12) செந்தனலாய் பொழிந்த பனிமழை

4
(1)

தொலைக்காட்சியில் இன்னும் இரு தினங்களில் புயல் மழை பொழிய போகிறது… ஆதலால் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது என்ற செய்தியினை பார்த்துக் கொண்டிருந்தால் தீபா… அவளோடு ரம்யாவும் காஃபியை அருந்திக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்…

 

மீரா அக்கா இன்னைக்கு ஏன் காஃபி டேஸ்ட் நல்லாவே இல்ல …

 

எதிலும் ஒரு சந்தேகம் மட்டும் அவளுக்கு… உணவு முதல் தான் உடுத்தும் உடை வரை அலங்கரித்து வைக்கும் மீராவினை எப்பொழுதும் கடிந்து கொண்டே தான் இருப்பாள்..

 

மீரா வினை ரம்யா திட்டிக் கொண்டிருந்த தருணம் உங்கள் வீட்டின் காலின் பெல் அலார சத்தம் கேட்டது…. யாரது காலையில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறது என்ற ஏக்கத்தோடு வீட்டு வாசலில் பெரிய கதவை திறந்தாள் ரம்யா…

 

பார்த்தவுடன் சந்தோசத்தில் துள்ளியும் குதித்து விட்டாள்… தீபா தான் என்னடி இந்த துள்ளு துள்ளுற என்று வாசலை காணவும் அங்கு ஆதிரன் நின்று கொண்டிருக்க வா தங்கம் என்று ஓடிச்சென்று அவனை அழைத்து வந்தாள்..

 

வரன் தீபாம்மா…நேத்து அம்மா உங்கள ரொம்ப காயப்படுத்திட்டாங்க…எனக்கு அது மனசு கேட்கல…நீங்க கூட எனக்கு எதோ சொல்ல வந்திங்கள்ள என்ன அது என பேசியவதோடு வீட்டில் நுழைந்தவன் குசன் சோஃபாவில் ஆர அமர்ந்து கொண்டான்…

 

எங்க வீட்டில இந்த மாதிரி நிம்மதியா கூட உட்கார முடியாது தீபாம்மா.. பொட்ட பிள்ளை இருக்க வீடு அடக்க உடக்கமா இருடான்னு ஒரே ரூல்ஸ் பேக்டரி அங்க…

 

யாருடா இதுலாம் சொன்னது…

 

வேற யாரு.. சங்கீதா அக்கா தான்…

 

தங்கம் ஆதி நான் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க… யார் யார எங்க வைக்கனும் தெரிஞ்சு நடந்துக்கனும்…இல்லைனா இப்படிதான் வீட்டில் கழுவ வரதுங்க கூட்ட வரதுங்க எல்லாம் நமக்கு நல்லது சொல்லி தரன்னு அதுங்க இராச்சியம் பண்ணுங்க…

 

அப்படியா தீபாம்மா…  இனிமே நான் புரிஞ்சு நடந்துக்குறேன்…ஆமா தீபாம்மா… அன்பினிக்கு கூட அந்த சங்கீதா அக்கா ஓவர் சப்போர்ட் தான்..

 

அவ யாருடா அவளுக்கு சப்போர்ட் பண்றதுக்கு என மனதில் பொறுமி கொண்டாலும் அன்பினை அந்த அளவுக்கு அவ மேல அக்கறையா இருக்குற மாதிரி நடிச்சிருப்பா தங்கம்…

 

இங்க பாரு பாம்பு பார்க்க அழகா இருந்தாலுமே அதோட குணம் என்ன விஷத்தைக் கக்குரது தான்… சோ அன்பினி ஒரு பாம்பு மாதிரி… அவ எத்தனை அன்பு கொடுத்தாலும் அதுல விஷத்தன்மை இருந்தே இருக்கும்…

 

தனது மனக்குமுறல்களை சொல்லிவிடலாம் என்று தீபாவிடம் அவன் சொன்ன அனைத்தையும் அவள் கணக்கச்சிதமாக அன்பினி மீது இப்போது ஆதரனுக்கு பிறந்திருந்த நட்பு என்ற வட்டத்தை சுக்குநூறாக்க தொடங்கியது…

 

யூடியூப் வீடியோக்களில் அன்பினி சொன்னது போன்று அவளது படிப்பிற்காக அவன் சிறிது உதவி செய்துள்ளான் தான்… அதிலும் அவள் ரா பகல் உறங்காது படித்த சமயங்களில் எல்லாம் அவர்களுக்கு தகுந்த நோட்ஸ்களை கொடுத்து நல்லா படி என்று ஃபோக்கஸ் கொடுத்தவனும் அவன் தான்…

 

இப்போது வரை ஆதிரன் என்ற வெறுப்பாளன் தூங்கிக் கொண்டிருந்த பொம்மையை தட்டி தூசி தொடுத்து எழுப்பி விட்டாள் தீபா…

 

அவனது ஆதங்கத்தை வீட்டில் சென்று காட்டும் அளவிற்கு ரம்யாவும் ஒரு நாடகத்தை நடத்தி அனுப்பினாள்..

 

மீரா நாங்க நல்ல காஃபி கொண்டு வர  சொல்லி பத்து நிமிஷம் ஆகுது என்ன பண்ணிட்டு இருக்க….

 

சாரிமா சமையல்ல  கொஞ்சம் வேலை பண்ணிட்டு இருந்தேன்…

 

ஓ அப்ப நீ கொண்ட ஒரு சமயத்துல தான் நான் காஃபி குடிக்கணுமோ… எனக்கு இப்ப காபி குடிக்கிற மூடே போயிடுச்சு எடுத்துட்டு போ…

 

சிலை போல் நின்றிருந்த மீராவின் கையில் இருந்த காஃபி கப்பை வீட்டினுள் ஒரே தள்ளாக தள்ளி விட்டாள்…

 

பதைபதைத்தபடி மீராவும் சமையலறையில் புகுந்து கொண்டாள்.

 

இதைப் பார்த்தாவது கத்துக்கோ ஆதி… ஒரு பொம்பள புள்ளையே எந்த அளவுக்கு சாம்ராஜ்ஜியம் பண்றானா நீ அந்த வீட்ல எந்த அளவுக்கு பண்ணலாம்… நீயே ஒரு வேலைக்காரிக்கு கூட பயந்துட்டு போற… அவ உங்ககிட்ட சம்பளம் வாங்குற ஒரு வேலைக்காரி… நீ சோபால உள்ள நல்லா ஹாயா உட்கார்ந்து இருந்தா என்ன?… சின்ன சின்ன சாக்ஸ் போட்டா அவளுக்கு என்ன?…

 

வாழைப்பழத்தில் ஊசி நூலை கோர்பப்பது போல விஷக்கிருமியை  நுழைத்து விட்ட அவளது பொன்மொழ களை அவனும் தனக்குள் நிலைநிறுத்தி கொண்டு சொல்வதை பார்த்து சிரித்தாள் தீபா என்ற பெண்மணி…

 

சரிங்க தீபாம்மா ரொம்ப நேரம் ஆகுது… பசுபதிப்பாவ கேட்டன்னு சொல்லுங்க…அம்மாக்கு மட்டும் நான் இங்க அவங்க கிட்ட சொல்லாம வந்தேன்னு தெரிஞ்சது என்னை திட்டி கொன்னுடுவாங்க… அவங்களுக்கு தெரியறதுக்குள்ள நான் போய் ஜாகிங் போனேன்னு சமாளித்துக்கொள்கிறேன் நீங்களும் நான் இங்கே வந்தது சொல்லிடாதீங்க….

 

டாட்டா சொல்லிவிட்டு விடை பெற்றவனிடம் நாங்க சொன்னதை நீ செய்ய மறந்துறாத ஆதி என்று மீண்டும் நினைவுபடுத்தி வழி அனுப்பினார்கள்…

 

ஹப்பா எப்படியோ அந்த வீட்ல யாரோட சப்போர்ட்டும் இல்லைன்னாலும் கூட ஆதி சப்போர்ட் நமக்காக இருக்கு… ஏன்னா அது என்னோட வளர்ப்புல வளருரான்ல … பெருமை பேசிய படி தனது அறையில் நுழைந்து கொண்டாள் தீபா…

 

இன்பரசன் வீட்டில் எழுந்து அனைவருக்கும் சுடச்சுட இஞ்சி டீயனோடு அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள் அன்பினி…

 

அன்புமா எங்க ஆதிய காணோம்… அக்கறையாக அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்…

 

எனக்கும் அது தாண்டா தெரியல நான் எழுந்ததில் இருந்து அவன் ரூம்ல போய் பார்த்தா அவன் இல்ல…

 

சரிங்க அம்மா வந்த பிறகு சொல்லுங்க அவனக்கு சூடா மறுபடியும் ஒரு டீ போட்டு கொடுத்திடலாம்…..

 

சரிடா நான் வந்த பிறகு நான் உனக்கு இன்பார்ம் பண்றேன்..

 

சொன்னவள் சங்கீதாவை அழைத்து உன் மகளுக்கு காலேஜ் பீஸ் எல்லாம் கட்டிட்டியா சங்கீ… ஏதாவது வேணும்னா கூட சொல்ல நான் அனுப்பி விடுறேன்…

 

சங்கீதாவிற்காக அன்பரசி தான் அவளது மகளுக்கு பீஸை கொடுத்து அனுப்புவாள்.. இல்லாதவர்களுக்கு உதவுவதில் என்ன தவறு உள்ளது… நல்ல குணத்தோடு பிறந்தவன் நல்ல குணத்தோடு வளர தொடங்கியிருந்த சமயத்தில் சங்கீதா துணையாக இருந்த காலகட்டத்தில் எல்லாம் அவளுக்கு உதவ வேண்டும் என்று எண்ணி இருந்த அன்பரசி அதை மறவாமல் செய்து கொண்டிருந்தாள்…

 

இன்னும் ரெண்டு மாசம் இருக்குமா அதுக்கு அப்புறம் தான் பீஸ் கட்டணும்…

 

அப்போதுதான் ஜாகிங் சென்று விட்டு வருவது போல உள்ளே நுழைந்தவன்  ம்ம் இன்னும் என்ன வேணும்னாலும் கேளுங்க சங்கீதா அக்கா எங்க அன்பரசி அம்மா என்ன வேணா உங்களுக்கு பண்ணுவாங்க…

 

பின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தனது டி-ஷர்டின் மேல் புறத்தை எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டவன் சங்கீதாவிடம் பேசியபடியே உள் நுழைந்தான்.  அவனது ஆடைகளே அவன் ஜாகிங் சென்றுள்ளான் என்பதை சொல்லிவிட அதற்கு மேல் வேறு யாரும் அங்கு கேள்வி கேட்டு தொந்தரவு செய்யவில்லை அவனை.

 

ஆனால் அன்பினி தான் ஜாகிங் போனியா ஆதி… ரொம்ப டயர்டா இருக்கா… ஜூஸ் ஏதாவது கொண்டு வரவா…

 

இவ வேற ட்ராமா குயின்… ஓவரா பண்ணுவா… விட்டா நயன்தாராவையே சாப்பிட்டுறுவா… உதடுகள் அவன் செவி படும் அளவு மட்டும் மெல்லியதாக சொல்லிக் கொண்டது…

 

வேலை செய்றேன்னா ஆசைப்படுற செய் செய்… ஆமா அன்பு ரொம்ப டயர்டா இருக்கு எனக்கு ஒரு நல்ல ஹெல்த் ட்ரிங்க் ஒன்னு ரெடி பண்ணிட்டு வா பாக்கலாம்…

 

அவன் அவளிடம் வேலை வாங்குவதற்காக சொன்னான் எனில் அவளோ அவனுக்காக அன்போடு கலந்து பழங்கள் அனைத்தையும் பிழிந்து சிறிதளவு சர்க்கரை கலந்து சிறிதளவு சோடாவும் அவற்றில் துளி அளவு உப்பும் போட்டு நன்றாக அரைத்து தேவையற்றவற்றை வடிகட்டி விட்டு ஒரு ஜூஸ் தம்ளரில் ஊற்றி ஒரு ஸ்ட்ராவோட கொண்டு வந்தாள்…

 

இன்பரசன் பார்க்கும் பொழுதே கீழ்ப்பகுதியில் பச்சையாகவும் நடுவில் சிறிது ஆரஞ்சு வண்ணமும் மேல் பகுதியில் ரோஸ் வண்ணமும் கலந்திருந்த அந்த ஜூசை கண்டதும் அச்சோ எனக்கே குடிக்கணும் போல இருக்குடா…என்று சப்பு கொட்டி காட்டினார்…

 

வேணும்னா உங்களுக்கு ஒன்னு போட்டுடறேன் இன்பராசப்பா…

 

நோ நோ காலையிலிருந்து பிள்ளை நீ வேலை செஞ்சிட்டே இருக்க… சிட் டௌன் என்று அவளை அமர வைத்து விட்டான்…

 

ஒரு மிடறு தான் ஆதிரன் அந்த ஜூசை குடித்து இருப்பான்…. வ்வாக் என்றும் வாந்தி வருவது போல செய்து காட்டினான்…

 

என்ன ஆதி இந்த ஜூஸ் பிடிக்கலையா உனக்கு…

 

ஜூஸ் போட சொன்னா நீ என்னத்துக்கு உப்புக்கல்ல போட்டுட்டு வந்து இருக்க…

 

நேராக வீட்டு சமையல் அறையில் உள்ள சிங்கிள் கொண்டு சென்று அந்த ஜூஸை துளி அளவு விடாமல் ஊற்றிவிட்டு  தம்ளரை கழுவிக்கொண்டு வந்தான்…

 

இங்க பாரு உனக்கு ஒன்னும் வரலைன்னா வரலைன்னு ஒத்துக்கோ… அதுக்காக என்ன பலிகடா ஆக்காத… வாழ்க்கையில இந்த மாதிரி தர மாட்டமா எதையும் நான் சாப்பிட்டு இருக்க மாட்டேன்…

 

அவனது எண்ணத்தை மட்டும் சொல்லி விட்டு தனது அறையில் சென்று பூட்டிக் கொண்டான்…

 

அன்பினிக்காக பேச எண்ணிக்கொண்டு எழுந்த அன்பரசியையும் அவளது கையை பிடித்து தடுத்து விட்டாள் ஸ்ரீஜா.

 

ரொம்ப தான் பண்றான் ஆதி… இன்பரசன்  மனதில் ஓடிக் கொண்டிருந்தது…

 

தீபாவும் ரம்யாவும் போட்ட முதல் விதை வளர தொடங்கியதே… அதற்கான சாட்சியாக இதோ இப்போதே அவன் அந்த வீட்டில் அன்பினிரை  ஆட்டிப் படைக்க தொடங்கி விட்டான்…

 

உணவுமே அவன் தனது அறைக்கு கொண்டு வரச் சொல்லிவிட சங்கீதா கொண்டு சென்றாள்… எப்பொழுதும் கொடுத்த உணவை உண்டு விட்டு சமத்தாக இருப்பவன் எனக்கு இந்த சாப்பாடு பிடிக்காது வேற சாப்பாடு கொண்டு வாங்க அக்கா என்று மிரட்டி அனுப்பினான் அவளை…

 

சங்கீதாவும் வேறு உணவு சமைத்துக் கொண்டிருந்த தருணம் தான் அன்பரசி அவளிடம் வந்து மறுபடியும் யாருக்காக சமைக்கிறாய் என்று கேள்வி கேட்டாள்…

 

நம்ம ஆதி தம்பிக்கு தான் இந்த சாப்பாடு பிடிக்காதா அம்மா… அதனால வேற சாப்பாடு கேட்டாரு  அதான் செஞ்சிட்டு இருக்கமா….

 

இது என்ன புது பழக்கம்… பிடித்த உணவுகளை மட்டும் சாப்பிடுவது என்று தங்களது வீட்டில் யாருமே கணக்கு பார்த்தது அல்லவே… இவனுக்கு மட்டும் எப்படி தான் இப்படிப்பட்ட குணம் எல்லாம் வருகிறதோ!…

 

சங்கீதாவிடம் இருந்து விடைபெற்றவள் நேராக ஆதரனின்  அறைக்கு நுழைந்தாள்… ஆதி…

 

திரும்பிப் பார்த்தவன் என்னம்மா உங்க பிரச்சனை… எனக்கு நல்லா காது கேட்குமே… ஏன் இவ்வளவு சவுண்டா கூப்பிடுறீங்க…. சொல்லுங்க என்ற படி தனது பெட்டில் அமர்ந்திருந்தவன் தனது அம்மாவை நோக்கி எழுந்து நின்றான்…

 

சாப்பாடு பிடிக்காதுன்னு  சங்கீதா கிட்ட சொல்லி அனுப்பினுயாமே….

 

அவன் அதைக் கேட்ட மறுகணமே அந்த அறையை விட்டு வெளியேறி நடு ஹாலில் வந்து நின்றான் ஆதிரன்…

 

சங்கீதா அக்கா வேகமாக சத்தம் போட்டு அழைக்கவும் அந்த வீட்டில் இருந்த மற்றவர்களும் நடு ஹாலுக்கு வந்து நின்றார்கள்…

 

உங்க கிட்ட நான் என்ன சொன்னேன் …எனக்கு இந்த சாப்பாடு பிடிக்காது வேற சாப்பாடு செஞ்சு கொடுக்கிறீர்களா என்று தானே கேட்டேன்… செஞ்சு கொடுக்க முடியும் என்றால் சரிதான் என்று செய்ய வேண்டியது தான்… இல்லைனா செஞ்சு கொடுக்க முடியாது தம்பி என்று சொல்ல வேண்டியது தானே…  அத விட்டுட்டு என் முன்னாடி செஞ்சி தரணும் ட்ராமா போட்டுட்டு எங்க அம்மா முன்னாடி போயி நான் இதை பண்ண சொல்லி இருக்கேனு போட்டு கொடுத்து இருக்கீங்க…. நீங்க சமையல் வேலைக்கு வந்த வேலைக்காரி தானே… எதோ இந்த வீட்டை ராஜ்ஜியம் பண்ண வந்த ராணி மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க…

 

சங்கீதாவின் கண்களோ குளமாகின… இதுவரை அந்த வீட்டில் யாருமே அவளை ஒரு வேலைக்காரி போன்று நடத்தியது அல்ல… சங்கீதா என்பவள் அன்பரசிக்கும் ஸ்ரீஜாவுக்கும் ஒரு சகோதரி போல அல்லவா அந்த வீட்டில் அவளுக்கு உரிமை அளித்து இருந்தார்கள்…

 

அதனால் தான் அவள் ஆதி இடம் சிறிய சாக்ஸ் போட்டு அமர்ந்து இருந்த தருணங்களிலும் சோபாவில் மல்லாக்க படுத்து இருந்த சமயங்களிலும் கூட பெண் பிள்ளை இருக்கிற இடம் தம்பி பார்த்து கொஞ்சம் நல்லா படுங்க என்று அறிவுரை கொடுத்து இருப்பாள்…

 

அத்தோடு மட்டுமல்லாமல் ஆதியின் நண்பர்களையும் அடிக்கடி வீட்டிற்கு கூட்டி வர வேண்டாம் என்றும் அன்பாகத்தான் சொல்லி இருப்பாள்…

 

சிறுக சிறுக சேமித்து வைத்த கோவங்கள் இப்போது சங்கீதாவின் மீது வன்மத்தோடு கக்க தொடங்கினான்…

 

யார் யார் இங்கு எதுக்காக இருக்கீங்களோ அத மட்டும் செய்யணும்… மறுபடியும் சொல்ற சங்கீதா அக்கா நீங்க இங்க ஒரு வேலைக்காரி மட்டும்தான்..

 

ஆதிரன் சொல்லி முடித்த அடுத்த நொடியே அவன் கன்னத்தில் இன்பரசனின் கைகள் படிந்தன…

 

என்னடா ஏதோ விளையாட்டு பையன் பேசறேன்னு பார்த்தா ரொம்ப வினையா போயிட்டு இருக்கு…

 

இப்ப வர அன்பினி மேல கோவப்பட்டுட்டு இருந்த, இப்ப சங்கீதா மேல திரும்பிட்ட… உனக்கு என்னதான் பிரச்சனை…

 

அவர் அடித்த தடத்தோடு கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தவன் நீங்க ரெண்டு பேரு தான் என்னோட பிரச்சனை என்று சொல்லி அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தான்…

 

இன்பரசருக்கு வார்த்தைகளைக் கேட்க கேட்க தலைச் சுற்றிக் கொண்டு வரத் தொடங்கியது… இது எல்லாம் கண்டவன் நிறுத்தவில்லை…. அவன் பேச்சுக்கு தடை இங்கே யாரும் இல்லை என்ற விதமாக பேசிக்கொண்டே இருந்தான்…

 

நான் பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் என்னோட பிரச்சனையே… அன்பரசிமா நான் இதை பண்ணக்கூடாது அதை பண்ணக்கூடாது இதுதான் செய்யணும்  இத சாப்பிடக்கூடாது இங்க வெளியே போகக்கூடாது…

 

நீங்க அதையே வீட்ல வாங்கிட்டு வந்து சாப்பிட்டால் இங்கேயும் வாங்கிட்டு வந்து சாப்பிடக்கூடாது அப்படியே சாப்பிட்டாலும் அன்பினிக்கும் வாங்கி கொடுத்து தான் சாப்பிடணும்…

 

இல்ல எனக்கு ஒரு டவுட் நீங்க ரெண்டு பேரும் என்ன தான் பெத்தீங்களா இல்ல அன்பினிய பெத்தீங்களா?…….

 

என்ன பொறுத்த வரைக்கும் நீங்க ரெண்டு பேருமே ஒரு நல்ல பெற்றோரா எனக்கு நடந்துக்கல…. அதோட வெறுப்பு தான் அன்பினிய இத்தனை நாள் வரைக்கும் வார்த்தையால கொன்னுட்டு இருந்தது…

 

இப்ப அது சால்வாகிருச்சுன்னா போன டைம் நான் சண்டை போட்டதுனால…. என் மேல ரொம்ப பாசம் காட்டி அந்த ஏக்கத்தப் போக்குனீங்க….

 

பட் சங்கீதா அக்கா நம்மகிட்ட மாசம் இருபத்து ஐந்தாயிரம்

சம்பளம் வாங்குற ஒரு சாதாரண வேலைக்காரி…. அவங்க சமைச்சது நல்லா இல்லைனாலும் சமைக்க வேண்டிய பொருளை சொல்றதும் நம்மளோட வேலை… அது மட்டும் தான் அவங்க இங்க செய்யணும்…. ஆனா அவங்க அதையும் தாண்டி என்னோட நிறைய விஷயத்தில் மூக்கை நுழைச்சிருக்காங்க… ஏன் என்னோட ஃபீரீடமே முக்கால்வாசி பறிச்சுக்கிட்டாங்க வீட்ல பொட்ட புள்ள இருக்கு பொட்ட புள்ள இருக்குன்னு…

 

என்னோட பிரெண்ட்ஸ் கூட வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாதுன்னு இவங்க  சொல்லிட்டாங்க… நண்பர்களோட  என்னோட பர்த்டேவ வீட்டுல கொண்டாடனுங்கிற என்னோட ஆசைக்கு இவங்க ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வச்சிட்டாங்க… அதுக்கு எல்லாத்துக்கும் காரணம் இந்த சங்கீதா அக்கா…. சங்கீதா அக்கா யோசிச்சதுக்கு முக்கிய காரணமே அன்பினி தான்…

 

ஒன்றுமே இல்லாம இங்க வந்து நம்மள ஒண்டி பிழைக்கிறவங்களோட மகள நீங்க தலைக்கு மேல தூக்கி வச்சு கொண்டாடினது என்ன பொறுத்த வரைக்கும் கீழ்த்தரமான செயல் தான்…

 

நீங்க இப்ப வேணா அதை மாத்திக்கலாம் ….பதினைந்து வருஷமா அதை நான் அனுபவித்து இருக்கேன்…

 

என்னோட பிறந்த நாள் கூட நீங்க அவ்வளவு செலிப்ரேஷன் பண்ண மாட்டீங்க… அவளோட பிறந்த நாள ஊரே கூப்பிட்டு கேக் வெட்டி கொண்டாடுவீங்க… என்னோட பர்த்டேல கூட மேடம் தான் அங்க ஹைலைட்டா இருப்பாங்க….

 

அவளுக்காக பார்த்து பார்த்து செஞ்ச நீங்க எனக்காக என்ன பண்ணி இருக்கீங்க?… நீங்க பெத்த ஆதிங்குற  பிள்ளைக்கு நீங்க பெத்தவங்களா செஞ்ச கடமை வெறும் ஜீரோ தான்…

 

நீங்க பெற்றோர்களா நீங்க எழுதின எக்ஸாம்க்கு நான் கொடுக்கிற மதிப்பெண் தான் இன்னைக்கு நடக்கிற இந்த விஷயம் என்றும் மொத்த வலியையும் அவன் கொட்டி தீர்த்து விட்டான் அனைவரிடமும்…

 

இவனுக்குள் இப்படி ஒரு செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது அங்கு உள்ள அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது…

 

இவனது பேச்சின் வீரியத்தால் இன்பரசன் மயங்கி சரிந்து விழுந்தார்…

 

செந்தனலா?….மழையா?…

 

கௌசல்யா வேல்முருகன் 💝.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!