11. செந்தமிழின் செங்கனியே!

4.8
(50)

செந்தமிழ் 11

அவளின் நேர்முக தேர்வை முடித்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்தாள் செங்கனி!

அவளின் முகத்தில் இருக்கும் புன்னகையே பொன்னம்மாளுக்கு கூறியது அவள் தேர்வு பெற்றுவிட்டாள் என்று!

“என்ன மா வேலை கிடைச்சிருச்சா?”, என்று அவரும் புன்னகையுடன் கேட்க, ஆமாம் என்று தலைசாய்த்தாள்.

“பசங்களும் அவரும் சாப்டங்களா அத்த?”, என்று அவள் கேட்டுக்கொண்டே சோபாவில் அமர, “அச்யுத் சாப்டு தூங்குறான். கயலும் படிச்சுக்கிட்டு இருக்கா…  உன் புருஷன் தான் ரூம விட்டு வெளிய வரல!”, என்று அவர் சொல்ல, “நீங்க அவர சாப்பிட கூப்பிட்டீங்களா?”, என்று மறுகேள்வி கேட்டாள்.

“நான் எதுக்கு அவன கூப்பிடனும்.. எனக்கு வேற வினையே வேணாம்… நல்லா ஓடி ஆடி திரிஞ்சிட்டு இருந்த பிள்ளைய இப்படி படுக்க வச்சிட்டான்… அவன சாப்பிட சொல்றது தான் ஒரு கேடு எனக்கு”, என்று மூச்சுவிடாமல் அவனை திட்டவும், அவளுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது.

முதலில் பிள்ளைகளிடம் தான் சென்றாள். அப்போது தான் நித்திரையில் இருந்து விழித்து இருந்தான் அச்யுத்.

அவளை கண்டதும், “அம்மா”, என்று அவன் அழைக்க, அப்போது தான் நிமிர்ந்து அவள் வந்திருப்பதை பார்த்தாள்.

“அம்மா, உங்களுக்கு வேலை கிடைச்சிருச்சு தானே?”, என்று ஆர்வமாக கயல் கேட்க, அவளும் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

கயல் குதிக்கவே ஆரம்பித்துவிட்டாள்.

“எனக்கு தெரியும் நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிருவிங்கனு”, என்று சொல்லி அவளின் அருகே சென்று கட்டி கொண்டாள்.

அச்யுத்துக்கு இன்னும் அசதியாக இருந்ததால், அவன் படுக்கையிலேயே இருந்தான்.

கயலை கூட்டிக்கொண்டு, அவனிடம் வந்தவள், “இப்போ உடம்பு எப்படி இருக்கு?”, என்று கேட்க, “கொஞ்சம் அசதியா இருக்கு அம்மா”, என்று அவளின் தோள்களில் அவனும் சாய்ந்து கொண்டான்.

“அப்பா கிட்ட யாரும் பேசலயா?”, என்றவளை பார்த்து, “எதுக்கு அடி வாங்கவா?”, என்று கயல் தான் கேட்டாள்.

கனியோ அவளை பார்த்து முறைக்க, “சும்மா முறைக்காதீங்க… அக்கா கேட்டதுல என்ன தப்பு இருக்கு… என்ன அடி தெரியுமா? வாங்குன எனக்கு தான் தெரியும்!”, என்று அவனும் சினுங்க, கனியோ இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

“அப்பா உங்கள அடிக்க கூடாதா என்ன?”, என்று அவள் அவர்களை பார்க்க, “தப்பு செஞ்சா அடிக்கலாம்”, என்று கயல் உரைக்க, “சரி நீங்க நல்லா இருக்கனும்… உங்கள நல்ல வழிக்கு கொண்டு வரணும்னும் அவரு அடிக்கலாம் இல்லையா?”, என்றவளிடம், “அவருக்கு அவரு ஸ்டேட்டஸ் தான் முக்கியம்”, என்று முடித்து இருந்தான் அச்யுத்!

“அச்யுத், நீ ஏன் தமிழ்ல மட்டும் நல்ல மார்க் வாங்குற?”, என்ற தாயிடம், “அது எனக்கு பிடிச்சிருக்கு”, என்று பதில் அளிக்க, “அப்போ எல்லா பாடங்களையும் பிடிச்சி படி… கண்டிப்பா அதுலயும் நல்ல மார்க் வாங்கலாம்.. உன்ன நான் நூறு வாங்க சொல்லல! கடைசி எக்ஸாம்ல அறுவது வாங்குன இந்த எக்ஸாம்ல அறுபத்தி அஞ்சு வாங்கலாமே! நீ ஒவ்வொரு நாளும் முன்னேறணும்! அது தானே வாழ்க்கை”, என்றாள்.

“அம்மா “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து””, என்று கயல் கூறியவுடன், அவளின் காதை பிடித்து திருகினாள் கனி!

“எனக்கே பாடம் எடுக்குறியா?”, என்ற தாயிடம், “உங்களுக்கு போய் பாடம் எடுக்க முடியுமா!!! தமிழ் ஆசிரியரே!!”, என்று அவள் நக்கல் செய்ய, “உனக்கு கொழுப்பு குடிருச்சு டி”, என்றவளை பார்த்து, “இப்போ நாங்க என்ன செய்யணும்? நேரடியா சொல்லுங்க”, என்று சொல்லி விட்டாள்.

“இங்க பாருங்க… அப்பாக்கு உங்க இரண்டு பேரு மேல எவளோ பாசம் இருக்கு தெரியுமா? நீங்க நல்லா இருக்கணும்னு தான் அவரு இவ்வளவும் செய்றாரு.. அவரு அடிச்சது நான் சரின்னு சொல்லவே மாட்டேன்… ஆனா அவர் சொன்ன விஷயம் கரெக்ட் தான்… நீங்க முன்னேறணும்னா தினமும் ஏதாச்சு ஒன்ன கத்துக்கோங்க… உங்கள நீங்களே மேம்படுத்திக்கறது தானே வாழ்க்கை! நான் அதே நிலைல இருப்பேன்னு சொல்லறது முட்டாள் தனம் தான்! அப்பறோம் என் அன்பு மகளே, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து பணத்துக்கு தான் அறிவு கிடையாது! கற்றது கை மண் அளவு! கல்லாதது உலகளவு! அதையும் மறக்காதே!”, என்றவுடன் இருவரும் தலை ஆட்டினர்.

“இப்போ போய் அப்பாவை சாப்பிட கூப்பிடுங்க”, என்று அவள் சொல்லவும் தான், “அப்பா சாப்பிடலையா?”, என்று இருவரும் ஒருசேர அதிர்ச்சியாய் கேட்டனர்.

அவர்கள் சிறுபிள்ளைகள் தானே! உடனே மன்னித்து விட்டார்கள்! அப்பா சாப்பிடவில்லை என்று சொன்னதும் கோவம் எல்லாம் பறந்தே விட்டது!

குழந்தையும் தெய்வமும் என்று சொல்வது இதனால் தானோ! அவர்களும் எல்லாவற்றையும் மறந்து இயல்பு நிலைமைக்கு திரும்பி விடுகிறார்கள் தானே!

“ஆமா இன்னும் சாப்பிடலையாம்! போய் சாப்பிட சொல்லுங்க”, என்று அவள் சொல்லவும், அச்யுத் கூட படுக்கையில் இருந்து எழுந்து விட்டான். இருவரும் அடுத்த நொடி நின்றது என்னவோ கனி மற்றும் இனியனின் அறையில் தான்!

“அப்பா”, என்று அவர்கள் அழைக்க, அங்கே படுக்கையில் தலைசாய்ந்து அமர்ந்திருந்த இனியனும் எழுந்து விட்டான்.

“சாப்பிட வாங்க அப்பா…”, என்று கயல் கூற, “ஆமா சாப்பிட வாங்க”, என்று அச்யுத்தும் கூற, உடைந்து விட்டான்.

அவனின் கண்களில் கண்ணீர்.

அச்யுத் தான் முன்னே சென்றான், அவனின் முன் அமர்ந்தான் இனியன்.

அவனின் பிஞ்சு கரங்களால் அவனின் தந்தையின் கண்ணீரை துடைத்து விட்டான்.

ஒரு வினாடி தாமதிக்காமல் அவனை இறுக அணைத்து இருந்தான் இனியன். எந்த கரங்களால் அவனை அடித்தானோ அதே கைகளால் தான் அனைத்தும் இருந்தான். அடிக்கும் கை தானே அணைக்கும்!

“சாரி டா கண்ணா”, என்று அவன் சொல்ல, “நானும் சாரி பா அடுத்த தடவை கண்டிப்பா இந்த தடவையா விட நல்ல மார்க் எடுப்பேன்”, என்று அவன் சொல்லவும், இனியனுக்கு புரிந்தது கனி தான் பேசியிருப்பாள் போல!

அப்போது தான் அச்யுத்தின் கன்னங்களை கவனித்தான். அவனின் சிவந்த கன்னங்கள் இன்னுமே வீங்கி தான் இருந்தது அவனின் கைகளின் அச்சும் இருந்தது.

அவனின் மனமும் பிசைய துவங்கியது!

“வலிக்குதா?”, என்று கேட்டுக்கொண்டே அவனின் கன்னத்தை வருட, அச்யுத்தின் முக சுருங்களை வைத்தே அவனுக்கு வலிக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.

“சாரி”, என்று மறுபடியும் அவன் கூற, “அதையே சொல்லிட்டு இருக்காதிங்க பா… வேணும்னா ரெகார்ட் பண்ணி வச்சிக்கோங்க… இப்போ வந்து சாப்பிடுங்க”, என்று கயல் கூற, அவனோ மற்றொரு கையை நீட்ட, அவளும் அவளின் தந்தையின் கரங்களில் தஞ்சம் அடைந்தாள்.

பெண் பிள்ளைகளுக்கு தான் எப்போதும் தந்தை என்றாள் உயிர் ஆயிர்றே!

“நீ கூட ஓவ்வரா பேசிட்ட இல்ல? அப்போ அப்பா மேல பாசமே இல்ல”, என்று சிறு குழந்தை போல அவன் பேச, “எனக்கு அப்பாவை தான் பிடிக்கும்”, என்று அவளும் அவனின் கன்னத்தில் முத்தம் பதிக்க, அச்யுத்தோ அவனும் போட்டிக்கு முத்தம் பதிக்க, இருவரும் மாறி மாறி முத்தம் பதித்தன!

“போதும் போதும் கொஞ்சுனது, உங்க அப்பாவ வந்து சாப்பிட சொல்லுங்க” என்று வாசல் அருகே கையை கட்டி கொண்டு கனி நிற்க, “ஆமா வாங்க அப்பா, சாப்டுட்டு இன்னைக்கு படம் பார்க்கலாம்”, என்று கயல் சொல்ல, “ஆமா படம் பார்க்கலாம்”, என்று அச்யுத்தும் ஆமோதித்தான்.

பின்பு நால்வரும் ஒன்றாக வர, “என்ன உங்க அப்பா கூட ராசியாயிட்டீங்க போல?”, என்று பொன்னம்மாள் கேட்க, “ஆமா எங்க அப்பா நாங்க அடிச்சிக்குவோம்.. சேர்ந்துக்குவோம்.. உங்களுக்கு ஏன் எரியுது அப்பத்தா?”, என்று கயல் கேட்க, “பாத்தியா கனி இந்த கூத்த… நேத்துலாம் இதுங்க இவன் கிட்ட முறிக்கிட்டு திரிஞ்சுதுங்க இன்னைக்கு என்னடானா என்னையவே தள்ளி வச்சிருச்சுங்க”, என்று அவரும் அவள் பேச்சுக்கு பதில் கொடுத்தார்.

“உங்க மகன் தானே… சாப்பிட்டாரா இல்லையானு கூட பார்க்க மாட்டிங்களா?”, என்று அச்யுத்தும் அப்பாவிற்காக பேச, “ஏன் டா உங்க அப்பா என்ன சின்ன பிள்ளையா? இன்னும் நான் எதுக்கு பார்க்கணும்?”, என்று அவரும் பேச, அப்போதே இனியனிற்கு சாப்பாடு போட்டுகொண்டு வந்தாள் செங்கனி.

இனியனும் அதை வாங்கி சாப்பிட ஆரம்பிக்க, பொன்னம்மாளும் அவரின் பேர பிள்ளைகளுடன் கதை அடிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போது தனித்து இருந்தது என்னவோ இனியனும் கனியும் தான்!

“ரொம்ப தேங்க்ஸ் கனி”, என்று சாப்பிட்டு கொண்டே அவன் சொல்ல, அவனை பார்த்து, “எதுக்கு?”, என்ற கேட்டவளுக்கு, “பசங்கள என் கூட பேச சொன்னதுக்கு”, என்று அவன் சொல்ல, “நான் பேச சொல்லல”, என்றவுடன், அவளை தான் பார்த்தான்.

“உண்மையாவே நான் பேச சொல்லல, நீங்க சாப்பிடலைனு சொல்லி சாப்பிட தான் கூப்பிட சொன்னேன்… ஆனா அவங்களே தான் பேசுனாங்க… குழந்தைங்க எல்லாத்தையும் சீக்கிரம் மறந்திருவாங்க”, என்றவுடன், “ஆனா நம்ப தான் எல்லாத்தயும் நினைவு வச்சிக்கிட்டு இருப்போம்”, என்று முடித்து இருந்தான்.

“நினைவுகளும் நல்லது தான்”, என்று அவள் சொல்ல, “உனக்கு வேலை கிடைச்சிருச்சா?”, என்றவனுக்கு தலையை மட்டும் ஆட்டி பதில் அளித்தாள்.

“அப்போ இதோட என் சம்பாதியத்துல சாப்பிட கூடாதுனு முடிவு பண்ணிட்ட”, என்று விரக்தியாக சிரிக்க, “நானும் சம்பாதிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்… வீட்ல ஒன்னும் பெருசா பண்றது இல்லையே… இது கொஞ்சம் எனக்கும் நல்லா இருக்கும்னு தோணுது”, என்று அவள் சொல்ல, “உனக்கு தோன்றத செய்”, என்றதுடன் சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

“உங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு தெரியும்… அதுவும் உங்க பொண்டாட்டி வெறும் டீச்சர்னு சொல்ல, அதுவும் தமிழ் டீச்சர்னு சொல்ல”, என்றவளை பார்த்து, “என்ன வில்லன் மாறியே போர்ட்ரெ பண்ற”, என்று சொல்ல, அவளும் சிரித்து விட்டாள்.

“என்ன பண்ண எனக்கு இந்த வில்லன் கூட தான் வாழ்க்கைனு முடிவாகிருச்சு!!! நானும் வில்லனையே காதலிக்க பழகிட்டேன் போல… அதான் இப்போல்லாம் நம்பியார், ரகுவரன், பிரகாஷ் ராஜை எல்லாம் ரசிக்கிறேன்”, என்று சொல்லவும், அவனின் இதழ்களிலும் புன்னகை.

“ரொம்ப மட்டமா நடந்துக்கிட்டேன்ல?”, என்ற கேட்டவனின் குரலில் உள்ள மாற்றத்தை அவளும் கவனித்தாள்.

“அப்படி எல்லாம் நினைக்காதீங்க… நீங்க வில்லன் எல்லாம் இல்ல ஆன்டி ஹீரோ”, என்று அவள் சொல்ல, “ஆமா ஆமா இந்த கனி ஆன்ட்டியோட ஹீரோ”, என்று அவனும் கண்களை சிமிட்டினான்.

“இதான் சாக்குன்னு என்ன ஆன்ட்டினு சொல்லிட்டீங்களா?”, என்று பொய்யாக முறைக்க, “நானும் அங்கிள் தான் டி”, என்று சொல்லவும் இருவரும் சிரித்தனர்.

இனியன் இனிக்க துவங்க இனி கனியும் கனிவாளோ?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 50

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “11. செந்தமிழின் செங்கனியே!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!