பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தவன் ஆதிரன் என்ற தலைப்புச் செய்தியோடு தொலைக்காட்சி பெட்டியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியை கண்டு அன்பரசியும் இன்பரசனும் வெகு மகிழ்ச்சி அடைந்தனர்….
அதை அடுத்த மதிப்பெண் ஒரே ஒரு மதிப்பெண்ணால் இரண்டாம் இடத்தை தட்டி செல்கிறாள் அன்பினி என்று பின்குறிப்போடு அந்தச் செய்தி நிறைவு செய்தார்கள்.
இப்போது இந்த செய்திக்கு துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள் பாஸ்கரனும் ஸ்ரீஜாவும்…
நால்வரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு தங்களின் சந்தோஷத்தினை பகிர்ந்து கொண்டார்கள்… சங்கீதா முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்த இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு பாயசம் செய்ய தயாராகிவிட்டாள்…
சங்கீதாவின் பிள்ளையும் ஆன்காலஜியின் முதல் வருட காலேஜ் வகுப்பை தொடர்ந்திருந்தாள்… அவளும் அன்பினி மதிப்பெண்களை பார்த்துவிட்டு நீயும் நல்ல மருத்துவராக வேண்டும் என்று ஆசீர்வதித்தாள்…
என்ன சங்கீதா அக்கா நல்ல மார்க் எடுத்தா டாக்டர் மட்டும் தான் ஆகணுமா என்ன?… என்னோட கனவே வேற அக்கா… பட் என்னோட கனவுல நான் ஒரு நல்ல லைஃபை லோன் பண்ணுவேன்னு நம்புறேன்… ஏன்னா என்னோட ட்ரீம் நம்ம எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து வழி நடத்துற ட்ரீம் …
சங்கீதாவும் அன்பினியும் தங்களது கருத்து வேறுபாடுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்…
ஆதிரனும் தனது பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு ஸ்ரீமாவிடமும் சென்று பாஸ்கரன் அப்பாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்…
ரொம்ப சந்தோசம் பா நீ நல்ல மார்க் எடுத்து இருக்கே… அடுத்து நல்ல காலேஜ் நல்ல லைஃப்பா உனக்கு அமைச்சு கொடுக்குறது தான் எங்களோட கடமை… இது இன்பரசன்… ஒரு தகப்பனாக தனது மகனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை வரிசை கட்டிக் கொண்டு வைத்திருந்தார்.
அன்பரசி இங்க பாரு தங்கம் உன் மொத படி ஸ்ட்ராங்கா எடுத்து வச்சிருக்கே… நெக்ஸ்ட் லெவல்ல நீ முன்னேறிட்டே இருக்கணும் இது அம்மாவோட பிளஸ்ஸிங்… இந்த அம்மா நீ என்ன கனவு வச்சிருந்தாலும் நிறைவேத்த கூடவே நிப்பேன்…. தாயாக அவனிடம் அன்புமொழி பேசி அவனை கரைத்து விட்டாள்…
ஸ்ரீமாவும் நீ கஷ்டப்பட்டு படிச்சி இருக்கலாம் இப்ப தான்பா ஒரு உழைப்பு முன்னேறின ஃபீல்… பட் அன்பனி செகண்ட் மார்க்கெலாம் அன்பிலிவபிள் என்று சொல்லியே அவளை வம்பலத்தால் அவளுடைய தாய்..
மம்மி என்று அவளும் பல்லை கடத்தி விட்டு பாஸ்கரன் சொல்வதை உற்று கவனித்தாள்…
ரொம்ப சந்தோசம் தம்பி… நீ மொதப்படியே ஸ்ட்ராங்கா தான் வச்சிருக்கேன் அன்பரசி அம்மா சொன்ன மாதிரி… ஒரு ஒரு படியிலும் சருக்கிள் படியும் இருக்கும்… அந்த சருக்கள பார்த்த உடனே மனசு உடைஞ்சு போயிடக்கூடாது… ஏதோ ஒண்ணுமே நீ அடையனும்னா எந்த அளவுக்கு பாசிட்டிவ் இருக்கோ அதைவிட ட்ரிபிள் மடங்கு நெகட்டிவிட்டி இருக்கும்… சோ நான் என்ன சொல்ல வரனா எதையும் பேஸ் பண்ற தைரியத்தை நீ கூடவே வச்சுக்கணும் சொல்றேன்…
இந்த அட்வைஸ் அவனுக்கு மட்டும் இல்லம்மா உனக்கும்தான் சரியா…
மூவரும் நல்லது மட்டுமே சொல்லிவிட பாஸ்கர் இவ்வுலகத்தில் உள்ள நல்வினை தீவினைகளை பிரித்து அவர்களுக்கு வழி நடத்தினார்… உண்மைதானே எந்த அளவு நன்மை விளைகிறதோ அதைவிட அவர்கள் ஏகப்பட்ட துயரம் அடைந்து இருப்பார்கள்…
பெற்றவர்களிடம் இந்த விடை பெற்றவர்கள் இதோ பள்ளி தலைமை ஆசிரியரிடம் பணிவாக நின்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்கள்..
ஆதிரன் முதல் மதிப்பெண் எடுத்து விடுவான் என்பதில் அங்கு யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை… ஆனால் அன்பினி இரண்டாம் மதிப்பெண் எடுத்தது தான் அனைவருக்குமே எழுந்த அதிர்ச்சி..
இதில் ஆதிரனின் நண்பன் வேறு என்ன மச்சி அவள உனக்கு பிடிக்கவே பிடிக்காது பேசத் தோணாது என்று சொன்னே… ஸ்கூல்ல இருக்குற கிளாஸ விட வீட்ல நீ சூப்பரா கிளாஸ் எடுத்து இருப்ப போலையே….. அதான் உன்ன விட ஜஸ்ட் ஒரே ஒரு மார்க் கம்மியா எடுத்து செகண்ட் பிளேஸ்ஸ அப்ப பிக் அப் பண்ணிட்டா….
ஆதிரனின் நண்பர்கள் அனைவருமே அன்பினியின் மீது துளி அளவும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அல்ல… அதற்கும் காரணம் ஆதிரன் மட்டும் தான்… பின்பு அவள் செய்யும் அனைத்து நன்மைக்குமே இவன் எடுத்துக் கொள்கின்ற பக்குவத்தை மட்டுமே நண்பர்களோடு பகிர்ந்து கொள்வான்..
உதாரணத்திற்கு அவன் கேண்டீன் சென்று பப்ஸ் வாங்கிக் கொண்டு வரச் சொன்னால் அதை தட்டாது அவள் கேட்டுக் கொள்வாள்… ஆனால் ஹோம் வொர்க் ஸ்டடி பிளான் அல்லது ஒர்க் அவுட் போன்ற ஏதாவது ஒன்று எழுதிக் கொடு என்று ஆதிரன் அவளை கட்டாயப்படுத்தினால் கண்டிப்பாக அவள் செய்ததில்லை…
இதை தனது நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு ஸ்நாக்ஸ் தீனி என்றால் மட்டும் ஆள் போய் வாங்கிட்டு வரவா ஏன்னா அதுக்கு அவளுக்கும் பங்கு வேணும்ல… இதே ஹோம் ஒர்க் அசைன்மென்ட் கொடுத்து பாரேன் ஒரு வேலை செய்ய மாட்டா…. ஹெல்ப் பண்ணுனு சொன்னா கூட நோ தா சொல்லுவா… சதிகாரி…
ஆனால் அன்பினி இதற்கு நேர் மாறாக தான் செய்திருப்பாள்…
அவனுக்கு இடைவேளைகளில் பசி எடுத்திருக்கும் என்று கேண்டினில் சென்று பொறுமையாக தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு வந்து அவனுக்கு கொடுத்திருப்பாள்… அவன் அவற்றுள் ஏதேனும் ஒரு பீஸ் கொடுத்தால் கூட வேண்டாம் என்று சொல்வாள்.. அதற்கும் அவன் முகம் வாடிவிட்டால் சரி வாங்கி சாப்பிடுகிறேன் என்று வாங்கி திண்பாள்..
அதே ஹோம் வொர்க் அசைன்மென்ட் என்று சொன்னால் அவளுக்கே அங்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்… அதையும் தாண்டி அவள் எழுதாமல் போவது பயிற்சி செய்ய செய்ய தான் அனைத்தும் பதியும் என்று வகுப்பு ஆசிரியர் ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிட்டு தான் இதனை கொடுத்து இருப்பார்… அவனே பயிற்சி செய்யட்டும் என்று நல்லெண்ணத்தில் மட்டுமே அவள் செய்திருப்பாள்…
இப்படியாகத்தான் ஆதிரனின் நண்பர்களில் பல பேர் அன்பினியை வெறுத்து ஒதுக்கி உள்ளார்கள்..
டேய் அவளுக்கு நான் சொல்லி எல்லாம் கொடுக்கல… நான் படிக்கிற டைம் என் கூடவே இருந்து என்கிட்ட நிறைய டவுட்ஸ் கேட்டு அவளே படிச்சுகிட்டா… நாட் பேட் நான் சொல்லிக் கொடுத்த எல்லாத்தையும் சரியா பிக்கப் பண்ணி இருக்கான்னு இப்ப புரியுது…
சரிதா சரிதான்… சொல்லிக் கொடுத்ததையும் சொல்லிக் கொடுத்துட்டு இப்ப சமாளிக்கிறான் பாரு… ஆதிரனின் மற்றொரு நண்பன் கலாய்த்தான்…
ஹே நான் தான் சொல்றேன்ல அந்த சில்லி பெல்லோக்கு சொல்லிக் கொடுக்கிற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை….
பெற்றோர்களுக்காக அவளை திட்டுவதை தவிர்த்து விட்டானே தவிர அவள் மீது இருந்த வஞ்சகம் சிறிதளவும் குறையவில்லை..
நாள்பட்ட காயம் போல நாள்பட்ட வெறுப்பாக மாறிக் கொண்டிருந்தது… அவளுக்கு உதவி செய்வது கூட மற்றவர்கள் அறிந்தால் தனக்கு கேடு என்று நினைக்கும் அளவிற்கு அவன் வந்து விட்டான்…
மறுபுறமும் அன்பினியின் தோழிகள் ஆதிரனை பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார்கள்…
ஹே சூப்பர் டி அன்பினி… நாமெல்லாம் ஜஸ்ட் பாஸ் ஆவறதே பெருசு… நீ அதுல ரொம்ப போராடி செகண்ட் மார்க் எடுத்திருக்கேன்னா கண்டிப்பா ஆதிரனும் உனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கான்தான…
அவள் ஆம் என்றும் சொல்லவில்லை இல்லை என்று சொல்லவில்லை… சிரித்து மழுப்பி கொண்டிருந்தாள்..
இதற்கிடையில் தலைமை ஆசிரியரும் வந்து இருவரிடமும் பாராட்டு தெரிவித்து விட்டு வகுப்பாசிரியரை கூட்டிச் சென்று இவ்விருவர்களையும் வைத்து பிரேயர் நடத்திவிட்டு முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்தவர்களை சொல்லி சிலாகித்துக் கொண்டிருந்தார்கள்… இதில் மூன்றாம் மதிப்பெண் எடுத்த ஒருத்தி இவ்விருவர்களையும் கண்டு பொறுமி கொண்டிருந்தாள்…
எப்பொழுதும் இரண்டாம் மதிப்பெண் அல்லது முதல் மதிப்பெண் மட்டும் எடுத்துக் கொண்டிருந்தவர் தற்போது மூன்று மதிப்பெண்ணிற்கு தள்ளப்பட்டதனால் அவளால் அந்த மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை… நான் ரிவேலியூஷன் போடுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றாள்…
முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்தவர்களை பற்றி பெருமையாக பேசிய தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மூன்றாம் மதிப்பெண் எடுத்தவர்களை ஏதோ ஒரு ஓரத்திற்கு மட்டும் நிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்…
இதுநாள் வரை தன்னை பெருமையாக பேசியவர்கள் இப்போது என்னை கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டு அவளால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை….
வீட்டிலிருந்து கிளம்பும்போது கண்டிப்பா நான் தான் செகண்ட் மார்க் எடுப்பேன் இந்த அன்பினி ஏதோ பண்ணி இருக்கா என்று குழம்பிக் கொண்டே கிளம்பினாள்… அவள் வேறு யாருமல்ல தீபாவின் புதல்வியான ரம்யா…
தீபாவின் நிழல் பட்டதற்கே ஆதிரனின் குணம் எவ்வளவு மாறி உள்ளது எனில் தீபாவின் ஒட்டுமொத்த வளர்ப்புமாக வளர்ந்து நிற்கும் ரம்யாவின் குணம் இப்படி இருப்பதில் தவறு ஏதும் உள்ளதா என்ன!… ஆச்சரியமில்லை…
பள்ளியிலேயே செய்தியாளர்கள் யூடியூப்பர் என அனைவரும் வந்து ஆதிரன் மற்றும் அன்பினி என்று மற்றவர்களும் வந்து வீடியோ எடுத்து கவர் செய்தார்கள்…
சந்தோசத்தை மகிழ்விக்கிறார்கள் பள்ளியே குதூகலம் போன்ற கண்டன்டுகளோடு ஆரம்பித்த அந்தச் செய்திகளை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சி பெட்டியில் பார்க்கும்போது தீபாவிற்கு மண்டை உடைந்து விடும் போலிருந்தது…
ஆதியோட மார்க் கூட ஓகே எடுத்துக்கலாம்…. பட் இந்தப் பிள்ள எப்படி இவ்ளோ மார்க் வாங்குச்சு… ஏதாவது தில்லு முல்லு வேலை பண்ணிருக்கமோ… கண்டிப்பா இதெல்லாம் இவ்வளவு மார்க் பண்ணி இருக்க வாய்ப்பே இல்லை காசு கொடுத்து கரெக்ட் பண்ணி இருப்பாங்க…. இவள் ஒரு பக்கம் புரளியை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தாள்…
முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்தவர்கள் போல தான் மூன்றாம் மதிப்பெண் எடுத்தவளையும் இன்டர்வியூ எடுத்தார்கள்…
அதில் ரம்யா தான் முகம் கோணலாக பதில் அளித்துவிட்டு அன்பினி இந்த மதிப்பெண் எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் வஞ்சகத்தை வெளிப்படுத்தினாள்…
ரம்யாவின் வஞ்சக குணமும் தீபாவின் வஞ்சக குணமும் அன்பினியின் மதிப்பெண்களை கால்குலேஷன் செய்து கொண்டிருக்க அதற்கு சொந்தக்காரியான அவளோ இந்த தருணத்தை கேக் வெட்டி சிலாகித்துக் கொண்டிருந்தாள்…
மம்மி டேக் பீஸ்… டேடி இது உனக்கு… வெட்டிய கேக்குகளை இருவருக்கும் ஊட்டி விட்ட பின்பு அன்பரசி மற்றும் இன்பரசனுக்கும் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டாள்.. சங்கீதாவிடமும் கொடுத்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்…
அந்த சமயம் பார்த்து தான் தீபா அந்த வீட்டின் சந்தோச நிலையை குலைத்தெரிக்க வீடு தேடி வந்தாள்…
ஓஹோ சித்தப்பா வீட்டு பெண்ணோட பொண்ணு என்ன மார்க் வாங்கி இருக்கானு கூட யோசிக்கல யாரோ ஒருத்தியோட மார்க் வச்சு செலிப்ரேஷன் பண்றீங்க போலையே…
வீட்டில் நுழை வாயிலில் அடையும் போதே இந்த அடைமொழியோடு உள் நுழைந்தால் அவள்.. அவளோடு ஒட்டி இருந்த ரம்யாவும் ஆதி நீ இப்படிலாம் பண்ணுவேன்னு நான் யோசிக்க கூட இல்லடா என்று சொல்லிவிட்டு அவள் தாயின் கையை இறுக்கப்பட்டு கொண்டாள்…
எத்தனை டைம் எனக்கு சொல்லிக் கொடுக்க சொல்லி இருப்பேன்… எனக்கு மட்டும் சொல்லித் தராமல் இந்த அன்பனிக்கு மட்டும் சொல்லிக் கொடுத்திருக்கிற… எனக்கு உன் மேல செம வெறுப்பு என்று முகத்தை சுளித்து கொண்டவள் தாயோடு சேர்ந்து நின்றாள்..
ஆதிரனுக்கும் அன்பினிக்கும் இடையே நடக்கும் பணி போராட்டம் யாருக்கு தெரியும்… அன்பினி விடிய விடிய முழித்திருந்து கஷ்டப்பட்டு படித்ததற்கு எல்லாம் அவள் பலனை அனுபவிக்காமல் ஆதிரன் சொல்லிக் கொடுத்துத்தான் அவள் மதிப்பெண் வாங்கி விட்டால் என்று அனைவரும் சொல்வதை சகித்துக் கொண்டவளுக்கு ரம்யா அவனிடம் சண்டை வளர்ப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை…
ஆமா ஆதி தான் எனக்கு சொல்லிக் கொடுத்தான்… இப்ப எதுக்கு உனக்கு என்ன…
அன்பினி ஆதிரனை காப்பாற்றுவதற்காக கேள்வி எழுப்பினாள்..
ஏய் யாரோ வீட்டு பொண்ணு எல்லாம் எங்க வீட்ல வந்து சத்தம் பிடிக்கக்கூடாது… தீபாவின் ஆக்ரோஷமான குரல் அங்கு எழும்பியது..
அவ ஒன்னும் யாரோ வீட்டு பொண்ணு இல்ல என்னோட பொண்ணு… அன்பரசியும் பதிலுக்கு பதில் பேசினாள்…
எப்படி அன்புக்கா இந்த எவளோ வீட்டு பொண்ணு உன் பொண்ணா மாறும்.. தீபாவின் மூளை முழுவதும் மூளை முழுவதும் அன்பினியை வேற்று ஆளாக மட்டுமே கருதியது….
இத்தனைக்கும் அவ யாரோட பொண்ணுனும் தெரியும்… உன்னோட பொண்ணு உன்னோட பொண்ணு சும்மா சொல்லிட்டு இருந்தா போதாது.. நீ சரியான ஏமாளிக்கா… போனால் போகுதுன்னு நீ இடம் கொடுத்த… பட் அவங்க இங்கையே டேரா போட்டுட்டாங்க… அதே மாதிரி ஆதி கிட்டயும் கேட்டு கேட்டு நல்லா படிச்சு அவனுக்கு அடுத்த மார்க்கே வாங்கி இருக்கு இந்த பிள்ளை….
தனது ஆழ் மனதில் வாட்டி எடுத்துக் கொண்டிருந்த கேள்விகளை ஒளிவு மறைவும் இல்லாமல் அனைவர் முன்பாகவும் கேட்டு விட்டாள்…
இன்பரசன் தான் தீபா நீ ஓவரா பேசுற எதுக்கு வந்தியோ அந்த வேலைய மட்டும் பாத்துட்டு போ….
நீங்களும் இவங்களுக்காக சப்போர்ட் பண்றீங்களா….
இங்க பாரு தீபா உன்னோட லிமிட் என்னன்னு தெரிஞ்சு நடந்துக்கோ… இதுக்கு மேலயும் எங்களோட ஃபேமிலியான ஸ்ரீஜாவையோ பாஸ்கரனையும் இல்ல அன்பின் குட்டிமாவையும் ஏதாவது சொன்னேனு வையேன் என்னுடைய இன்னொரு முகத்தை நீ பாப்பே…
இதுவரைக்கும் நல்லா இருக்கியா சாப்டியானு மட்டும் விசாரிச்ச இன்பரசன மட்டும் தான் நீ பார்த்து இருக்க…. அதே இன்பரசன் ஓங்கி அரஞ்சா கன்னத்துல கைதடம் பதியுங்றதையும் நீ ஞாபகம் வைத்துக்கொள்….
இன்பரசன் மிரட்டியதில் தீபா வாயடைத்து நின்று விட்டாள்… போதும் இதற்கு மேல் விட்டால் தனது மூக்கை உடைத்து விடுவார் என்று வந்த உடனே கிளம்பாமல் சிரித்து பேசி அந்த நிலையை மாற்றி அந்த வீட்டில் அன்று தங்க முயற்சிதவள் ஆதிரனுக்கு நல்வழிப் புகட்டுகிறேன் என்று வஞ்சகம் கற்றுத்தர தயாராகிக் கொண்டிருந்தாள்…
அன்பரசி அதற்கெல்லாம் இடம் கொடுக்க விரும்பாமல் ஆதி கோ டூ ரூம் என்று கட்டளை இட்டு விட அவன் ஏதும் பேசாமல் தனது அறைக்குச் சென்று படுத்து உறங்கி விட்டான்…
பின்னர் விடிந்தும் விடியாமல் தீபா தனது வீட்டிற்கு சென்று விட தீபா அம்மாவிடம் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் அன்பரசியிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஆதிரன் தீபாவின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்…
செந்தனலா?…மழையா?…
கௌசல்யா வேல்முருகன் 💝…