த்து விடுவிக்க, “எனக்குப் பேசியே ஆகணும். ப்ளீஸ்” கெஞ்சினாள் அவனிடம்.
“உனக்கு இப்போ கூட டைம் தந்தேன் ஹனி. பட் உனக்கான சான்ஸ் முடிஞ்சு போச்சு. இனிமேல் சாப்பிடறதுக்கு மட்டும்தான் இந்த வாய் ஓபன் ஆகணும்” அவள் கீழுதட்டைத் தன் பற்களால் கடித்துக் காயம் பண்ணிட.
“ஸ்ஸ் என்னாச்சு உங்களுக்கு. மிருகமா நீங்க?” வலி தாங்காது அவனிடம் கேட்டே விட்டாள்.
“இன்னொரு தடவை என்னை எதிர்த்துப் பேசி வைக்காதே. இருக்கற கோபத்துக்கு உன்னைய என்ன பண்ணுவேன்னு தெரியாது” சொன்னவன் அதற்குமேல் அவளை பேசவே விடவில்லை.
இதுவரை அவன் பேசியதற்கும் அவன் தொடுகைக்கும் கொஞ்சமும் சம்மதமில்லை. மென்மையாய் வன்மையாய் பெண்ணவளை இதழ்களால் விரல்களால் சீண்டியும், அவன் தரும் சின்னச் சின்ன ஈர முத்தங்களும் அவளது உணர்வுகளை தூண்டி விட, அவன் சொன்னது போலவே, அவளது தேகம் அவனுக்கு இசைந்து கொடுத்தது.
இரு உடல்கள் சங்கமிக்க காமம் மட்டுமே போதுமானதாக இருக்கும்.. ஆனால் இருமனங்களும் இணைந்தால்தானே காதலுடன் இணைந்திட்ட கூடல் இனிக்கும்.
அவள் மீதான அவனது ஆசைகள் தீராமல் தீர்ந்திருக்க, விலகிப் படுத்தான் அவளிடமிருந்து. மொபைலை எடுத்துப் பார்க்க, மணி நான்கு என்றிருந்தது.
“ராத்திரி முழுக்க நீ பண்ண கூத்துல கொஞ்ச நேரம் கூட தூங்கலைடி. நாளைக்கு துருவ் பார்க்க ஹாஸ்பிட்டல் போகணும் டாக்டர்ஸ் மீட்டிங் இருக்கு. அவங்க என்ன சொல்லப் போறாங்களோ” இன்னும் பேச வாய் திறந்தவன் அவளது மிரண்ட பார்வையைக் கவனித்து, “ப்ச் நத்திங்” என்றவன் அமைதியாக கண்களை மூடிப் படுத்தான்.
சோர்வுற்று எழுந்தவளுக்கு ஆறுதலாய் ஏதும் பேசமாட்டானா? ஒரு சின்ன அணைப்போ, சிரிப்போ கூட தந்தால் போதுமே என்றிருந்தது. இப்படியே இருந்தால் பைத்தியம் பிடிக்கும்னு இருக்கவும், அவன் அருகாமையில் தூக்கமும் வராது போலத் தெரியவும், குளிப்பதற்காக குளியலறை சென்றுவிட்டாள்.
ஷவரை ஆன் பண்ணியதும் எடுத்தவுடன் குளிர் நீர் அருவியாய்க் கொட்டியது.
ஏற்கனவே குளிரில் நடுங்கியதும், இப்பொழுது குளிர் நீர் தலையிலிருந்து கால் வரை நனைக்க, சாதாரண நிலையில் இருந்திருந்தால் இந்நேரம் அய்யோ அம்மான்னு அலறியிருப்பாள்.
ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் பூதாகரமாக கண் முன் நின்றிட, குழப்ப நிலையில் இருந்தவளுக்கு குளிர் வெப்பம் எதுவும் உரைக்கவில்லை. அப்படியே நின்றிருந்தாள்.
“நளிரா!” வெளியே சிபினின் குரல் ஓங்கி ஒலிக்கவும், திடுகிட்டு விழிப்புக்கு வந்தவள் “ஹான் வந்துட்டேன்” அங்கிருந்த பெரிய டவலை எடுத்துப் போர்த்திக் கொண்டு வெளியே வந்தாள்.
குளித்து விட்டுத்தான் மாற்றுடையைத் தொடவேண்டும் என சைத்ரா சொல்லியிருப்பதால் உடைகளை எடுத்துக்கவில்லை.
மழைக் கோழியாய் நடுங்கியபடி வந்தவளை பார்த்தவன் “இப்படிக் காட்டிக் காட்டி மயக்கித்தான் சாவடிக்கப் பாத்திருக்க” என்று அவள் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டினான்.
அவனது பேச்சில் விக்கித்து நின்றவளுக்கு தான் என்ன தப்பு செய்தோம் புரியவேயில்லை.