வேந்தன்… 68

4.9
(12)

வேந்தன்… 68

 

ஹனீஸ் கதையை நிறைவு பண்ணிட்டேன் 🤗

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் என்னை ஊக்குவித்த அனைவருக்குமே நன்றிகள் 💕 

படிச்சுப் பார்த்துவிட்டு ஏதாவது விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும் 🤗

அன்று சீராட்டு வந்த நளிர் பெண்ணை புகுந்த வீட்டிற்கு அழைத்துப் போவதாக சொல்லியிருக்கவும், மகளுக்காக புளிக்குழம்பு, கோங்குரா தொக்கு தக்காளி தொக்கு என்று அவளுக்கு பிடித்தவைகளை தயார் செய்யும் வேலையில் இருந்தார்கள் மனோகரியும் வாணியும் மலர்விழியும். 

“நளி எங்களுக்கும் கூட வரணும்னு ஆசைதான். ஆனால் பயணம் வேண்டாம்னு அத்த சொல்லிட்டாங்கடி” சைத்ரா தங்கை கூடச் செல்ல முடியாத வருத்தத்தில் கலங்கினாள். 

“அக்கா இதுக்குப் போய் கலங்கறிங்க. வளைகாப்பு முடிஞ்சு இங்கதான இருக்கப் போறேன்? என் அக்கா தங்கச்சியோட செல்லக் குட்டீஸ் கூட இருக்கப் போறேன். நான் ரொம்ப ஹேப்பிக்கா” நளிரா முகத்தில் பூரிப்போடு சகோதரியை சமாதானம் செய்ய. 

“அக்கா! நளி இப்பல்லாம் மாமாவோட டூயட் பாடற குஷியில இருக்கா. அதனால அவளைப் பத்தி நீ கவலைப் படாத” ஆர்த்தி நளிரா கன்னத்தைக் கிள்ளி வைக்க. 

“இந்தக் கைதானே கிள்ளுச்சு?” நளிரா ஆர்த்தி கையில் கிள்ளி வைக்க வரவும். மூவரிடமும் சிரிப்பும் பேச்சுமாக அங்கிருந்தவர்களின் காதையும் மனதையும் நிறைத்தது.  

மனோகரிக்கு இப்போதெல்லாம் நளிராவிடம் எந்தக் கோபமும் இல்லவே இல்லை. சிபின் கூட மனவருத்தத்தில் தாய் வீட்டிற்கு வந்திருந்தவள், யாரையும் விட்டுக் கொடுக்காமலும் பிரச்சனையை சுமூகமாக அவர்களுக்குள்ளேயே தீர்த்துக் கொண்டதும் என அவள் மீது ஒரு மதிப்பை வைத்தார் அவர். 

தான் தன் மருமகளுக்கு சொல்லித் தந்த பாடங்களை அவர்கள் மூலமாக இவளும் கடைபிடித்தது மட்டுமல்லாமல் தன்னிடமும், “ரொம்ப நன்றிங்க அத்தை. நீங்க சொன்னதா அக்கா எனக்கு நிறைய சொல்லித் தந்தா. நீங்க மட்டும் சரியான வழியைக் காட்டாம இருந்திருந்தா என்னால என்னோட வாழ்க்கையை காப்பாத்தியிருக்க முடியுமான்றதே கேள்விதான்” மனோகரியிடம் மனதார அவள் நன்றி சொல்ல. 

“நல்லது சொல்லித் தந்தா அதைக் கேட்கறதுக்கும் ஒரு பக்குவம் இருக்கணுமே நளிரா. உண்மையிலேயே நீ அருமையான பொண்ணுதான். எப்பவும் சந்தோசமா இருக்கணும் நீ” என்று தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய தம்பதிகளை ஆசீர்வதித்தார் மனோகரி.

“நளிரா அங்க போய் என்னன்னு பாருடியம்மா. உன் வீட்டுக்காரரு அவங்ககிட்ட கோபமா பேசிட்டு இருக்காப்புல” வாணி நளிராவை கூடத்திற்கு அனுப்பி வைத்தார். 

ஆசாரத்தில் ஆரியனும் துருவ்வும் சிபினுடன் ஏதோ விவாதம் செய்தபடியிருக்க, மிரா தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார். 

சற்று தள்ளி மலர்விழியும் ராஜானும் கைகால்கள் பயத்தில் நடுங்க நின்றிருந்தனர். 

அவர்களின் விவாதத்தை தடுப்பாதை விட, தாய்தந்தையை கவனிப்பது முக்கியமாய்த் தோன்றவும் அவர்களிடம் சென்றாள் நளிரா, “என்னாச்சும்மா?” விசாரித்தாள். 

“மாப்பிள்ளை கோபக்காரரு போல நளிரா. உன்கிட்டயும்  இப்படித்தான் இருப்பாரா?” மலர்விழி அச்சத்துடனும் இப்படிப்பட்ட கோபக்காரனை மகள் எப்படித்தான் சமாளிக்கராளோ என்று கவலையுமாகக் கேட்டார். 

“அவருக்கு இப்படித்தான் பேச வரும்மா. அங்க போய் கவனிச்சுப் பாருங்க, ஹேப்பியாதான் பேசிட்டு இருக்கார்” கணவனைப் பற்றி நான்கு அறிந்த நளிரா கூற. 

“சரி நீ போய் என்னன்னு பாரு. பாவம் துருவ். அவருகிட்ட எதிர்த்துப் பேசக்கூட பயந்து அப்பாவியா உக்கார்ந்துட்டு இருக்கார்” மகளை அனுப்பி வைத்தார் மலர்விழி. 

“நீங்களும் வாங்க. தள்ளி நின்னு பார்த்தா பயமாத்தான் இருக்கும். கிட்ட நெருங்கிப் பாருங்க. உங்க மருமகன்தானே” அவர்களை இழுத்துப் போனாள் அங்கே. 

“என்னாச்சு அத்த?” மிராவிடம் மெதுவாய் கேட்டாள் நளிரா. என்னதான் தைரியம் கூறி பெற்றவர்களை அழைத்து வந்திருந்தாலும், இவளுக்குமே பயம் இருக்கத்தான் செய்தது. 

“துருவ்க்கு அத்தை பொண்ணும்மா மிருதுளா. அவங்க பேமிலியில் ஏதோ சொத்து விஷயமா கிராமத்துக்கு வரச் சொல்லி இருக்காங்க போல. இவனையும் துணைக்கு வரச் சொல்லிக் கூப்பிடுறா” 

“வாவ் அத்தை பொண்ணா” நளிரா சந்தோஷமாய் கேட்டிட. 

“அவளைப் பார்த்தா தங்கச்சி மாதிரி இருக்குன்னு எப்பவோ அவ மனசை உடைச்சுட்டான்ம்மா. அவசரபட்டு சந்தோஷப்படாதே” மிரா மருமகள் கற்பனையை பாதியிலேயே நிப்பாட்டி வைத்தார். 

“துருவ் அங்க போய் என்ன பண்ணப் போற? உன்னால அங்கல்லாம் இருக்கவே முடியாதுடா. அதுவும் மிருதுளா போறதே எனக்கு சரியாப்படலை. இதுல லண்டன்லயே வளர்ந்த நிரல்யாவையும் கூட்டிட்டுப் போறீங்க”சிபினுக்கு அவர்கள் போவதே தப்பு, இதுல கொடுக்கு மாதிரி இவனுமா என்ற கவலை வந்தது. 

முதல்ல இவனோட குறும்பை அந்தக் கிராமம் தாங்குமா? தெரியாத இடத்தில் எப்படி சமாளிப்பான். 

“என்னை நம்பிக்கு கூப்பிட்டாச்சு. போகாம எப்படி இருக்கறது?” துருவ் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள. 

“டேய் அவங்க ரெண்டு பேருக்கும் உன்னைய விடவே புத்திசாலித்தனம் அதிகம்டா. எங்க போனாலும் சாமர்த்தியமா தப்பிச்சுக்குவாங்க. நீ போய் ஏடாகூடமா சிக்கிக்காத சொல்லிட்டேன்” சிபின் மீண்டும் மீண்டுமாக எச்சரித்தும், நான் போயே தீருவேன் என்று அடம்பிடித்தான் துருவ். 

“சரி போய்ப் பார்க்கட்டும். சரியா வரலைன்னா வந்துரட்டும். என்ன துருவ் நான் சொல்றது சரியா?” நளிரா குறுக்கே புகுந்து சொல்ல. 

“எஸ் அண்ணி” துருவ் அண்ணியின் கையைப் பற்றி நன்றியுடன் முத்தம் கொடுத்தான்.   

நளிராவுக்கு அவன் செய்கையில் திக் என்றாக, கணவனின் முகத்தைப் பார்த்தாள் மிரட்சியாக. 

மிராவிடம் துருவ் இபாடி விளையாடுவதைப் பார்த்திருப்பதால், இயல்பாகவே இதைப் பார்த்தான் சிபின், “என்னமோ பண்ணுங்க. எதுவா இருந்தாலும் எனக்கு அப்டேட் பண்ணிட்டே இருக்கணும் துருவ்” எச்சரிக்கையுடன் அனுமதித்தான் தம்பியிடம். 

துருவ் புது அனுபவத்திற்கு தயாரானான் அப்போதே. 

தனித்திருக்கையில் “அவனுக்கு சப்போர்ட் போடாதடி. இன்னும் கெட்டுப் போவான்” சிபின் அவளிடமும் கண்டிப்பை செலுத்தத் தவறவில்லை. 

“ஆமாமா இவரு ரொம்ப நல்லவருதான். நானா இருக்கறதால உங்க கூட பொழைக்கறேன். இல்லைன்னா” செல்லமாய் அவனிடம் முறையிட. 

“இல்லைன்னா என்னடி பண்ணியிருப்ப” கேட்பவன் அவளை பேசவே விடாது முத்தங்களால் அர்ச்சித்துக் குளிரச் செய்திட.

“லவ் யூ” என்று அவன் காதோரம் உச்சரிப்பவள் தானும் அவனுக்கு குறையாது நேசத்தினை அள்ளி வழங்கிடுவாள். 

இப்படி நாளொரு அனுபவமும் பொழுதொரு புரிதலுமாக நாட்கள் கடந்து போக, மூன்று மகள்களுக்கும் தான் விரும்பியதைப் போலவே வளைகாப்பும் நடத்தி வைத்தார்கள். பேரன் பேத்திகளுடன் நாட்கள் அழகாய் நகர்ந்தது. 

ஒவ்வொரு தினங்களும் சர்க்கரை நிமிடங்களாய் சென்று விட்டிருக்க இதோ சிபின் நளிராவின் செல்வங்களும் உலகை பார்ப்பதற்காக தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்தாயிற்று.  

ராஜனும் மலர்விழியும் முகத்தில் நிறைவான புன்னகை குடிகொண்டிருக்க, கையில் மிட்டாய்கள் அடங்கிய தட்டுடன் மருத்துவமனை முழுவதும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் மிட்டாய்களை தந்து தங்கள் சந்தோசத்தைக் கொண்டாடினார்கள். 

மூன்று மகள்களுக்குமே நல்ல வாழ்க்கை கிடைத்து சந்தோசமான குடும்பமாக இருப்பதுடன் தங்களையும் பார்த்துக் கொள்கிறார்கள். 

அதுமட்டுமா பார்வையிலும் பேச்சாலும் தங்களை மிரள வைத்த மருமகனைப் பற்றி நன்கு புரிந்துகொண்டதோடு அவரோடு நன்கு பழகியும் விட்டாயிற்று. அதற்கும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது. 

மூவரில் ஒருவர் மாற்றி ஒருவர் குடும்பமாய் இவர்களுடன் வந்து தங்கிக்கொள்ள தனிமை உணர்வு வந்ததே இல்லை. பேரன் பேத்திகளுடன் நாட்கள் ரெக்கை கட்டிப் பறந்தது. 

அஞ்சு பெத்து அரசனும் ஆண்டியாவான் என்று இவர்களை ஏளனம் செய்தவர்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். 

மூன்று மகள்களும் போட்டி பொறாமை எதுவுமில்லாமல் தாய்தந்தையை தங்கத் தட்டில் வைத்துத் தாங்கினார்கள். மூன்று மகள்களையும் நன்றாக வளர்க்க அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ அத்தனைக்கு  வயதான காலத்தில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தனர் மலர்விழி ராஜன் தம்பதிகள். 

அந்தி சாயும் நேரத்தில் மழைகாலம் ஆதலால் மண் வாசனையுடன் மெல்லிய சாரல் காற்று ஜன்னலுக்கு வெளியே சிலு சிலுவென வீசிட, அத்தோடு சூரியனின் மிதமான வெப்பமும் சேர்ந்துக்கொள்ள சூழ்நிலை அத்தனை இதமாக இருந்தது அவர்களுக்கு. 

சிபின் நளிராவின் செல்வங்கள் அந்நேரத்தில் பிறந்திருக்க, குடும்பத்தினருக்கு அத்தனை சந்தோசம். ஆர்த்தி சைத்ரா இருவரும் குழந்தைகளை மாமியார் மாமனார் வசம் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் அவர்களுடன் இருந்தனர். 

நளிராவை அறைக்கு மாற்றியிருக்க, அனைவரும் அவளைப் பார்த்து நலம் விசாரித்தனர். 

ஆரியனுக்கும் மிராவுக்கும் பெண்குழந்தைகள் பிறந்திருக்கவும் அத்தனை சந்தோஷம், தங்களிடம் வந்து எது கேட்டாலும் தயங்காமல் தந்துவிடும் அளவிற்கு சந்தோஷம் அவர்களுக்கு. 

தன்னிடம் நலம் விசாரிப்பவர்களிடமெல்லாம், தலையை மட்டும் அசைத்துப் புன்னகைத்தவளின் விழிகளோ சோர்வுடன் கணவனைத் தேடிட.

“என்னடாம்மா வேணும்” மிரா நளிராவின் நெற்றியை வருடி கனிவுடன் கேட்டாள்.

“உங்க மகனெங்கத்த?” மெலிந்த குரலில் வினவினாள். 

“இங்கதான் இருக்கான்ம்மா, இப்பதான் போன்ல பேசிட்டே வெளியே போனான். நான் வரச் சொல்றேன்” மிரா செல்ல முயல.

“அவரே வருவார். நீங்க பிள்ளைங்ககிட்ட இருங்கத்த. அம்மா மிட்டாய் கொடுக்கப் போயிட்டாங்க” மிராவிடம் சொன்னாள் நளிரா.

“சரிம்மா” மிரா அங்கேயே இருந்தாலும் மகனுக்கு அழைப்பு விடுத்து வருமாறு சொன்னாள். 

அங்கே வந்தவன் “கம்பெனிஸ் ஸ்டாப் எல்லோருக்கும் போனஸ் தந்திடச் சொல்லிட்டேன் மாம். அதைப் பேசிட்டு வர லேட் ஆகிடுச்சு” மிராவிடம் சொன்னவன், 

“ஹனி மை லவ்” அவளைக் கட்டிக் கொண்டவன் “மாம் உங்க பேரப் பசங்களையும் நீங்கதான் வளர்த்தணும். உங்களுக்கு ஓகேதானே?” என் குழந்தைகளையும் நீதான் வளர்க்கணும் என்று அவன் கூறிட. 

மிராவுக்கு உருகியே போனது. தன் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் தன் குழந்தையையும் இவன் ஒப்படைப்பான், கண்ணில் நீர் வழிய பெறாமல் பெற்ற மகனையே பார்த்திருந்தாள் மிரா. 

இன்றைய தேதி வரைக்கும் மிரா ஆர்யனோ அல்லது துருவ் சிபினோ எல்லா உண்மையும் தெரிந்திருந்தாலும் அது பற்றிப் பேசியதே இல்லை.

எதற்குப் பேசணும் அன்பும் பாசமும் முழுமையாய் கிடைக்குமெனில் அங்கே விஷமெனில் கூட அமிர்தமாய் இனிக்கத்தானே செய்யும். நால்வருக்குமான பிணைப்பு அன்பால் உருவானது. இறுகிய பந்தம் அவர்களுடையது. 

அவர்கள் பேசியதைக் கேட்டபடி அங்கே வந்த ஆரியனும் நெகிழ்ந்து நின்ற மனைவியை அணைத்து விடுவித்தவன், “எங்களுக்கு இன்னும் பத்துக் குழந்தைகளை வளர்க்குர அளவுக்கு தெம்பு இருக்குடா” அவன் சொல்ல. 

“டாட் நானும்” துருவ் அவர்களின் அணைப்புக்குள் புகுந்து நின்றான். 

அதில் சிபின் வாய்விட்டே சிரித்தவன், இன்னும் குறும்பு மாறாமல் இருக்கும் தம்பியை வலுவாகக் கட்டிக்கொண்டான். 

“டேய் அண்ணா வலிக்குதுடா” சிபினின் அணைப்புக்குள் துருவ் துள்ளினான். 

நான்கு பேர் கொண்ட குடும்பம் நளிராவோடு ஐந்தாக, இதோ பெண்ணரசிகளின் வருகையால் ஏழு ஆனது. எண்ணிக்கைகள் இன்னும் இன்பமாய் அதிகரிக்கத்தான் போகிறது. 

.. .. .. .. .. 

ஆரியன் மிராவின் இல்லமே விழாக்கோலம் கொண்டிருந்தது. 

நளிராவின் மதுரக் குரல் இன்னிசையாய் அந்தப் பகுதியில் பரவிப் படர்ந்தது. 

“விஷமக்காரக் கண்ணன்..

விஷமக்காரக் கண்ணன்.

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்.

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்..

வேடிக்கையாய் பாட்டுப் பாடி..

வித விதமாய் ஆட்டம் ஆடி..

நாழிக்கொரு லீலை செய்யும்

நந்த கோபால கிருஷ்ணன்..

விஷமக்காரக் கண்ணன்!…” 

புல் வெளியில் அமர்ந்திருந்தவளின் மடியில் வீணை வீற்றிருக்க, ரசித்துப் பாடியவளின் இதழ்களில் தவழ்ந்திருந்த புன்னகையில் அத்தனை நிறைவு. 

துருவ் குறும்புக்காரக் கண்ணனாக ஆர்த்தி, சைத்ரா நளிராவின் பிள்ளைகளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்க, அழகு செல்வங்களோ அவனின் வேடிக்கைக்கு தக்க அழகாய் சிரித்தும் கைகால்களை அசைத்தும் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொண்டார்கள். 

ஆர்த்தி சைத்ரா அவர்களுக்கு விளையாடும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாய் மசித்த உணவை ஊட்டினார்கள். 

நளிராவின் பிள்ளைகளுக்கு இன்று பெயர் சூட்டும் விழா. சன்மதி ஆராத்யா என்று பெயர் சூட்டியிருக்க, விருந்து முடிந்து பாட்டுக் கச்சேரியை ஆரம்பித்தாயிற்று. 

ஆரியன் மிரா இருவரும் சிபினிடமே முழு பொறுப்பையும் தந்துவிட, துருவ்வும் அண்ணனின் வேலை சுமையை உணர்ந்து கொண்டவனாய், “ஒரு ரெண்டு மாசம் அண்ணா. நிரல்யா மிருதுளாவுக்கு துணைக்கு போறேன். அவங்க வொர்க் முடிச்சுட்டு உங்க கூட நானும் வந்து சேர்ந்துப்பேன்” என்று அவனது வரலாற்றிலேயே முதல் முறையாக வேலை செய்கிறேன் என்ற பொன் மொழிகளை சொல்லியிருக்க, மிரா அவன் வாயில் சர்க்கரையை அள்ளிப் போட்டார். 

“இப்பதான்டா மகனே நல்லதா ஒரு வார்த்தைய சொல்லியிருக்க” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“அதுக்கு முதல் நீ போற இடத்துல இருந்து முழுசா தப்பிச்சு இங்க வந்து சேருடா” என்று நக்கல் புன்னகையை உதிர்த்தான் சிபின். 

ஏனெனில் சிபின் அவர்கள் செல்லுமிடம் பற்றி முழுதாக விசாரித்திருக்க, தெரிந்து கொண்ட விஷயம் பெரிய விஷயம். அதுவும் அவர்களே இதைப் பற்றி யாரிடமும் பேசக்கூடாது என்று இவனிடம் அறிவுறுத்திவிட, போகாதே போகாதே என்று மறைமுகமாய் சொல்லிப் பார்த்தவனின் பேச்சை துருவ் மதிக்காமல் அலட்சியப் படுத்திவிட. 

எப்படியோ முட்டி மோதி வான்னு விட்டுவிட்டான். ஆனால் அங்கே சென்றால் துருவ் இன்னும் பக்குவடைவான் என்பதில் அத்தனை உறுதி அவனுக்கு. வாழ்க்கையை எதிர்கொள்ள பக்குவம் ரொம்பவே அவசியம்தான். 

சிபின் நளிராவை அறைக்கு வருமாறு சைகை செய்துவிட்டு வீட்டிற்குள் செல்ல, பிள்ளைகளை கட்டியணைத்து முத்தமிட்ட நளிராவைப் பார்த்த மலர்விழி, “மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு போய்க் கேளும்மா” என்று அனுப்பி வைக்க. 

“சரிம்மா அத்தையும் நீங்களும் இங்கயே இருங்க” சொல்லிவிட்டு மிராவிடம் தலையசைத்த நளிரா சிபின் சென்ற திசையில் சென்றாள். 

அறைக்குள் சென்றதும் கதவு தானாக பூட்டிக்கொள்ள, இதென்ன எல்லோரும் அங்கிருக்க, இங்கே தாங்கள் மட்டும் கதவை சாத்திட்டு உள்ளே இருப்பதா? முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்து போக அவனை ஏறிட்டவள், திடுக்கிட்டுப் போனாள். 

அவனது விழிகள் அவளை மோகமாய் விழுங்கிட, “அச்சோ” சினுங்கியவளை கைகளில் அள்ளிக் கொண்டான். 

“மை ஹனி” அவள் கன்னங்களில் சிறு முத்தங்களை வைத்திட, அவன் தோள்களைக் கட்டிக்கொண்டவள் தானும் அவன் நெற்றியில் ஒரே ஒரு குட்டி முத்தம் வைத்தாள்.

“இது போதாதே ஹனி. ஹெவியா வேணுமே” கண் சிமிட்டியவனை நாணத்துடன் பார்த்தவள் நீயே கொடுத்துக்க என்பது போல அவன் தோளில் முகம் சாய்த்தாள். 

அடங்காத சிரிப்புடன் அவளை மஞ்சத்தில் அமர வைத்தவன், அவள் மடியில் தலைவைத்துப் படுத்தான். 

“என்னவாம்?” செல்லமாய் கேட்டவள், மீசையை நீவிக் கொடுக்க. அவள் கரத்தைப் பற்றியவன் விரல்களில் ஒவ்வொரு முத்தமாய்க் கொடுத்தான்.

அதன் அதிர்வுகளை இன்பமாய் சிலிர்த்து உள் வாங்கினாள் நளிரா. 

காதல் அதன் பின்னான வாழ்க்கை. அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் ஒவ்வொன்றும் அவர்களின் நேசத்தினை இன்னும் இறுகவே வைத்தது. அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு, பிரியத்தினை அள்ளிக் கொடுத்தனர். 

சிபின் நளிரா இருவருக்குள்ளும் ஊடல் வரத்தான் செய்தது. மனைவியிடம் ரகசியமாய் உரிமைப் போராட்டம் செய்யத்தான் செய்தான். 

நளிராவும் முடிந்த அளவு அவனுக்கு அந்த உணர்வு வராதவண்ணம் பார்த்துக் கொள்வாள். 

சின்னச் சின்ன அச்சாரங்கள் மோக முத்தங்களுக்கு வித்திட, ஒருவரைஒருவர் காதலுடன் முழுதாக ஏற்றுக் கொண்டனர். 

தன் மனம் கவர்ந்தவளின் மனதைத் தன் நேசத்தால் கவர்ந்திழுத்து விட்டான் வேந்தன்… 

வேந்தனின் அளத்தியிவள்… 

சுபம்… 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!