காலை நேரம் கண்விழித்து எழுந்தவளுக்கோ அடித்துப் போட்டாற் போல உடல் முழுவதும் சோர்வு விரவியது.
நேற்றைய இரவுப் பொழுது நடந்த எதையும் மறந்தும் கூட நினைத்து விடக்கூடாது என எண்ணியவள் மீண்டும் மீண்டும் அதைப் பற்றித்தான் நினைத்து தன்னை அழுத்தத்திற்குள்ளாக்கினாள்.
நேரமோ 8 மணி தாண்டி இருக்க பதறிப் போய் எழுந்து கொண்டவள், ‘அச்சச்சோ காலேஜுக்குப் போக டைம் ஆயிருச்சே.. இதுக்கு அப்புறமா காலேஜ் போனா ப்ரொபசர் பின்னி எடுத்துடுவாரு..’ எனத் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருக்க, குளியல் அறைக்குள் இருந்து தலையை துவட்டிய வண்ணம் வெளியே வந்தான் குருஷேத்திரன்.
வெளியே வந்தவனுடைய பார்வையோ தலையில் கரத்தைப் பதித்த வண்ணம் அமர்ந்திருந்த அபர்ணாவின் மீது கேள்வியாகவும் அழுத்தமாகவும் பதிந்தது.
அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் வேகமாகத் தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டவளுக்கு அவனிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டி இருந்தன.
இரவு அவன் குடித்துவிட்டு நடத்திய கூத்தெல்லாம் அவனுக்கு நினைவில் இருக்குமா இல்லையா..?
தெரியவில்லை அவளுக்கு.
அவனோ அவளைக் கவனியாது அவளைத் தாண்டிச் சென்று கண்ணாடியின் முன்பு நிற்க மனம் வெறுத்துப் போனாள் அபர்ணா.
இயல்பிலேயே தோன்றும் கோபம் பொங்கிக் கொண்டு வர எழுந்து அவன் அருகே சென்றவள்,
“நேத்து ஏன் அப்படி எல்லாம் நடந்துக்கிட்டீங்க..?” எனச் சீறினாள்.
“எப்படி நடந்துக்கிட்டேன்…?” என்று மறு கேள்வி கேட்டான் அவன்.
“கு… குடிச்சிட்டு என்கிட்ட வந்து… எ.. என்ன தப்பா…” எனக் கூற முடியாது திணறினாள் அவள்.
“சரி அப்போ இன்னைக்கு குடிக்காம பண்ணட்டுமா..?” என அவன் கேட்டதும்
“ஙே….” என விழித்தாள் அவள்.
“என்ன ஓகேவா..?”
“ஐயோ வேணாம்…” எனப் பதறி வந்தன அவளுடைய வார்த்தைகள்.
“அப்போ குடிச்சிட்டே வரட்டுமா..?” என அவன் கேட்டதும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
நேற்று நடந்த அனைத்தும் இவனுக்கு ஞாபகம் இருக்கிறது என எண்ணிக் கொண்டவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
“நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை…”
“என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்..? நீயே அப்படி நினைச்சுக்கிட்டா நான் பொறுப்பாக முடியாது..” என்றான் அவன்.
“ஒரு பெரிய மனுஷன் பேசுற மாதிரியா பேசுறீங்க..” என்று கோபத்தில் சற்றே குரலை உயர்த்திப் பேசினாள் அவள்.
“பெரிய மனுஷனா பேசல உன்னோட புருஷனா பேசுறேன்..” என்றதும் அவளுக்கோ எரிச்சல் கூடியது.
“எனக்குப் பிடிக்கல குருஷேத்திரன்..”
“பட் எனக்கு பிடிச்சிருக்கே..!”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..”
“உன்ன எதுவும் பண்ண சொல்லலையே..”
“ஐயோ..! ப்ளீஸ்…”
“கூல் அபர்ணா..” என்றவன் தன்னுடைய தலையை துவட்டத் தொடங்கிவிட அவளுக்கு சுவற்றில் மோதிக் கொண்டதைப் போல இருந்தது.
ஏனோ அந்த அறைக்குள் இருக்கவே மூச்சு அடைப்பதை போலத் தோன்ற தன்னுடைய தலையைப் பற்றிக் கொண்டவள்,
“நான் எங்க அம்மாகிட்ட பேசணும் உங்களோட ஃபோன கொடுக்க முடியுமா..?” எனக் கேட்டாள்.
புருவங்களை உயர்த்தி அவளை திரும்பிப் பார்த்தவன் தன்னுடைய ஸ்மார்ட் ஃபோனை அவளிடம் கொடுக்க அதனைத் தன் கரத்தில் வாங்கியவள் தன்னுடைய அன்னையின் இலக்கத்தை அழுத்தத் தொடங்கினாள்.
அடுத்த நொடியே அழைப்பு போக மறுப்பக்கம் இருந்து ஹலோ என்ற பத்மாவின் குரல் அவளுடைய காதில் தேனாகப் பாய்ந்தது.
“ம்மாஆஆ..” தழுதழுப்பான குரலில் அழைத்தாள் அபர்ணா.
“எப்படி இருக்கீங்க மா..?”
“என்னடி ஏதோ பத்து வருஷம் பார்க்காத மாதிரி இப்படி கேக்குற நேத்து தானே உன்னை அனுப்பி வச்சோம்..” எனத் தன்னுடைய மகளைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் அவர்.
“நேத்து மாதிரியே இல்லம்மா ஒரு யுகம் மாதிரி இருக்கு..” என்றதும் அவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன்.
அவளோ அவனை முறைத்து விட்டு மெல்ல எழுந்தவள் அவனை விட்டு நகர்ந்து பால்கனி நோக்கி செல்லத் தொடங்க அவளை பார்க்காது மறுபுறம் திரும்பிக் கொண்டான் அவன்.
“கண்ணம்மா நானும் அப்பாவும் அங்கதான் வந்துகிட்டு இருக்கோம்.. உன் கூட நேர்லேயே பேசுறேன்டா..” எனப் பத்மா கூறியதும் அவளுக்கு சட்டென முகத்தில் புன்னகை பூத்தது.
“வாவ் வந்துகிட்டு இருக்கீங்களா..? சூப்பர்.. சூப்பர்.. சீக்கிரமா வாங்கமா..” எனக் கூறியவள் அழைப்பைத் துண்டித்து விட்டு அவனுடைய ஃபோனை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.
“தேங்க்யூ..”
“இட்ஸ் ஓக்கே..” என்றவன் தன்னுடைய ஃபோனை வாங்கும் போது அவளுடைய மணிக்கட்டில் இருந்த சிவந்த அடையாளத்தைக் கண்டு புருவம் சுருக்கியவன், அவளுடைய கரத்தைப் பிடித்து அதைக் கூர்ந்து பார்த்தான்.
பதறி தன்னுடைய கரத்தை விடுவிக்க முயன்றவளை “ஸ்டாப் இட் அபர்ணா..” என்ற அழுத்தமான குரலில் அவளை அசைய விடாமல் செய்தவன்,
மணிக்கட்டில் சிவந்திருப்பதை தன்னுடைய ஒற்றை விரலால் வருடி விட்டு எப்படி இது வந்தது எனப் புரிந்தவனாக அவளை நிமிர்ந்து பார்க்க அவளோ அவனேயே தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அவளுடைய கழுத்துப் பகுதியிலும், கழுத்துக்கு சற்று கீழான பகுதியிலும் சிவந்திருப்பதைக் கண்டவனுக்கு முகம் நொடியில் மாறியது.
“நைட் உன்ன நான் ரொம்ப ஹேர்ட் பண்ணிட்டனா..?” என மென்மையான குரலில் கேட்டான் அவன்.
ஆம என அலற வேண்டும் போல இருந்தது அவளுக்கு,
அடுத்த நொடியே மனசாட்சி அப்படி எல்லாம் இல்லை என அவனுக்குப் பரிந்து கொண்டு வந்தது.
அவள் பதில் ஏதும் கூறாமல் நிற்பதை உணர்ந்தவன் அவளுடைய கரத்தை விடுவித்து விட்டு தன்னுடைய ஃபோனில் யாருக்கோ அழைத்தான்.
சற்று தள்ளி நின்று சில நொடிகள் பேசிவிட்டு அலைபேசியை வைத்தவன், மீண்டும் அவள் அருகே வந்து அவள் அணிந்திருந்த டி-ஷர்டை மெல்ல உயர்த்த அவளுக்கு உள்ளமும் உடலும் ஒரு சேர பதறியது.
“கொஞ்ச நேரம் சும்மா இருடி.. இப்போ எதுவும் பண்ண மாட்டேன்.. வேறு எங்கேயும் சிவந்து இருக்கான்னு செக் பண்ணிட்டு விட்ருவேன்..” எனக் கூறியவன் ஆடையை நெகிழ்த்த,
“அவளோ அதெல்லாம் வேணாம் நானே பாத்துக்கிறேன்..” எனக் கூறிவிட்டு அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
இடுப்பிலும் கூட சற்று தடித்து இருப்பதைக் கண்டவன் தன்னுடைய தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.
அவளோ மீண்டும் குளியலறைக்குள் சென்றுவிட இவன் முகத்திலோ சிந்தனை ரேகைகள் சூழ்ந்தன.
குளித்து முடித்து உள்ளேயே ஆடையை மாற்றி விட்டு வெளியே அவள் வந்ததும் அவர்களுடைய படுக்கை அறையின் வெளிப்புறத்தில் இருந்த சிறிய வரவேற்பறையின் சோபாவில் ஒரு தாதி அமர்ந்திருந்தாள்.
தாதியோ அபர்ணாவைக் கண்டதும் எழுந்து “குட் மார்னிங் மேடம்..” எனக் கூற அவளும்,
“குட் மார்னிங் சிஸ்டர்..” என்றவள் சற்றே தள்ளி இருந்து தன்னுடைய அலைபேசியில் முகம் புதைத்திருந்தவனைப் புரியாது பார்த்தாள்.
“யார் இவங்க..?”
“ஷீ இஸ் அ நர்ஸ் அபர்ணா.. உன்னோட உடம்புல அங்கங்க தடிச்சு சிவந்து போயிருக்குல்ல. அது எல்லாத்தையும் இவங்க கிட்ட காட்டு இவங்க மருந்து போட்டு விடுவாங்க.. சீக்கிரமா க்யூர் ஆகிடும்..” என்றவனை அதிர்ந்து பார்த்தவளுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
‘இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?
இதையெல்லாம் கூடவா வெளியே கூறுவார்கள்..?
அவளுக்கோ அங்கே நிற்கவே முடியாது உடல் எல்லாம் கூசத் தொடங்கி விட்டது.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க போங்க..” என அந்தத் தாதியை பார்த்து அவள் கூற, அவனோ தன்னுடைய போனை மேசை மீது வைத்து விட்டு அவளை நெருங்கி வந்தவன்,
“வாட்ஸ் ராங் வித் யூ அபர்ணா..” என சற்று அதட்டலாகக் கேட்டான்.
“எனக்கு எந்த மருந்தும் தேவையில்லை அவங்கள போகச் சொல்லுங்க..”
“ஈஸி மேடம் இந்த ஜெல்ல தடவினாலே உங்க ஸ்கின் நார்மல் ஆயிடும்.. பல் தடம் ஏதாவது இருக்கா அப்படி இருந்தா இதை அப்ளை பண்ணுங்க.. இல்லன்னா சம்டைம் இன்ஃபெக்ஷன் ஆகலாம்..” என்றவாறு அவர் கூறிக் கொண்டே போக இவளுக்கு அப்படியே நிலத்துக்குள் புதையுண்டு விடலாம் போல இருந்தது.
“போதும் நிறுத்துங்க நான் தான் வேணாம்னு சொல்றேன்ல.. வெளியே போங்க ப்ளீஸ்..” என அவள் அந்தத் தாதியைப் பார்த்து உச்சகட்ட ஆத்திரத்தில் கத்தி விட அவரோ தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு கோபத்தோடு விறுவிறுவென அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.
கொதித்துப் போனான் குருஷேத்திரன்.
“ஏய் உனக்கு என்னடி பிரச்சனை..? உனக்காகத் தானே அவங்கள வர வச்சேன்.. எதுக்கு இப்படி சில்லியா பிஹேவ் பண்ற..” எனக் கோபத்தோடு கேட்டான் அவன்.
யாருன்னே தெரியாதவங்க கிட்ட எப்படி என்னோட அந்தரங்கத்தை காமிக்க முடியும்..? இடுப்பு வலிச்சா கூட அம்மா கிட்ட சொல்லி நான் தைலம் தடவிக்க மாட்டேன்.. எனக்கு கூச்ச சுபாவம் ரொம்ப அதிகம்.. அடிப்பட்டு இரத்தமே வந்தா கூட நான்தான் மருந்து போடுவேன் திடீர்னு யாரோ ஒருத்தவங்களை கூட்டிட்டு வந்து காமி காமினா எப்படி என்னால காமிக்க முடியும்..
என்னை எதுக்காக இப்படி சங்கடப் படுத்துறீங்க…? நான் சின்னப் பொண்ணுதான் ஒத்துக்கிறேன் உங்களுக்கு அட்வைஸ் பண்றன்னு நினைக்காதீங்க.. உங்களுக்கும் எனக்கும் இடையில நடக்கிற எல்லாத்தையும் தயவு செஞ்சு இப்படி இன்னொருத்தவங்க முன்னாடி சொல்லாதீங்க.. எனக்கு பிடிக்கல. ஒரு மாதிரி அசிங்கமா இருக்கு..” என்றவளுக்கு கண்கள் கலங்கியே விட்டன.
தங்களுக்குள் நடந்த அந்தரங்கத்தையும் அதனால் ஏற்பட்ட காயங்களையும் கூட அவன் சொல்லிவிட்டதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
🔥💜💜🔥
அடுத்த எபியையும் இன்னும் சில நொடிகளில் பதிவேற்றி விடுவேன் என்ஜாய்..
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.7 / 5. Vote count: 57
No votes so far! Be the first to rate this post.
Post Views:2,376
2 thoughts on “14 நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”
Lalitha Ramakrishnan
குரு ரோபோவா , பெண்ணின் உணர்வை உணராமல் இருக்கிறானே ?
குரு ரோபோவா , பெண்ணின் உணர்வை உணராமல் இருக்கிறானே ?
So sad