13) செந்தனலாய் பொழிந்த பனிமழை

5
(1)

சச்சச்ச… எத்தனை கூட்டம்…போனா பொழுதே ஆகிடுது…என்ன இருந்தாலும் நமக்கு பிள்ளைங்க தான் முக்கியம்…

அலுத்து கொண்டவாறு வந்திருந்தாள் தீபாவும் ரம்யாவும்…

 

ரம்யாவின் வயது இப்போது இரட்டை வருடமான பதினாறாம்…ஆதலால் அவளுக்கு நல்லது எதுவும் நடக்காமல் உள்ளது என்று ஜோசியரிடம் சென்று பாடம் போட்டு கொண்டு வந்தாலாம்…

 

அப்போது தான் அவளுக்கு ஆதிரனுக்கும் இப்போது இரட்டை வயது என்பது நினைவு வர அவனுக்கும் மந்திரித்த இந்திரம் வாங்கி வந்துள்ளேன் என்று வந்து அமர்ந்திருந்தாள் தீபா…

 

ஆதிரனிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு உடைமைகளோடு தயாராக நின்று கொண்டிருந்த ஸ்ரீஜாவையும் பாஸ்கரணையும் பார்த்து நீண்ட நிம்மதி பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டாள்..

 

ரம்யா தான் தெரியாதவளாக என்ன அன்பு நீ டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வச்சிருக்க… எங்கேயாவது ட்ரிப் போயிட்டு வரீங்களா நீங்க மட்டும்…

 

நாசுக்காக நயவஞ்சமாக தங்களின் எண்ணத்தை இவ்வாறு கேட்டுக் கொண்டாள்…

 

இல்ல ரம்யாகா.. நான் ஸ்டடிஸ்காக அப்ராட் போக போறேன்… சோ என்னோட பேரண்ட்ஸ் என்னுடைய வராங்க…

 

உண்மையாவா அன்பினி..

 

ஆமா ரம்யாக்கா…

 

தேன் வந்து பாயுது காதினிலே என்ற விதமாக மலர்ந்து நின்று கொண்டிருந்தால் அந்த ரம்யா என்ற கொடிய முள் கொண்ட ரோஜா…

 

குழந்தையையும் கிள்ளி விட்டாச்சு… தற்போது தொட்டில் ஆட்டும் விதமாக மந்திர தகடு கொண்டு வந்ததாக வந்த தீபாவிற்கு கண்ணா லட்டு தின்னு என்ற விதமாக நற்செய்தி வந்து பாய்ந்தது….

 

இதோ இப்போது அவளுக்குள் பரிமாறிக் கொண்டிருக்கும் சந்தோஷத்திற்கும் துள்ளிக் குதிக்கும் விதத்திற்கும் தீனி போட்டுக் கொண்டிருந்தால் அன்பினி..

 

சூப்பர் அன்பினி ஒரு வழியா இப்பவாவது இந்த வீட்டை விட்டு போகணும்னு நல்ல முடிவு எடுத்தீங்களே….

 

தீபா நீங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சு தானே….

 

அன்பரசி அதட்டலாக தீபாவினை கேள்வி கேட்டார்… அன்பினியை வைத்து ஸ்ரீஜாவை காயப்படுத்த நினைத்திருந்த தீபாவின் வாயை மூடவேண்டுமே!…அதை தான் செய்தாள் அன்பரசி…

 

இப்ப கூட நான் ஒன்னும் சொல்லகூடாதா அக்கா…அவங்க வேலை முடியிற வரை இங்கையே இருந்தாங்க…தொழில்லையும் பாஸ்கரன் உதவுறேன்னு தொழில் வளர்ச்சி பற்றி கத்துக்கிட்டாங்க…அன்பினியும் பள்ளி படிப்பை பெத்தவங்க செலவு இல்லாமல் படிச்சு முடிச்சுட்டா…இப்போ கல்லூரி தொடக்கம்…

 

இதையே சாக்காக வச்சு வெளியூறு போயி உங்க தொழிலுக்கு ஏட்டிக்கு போட்டியா வரப்போறாங்க…நீங்களும் அவங்களுக்கு கொடி புடிங்க…எப்பதான் உங்களுக்கு விவரம் புரியுமோ…

 

ஶ்ரீஜா மாதிரி விவரமாக ஓசியிலையே எப்படி உடம்ப வளர்க்குறதுன்னாவது கத்துக்கணும்  அன்புக்கா…

 

தீபா பேசிய அனைத்தும் சரி என்பது போல ஆதிரன் நின்று கொண்டிருந்தான்… அன்பரசிக்கு தான் தலைகால் புரியாமல் கோபம் கிளம்பியது…

 

இம்மூவரும் மன வருத்தத்தில் வீட்டினை விட்டு வெளியேறும் சமயத்தில்  இவ்விருவரும் நம் வீட்டை தேடி வர வேண்டும்…

 

இன்பரசன் மரியாதை நிமித்தமாக அவளது பேச்சுக்கு கட்டளை கொடுத்தார்…

 

வந்த வேலை முடிஞ்சிடுச்சுன்னா ஒரு வேலை சாப்பாடு சாப்பிட்டு நிம்மதியா நீ வீடு போய் சேரலாமே… அதை தாண்டி ஏகப்பட்ட வேலை பார்க்கிறேன்னு சொன்னேனா வந்த விருந்தாளிகளை அவமானப்படுத்தி அனுப்பக்கூடாது என்கிற தமிழ்நாட்டு பண்ப நான் மாத்திடுவேன்… உனக்கு எப்படி வசதியோ அதை பொறுத்து நடந்துக்கமா…

 

ஸ்ரீஜா மற்றும் பாஸ்கரனின் மனதை அவர்களால் மாற்ற இயலவில்லை… எத்தனையோ விதமாக அவர்களிடம் பேசி பார்த்து விட்டான்… அன்பரசி கூட சில சமயங்களில் அழுது மாற்றிவிடலாம் என்று பொய் கணக்கு போட்டு இருந்தாள்..

 

விதவிதமாக இவ்விருவரும் செயல்பட்டதோடு சேர்த்து ஆதி எனும் முயற்சி செய்து தோற்று விட்டான்…

 

எந்த ஒரு பெற்றவர்களும் தன் பிள்ளை அவமானப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்… பாஸ்கரனும் பாஸ்கரணம் எடுத்த முடிவிலிருந்து பின்வராததற்கு முதல் காரணம் அன்பினி… தானே மனம் மாறினாலும் நீங்கள் மனம் மாறி விடாதீர்கள் என்று சொல்லி இருந்தால் அன்பினி..

 

இதனால் வரை தங்களின் அன்பு எங்களை எப்பொழுதும் பாதித்ததில்லை என்பதையும் இதன் மேலும் தங்களின் அன்பால் எங்களை கட்டி அணைத்து இங்கே வைத்திருக்க முடியாது என்பதையும் தெள்ளத் தெளிவாக உரைத்து விட்டார் பாஸ்கரன்…

 

அதற்கு மேல் அவர்கள் விடை பெறுவதை அங்கே யாராலும் நிறுத்த இயலாத சூழ்நிலை நிலவியது…

 

அன்பினிக்கும் இதற்கு மேல் இறுக்க விருப்பம் இல்லை என்பதை அறிந்த அன்பரசி மற்றும் இன்பரசன் அவளை அதற்கு மேலும் தடுத்து நிறுத்தி அவளை காயப்படுத்தி பார்ப்பதில் விருப்பம் இல்லாமல் வழி அனுப்ப ஆயத்தமான சமயம் தான் தீபாவின் வருகை நிகழ்ந்தது..

 

தீபாவின் பேச்சுகளில் கொடுத்த வலியோடு நின்ற அன்பினிக்கு இந்த வீட்டில் அழகான பலபல எண்ணங்கள் நிழலாடியது…வீட்டின் மொத்த நபர்களும் சிரித்து பேசிய நாட்கள், ஆதிரனுக்கு பிடித்த மீன்வகைகளை வாங்கி வந்து அவற்றை வளர்த்தது, அது நோய்வாய்ப்பட்டு இறந்த போது வீடே கலையிழந்து போனது, அன்பரசியின் ஸ்கூட்டி ஓட்டி பழகிய நாட்களில் தோட்டத்தில் போட்டு அவள் விழுந்தது, இன்பரசன் அப்பா அவரை கலாய்த்தும் அவளுக்கு ஏற்பட்ட கால் சுளுக்கிற்கு தைலம் தேய்த்து விட்டது, சங்கீதா தனது மகளோடு வந்து விருந்து சமைத்த தருணம் என அனைத்தும் ஒரு நிமிட படமாகி மறைந்தது அவளது விழியில்…

 

போற போறனு மட்டும் சொல்லுறா…அதுக்கான நடவடிக்கை எடுக்க மாட்றாலே…தீபாவின் எண்ணம் எப்போது ஈடேருமென ஆவலாக காத்திருந்தாள்…

 

ஆதிரனும் இவ்விருவருடன் சேர்ந்து இதுக்குலாம் நான் தான் தீபாம்மா காரணம்… அன்பினி மேல இருந்த ஒட்டு மொத்த கோவத்தையும் உங்க வீட்டுக்கு வந்துட்டு வந்த அப்புறம் நான் காட்டிட்டன்…இவ இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு நான் கனவுல கூட நினைக்கல…மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு…

 

தீபாவிடம் தனக்குள் நடந்து கொண்டிருந்த மாபெரும் போராட்டத்தை இறக்கி வைத்தான்…அவள் விஷம் கொண்டு வந்து அவனுக்கு அறிவுரை புகுட்டும் போதுதான் இந்த அற்புத காட்சி அன்பரசிக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது…

 

தேள் கொடுக்கு கொண்டு கொட்டும் தீபாவோடு தன் மகன் நயனம் மிக்க பேசி மகிழ்கிறானே!…அவளது வினை நோக்கும் விசயம் அனைத்தும் அவனுக்கு தெரியாமல் நாம் பார்த்து கொண்டதால் ஒருவேளை அவனை வைத்து இவர்களை பிரிக்க நினைத்தாலோ?…

 

அதை அழகுற நிகழ்த்திவிட்டு இப்போது ஒன்றும் அறியாதவளாக வந்து நம்மை அனைவரையும் மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்கிறாளோ?…இல்ல என்ன இருந்தாலும் தீபா நம்ம சித்தி பிள்ளை…அவங்க நல்ல குணம் அவளுக்கு கொஞ்சமாவது இருக்கும் என்று வாதாடிய அன்பரசியின் மனசாட்சிக்கு மடைத்தனம் ஏறிவிட்டது…

 

ஆனால் ஆதிரன் தீபாவிடம் இப்படி ஒன்றாக சேர்ந்து பேசி மகிழ்ச்சி அடையும் அளவா அவளோடு நெருங்கி விட்டான் தனது புதல்வன்…

 

பதினாறு வயதாக தன்னோடு ஒன்றி இருந்தவள் வீட்டை விட்டு வெளியேற போவதெல்லாம் அவனுக்கு துளியும் வருத்தத்தை கொடுக்கவில்லையே… தங்களின் வேண்டுகோளுக்காகவா அன்பினியோடு நட்பாடினான்…

 

இந்த அத்தனை வலியோடும் இந்த வீட்டை விட்டு முதல் படி எடுத்து வைத்து வெளியேறினாள் அன்பினியோடு ஸ்ரீஜா மற்றும் பாஸ்கரன்….

 

தோட்ட சாரம்சத்திலும் கூட பல கலேபரச் செயல்கள் அவளை கண்ணீரில் ஆழ்த்தியது…அவளுக்கு ஆதிரன் மிதிவண்டி ஓட்ட சொல்லி கொடுத்த தருணமது… பிடிப்பின்றி அவள் பொத்தென விழ டங்கென்று அவள் மண்டையில் கொட்டு வைத்தவன் அவளது காயத்திற்கு மருந்து போட்டு அன்புக்கு வலிக்கும்…சோ சீக்கிரம் சரி ஆகிடு….அப்படி இல்லைனா என்கிட்ட வந்திடு….என்று அவளுக்காக அவன் பேசிய ஒவ்வொரு சொல்லையும் அவள் இப்போது வரை தாரக மந்திரமாக நினைவு வைத்திருக்கிறாள்..

 

ஆனால் அவனோ அவள் தனது பெற்றோரிடம் அவள் மாட்டிவிடாமல் இருப்பதற்காக அஸ்திவாரமாக சொன்ன சொற்கள் என்று அவற்றை இப்போது மறந்து போனதது தான் நிதர்சனம்…

 

காரின் தரிப்பிடத்தில் இருவரும் காரின் மீதமர்ந்து காரை பழுது செய்த தருணம் அவளை அன்போடு அழைத்தது….

 

புதர்களை அவள் வட்டவடிவாக வெட்டி அவற்றுள் குறிப்பிட்டு பகுதியில் மட்டும் குருவிகள் கூடு கட்டுவதற்காக இடம் அமைத்த பகுதியும் அவளை செல்லாதே என்று சொல்லியது…

 

புதர்களுக்கு இடையே ஒளிந்து விளையாடிய குட்டி ஆதிரனும் அன்பினியும் இப்போது அவளுக்கு டாட்டா சொல்வதை உணர்ந்தாள்…

 

மரநாற்காலியில் பத்து வயது ஆதிரனும் அன்பினியும் தங்களுக்கு பிடித்த சிக்கன் பீட்சாவை தனித்தனியாக பிரித்து சாப்பிட்ட கையோடு டாட்டா சொல்வதாக உணர்ந்தாள்…

 

ஆதிரன் நட்டு வைத்த வீட்டு வரவேற்பு செடிகளும் மலர்ந்து செழித்திருந்த பூக்களும் அவளை ஏக்கத்தோடு பார்ப்பதாக நினைத்துக் கொண்டவள் அங்கு சென்று பேசத் தொடங்கினாள்..

 

ஹாய் செல்லம்ஸ்… என்ன பத்தி ஆதிரன் உங்ககிட்ட நிறைய சொல்லி இருப்பான்.. இனிமே நான் இங்க இருக்க மாட்டேன்… அவன பத்திரமா பாத்துக்கோங்க… யாராவது ஒருத்தர் நீங்க வாடினால் கூட அவன்  வாடி  போய் விடுவான் என்று செடிகளிடமும் சொல்லிவிட்டு அகன்றாள்…

 

இப்போது செடி கொடிகளுக்கு டாட்டா சொல்லி அதோடு மனித உயிர்களுக்கும் டாட்டா சொல்ல ஆரம்பித்தாள்…

 

அன்பரசி மா உங்களை மாதிரி ஒரு நல்ல உள்ளம் கொண்டவர்களை இந்த உலகத்தில் நான் பார்த்திருக்கவே மாட்டேன்…. என்னோட உயிர் உள்ள வரைக்கும் நான் உங்களுக்கு கடமைப்பட்டவ… ஏன் என்னோட உயிரையே உங்களுக்காக கொடுக்க கூட நான் தயாரா இருக்கேன்… என்ன பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு அன்னை தெரசா மாதிரி… ரொம்ப நல்ல மனசு கொண்டவங்க… ரொம்ப  ஐஸ் வைக்கிறேன் இல்ல… என்ன இருந்தாலும் அது மட்டும் தான்மா நிஜம்…

 

தற்போது இன்பரசர் இடம் திரும்பி ரொம்ப நன்றிப்பா நீங்க இல்லைனா நாங்க மூணு பேருமே இல்லாம போயிருப்போம்… அப்பாவுக்கும் தொழில் வளர்ச்சி பற்றியும் கத்துக் கொடுத்திருக்கிறீர்கள்…. கண்டிப்பா உங்களோட ரெசார்ட் பாதிக்கிற அளவுக்கு எங்களோட வளர்ச்சி இருக்காது… அப்பாக்கு பிடிச்ச தொழில்ல தான் அவர் இப்ப களம் இறங்க போறேன்னு சொல்லிட்டு இருக்காரு… சோ தீபாமா சொன்ன மாதிரி யு டோன்ட் வொரி டாடி… உங்க தொழிலுக்கு நீங்க மட்டும் தான் ராஜா….

 

என்ன பண்றது நீங்க இத்தனை வருஷமா என்ன பொட்டானிக்கல் கார்டன் கூட்டிட்டு போறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க இல்ல…. நான் நெக்ஸ்ட் டைம் வரும்போது கண்டிப்பா நீங்க என்ன கூட்டிட்டு போகணும்…

 

வாடா தங்கம் உன்ன கூட்டிட்டு போகாம வேற யாரோ கூட்டிட்டு போறேன்…

 

வழி அனுப்பும் தருணத்திலும் இவ்விருவரும் இலகுவாக வைத்துக் கொள்ள அன்பினி இலகுவாக பேசிய அவர்களை சமாளித்தபடி வெளியேறினால் அந்த வீட்டை விட்டு ஒட்டுமொத்தமாக….

 

ஶ்ரீஜாவிற்கும் பாஸ்கரனுக்கும் மனம் முழுவதும் பாரமாக இருந்தாலும் இனிமேல் அன்பினி இளவரசியாக வாழப் போகிறாள் என்று எண்ணத்தோடு மட்டுமே அங்கிருந்து வெளியேறினார்கள்..

 

அன்பரசியின் இன்வரசனும் நீர்த்துப்போன கண்களோடு தங்களது வீட்டிற்குள் நுழைந்தார்கள்…

 

விடுங்க அக்கா தலைக்கு வந்தது தலப்பாவோடு போனது என்கிற மாதிரி இவ்வளவு தூரம் நம்மள தொந்தரவு பண்ணதுங்க இப்பயாவது போச்சுங்கன்னு சந்தோஷப்படுங்கள்….

 

தீபா அன்பரசியிடம் ஆறுதலாக பேசுகிறாளாம்…

 

அப்படியா தீபா… ரொம்ப சந்தோசமா இருக்கு போலயே…. ஸ்ரீஜா வெளியில போனதுல எங்கள தாண்டி உனக்கு மட்டும் தான் இதுல முழு திருப்தி இருக்குன்னு நினைக்கிறேன்… இது நெஜம்தானே… இப்ப ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியே போனதுக்கு மொத காரணமும் நீயா தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன்….

 

என்னக்கா அப்படி சொல்ற… நானே இன்னைக்கு ஆதிரனை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.. அவங்க என்னமோ வீட்டை விட்டு போறாங்க அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்….

 

இப்போது அன்பரசியின்  கேள்வி தீபாவினை நெருங்கவில்லை…அவளிடம் என்ன பேசினாலும் பொய்யாக ஜோடித்து சொல்லுவாள்… நேராக ஆதிரனிடம் சென்றது…

 

எப்போல்ல இருந்து ஆதி நீ தீபா கூட இவ்வளவு நெருக்கமா பேசி பழகுன…அவனது முகம் வியர்க்க ,

 

என்னக்கா இது கேள்வி உங்க அப்பாவோட  மரணம் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்த அவனை நான் தான் வெளிய கொண்டு வந்த…இறந்த டைம்ல தான் தம்பி என்னோட உண்மையான குணத்தை புரிஞ்சுகிட்டான்… அன்னையிலிருந்து நாங்க ரெண்டு பேரும் திக்கு பிரண்ட்ஸ்… என்று இரு கைகளையும் இணைத்து கண்களை இறுக மூடி காட்டினாள் தீபா…

 

எனக்கு அப்பவே தெரியும்… என்னடா விஷம் பாலோடு சேர்ந்து வேலை செய்தேன்னு…

 

இப்ப நீங்க யாரை விஷம்னு சொல்றீங்க?… யாரை பாலுன்னு சொல்றீங்க?…

 

உன்னத்தான் தீபா… சாதாரண வெஷம் கிடையாது ஸ்லோ பாய்சன்… பால் மாதிரி இருந்த என் மகனோட மனச மாத்திட்ட இல்ல….

 

அன்பரசிக்கா நீங்க லிமிட் தாண்டி பேசிட்டு இருக்கீங்க…. நான் ஒன்னும் விஷம் கிடையாது… அதே மாதிரி உங்கள மாதிரி ஊர் பற்று உள்ளவங்களும் கிடையாது… யாரோ ஒருத்திக்கு நீங்க இரண்டு பேரும் சம்பாதிச்சு கொட்டினதும் சொத்த வாரி வழங்கினதும் எனக்கு புடிக்கல… அது மட்டும் தான் உன்னோட மகன் கிட்ட சொன்னனே தவிர்த்து வேறு ஒன்றும் நான் சொல்லலையே…

 

அவளது உண்மைத்துவம் வெளி வந்துவிட்டது… தீபா தனக்குத்தானே தவளை கெட்டுவிட்டது போல கெடுத்துக் கொண்டால் தன்னை…

 

அன்பரசி ஒரு யூகத்தில் தான் அந்த மாதிரி சில கேள்விகளை கேட்டு இருப்பாள்… இப்போது தீபா தான் அம்மூவரும் வீட்டை விட்டுச் செல்வதற்கு காரணம் என்பதையும் அறிந்து கொண்டாள்..

 

ஆதிரனிடம் நெருங்கிய அன்பரசி உனக்கு அன்பினி மேல எதுக்கு ஆதி அவ்வளவு கோபம்… அவ உனக்கு போட்டியா வருவான்னு நீ எப்படி நினைச்ச… அவ உண்மையிலேயே எப்படிப்பட்டவ தெரியுமா?…

 

உயிருக்கு உயிரா நினைச்சிருந்த உனக்கு அவளை பிடிக்கலை என்பதற்காக உயிரே இல்லாத ஜடமா இந்த இடத்தை விட்டு போறடா…உன் மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறா தெரியுமா?….இத்தனை நாளா அவ வாழ்ந்த வாழ்க்கைக்கு முழு அர்த்தமே நீ மட்டும் தான் அது உனக்கு தெரியுமா?…உன்னோட சின்ன சின்ன சந்தோஷத்துக்காக அவளோட பெரிய பெரிய கனவுகள் எல்லாம் இழுந்து நிக்கிறாலே அது உனக்கு தெரியுமா?….

ஏதோ வாலிபால் கேம்ல நீ மட்டும் தான் ஜெயிச்சங்குற மாதிரி குதிச்சியே அதுவே உனக்கு அன்பினி விட்டுக் கொடுத்த பிச்சை உனக்கு தெரியுமா?…உங்களோட வாலிபால் மேட்ச்ல கோ எட்டா அவங்க கண்டக்ட் பண்ண டைம்ல உனக்கு முன்னாடி செலக்ட் ஆனது அன்பினி… நீ செலக்ட் ஆகலன்னதும் உன் வாடி போன உன் மூஞ்ச பாத்த உடனே அவ அது வேணாம்னு எழுதி கொடுத்துட்டு வந்தவ டா…..

 

எக்ஸாம் டைம்ல அவ பாசாகணும்னு நீ கொடுத்த நோட்ஸ்க்கு மேல விடிய விடிய அவ படிச்சு உன்னோட பெயரை காப்பாத்தணும்னு ஒரு நொடி கூட தூங்காம படிச்சு உனக்கு அடுத்த மார்க் வாங்குனாலே அது உனக்கு தெரியுமா?…

 

உன் விரல் புடிச்சு நின்ன அந்த பிஞ்சு வயசுல இருந்து இப்ப வரைக்கும் அவளுக்குள்ள உனக்கு ஒரு இடம் கொடுத்து உன் மேல வளர்ந்து இருக்க அவளோட காதல பத்தி உனக்கு தெரியுமாடா?….

 

அன்பினி காயப்படுத்திட்டா… நண்பினியால என்னோட சந்தோசம் போச்சு அன்பினியால என்னோட நிம்மதி போச்சுன்னு சொன்னியேடா இப்ப அவளோட இதயமே செத்துப் போச்சு டா…

 

உன் மேல வச்சு இந்த காதலியே உனக்காக தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டு இருக்கா டா அந்த பொண்ணு…. அதுக்கு ஒரே காரணம் உன்னோட மன நிம்மதி மட்டும் தான்….

 

அதனால்தான் தற்போது கூட நான் இல்லாவிடில் நீ இருந்து விடுவாயோ என்று மீண்டும் மீண்டும் நண்பனின் கேள்வி எழுப்பினாலா என்று ஆதிரனுக்கு அவனது மூளை நினைவூட்டியது…

 

காதலா? ….

அன்பா?….

விட்டுக் கொடுத்தாளா?…

இதெல்லாம் எனக்காகவா?…

 

அன்பினியின் உண்மைத்துவத்தை இப்போதாவது அவன் அறிந்து கொள்வானா!…. அல்லது இவை அனைத்தையும் கூட அன்பினியின் நாடகத்தன்மை என்று  வரிசை படுத்தி விட்டு அவளுடைய காதல் கோட்டைக்கு மணல் வாரி இறைப்பானா!…

 

அல்லது மீண்டும் அவளது குணங்கள் அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு அவளை ஏற்றுக் கொள்வானா!…. இல்லை அவளை ஏற்றுக்கொள்ள இந்த விதி தான் தனது விளையாட்டை நிறுத்தி கொள்ளுமா!…

 

  செந்தனலா?… மழையா?…

 

கௌசல்யா வேல்முருகன் 💝.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!