10.மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(17)

வரம் – 10

வழக்கத்துக்கு மாறாக சற்றே படபடப்புடன் காணப்பட்டாள் மோஹஸ்திரா.

அவளுடைய இரண்டு வருடக் கனவு நிறைவேறப் போகும் நாள் இன்றல்லவா..?

இதற்காக அவள் உழைத்த உழைப்பு அபாரம்.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே தயாராகியவள் கண்ணாடியின் முன்பு தன்னுடைய விம்பத்தைப் பார்த்தாள்.
வெண்ணிற ஷர்ட் அவளுக்கு மிகவும் பாந்தமாகவும் அழகாகவும் பொருந்தி இருந்தது.

அவள் அணிந்திருந்த கருப்பு நிற டைட்ஸ் ஸ்கர்ட்டோ முழங்கால் வரை மட்டுமே நீண்டிருக்க தன்னுடைய கூந்தலை உயர்த்தி போனிடைலாக போட்டுக் கொண்டவள் தான் அணிந்திருந்த ஆடைக்குப் பொருத்தமான வெண்ணிற கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரத்தையும் கட்டிவிட்டு திருப்தியாக புன்னகைத்துக் கொண்டாள்.

வேகமாக திரும்பியவள் டீபாயில் இருந்த ஃபைலை குனிந்து எடுக்க முயன்ற கணம் அவளுடைய முதுகு நடந்து முடிந்த விபத்தின் காரணமாக வலிக்கத் தொடங்க அவளுடைய அந்த அழகான புன்னகையோ சட்டென மறைந்து போனது.

அவளுடைய உடலில் ஏற்படும் வலி ஒவ்வொரு நிமிடமும் நேற்று நடந்த விபத்தை அவளுக்கு நினைவுபடுத்துவதோடு விபத்தோடு இணைந்து ஷர்வாதிகரன் கொடுத்த முத்தத்தையும் அவனுடைய அத்துமீறலையும் அவளுக்கு நினைவுபடுத்த கொதித்துப் போனாள் மாது.

அந்த பிடிக்காத நினைவில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல இருக்க உடல் இறுகி நின்றவள் “ஹவ் டேர் யூ இடியட்…” என அக்ணமே அவனை வாய் விட்டும் திட்டிக் கொண்டாள்.

‘சே என்ன மனிதன் இவன்..?’ வெறுப்பு மேலும் மேலும் அதிகரித்தது.
ஆண்கள் என்றாலே சபல புத்தி கொண்டவர்கள்தானோ..?

அந்நியப் பெண்ணை அத்து மீறித் தொட்டுப் பார்க்க இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது..?

அதுவும் அப்படி ஒரு ஆபத்தான நிலையில் அவனால் எப்படி என்னைத் தீண்ட முடிந்தது..?

அவன் எல்லை மீறி நடந்து கொண்டதைப் பற்றி அரவிந்தனிடம் சொல்லி விடலாமா என்ற எண்ணம் சடுதியில் தோன்ற சட்டென அந்த எண்ணத்தை தன்னிடமிருந்து தள்ளி வைத்தவள் இப்போது இது அரவிந்தனுக்கு தெரியாமல் இருப்பதே நன்று என்ற முடிவை எடுத்துக் கொண்டாள்.

தன் மீது உயிரே வைத்திருக்கும் அரவிந்தனிடம் இதைப் பற்றிக் கூறினால் நிச்சயமாக ஷர்வாதிகரனுடன் அவன் பிரச்சனை செய்யக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு அக்கணம் அமைதியாகப் போவதே சிறந்தது என்று தோன்றியது.

முதலில் அவள் வந்த வேலையை முடித்தாக வேண்டும்.

சீக்கிரமாக அந்த ரெட் ரீபெல் டைமண்ட்டைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

இப்போது இவனிடம் முட்டி மோதி பிரச்சனை செய்வது முக்கியமல்ல. வந்த வேலையை முடித்துக் கொண்டு அனைத்தையும் அரவிந்தனிடம் ஒப்படைத்துவிட்டு இங்கிருந்து கிளம்பி விடுவதுதான் சாலச் சிறந்தது.

‘ஹல்லோ மேடம்… இவனோடு முட்டி மோதி பிரச்சனை செய்வது முக்கியமில்லை என்றால் எதற்காக அவனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அப்படி ஒரு பதிவை இட்டாய்..?’ என அவளுடைய மனசாட்சி அவளைப் பார்த்து கேள்வி கேட்க அவளுக்கோ மனம் குமுறியது.
‘அப்போ தப்பு செஞ்சவனை அப்படியே விட சொல்றியா..? எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலேயே கை வெச்சிருப்பான்…? அவனோட முகத்திரைய கிழிக்கத்தானே வேணும்… அரவிந்தன் இத நான் ஷர்வா மேல இருக்க கோபத்துல பண்ணி இருப்பேன்னுதான் நினைச்சிருப்பான்… அவனுக்கு மட்டும் ஷர்வா என்கிட்ட தப்பா நடந்துகிட்ட விஷயம் தெரிய வந்ததுன்னா ஷர்வாவோட கதி அதோகதிதான்…’ என தன்னுடைய மனசாட்சிக்கு பதில் கூறியவள் ஒரு கணம் தன்னுடைய விழிகளை மூடித் திறந்து தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

தன் மனதை சமநிலைப்படுத்தியவாறு மீண்டும் தன் முகத்தில் சிறு புன்னகையை வலுக்கட்டாயமாக தோற்றுவித்தாள் மோஹஸ்திரா.

போலிச் சிரிப்புதான் என்றாலும் அந்த போலிச் சிரிப்போ அவளுடைய வதனத்திற்கு மிகுந்த அழகைக் கொடுத்தது.

அதன் பின்னர் நொடியும் தாமதிக்காது அவள் மீட்டிங் நடக்கவிருக்கும் இடத்தை நோக்கி தன்னுடைய காரில் பயணிக்கத் தொடங்கினாள்.

கிட்டத்தட்ட எட்டு நாடுகள் இணையப் போகும் சந்திப்பு இது.

இது சரியாக நடந்து முடிந்தால் அவள் காணும் மிகப்பெரிய வெற்றியாக இந்தச் சந்திப்பு மாறிப் போகும்.

சற்று நேரத்தில் உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே அந்த மிகப்பெரிய கான்ஃபிரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தவள் அங்கே கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பார்த்து தலையை அசைத்தவாறு குருவை நெருங்கினாள்.

அவளின் விழி அசைவில் வெளிப்படும் வினாவை நன்றாக புரிந்து கொண்ட குருவோ,

“மேடம் எல்லாமே கரெக்டா இருக்கு.. நம்ம பிரசன்டேஷன் கூட ரெடி..” என்றான்.

“அந்த பிக் ஸ்க்ரீனோட கனெக்ட் பண்ணி ஒரு தடவை செக் பண்ணி பாத்தியா…? எனக்கு கிளாரிட்டியா இருக்கணும்..”

“கிட்டத்தட்ட மூணு நாலு தடவை செக் பண்ணிட்டேன் மேடம்… எல்லாமே பக்காவா இருக்கு..”

“பைன்… இங்க இருக்க ஸ்டாஃப்சை விட அந்த எட்டு சிஇஒ தான் நமக்கு முக்கியம்.. இந்த மீட்டிங் நல்லா நடந்து முடிஞ்சதுக்கு அப்புறமா பாட்டி ஒன்னு அரேஞ்ச் பண்ணிடு..”

“ஓகே மேடம்..”

“ப்ரஸ் வந்துட்டாங்களா…?”

“எஸ் மேம்.. எல்லாரும் வந்துட்டாங்க..”

“தட்ஸ் குட்…. ஓகே குரு, நீ இங்கேயே இரு… ஏதாவது தேவைன்னா உனக்கு நான் இன்பார்ம் பண்ணுவேன்..”
“ஓகே மேடம்..” என்றவன் அவளுக்கு அருகிலேயே நின்று கொள்ள அந்த மிகப்பெரிய ஹாலோ தொழில் சாம்ராஜ்யத்தால் நிறையத் தொடங்கியது.

எட்டு நாடுகளில் இருந்தும் அவளுடைய தொழில் சம்பந்தமாக வந்திருந்த தொழிலதிபர்களுக்கு முன் இருக்கையிலும் அதற்கு அடுத்த வரிசையில் அவர்களுடய பீஏக்களுக்கும் அதற்கு அடுத்த வரிசையில் ஊழியர்களுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆங்காங்கே கேமராக்களுடன் நின்றிருந்தவர்களை சில தொழில் ரீதியான முக்கிய பேச்சுகளை முடித்ததன் பின்னர் உள்ளே வருமாறு கூறி வெளியே அனுப்பி இருந்தாள் மோஹஸ்திரா.

குறிப்பிட்ட நேரம் வந்து விட்டிருக்க அனைத்தும் தயாரானது.

அங்கே கூடியிருந்த அனைவரின் முன்பும் கம்பீரமாக முன்னே வந்து நின்றவள் அனைவருக்கும் சிறு அறிமுக படலத்தை கொடுத்துவிட்டு தன்னுடைய தொழில் ரீதியான பேச்சை ஆரம்பித்திருந்தாள்.

அவளுடைய வசீகரமான முகமும் தேன் சிந்திய குரலும் பிஸ்னஸில் உள்ள வளைவு நெளிவுகளை அவள் கையாண்டு எடுத்துரைக்கும் விதமும் அங்கே இருந்த அனைவரையும் கயிறு இல்லாமலேயே கட்டிப்போட்டு விட கவனமாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர் அந்த தொழில் அதிபர்கள்.

மிகவும் சிறப்பான உத்திகளை கையாண்ட அவளுடைய பேச்சில் நிச்சயமாக இந்தச் சந்திப்பு வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை அங்கே எழுந்த கணம் வேகமாக அந்த கான்ஃபரன்ஸ் ஹாலின் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஷர்வாதிகரன்.

அவன் நுழைந்த வேகத்தில் தங்கு தடை இல்லாமல் பேசிக் கொண்டிருந்த அவளின் பேச்சு சட்டென நின்று போனது.

கனலை கக்கும் விழிகளோடு அவனை எரிப்பது போலப் பார்த்தவள் அத்துமீறி நுழைந்தவனை கொன்றுவிடும் வெறியோடு நெருங்கினாள்.

நடந்து கொண்டிருந்த மீட்டிங்கை குழப்பும் வண்ணம் உள்ளே வேகமாக நுழைந்தவனின் கால்களோ அந்த கான்ஃபரன்ஸ் ஹாலின் மிகப் பெரிய கதவை வேகமாக உதைக்க பட்டென்ற சத்தத்தோடு அந்தக் கதவு மூடி அதிர்ந்து அடங்கியது.

அவனுடைய அநாகரிகமான செயலில் அங்கிருந்த அனைவரும் எழுந்து அதிர்ச்சியோடு நின்றுவிட அளவு கடந்த சீற்றத்தோடு அவனை நெருங்கியவள்,

“இடியட் யாரைக் கேட்டு உள்ள வந்த…? முதல்ல இங்கிருந்து வெளியே போ…” எனச் சீறினாள்.

அதே வேகத்தோடு தொழில் ரீதியாக வந்திருந்தவர்களை நோக்கி “சாரி காய்ஸ்.. டூ மினிட்ஸ்..” என இடையூறுக்கு அவசர மன்னிப்பை வேண்டி விட்டு மீண்டும் அவனை எரிப்பது போல பார்த்தாள் அவள்.

அவனோ அவளுக்கு பதில் கூறாது தன்னுடைய சொந்த விரலால் காதைக் குடைய அவளுக்கோ கோபத்தில் முகம் சிவந்தது.

“நான்சென்ஸ் என்ன பத்தி முழுசா தெரியாம என்கிட்ட மோதாதே ஷர்வா… இப்போ நீ வெளியே போகலைன்னா நடக்கிறதே வேற…”

“அப்படிங்களா மேடம்…? எனக்கு பயமா இருக்கே…” என எள்ளலாகக் கூறியவனின் அதரங்களில் இகழ்ச்சிப் புன்னகை ததும்ப அங்கே இருந்த ஊழியர்கள் தங்களுக்குள் சிரித்தவாறு கிசுகிசுக்கத் தொடங்கினர்.

“ஷிட்.. குரு போலீஸை கூப்பிடு… ரைட் நவ்…” என அவள் உச்சகட்ட ஆத்திரத்தில் கத்த,

“நீ யாரைக் கூப்பிட்டாலும் என்ன மீறி இங்கே எவனாலும் உள்ள நுழைய முடியாது… இந்த பில்டிங்கை சுத்தி என்னோட ஆளுங்கள நிப்பாட்டி வச்சிருக்கேன்… எனக்கு துணையா போலீஸ் கூட வந்திருக்கு…” என அவன் திமிராகக் கூற அவளுடைய முகத்திலோ அப்பட்டமான அதிர்ச்சி வெளிப்பட்டது.

இப்போது இவனோடு சண்டையிட்டு தன்னுடைய எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள விரும்பாதவள் சட்டென தணிந்து போனாள்.

“ப்ச்… லுக்… எதுவா இருந்தாலும் நாம தனியா பேசிக்கலாம்.. இப்போ இங்கிருந்து கிளம்பு….” என அவள் கூற,
“ஆஹான்..?” என கைகளைக் கட்டி அவளைப் பார்த்துச் சிரித்தான் ஷர்வாதிகரன்.

“நவ் வாட்..?” என சலிப்புடன் வெளிவந்தது அவளுடைய குரல்.

“நான் கிளம்பனும்னா இந்த மீட்டிங் இப்போ நின்னாகணும்..” என நிதானமாக அவளுடைய தலையில் இடியை இறக்கினான் அவன்.

“வ்வாஆஆஆட்.. வாட்…? ஆர் யு மேட்..? பைத்தியம் மாதிரி உளறாத ஷர்வா… யார் நினைச்சாலும் இங்க நடக்கப் போறது நடந்துதான் தீரும்… இது என்னோட ரெண்டு வருஷக் கனவு… உன்னோட மிரட்டலுக்கு பயந்தெல்லாம் என்னால இதை நிறுத்த முடியாது…” எனச் சீறினாள் அவள்.

“நீயா நிறுத்தலைன்னா நிறுத்தவைப்பேன்… எவ்வளவு தைரியம் இருந்தா என்னைப் பார்த்து காம அரக்கன்னு சொல்லிருப்ப…? காம அரக்கன்னா பண்ணுவான்னு இப்போ உனக்கு நான் பண்ணிக் காமிக்கட்டுமா…? என அவன் வார்த்தைகளைத் தடிக்க விட அவளுக்கோ முகம் இறுகியது.

பின்னால் அமர்ந்திருந்த ஊழியர்களில் சிலரோ இவர்களுடைய சண்டையை தங்களுடைய கேமராவில் பதிவு செய்யத் தொடங்கினர்.

குருவுக்கோ உடல் முழுவதும் அந்த ஏசி அறையிலும் வியர்க்கத் தொடங்கிவிட்டது.

அங்கே வந்திருந்த தொழில் அதிபர்களின் முகத்தில் அதிருப்தி நிலவ தவித்துப் போனான் அவன்.

“லுக் மிஸ்டர் ஷர்வா.. என்னைப் பத்தி உனக்கு முழுசா தெரியல… நான் நினைச்சா உன்னோட அவார்டைத் தட்டிப் பறிச்ச மாதிரி உன்னோட மொத்த பிஸ்னஸையும் என்னோட காலுக்கு அடியில கொண்டு வர முடியும்…. இத்தோட நிறுத்திக்கோ… இல்லன்னா ரொம்ப வருத்தப்படுவ..” என அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப அவள் அவார்டைப் பற்றி பேசியதும் அவனுக்கோ மேலும் சினம் அதிகரித்தது.

இதுவரை அவனை யாரும் எதிர்த்துப் பேசிய வரலாறே இல்லாது போக சிறு முயலைப் போல இருக்கும் சிறு பெண் தன் முன்னே வார்த்தைகளை தெறிக்க விடுவதா என எண்ணி கோபத்தில் கனன்றவன்,

“உன்னால என்னோட மயி***** கூட புடுங்க முடியாதுடி…” என சத்தமாக கத்தி விட்டிருந்தான்.

அவனுடைய அநாகரிகமற்ற வார்த்தைகளில் கொதித்துப் போனவள்,

“டேய் உனக்கு இவ்ளோதான்டா மரியாதை… இதோ பாரு… என்ன சொன்ன…? என்னால உன்னோட மயி***க் கூட புடுங்க முடியாதா…? இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ… நீ தொலைச்சியே உன்னோட பரம்பரை டைமண்ட் கிரீடம்…. அதை நான் எடுத்துக் காட்டுறேன்…. நீங்க தலையில போட்டு கொண்டாடுறத நான் என்னோட காலுக்கு கீழே வெச்சு நசுக்கிக் காட்டலைன்னா நான் மோஹஸ்திரா இல்லடா…” என அவள் வார்த்தைகளை அதிகமாய் விட அவள் கூறிய வார்த்தைகளில் அந்த இடமே பரபரப்பாக மாறியது.

அடுத்த நொடி கட்டுப்படுத்த முடியாத சின்னத்தோடு அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றியவன் அந்த கான்ஃபிரன்ஸ் ஹாலினுள் இருந்த இன்னொரு அறைக்குள் அவளைத் தரதரவென என இழுத்துச் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி விட வெளியே நின்ற அனைவருக்கும் ஒரு கணம் இதயம் எம்பி குதிக்கத்தான் செய்தது.

💜🔥💜

தாமதமான பதிவுக்கு ரொம்ப ரொம்ப சாரி டியர்ஸ்..

கால்ல சின்னதா கட்டி ஒன்னு வந்து படுத்தி எடுத்திருச்சு..

ஓவர் பெயினால ஃபீவர் வேற…

இப்போதான் நார்மல் ஆகியிருக்கேன்..

இனி தொடர்ந்து எபி வரும் டியர்ஸ்..

காக்க வச்சதுக்கு ரொம்ப ரொம்ப சாரி..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!