சொர்க்கம் – 07
அனைவரையும் காக்க வைத்த விநாயக்கோ கேரவனை விட்டு வெளியே வந்து விட அப்போதுதான் நிம்மதியாக இருந்தது சக்கரவர்த்திக்கு.
டிஸ்ஸு ஒன்றை எடுத்து தன்னுடைய தடித்த அதரங்களைத் துடைத்து விட்டவாறு சக்கரவர்த்தியை நெருங்கி வந்தான் அவன்.
இவ்வளவு நேரமும் அவன் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்தவர் அவனை அருகில் கண்டதும் வாயெல்லாம் பல்லாக மாறிப் போனார்.
“ஸூட்டிங் ஆரம்பிச்சிடலாமா..?” என சக்கரவர்த்தி பணிவாகக் கேட்க ஒற்றைத் தலையசைப்பில் அவருக்கு பதில் கொடுத்தவன் அடுத்த சில நிமிடங்களில் அவர் கூறிய காட்சியை அப்படியே தத்ரூபமாக நடிக்கத் தொடங்கி விட்டிருந்தான்.
ஒரே டேக்கில் அவர் எதிர்பார்த்தது போல அவன் மிக நேர்த்தியாக நடித்து முடித்தவுடன் திருப்தியோடு கட் சொன்னார் சக்கரவர்த்தி.
சிறிது நேரம் வெயிலுக்குள் நின்றதற்கே அவனுக்கு வியர்த்து விட அங்கே அவனுக்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்வதற்கு சென்றவன் ஒரு பெண்ணின் குரல் ஓங்கிக் கேட்பதைக் கண்டு புருவம் சுருக்கியவாறு திரும்பிப் பார்த்தான்.
அங்கே ப்ரொடியூசரின் அசிஸ்டன்ட் ரகுவை விரல் நீட்டி எச்சரித்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.
அனைவரின் கவனமும் அங்கே பதியத் தொடங்கியது.
அட்ஜஸ்ட்மென்ட் அட்ஜஸ்மென்ட் என ஒரு தடவைக்கு நாலு தடவை அவர்கள் கூறியதன் அர்த்தம் மிகத் தாமதமாகத்தான் செந்தூரிக்குப் புரிந்தது.
புரிந்ததும் மனம் உடைந்து போனாள் அவள்.
ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அடுத்த நொடியே “செருப்பு பிஞ்சிடும்டா நாயே… உங்களுக்கெல்லாம் பொண்ணுங்கன்னாலே உங்க கூட வந்து படுக்கணும்னு ஆசை வந்துருமா..? ச்சீ… என்ன ஜென்மங்க நீங்க…” என அவள் விரல் நீட்டி ரகுவைத் திட்டிக் கொண்டிருக்க சற்றே தள்ளி நின்று அவர்கள் பேசுவது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சேகரோ தன்னுடைய வருங்கால மனைவியின் உடல் அசைவை வைத்து அவள் திட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் வேகமாக செந்தூரியை நோக்கி ஓடிவந்தான்.
அனைவரின் பார்வையும் அவர்கள் மீதுதான் இருந்தது.
“ஏய் செந்தூரி.. என்ன ஆச்சு..? எதுக்காக ரகு சாரை திட்டிக்கிட்டு இருக்க..?” என அவன் யாருக்கும் கேட்காத குரலில் அவளுடைய கரத்தைப் பிடித்து தன்னருகே இழுத்தவன் கிசுகிசுப்பான குரலில் கேட்க,
அவனை கொல்லும் வெறியோடு முறைத்துப் பார்த்தாள் செந்தூரி.
“இப்பவே என்ன இங்கிருந்து கூட்டிட்டுப் போயிருங்க சேகர்.. இல்லன்னா அவ்வளவுதான்..” என அவள் கோபத்தில் சிடுசிடுக்க,
“ஐயோ ப்ளீஸ் அமைதியா இரு..” என அவளிடம் கெஞ்சியவன் அதிர்ந்து போய் நின்ற ரகுவைப் பார்த்து,
“சாரி சார்.. மன்னிச்சிடுங்க. இவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கிறேன்…” எனக் கெஞ்சத் தொடங்கினான் சேகர்.
செந்தூரிக்கு தன்னிடம் தவறாகப் பேசிய ரகுவிடம் அவன் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டதும் இன்னும் சினம் அதிகரித்தது.
இன்னொரு பக்கம் உள்ளம் வேதனையில் மருகித் தவிக்க எங்கே பொங்கி அழுது விடுவோமோ என பயந்து போனவள் வேக வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறும் நோக்கோடு அங்கிருந்து ஓடத் தொடங்கினாள்.
சக்கரவர்த்திக்கு என்ன பிரச்சனை என்றே புரியவில்லை.
ஏதோ வாய்த் தகராறு போல என நினைத்துக் கொண்டவர் அதிர்ந்து போய் நின்று விட்டார்.
செந்தூரியோ அந்த இடத்தை விட்டுச் சென்றால் மட்டும் போதும் என எண்ணியவள் வேகமாக ஓடிய கணம் எதிரே வந்த விநாயக்கின் மீது வேகமாக மோதி விட,
தன் மேல் மோதிய பெண்ணை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தினான் அவன்.
‘என்ன பிரச்சனை இந்தப் பெண்ணுக்கு..? கண் என்ன பிறடியிலா இருக்கிறது..?’ என கோபமாக எண்ணியவன்,
அவன் அவளைத் தாங்கிப் பிடித்திருப்பதையும் அவளுடைய ஆடை தோள் பக்கமாக விலகி அவளுடைய உள்ளாடை தெரிவதையும் கண்டவன் தங்கள் இருவரையும் அந்த நிலையில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த கேமரா மேனை எரிப்பது போலப் பார்த்து விட்டுத் தன் பிடியில் அதிர்ந்து நின்றவளைப் பார்த்து “அட்ஜஸ்ட் பண்ணுடி…” எனப் பற்களைக் கடித்தவாறு விநாயக் கூற,
இவளுக்கு சுற்றம் மறந்து போனது.
ஏற்கனவே ரகு, காந்தன் இருவரும் கூறிய அட்ஜஸ்ட்மெண்டிலேயே அவளுடைய மனம் சுழன்று கொண்டிருக்க விநாயக் கூறியதோ அக்கணம் அவளுக்குத் தவறாகவே மனதில் பதிந்து போனது.
சற்று முன்னர் இன்னொரு நடிகையுடன் கேரவனுக்குள் இருந்து சல்லாபித்துக் கொண்டிருந்த நடிகன் இவன்தான் என்பதை சடுதியில் உணர்ந்து கொண்டவள் தன்னையும் அதுபோல நினைத்துத்தான் தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு கேட்கிறான் எனத் தவறாகப் புரிந்து கொண்டவள் அவனுடைய கரத்தை வேகமாக தன்னில் இருந்தும் தட்டி விட்டு ஓங்கி அவனுடைய கன்னத்தில் பளார் என அறிந்திருந்தாள்.
“எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே அட்ஜஸ்ட்மென்ட்க்கு கேட்டிருப்ப.. பொறுக்கி ராஸ்கல்.. உங்களையெல்லாம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தூக்கி வைக்கணும்.. சே..!” என கோபத்தில் கத்திவிட்டு துப்பட்டாவை இழுத்து தோளில் போட்டவாறு அவள் சென்றுவிட சேகருக்கு உலகமே உறைந்து போனது போல இருந்தது.
விநாயக்கின் நிலமையோ அந்த இடத்தில் மிக மோசமாகிப் போனது.
அவனிடம் பேசுவதற்கே அனைவரும் பயப்படும்போது அனைவரின் முன்பும் அவனைத் தவறாகப் பேசி கைநீட்டி அடித்து விட்டுச் சென்ற அந்த சிறு பெண்ணைப் பார்த்து அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
சிலர் அந்த காட்சியை தங்களுடைய மொபைலில் வீடியோவாக வேறு எடுத்துக் கொண்டனர்.
சக்கரவர்த்திக்கோ நெஞ்சடைப்பே வந்து விட்டிருந்தது.
அச்சத்தில் மார்பைப் பிடித்துக் கொண்டு அவர் இருக்கையில் அமர்ந்து விட்டார்.
இன்று நடந்த கலவரத்தில் இனி அவன் தன்னுடைய படத்தில் நடிப்பான என்ற பயம் அவருக்கு.
அந்தப் பெண்ணின் கதை முடிந்தது என அனைவரும் பீதியோடு விநாயக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அவள் அடித்த கன்னத்தை அழுத்தமாக வருடி விட்டவன் அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி விட்டான்.
ரகுவுக்கு கூட பதற்றம்தான்.
தன்னை மரியாதை இன்றி பேசி விட்டுச் சென்று விட்டாளே என செந்தூரியின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தவன் விநாயக்கின் நிலையைப் பார்த்ததும் ‘நல்லவேளை விநாயக் சாருக்கே அடித்தவள் என்னை செருப்பால் அடிப்பேன் எனக் கூறியதோடு சென்று விட்டாளே’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன்.
பின்னே சொன்னது போல செருப்பால் அடித்து இருந்தால் அவ்வளவுதான் மொத்தமானமும் கப்பல் அல்லவா ஏறி இருக்கும்.
விநாயக் திரும்பி அடிப்பான் என அனைவரும் எதிர்பார்த்திருக்க அவன் அமைதியாக அங்கிருந்து சென்றது அனைவருக்கும் உச்சகட்ட வியப்பை உண்டாக்கி இருந்தது.
அங்கே நடந்து முடிந்த கலவரங்கள் பற்றி அறியாது தன்னுடைய மனைவியிடம் பேசி முடித்துவிட்டு வந்த காந்தனுக்கோ அங்கே இருந்த சூழ்நிலை தவறாகப்பட ரகுவை நெருங்கி “என்னாச்சு…?” எனக் கேட்டான் அவன்.
ரகு அவளுடைய திமிரான பேச்சையும் விநாயக்கிற்கு அவள் அடித்து விட்டுச் சென்றதையும் கூற காந்தனின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தன.
“யாருடா இவ..? சாதாரண பொண்ணுக்கு இவ்வளவு தில்லா..? விநாயக்கையே கைநீட்டி அடிச்சிருக்கானா இவளுக்கு ஏதாவது பேக்ரவுண்ட் பெருசா இருக்குமோ..? இவளைப் பத்தி ஃபுல் டீடைல்ஸும் எனக்கு வேணும்.. யாருன்னு விசாரி…” என அவளைப் பற்றிய விடயங்களை ரகுவிடம் விசாரிக்கக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட,
அங்கு நடந்த அனைத்தையும் வரிசையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கௌதமனோ ‘ஆத்தி நல்லவேளை நம்மள அறையாம அண்ணான்னு சொல்லிட்டுப் போயிட்டா.. இருந்தாலும் இந்தப் பொண்ணுக்கு செம தில்லு..’ என எண்ணிக்கொண்டான்.
படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்த ஒவ்வொருவரும் அவளைப் பற்றி ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டிருக்க இது எதைப் பற்றியும் அறியாத செந்தூரியின் விழிகளில் இருந்தோ கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
அவளுக்கோ அங்கு நடந்து முடிந்த எதையும் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது என்ற நாகரிகம் கூட இல்லாமல் ‘ப்ரொடியூசர் உன்கூட இருந்ததுக்கு அப்புறம் நான் உன் கூட இருப்பேன். அதுக்கப்புறம் கேமராமேன்..’ எனக் கேவலமாகப் பேசிய ரகுவின் வார்த்தைகள் அவளுடைய காதில் அமிலத்தை கரைத்து ஊற்றியதைப் போல இருந்தது.
அதிலும் ஹீரோவையும் அட்ஜெஸ்ட் பண்ணனும் என அவன் கூறி முடித்த சில நொடிகளிலேயே விநாயக் வந்து அட்ஜஸ்ட் பண்ணு என்றதும் அவளுடைய கட்டுப்பாடுகள் யாவும் மொத்தமாக தளர்ந்து போயின.
அத்தனை பேரின் முன்பும் தன்னைப் படுக்கைக்கு அழைத்து விட்டான் என எண்ணியவள் கோபத்தை அடக்க முடியாது அவனை அறைந்து விட்டு வந்திருந்தாள்.
அவனை அடித்த கரம் அதீதமாய் வலித்தது.
சேகரை எதிர்பார்க்காமல் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி வீதியில் நடந்து கொண்டிருந்தவளை இடித்து விடுவது போல வேகமாக வந்து நின்றது ஒரு விலை உயர்ந்த கார்.
அவளோ பதறிப் பின்னால் நகர்ந்து நிற்க அந்தக் காரில் இருந்து பாயும் வேங்கை போல இறங்கி வந்து அவள் முன்னே நின்றான் விநாயக் மகாதேவ்.
அவனுடைய விழிகள் விட்டால் அனலை அந்த இடத்திலேயே கக்கி விடுவேன் என்பதைப் போல செந்நிறமாக ஜொலித்துக் கொண்டிருக்க அவனுடைய பார்வையில் மிரண்டு இன்னும் பின்னால் நகர்ந்தாள் அவள்.
அவனுடைய வெண்ணிற முகத்திலோ அவள் அடித்ததன் நிமித்தம் ஒரு பக்க கன்னம் சிவந்து போயிருந்தது.
அவனுடைய பார்வையும் அவன் வந்து நின்ற தோரணையும் அவளுக்கு உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்த அந்த வீதியில் வேறு யாருமே இல்லாது இருப்பதைக் கண்டு தடு மாறியவள்,
“மிஸ்டர் மரியாதையா வழிய விடுங்க..” என அடிக் குரலில் சீறினாள்.
அவனுக்கோ அக்கணமே அவளுடைய முடியைப் பற்றி கன்னம் எரியும் அளவிற்கு அவளை அறைய வேண்டும் போல ஆத்திரம் எழுந்தது.
ஆத்திரத்தை அடக்கிப் பழக்கப்படாதவன்
“எதுக்குடி என்ன அடிச்ச..?” எனக் கர்ஜிக்க,
அவன் நாகரிகம் இன்றி சத்தமாக வீதியில் கத்திப் பேசியதும் மார்பில் கை வைத்து பதறிப் போனவள் சட்டென விலகி நடக்கத் தொடங்கினாள்.
அவனோ நின்ற இடத்தில் இருந்து சிறிதும் அசையாதவனாய் அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பிடித்து வேகமாக இழுத்து மீண்டும் அவனின் முன்பே நிற்க வைத்து விட,
அவன் அழுத்தமாகப் பிடித்து இழுத்த விதத்தில் அவளுடைய வலது பக்க கையோ கழன்று விழுந்தது போன்ற வலியில் துடித்துப் போனாள் செந்தூரி.
“எதுக்கு என்ன அடிச்ச..?” மறுபடியும் எரி கற்களாய் அவனுடைய வார்த்தைகள் வந்துவிழ
வலித்த தன்னுடைய கரத்தை நீவி விட்டவளுக்கு விழிகள் கலங்கின.
“எ.. என்கிட்ட தப்… தப்பா பேசினா அடிக்காம வேற என்ன பண்ணுவாங்க..? என்னையும் உன் கூட கொஞ்சிக்கிட்டு அலையுற பொண்ணுங்க மாதிரி நினைச்சுட்டியா..?” என நடுங்கியவாறே அவனைப் பார்த்துக் கேட்டாள் அவள்.
சட்டென அவளுடைய கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டவன் “வாட் த ஃ******* யு டாமிட்… உனக்கு என்ன உலக அழகினு நினைப்பா..? உன்னோட ட்ரெஸ் விலகி இருந்ததால அட்ஜஸ்ட் பண்ண சொன்னேன்.. உன்கிட்ட மிஸ் பிகேவ் பண்ற அளவுக்கு நீ ஒன்னும் ரதி கிடையாது..
ரொம்ப தப்பு பண்ணிட்டடி.. அத்தனை பேரு முன்னாடி இந்த விநாயக் மேலேயே கை வச்சிட்டல்ல.. நான் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடுறதுன்னா அந்த பொண்ணுங்களுக்குன்னு சில தகுதி வேணும்.. அந்த தகுதி எல்லாம் உன்கிட்ட கொஞ்சம் கூட இல்லை. நீயா ஒன்ன நெனச்சுக்கிட்டு நீயா வாய்க்கு வந்ததை பேசுவியா..?
இப்போ சொல்றேன் கேட்டுக்கோ எண்ணி ஒரே மாசத்துல நீயா என்னைத் தேடி என்கிட்ட வருவ.. என்ன அடிச்ச இந்தக் கையால நான் சொல்ற சேவகம் எல்லாத்தையுமே என்னோட படுக்கைல இருந்து வேசியா எனக்கு பண்ணுவ.. பண்ண வைப்பான் இந்த விநாயக் மகாதேவ்..” என்றவன் அவளை அப்படியே வீதியில் தள்ளிவிட்டு தன்னுடைய காரில் ஏறிச் சென்றுவிட அவளுக்கோ இதயம் தொண்டைக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.
Vinayakka enakku pidikkalai sis
Ayo pavam ava
Ellam ava amma vala vandha problem than