துருவ் ஆரியன் மடியில் படுத்து மிராவின் மடியில் கால்களை நீட்டிப் போட்டு முகம் முழுக்க புன்னகையோடு பேசிக்கொண்டிருந்தான். மனதில் உள்ள கவலைகள் எல்லாம் காற்றோடு காற்றாய் கரைந்து போயிருக்க அவனது பழைய ஆக்விட்டீஸ் திரும்ப வந்திருந்தது.
மகனின் தலையில் இருந்த தையலை வருடிவிட்ட ஆரியன் “ஹேர் ஸ்டைல் அதேதானா? இல்ல மாத்திக்கப் போறியா துருவ்?” விளையாட்டாகக் கேட்டான் ஆரியன்.
“மாத்திக்கனும் டாட். இந்த டைம் நியூ ஸ்டைல்ல வைக்கப் போறேன். பாத்தவுடனே பத்திக்கணும்” சிரித்தான்.
“கேட்டாச்சும்மா. அண்ணி ரொம்ப கியூட். நல்லா பேசுறாங்க. சாரி கேட்கலாம்னு நினைச்சேன். ஆனால் அவங்களுக்குத்தான் ஏதும் தெரியாதே. அதான் தேவையில்லாம குழப்ப வேண்டாம்னு விட்டுட்டேன்” மனதார வருந்தினான்.
“புரிஞ்சுக்கிட்டியே. அதுவே போதும் துருவ்” ஆரியன் மகனுக்கு தைரியம் சொன்னான்.
“மாம் டாட் நாளைக்கே பீச் ஹவுஸ் போறோம். என்ஜாய் பன்றோம். அலைகளுக்குள்ள அப்படியே சொய்ங்ன்னு…” சொல்லச் சொல்லவே அவன் டீ சர்ட்டின் காலரைக் கொத்தாகப் பற்றி இழுத்த நளிரா அவனை நேராக அமர வைத்தாள்.
“எந்திரிடா முதல்ல” முகம் சிவக்க அவனைப் பார்த்தவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது. பால்வாடி பாப்பா மாதிரி இருந்துட்டு தன் வாழ்க்கையில் கும்மி அடிச்சிட்டானே என்று இருந்தது அவளுக்கு.
“நளிரா அவனுக்கு உடம்பு சரியில்லைம்மா” மிரா மகனுக்காகப் பரிந்துகிட்டு வரவும்.
அப்படியே அதே கோபத்துடன் மாமியாரையும் மாமனாரையும் ஒரு பார்வை பார்த்து வைத்தாள் நளிரா, அவர்களோ ஏன் எதற்கென்று ஒருவார்த்தை கூடக் கேட்காது அங்கிருந்து எழுந்து வந்து எதிர்த் திசையில் அமர்ந்தனர்.
“அண்ணி!” நளிராவை ஒன்றும் புரியாது பார்த்தான் துருவ்.
“அப்பாவியாட்டம் பார்க்கறதை முதல்ல நிறுத்து” என்று அவன் கன்னத்தில் சப்புன்னு ரெண்டு அரை வைத்த நளிரா, “அப்படியென்னடா அவசரம் உனக்கு. எது என்னன்னு ஒண்ணுமே யோசிக்காம குடிச்சுட்டு கார் ஓட்டிட்டு போற? அதும் அந்த நேரத்திலும் இவர் வாய்ஸ் நோட் அனுப்புவாராம்” ஏகத்தாளமாய் சொன்னவள் திரும்பவும் அவனை அடிக்கக் கையோங்கிட்டு வர.
“ஹான் இவரு” சிபின் பக்கம் திரும்பியவள் அவன் அருகே அதே வேகத்துடன் வந்தவள் எதையும் யோசிக்கவே இல்லை, துருவ்க்கு விழுந்த அதே அடி சிபின் கன்னத்திலும் விழுந்தது.
“ஓ மைகாட்” துருவ் அரண்டே போனான்.
“பாராபட்சமில்லாம வாங்கிக் காட்டுறாங்கடா” ஆத்மா ரவிக் இருவரும் திறந்த வாயை மூடவேயில்லை. சிபின் நளிரா இருவரும் பேசுவதை முழுவதும் கேட்டவர்கள், நளிரா கோபமாக அங்கிருந்து எழுந்து வரவும், சற்று தள்ளி தூணின் பின்புறம் நின்று கொண்டனர். ஏனெனில் அவர்கள் இருவரும்தான் இந்தப் பிரச்சனைகளின் ஆணி வேர்கள்.
அவர்கள்தானே துருவ்வை அங்கே அழைத்துப் போனது. அவர்கள்தானே சிபின் காதில் நளிரா அடித்ததாகப் போட்டுக் கொடுத்தது.
“இதோ இவனை அப்பவே நான் மறந்துட்டேன். இவன் முகம் கூட நினைவுக்கு வரலை. அப்படியிருக்கப்ப இவனை நான் அடிச்சேனாம் இவரு பழிவாங்க வருவாராம். வந்த இடத்துல லவ் பண்ணுவாராம். அப்புறம் திரும்பவும் பழி வாங்க கல்யாணம் பண்ணிக்குவாராம்” ஆத்திரத்தில் நளிராவுக்கு மூச்சு வாங்கிட.
“நிஜமாவே உன்னை லவ் பணனேன் ஹனி” சிபின்
“அடச்சீ வாயை மூடுங்க” அவளது சப்தத்தில் அனைவரும் அரண்டு போனார்கள்.
மெல்லிய பெண்ணுக்குள் இத்தனை ஆவேசமா? நம்பவே முடியவில்லை ஆரியனுக்கு.
“வெட்கமாயில்ல உங்களுக்கு. ஒரு பொண்ணு வாழ்க்கையில் விளையாட உங்களுக்கு யாருங்க ரைட்ஸ் தந்தது?” சிபினை பார்த்துக் கொந்தளித்தாள்.
“அதும் நீங்களும் மாமாவும் இதோ இந்த இவனுக்காக தினமும் ஒரே சோகப் படமாவே ஒட்டித் தள்ளுனீங்க பாத்துக்குங்க. உங்களை சமாளிக்கவா, இதோ இந்த ஆன்ட்டி ஹீரோவை சமாளிக்கவா. இதுக்கே என்னை தாங்கணும் நீங்க” ஆரியனையும் மிராவையும் பார்த்து சொன்னவள்,
திரும்பவும் சிபின் பக்கம் திரும்பியவள்,
“எவ்ளோ கனவு ஆசை எதிர்பார்ப்புகள். எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சுட்டீங்க., இதோ இப்போ என் வயித்துல உங்க குழந்தை. அவ்ளோதான் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. புருஷன் என்ன வேணா பண்ணுவான் பிள்ளைக்காக வாழலாம்னு உங்க கொடுமைகளை சகிக்கணும். அதானே இனிமேல் என்னோட மிச்ச வாழ்க்கை?” கசப்பாகக் கேட்ட நளிரா.
“போதும் சாமி நான் போறேன். உங்க சங்காத்தமே வேண்டாம் எனக்கு” கையெடுத்துக் கும்பிட்ட நளிரா, “எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க” அவர்கள் நால்வரையும் பார்த்தவள்,
“தயவுசெய்து நாலு பேரும் என்னோட கண்ணுல பட்டுறாதீங்க சொல்லிட்டேன்” கண்கள் கலங்க சொன்னாள்.
“நளிரா!” மிராவுக்கு நளிராவின் பேச்சில் பதறிப் போனது.
“என்ன நளிரா நொளிரா? இப்ப என்ன உங்க மகனை அனுசரிச்சுப் போகணும் அதானே” ஆமான்னு சொல்லித்தான் பாருங்களேன் என்ற மிரட்டல் கடுமையாகத் தொனிக்க.
ஆரியனையே அடக்கி கைக்குள் வைத்திருக்கும் மிராவுக்கே அவளது கோபம் பயத்தைக் கொடுத்தது. தலையை நாலா பக்கமும் அவர் ஆட்டிட.
“அம்மாகிட்ட இப்படிப் பேசாத நளிரா” சிபினுக்கு இவளது கோபம் தாயைப் பாதிக்குமோ என்ற பதட்டம் வந்தது.
“அண்ணி” துருவ்கும் அம்மாகிட்ட ஹார்சா பேசிடுவாளோ என்ற பயம் பிறக்க, அவள் பேசுவதை தடுக்க முற்பட்டான்.
“நீ பேசாதடா. ஏற்கனவே மண்டை பஞ்சராகி இப்பதான் ஒட்டிட்டு வந்திருக்கு. மரியாதையா வாயை மூடிக்க” நளிரா அருகில் இருந்த சிபின் மொபைலைத் தூக்கி துருவ் மீது வீசிட.
ஆத்மா அதைக் கேட்ச் பிடித்தான். ஆத்மா ரவிக் இருவரையும் துருவ் தன் அருகில் தனக்குப் பாதுகாப்பாக அமர வைத்தான்.
“உட்காருங்க மச்சீஸ். கால் வலிக்குமில்ல” என்று துருவ் சொல்ல.
“த்தூஊநாயே” ரவிக் மெலிதாக கடிந்து கொண்டான் அவனை.
“ஹிஹிஹி தேங்க்ஸ் மச்சி” துருவ் அசடு வழிந்தான்.
“வெட்கமாயில்ல உனக்கு?” ரவிக் அவனைக் கேட்டிட.
“நான் மட்டுமா? டோட்டால் குடும்பமே வாங்கிக் கட்டுதுடா” துருவ் வாய் அசைக்காது சொல்லிட.
“அதுசரி” நம்மகிட்ட வராத வரைக்கும் சரிதான் என்று வாயை மூடினர் இருவரும்.
“அத்த மாமா. நீங்க என்ன நினைக்கறிங்க. இதுதான் பிரச்சனையா?. இதை ஈசியா சமாளிக்கலாம்னா” அவள் அவர்களைப் பார்வையாலேயே எரித்துக் கேட்க.
ஆரியன் மிரா இருவரும் வாயே திறக்கவில்லை. தலையை கூட அசைக்கவில்லை. அவளையே பொம்மை போலப் பார்த்திட.
“ஒருவேளை பிரச்சனை இதுமட்டும்தான்னா நான் அவர்கிட்டயே என் கோவத்தைக் கொட்டி இருந்திருப்பேன். இல்லைன்னா அவர் கூடவே பேசாம இருந்திருப்பேன். ஆனால் உங்ககிட்ட இந்த விஷயத்தைக் கொண்டு வரதுக்கு காரணம் இருக்கு அத்தை” நளிராவுக்கு நிற்கவே முடியில்லை.
கால்கள் தளர சோபாவில் அமர்ந்தாள்.
“நளிரா கொஞ்சம் பொறுமையா இரும்மா. குடிக்க எடுத்துட்டு வரேன்” மிரா எழுந்திருக்க.
“வேண்டாம் அத்த. இப்பவே பேசிடுறேன். இல்லைன்னா இவரு அப்படியே என்னை அடக்கிடுவார்” என்ற நளிரா,
“இவருக்கு நான் மட்டும்தான் வேணுமாம் அத்த. நான் உங்க கூடவும் பேசக்கூடாது. எங்க அம்மா அப்பா கூடவும் பேசக்கூடாது. சொல்லப் போனால் ஏனோட வயித்துல இருக்க குழந்தையைக் கூட வேண்டாம்னு சொல்லுறார்” நெற்றியை அழுந்தப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டு நளிரா சொன்னாள்.
“அடப்பாவி” துருவ் வாய்விட்டே சொல்லிவிட்டான்.
“இப்ப சொன்ன எல்லோரும் தவிர்த்து மத்தவங்க எங்கிட்ட பேசினா அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுறார் அத்தை. அடிக்கவே போயிடறார். எங்கிட்ட யார் பேசினாலும் அவங்ககிட்ட சண்டைக்கு போறார். அன்னைக்கு கூட ஒருத்தனை கார் இடிச்சு தள்ளப் பார்த்தார். நல்ல வேலை அவன் தப்பிச்சான்” நளிரா சொல்ல.
“ஏன் மச்சி. துருவ் மட்டும் தானா போய் மண்டையை உடைச்சுக்கலைன்னா, நீயே அவன் மண்டையை உடைச்சிருப்ப அதானே?” ஆத்மா சிபினை அதிர்வாகப் பார்த்துக் கேட்டிட.
“ப்ச் டேய்” என்று அவனை மிரட்டினானே தவிர, அவனிடம் மறுப்பில்லை.
“அடேய் என்னடா இவன் இப்படியிருக்கான். துருவ் நண்பர்களை மேலும் நெருக்கி அமர வைத்துக் கொண்டான். அவனுக்கு அண்ணனின் அவதாரத்தில் சர்வமும் ஆடிப்போனது. இப்படியும் ஒருவன் இருக்க முடியுமா என்று நம்பவே முடியவில்லை அவனுக்கு.
ஆரியன் மிராவுக்கோ, என்னவென்றே புரியாத உணர்வு. “சிபின்?” அதிர்வாக அழைத்தனர்.
“ஆமா அத்த. எங்கிட்ட யாரு சிரிச்சுப் பேசினாலும் இவருக்கு வேகும். உடனே சண்டைக்கு வருவார். கண்டதையும் பேசி என்னை அழ வைப்பார்”
“சிபின்?” இதைத் தவிர்த்து வேறு பேச்சே அவருக்கு வரவில்லை.
“ஒரு பொண்ணு மகளா, மருமகளா அக்காவா தங்கையா அண்ணியா தோழியா இப்படி எல்லோருக்கும் ஒவ்வொரு உறவில் முக்கியமானவளா இருப்பா. அப்படியிருக்க எனக்கு மட்டுந்தான்னு உரிமை கொண்டாடி அவளை அபடியே முடக்கி வைக்கறது சேடிஸ்ட் மனப்பான்மை அத்தை” நளிரா சொல்லி முடிக்கவும். யாரிடமும் பேச்சே இல்லை.
“தனியா நிக்கற மாதிரி இருக்கு அத்த. எப்படியும் இவர்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. பேசாம செத்துடலாம்னு நிப்பேன்” நளிரா முகம் பொத்தி அழுதாள்.
“அண்ணி நான் உங்களை உங்கம்மா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் விடரேன் வாங்க” துருவ் அவளை அழைக்க.
“நான் கூட்டிட்டு போறேன் துருவ். நீ ரெஸ்ட் எடு” ஆரியன் எழுந்தான் அவளை அழைத்துப் போக.
“நளிரா இவங்க சொல்றதைக் கேட்காதே, என்கூடவே இரு” அவள் கையைப் பற்றினான் சிபின். விட்டுட்டுப் போய்ட்டா, என்னால தனியா இருக்க முடியாதே என்ற தவிப்பு அவனுக்கு.
“இல்லைங்க நான் போய்த்தான் ஆகணும். உங்களுக்கும் திருந்திக்க ஒரு வாய்ப்புத் தரணும் நான். நாளைக்கு நம்ம குழந்தை வந்த பிறகும் நீங்க இப்படியே இருந்தா நான் பைத்தியம்தான் ஆவேன்” நளிரா சொல்ல.
“ஹனி பிளீஸ்” சிபின் அவளிடம் யாசிக்க.
“பிளீஸ் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். என்னை விட்டுருங்க” அப்படியே மடிந்து அமர்ந்து அவள் அவனிடம் கைகூப்பிக் கெஞ்சினாள்.
அதில் எல்லோருமே பதறினார்கள்.
“எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களோட இந்தப் பிடிவாதமான காதல் மேல அத்தனை லவ் எனக்கு. இப்படி ஒரு காதல் கிடைக்க நான் ரொம்பக் கொடுத்து வச்சிருக்கேன். ஆனால் இதுவே என்னை ஒரு வட்டத்துக்குள் அடக்கி அடிமையாக்குதுன்னா, எனக்கு மூச்சு மூட்டுற மாதிரி இருக்குதுங்க” கண்களில் காதலும் கண்ணீரும் வழிய அவனைப் பார்த்தவளுக்கு அவனது நிராதரவான தோற்றம் வேதனையையே அளித்தது. அவளுக்குத் தெரியும் தான் விட்டுப் போனால் அவனால் மூச்சுக் கூட விடமுடியாதென்று.
ஆனால் இப்படியே விடவும் முடியாதே. தங்களுக்குள் இன்னொரு உயிர் வரப்போகிறது என்றான பின்னர் இப்படியே விடவும் முடியாதே. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அந்த முடிவை எடுத்தாள்.
“எனக்கு அம்மா அப்பா கூட இருக்கணும். அவங்க கூட பேசணும். அத்தை கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணணும், சுபி கூட வெளியே போகணும், அவளை இங்கே வரச்சொல்லி அவளோட ஊரை சுத்தி பார்க்கணும்னு ஆசையா இருக்குங்க” முகப் பொத்தி அழுதவளை அடிபட்ட
எனில் சிபின் தவறா?… இல்லை அவன் அன்பு தவறா? எனக்கும் புரியவில்லை மக்களே.
மனசு வைத்து இதுவரை படித்தவரை உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை எங்கிட்ட பகிர்ந்து கொள்ளலாமே. ஏதேனும் லாஜிக் எரர் இருந்தா சொல்லிட்டுப் போலாமே ப்ளீஸ்.