09. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.7
(38)

சொர்க்கம் – 09

நான்கு தளங்களைக் கொண்ட மிகப்பெரிய வீடு அது.

அந்த வீட்டைச் சுற்றியே பல ஏக்கர்களுக்கு தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட வேலையாட்களின் பராமரிப்பில் அந்தத் தோட்டமும் வீடும் பளிங்கு போலத்தான் எப்போதும் மிளிர்ந்து கொண்டிருக்கும்.

அந்த மிகப்பெரிய வீட்டில் தனக்காக அமைக்கப்பட்டிருந்த பாரினுள் அமர்ந்திருந்தான் விநாயக் மஹாதேவ்.

ஆம் அது அவனுடைய வீடுதான்.

அந்த வீட்டைப் பார்க்கும் யாவரும் பொறாமை கொள்ளும் அளவிற்கு பணத்தை அள்ளிக் கொட்டி அருமையாகக் கட்டி வைத்திருந்தான் அவன்.

எப்போதும் பாருக்குள் நுழைந்தாலே அவனுக்குப் பிடித்த மதுவை எடுத்து அருந்துவதே அவனுடைய வழக்கம்.

ஆனால் இன்றோ அந்த பாரினுள் நுழைந்து ஒரு மணி நேரம் ஆன பின்பு கூட எந்த மதுவையும் எடுத்து அருந்த அவனுடைய மனம் சிறிதளவும் நாடவில்லை.

பெற்றோர்களிடம் கண்டிப்பைக் காணாது வளர்ந்தவன் அவன்.

இதுவரை யாரிடமும் சிறு திட்டைக் கூடப் பெறாதவன் அவன்.

அப்படிப்பட்டவனுக்கு திடீரென தனக்கு சமம் இல்லாத யாரோ ஒரு சிறு பெண்ணிடம் பலரின் முன்பு அடி வாங்கியதை ஏற்கவே முடியவில்லை.

மிகுந்த அவமானமாக இருந்தது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவனுக்கு அது மிகுந்த வலியைக் கொடுத்தது.

இத்தனை நாள் அவன் கட்டிக் காத்த அவனுடைய கம்பீரம் அத்தனையும் நொடியில் சரிந்து போனதைப் போல உணரத் தொடங்கி விட்டிருந்தான் விநாயக்.

இந்த வலியும் அவமானமும் எங்கே மதுவை அருந்தினால் குறைந்து மறைந்து போய்விடுமோ என அஞ்சியே மதுவை அருந்தாது அமர்ந்திருந்தான் அவன்.

தனக்கு செய்த பிழைக்கு அவளுக்கு தக்க தண்டனை கொடுக்காது அவன் இந்த மதுவை ஒரு போதும் நாடப் போவதே இல்லை என்ற முடிவை எடுத்தவனுக்கு அவளைப் பற்றிய அத்தனை விடயங்களையும் அறிய வேண்டி இருந்தது.

அவளிடம் சொன்னதைப் போலவே அவளாகவே தன்னிடம் வரவேண்டும் என எண்ணியவன் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தயாரானான்.

தன்னுடைய பிஏ குணாவிடம் அவளைப் பற்றிய அனைத்து விடயங்களையும் இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கட்டளை இட்டான்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் வந்திருந்தவர்கள் மூலம் அவள் அவனை அறைந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கி விட தன்னுடைய பணத்தை வைத்து அது படப்பிடிப்பின் ஒரு பகுதியே என சமூக வலைத்தளங்களை நம்ப வைத்தவன் அவள் மீது கொலை வெறியில் இருந்தான்.

என்ன செய்தும் அவனுடைய மனதை அவனால் அமைதிப் படுத்தவே முடியவில்லை.

அந்த இடத்திலேயே அவளுக்குத் திருப்பி அடித்திருக்கலாமோ என்று கூட அவனுடைய மனம் தாமதமாக எண்ணத் தொடங்கியிருந்தது.

ஒரு பெண்ணால் இத்தனை அவமானத்தையும் துயரத்தையும் அவன் அனுபவிப்பான் என்பதை கனவில் கூட அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.

அடுத்த நொடியே சக்கரவர்த்திக்கு அழைப்பெடுத்தவன் இனி அவருடைய எந்தப் படத்திலும் தான் நடிக்கப் போவதில்லை எனவும் இப்போது நடித்துக் கொண்டிருந்த படத்திலிருந்து முற்று முழுதாக விலகி விட்டதாகவும் கூறிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்து விட மறுபக்கத்தில் இருந்த சக்கரவர்த்திக்கோ வியர்த்துப் போனது.

விநாயக் மட்டும் தன்னை விலக்கி வைத்து விட்டான் என்பது மக்களுக்குத் தெரிந்து விட்டால் ஏராளமான அவனுடைய ரசிகர்களும் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களே என மிரண்டு போனார் அவர்.

அடுத்த கணமே அந்த மனிதர் அடித்துப் பிடித்து விநாயக்கை சந்திப்பதற்காக அவனுடைய வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினார்.

******

மேகலாவுக்கோ தன்னுடைய தலையில் இடி இறங்கியதைப் போல இருந்தது.

செந்தூரி கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் பயந்து போனார் அவர்.

“என்ன தம்பி இதெல்லாம்..? பணமிருந்தா நடிக்கிறதுக்கு போதும்னு சொன்னீங்களே.. ஆனா இப்படி விபச்சாரம் பண்ண கூப்பிடுறாங்க..” என அவர் அதிர்ந்து போனவராய் சேகரிடம் கேள்வி கேட்க,

“ஆன்ட்டி சத்தியமா எனக்கு இதெல்லாம் தெரியாது.. சக்கரவர்த்தி ரொம்ப நல்ல மனுஷன்.. அவர்கிட்ட இப்படி எல்லாம் எந்த தப்பும் நடக்காதுன்னுதான் அவர்கிட்ட நான் செந்தூரிய கூட்டிட்டுப் போனேன்.. ஆனா இதுல அந்த ப்ரொடியூசர் தலையிடுவான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கவே இல்லை..” என உண்மையான கலக்கத்துடன் கூறினான் அவன்.

“ஐயோ இப்போ என்ன பண்றது..? இந்த வாய்ப்ப நம்பித்தானே நான் பத்து லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கிட்டு வந்தேன்..” என புலம்பத் தொடங்கினார் மேகலா.

“என்ன நடந்தாலும் இன்னொரு தடவை என்னை நடிக்க மட்டும் சொல்லிடாதீங்க.. அந்த கேடு கெட்டவங்க இருக்கிற இடத்துக்கு கடைசி வரைக்கும் நான் போகவே மாட்டேன்..” என மறுத்தாள் செந்தூரி.

“ரகுவும் காந்தனும்தானே உன்கிட்ட தப்பா பேசினாங்கன்னு சொன்ன.. அப்போ எதுக்காக விநாயக் சாரை அடிச்ச..?” என சேகரோ புரியாது கேட்க,

அவளுக்கோ விநாயக்கின் பெயரைக் கேட்டதும் நாக்கு உலர்ந்து போனது.

அவன் கோபத்தோடு அவளிடம் சவால் விட்டுச் சென்றதை எண்ணி இதயம் படு வேகமாகத் துடித்தது.

“நா.. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. அவர் ஏதோ என்கிட்ட தப்பா சொன்னாருன்னு நினைச்சு அவசரப்பட்டு அடிச்சிட்டேன்..” என அவள் தயங்கியவாறு கூற தன் தலையில் கை வைத்தான் சேகர்.

“சோலி முடிஞ்சுது போ… காந்தன் ரகுவைக் கூட சமாளிச்சுடலாம்.. ஆனா விநாயக் சார் ரொம்ப ரொம்ப மோசமான ஆளு… நீயா போய் பிரச்சனைல சிக்கிட்டு வந்திருக்கியே..” என அவன் அஞ்சியவாறே கூற,

“என் மேலதான் தப்பு.. நான் வேணும்னா அவர்கிட்ட மன்னிப்பு கேட்கட்டுமா..?” எனக் கேட்டாள் செந்தூரி.

அவன் மீது தவறில்லையே. அவள் தானே தவறாகப் புரிந்து கொண்டு அவனை அடித்து விட்டாள். அவனிடம் மன்னிப்புக் கேட்பதில் அவளுக்கு எந்த ஈகோவும் இல்லை.

மன்னிப்புக் கேட்டு இந்தப் பிரச்சினையை முடித்தாலே போதும் என அவளுடைய மனம் எண்ணத் தொடங்கியிருந்தது.

“ஆமா ஏதாவது பிரச்சனை வரதுக்கு முன்னாடி இன்னைக்கே போய் மன்னிப்புக் கேட்டுட்டு வந்துடலாம்… இப்பவே கிளம்பு..” என சேகர் அவசரப்படுத்த மேகலாவோ சோர்ந்து போனவராய் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

அவருக்கு அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனை உள்ளே ஓடத் தொடங்கியது.

சேகரோ மேகலாவிடம் கூறிவிட்டு செந்தூரியுடன் விநாயக்கின் வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

இதுவரை அவனைப் பற்றி அறிந்து வைத்திருந்தவனுக்கு அவன் தங்களை உள்ளே அழைத்துழ் பேசுவானா என சந்தேகமாக இருந்தது.

இருந்தாலும் அவனிடம் சென்று சரணடைவது மட்டுமே பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்கான மார்க்கம் என்பதனை உணர்ந்தவன் அவளைத் தன்னுடைய மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு விநாயக்கின் வீட்டை வந்தடைந்திருந்தான்.

இவர்கள் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் சக்கரவர்த்தி வந்து எவ்வளவோ கெஞ்சியும் விநாயக்கை பார்க்க முடியாது என அவனுடைய காவலாளியால் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இதை அறியாத சேகரோ வாட்ச் மேனிடம் “விநாயக் சாரைப் பார்க்கணும்..” எனக் கூற அவர்களை ஏளனமாகப் பார்த்தான் அந்த வாயிற் காவலாளி.

பல வருடங்களாக விநாயக்கிடம் வேலை செய்யும் அவனுக்கு அவன் வீட்டுக்குள் யாரையும் உட்புக அனுமதிப்பதில்லை என்பது நன்றாகத் தெரியுமே.

“எதுவா இருந்தாலும் சாரோட அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம அவரைப் பார்க்க முடியாது..” என அவன் மறுத்து விட சேகருக்கு உள்ளம் பதறியது.

“உங்க சார்கிட்ட மன்னிப்புக் கேட்கத்தான் வந்திருக்கேன்.. மன்னிப்பு கேட்டவுடனே போயிடுவேன் ப்ளீஸ்.. அவரப் பார்க்க விடுங்க..” என மென்மையான குரலில் செந்தூரி கேட்க மீண்டும் மறுத்தான் அந்தக் காவலாளி.

ஆனால் அடுத்த நொடியே அந்தக் காவலாளிக்கு விநாயக்கிடம் இருந்து அழைப்பு வர சட்டென அவனுடைய உடல் விறைத்தது.

அழைப்பை ஏற்று காதில் வைத்து “எஸ் சார்..” என்றான் அவன்.

மறுமுனையில் என்ன கூறியதோ அதற்கும் “எஸ் சார்..” என்ற பதிலோடு அழைப்பைத் துண்டித்து விட்டு அவர்களைப் பார்த்தவன் “உங்களை மட்டும் சார் உள்ளே வரச் சொன்னாரு..” என்க,

இவளுக்கோ பெரு மூச்சு வெளியேறியது.

“சரி நான் போய் மன்னிப்புக் கேட்டுட்டு வந்துடுறேன்.. நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க..” என சேகரிடம் கூறியவள் சற்று படபடப்புடனே உள்ளே நடக்கத் தொடங்கினாள்.

வீடோ வெகு தொலைவில் இருக்க இரண்டு பக்கமும் வளர்த்திருந்த அழகிய செடிகளையும் பூ மரங்களையும் பார்த்தவாறு நடந்தவளுக்கு கால்கள் வலிக்கத் தொடங்கிவிட்டன.

‘வீட்டை எதுக்கு இவ்வளவு தூரத்துல கட்டி வச்சிருக்கான்..?’ என மனதிற்குள் அவனைத் திட்டியவாறு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடந்து அந்த வீட்டின் அருகே வந்தவளுக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது.

அந்த வீட்டின் பிரம்மாண்டம் அவளை அச்சமடையச் செய்ய வாயிலில் துப்பாக்கியோடு நின்ற மற்றுமொரு காவலனைக் கண்டு பதறிப் போனாள் அவள்.

“சார் உங்கள உள்ளே வரச் சொன்னாரு..” என அவன் கூற,

“இந்த வீட்டப் பார்த்தா இன்னும் அரை மணி நேரம் வீட்டுக்குள்ளேயும் நடக்கணும் போல இருக்கே..’ என மனதிற்குள் எண்ணிச் சலித்தவாறு அந்த வீட்டிற்குள் நுழைந்தவள் அந்த வீட்டின் மிகப் பெரிய வரவேற்பறையில் ஒரு அழகிய பெண்ணின் வெண்கலச் சிலையில் படிந்திருந்த தூசியை தூரிகை ஒன்றினால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த விநாயக்கை கண்டு அப்படியே அசையாது நின்றாள்.

அவனோ அங்கே ஒரு ஜீவன் வந்து நிற்பதை சிறிதளவு கூட கவனத்திற் கொள்ளாது அந்த வெண்கலச் சிலையை சுத்தப்படுத்துவதிலேயே குறியாக இருக்க,

இவளுக்கு இங்கு வராமலேயே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் உள்ளே எழத் தொடங்கியது.

மதியாதவன் தலைவாசல் மிதியாதே என பழமொழியே இருக்கிறது அல்லவா.

இவ்வளவு தூரம் வந்தாயிற்று மன்னிப்பையும் கேட்டுவிட்டு சென்றுவிடலாம் என சற்றே அவன் அருகில் சென்றவள் பேசத் தொடங்குவதற்கு முன்னரே அவன் அவளை அமரும்படி சைகை செய்ய அவளுக்கோ வியப்பு மேலிட்டது.

அன்று தன்மீது அத்தனை கோபத்தில் இருந்தவன் இன்று இவ்வளவு அமைதியாக தன்னை அமரும்படி உபசரிக்கின்றானே என‌ ஆச்சரியமடைந்தவாறு அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“சோ என் கூட அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு இவ்வளவு சீக்கிரமா ஒத்துக்கிட்டு என்னைத் தேடி வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை..” என அவன் கூறியதும் பட்டென இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் அவள்.

“நான் ஒன்னும் உங்க கூட அட்ஜஸ்ட் பண்ணி இருக்கிறதுக்கு வரல.” சீற்றம் பொங்க வெளிவந்தன அவளுடைய வார்த்தைகள்.

“அப்படியா..? அப்போ சீக்கிரமே என்கிட்ட வந்துருவ..” என்றான் அவன்.

அவளுக்கோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணமே அவனுடைய பேச்சில் மறந்து போனது.

“இந்த வீட்ல வெளி ஆளுங்களுக்கு உள்ளே வர அனுமதி இல்ல.. ஆனா நீ எப்போ வேணும்னாலும் இந்த வீட்டுக்குள்ள தாராளமா வரலாம்.. உனக்காக என்னோட வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்..” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்,

“நான் அன்னைக்கு பண்ணது தப்புதான்.. அதை மறக்கவே மாட்டீங்களா..? நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன்..” எனக் கலங்கிய குரலில் அவள் கூற அவளை நெருங்கி வந்தவன்,

“நானும் உன் கூட ஒருவாட்டி லவ் மேக் பண்ணிட்டு மன்னிப்புக் கேட்கட்டுமா..?” என அவன் ஆழ்ந்த குரலில் கேட்க அவளுக்கு ச்சீ என்றாகிப் போனது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “09. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!