ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர்

5
(4)

ஸ்டில் ஐ லவ் யூ.. டீஸர்

 

“என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்க அன்னம், பாரு உன் பொண்ணு அடிக்கிற கூத்தை பொட்டைப் பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சோமா காலா காலத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் கட்டி வச்சோமான்னு இல்லாமல் மைதானம் மைதானமா சுத்த அனுப்பி இருக்க”.

“அந்த டீவி பெட்டியை பாரு உன் மகள் அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூ னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்று பொரிந்து தள்ளினார் கல்யாணி பாட்டி.

“நான் கண்டிச்சா அவள் கேட்கிறாளா எல்லாம் உங்க மகன் கொடுக்கிற இடம் தான்” என்று கூறினார் அன்னபூரணி.

“அப்பன்காரன் செல்லம் கொடுக்க தான் செய்வான் அம்மா காரி நீதான் அவளை இறுக்கி பிடிக்கனும்” என்று மருமகளுக்கு தூபம் போட்டு விட்டு சென்றார் கல்யாணி பாட்டி.

“மச்சி உன் ஆளுடீ” என்ற தோழியிடம், “எங்கே எங்கே” என்ற மங்கை அவளோ தன் கையில் இருந்த போர்டை அவனை நோக்கி காட்டுவதற்காக பார்வையை சுழல விட அவனோ வேறு ஒரு பெண்ணுக்கு கை காட்டி விட்டு மைதானத்திற்குள் இறங்கினான்.

“அதோ பாருடீ உன் ஆளோட ஆளு” என்று சிரித்த தோழியை பார்த்து புன்னகைத்தவளோ, அவன் பெயரைச் சொல்லி கத்தியபடி தன் கையில் இருந்த ஐ லவ் யூ போர்டை தூக்கி காட்டிய படி அவன் அடித்து விலாசிய சிக்ஸர்களுடன் அந்த அழகனையும் ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!