நெருக்கம் – 11
அவன் இழுத்த இழுப்பில் அவனுடைய உடலோடு மோதி நின்றவளின் முகத்தை குனிந்து பார்த்தவன்
“ஏன் நான் உன்னோட கைய புடிக்க கூடாதா..?” எனக் கேட்டான்.
தன்னுடைய முன்னுடல் மொத்தமும் அவனுடைய பரந்த மார்பில் அழுத்தமாக பதிந்திருப்பதை உணர்ந்தவளுக்கு தேகம் நடுங்கத் தொடங்கியது.
“உன்னத்தான் கேட்கிறேன்… இப்போ உனக்கு காது கேட்கலையா..?” என அவன் கேட்க அவளுக்கு வாயைத் தாண்டி வார்த்தைகள் வெளிவராமல் சதி செய்தன.
இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த அழுகை கண்களில் இருந்து கண்ணீராக வெளியே வந்து விட,
அவனுக்கோ உள்ளுக்குள் எரிச்சல் அதிகமாகியது.
இவள் இப்படி அழுது வைத்தால் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் என் வாழ்க்கையை பற்றிய கேள்வி எழும் அல்லவா..?
“ப்ச்… இப்போ எதுக்கு அழுகுற..?” அழுத்தமாகக் கேட்டான் அவன்.
“என்னை நீங்க திட்டினீங்க.. எ.. எனக்கு மூளை இல்லைன்னு சொ.. சொன்னீங்க..” என அப்போது அவன் மூளை இல்லையா எனத் திட்டியதை இப்போது அவள் அழுது விசும்பியவாறு சொல்லிக் காண்பிக்க அவனுடைய கரமோ அவளுடைய இடையை இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டது.
“ஓகே உனக்கு மூளை இருக்கு.. போதுமா…? இப்போ அழுகுறத ஸ்டாப் பண்ணு..” என்றான் அவன்.
‘நான் என்ன இவனுக்கு கம்ப்யூட்டரா ஸ்டாப் பண்ணுன்னு சொன்னதும் சுவிட்ச் போட்ட மாதிரி அழுகையை நிறுத்துறதுக்கு..? அட போடா என் கண்ட்ரோல் இல்லாம கண்ணீர் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது..” என மனதிற்குள் புலம்பியபடி நின்றவளுக்கு அப்போதுதான் அவனுடைய கரம் தன்னுடைய இடுப்பில் பதிந்திருப்பதே புரிந்தது.
பதறி அவனுடைய கரத்தை மீண்டும் விலக்க முயன்றவளை இன்னும் இறுக்கமாகத் தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,
“உன்னோட கைய புடிக்கிறதுக்கும் இப்படி கட்டிப் பிடிக்கிறதுக்கும் உன்னை கிஸ் பண்றதுக்கும் உன்னை மொத்தமா எடுத்துக்கறதுக்கும் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு…” என்றவன் அடுத்த நொடியே அவளுடைய காது மடலில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டு நிமிர இவளோ உடல் வெடவெடத்துப் போனாள்.
முத்தம் என்றால் இப்படித்தான் இருக்குமா..?
அவளுக்கோ வயிற்றுக்குள் எதுவோ உருண்டு திரிவது போல இருந்தது.
என்னை என்ன செய்துவிட்டாய் என்பதைப் போல அவள் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க,
அவனுடைய கரமோ அவளுடைய கன்னத்தை வருடி அவளுடைய ரோஜா போன்ற உதடுகளையும் அழுத்தமாக வருடிக் கொடுக்க இவளுக்கோ உறையும் பனிக்கட்டிக்குள் தன்னுடைய உடலை பதுக்கி வைத்தாற் போல இருந்தது.
அவளுடைய உணர்வுகளை துல்லியமாக உணர்ந்து கொண்டவன் உதடுகளை வருடிய தன்னுடைய விரல்களை சற்றே கீழே இறக்கி அவளுடைய வெண் சங்குக் கழுத்தை வருடிக் கொடுக்க நடுக்கத்தோடு அவனுடைய கரத்தைப் பிடித்துத் தடுத்தாள் அவள்.
அவளுக்கு கன்னங்கள் சிவந்து போயின.
நொடிக்கு நொடி இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.
அக்கணம் அவளுக்கோ அழுகை நின்று படபடப்பு கூடிப்போனது.
அழுகையை மறந்து அவனைப் பார்க்க முடியாது வெட்கத்தோடு மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள் அவள்.
அவனோ டிஷ்யூ ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டியவன்,
“நவ் ஃபைன்… கண்ணை தொடைச்சிட்டு வெளியே வா…” எனக் கூறிவிட்டு சென்றுவிட அவனைப் புரிந்து கொள்ள முடியாது திணறிப் போய் நின்றாள் அவள்.
அவன் அந்த அறையை விட்டு வெளியே சென்றதும் பெருமூச்சோடு தன் முன்னே இருந்த ஆளுயுரக் கண்ணாடியின் முன்பு வந்து நின்று தன்னைப் பார்த்தவள் புடவை கசங்கி இருப்பதைக் கண்டு இன்னும் வெட்கிப் போனாள்.
‘அச்சச்சோ வெளியே இப்படியே போனா யாராவது தப்பா நினைப்பாங்களோ..?’ எனப் பதறியவள் தன்னுடைய கரங்களால் முடிந்தவரை புடவையை நீவி விட்டு சரி செய்தாள்.
தலையில் அவள் சூடி இருந்த புடவைக்கு ஏற்ற வர்ணப் பூக்களும் சற்றே அவனுடைய கரங்கள் பட்டு கசங்கிப் போய் இருக்க இவளுக்கு இன்னும் சங்கடம் கூடியது.
என்ன இவன் இப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் என்னை என்னவோ எல்லாம் செய்து விட்டானே..!!
மீண்டும் மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளியே விட்டவள் சிவந்து போயிருந்த கன்னங்களை சரி செய்ய முடியாது அப்படியே வெளியே வந்து அவன் அருகே நின்று கொண்டாள்.
அவனோ நிதானமாக அவளுடைய முகத்தை திரும்பிப் பார்த்தான்.
அந்த முகத்தில் அழுகை இல்லாமல் வெட்கமும் சிறு பதற்றமும் மட்டுமே தெரிவதைக் கண்டவனுக்கு திருப்தியாக இருந்தது.
இப்படியே அவர்களுடைய திருமண விழா முடிவுக்கு வர அந்த மிகப்பெரிய ஆடம்பரம் நிறைந்த மண்டபத்திலிருந்து அவளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் ஆகினான் குருஷேத்திரன்.
பத்மாவோ தன் மகளோடு குருஷேத்திரனின் வீடு வரை சென்று வழி அனுப்பி விட்டு வருவதா இல்லை இங்கேயே நின்று வழி அனுப்புவதா என புலம்பியவாறு நிற்க அந்த குழப்பத்திற்கு அவசியமே இல்லை என்பது போல அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டான் குருஷேத்திரன்.
அதற்கு மேல் அவனோடு செல்ல முடியாது பத்மாவும் ரகுநாத்தும் மண்டபத்திலிருந்து அவர்களை அனுப்பி வைக்க அன்னையைப் பிரிந்து செல்லும் வேதனையில் அழத் தொடங்கியவளுக்கு சிறிது நேரம் கூட கொடுக்காது கைபிடித்து இழுக்காத குறையாக காருக்குள் இருத்திக் கொண்டவன் அடுத்த நொடியே அவளை அழைத்துக்கொண்டு தன்னுடைய மாளிகை போன்ற வீட்டுக்கு செல்லத் தொடங்கினான்.
காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கியவளுக்கு உள்ளம் மருகியது.
இனி அடிக்கடி தன்னுடைய அன்னையை பார்க்க முடியாது அல்லவா..?
அவர் தனக்காக செய்து தரும் சுவை மிக்க உணவுகளை உண்ண முடியாதோ…?
கல்லூரிக்கு இனி பேருந்தில் செல்ல முடியாதா..?
அப்பாவிடம் இனி எப்படிச் செல்லம் கொஞ்சுவது..?
என்னுடைய பிளேயரில் பாடலை கேட்காவிடில் எனக்கு உற்சாகமே வராதே…
இனி அதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் இல்லையா என எண்ணி எண்ணி அழுது கொண்டு இருந்தவளைக் கவனத்திற் கொள்ளாது காரின் இருக்கையில் சாய்ந்து தன்னுடைய விழிகளை மூடிக்கொண்டான் குருஷேத்திரன்.
திருமணம் முடித்து புது உறவுக்குள் புகுவது போல் அல்லாமல் ஏதோ தனிமையை நாடிச் செல்வதைப் போல அவளுடைய மனம் வேதனை கொண்டது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கார் சென்று கொண்டே இருக்க அழுது களைத்துப் போனவள் விழிகளை துடைத்துவிட்டு தன்னுடைய கணவனைப் பார்த்தாள்.
அவனோ அலைபேசியை பார்த்த வண்ணம் இருக்க இவளுக்கோ மனதில் வெறுமை குடி கொண்டது.
நிஜமாகவே என்னைப் பார்த்து விரும்பித்தான் இவன் திருமணம் செய்து கொண்டானா..?
என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசத் தோன்றவில்லையா..?
காதல் கொண்டு திருமணம் முடித்த மனைவியை எப்படி எல்லாம் கணவன்மார்கள் தாங்குவர் என கேள்விப்பட்டு இருந்தவளுக்கு ஏனோ ஏமாற்றம் சூழ்வதைப்போல இருந்தது.
ஏதாவது பேசிப் பார்க்கலாமா என எண்ணியவள் தான் பேசினால் அதற்கு அவன் பதில் கூறாமல் அமைதியாகத்தானே இருக்கப் போகின்றான் என எண்ணி மீண்டும் தனக்குள்ளேயே குமைந்து கொண்டாள்.
வெகு நேரமாக கார் பயணித்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் முடியாமல் இருக்கையில் நன்றாக சாய்ந்து உறங்கத் தொடங்கி விட்டாள் அபர்ணா.
அவள் உறங்கி 20 நிமிடங்களின் பின்னர் கார் வீட்டை வந்து அடைய காரிலிருந்து இறங்கியவன் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அபர்ணாவை சற்று நேரம் இமைக்காது பார்த்தான்.
ட்ரைவரைப் பார்த்தவன்,
“இவ எந்திரிச்சதும் செகண்ட் ஃப்ளோர்ல ஃபர்ஸ்ட் ரூமுக்கு வரச் சொல்லு…” எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட அவனுடைய சாரதியோ குழப்பத்தோடு அவனையும் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய புது முதலாளியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
*******
தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்ட குருஷேத்திரனின் முகமோ முற்றிலுமாக மாறிப் போயிருந்தது.
உடலில் ஒரு விதமான படபடப்பு..!!
எங்கே மீண்டும் தோற்றுப் போய் விடுவோமோ என்ற அச்சம் வெகுவாக அவனுக்குள் எழத் தொடங்கி விட தன்னுடைய கைமுஷ்டிகளை இறுக மடக்கிக் கொண்டான் அவன்.
தன்னுடைய ஆடையை மாற்றி குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவன் பிரிட்ஜில் இருந்து மதுபான போத்தலை வெளியே எடுத்தான்.
எப்போதும் அளவாகவே மது அருந்துபவன் இன்று அளவுக்கு மீறி மதுவை எடுத்துக்கொள்ளத் தொடங்கினான்.
இந்த நொடி அவனுக்கு போதை அவசியம்.
பருகப் பருக தொண்டை எரிந்து விழிகள் சிவந்து அவனுடைய உடல் முறுக்கேறியது.
கோபம், வேதனை, அச்சம், படபடப்பு, இயலாமை என பலவிதமான உணர்வுகள் அவனுக்குள் முட்டி மோத இன்னும் ஒரு போதலை எடுத்து வந்து அருந்தத் தொடங்கினான் அவன்.
அவனுடைய மனதுக்குள் இன்னொரு முறை தோற்றுப் போய் விடக்கூடாது… இன்னொரு முறை எப்போதும் தோற்றுவிடக்கூடாது.. என மந்திரம் போல தனக்குள் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டவன் இரண்டாவது போத்தலை முடித்ததன் பின்னரே அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அபர்ணா.
💜💜💜💜
Good night thangams
Love you all 😍💜🫂
Guruchathran have some pain and mental issues. Aparna is going to face tough time definitely.
Correct dear
Abarna eppidi ivanai samalikka poraa