தொல்லை – 06
“போ போன்னா எப்படிங்க போக முடியும்..? சின்னவ ஓடிப் போயிட்டான்னு சம்மந்தி வீட்ல போய் எல்லாருக்கும் சொல்லச் சொல்றீங்களா..? இவ்வளவு நாளும் பணம்தான் நம்மகிட்ட இல்ல இதைச் சொன்னா நம்ம மானம் மரியாதையும் நம்மள விட்டுப் போயிடும்..” என அழுதவாறு கூறினார் சீதா.
அவர் முகம் வீங்கிச் சிவந்திருந்தது.
“இல்லடி நேத்து அஞ்சலி மது கூடதான் கடைசியா பேசினா.. அதுக்கப்புறம்தான் அவளைக் காணல.. உன்னோட அக்கா பொண்ணு லல்லுகிட்ட ஊர விட்டுப் போறேன்னு சொல்லிட்டு போனவ அப்படியே நம்மல தலைமுழுகிட்டுப் போய்ட்டா.. ஒருவேளை மதுக்கு ஏதாவது அஞ்சுவைப் பத்தி தெரிஞ்சிருக்குமோன்னு தோணுது… அதனாலதான் அங்க போய் மதுகிட்ட இதப் பத்தி பேசுன்னு சொல்றேன்..” என வேதனை ததம்பிய குரலில் கூறினார் மதுராவின் தந்தை.
சீதாவோ வேதனையின் உச்சத்தில் இருந்தார்.
“ஏங்க ஏன் அவ இப்படி பண்ணினா..? எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம்ம ரெண்டு பொண்ணுங்களையும் நல்லாதானே பாத்துக்கிட்டோம்.. இப்படி வீட்டை விட்டுப் போக அவளுக்கு எப்படிங்க மனசு வந்துச்சு..? என்னால தாங்க முடியலையே..” கதறினார் அவர்.
மிகப்பெரிய கடமை முடிந்து விட்டது என்ற மன நிம்மதியில் இருந்தவருக்கு பெரியவளின் திருமணத்தில் சின்னவள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிச் சென்றது பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்குக் கூட தனியாகச் செல்லப் பிரியப்படாத தன்னுடைய பெண்ணா ஊரை விட்டுச் சென்று விட்டாள்..?
அவரால் அதை சிறிதும் நம்பவே முடியவில்லை.
நேற்று இரவு தொடங்கிய வேதனை இதோ விடிந்தம் கூட அவர்கள் இருவரையும் வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது.
“நாம ரெண்டு பேரும் இப்படியே இருந்து என்ன நடந்துச்சுன்னு தெரியாம அழுதுகிட்டு இருக்கிறதை விட மதுக்கிட்ட போய் பேசினா அஞ்சலி எங்க போயிருக்கான்னாவது தெரிய வாய்ப்பிருக்கு.. முதல்ல நீ கிளம்பு.. நான் அழைச்சுட்டுப் போறேன்..” என்றார் அஞ்சலியின் தந்தை.
“சரிங்க.. சம்மந்தி வீட்ல யாருக்கும் இது தெரிய வேணாம்… நம்ம பொண்ணுகிட்ட மட்டும் நடந்ததை சொல்லுவோம்…” என்றவர் விழிகளைத் துடைத்துக் கொண்டு கதரின் வீட்டிற்குச் செல்லத் தயாரானார்.
*****
அஞ்சலியின் கைகளில் இருந்த காபி கப் சற்று நடுங்க, அவள் முகத்தில் பதற்றமும் சங்கடமும் கலந்து தெரிந்தது.
“கிஸ் கிடைக்குமா…?” என்ற கதிரின் கேள்வி அவளை ஒரு கணம் திகைப்பில் ஆழ்த்தியது.
அவனுடைய பார்வையும் அந்த ஆசை ததும்பும் புன்னகையும் அவளை மேலும் சங்கடத்தில் தள்ளின.
அவள் மனதில் மீண்டும் மதுராவின் நினைவு எழ, குற்ற உணர்ச்சி அவளை இறுகப் பற்றி உலுக்கத் தொடங்கியது.
துவண்டு போனாள் அஞ்சலி.
“மாமா… காபி…” என மீண்டும் முனகியவாறு கப்பை அவனிடம் நீட்டினாள் அவள்.
அவளுடைய குரல் தயக்கத்தால் தடுமாறியது. கதிரின் பார்வையைச் சந்திக்க முடியாமல் அவள் கண்கள் தரையை உற்றுப் பார்த்தன.
“ஹேய் பொண்டாட்டி நான் உன்கிட்ட இப்போ காஃபியா கேட்டேன்..?” எனக் குறும்போடு வினவினான் அவன்.
“அது… வந்து..”
“என்ன வந்து போயி….?”
“இ… இல்ல மாமா…” திணறினாள் அவள்.
“என்ன இல்ல…? ஓஹ் கிஸ் இல்லையா..? நான் கேட்டாலும் எனக்கு கொடுக்க மாட்டியா..?”
“அச்சோ அப்படி சொல்லல..” பதறினாள் அவள்.
“அப்போ குடு…” என்றவனுக்கு உதடுகள் சிரிப்பில் துடித்தன.
மெல்ல அவளை நெருங்கியவன் அவளுடைய கரத்தில் இருந்த காபி கப்பை வாங்கி அருகே இருந்த மேஜை மீது வைத்தான்.
அஞ்சலியோ விட்டால் அழுது விடுபவள் போல நின்றிருந்தாள்.
கதிர் ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன் தடுமாறித்தான் போனான்.
அவனது உலகம் ஒரு மெல்லிய மயக்கத்தில் மூழ்க ஆரம்பித்தது.
பின்னே யாருமற்ற தனிமையில் அழகிய மனைவி அருகில் இருக்கும்போது அவன் மயக்கத்தில் ஆழ்ந்து போகாமல் இருந்தால்தானே அதிசயம்.
அவளுடைய கருமையான நீண்ட கூந்தல் புடவையின் மடிப்புகளில் அலைந்து அவனை அசைத்தது.
அவளுடைய வெண்ணிற இடை மேகங்கள் மறைத்த நிலவாக புடவைக்கு இடையே அவ்வப்போது வெளியே பளிச்செனத் தெரிய அவனுடைய இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது.
‘கொல்றாளே…’ அவஸ்தைக்குள் தள்ளப்பட்டான் அவன்.
அவனுடைய பார்வை தன்னுடைய புடவை விலகிய இடையில் மொய்ப்பதை உணர்ந்து பதறிப் போனவள் சட்டென தன் புடவையை இழுத்து விட்டாள்.
அவளுடைய சிவந்த உதடுகள் பதற்றத்தில் நடுங்க அவனுக்கோ ஒரு தேவதையின் முன் நிற்பது போலத் தோன்றியது.
“மது…” எனக் கதிர் மெல்ல அழைத்தான். அவனுடைய குரல் உணர்ச்சி பொங்கி வழிந்தது.
அவன் மனம் அவளுடைய அழகில் திளைத்து அந்த அழகை கரங்களால் உணர ஆசை கொண்டது.
விளைவு அவளை நெருங்கினான் கதிர்வேலன்.
அவனுடைய கைகள் தயக்கமின்றி அவளுடைய தோளை மென்மையாகத் தொட்டன.
அவளுடைய மென்மையான சருமம் அவனை மேலும் மயக்கத்தில் ஆழ்த்த அவனது விரல்கள் மெதுவாக அவளுடைய இடையை நோக்கி நகர்ந்தன.
அவள் இழுத்து மறைத்த புடவையின் மடிப்பை மெல்ல விலக்கியவன் அவளுடைய வெண்ணிற இடையை மென்மையாக வருடினான்.
அவனுடைய மூச்சு வேகமாகியது. அவளுடைய அருகாமை அவனை மோகத்தீயில் தகிக்கச் செயாதது.
“மது… நீ இப்படி என் பக்கத்துல புடவைல இருக்கும்போது… எ… எனக்கு எல்லாமே மறந்து போயிடுது…” என்றவனின் குரல் ஆசையில் தழுதழுத்தது.
அவன் மெல்ல முன்னேற அவனுடைய உதடுகள் அவளுடைய கன்னத்தை நோக்கி நகர்ந்தன.
அவனுடைய மூச்சு அவளுடைய தேகத்தை மென்மையாகத் தீண்டியது.
அஞ்சலியோ ஒரு நெருப்புக் கடலில் நிற்பவள் போல தவித்தாள். தகித்தாள்.
கதிரின் தொடுகை அவளை நொறுங்கச் செய்தது.
அவளுடைய மனதில் மதுராவின் முகம் மின்னலாகத் தோன்றி மறைய,
‘நான் இவரோட மனைவி இல்ல.. இவர் என் சகோதரியின் கணவர்…’ என்ற எண்ணம் அவளை உலுக்க, அவளுடைய உடல் விறைத்தது.
அவனுடைய கைகள் அவளுடைய இடையை வருடியபோது அவளுக்கோ மூச்சு முட்டியது.
“மாமா… ப்ளீஸ்…” என வேதனையோடு முனகினாள் அவள்.
அவளுடைய குரல் பயத்தாலும் குற்ற உணர்ச்சியாலும் நடுங்கியது.
அவள் பின்வாங்க முயன்றாள். ஆனால் அவளுடைய கால்கள் தரையோடு வேரோடியது போல அசைய மறுத்தன.
கதிரின் உதடுகள் அவளுடைய கன்னத்தில் முத்தத்தைப் பதிக்க விக்கித்துப் போனாள் மாது.
அவனோ அவளுடைய இடையை இறுக்கிப் பிடித்தவன், அவளை இன்னும் நெருங்க முயன்றான்.
“மது… உன்ன இவ்வளவு பக்கத்துல பார்க்கும்போது… என்னால என்னையே கட்டுப்படுத்த முடியலடி…” என்றவனுடைய குரல் உணர்ச்சியில் திளைத்தது.
அவனுடைய பார்வை அவளுடைய சிவந்த உதடுகளில் பதிந்தது. அவற்றை முத்தமிட வேண்டும் என்ற ஆசை அவனை அக்கணமே ஆட்கொண்டது.
அஞ்சலியின் நிலையோ புயலில் சிக்கிய பூங்கொடியின் நிலையாகிப் போனது.
அவனுடைய நெருக்கத்திலும் தொடுகையிலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருந்தாள் அவள்.
அவளால் இதை ஏற்கவும் முடியவில்லை.. தவிர்க்கவும் முடியவில்லை.
“மாமா… ப்ளீஸ்… நான்…” எனத் தடுமாறியவாறு அவள் வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.
“அம்மு ஏன்டி தள்ளிப் போற..?” ஏக்கமாக எழுந்தது கதிரின் குரல்..
அவளுடைய கண்களில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது.
“நான்… நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்…” என முனகியவாறு வேகமாக அங்கே இருந்த குளியல் அறைக்குள் நுழைந்து கதவை மூடினாள் அஞ்சலி.
அங்கே குளியல் அறையின் குளிர்ந்த தரையில் அப்படியே அமர்ந்தவள் முகத்தை கைகளால் மூடி விம்மி வெடித்துக் கதறினாள்.
‘அக்காஆ நீ எங்க இருக்க..? இந்த நாடகத்தை என்னால எவ்வளவு நாள் தாங்க முடியும்..? இவரோட ஆசை… இவரோட அன்பு.. என்ன குற்ற உணர்ச்சில தள்ளுதுக்கா.. மாமா பாவம்கா…’ என எண்ணியவள் உடல் குலுங்க அழுதாள்.
கதிரோ அதிர்ந்து விட்டான்.
அஞ்சலியின் புறக்கணிப்பில் அவனுடைய ஆசை கொண்ட மனம் உடைந்து போனது.
அவளுடைய தயக்கம், அவனை அவள் விலக்கிய விதம் எல்லாம் ஓன்று சேர்ந்து அவனுடைய உணர்ச்சி பொங்கிய இதயத்தைக் குத்திக் கிழித்தன.
‘எதற்காக என்னை விலக்குகிறாள்? நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா? அவளுக்கு என் மீது வெறுப்பா?’ என எண்ணிய அவனுடைய மனம் கதறியது.
அவன் கைகள் இன்னும் அவளுடைய இடையின் மென்மையை உணர்ந்தாலும், அவளுடைய புறக்கணிப்பு அவனை ஒரு விதமான வெறுமையில் தள்ளியது.
தலை வலித்தது.
‘மது, உனக்கு என்ன ஆச்சு? நான் உன்னை எப்படி புரிஞ்சுக்கிறது?’ என வேதனை கலந்த குழப்பத்தில் மூழ்கினான் அவன்.
அதே நேரத்தில் கதிரின் வீட்டுக்கு அஞ்சலியில் பெற்றோர் வந்து சேர்ந்திருந்தனர்.
அவர்களை வரவேற்று ஹாலில் இருந்த இருக்கையில் அமர வைத்த சுதாலட்சுமியோ சீதாவின் முகத்தைப் பார்த்து திகைத்துப் போனார்.
அழுது வீங்கிச் சிவந்து போயிருந்த அவருடைய முகத்தை பார்த்ததும் எதுவோ சரியில்லை என்பது அவருக்குப் புரிந்தது.
“அடடே வா முத்து.. எப்படி இருக்கம்மா தங்கச்சி..?” எனக் கேட்டவாறு அங்கே வந்தார் கதிருடைய தந்தை துரைமணி.
“நல்லா இருக்கோம் ஐயா..” என பணிவாக வந்தது முத்துவின் குரல்.
“ஐயாவா..? இப்போ நாமதான் சம்மந்தியா மாறிட்டோமே.. இப்போ இந்த ஐயா எல்லாம் தேவைதானா..? என்ன பெயர் சொல்லி கூப்பிடு முத்து…” என உரிமையாக பேசினார் துரைமணி.
முத்துவோ சரியென தலையசைத்தாரே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
அப்போதுதான் துரையும் அவர்களுடைய முகத்தை உற்று நோக்கினார்.
“சுதா உன் பையனையும் மருமகளையும் வரச் சொல்லு..” என துரை கூற,
“சரிங்க…” என்றவர் தன்னுடைய மகனையும் மருமகளையும் அழைப்பதற்காக படிகளில் ஏறினார்.
சற்று நேரத்தில் கதிரின் அறைக்கதவை அவர் தட்ட தன்னை சுதாரித்துக் கொண்டு கதவைத் திறந்தான் கதிர்வேலன்.
“என்னமா சொல்லுங்க..?”
“உன்னோட மாமனாரும் மாமியாரும் வந்துருக்காங்க.. ரெண்டு பேரும் சீக்கிரமா கீழே வாங்க..”
“சரிமா நீங்க போங்க.. நான் வரேன்..” என அவரை அனுப்பியவன்,
குளியலறையின் அருகே சென்று “மது உன்னோட அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க வெளியே வா..” என அழைத்தான்.
“நீ… நீங்க கீழ போங்க மாமா.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்..” என்றதும் சரி எனக் கூறிவிட்டு கீழே வந்தான் கதிர்.
மாப்பிள்ளை மட்டும் தனியாக கீழே வருவதைக் கண்ட சீதாவோ சட்டென எழுந்து கொண்டார்.
“தம்பி மது வரலையா…?”
“அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியல அத்த..” என்றான் அவன்.
“உடம்புக்கு முடியலையா ஏன் என்னாச்சு நேத்து நல்லா தானே இருந்தா..” எனப் பதறினார் அவர்.
“இல்ல நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்ல..” என்றவன் தயங்கியவாறு தன் தந்தையைப் பார்க்க, துரைமணியோ முத்துவை அழைத்துக் கொண்டு வயல் காணிகளைப் பற்றி பேசியவாறு நகர்ந்துவிட்டார்.
“அவளுக்கு பீரியட்ஸ் அத்த.. வயிறு வலின்னு சொன்னா.. இன்னைக்கு வலி குறைஞ்சிருக்கு..” என கதிர் கூறியதும் சீதாவுக்கோ விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
பத்து நாட்களுக்கு முன்பு தானே மாதவிடாய் வந்து முடிந்தது அதற்குள் மீண்டும் எப்படி வந்தது எனச் சிந்தித்தவர்,
“நான் போய் மதுக்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரட்டுமா..?” எனக் கேட்க,
“இதெல்லாம் எதுக்கு எங்ககிட்ட கேக்குறீங்க அவ உங்க பொண்ணு தாராளமா போய் பேசுங்க..” என்றார் சுதாலட்சுமி.
கதிரின் அறைக்குள் நுழைந்தவரோ விழிகளைத் துடைத்தவாறு குளியல் அறையில் இருந்து வெளியே வந்த தன் மகளை ஆழ்ந்து பார்த்தார்.
அவள் புடவை கட்டி இருந்த விதமும் விரித்து விட்டிருந்த நீண்ட கூந்தலும் கதிர் கூறிய மாதவிடாய் பிரச்சனையும் அவருக்கு உண்மையை உணர்த்த இங்கே இருப்பது மதுரா அல்ல அஞ்சலி என்பதை உணர்ந்து கொண்டவருக்கு தலை மீது இடி விழுந்ததைப் போல இருந்தது.
தாய் அறியாத சூல் இருக்க முடியுமா என்ன..?
💜💜
ஹாய் டியர்ஸ்
இந்த அத்தியாயத்திற்கு 100 ஸ்டார் ரேட்டிங் வந்ததும் அடுத்த அத்தியாயம் உடனே வரும்..
டீலா 🔥🔥
Super sis
Super super super super super super super super interesting
சூப்பர் சூப்பர் சூப்பர்.👌👌👌👌👌👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰😍😍😍😍🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️