இந்த ஊருக்கு வந்ததில் இருந்து, நேற்று திருமணம் ஆகி மாமனார் மாமியார் என்ற உறவு உண்டானதில் இருந்து இப்பொழுது வரைக்கும் பெரியவர்களிடமோ தன் சகோதரிகளிடமோ மதிப்புக் குறைவாகவோ அல்லது முகத்தை சுளித்ததோ இல்லை இவன்.
தன்னிடம் எப்படி நடந்து கொண்டாலும் தன் பிறந்தகத்தினரிடம் மரியாதையாகப் பேசுகிறானே என்ற அளவில் திருப்தியாகியிருந்தாள்.
ஆனால் இப்பொழுது இப்படிச் சொல்பவன் இதையே தன் பெற்றவரிடம் கேட்டுவிட்டால்? நளிர்பெண்ணின் மெல்லிய இதயம் பதறிப் போனது.
அவன் கால்களை இறுகப் பற்றியவள், “பிளீஸ் அவங்க இதையெல்லாம் தாங்க மாட்டாங்க. சத்தம் போட்டுப் பேசினாக் கூட ஆகாது. எதுவா இருந்தாலும் என்னோட போகட்டும்” கண்ணீர் விட்டுக் கெஞ்சினாள் அவனிடம்.
“அப்பாம்மா அக்கா தங்கச்சி இவங்களுக்காக என்ன வேணா செய்வியோ. அண்ட் நான்னாத்தான் உனக்குக் கசக்குதுடி. என்கிட்டே பேசணும்னா மட்டும் பிடிக்கறது இல்ல உனக்கு” அவனின் மனதில் அழுந்திக் கிடந்த பாரம் வெளியாகத் துடித்தது.
“கடவுளே அப்டிலாம் எதுவும் இல்லங்க” அவனிடம் எப்படி தன்னைப் புரிய வைப்பது என்று தடுமாறி நின்றாள் பேதை. இருகைகளும் தட்டினால் தானே அழகான ஓசை எழும்.
இங்கே நளிரா கணவன் கூட சேர்ந்து சந்தோசமாய் வாழ தயாராக இருக்கையில் அவனோ அவளை எப்போது பார்த்தாலும் கழுகாய் கொத்திக் குதற, அவனைக் கண்டாலே மிரண்டு விலக ஆரம்பித்தாள்.
அவன் வருவது தெரிந்தாலே ஒளிந்து கொண்டாள் காலையில் இருந்து.
“இப்போ எதுக்குடி அழுது சீன் கிரியேட் பண்ணுற” அழுத்தமாய் நின்றிருந்தவனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லையெனினும் அவள் பாதம் பற்றி அழுததும் இதயத்தில் சுருக்கென ஒரு வலி எழுந்தது.
அவள் தோள் பற்றி எழுப்பியவன் “அழாதேடி. நீ அழுதா பத்திக்கிட்டு வருது” பற்களை கடித்தவன் அவள் கண்ணீரை நிறுத்த முயன்றான்.
அதட்டல், கோபம, சத்தம் போட்டு கத்துறது, அடிவாங்கியும் பழக்கமே இல்லாத மென்மையான மலர் போன்ற பெண் நளிரா. பெண்ணின் குணமறிந்து அவளைப் பூ போல தாங்கினார்கள். குடும்பமே நளிரா மீது அன்பைக் கொட்டிட.
இங்கே திருமணமாகி வந்த இடத்தில் நிம்மதியே கிட்டடாது தவிக்கிறாள்.
அவன் அதட்டியும் கண்ணீர் வற்றாமல் வர, ஒரு பெருமூச்சை இழுத்துப் பிடித்தவள் “நீங்கதான சொன்னீங்க சண்டை சந்தோசம்னு நமக்குள்ள நடக்கறது எதுவா இருந்தாலும் நம்மோட நமக்குள்ள மட்டுமே இருக்கட்டும்னு. நானும் அப்படித்தானே இருக்கேன்
இப்போ எதுக்கு தேவையில்லாம அவங்களைப் பேசுறீங்க?” கண்ணீரை துடைத்துக் கொண்டு பிடிவாதமாய் உதடு சுளித்துக் கேட்டவளைப் பார்த்த சிபினுக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது.
“ம்ம்ம் எஸ்” நீயெல்லாம் கேள்வி கேக்கற பாத்தியா என்பது போல அலட்சியமாய் தலையசைத்து பதில் சொன்னான்.
“ஆனா நான் சொல்றேன் இன்னைக்கு அவங்க போக மாட்டாங்க. அது மட்டுமில்லாம இன்னும் ஒன் வீக் அவங்க இங்கதான் இருப்பாங்க. நான் சொல்லிட்டேன்” அவள் முகத்தில் அத்தனை உறுதி.
“ஓஹ் மேடம் உரிமைப் போர் நடத்துறீங்களோ?” சிபின் வியப்பாய் புருவங்களை உயர்த்தினான். சற்று முன் பயந்து நடுங்கிய பெண் இப்பொழுது எப்படிப் பேசுகிறாள்… அவனால் நம்பவே முடியவில்லை.
“எஸ் இந்த வீட்டுலே எனக்கும் சரிபங்கு இருக்கு” உதடு குவித்து அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள்.
அவனுக்கு இதைக் கேட்கவும் மொத்தக் கோபமும் பணியாய்க் கரைந்தது. தன்னுடையதை உரிமை கொண்டாடும் பெண் மீது அவனுக்கு காதல் மிகுந்தது.
“நமக்கு கல்யாணம் ஆச்சுல்ல. அப்போ உங்களது எல்லாம் என்னோடதும்தான். எப்போ என் கழுத்துல தாலி காட்டுனீங்களோ அப்பவே உங்களோடது எல்லாமே எனக்கும் சொந்தம்தான். நான் சொன்னது சரிதானே” தலை சாய்த்துக் கேட்டாள்.
“யாஹ் அப்கோர்ஸ்” ஆமோதித்தான் சிரிப்பை அடக்கி.
“அப்போ இனிமேல் இப்படிப் பேசாதீங்க” இருந்த இடத்திலிருந்து எழுந்தவள் வெளியே செல்லப் போக.
அவளை இழுத்து அணைத்தவன் “இதெல்லாம் நீயா பேசுற மாதிரி இல்லையெடி”
“ம்ம்ம் வாணி ஆண்டி அங்கிள்கிட்டே பேசும்போது பார்ப்பேன்” ஆரம்பத்தில் இவளும் பயந்தாள்தான். அதுக்குப் பிறகே எங்க வீட்டைப் பத்தி இப்படிப்பட்ட வார்த்தைகளை விட நீ யாருன்னு ஒரு முரட்டு தைரியம் வந்து அவனை என்ன சேதின்னு கேட்டு விட்டாள்.
“விடுங்க நான் போறேன்” நளிரா அங்கிருந்து விலகப் பார்க்க.
“அம்மா உன்கிட்டே என்ன சொல்லி அனுப்பினாங்க இங்கே” சிபின் அவள் காதோரம் முத்தமிட்டு விசாரிக்க.
அவளோ அவன் எப்போது எப்படியிருப்பான்னு தெரியாம பேசமடந்தையாய் நின்றாள்.
“கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்டி” அவள் கன்னத்தில் நறுக்கெனக் கடித்தான்.
“ப்ச் விடுங்க” அவன் மார்பில் தன் வளைகரங்களைப் பதித்துத் தள்ள. அவளது மொத்த வலுவயும் ஒன்று திரட்டித் தள்ளினாலும் வலிய ஆணின் முன் அது எடுபடவில்லை.
“போகணுமா?” முத்தங்களால் அவளை இம்சித்தான்.
“ம்ம்ம்” பாவையாய் தலையை அசைத்திட.
“அப்போ கிஸ் பண்ணு. அதுல நான் ஹேப்பி ஆகியாச்சுன்னா நீ போயிட்டே இருக்கலாம்” அவள் முன் ஒரு நிபந்தனையை வைத்தான்.
“அதான் பண்ணிட்டே இருக்கீங்களே” புரியாது விழித்தாள். தன்னை எப்படி வருத்தினாலும் முத்தங்களால் மொத்தமாய் குளிப்பாட்டி விடுகிறானே.
“நான்தானே பண்றேன். இப்போ நீ கொடு” மோகப் பார்வையால் அவளை வருடியவன் இம்மியும் நகரவிடாது தன் கைவளைவில் வைத்துக் கொண்டு ஏகமாய் சோதித்து வைத்தான்.
“கிஸ் மட்டும் தந்தா விடுவீங்களா? இப்போ வேணாங்க ப்ளீஸ் லேட் பண்ணுவீங்க. அப்புறம் குளிக்கணும்” அவன் மார்பில் முகம் புதைத்து,
“கதவ திறங்க. போறேன்” என்று கேட்டாள். அவளுக்குத் தெரியும் ஏதோ ஒரு கோபத்தில் தன்னை இப்படி வதைக்கிறான் என்று. அதற்காக பயந்து ஓட முடியுமா. இதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணதற்குப் பிறகு அஞ்சி ஓடி என்ன பயன். அப்படி ஓடவும் இவன் விடணுமே.
“பாவம்னு விடறேன். பட் நைட் நிறைய கிஸ் அதும் நீதான் தரணும் என்ன” என்ற அனுமதியோடு அவளை விடுவித்தான்.
கதவு வரை போனவள் அப்படியே சென்றிருக்கலாம். அவள் கேட்டதிலும் தப்பில்லைதான். மலர்விழிதான் அவளுக்கு அறிவுறுத்தி இருந்தார். “நீ பாட்டுக்கு தேமேன்னு இருந்துக்காதடி. சின்னவரு எப்படி இருக்காருன்னு மாப்பிள்ளைகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்க. முடிஞ்சா ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வந்துருங்க” என்று நியாயமாகவே சொல்லித் தந்திருந்தார் மகளுக்கு.
ஆனால் அவனிடம் அந்த நியாயம் எடுபடணுமே. அவனே தன் தம்பியின் நிலைக்கு காரணம் அவள்தான் என்றும். அதெப்படி அவளைத் தன் தம்பியே ஆனாலும் அடுத்தவன் விரும்பலாம் என்றும்,
இருக்கு ஆனால் இல்லை என்ற மனநிலையில் உரிமைப் போராட்டம் நடத்திட்டு இருக்கான்.
அவனிடம் அவள் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டு வைத்தாள்.
“உங்க தம்பி நல்லாருக்காரா? நாம அவரைப் பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்டிருக்க.
“வாய மூடுடி” என்றவன் அவள் இடையை இறுகப் பற்றித் தன்னோடு சேர்த்து அணைத்தான்.
நகங்கள் இடையில் பதிய, அவளுக்கோ வலியில் உயிர் போக, அவன் சட்டையை இருகைகளாலும் பற்றியவள், “வலிக்குதுங்க” என்றழுதே விட்டாள்.
என்ன தவறு செய்தோம் என்று அறியாது, தன்னை வதைப்பவன் மார்பிலேயே அடைக்கலம் புகுந்து விம்மி அழுதாள் பெண்ணவள்.
“ஐ ம் சாரி” என்றவளின் விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டிட, தேம்பித் தேம்பி அழுதாள்.
அவள் நாடியை ஒற்றைவிரலால் நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், “எதுக்கு சாரி?” அவள் விழிகளுக்குள் பார்த்தவாறே உருமலாய்க் கேட்டான்.
“தெரியலைங்க. நான் என்ன தப்பு செஞ்சேன்னே தெரியலைங்க” அவன் மார்பில் முகம் பதித்துக் கதறியவளுக்கு எதுவுமே புரியவில்லை. நடுக்காட்டில் விட்டது போலத்தான் இருந்தது.
“நீ… நீ எனக்கு மட்டும்தாண்டி. எனக்கு மட்டுமேதான். ப்ளீஸ் என்னை விட்டுப் போயிடாதடி” அவளை தன்னோடு இறுக அணைத்தவனின் தேகம் மொத்தமும் அவளை தனக்குள் பொத்தி வைப்பதைப் போல இறுக்கியது.
மூச்சுக் காற்றுக்கும் திணரியவளுக்கு அவன் சொன்னது காதில் விழுந்திருந்தால் அப்போதே எது வந்தாலும் தாங்கியிருப்பாள். அவனது மனதில் என்ன இருக்குன்னு குறைந்தபட்சம் தெரிந்துகொள்ள முயற்சி செய்திருப்பாள்.
ஆனால் அவன் தனக்குள்ளேயே போட்டு மறுகிக்கொண்டு இருக்கவும், அவளுக்கு அவனைப் பற்றி எதுவுமே தெரியாது போனது.
தன்னை சித்திரவதை செய்வதற்காகவே அவன் தன்னை திருமணம் செய்திருக்கிறான் போலும் அரக்கன் என்றவள் உள்ளம் மறுகியது.
இருவரும் வேறு வேறு எண்ணங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்திருக்க, சுருக்கென ஏதோ கடிக்கவும்தான் நிகழ் காலத்திற்கு வந்தாள் நளிரா.
தன் தேகம் முழுக்க அவன் இதழ்கள் ஊர்வலம் போவதை அப்பொழுதுதான் உணர்ந்தவளுக்கு, தன் நிலை உரைக்கவும் பதறித் தடுக்க முயன்றாள். இரவு கால்வாசி வெளிச்சத்தில் நிழலாய் இரு தேகமும் ஒன்றிணைய. தற்பொழுது இப்படிப் பட்டப்பகலில் அவன் முன் தான் இருக்கும் நிலை, எழுந்திருக்க முயன்றவளின் கரங்களை வலது கையால் பற்றிக்கொண்டான் அவள் கணவனாய்.
தன் அருகில் ஒருகழித்து அமர்ந்திருந்தவனின் கூரிய விழிகளில் ரசனையின் மிகுதியில் சிவப்பேரிக் கிடக்க, அவள் மீதான காதலும் காமமும் கலந்து கட்டிக் கூத்தாட, எச்சில் விழுங்க அவளையே இமைக்காது ரசித்தான் சிபின்.
“ப்ளீஸ் கூச்சமா இருக்குங்க” சற்று முன் தாங்கள் இருந்த நிலையை இருவருமே தற்பொழுது மறந்து போயிருக்க. அவர்கள் மறந்தார்களோ இல்லையோ மாறன் தன் அம்புகளை எய்தி மறக்க வைத்தான் என்றே சொல்ல வேண்டும்.
அவளது சினுங்கல் அவனை பொறுமையிழக்க வைத்திட, மீசை முடிகள் தேகமெங்கும் முள்ளாய் உரசிட, உதடுகளால் அவளை சித்தம் கலங்க வைத்தவன் வன்மையாய் அவளை எடுத்துக்கொண்டான்.
அவனது வேகம் தாளாது முரண்டு பிடித்தவளை அடக்கி ஆதிக்கம் செலுத்தியவன் அவள் மார்பின் மீதே தஞ்சம் புகுந்தான். இருவரது விழிகளிலும் இன்பத்தின் மிகுதியில் கண்ணீர் வழிய. அவனது இதழ்கள் அவளது நெற்றியில் அழுத்தமாய் பதிந்தது.