விஷம் – 05
கிட்டத்தட்ட 12 தளங்களைக் கொண்டிருந்த மருத்துவமனையில் யாழவனின் தந்தையின் அறையோ பத்தாவது தளத்தில் அமைந்திருந்தது.
மீட்டிங்கை முடித்துவிட்டு விகாஷை சந்தித்து எச்சரித்தவன் அதன் பின் தன்னுடைய தந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அந்த மருத்துவமனையில் மருந்து இறக்குமதி தொடக்கம் வைத்தியர்களுக்கான சம்பளம் என அனைத்தையும் அலசி ஆராயத் தொடங்கினான் யாழவன்.
மிகப்பெரிய பண மோசடியே நடந்திருந்தது.
எரிச்சலுடன் லேப்டாப்பை மூடி வைத்தவன் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற முடிவை அக்கணம் எடுத்தான்.
நேரமோ இரவு ஒன்பதைத் தொட்டிருந்தது.
சிசிடிவி கேமராவில் வேலை செய்யும் ஊழியர்களை ஆராயத் தொடங்கினான் அவன்.
அவனுடைய கரங்களோ தானாகவே எமர்ஜென்சி வார்டுக்குரிய கேமராவின் ஃபுடேஜை அழுத்தியது.
எதிர்பார்த்தது போலவே அவனுடைய விழிகள் அர்ச்சனாவைக் கண்டுவிட சிரித்தவாறு ஒரு நோயாளியுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
அழகிய வதனம் அவளுடையது.
அவன் இதுவரை பார்த்த பெண்களில் மிகவும் வித்தியாசமாக இருந்தாள் அர்ச்சனா.
அதே கணம் அவனுடைய அன்னையிடமிருந்து அழைப்பு வர அதனை ஏற்றவன்,
“ஹாய் மம்மி..” என்றான்.
“என்கிட்ட நீ அடி வாங்கப் போற.. உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன் மம்மி டம்மின்னுல்லாம் கூப்பிடாதன்னு.. அழகா அம்மானு கூப்பிடுப்பா..”
“ஊப்ஸ்… சரிமா சொல்லுங்க..” என்றான் சிறு சிரிப்போடு.
“என்னடா காலைல ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு வர்றேன்னு கிளம்பின. அப்ப போனவன்தான் லஞ்ச் டைம் நான் கால் பண்ணியும் கால் அட்டென்ட் பண்ணவே இல்ல.. இப்போ வரைக்கும் வீட்டுக்கு வரல என்னதான்டா பண்ற..?”
நல்லவேளை அப்பா அம்மாகிட்ட ஆக்சிடென்ட் பத்தி எதுவும் சொல்லலை என நிம்மதிப் பெருமூச்சு விட்டவன்,
“அப்பாவோட ஹாஸ்பிடல்ல கொஞ்சம் முக்கியமான வேலைமா.. இங்க இருக்கும் வரைக்கும் நானே எல்லா வேலையையும் பாத்துக்கலாம்னு நினைச்சேன்..”
“சரிடா அதுக்காக இவ்வளவு நேரமாவா வேலை பாப்ப..? இங்க என் கூட டைம் ஸ்பென்ட் பண்ண தானே வந்த..? வேலை பாக்கவா வந்த..? போதும்டா கண்ணா வீட்டுக்கு வா சாப்பிட்டுத் தூங்கலாம்..” என்றார் அவர்.
“ஓஹ் மை டியர் ஸ்வீட் ஹார்ட்… எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டு மாத்திரை போட்டுத் தூங்குங்க.. இன்னும் ஒன் ஹவர் ல நான் அங்க வந்துருவேன்..” என்றான் அவன்.
“அட போடா..” என சலித்துக் கொண்டார் ரூபா.
“அம்மா இங்க ஒரு பொண்ண பார்த்தேன்..” எனக் கூறியவனின் குரலில் உற்சாகம்.
“என்னடா சொல்ற..? நிஜமாவா..? அழகா இருக்காளா..? உனக்குப் பிடிச்சிருக்கா..? யாருன்னு சொல்லு… உடனே போய் பொண்ணு பாத்துடலாம்..” என ஆர்வத்தில் மூச்சு விடாமல் பேசிய தன்னுடைய அன்னையை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அவன்.
“ஐயோ அம்மா ஸ்டாப் திஸ்… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.. ஃபர்ஸ்ட் டைம் என்னை எதிர்த்து பேசின ஒரு பொண்ண இன்னைக்குத்தான் மீட் பண்ணேன்.. ஹாஸ்பிடல் ஓனரோட சன் நான்தான்னு தெரிஞ்சும் எனக்கே ட்ரீட்மென்ட் பாக்க மாட்டேன்னு சொன்னான்னா பாத்துக்கோங்க.. செம தில்லுமா அந்தப் பொண்ணுக்கு..” என்றான் சிரிப்போடு.
“என்னடா சொல்ற..? உனக்கு எதுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கணும்..? என்ன ஆச்சு உனக்கு..?” எனப் பதறிவிட்டார் அவர்.
‘ஓஹ் ஷிட் உளறிட்டோமே..’ என தனக்குள் முனகியவன்,
“ப்ச்.. அது சின்ன ஆக்சிடன்ட்மா..” என்றதும் அவரோ மறுபக்கத்தில் இருந்து அழவே தொடங்கி விட்டார்.
“ஓஹ் காட்… மாம் ப்ளீஸ் லிசன் டு மீ.. முதல்ல அழுறதை நிறுத்துங்க.. ப்ராமிஸா சின்ன ஆக்சிடென்ட் தான்… எனக்கு எதுவுமே ஆகல.. நான் நல்லா இருக்கேன்.. கால்ல மட்டும் சின்னதா அடிபட்டுருச்சுமா.. இப்போ ஓகே..” என தன்னுடைய அன்னையை சமாதனம் செய்தான் அவன்.
“உடனே கிளம்பி வீட்டுக்கு வாப்பா..” என அழுத அன்னைக்கு உடனடியாக வீடியோ அழைப்பை எடுத்தவன் தன்னை முழுவதுமாக வீடியோவில் காண்பித்து “இப்போ நம்பறீங்களா..?” எனக் கேட்க அதன் பின்னரே அமைதியானார் ரூபாவதி.
“இந்த ஹாஸ்பிடல்ல நிறைய விஷயம் தப்பா இருக்குமா.. நானே கொஞ்ச நேரத்துல வர்றேன்.. எனக்காக வெயிட் பண்ணாம தூங்குங்க ப்ளீஸ்..” என்க, அவரோ சரியென தலையசைத்தவர் அழைப்பைத் துண்டித்து விட தன்னுடைய சிகையை அழுந்தக் கோதியவன் லேப்டாப்பின் திரையைப் பார்த்தான்.
சில நோயாளிகள் உறக்கத்தை தழுவி விட அவர்களுக்கு ட்ரிப்ஸை போட்டுவிட்டு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்த அர்ச்சனாவோ பானுமதியுடன் சிரித்துப் பேசத் தொடங்கி விட ஏனோ அவளைப் பிடித்தது அவனுக்கு.
மீண்டும் சில கோப்புகளைத் திறந்து அவற்றை ஆராயத் தொடங்கியவன் மணி பதினொன்றைத் தாண்டியதும் அதிர்ந்து போனான்.
“டாம்.. இவ்ளோ நேரம் ஆயிருச்சா..?”
ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடித்து விட முடியாது அல்லவா..?
கழுத்து வலித்தது.
வலித்த தன்னுடைய பின் கழுத்தை அழுத்தி வருடியவன் மீண்டும் கேமரா ஃபுட்டேஜை ஆன் செய்து பார்க்க, எமர்ஜென்சி வார்டில் அவள் இல்லை.
மருத்துவமனையின் அனைத்து இடங்களையும் ஆராய்ந்தபடியே வந்தவன் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும் அறையை நோக்கி தனியாக சென்று கொண்டிருந்த அர்ச்சனாவைக் கண்டதும் புருவம் உயர்த்தினான்.
சற்று நேரத்தில் இன்னொரு ஊழியன் ஒருவனும் ஆக்சிஜன் சிலின்டர் இருக்கும் அறை நோக்கி அவளின் பின்னே செல்ல சிலிண்டரைத் தூக்குவதற்கு உதவிக்கு செல்கிறான் போலும் என எண்ணிக் கொண்டவன் அந்த சிலிண்டர் இருந்த அறையின் கேமராவைப் பார்க்க அதுவோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
‘ஏன் இந்த கேமரா ஒர்க் பண்ணல..?’ என எண்ணியவனின் புருவங்களோ சுருங்கின.
****
அரை மணி நேரத்திற்கு முன்பு.
தன்னுடைய வேலைகள் அனைத்தையும் முடித்தவள் ஓய்வாக அமர்ந்திருக்க ஒரு நோயாளி சிரமப்படுவதைக் கண்டு வேகமாக அவரை நெருங்கிச் சென்றாள் அர்ச்சனா.
அவரோ மூச்செடுக்க சிரமப்படுவதை உணர்ந்து வேகமாக முதலுதவியை செய்தவள் அந்த வார்டுக்குரிய வைத்தியரை விரைந்து அழைத்து வந்தாள்.
அவரோ 11 தளத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து வரும்படி பணிக்க அவளுக்கோ மலைப்பாக இருந்தது.
தனியாக அவளால் அதைத் தூக்க முடியாதே.
அமர் அண்ணாவை உதவிக்கு அழைக்கலாம் என எண்ணியவள் தன்னுடைய அலைபேசியை எடுத்து அவருடைய எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.
“இதோ கொஞ்ச நேரத்துல வர்றேன்ம்மா..” என அவரிடமிருந்து பதில் குறுஞ்செய்தி அவளுக்கு கிடைத்து விட,
எப்படியும் அவர் உதவிக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் லிப்டில் ஏறியவள் பதினொராவது தளத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த அறைக்குள் நுழைந்த அமரோ அவளை நெருங்க,
“அமர் அண்ணா இந்த சைஸ் ஓகேவா இருக்கும்.. இத எடுத்துக்கோங்க…” எனக் கூறிவிட்டு அவள் முன்னே நடக்கத் தொடங்க,
அவனோ ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுக்காமல் அவளுடைய முகத்தையே வெறித்துப் பார்த்தான்.
அடுத்த நொடியே அவளுடைய மென் கரத்தை சட்டென அவன் பற்றிக்கொள்ள அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
பயந்து போனவள் தன்னுடைய கரத்தை உதறி விடுவித்துக் கொண்டு அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“எ.. என்ன பண்றீங்க அண்ணா..? தப்பா இருக்கு…” என அவனை எச்சரித்தவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேற முயற்சி செய்ய சட்டென அவளை இழுத்து வலுக்கட்டாயமாக அணைத்துக் கொண்டான் அவன்.
அவளுக்கோ நெஞ்சம் பதறிவிட்டது.
அருவருப்பில் துடிதுடித்தவள் கதறத் தொடங்கினாள்.
அவளுடைய மொத்த பலத்தையும் திரட்டி அவனைத் தள்ளி விட்டவள்
“ச்சீஈஈ… என்ன பண்றீங்க..? இங்க சிசிடிவி கேமரா இருக்கு.. ஏதாவது தப்பு பண்ணீங்கன்னா உங்களுக்கு தான் பிரச்சனையா போகும்.. தயவு செஞ்சு என்னை போக விடுங்க.. நா.. நான் வெளியே யார்கிட்டயும் எதுவுமே சொல்ல மாட்டேன்…” என அழுதவளை இழுத்து தரையில் போட்டவன் வேகமாக சென்று அந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மீண்டும் அவளை நெருங்க அவளுக்கோ அச்சத்தில் இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.
இந்த அறைக்குள் இருந்து கத்தினால் கூட வெளியே கேட்காது அல்லவா..?
“கொஞ்ச நேரம் அமைதியா இருந்தீன்னா உனக்கும் சுகமா இருக்கும் எனக்கும் சுகமா இருக்கும்.. உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுப்போம்..” என்றான் அவன்.
நெஞ்சம் பதைபதைக்க தன்னை நெருங்கியவனைப் பார்த்து கை கூப்பியவள்,
“நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லண்ணா.. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.. என்ன எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்..” என மன்றாடினாள்.
“இந்த நாளுக்காக எத்தனை மாசமா காத்துட்டு இருக்கோம் தெரியுமா..? எவ்வளவு பிளான் பண்ணியும் நீ சிக்கவே இல்ல.. இன்னைக்குத்தான் தனியா வந்து சிக்கி இருக்க.. இப்போ உன்னை விடுறதுக்கு நான் என்ன முட்டாளா..? இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு கம்பெனி தர இன்னொருத்தரும் இங்க வந்துருவாரு… இன்னைக்கு நைட் முழுக்க நீ எங்க கூட தான் இருக்கப் போற..” என்றவன் தன்னுடைய ஃபோனை எடுத்து வீடியோவை ஆன் செய்துவிட்டு அவளுடைய ஆடையை கிழிப்பதற்கு முயல அவளுக்கோ உள்ளமும் உடலும் விதிர்விதிர்த்துப் போனது.
தன்னைச் சுற்றி ஏதோ சதி நடந்து இருக்கின்றது என்பது தாமதமாகப் புரிய அருகே இருந்த சிறிய சிலிண்டரை மிக சிரமப்பட்டு தூக்கி அவன் மீது எறிந்தவள் அவன் லாபகமாக விலகிக் கொள்ள கண்ணீரோடு எழுந்து கதவை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
அவனோ பாய்ந்து அவளுடைய ஆடையைப் பிடித்து இழுக்க அவளுடைய தோள் பக்கத்திலிருந்து பின் முதுகு வரை சரேலென கிழிந்தது அவளுடைய தாதி ஆடை.
உடல் கூசிப் போக அவமானத்தில் கூனிக் குறுகிப் போனவள் தரையில் விழுந்த மீனைப் போலத்தான் துடிக்கலானாள்.
அவனோ குனிந்து அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைய அவளுடைய உதட்டின் ஓரம் உதிரம் கசிந்தது.
கதவை நெருங்கவே விடாது அவளை இழுத்து கீழே தள்ளியவன் கிழிந்து தொங்கிய ஆடையை இன்னும் பற்றி கிழிக்கத் தொடங்கினான்.
அலறினாள் மாது.
அதே நேரம் அந்த அறைக்கதவோ தட்டப்படும் சத்தம் கேட்டதும் “இதோ டாக்டரும் வந்துட்டாரு..” எனக் கூறியவாறு சிறு சிரிப்போடு கதவைத் திறக்க,
அங்கே அழுத்தமான பார்வையோடு நின்றான் யாழவன்.
Wow. Super super super super. 👌👌👌👌👌👌👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️
Waiting for next epi sis