விஷம் – 04
அமைதியாக யாழவனின் அருகே வந்த அர்ச்சனாவோ “சார் உங்க ஷூவை ரிமூவ் பண்ணுங்க..” எனக் கூறியவள் அவனுடைய வீங்கிய கரத்தை பிடித்துப் பரிசோதித்தாள்.
“நான் என்னோட ட்ரீட்மென்ட்டுக்கு சிபாரிசு கேட்டேன்னு நீங்க பார்த்தீங்களா..?” என அழுத்தமான குரலில் அவன் நேரடியாகவே கேட்டு விட,
அவளோ அதிர்ந்து போனாள்.
இப்போது அவனுக்கு பதில் கூற வேண்டுமோ..?
“நான் சில்லியா பிஹேவ் பண்ணல.. என்ன நடந்திச்சுன்னு தெரியாம நீங்கதான் ரொம்ப சில்லியா பிஹேவ் பண்ணிருக்கீங்க..” என்ற யாழவனின் நிதானமான வார்த்தைகள் அவளுக்கு சங்கடத்தை வரவழைத்தன.
அமைதியாக அவனுடைய உடலில் வேறு எங்காவது காயம் இருக்கிறதா என ஆராய்ந்தாள் அர்ச்சனா.
“ஃபைன்.. உங்ககிட்ட இத சொல்லதான் உங்களை இங்க வர வெச்சேன்.. யு மே கோ நவ்.. நீங்க போய் உங்க பேஷன்ட்ஸ்ஸை பாருங்க.” என்றதும் அவளுக்கோ ஒருமாதிரியாகிப் போனது.
அதே கணம் அவர்கள் இருந்த அந்த அறையின் கதவு திறந்து இருந்ததால் வெளியே சண்டை போடும் சத்தம் அவர்களுக்கு கேட்க யாழவனின் புருவங்களோ சுருங்கின.
சட்டென இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் அவன்.
பில் பே பண்ணும் இடத்தில்தான் பிரச்சனை நடக்கின்றது என்பது புரிய யாழவனின் பின்னே அவளும் வெளியே சென்று பார்த்தாள்.
அங்கே சிறிய கூட்டமே கூடிவிட்டது.
“இவ்வளவு பணத்த கேட்டா நான் என்னங்க பண்ணுவேன்..?” என அழுது கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயதான தாய்.
“இந்த ஹாஸ்பிடல்ல சேர்த்தா இப்படித்தான் பில் வரும்னு உங்களுக்குத் தெரியாதா..? தெரிஞ்சு தானே அட்மிட் பண்ணீங்க… இப்போ பில்லை பாத்துட்டு பணம் கட்டாம பிரச்சனை பண்ணா நாங்க என்னம்மா பண்றது..?” என அந்த பெண்மணிக்கு சற்றே எரிச்சலுடன் பதில் கூறிக் கொண்டிருந்தார் அந்த வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்.
“அம்மாடி உங்க ஹாஸ்பிடல் முன்னாடிதான் என் பையனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு.. அந்த நேரத்துல அவன் உயிரை காப்பாத்தணுங்கிறதுக்காகத்தான் உடனே இங்க கொண்டு வந்துட்டேன்.. ஆனா இப்போ ஆறு லட்சம் பணம் கேட்கிறீங்களே.. அதுக்கு நான் எங்க போவேன்..? என்கிட்ட இந்தக் காப்பைத் தவிர கொடுக்கறதுக்கு வேற காசு இல்லம்மா..” என்றவருக்கு வறுமையின் விரக்தியில் கண்ணீர் வழிந்தது.
“ஜெகதீஷ் இவங்க பேசுறதை பார்த்தா பில் பே பண்ண மாட்டாங்க போல இருக்கு.. இப்பவே போலீஸுக்கு இன்பார்ம் பண்ணுங்க..” என பில் கவுண்டரில் இருந்த பெண் கூற அந்தப் பெண்மணியோ சேலை தலைப்பால் தன் விழிகளை துடைத்துக் கொண்டவர் மீண்டும் கெஞ்சத் தொடங்கினார்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த யாழவனுக்கோ முகம் இறுகிப்போனது.
வலித்த காலை மெல்ல ஊன்றி அவர்களை நெருங்கியவன் தன் பர்சிலிருந்து தன்னுடைய கார்டை வெளியே எடுத்தான்.
“அவங்களோட பில்லை நான் செட்டில் பண்றேன்..” எனக் கூறியவனைப் பார்த்து அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சிதான்.
“சார்.. பட் அவங்களோட பில் அமௌன்ட் சிக்ஸ் லேக்ஸ் பரவாயில்லையா..?” என அதிர்ச்சியோடு கேட்டாள் அந்தப் பெண்.
“நோ ப்ராப்ளம்..” என்றவன்,
“இந்தப் பேஷண்டோட ரிப்போர்ட்டை நான் பார்க்கணும்.. இதுக்கு என்னென்ன ட்ரீட்மெண்ட் நீங்க கொடுத்திருக்கீங்க.. எதுக்காக இவ்வளவு பணம்னு எக்ஸ்பிளைன் பண்ண முடியுமா..?” என அவன் கேட்க,
“சாரி சார்.. ஹாஸ்பிடல் டீடைல்ஸ் எல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது..” என்றாள் அவள்.
அதே கணம் அந்த இடத்திற்கு வந்த தலைமை வைத்தியரோ,
“சாரா நம்ம ஹாஸ்பிடல் ஓனரோட சன்தான் இவரு.. அவர் என்ன டீடைல்ஸ் கேட்டாலும் கொடுங்க…” என்றதும் பதறிவிட்டாள் சாரா.
“ஓ… ஓகே சார்..” என்றவளுக்கு கைகள் நடுங்கவே தொடங்கி விட்டன.
அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அவன் கேட்டதற்கான அனைத்தும் ஒரு கோப்பாக அவனுக்கு கிடைத்து விட வேக வேகமாக அவற்றை பரிசோதிக்கத் தொடங்கினான் அவன்.
அதேபோல அந்தப் பெண்மணியின் மகனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவரையும் சந்தித்து பேசியவனுக்கு திருப்தி உண்டாகவே இல்லை.
“ஐயா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்யா.. நீங்க மட்டும் இல்லைன்னா நானும் என் பையனும் என்ன பண்ணி இருப்போம்னே தெரியலை.. சாமி மாதிரி வந்து உதவி பண்ணிட்டீங்க… ரொம்ப நன்றி..” என யாழவனைப் பார்த்து அவர் கைகூப்ப சட்டென பதறி கூப்பிய அவருடைய கைகளை இறக்கியவன்,
“பரவால்லம்மா பையனை பத்திரமா பாத்துக்கோங்க..” எனக் கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தவன் தலைமை வைத்தியரை அழுத்தமாகப் பார்த்தான்.
“இங்க என்ன நடக்குது..? இப்படித்தான் பேஷன்ட்ஷ்கிட்ட ரூடா நடந்துப்பீங்களா..?” எனக் கேட்டவனின் பார்வை சாராவை அனலாய்த் தீண்டியது.
“சா.. சாரி சார்..” நடுங்கி விட்டாள் அவள்.
“இன்னைக்கு இங்க இருக்க எல்லா ஸ்டாப்ஸுக்கும் மீட்டிங் இருக்குன்னு சொல்லுங்க.. 7:30க்கு ஷார்ப்பா மீட்டிங் ஸ்டார்ட் ஆகும்..” எனக் கூறியவன் எதையோ சிந்தித்தவாறு மீண்டும் அந்த அறைக்குள் சென்று அமர்ந்து விட அவனுடைய அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவுக்கோ பிரம்மிப்பாக இருந்தது.
ஆறு இலட்சத்தைத் தூக்கி ஏதோ ஆறு ரூபாயை கொடுப்பது போல கொடுத்து விட்டானே.
நல்லவன்தான் போலும்.
‘ஐயோ நாமதான் அவசரப்பட்டு தப்பா நினைச்சுட்டோம் போல..’ என மனதிற்குள் எண்ணியவள் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழையும் போது அவன் அலைபேசியில் யாரிடமோ கோபமாக பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு உள்ளே செல்வதா இல்லையா என்ற தயக்கத்துடன் அப்படியே வாயலில் நின்றாள் அர்ச்சனா.
“நம்ம ஹாஸ்பிடல்ல என்ன நடக்குது டாட்..? என்னோட கம்பெனில இருந்து நான் சப்ளை பண்ண மாத்திரைக்கு அவ்வளவு ஜாஸ்தியா பில் போட்டுருக்காங்க… ஒன் டே ட்ரீட்மென்ட் பார்த்ததுக்கு அவ்வளவு பணத்தை பில் போட்ருக்காங்க… பணம் இல்லாத பேஷன்ட்ஸ்கிட்ட ரூடா பிஹேவ் பண்றாங்க… ஷிட்… எல்லாமே ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு..
இப்படித்தான் இங்க பகல் கொள்ளை நடக்குதா..?” என அழுத்தமான குரலில் தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன் வாயிலில் வந்து நின்ற அர்ச்சனாவை உள்ளே வரும்படி தன் விழிகளால் சைகை செய்ய தயக்கத்துடன் உள்ளே வந்தாள் அவள்.
‘அவங்க அப்பாவையே இந்த கிழி கிழிக்கிறானே..’ என அதிர்ந்து போய் விட்டாள் அவள்.
“என்ன டாட் தெரியலன்னு சொல்றீங்க.. ஆயிரம் ஹாஸ்பிடல் உங்ககிட்ட இருந்தாலும் அடியிலிருந்து நுனி வரைக்கும் அத பத்தி நீங்கதான் தெரிஞ்சு வச்சிருக்கணும்.. இப்படியா கேர்லஸ்ஸா ஆன்ஸர் பண்ணுவீங்க..?”
“…….”
“இட்ஸ் ஓகே.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. நான் பார்த்துக்கிறேன்.. இன்னைக்கு ஈவினிங் மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்கேன்.. நம்ம ஹாஸ்பிடல் ஸ்டாப்ஸ் கூட நான் கொஞ்சம் பேசணும்..”
“……”
“ஓகே டாட்.. எஸ் ஐம் ஆல்ரைட்.. நீங்க அட்டென்ட் பண்ண சொன்ன மீட்டிங்கை இன்னைக்கு என்னால அட்டென்ட் பண்ண முடியாம போயிடுச்சு சாரி..”
“…..”
“ஓஹ் ஒகே டாட் பை..” என்றவன் தன் ஃபோனை அருகே இருந்த மேஜை மீது வைத்து விட்டு தயங்கி நின்ற அர்ச்சனாவைப் பார்த்தவன்,
“நீங்க உங்க வார்டுக்கு போங்க.. வேற யாராவது நர்ஸ் இல்லனா டாக்டரை வர சொல்லுங்க..” என்றவன் கழுத்தில் கட்டி இருந்த கழுத்துப் பட்டியை தளர்த்திவிட்டு அவனுடைய முதல் மூன்று ஷர்ட் பட்டன்களை கழற்ற சங்கடத்துடன் தன்னுடைய பார்வையை தழைத்துக் கொண்டவள்,
“சாரி சார்.. உங்கள பத்தி தெரியாம நான்தான் சிபாரிசு அது இதுன்னு தப்பா பேசிட்டேன்… சாரி..” என்றாள் அர்ச்சனா.
அவள் மன்னிப்புக் கேட்டதும் “இட்ஸ் ஓகே.. மிஸ்…?” என இழுத்தான் அவன்.
“அர்ச்சனா..” என்றாள் அவள்.
“இட்ஸ் ஓகே அச்சனா..” புன்னகைத்தான் அவன்.
“ஐயோ அச்சனா இல்ல சார் அர்.. அர்ச்சனா..”
“ஓஹ்…? அர்… அர்ச்சனா..? அச்சு.. ஓகே அச்சு.. இப்படியே கூப்பிடுறேன்.. புல் நேம் ப்ரோநௌன்ஸ் பண்ண கஷ்டமா இருக்கு..” என்றவன் அவளைப் போகலாம் எனக் கூற,
“நானே ட்ரெஸ்ஸிங் பண்ணி விடுறேன் சார்..” என்றவள் அதன் பின்னர் அவளுடைய வேலையை ஆரம்பித்து விட விழிகளை மூடிப் படுத்திருந்தான் யாழவன்.
இடது காலில் வழிந்திருந்த உதிரத்தை துடைத்து விட்டு மருந்து போட்டவள் அவனுடைய கை வீக்கத்திற்கு கிரீம் ஒன்றையும் தடவி விட விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தவன்
“தேங்க்யூ நர்ஸ்…” என்றான்.
அதன் பின்னர் அவன் தன்னுடைய பர்சையும் அலைபேசியையும் எடுத்து வைத்தவன் அங்கே வந்த தலைமை வைத்தியரிடம் ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியே சென்றுவிட அங்கே இருந்த அனைவருக்கும் ஏதோ புயல் அடித்து ஓய்ந்தாற் போலத்தான் இருந்தது.
சாராவின் முகமோ வெளிறிப் போனது.
இன்று இரவு மீட்டிங் இருப்பதாக அவன் கூறி விட்டுச் சென்றிருக்க என்ன நடக்கப் போகின்றதோ என அப்போதே பயந்து போனாள் அவள்.
அர்ச்சனாவோ தன்னுடைய வார்டுக்குள் நுழைந்தவள் தன் வேலையில் மூழ்கிப் போனாள்.
இன்று அவளுக்கு நைட் டியூட்டி வேறு இருந்தது.
இரவு ஏழு மணி போல் வீட்டிற்குஞ் சென்று ப்ரஷ் ஆகிவிட்டு அரை மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து இரவு நேரப் பணியைத் தொடர்வாள் அவள்.
ஆனால் இப்போது அந்த நேரத்தில் யாழவன் மீட்டிங் எனக் கூறிவிட தன்னுடைய அன்னைக்கு அழைத்து இன்று வீட்டுக்கு வர முடியாது எனக் கூறியவள் தன்னுடைய இரவு உணவை ஹோட்டலில் எடுப்பதாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.
யாழவனும் அவன் கூறிய நேரத்திற்கு சரியாக மருத்துவமனைக்கு வந்தவன் அங்கே இருந்த அனைத்து ஊழியர்களையும் தன் முன்னே அமர வைத்திருந்தான்.
அவனிடமோ கண்டிப்பான பார்வை.
அங்கே கூயியிருந்தவர்களிடமோ பதற்றமான பார்வை.
“குட் ஈவினிங் கய்ஸ்.. ஐ அம் யாழவன் பிரான்சிஸ் சவேரியன்.. பேர் கொஞ்சம் பெருசுதான்.. நீங்க என்ன யாழவன் இல்லன்னா ரியன்னு கூப்பிடலாம்..” என்றவனது விழிகளோ தன் முன்னே அமர்ந்திருந்தவர்களின் பதற்றத்தை உள்வாங்கிக் கொண்டன.
அந்தக் கூட்டத்தில் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்த அர்ச்சனாவை ஒரு கணம் அவனுடைய விழிகள் தீண்டி மீண்டன.
“என்னோட பிஸ்னஸ் மெடிசின் தயார் பண்றது மட்டும்தான்.. இந்த ஹாஸ்பிடல்ஸ் எல்லாம் மெயின்டைன் பண்றது நான் கிடையாது.. என்னோட அப்பா.. எங்க அப்பாவோட பிஸ்னஸ்ல நான் இதுவரைக்கும் தலையிட்டது கிடையாது… பட் இப்போ தலையிடலாம்னு இருக்கேன்..
இங்க இருக்க சில ரூல்ஸ் இனி மாறணும்.. டேப்லெட்ஸ் எல்லாம் வெளிய விக்கிற விலையை விட இங்க மூணு மடங்கு ஜாஸ்தியா இருக்கு.. கால் உடைஞ்ச பையனுக்கு ஒரு நாள் ட்ரீட்மென்ட் பண்ணதுக்கு சிக்ஸ் லேக்ஸ் பில் போடுறீங்க.. வாட் இஸ் திஸ் கய்ஸ்..?”
“விகாஷ் சார்தான் மருந்துகளோட விலையை மாத்தினாரு சார்..” என்றார் தலைமை வைத்தியரான சுரேஷ்.
“ஓஹ்…! பார்மசில டேப்லெட் பில் செட் பண்ணவங்க என்ன இந்த மீட்டிங் முடிய வந்து பாக்கணும்.. பில் கவுண்டர்ல இருக்க பொண்ணு எஸ் நீங்கதான்.. மிஸ் சாரா நீங்களும் என்னை வந்து மீட் பண்ணுங்க.. ஒன் வீக்ல எல்லாத்தையும் நான் ரீசெட் பண்றேன்..” என்றவன் தன்னுடைய தந்தை அந்த மருத்துவமனைக்கு பொறுப்பாக நியமித்திருந்த விகாஷ் என்ற நபர் யாராக இருக்கும் என அங்கிருந்த கூட்டத்தில் அலசிபவன்,
“இங்க விகாஷ் யாரு..?” எனக் கேட்டான்.
“சார் அவர் லஞ்ச் டைமுக்கே வீட்டுக்குப் போயிட்டாரு.. இனி நாளைக்குத்தான் வருவாரு..” என்றார் தலைமை வைத்தியர்.
தன்னுடைய தந்தை பொறுப்பாக நியமித்து விட்டுச் சென்ற விகாஷ் என்பவனிடம் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவன்,
“அவர் இன்னும் டென் மினிட்ஸ்ல இங்க இருக்கணும்..” என உத்தரவிட்டான்.
அதன் பின்னர் அவன் தன் மீட்டிங்கை முடித்துக் கொள்ள அங்கிருந்தவர்களோ தங்களுக்குள் கிசுகிசுக்கத் தொடங்கினர்.
Wow super sis
Supero super Yazhavan.👌👌👌👌👌👌👏👏👏👏👏😍😍😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️