10. செந்தமிழின் செங்கனியே!

4.9
(40)

செந்தமிழ் 10

 

நேர்முக தேர்விற்காக அமர்ந்து இருந்தாள் செங்கனி. ஆம்! அவள் அன்று சொன்னதை நிறைவேற்ற துணிந்து விட்டாள்.

ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக, ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூற, இதோ வந்து விட்டாள்! அவளின் வாழ்வின் அடுத்த அத்த்யாயத்தை துவங்க!

எந்த இடத்தில் இருந்தும் துவங்கலாம்! நம் கையில் தானே உள்ளது நம் வாழ்க்கை! நம் வாழ்க்கையை எப்போது வேண்டுமானாலும் மற்றும் சக்தி நம்மிடம் தான் உள்ளது!

தன்கையே நம்பிக்கை என்று நம்புவது தானே புத்திசாலி தானம்! அதை நன்கு உணர்ந்துவிட்டாள் செங்கனி!

அச்யுத் அடுத்த நாளே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டான். அதற்கு கூட இனியனிடம் இருந்து அவள் பணம் வாங்க வில்லை!

அவளின் தாய் வீடு சீதனமான அவளின் மோதிரத்தை வித்து தான் மருத்துவமனையில் இருந்து அவனை அழைத்து வந்தாள்.

இனியன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் மறுத்து விட்டாள். பேசுவதை கூட நிறுத்தி கொண்டாள்.

கயல், அச்யுத், பொன்னம்மாள் என ஒருவரும் அவனிடம் பேசுவது இல்லை.

அடுத்த நாளே, இதோ இங்கு வந்து அமர்ந்திருந்தாள்.

ஒரு பியூன் வந்து, “நீங்க தான் அடுத்து”, என்று சொல்லிவிட்டு செல்ல, அவளும் உள்ளே சென்றாள்.

அங்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரும், மற்றும் இரண்டு ஆசிரியைகளும் இருந்தனர்.

” உங்க படிப்பெல்லாம் எங்களுக்கு ஓகே தான், செங்கனி. ஆனா நீங்க கிட்டத்தட்ட பதிமூணு வருஷமா வேலையே செய்யல? திடீர்னு பசங்களுக்கு உங்களால சொல்லித்தர முடியுமா?”, என்று அவர் சொல்ல, “என் பசங்களுக்கு சொல்லி குடுத்துட்டு தான் இருக்கேன்… முன்னாடி வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்ல, இப்போ அவசியம் வந்திருக்கு”, என்று சொன்னவளை பார்த்து, “உங்களுக்கு என்ன இரண்டு மூணு பிள்ளைங்க இருப்பாங்களா? அவங்களையும் ஒரு வகுப்பறை முழுக்க இருக்க பிள்ளைகளையும் சமாளிக்கறது கஷ்டம்”, என்று மற்றொரு ஆசிரியர் கூறினார்.

“நீங்க சொல்றது சரி தான்.. பிள்ளைகள் பிள்ளைகள் தானே! எத்தனையோ ஆசிரியர்கள் வகுப்பறைல இருக்க அத்தனை பிள்ளைகளை சாமாளிப்பாங்க ஆனா அவங்க பெத்த பிள்ளைங்கல சாமளிக்க தெரியாது… எல்லாம் மனசு தான் காரணம்.. கண்டிப்பா ஒரு வாய்ப்பு கொடுங்க…உங்க நம்பிக்கையை பொய் ஆக்க மாட்டேன்”, என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “மேம்”, என்று உள்ளே நுழைந்தார் ஒரு ஆசிரியர்!

“செவென்த் பி கிளாஸ்ல தமிழ் டீச்சர் வரல… யாரை சப்ஸ்டிடுட்ட்டா அனுப்பறது?”, என்று அவர் கேட்டுக்கொண்டு நிற்க, “உங்களுக்கு லைவ் டெஸ்ட் எடுக்கலாம் செங்கனி… வாங்க”, என்று செங்கனியை அழைத்து கொண்டு சென்றார் தலைமை ஆசிரியர்.

“நீங்க இப்போ போக போற கிளாஸ் தான் இந்த பள்ளியிலேயே ஒண்ணா நம்பர் அட்டுழியம் பண்ற கிளாஸ்… அந்த தமிழ் டீச்சர் லீவெல்லாம் இல்ல குய்ட் பண்ணிட்டாங்க… அவங்களுக்கு பதில் தான் ஆளு எடுக்குறோம்… நீங்க இந்த ஒரு பீரியட் இந்த பிள்ளைங்க கூட தாக்கு பிடிச்சிட்டா.. நீங்க தான் தமிழ் டீச்சர்”, என்று அந்த வகுப்பை பற்றி ஒரு சிறு அறிமுகத்தையும் கொடுத்து விட்டார்.

அவர் அதை ஏன் தான் சொன்னார் என்று தான் கனிக்கு தோன்றியது!

அவளுக்கு கொஞ்சம் நடுக்கமும் எடுக்க துவங்கியது.

வகுப்பறையை அடைந்தும் விட்டனர்.

“உள்ள போங்க”, என்று தலைமை ஆசிரியர் சொல்ல, அவளும் உள்ளே சென்றார்.

வகுப்பறை அல்ல அது, விளங்ககுகள் காப்பகம் போல காட்சி அளித்தது!

ஒரு பயன் பெஞ்சின் மீது ஏறி, பேப்பர் தூக்கி போட்டு கொண்டு இருந்தான், இன்னொரு பெண் பிள்ளையோ போர்டில் கிறுக்கி கொண்டு இருந்தால், இதெல்லாம் கூட பரவா இல்லை, ஒரு பையன் தூங்கும் இரண்டு பிள்ளைகளின் முடிகளை சேர்த்து கட்டிக்கொண்டு இருந்தான்.

செங்கனி மயக்கம் வராத குறை தான்!

“இது தான் மா நான் சொன்ன வானர கூட்டம்”, என்று சொன்ன தலைமை ஆசிரியருக்கு கூட ஒரு வித தயக்கம் தான். ஏனென்றால் ஒரு முறை அவரின் தலை விக்கும் அல்லவா பறந்து விட்டது!

“போங்க மா”, என்று அவர் மீண்டும் சொல்லவும், தயக்கத்துடன் தான் உள்ளே சென்றாள்!

பிள்ளைகள் அவளை ஏதோ வித்யாசமாக பார்த்தனர்.

அவளுக்கும் கூட இது புதுமை அல்லவா!

உறங்கி கொண்டிருந்த பிள்ளைகளை, பக்கத்தில் இருக்கும் பிள்ளைகள் எழுப்பி விட்டனர்.

“யாரு நீங்க?”, என்று பெஞ்சின் மேல் நின்று கொண்டிருந்த வானர குட்டி தான் கேட்டது.

“வணக்கம் செல்லங்களா! நான் தான் உங்களுக்கு புதுசா வந்திருக்க தமிழ் அம்மா”, என்று அவள் சொல்லவும், “என் அம்மா பேரு காவியா! நீங்க யாரு புதுசா அம்மா?”, என்று கேட்டது அந்த கருப்பு பலகையில் வரைந்து கொண்டிருந்த குட்டி பெண்!

“தமிழ் அம்மா யாரா? உங்களுக்குலாம் தமிழ் தெரியாதா?”, என்று அவள் கேட்கவும், “அதுவும் ஒரு சப்ஜெக்ட் அவளோ தான?”, என்று இன்னொரு பிள்ளை கேக்டவும், “தமிழ் சப்ஜெக்டா? என்ன வசூல் ராஜா எம்பிபிஎஸ்ல அந்த டாக்டர் சொல்ற மாறி சொல்றிங்க”, என்று அவளும் அவர்களை போல, அவர்களின் வழியிலே பேச ஆரம்பித்தாள்.

தலைமை ஆசிரியருக்கு இவள் நிச்சயம் தேறி விடுவாள் என்று தான் தோன்றியது.

“ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும், பாடுகிற மாட்டை படித்தான் கறக்க வேண்டும், அதே போல பிள்ளைகளுக்கு அவர்கள் பாணியிலேயே போய் தான் பாடம் எடுக்க வேண்டும்”, என்று அறிந்திருந்தால் செங்கனி!

“அப்போ தமிழ் சப்ஜெக்ட் கிடையாதா?”, என்று வேறு ஒரு பிள்ளை கேட்டாள்.

“இல்லையே தமிழ் மொழி தான்! நம்ப பேச, நம்ப உணர்வுகளை வெளி காட்ட ஒரு கருவி! அதுவும் தமிழ் நம்ப தாய் மொழி”, என்று அவள் சொல்லும் போதே, “நான் தெலுங்கு எனக்கு தாய் மொழி தமிழ் கிடையாது”, என்று சொன்னான் ஒரு சிறுவன்.

“தெலுங்குக்கே தாய் தமிழ் தான் செல்லம்”, என்று அவள் சொல்லவும், “நான் மலையாளம் எனக்கு?”, என்று ஒரு சிறுமி அவளின் முடியை சிலுப்பி கேட்க, “மலையாளத்துக்கும் அடி நாதம் தமிழ் தான் தங்கம்”, என்றவளை பார்த்து, “அது என்ன செல்லம் தங்கம்னு சொல்றிங்க… எங்க மீதி டீச்சர்லாம் எங்களை குரங்குனு தான் கூப்பிடுவாங்க”, என்று ஒரு சிறுமி வெகுளியான கூற, சிரித்து விட்டாள் செங்கனி!

“ஏனா அவங்க உங்க டீச்சர், நான் தான் தமிழ் அம்மால?”, என்று அவளின் வழியிலேயே சென்று மடக்க, “என் அம்மா கூட என்ன வானரம்னு தான் கூப்பிடுவாங்க”, என்று பெஞ்சின் மீது நிற்கின்ற சிறுவன் கூற, ‘முதல்ல கீழ இறங்கு பா நீ”, என்று சொல்லி அவனின் கை பிடித்து கீழே இறக்கியவள், “அவங்க உன் அம்மா தான, நான் தமிழம்மா அதனால நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்”, என்று அவள் அவனின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தாள்.

அவளுக்கும் இப்படி பட்ட பிள்ளைகள் புதுசு தான்!

அச்யுத்தும், கயலும் மிக மிக ஓழுக்கமான பிள்ளைகள்!

எடுத்த பொருளை கூட எடுத்த இடத்தில் வைத்து விடுவார்கள் தான்!

ஆனால் ஏனோ செங்கனிக்கு இந்த சுழலும் பிடித்து தான் இருந்தது!

துருதுரு வென்று இருக்கும் பிள்ளைகளை ஏனோ அவளுக்கு திட்ட மனம் வர வில்லை!

“அப்போ உங்களுக்கு ஒரு பாட்டு பாடவா தமிழம்மா?”, என்று ஒருவன் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டான்!

“எம்மா நீ அழகம்மா

விரல்பட விரல்பட இளகம்மா

எம்மா ஏ அழகம்மா

விழிகளில் ஆனந்தம் விலகம்மா

எம்மா நீ தமிழம்மா

இவனது தாய்மொழி பழகம்மா”,

என்று அவன் பாட கனிக்கு சிரிப்பு வந்து விட்டது.

“நல்லா பாடுற தங்கம்”, என்று சொல்லவும், அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

“இப்போ நான் ஒரு பாட்டு பாடுவேன்…நீங்களும் என்கூட சேர்ந்து பாடணும்”, என்று அவள் சொல்லவும், “சரி சரி தமிழம்மாஆ”, என்று அனைவரும் ராகமாக கூற, தலைமை ஆசிரியருக்கு மயக்கம் வராத குறை தான்!

“அருள்நெறி அறிவைத் தரலாகும்”, என்று அவள் முதல் வரியை அழகாய் பாட, “அருள்நெறி அறிவைத் தரலாகும்”, என்று அனைத்து மாணவ செல்வங்களும் ஒரே போல ராகமாக பாடினார்.

“அதுவே தமிழன் குரலாகும்”, என்று அடுத்த வரியை பாட, அவர்களும் பாடினர்.

இப்படியாக முழு பாடலையும் பாடி, இறுதியாக, “எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்”, என்று முடித்து இருந்தார்கள்!

“பாட்டு முடிஞ்சுருச்சு”, என்று அவள் சொல்ல, அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்!

“தமிழம்மா! நீங்களா இந்த பாட்டை எழுதுனது?”, என்று கேட்க, “நான் இல்ல தங்கம், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்”, என்று அவர் சொல்ல, “அது யாரு தமிழம்மா?”, என்றவரிடம், “அவர் ஒரு தமிழ் புலவர் கண்ணா”, என்று சொல்லும்போது அந்த பாட நேரம் முடிந்து மணியும் அடித்து விட்டது.

அடுத்த ஆசிரியரும் வந்து விட்டார்.

“சரி தங்கங்களா.. முடிஞ்சா நாளைக்கு பார்ப்போம்”, என்று அவள் சொல்ல, “என்ன போறிங்களா?”, என்று கேட்டு அவள் பக்கத்தில் வந்தான் ஒரு சிறுவன், “நாளைக்கு வருவாங்க”, என்று சொன்னது என்னவோ தலைமை ஆசிரியர் தான்!

அவருக்கு இது போல ஒரு ஆசிரியர் எங்கும் கிடைக்க போவது இல்லை என்று அவர் அறிவார் அல்லவா!

“நாளைக்கு இரண்டு பீரியட் தமிழம்மாக்கு கொடுங்க”, என்று கட்டளை வேறு வந்தது!

அவருக்கு அதிர்ச்சி தான்! இன்று வரை எப்படி இருந்த பிள்ளைகள் ஒரே மணி நேரத்தில் மொத்தமாக அவளின் பக்கம் சுண்டி இழுத்து விட்டாள் அல்லவா செங்கனி!

“சரி அப்போ நான் கிளம்புறேன்! நாளைக்கு வேற பாட்டு பாடலாம்!”, என்று சொல்லிவிட்டு அவள் செல்ல, அனைத்து பிள்ளைகளும் அவளை ஏக்கமாக பார்த்தனர்.

“நீங்க ரொம்ப நல்ல டீச்சர் செங்கனி”, என்று அவர் சொல்ல, “இல்ல, நான் ரொம்ப நல்ல தமிழம்மா! நான் டீச்சர்ரா இருந்த இந்த பிள்ளைங்க என்கிட்ட இவளோ நல்லா பேச மாட்டாங்க… நான் அவங்களுக்கு எப்பவோம் தமிழம்மாவ இருக்க தான் ஆசை படறேன்… நான் அவங்களுக்கு பாடம் எடுக்கல… தமிழ கற்பிக்குறேன்… ரெண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு… கடமைக்குனு பாடம் எடுத்துட்டு போக நான் வரல…எனக்கு பிடிச்ச தமிழை நான் கற்பிக்குறேன்”, என்று அவள் சொல்லும் போதே, அவளுக்கும் தான் தமிழின் மேல் எத்தனை பிடித்தம் என்று அவருக்கும் புரிந்தது.

“நாளைல இருந்து வந்துருங்க மிச்செஸ் செங்கனி”, என்று சொன்னவருக்கு, புன்னகையை பதிலாக கொடுத்து விடை பெற்றாள்!

செந்தமிழை இனி கற்பிப்பால் செங்கனி! பள்ளியோடு முடிய போவதில்லை!

இனிதான் செங்கனியின் பயணம் ஆரம்பம்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!