கடற்கரையை ஒட்டிய நவீனமான ஃபேஷன் டிசைனிங் ஸ்டுடியோவில் ஒரு மர மேஜையின் முன் அமர்ந்திருந்தாள் மதுரா.
அவள் சென்னைக்கு வந்து ஒரு நாள் மட்டுமே ஆகியிருந்தது.
அவளுடைய முகத்தில் ஒரு தன்னம்பிக்கையான புன்னகையும் தன் கனவுகளை அடையும் உற்சாகமும் மின்னின.
அவள் அணிந்திருந்த எளிய ஆகாய நீல நிற காட்டன் சுடிதார் அவளுக்கு பாந்தமாகப் பொருந்தி அவளுடைய அழகை எடுத்துக் காட்டியது.
ஸ்டுடியோவின் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக சென்னையின் கடற்கரை தெரிந்தது.
அலைகள் மெல்ல உருண்டு மணலில் மோதின.
அந்தக் காட்சிகளை எல்லாம் வெகுவாக இரசித்தாள் அவள்.
அவள் விட்டு வந்த கிராமத்து வாழ்க்கையையோ அஞ்சலியையோ கதிரையோ பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தன் கனவுகளை நோக்கி மட்டுமே அவளுடைய மனம் பயணித்தது.
ஆம் அந்த நொடி மகிழ்ச்சியின் எல்லையைத் தொட்டவளாய் பூரித்தாள் மதுரா.
அவளுடைய படிப்பு மற்றும் பயிற்சி செலவுகளை அவளுடைய ஆசிரியை மேடம் ஷில்பா முழுமையாக ஏற்றுக்கொண்டது மதுராவுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது.
இந்தப் புதிய நகரத்தில் தன் முதல் நாளைத் தொடங்குவதற்கு, நிச்சயதார்த்தத்தன்று கதிரின் அம்மா அவளுக்கு அணிவித்த தங்கச் சங்கிலியை விற்றிருந்தாள்.
அந்தப் பணம் சென்னையில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுக்கவும் அவளுடைய முதல் நாள் செலவுகளைச் சமாளிக்கவும் உதவியது.
தன் கனவுகளை அடைவதற்கு ஒரு சிறிய விலையாகவே அந்தச் சங்கிலியை நினைத்தாள் அவள்.
அஞ்சலியை தன்னைப் போல் நடிக்க வைத்தது, கதிரின் வாழ்க்கையை விட்டு ஓடியது என இவை எதுவும் அவளுக்கு குற்ற உணர்ச்சியை அளிக்கவில்லை.
அவளைப் பொறுத்த வரைக்கும் தன்னை ஒடுக்கிய கட்டுப்பாடுகளை உடைத்து எறிந்து விட்டு சுதந்திரப் பறவையாக வந்து விட்டோம் என்றே தோன்றியது.
‘கூடிய சீக்கிரமே இந்த ஃபேஷன் உலகத்துல நான் யாருன்னு நிரூபிச்சுக் காட்டுவேன்..’ என பூரிப்போடு எண்ணிக் கொண்டாள் அவள்.
“மதுரா, இந்த ஸ்கெட்சை ஒரு தடவை பாரு. உன்னோட முதல் நாள் ப்ராக்டீஸா ஒரு சிம்பிள் குர்தி டிசைனை ட்ரை பண்ணலாமா?” என மென்மையான குரலில் கேட்டவாறு மேடம் ஷில்பா அவளருகே வந்தார்.
ஷில்பாவின் கையில் ஒரு ஸ்கெட்ச் பேட் இருந்தது.
அதில் ஒரு எளிய குர்தியின் வடிவமைப்பு மென்மையான பென்சில் கோடுகளில் வரையப்பட்டிருந்தது.
அவர் கொடுத்த ஸ்கெட்ச் பேட்டில் இருந்த வடிவமைப்பை பார்த்ததும் இவளுக்கோ அதை இன்னும் அழகாக மாற்றும் திட்டங்கள் பல மூளையில் உதித்தன.
ஆனால் இதற்கு முன்பு எல்லாம் கைகளாலேயே வரைந்து பழக்கப்பட்டவளுக்கு அந்த ஸ்கெட்ச் பேட்டில் வரைவது சற்று சிரமமாக இருந்தது.
மதுராவை இந்தப் புதிய சூழலில் உற்சாகப்படுத்த முயல்வது போல ஷில்பாவின் முகத்தில் ஒரு ஊக்கமளிக்கும் புன்னகை பரவியது.
மதுராவோ தன் முகத்தில் தன்னம்பிக்கையான புன்னகையை கொண்டு வந்தவள், “சரி, மேடம்.. ஆனா இந்த ஸ்கெட்ச் பேட்ல வரைஞ்சு எனக்கு பழக்கம் இல்லை.. இதுக்கு ஒரு லைட் எம்பிராய்டரி சேர்த்தா கொஞ்சம் ஸ்டைலிஷா இருக்கும்….,” என உற்சாகமாக பதிலளித்தாள்.
அவளுடைய குரல் தெளிவாக ஒலித்தது. அவள் விரல்கள் பேனாவைப் பற்றி, ஸ்கெட்ச் பேடில் சில கோடுகளை மெதுவாக வரையத் தொடங்கின.
அவள் நினைத்ததை போல அவ்வளவு கடினமாக அது இருக்கவில்லை.
நிஜமாகவே ஒரு காகிதத் தாளில் பென்சிலால் வரைவது போல இலகுவாகத்தான் இருந்தது.
“இந்த பேட்டர்னுக்கு ஒரு பாரம்பரிய டச் கொடுத்து, கொஞ்சம் மாடர்ன் கலர் பேலட் யூஸ் பண்ணலாமா?” எனக் கேட்டவளை பிரமித்துப் போய் பார்த்தார் ஷில்பா.
அவள் கூறியது போல செய்தால் அது மிகவும் அழகாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டவர் மதுராவைப் பாராட்டி, “நல்ல ஆரம்பம் மதுரா. முதல் நாளே இவ்வளவு ஆர்வமா இருக்கிற உன்னோட டேலன்ட் இந்த கோர்ஸுக்கு ஒரு பெரிய பிளஸ்ஸாக இருக்கும்,” எனக் கூறினார்.
அவருடைய பாராட்டில் உச்சி குளிர்ந்து போனாள் மதுரா.
துள்ளலான புன்னகையுடன் “தேங்க்ஸ், மேடம்! இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. எனக்கு நிறைய உதவி பண்ணிட்டீங்க.. சென்னை வந்ததும் என்னை பிக்கப் பண்ணதுல இருந்து என் கூடவே இருந்து எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ணீங்க… தேங்க்யூ சோ மச்..” என்றாள்.
“நீ ரொம்ப டேலன்டான ஸ்டுடென்ட்.. உங்க ஊர்ல நீ வரைஞ்ச படங்களை எல்லாம் பார்த்தப்போவே நீ கண்டிப்பா பெரிய ஆளா வருவேன்னு எனக்கு தோணுச்சு..” எனப் பாராட்டாகக் கூறினார் ஷில்பா.
அந்த ஸ்டுடியோவின் மற்றொரு மூலையில் அங்கே பயிற்சி எடுக்க வந்த மாணவர்கள் ஒரு சிறிய உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் அர்ஜுன் என்பவன் ஒரு இளம் கிராஃபிக் டிசைனர்..
அவனுக்கோ கிராமத்து பசங்கிளி பாதி மாடல் மங்கை மீதி என வந்து நின்ற மதுராவின் அழகு வெகுவாக ஈர்த்தது.
அவ்வப்போது அவளைக் கடைக் கண்களால் பார்த்து அவளுடைய அழகில் மயங்கி நின்றான் அவன்.
மெல்ல அவள் அருகே நெருங்கியவன் அவள் வரைந்ததை பாராட்டினான்.
“வாவ் மதுரா சூப்பரா இருக்கு… இந்த ஸ்கெட்சுக்கு ஒரு மாடர்ன் டச் கொடுக்கலாமா?” எனக் கேட்டவன் அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்து, ஒரு மென்மையான புன்னகை புரிந்தான்.
அவனுடைய கண்கள், மதுராவின் சிவந்த உதடுகளையும் அவளுடைய தோற்றத்தின் நளினத்தையும் இரசித்தன.
அங்கிருந்தவர்களிலேயே மிகவும் அழகான ஒருவன் வந்து அவளைப் பாராட்டி வழிய பேசியதும் அவளுக்கோ பெருமிதம் தோன்றியது.
“ஓஹ்… நல்ல ஐடியா… உங்க பேரு..?” எனத் தயங்கி நிறுத்தினாள் அவள்.
“அர்ஜுன்.. ஐ ஆம் அர்ஜுன்…” என அவளை நோக்கித் தன் கரத்தை நீட்டினான் அவன்.
மறுக்காமல் அவனுடைய கையைப் பற்றிக் குலுக்கியவள்,
“ஒரு மினிமலிஸ்டிக் பேட்டர்ன் ட்ரை பண்ணலாமா அர்ஜுன்..?” என உற்சாகமாக பதிலளித்தாள் அவள்.
“பண்ணலாமே மது…” என்க, அவர்களுக்குள்ளே உரையாடல் மேலும் வளரத் தொடங்கியது.
ஸ்டுடியோவில் இருந்த மற்றொரு மாணவனான விக்ரம் அவர்களை நோக்கி வந்து, “ஹாய் மதுரா.. நான் விக்ரம்.. இன்னைக்கு ஈவ்னிங் எங்க டீம் மெம்பர்ஸ் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பக்கத்துல இருக்க காபி ஷாப் போறோம்… நீயும் வா.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்..” என அழைத்தான்.
விக்ரமின் இயல்பான அழைப்பு மதுராவை அந்தப் புதிய குழுவில் ஒரு அங்கமாக உணர வைத்தது.
மதுராவோ ஒரு நொடி தயங்கியவள்,
“சரி… விக்ரம். இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ரீதான்.. கண்டிப்பா வரேன்…” எனக் கூறினாள்.
****
தன்னுடைய தந்தையை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது வாயடைத்துப் போனாள் அஞ்சலி.
சீதாவோ வேறு வழி இன்றி அவருடைய கணவரின் வற்புறுத்தலில் அங்கிருந்து சென்றுவிட அஞ்சலிக்கோ மீண்டும் தனித்து விடப்பட்டது போல இருந்தது.
அதே நேரம் அந்த அறைக்குள் நுழைந்தான் கதிர்.
அங்கே நின்ற அஞ்சலியின் முகம் அழுது வீங்கி இருப்பதைக் கண்டதும் அவனுக்கோ உள்ளம் பதறிப் போனது.
“மது… என்ன ஆச்சுடி..? உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?” எனக் கவலையுடன் கேட்டான் அவன்.
அவனுடைய உண்மையான அக்கறை அவளைக் குற்ற உணர்ச்சியில் தள்ளியது.
“இ.. இல்ல மாமா… அம்மாவை பார்த்ததும் அழுகை வந்துடுச்சு..” என சமாளித்தாள் அவள்.
அவளால் கதிரின் கண்களை சந்திக்க முடியவில்லை.
‘இந்த பொய்யை இன்னும் எவ்வளவு நாள் தொடருவேன்?’ என மனதிற்குள் ஊமையாகக் கதறினாள் அவள்.
“வேணும்னா மாமாவையும் அத்தையையும் நம்ம வீட்லையே தங்க சொல்லிடவா..?” எனக் கதிர் கேட்டதும் அவளுக்கோ விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
அக்கணம் அவளுடைய மனதில் கதிர் உயர்ந்து நின்றான்.
“இ.. இல்ல மாமா..” என்ற அஞ்சலியோ தன் கண்ணீரை மறைக்க முயன்றவள்,
“எனக்கு கொஞ்சம் தலைவலி மாமா…” என்று இழுத்தாள்.
பொய்களை அவன் முன்னே குவித்தாள் அவள்.
அவளுடைய மனதிற்குள் ‘உண்மையை சொல்லிடலாமா?’ என ஒரு போராட்டமே நடந்தது. ஆனால் முத்துவின் கடுமையான வார்த்தைகள் அவளுடைய வாயை அடைத்தன.
அவனோ தைலத்தை எடுத்து வந்து அவளைப் படுக்க வைத்து அவளுடைய நெற்றியில் மென்மையாக தேய்த்து விடத் தொடங்க,
அவளுக்கோ இப்படி ஒரு நல்ல உள்ளத்தை ஏமாற்றுகின்றோமே என்ற வேதனை அதிகரித்தது.
தைலம் தேய்த்து விட்ட அவனுடைய கரத்தை விலக்கியவள், நகர்ந்து படுக்க அவன் முகமோ சட்டென மாறியது.
அவளை அழுத்தமாகப் பார்த்தவன் “எதுக்காக என்ன அவாய்ட் பண்ற..?” எனக் கேட்டான்.
“அ.. அப்படி இல்லைங்க..”
“பொய் சொல்லாத மது… தலை வலிக்குதுன்னு சொன்ன.. நான் தைலம் தேச்சா தள்ளிப் போற.. நான் என்ன பண்ணாலும் உனக்கு பிடிக்காத மாதிரியே பிஹேவ் பண்ற.. இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதமா மது..? இல்லன்னா வீட்ல ஏதாவது போர்ஸ் பண்ணி உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களா..? என்ன புடிக்கலைன்னா உண்மைய சொல்லிடு..” என அவன் நேரடியாகக் கேட்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க தன்னுடைய கரத்தில் இருந்த தைலம் டப்பாவைத் தூக்கி தரையில் விசிறி அடித்தவன் விருட்டென அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
அடேய் அடேய் கதிர் ஏண்டா அந்த பிள்ளையை இப்படி படுத்தி எடுக்குறீங்க எல்லோரும்? பாவம் டா அவ. ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👏👏👏👏👏😍😍😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
அடேய் அடேய் கதிர் பாவம் டா அந்த பிள்ளை. எல்லோரும் சேர்ந்து படுத்தி எடுக்கறீங்க.👌👌👌👌👌👏👏👏👏👏👏😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️
Dei Neeyum yendaa avalai kastta padutthura
அடேய் அடேய் கதிர் ஏண்டா அந்த பிள்ளையை இப்படி படுத்தி எடுக்குறீங்க எல்லோரும்? பாவம் டா அவ. ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👏👏👏👏👏😍😍😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
Super super super super super super super super super super super super