வேந்தன்… 46

4.4
(14)
வேந்தன்… 46
இரவு முழுவதும் குளிரில் நின்றது, இப்போது குளிர்தண்ணியில் குளித்தது என எல்லாம் சேர்ந்து அவள் தேகத்தை இளம் ரோஜா வர்ணத்தில் மாற்றியிருக்க, கிடுகிடுன்னு நடுங்கி நின்றவளைக் கண்டு சிறிதும் இறக்கம் காட்டாது விஷநாகம் போல வார்த்தைகளால் கொத்தினான். 
“அறிவில்ல உனக்கு? ஒரு ஆம்பளை ரூமுக்குள்ள இருக்கான், அவன் முன்ன இப்படி வந்து நிக்கறம்னு வெக்கமாயில்ல உனக்கு? எப்ப எவன் சிக்குவான் அவனை கைக்குள்ள போட்டுக்கலாம்னு பாப்பியோ?” அவள் மீதான பழி சொற்களை நெருப்பாய் உமிழ்ந்தான்.
சுடுதண்ணியை வாரி அடித்தது போல அவனையே பார்த்தவளின் விழிகளில் அத்தனைக்கு இயலாமை. தற்போதைய நிலையில் எதையும் சிந்திக்கக் கூட முடியாத அளவுக்கு உடலும் மனசும் சோர்ந்து போய்க் கிடக்க, 
வெளியே நேற்றுதான் கல்யாணமானதும், தனக்குத் தாலி கட்டிய பேய் கதவுக்கு வெளியே தன்னைப் பிடிக்க வெறியோடு காத்திருப்பதும் சுத்தமாக மறந்தே போனாள். 
“என்னடி முறைக்குற?” அவளது ஏதுமறியாத பார்வையை, நடிக்கிறாள்என்று எண்ணியவன் இன்னும் அவளை மிரட்டினான்..
“என்னால உங்ககிட்ட பேசக்கூட முடியலை. விட்டுருங்க” அதைச் சொல்வதற்கு கூட அவளுக்கு சத்தில்லாமல் போகவும், அவளுக்குக் கூடகேட்காத வண்ணம் சப்தமில்லாது சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முற்பட. 
அவள் தோள் பற்றி தன்னருகே இழுத்து நிற்க வைத்தவனின் பார்வை அவள் மீது படர்ந்து பரவியது. இதற்கு மேல் தாங்க மாட்டாள் என்றுதான் அவளை போகட்டும் என்று விட்டான். 
ஆனால் அவளோ இப்படி அரைகுறையாக வெற்றுத் தோள்களும், தொடைவரை மட்டுமே துண்டு மறைத்திருக்க, ஹார்மோன்களைக் கூத்தாடத் தூண்டிடும் வாழைத்தண்டு கால்களும் என கண்ணுக்கு குளிர்ச்சியாக, அமுல்பேபியாக கண்முன் நிற்க, 
அவள் மீதான ஆசை இன்னுமின்னும் அதிகமாக, அவனால் தன்னைக் கட்டுப்படுத்தவே முடியாது போனது. டவலின் மீது கைவைத்தான், கைப்பற்றுவதற்காக. 
அவனது நோக்கம் அறிந்தவள் பதறினாள் “கடவுளே!” இருகைகளாலும் டவலை மார்போடு இறுகப் பற்றியவள், வேகமாய் அங்கே மேஜையில் இருக்கும் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைய முற்பட. 
அவன் விட்டால்தானே. காதலுக்கும் வெறுப்புக்கும் இடையே ஊசலாடியவன் மிருக நிலையை எப்போதோ அடைந்துவிட்டான். அவளை வதைப்பதை மட்டுமே நோக்கமாய் கொண்டவன் போலும். 
அவள் கையிலிருக்கும் உடைகளைப் பிடுங்கி எறிந்தவன், அவளை அப்படியே கைகளில் தூக்கிக்கிட்டு படுக்கையை நோக்கிப் போனான். 
“என்னால முடியாது. விடுங்க ப்ளீஸ்” விம்மலுடன் அவன் கைகளுக்குள் இருந்தவளுக்கு தேகமெங்கும் கூசிப் போனது. தன்னை அசிங்கமாய் தப்பாய் பேசுபவனின் முன் இப்படி இருக்கோமே என்ற எண்ணமே அவளைக் கூனிக் குறுக வைத்தது. 
தன் மீது படர்ந்தவனை பலம் கூட்டி அடித்தும் விலக்கியும் விட முயற்சி செய்தும் முடியாது போனது. அவன் வலிமைக்கு முன் தோற்றுப் போனவளுக்கு கண்ணீர் மட்டுமே மிச்சமாய் ஆனது. 
“என்ன விட்டுருங்க. என்னால முடியாது” அவன் கைகளுக்குள் கட்டுப்படாது அழுதவளை, “ஏய்!” ஒரே அதட்டலில் அடக்கிவிட்டான். 
“உன்ன பெத்தவங்க இப்போ இங்கேதான் இருக்காங்கடி. அவங்ககிட்டயே நியாயம் கேட்கட்டுமா? என்கூட படுக்கத்தான கல்யாணம் பண்ணி வச்சிங்க. உங்க பொண்ணு மாட்டேன்னு அடம் பிடிக்கறான்னு சொல்லட்டுமா? சொல்லுடி. ஒருவேளை அவங்க சொன்னாத்தான் புருஷன் தேவையை நிறைவேத்துவியோ?” அவளை கொஞ்சம் கொஞ்சமாய் தன் வார்த்தைகளால் சித்தரவதை செய்தான்.
“அய்யோ அவங்ககிட்ட ஏதும் சொல்ல வேண்டாங்க” உதடுகளை பற்கள் கொண்டு கடித்தவள் அழுகையை அப்படியே அடக்கிக் கொண்டாள்.
“இனியொரு தரம் நீ அழுற சத்தம் என் காதுல கேட்டுதுன்னு வை. அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன் தெரிஞ்சுக்கடி” அவள் குரல்வளையை ஒற்றை விரலால் அழுத்திச் சொன்னவன், அவளுள் வன்மையாய் அடைக்கலம் புக. 
கண்களை இறுக்கமாக மூடியவளின் இமையோரம் அவள் கொண்ட வேதனைகளின் கண்ணீர் துளிகள், அவள் மீதுள்ள நேசத்தை தனக்குள் புதைத்து வெறுப்பை மட்டுமே காட்டுபவனின் நெஞ்சத்தைக் கறையாக்கியது. 
ஒரு பெண்ணை அன்பால் உனக்கு எல்லாமுமாக நானிருக்கேன் என்ற அரவணைப்புக் கொடுத்து, அவள் வதனத்தில் சிரிப்பை வரவைத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஆலிங்கணம் செய்பவனே காதல் கணவன். 
இங்கே முற்றிலும் மாறாக இருந்தது. அவன் நம்மை விரும்பித் திருமணம் செய்து கொள்கிறான். அதனால் அவனோடு வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற கனவுகளோடு திருமண வாழ்க்கைக்குள் வந்தவளுக்கு பெருத்த அடியாகப் போனது. 
“ஆளைப் பார்த்து பழகுறவதானடி நீ. உனக்கென்ன வெக்கம் மானம் எல்லாம். ஆள் சிம்பிளா இருக்கான்னு விலக்கித் தள்ளுனவ, நான் ஆடம்பரமா வரவும் என்னை மயக்கிக் கைக்குள்ள போட்டுக்கிட்ட. இப்போ என்னடி வேண்டாம்னு விட்டுட்டு ஓடுறவ. பணத்துக்கு வந்தவ எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும் புரிஞ்சுதா?” அவன் தந்த காயங்களை கண்ணீருடன் தாங்கியவளுக்கு அவன் பேச்சின் அர்த்தம் புரியவேயில்லை. 
யாரை மயக்கினேன்? எப்போ?… இந்தக் கேள்விகளுக்கு முன் அவன் தரும் வலியே அவளை வருத்தியெடுக்க, “போதும்!” கெஞ்சினாள் அவன் காதோரம். 
 
அவன் விடுவித்ததும் மறக்காது உடைகளை எடுத்துக்கொண்டே குளிக்கப் போனாள். 
“ஏய் நில்லு” அவன் அழைக்கவும். 
மிரட்சியுடன் அவனைப் பார்த்து நின்றாள் பேதை. 
“உங்க வீட்டுலே இன்னைக்கு கிளம்பறேன்னு சொன்னாங்க. கிளம்பினதும் கீழே உனக்காக ஒரு ரூம் ஒதுக்க சொல்லியிருக்கேன். அங்கயே உன்னோட திங்க்ஸ் வச்சுக்கோ. அண்ட் நீ குளிக்கறது ட்ரெஸ் மாத்துறது எல்லாம் அங்கயே வச்சுக்கோ. படுக்கறதுக்கு மட்டும் இங்கே வந்தா போதும். முக்கியமான விஷயம் எனக்குத் தேவையில்லாத போது அங்கயே படுத்துக்க என்ன?” இகழ்ச்சியான சொன்னவனின் பேச்சில் மனதில் சுருக்கெனத் தைக்கவும், அங்கே அதற்கு மேல் நிற்காது விலகிப் போனாள் கண்ணீரோடு. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!