நெருக்கம் – 15
அவளுடைய வார்த்தைகளில் குருஷேத்திரனுக்கு வியப்பே மிஞ்சியது.
அபர்ணா இவ்வளவு கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணா..?
அவனுக்கு புதிதாக இருந்தது.
அவன் அறிந்த பெண்கள் எல்லாம் மாடர்ன் ட்ரெஸ்ஸில் பாதி உடலை காட்டியல்லவா அவனுடைய கம்பெனிக்கே வருகை தருவார்கள். அதுவே பார்ட்டி என்றால் சொல்லவே வேண்டாம்.
அப்படி இருக்கும் போது வைத்தியத்திற்காகக் கூட தன்னுடைய உடலைக் காட்டவே சங்கடப்படும் அபர்ணாவின் குணம் வெகு வித்தியாசமாக தெரிந்தது அவனுக்கு.
அவளோ கண்கள் கலங்கி அவனைப் பார்த்தவாறு இருக்கச் சட்டென இளகிப் போனவன்,
“டாக்டர்ஸ்கிட்ட நர்ஸ்கிட்ட எல்லாம் நம்மால எதையும் மறக்க முடியாது அபர்ணா.. நீ பேபி மாதிரி பண்ற..” என்றான்.
“நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் பேபி தான். எனக்கு இப்போதான் 22. நான் இன்னும் சின்ன பொண்ணு தான்..” என அவள் கூற அவனுடைய அதரங்களோ லேசாக விரிந்து ஒரு குறும் புன்னகையைச் சிந்தின.
“இட்ஸ் ஓகே சாரி நீ இவ்வளவு கூச்சப்படுவேன்னு நான் எதிர்பார்க்கல என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் யாருமே உன்னை மாதிரி கிடையாது அபர்ணா..”
“ம்ம்..” என்றவள் விலகிச் செல்ல முயற்சிக்க “ஒன் மினிட்..” என அவளிடம் கூறிவிட்டு அந்த தாதி கொண்டு வந்த ஆயின்மென்ட்டை எடுத்து வந்தவன், அவளை இழுத்து படுக்கையில் அமர வைத்துவிட்டு ஆடையை விலக்க அவளுக்கோ மயக்கமே வந்து விடும் போல இருந்தது.
“ஐயோ..! வேணாம்..”
“ப்ச் இப்போ என்னடி..?”
“நானே போடுறேன்..”
“ஓகே..” என்றவன் அதன் பின்னர் அவளை கிஞ்சித்தும் கவனிக்கவில்லை.
சற்று நேரத்தில் அவளுடைய அன்னையும், தந்தையும் அவளை தேடி அந்த வீட்டிற்கு வந்துவிட அனைத்தையும் மறந்து விட்டு புன்னகையோடு கீழே ஓடிச் சென்றாள் அபர்ணா.
தன் அன்னையைக் கண்டதும் மொத்த சந்தோசத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டவள் கன்னத்திலும் அவருக்கு அழுத்தமாக முத்தம் கொடுக்க அதைப் பார்த்த படி மாடிப் படிகளில் இருந்து இறங்கி வந்த குருஷேத்திரனின் முகத்தில் நொடியில் ஒரு மாற்றம் வந்து போனது.
“அப்பா எப்படி இருக்கீங்க அப்பா..?” எனக் கேட்டவாறு அவரையும் அணைத்துக் கொண்டவள் இருவரையும் அழைத்து வந்து சோபாவில் அமர வைக்க,
அவர்கள் இருவரையும் பார்த்து “வாங்க..” எனப் புன்னகைத்தான் குருஷேத்திரன்.
“எப்படி இருக்கீங்க மாப்ள நல்லா இருக்கீங்களா..?” எனக் கேட்டார் ரகுநாத்.
“எஸ்..” என்றவன்
“எக்ஸ்க்யூஸ் மீ..” எனக் கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட பெருமூச்சோடு தன் தாய் தந்தையோடு வார்த்தைகளால் உறவாடத் தொடங்கினாள் அவள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரகுநாத்தோ
“பத்மா வயரிங் வேலை ஒன்னு வந்திருக்கு நான் இப்பவே கிளம்பனும் நீயும் வரியா..?” எனக் கேட்க “சரிங்க..” என எழுந்து கொண்டார் பத்மா.
அதே கணம் ஒரு பார்சலோடு அவர்களை நெருங்கி வந்த குருஷேத்திரனோ அதை அபர்ணாவின் கரத்தில் கொடுத்து விட்டு உனக்குத்தான் என்பது போல பார்க்க,
“எனக்கா..? என்ன இது..?” எனக் கேட்டவாறு அந்தப் பார்சலை திறந்து பார்த்தவள் உள்ளே புத்தம் புதிய ஸ்மார்ட்ஃபோன் இருப்பதைக் கண்டதும் விழி விரித்தாள்.
‘காலையில் தானே என்கிட்ட போன் இல்லன்னு சொன்னேன் அதுக்குள்ளேயே வாங்கிட்டானா..?’ என ஆச்சரியப்பட்டவள் தன்னுடைய தந்தையை நோக்கித் திரும்பி “எடுத்துக்கவாப்பா..?” எனத் தயக்கமாக் கேட்கச் சட்டென சுருங்கிப் போனது குருஷேத்திரனின் முகம்.
“கண்ணம்மா என்ன கேள்வி இது? அவர் உன்னோட புருஷன் அவரே உனக்கு கொடுக்கும் போது யார் என்ன சொல்லுவாங்க தாராளமா எடுத்துக்கோ பாப்பா..” என ரகுநாத் கூற மகிழ்ச்சியோடு தலையை அசைத்து அந்த ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டாள் அபர்ணா.
“சரி மாப்ள எனக்கு வேலை ஒன்னு வந்துடுச்சு.. அவசரமா நான் கிளம்பி ஆகணும்.”
“லஞ்ச் சாப்பிட்டு போங்க..” என்றான் அவன்.
“காபி, ஸ்வீட், பலகாரம்னு இப்போ நிறையவே இங்க சாப்பிட்டுட்டோம்.. இன்னொரு தடவை பாப்பாவ பார்க்க வரும்போது லஞ்ச் சாப்பிடுறோம்.. தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை..” எனக் கூறி அவர்கள் அவனிடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பி விட மீண்டும் அவளுடைய முகத்தில் புன்னகை தொலைந்து போனது.
அவளோ தனக்குப் பிடித்த உணவு எல்லாம் அன்னை செய்து கொண்டு வந்திருப்பதைப் பார்த்தவள் ஆசையாக அதை எடுத்து உண்ணத் தொடங்க சலிப்போடு தலையசைத்துக் கொண்டவன், இன்னொரு பை அருகே இருப்பதைக் கண்டு “இது என்ன..?” எனக் கேட்க,
“இதுவா..? இதெல்லாம் என்னோட ட்ரஸ் தான் அம்மா எடுத்து வந்து கொடுத்தாங்க..” என்றவள் லட்டை கடித்தவாறு கூற அந்தப் பையைத் திறந்து உள்ளே இருந்த ஆடைகளைப் பார்த்தவன்,
“இதெல்லாம் இனி உனக்கு எதுக்கு..? நான் தான் அவ்வளவு புது ட்ரெஸ் வாங்கிக் கொடுத்து இருக்கேனே.. இதெல்லாம் ரொம்ப பழசா இருக்கு தூக்கி டஸ்பின்ல போட்ரு..” என்றவன் அந்தப் பையை காலால் நகர்த்தி விட்டு சோபாவில் அமர்ந்து கொள்ள துடித்துப் போனாள் அவள்.
கையில் இருந்த உணவை அப்படியே வைத்துவிட்டு அந்தப் பையை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டவள்,
“நான் எதுக்குக் குப்பையில போடணும்..? இதெல்லாம் என்னோட அப்பாவும் அம்மாவும் எனக்கு கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்த ட்ரஸ்… பழசா இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்… நீங்க புதுசு வாங்கி கொடுத்துட்டீங்க என்ற ஒரே காரணத்துக்காக இது எல்லாத்தையும் என்னால தூக்கி போட முடியாது…
எனக்கு நீங்க வாங்கி கொடுத்ததை விட இதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு..” எனப் பட்டெனக் கூறியவள் அந்தப் பையை எடுத்துக்கொண்டு படிகளில் வேகமாக ஏறிச் சென்றுவிட,
“டாம்…. எமோஷனல் இடியட்..” என முணுமுணுத்துக் கொண்டான் அவன்.
அவளோ வேகமாக அறைக்குள் நுழைந்தவள் அன்னை கொண்டு வந்த ஆடைகளை எடுத்து ஒவ்வொன்றாக தன்னுடைய வாட்ராப்பில் அடுக்கத் தொடங்கினாள்.
“இந்த அரைக்கிழவனுக்கு பெரிய பணக்காரன்னு திமிர் போல. எங்க அம்மா அப்பா எடுத்து கொடுத்த ட்ரஸ்ஸ குப்பையில போடணும்மாமே..! எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடியே சொல்லி இருப்பான்..” என மனம் வெம்பியவள்,
‘இனி அவன் எடுத்துக் கொடுத்த எந்த ட்ரஸையும் நான் தொடப் போறது கிடையாது..’ என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.
அந்த உறுதியின் வீரியத்தில் வேகமாக ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்து அவன் எடுத்துக் கொடுத்த ஆடையை வேகமாக கழற்றிவிட்டு தன்னுடைய அன்னை கொண்டு வந்து கொடுத்த ஆடையில் பையாமா ஒன்றையும் டி-ஷர்ட் ஒன்றையும் எடுத்து அணிந்து கொண்டாள்.
உயிர் இல்லாத ஒரு சடப் பொருள்தான் ஆடை என்றாலும் கூட அது அன்போடு எடுத்துக் கொடுக்கும் போது மிகச்சிறந்ததாகிவிடும் அல்லவா..!
அப்படித்தான் அன்னை கொண்டு வந்து கொடுத்த ஆடைகளும் அவளுக்கு விலை மதிப்பற்றதாகிப் போனது.
அவன் வாங்கிக் கொடுத்த ஆடைகளை கழற்றி வைத்த பின்பே நிம்மதியாக உணர்ந்து கொண்டள் தன் கையில் இருந்த அலைபேசியையும் வாங்கிக் கொடுத்தது அவன்தான் என்பதை அக்கணம் வசதியாக மறந்து போனாள்.
தன்னுடைய அன்னைக்கு புதிய அலைபேசியில் இருந்து அழைப்பை எடுத்தவள் மறுபக்கம்
“ஹலோ யாரு..?” என அவர் கேட்டதும்
“அம்மா நான்தான் என்னோட புது போன் நம்பர் சேவ் பண்ணி வச்சுக்கோங்க..” என அவர் கூறியதும் “சரிடாமா..” என்றார் பத்மா.
அதே கணம் குருஷேத்திரனின் காலடி ஓசையும் கதவு திறந்த ஓசையும் கேட்க, “சரிமா நான் உங்ககிட்ட அப்புறமாக பேசுறேன்..” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.
உள்ளே நுழைந்தவன் அவளுடைய ஆடைகளைக் கண்டு உடல் இறுகிப் போனான்.
“வாட் இஸ் திஸ் அபர்ணா..?”
“என்ன..?”
“நான் உன்கிட்ட ஆல்ரெடி என்ன சொன்னேன்… இந்த ட்ரஸ் எல்லாம் ரொம்ப பழசா இருக்கு டஸ்ட்பின்ல போடுன்னு சொன்னேன்ல..? இப்படியேதான் ரூம விட்டு வெளியே வரப் போறியா..? இந்த வீட்ல மட்டுமே 30 பேருக்கு மேல வேலை செய்றாங்க… அவங்களுக்கு முன்னாடி இப்படித்தான் திரிய போறியா..?
என்னோட ஒய்ஃப்னா எப்படி இருக்கணும்னு சில ரூல்ஸ் இருக்கு… இப்படி பிச்சைக்காரங்க மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு நிக்கக் கூடாது..” என அவன் திட்டிக் கொண்டே போக அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள்.
“உங்க கூட ஒப்பிடும் போது நாங்க பிச்சைக்காரங்கதான்.. இந்தப் பிச்சைக்காரிய கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்கதான் வந்து கேட்டீங்க… நாங்க ஒன்னும் உங்களத் தேடி வரல..” என இதழ்கள் துடிக்கக் கூறியவள், சோபாவில் சுருண்டு படுத்துக்கொள்ள,
“இதுக்கு முன்னாடி நீ பிச்சைக்காரியா இருந்திருக்கலாம்… ஐ டோன்ட் கேர் பட் இப்போ நீ கோடீஸ்வரி அதுக்கு ஏத்த மாதிரி நீ மாறிதான் ஆகணும்.. இப்போ நீ இந்த ட்ரஸ்ஸ மாத்தலைன்னா நடக்கிறதே வேற..” என அவன் உறும,
“ஐயோ..! எனக்கு கோடிஸ்வரி ஆகவே வேணாம்.. நான் இப்படியே இருந்திடுறேன்… தயவு செஞ்சு என்னை கார்னர் பண்ணாதீங்க..” என்று கத்தினாள் அவள்.
“இடியட் அபர்ணா நான் சொல்றது உனக்குப் புரியுதா இல்லையா..? இந்த வீட்ல வேலைக்காரங்க கூட இப்படி ட்ரஸ் பண்ண மாட்டாங்க.. முதல்ல அதை ரிமூவ் பண்ணிட்டு நான் வாங்கிக் கொடுத்தத போட்டுக்கோ..”
“என்னால முடியாது நான் இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் வெளியே போவேன், ரோட்டுல கூட இப்படியே போவேன்..” என வீம்புக்குக் கூறியவள் வேகமாக அந்த அறையை விட்டு அப்படியே வெளியே செல்ல அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பிடித்து இழுத்து அவளை சுவற்றோடு அழுத்தியவன்,
“கொன்னு புதைச்சிடுவேன்..” எனக் கர்ஜித்தான்.
💜💜💜💜
கமெண்ட்ஸ் வேணும் டியர்ஸ்
எனக்கு அதுதான் பூஸ்ட்..
Post Views: 2,573
அபர்ணா இன்னும் குழந்தை தான் . பணத்தாசை இல்லா , ்அன்பை மட்டுமே குருவிடம் எதிர்பார்கிறாள் . ஆனால் குரு அவளை ஒரு ஜடமாய் நடத்துவது ?? Unacceptable .