மாமனார் மாமியார் கொழுந்தனார் உள்பட எல்லோருமே அவளிடம் நலம் விசாரித்து விட்டுப் போனை வைக்க, “நளிரா! அத்த வடுமாங்காய் தாளிப்பு உனக்கு குடுக்கச் சொல்லித் தந்தாங்கடி. சாப்பிடு” சைத்ரா அவள் அருகில் அமர்ந்தாள்.
மலர்விழி ராஜன் ஆர்த்தி மூவரும் சாமிக்கு பூ கட்டியவாறு இருந்தனர். நாளை பொழுது சிவன் கோவிலில் விசேஷம் என்பதால் பூவைக் கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டால், அன்னதானத்துக்கு சாப்பாடு செய்யும் வேலைகளைப் பார்க்கலாமே என்று இன்றே பூவை கட்டினர்.
“உங்க வீட்டைக் கூப்பிடு நளிரா. ஒவ்வொரு மாசமும் விசேஷம் நடக்குது, ஒரு வார்த்தை சொல்லலைன்னா நல்லாருக்காது பாத்துக்க” மலர் மகளுக்கு எடுத்துச் சொன்னார்.
“ஆமாண்டி எங்க வீட்டுல இருந்து, சாமி கும்பிட அவங்களாவே வராங்க ஒவ்வொரு வாட்டியும். அப்போ இவங்க காதுக்கு அந்த விஷயம் போனா தப்பா எடுப்பாங்க” என்று சைத்ராவும் கூறிட.
“சரிக்கா” சோகையாய் சொன்னவள் அவள் மடியில் சொகுசாகப் படுத்தாள்.
அவளது அண்மையை உணர்ந்து வயிற்றில் இருக்கும் தங்கம் அவள் முகத்திலேயே எட்டி உதைக்க, “அக்கா பேபி என்னை உதைக்கறா” என்றவள் உதைக்கும் இடத்தில் ஒரு முத்தம் வைத்து சிரித்தாள்.
மலர்விழி மூத்த மகளுக்கு சைகை செய்து ஏதோ கூற, ஆமோதிப்பாய் சரியெனக் கூறிவிட்டு
“நளிரா” தங்கையின் நெற்றியை இதமாக பிடித்துவிட்டவள் மெதுவாக அழைக்க.
“சொல்லுக்கா” என்றவளின் விழிகள் வாட்சப் மெசேஜை ஆராய்ந்தது. ஏதேனும் தனக்காக அனுப்பியுள்ளானா என்று அவள் விழிகள் ஏக்கத்துடன் தேடியது.
“தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமில்லையே?” பட்டும் படாமல் அவளுக்கு வலிக்காத வண்ணம் கேட்டாள்.
சகோதரியின் கேள்வியில் அவளது விழிகளில் கண்ணீர் அரும்பிட, “நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்லைக்கா. அவருக்கு என் மேல அவ்ளோ காதல். தனக்கு மட்டுமதான்னு குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கற அளவுக்கு அன்பு அக்கா. அதான் இப்ப பிரச்சனையே” பட்டும் படாது கூறியவளுக்கு அவன் தள்ளியிருப்பதும் வேதனையாகவே இருந்தது.
பெரிதாய் எதுவுமில்லை என்பதால் நிம்மதியாய் மூச்சு விட்டனர் அனைவரும், “அதுக்கு தள்ளியிருந்தா சரியாப் போகுமா? ஏற்கனவே அங்கே துருவ்க்கு உடம்பு சரியில்லாம போனதால நிலைமை சரியா இல்ல. இப்போ துருவ் குணமாகி வந்த உடனே நீ அடுத்த பிரச்சனையை ஆரம்பிச்சு வச்சிட்ட. பாவம் டி பெரியவங்க” மலர்விழி மெதுவாக சொல்ல.
நளிராவுக்கும் இதே எண்ணமிருந்ததால் மறுத்து எதுவும் சொல்லவில்லை.
“நளி எங்க அத்தை எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல அப்போ அப்போ எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அப்போ அது தேவையில்லாத அறிவுரைன்னு நினைச்சாலும் நானும் ஆர்த்தியும் ஒதுக்கித் தள்ளலடி. ஆர்த்தி கேலி பண்ணினாலும் அவளும் அவங்க சொல்லுறதை யோசிப்பா” என்றவள் தங்கை தான் சொல்வதை கேட்கிறாளா என்று கவனிக்க,
நளிரா “ம்ம் சொல்லுக்கா” என்று ம்ம் கொட்டினாள்.
“கணவன் மனைவிக்குள்ள என்னதான் பிரச்சனை வந்தாலும் பேசித் தீர்த்துக்கணும், இல்லையா பேசிக்காம இருந்தாலும் ரெண்டு பெரும் கிட்டக்கவே இருந்து அதைத் தீர்க்க முயற்சி செய்யணும். அப்பதான் புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்குற அன்பு தானாகவே அவங்களை ஒண்ணு சேர்க்க முயலும். எத்தனை சண்டை வந்தாலும் ராத்திரியில அவன் பொண்டாட்டியை தேடி வந்துதான ஆகணும். அப்போ அவனை சுலபமா கைக்குள்ள போட்டுக்கலாம்”
“கைக்குள்ள போட்டுக்கற ஆளா அக்கா அவரு. பாத்திங்கள்ள எவ்வளவு ஈஸியா உங்களை சரின்னு சொல்ல வச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு”
“இருக்கட்டும்டி. பிரச்சனைன்னு தனியா விட்டுட்டு வந்துட்டா அதே பழக்கமா போகும் ஆம்பளைக்கு. பக்கத்துலயே இருந்து அவங்களை நல்லா செஞ்சு விடணும். மறுக்கா நம்மகிட்ட மோத அவங்களுக்கு ஒரு பயம் தானா வரணும்”
“அப்போ அம்மா வீட்டுக்கு வர கூடாதாக்கா” நளிரா குரல் நடுங்கக் கேட்டாள்.
“பைத்தியகாரப் பொண்ணே. அப்படி சொல்லலைடி. பிரச்சனையை பக்கத்துல நின்னு தீர்க்கப் பாரு. முடியலைன்னா சொல்லு நாங்களும் துணைக்கு நிற்போம். சந்தோஷமா வந்து இரேன் எவ்ளோ நாள் வேணா. யாரு கேக்கப் போறா உன்கிட்ட” அவள் தப்பா நினைப்பாளே என்று வேகமாக சொன்னவள்,
“இல்ல மிரா பிள்ளைங்க வாழ்க்கை சரியாகுற வரைக்கும் நான் எங்கேயும் வரதா இல்லை, மனசுல ரொம்ப தொந்தரவா இருக்கு” ஆரியன் கவலையாக சொன்னான்.
“சரியாகிடும் நீங்க வருத்தப்படாதீங்க”
“நடந்ததைப் பேசி பிரச்சனையை பெருசாக்கிட வேண்டாம். நேருக்கு நேர் பார்க்கட்டும், அவங்களாவே சேர்ந்தா சரிதான். இல்லைன்னா அவங்களுக்கு டைம் கொடுக்கலாம் மிரா” ஆரியன் எச்சரிக்கை செய்தே அனுப்பி வைத்தான்.
கோவில் விசேஷத்துக்கு அழைத்தார்கள் என்பதை சாக்காக வைத்து, ஆரியனை அங்கே வீட்டில் விட்டுவிட்டு இங்கே மிரா உள்பட அனைவரும் வந்தாயிற்று.
ஆத்மா சிபின் ரவிக் மூவரையும் அங்கே ஆத்மாவின் மாமா வீட்டில் விட்டுவிட்டு,
மிராவும் துருவ்வும் மட்டும் நளிராவின் வீட்டிற்குக் கிளம்பிப்
போனார்கள்.
கதவைத் திறந்த நளிரா துருவ்வைக் கண்டுவிட்டு அவனுடன் சிபின் வருகிறானா என்று எட்டிப் பார்த்து ஏமாந்து போக, வந்த கோபத்தில் “எங்கடா” என்று மட்டும் கேட்டுவிட்டு முறைப்பாகப் பார்த்தாள்.
“நாங்க அப்படியே உங்களையும் பாத்துட்டு ஊரையும் பார்க்க வந்தோம் அண்ணி” அசடு வழிந்தான் துருவ்.
“அதுக்கென்னம்மா. நைட் இங்கயே தங்கிக்கறோம், நாம பேசிட்டு இருப்போம்” மிரா ஆறுதலாகக் கூறினாள்.
ஆத்மா எல்லோரும் செல்வதற்கு ஏற்ப வாகனத்துடன் அங்கே வருகை தர, அனைவரும் கிளம்பிவிட்டனர் கோவிலுக்கு.
மழை வரும் பொழுது, காற்றில் ஒரு சில் தன்மை வருமே, அதுபோலவே லேசான காற்று தேகத்தில் பட்டு மனதையும் சேர்த்தே குளிர்விக்க முயன்றது.
சிபின் கோவிலுக்குள் நுழைந்தான், பெரிய பரப்பளவு கொண்ட சிவன் கோவில், தனி கம்பீரத்துடன் வீற்றிருந்தது.
“அண்ணா வாங்க உள்ளே போகலாம்” துருவ் அங்கே வந்து அவனைத் தன் கூட அழைக்க.
“நீங்க போங்க. நான் சுத்திப் பார்த்துட்டு வரேன்” சிபினின் விழிகள் ஆர்வமாக அங்குள்ள கல் மண்டபங்களில் பதிந்தது.
“ஓகே. நான் போய் அண்ணி எங்கேன்னு பார்த்துட்டு வரேன்” துருவ் நண்பர்களுடன் கோவிலுக்குள் சென்றுவிட்டான்.
அரைமணி நேரம் கோவிலுக்குள் சுற்றி வந்தவனின் மனதில் இனம் புரியாத மாற்றங்கள் உண்டானது. கோவிலில் இத்தனை நேரம் அவன் இருந்ததே இல்லை.
அப்படியே உள்ளே நுழைந்தவன், படிகளில் கால் வைத்து நடக்க.
அங்கே சுபியிடம் ஏதோ சிரித்துப் பேசியிருந்தவளைக் கண்டதும் இவனுக்கு ஏமாற்றம். நாம இல்லைன்னு வருத்தமே இல்லாம சிரிச்சுப் பேசிட்டு நல்லாதான் இருக்கா” அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தன்னைத் தேடவே இல்லையா இவள் என்று.
தரையில் போடப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் சம்மணம் பொட்டு அமர்ந்திருந்தவள் மடியில் வீணை தவழ, அவளுக்கு அருகில் சற்றுத் தள்ளி அவளுக்கு நெருக்கமானவர்களும், இன்னும் சிலரும் இருந்தனர்.
அவனுக்கு இங்கே பற்றி எரிந்தது. உடனே தன்னைக் கடிந்து கொண்டான், ‘டேய் முட்டாள் அது உயிரில்லாத பொருள்டா’ என்று. கூடவே இந்த குணத்துக்காகத்தானே அவள் விட்டுப் போனாள் என்று தோன்ற, அவன் முகம் மாறியது.
அதேநேரம் அவனைப் பார்த்துவிட்ட நளிராவும் அவனையே பரிதவிப்புடன் பார்த்தாள், போதுமே இந்தப் பிரிவு, இன்னும் எத்தனை காலம் இறந்த காலத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவது? அவளால் அவனை விட்டு இருக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை.
சிபின் அவளைப் பாராதது போலவே, திரும்ப அங்கிருந்து நடந்தான். ஏனோ அதற்கு மேல் அங்கே நின்றால் அவளை இழுத்துக் கட்டி அணைத்து விடுவோம் என்று அச்சமாக இருந்தது.
தன் முன் மண்டியிட்டு “என்னை விட்டுருங்க பிளீஸ்” என்று கண்ணீர் விட்டு அவனிடம் கைகூப்பிக் கெஞ்சிய தோற்றமே கண் முன் வந்து போக, விரைவாக அங்கிருந்து செல்ல முற்பட்டான்.
“என்னங்க” என்று அழைக்கவும் செய்தாள்.
சிபின் காதில் அது விழுந்தாலும் கண்டு கொள்ளவில்லை.
வேந்தன்… 65
மக்களே… ஒரு உதவி வேணுமே💕… இதுவரை எழுதிய வரைக்கும், ஏதாவது குறைகள், லாஜிக் மிஸ்டேக், இல்லை ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தாலோ கமெண்டில் சொல்ல முடியுமா. பிள்ளைகளுக்கு🫂 ஸ்கூல் லீவு இப்ப, அவங்களையும் பார்த்துகிட்டு எழுதியதால எனக்கே தெரியாம ஏதாவது விட்டிருக்க வாய்ப்பிருக்கு. சொல்லிட்டுப் போங்க தங்கங்களாl
அவள் மீது உள்ள காதலுக்காக விலகவேண்டிய அவசியம் வந்தபோது விலகிவிட்டான். ஆனால் விலகிய பிறகோ வெறுமையாய் தோன்ற, உயிரோடு மரணித்தவனானான். தான் செய்த தவறுகள் அத்தனையையும் தன்னாலேயே மன்னிக்க இயலாத பொழுது, பூவைப் போன்று மென்மையான பெண் எப்படித் தாங்கியிருக்க முடியும்.
அவளுக்கும் அவனுக்குமான இந்தப் பிரிவை தனக்கான தண்டனையாய் ஏற்றுக் கொண்டவனுக்கு ஒவ்வொரு நிமிடங்களும் நரகமாய் கழிய, தனக்குள்ளேயே உடைந்து சிதைந்து கொண்டிருந்தான் சிபின். அவனுக்குள்ளேயே கல்லாக மாறிக்கொண்டு இருந்தான்.
இன்னும் அவளைக் காயப்படுத்த வேண்டாமென அஞ்சி அவளை விட்டுத் தள்ளியிருக்க நினைத்தான். அவளுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுத்திடவே நினைத்தான். ஆனால் அவளை விட்டு விலக முடியுமா என்றால் அது சந்தேகமே…
உடலில் உள்ள சத்தெல்லாம் தளர்ந்து, சோர்ந்து போய் சில அடிதூரம் நடந்து சென்றவனை அவளின் மதுரமான குரல் நிப்பாட்டியது.
“மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்…”
அவள் போக வேண்டாமென தன்னைத்தான் சொல்கிறாள் என்பது அவனுக்குமே நன்கு புரிந்தாலும், நின்று அவளைக் கேள்வியாய்ப் பார்த்தான்.
அவளோ உவர் நீர் வழிந்த இமைகளை மூடித் திறந்து ஆமென்பது போலத் தலையசைத்துப் பாட ஆரம்பித்தாள்,
மதிமயங்கி நின்றிருந்தான். தன்னவள் பாடுவாளா? அதுகூடத் தெரியாது இருந்துவிட்டோமே, அதற்கு மேல் யோசியாது அவள் பாடலில் லயித்துப் போனான் சிபின்.
அவளையே இமைக்காது பார்த்திருந்தவனுக்கும் புரியத்தான் செய்தது, அவள் தன்னை சமாதானம் செய்யத்தான் பாடுகிறாள் என்று. ஆனால் இங்கே கோபப்பட்டு தன்னை விட்டுவிட்டுப் போனது அவள் அல்லவா. அப்போது தான்தானே அவளை சமாதானப்படுத்த ஏதாவது செய்தாகனும்? அவனுக்குள் குற்ற உணர்வு எழ, அப்படியே மரம் போல நின்றிருந்தான்.
“அண்ணா அண்ணிகிட்ட பேசிட்டு வாங்க” துருவ் அவனை உலுக்கி சொல்ல.
அவனோ அவளது முகத்தில் தெரிந்த மலர்ச்சியையும், தன்னைப் பிரிந்த தவிப்பு இருந்தாலும் ஒரு பூரிப்பைக் கவனிக்கவே செய்தான்.
இதுநாள் வரை அவளை இப்படி சுதந்திரமாக, தான் இருக்க விட்டிருக்கிறோமா என்று யோசித்தவனுக்கு, இல்லையென்ற பதிலே கிடைத்தது. அங்கே நிற்கவே முடியாது கால்கள் தள்ளாடியாது அவனுக்கு.
அவளிடம் சென்று பேசிட, ஆவேசம் கிளர்ந்து எழுந்தாலும், எனக்கு வாழவே பிடிக்கலை செத்துடலாம் போல இருக்கே” என்று அவள் கெஞ்சியது நினைவில் வர, பாதங்களை பின்னோக்கி எடுத்து வைத்தான்.
அவனது முகத்தில் ஓடிய உணர்வுகளைப் புரிந்து கொண்டவளாய், அதற்கும் மேலும் நிற்க விரும்பாது, இருந்த இடத்திலிருந்து எழுந்த நளிரா அவனை நாடி வேகமாய் வர, அவனைக் கண்டுவிட்ட மலர்விழியும் ராஜனும் நளிரா கூடவே வந்தார்கள். கூடவே மற்றவர்களும் வந்தார்கள்.
அவன் முன் மூச்சு வாங்கிட வந்து நின்றவள் அவனது பரிதவிப்பான தோற்றத்தைக் கண்டு விதிர்த்து நின்றுவிட்டாள். இது அவனது இயல்பல்லவே. அவளறிந்த சிபினுக்கு இந்த அளவு பொறுமை இருந்ததே இல்லையே. இந்நேரம் தன்னை மார்போடு இறுகத் தழுவி இருந்திருப்பானே…
அவனையே உதடுகள் துடிக்கப் பார்த்தவளுக்கு அவனது இந்தப் பொறுமை சற்றும் பிடிக்கவேயில்லை. அவளே முன்வந்து பேச ஆரம்பித்தாள்.
“என்கிட்டே பேசவே தோணலையா” கேட்டவள் மறந்தே போயிருந்தாள், அவள்தான் என்னை விடேன் என்று அவனிடம் கெஞ்சியதை சுத்தமாக மறந்து விட்டிருந்தாள்.
“சரி பேசு” அவன் சுவற்றில் சாய்ந்தாற் போல நிற்க.
“உங்களுக்கு ஆசையில்லையா? ஒரு கால் பண்ணக் கூட உங்களுக்கு டைம் இல்லாம போச்சு இல்ல” என்ன முயன்றும் அவளால் அழுகையைக் கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை.
தாவி அவனைக் கட்டி அணைத்தவள், “ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் உங்களை” அவன் மார்பில் முகம் பதித்துக் கதறி அழுதுவிட்டாள்.
அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தவன், “விட்டுட்டு வந்துட்டல்ல?” தாயிடம் குறைபடும் சிறுவனாய் அவளிடம் முறையிட.
அவளுக்கு அச்சோ என் தங்கமேன்னு ஆனது. “ஏதோ கோவம் வந்துருச்சுன்னு பொண்டாட்டி விட்டுட்டுப் போய்ட்டா போகட்டும்னு அப்படியே விட்டுருவீங்களோ. என் பின்னாடியே வந்து கொஞ்சி கெஞ்சிக் கேட்க கவுரவம் தடுக்குது இல்ல. நான் மட்டும் நீங்க எப்படியிருந்தாலும் ஏத்துக்கணுமா? கேள்வி மேல் கேள்வி கேட்டவளுக்கு அவன் பதிலே தேவைப்படவில்லை.
“முழுசா தவிக்க விட்டுட்டடி. நான் அப்படியேதான் இருக்கேன்டி. இன்னும் மாறலை. என்னை ஏத்துக்கடி. பிளீஸ் கால்ல விழுந்தாதான் என்கூடச் சேர்ந்து வாழ்வியா?” அவள் நெற்றியில் உதடுகளைப் பதித்தவன் விழிகளில் இருந்து கண்ணீரானது நிற்காது வழிந்தது.
“உங்கக்கூட இருக்கத்தான் எனக்குப் பிடிக்கும்ங்க. உங்க கூட வாழப் பிடிக்காமதான் நீங்க வான்னு சொன்ன உடனே, உங்களை எனக்குப் பிடிக்குமா பிடிக்காதான்னு எதையும் யோசிக்காம சரின்னு சொன்னனா? நீங்க மாறிட்டீங்க, அதுவும் எனக்காக எனக்குப் பிடிச்ச மாதிரி மாறிட்டீங்க” அவன் விழிகளில் வழிந்த கண்ணீரைக் கண்டு நெகிழ்ந்து போனாள் நளிரா. தனக்காகத்தானே இந்தக் கண்ணீர் என்று நெஞ்சமெல்லாம் அத்தனை பூரிப்பு அவளிடம்.
எப்படியென அவனும் கேட்கவில்லை அவளும் பதில் சொல்லவில்லை. அவனின் விழிகளில் வழிந்த கண்ணீரே அதற்கு சாட்சியாய் நின்றது.
சுற்றியிருந்தவர்களின் விழிகளிலும் கண்ணீரே.
தங்கை ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறாள் என்று தெரிந்து அவளுக்கு ஆறுதலாய் இருந்தவர்கள், இதுவரை ஒரு வார்த்தை அதுபற்றிக் கேட்டு சங்கடப்படுத்தியது இல்லை. தம்பதிகள் ஒன்று சேரவும், அத்தனை நிம்மதி அவர்களுக்கு.
“என்னை மன்னிச்சிட்டியா அவள் காதோரம் கேட்டவன் அங்கே முத்தங்கள் பதிக்க,
“மன்னிப்பு கேட்கறதுக்கு நீங்க என்ன பண்ணிங்க” அழுகையும் சிரிப்புமாக அவளும் அவன் மார்பில் தன் இதழ்களைப் பதிக்க.
மிராவும் துருவ்வும் வாயில் கைவைத்து நின்றுவிட்டார்கள். இதுதான் தலைகுப்புற விழுற கதையா என்று தோன்றியது. பின்னே இருவர் மீதுமே தப்பில்லை என்று அவர்களே சொல்லிவிட்டார்களே. எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்தால் சரிதான் என்ற நிம்மதி அவர்களுக்கு.
அவர்களின் அழகான தருணத்தை அழகாக வீடியோவில் பதிவு செய்தான் ஆத்மா.
“சண்டை போட்டவங்க கொஞ்சம் பிரிஞ்சு தத்தளிச்சு சேரவேண்டாமாக்கும். ஒருவாரத்துல சேர்ந்தாச்சு. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்” ரவிக் ம்க்கூம் போட.
“அடேய் நாரதா” ரவிக் செமத்தியாக அடிவாங்கினான்.
வாட்சப் வீடியோ காலில் அனைத்தையும் பார்த்திருந்த ஆரியனின் இதழ்களில் ஒரு நிறைவான புன்னகை பரவியது.
.. .. .. .. ..
அன்று மிராவும் துருவ்வும் நளிராவின் வீட்டிலேயே தங்கிக்கொள்ள சம்மதித்து இருக்க,
சிபின் ஆத்மா இருவரும் அவன் மாமாவை சந்திக்கச் சென்றிருந்தனர்.
“நளிரா நீ போய் தூங்கும்மா. நாங்க பேசிட்டு இங்கயே படுத்து தூங்கறோம்” மிரா நளிராவை அவள் அறைக்கு அனுப்பினார்.
“நானும் இங்கயே படுக்கறேன் அத்த” நளிராவுக்கு சிபின் வருவான் என்பதில் நிச்சயமில்லை. என்னதான் மாறி இருந்தாலும், இங்கே இந்த வீட்டில் தங்கும் அளவுக்கு மாற்றம் இருக்காது என்று நினைத்தாள்.
தரையில் படுத்தால் உடம்பில் நோவெடுக்காது, கைகால் குடையாது என்றும், வயிற்றில் இருப்பது இரட்டையர்கள் என்பதால் முடிந்த அளவு தரையில் படுக்கச் சொல்லி வாணி அவளுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
வெந்நீரில் குளித்தவள், இரவு உடையை அணிந்துகொண்டு பாயை விரித்துப் போட்டுப் படுத்தாள்.
இன்னைக்குத் தனியேதான் தூங்கணுமா அவளிடம் ஏக்கப் பெருமூச்சு வர, அதை அப்படியே நிறுத்தும் வண்ணம், அவளருகில் அவனது இருப்பை உணர்ந்தாள்.
‘வந்துட்டாரு’ மனம் உற்சாகமாய் குதூகளிக்க அவனது அணைப்பை வெகுவாக எதிர்பார்த்து ஏங்கினாள் பாவையவள்.
இடையில் படர்ந்த கரமும், கழுத்தோரம் உரசிய சூடான மூச்சுக் காற்றும் போன உயிரைத் திருப்பிக் கொடுத்தது போல இருக்கவும், தானும் அவனை அணைத்துக் கொண்டவள், மார்பில் முகம் புதைத்து சத்தமில்லாது அழுதாள்.
இவன் மாறவே வேண்டாம், அப்படியே இருக்கட்டும் அதுதான் எனக்கு வேணும் என்று இப்பொழுது தோன்ற ஆரம்பித்தது. எந்தப் பெண்ணிற்கு இதுபோல அன்பு கிட்டும்? அவளது கண்ணீர் அவன் சட்டையை நனைக்க.
அவள் நெற்றியில் உதடு பதித்திருந்தவனுக்கும் விழிகளில் கண்ணீர் தேங்கி நின்றது. அப்பவே இவளை தேடி வந்திருக்கணும் பாவம் ரொம்ப ஏங்கிப் போயிட்டா, அப்போதும் தன்னைத்தான் நிந்தித்துக் கொண்டான்.
“தேடி வரதுக்கு இவ்ளோ நாளா? அப்போ கோவம்னா என்னை விட்டுருவீங்களா. நானில்லாம இருந்து பழகிட்டீங்கதானே? நளிரா உங்களுக்கு வேண்டாமா” அவன் மார்பில் தளிர் கரங்களால் அடித்தவள் அவன் தோள் மீது தலைசாய்த்து படுத்தாள்.
அழுகை தவிப்புகள் அடங்கவும், அவன் தோளில் படுத்திருந்தவள் விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
“இங்கே சூடா இருக்கும்”
“இருக்கட்டும்”
“ரொம்ப நெருக்கடியா இருக்கும்”
“இருக்கட்டும்”
“தரையில பாய் விரிச்சுப் போட்டு அதிலதான் நாம படுத்திருக்கோம்”
“தெரியும்”
“கரன்ட்” அவள் மேலும் அவனிடம் ஏதோ சொல்ல வர.
அவள் இதழில் ஒற்றை விரல் வைத்துத் தடுத்தவன் “நீ இருக்கியே அது போதுமடி. நீ இல்லாத நாட்கள் ரொம்ப கொடுமைடி” அவளைத் தன்னோடு இறுக அணைத்தான்.
அவனின் இதயத் துடிப்பு சீரற்று இருக்க, அவனது தவிப்பை முழுதாக உணர்ந்தாள் நளிரா.
அவன் மனதில் இருந்த தவிப்புகளை அணைக்கும் விதமாய் ஊடலை நிறைவு செய்யும் கூடலுக்கு அவளே முதல் அடியை எடுத்துக் கொடுக்க, அவர்களுக்குள் உண்டான நேசம் இன்னும் வழுவாய் இறுகியது.
பேசித் தீர்க்க விஷயங்கள் இருந்தாலும் இப்போதைக்கு இரு உயிரும் ஒன்றாய் இணைந்தால் போதுமே என்றானது ஈருயிர்களுக்கும்…