அன்பினி புன்னகை முகமாக சிரித்த வகையில் தனது மொபைலில் உரையாடிக் கொண்டிருந்தாள்…
கண்டிப்பா சேர்…இன்னும் தேர்ட்டி டேஸ்ல நீங்க எதிர்பாக்குற டைம்ல எல்லாம் தயாரா இருக்கு…உங்க ஸ்டூடண்ட் மேல நம்பிக்கை இல்லையா…
அவளோடு அழைப்பில் இருந்தவர் அன்பினியின் தலைமை ஆசிரியரான இளங்கோவன் அவர்கள்…நல்ல குணம் கொண்டவர்… தெரியாத எந்த ஒரு செய்தியையும் யார் சொல்லி கொடுத்தாலும் ஏற்று கொள்ளும் பக்குவம் உடைய முதியவர்..
தன்னுடைய மகனின் வருங்கால வீட்டினை முழுவதும் மண்டேலா ஆர்ட்டில் நிரப்ப முடிவு செய்தவருக்கு கிடைத்த பதில் தான் தனது ஸ்டூடண்ட் வேல்ட் ஃபேமஸ் மண்டேலா ஆர்டிஸ்ட் என்பது…
எண்ணற்ற பெரிய இடங்களில் தனது கைவசத்தை காட்டி தனது தொழிலை மேம்படுத்தி உள்ளாள்…அவற்றை மேலும் இந்தியாவில் செழுமை படுத்ததான் இந்த முப்பது நாள் பயணம்…
அவருடைய வீட்டிற்கும் அவள் தங்கி உள்ள இடத்திற்கும் கிட்டதட்ட நூறு கிலோமீட்டர் தொலைவு இருக்கும்…இருந்தும் அவள் அந்த ரெஷார்ட்டை தேர்ந்தெடுத்ததன் காரணம் அந்த ஃபைவ் ஸ்டார் ரேட் மட்டுமே!…
எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை….மனம் பிடித்து போன படி எந்த வித ஊறுதவும் இல்லாமல் இடம் அமைய அவள் ஆன்லைனில் அலசி ஆராய்ந்த போது அவளுக்கு கிடைத்த பதில் இதோ அவள் நின்று உள்ள அந்த ரெஷார்ட்…
ஹாய் மேம்…ஹாய் சேர்…வெல்கம் டூ திஸ் ரெஷார்ட் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஒரு ஆண்மகன் குடிபோதையில் அங்கு வந்து இருந்தான்…
ஹெய் காசு கொண்டு வாங்க….
சரிங்க சார் என்று அவனை மரியாதை நிமித்தமாக அங்கு நடத்தியதை நின்று கவனித்து கொண்டு தான் இருந்தாள் அன்பினி…
அவனிடம் காசு கொடுத்து அனுப்பி விட்ட பெண் ஒருத்தி அவனை வசைப்பாட தொடங்கினாள்…
குடிகார கழுதை…எங்க முதலாளியோட மகன் தான் மேடம் இவன்…எங்க முதலாளி சொக்க தங்கம்…அவருக்கு போயி இப்படி ஒரு குடிகார மகன்…நினச்சாவே எனக்கே கோவமா வருது…எங்க முதலாளிலாம் ரொம்ப நொந்து போயிட்டாரு இவனால…
அன்பினியின் லக்கேஜை நகர்த்தி கொண்டு அவளது அறைக்கு அழைத்து செல்வதற்குள் இவற்றை அவளிடம் பேசிக்கொண்டு இருந்த பெண்ணிடம்
இங்க பாரு நீ என்ன வேலைக்கு வந்து இருக்கையோ அது மட்டும் பண்ணு…தேவை இல்லாமல் முதலாளி வீட்டு விஷயம் வரைக்கும் போன நடக்குறதே வேற…ஏன்னா நானும் ஒரு முதலாளி தான்…மூஞ்சுக்கு முன்னாடி ஒன்னு முதுகுக்கு பின்னாடி ஒன்னுன்னு பேசுறவங்கள எனக்கு சுத்தமா பிடிக்காது….இப்ப நீயும் அந்த வேலைய தான் பண்ற…காசு தர முடியாதுன்னு அவன் கிட்ட சொல்லி இருந்தா அவன் போயிருப்பான்…அவனுக்கு காசும் கொடுத்து அவனையே திட்டுறையே இதுக்கு பேரு என்னம்மா?…
அனல் தெறிக்க பேசியவளின் முன் ஊமையாக நின்றவளின் மூளையில் இப்படியும் ஒரு முதலாளியா என்ற சிந்தனை…இது தெரிந்தால் கூட இதற்கும் சத்தம் விழும் என்று கப்சிப்பென அமைதியாகி விட்டாள்..
ஒரு பத்து நிமிஷம் தனியா விட்டா போதும் எல்லாருக்கும் கிலாஸ் எடுக்க ஆரம்மிச்சுடுவையே அன்பினி…வந்த வேலை நமக்கு நிறைய இருக்கு அதை பாரு…நீ ஓடுமா என்றதும் அவள் தப்பித்தாள்..
என்ன டாடி… அந்த பொண்ணு டபுள் கேம் ஷோ பண்றா…அவளுக்குலாம் இந்த அளவு திட்டுனத விட வேலைய விட்டு அனுப்பிடனும்…
க்கும் அதான் உன் ஆபிஸ்ல ஒருத்தர் கூட வாய் திறக்குறது இல்லைல…இப்படி பட்ட விஷயம் உன்னோட ஆபிஸ்ல நடந்தா கவனிச்சிக்க…இங்க நம்ம பேயிங் கெஸ்ட் தான்…புரிஞ்சிட்டு நடந்துக்கம்மா…
தந்தையாய் தனது அறிவுரையை அள்ளி தெளித்தவர் மகளின் வேலை பளுவை குறைக்க உதவலாம் என்று ஒரு வெள்ளை பேப்பரில் இளங்கோவன் கூட்டு குடும்பத்தின் படங்களை வரைந்து அச்சடிக்க தயாரானார்…
அவளும் குளித்து முடித்து விட்டு வந்து பார்க்கையில் தந்தையின் உதவி அவளை மெய்சிலிர்க்க வைத்தது…
ரொம்ப தேங்க்ஸ் டாடி…கலரிங் தான் கொஞ்சம் அலர்ஜி…அத நீங்க பக்காவா செஞ்சிட்டிங்க…இது அவருக்கு ஓக்கேன்னா வேலை இன்னும் கொஞ்சம் ஈசி டாடி…



வரைபங்களுக்கு தகுந்த வர்ணக்கலவையை கொடுத்து அசத்திய தந்தையை பாராட்டினாள்…அவளின் தாகம் படிப்போடு சேர்ந்து மண்டேலா ஆர்ட்டை தொடர இதை விட்டு விட கூடாது என்று முடிவு எடுத்தவளுக்கு இப்போது அவையே செய்தொழில் ஆனது மிக சிறப்பு…பிடித்த ஒன்றை செய்வது என்பது நூற்றில் சிலருக்கு வாய்த்த அதிர்ஷ்டம்…அத்துனை நபர்களில் அவளும் ஒருத்தி…
தத்ரூபமாக இந்த வரைபங்களுக்கு இடையே மனித பிம்பங்களை கொண்டு வருவதற்காக அவள் கற்று கொண்ட ஒரு வருட தொடர் வகுப்பின் பிரதிபலனாக அவள் மண்டேலா ஆர்ட்டில் சிறந்த கலைஞர் என்ற பட்டத்தை பெற்றதற்கு காரணம்…
தந்தையும் மகளுமாக தயாரானார்கள் வந்து சேர்ந்த கலைப்போடு உணவு உண்ணும் பகுதியை நோக்கி நகர்ந்தார்கள்…வேண்டுமெனில் அறை நோக்கி உணவு கொண்டு வரும் கைவசமும் அங்கு உண்டு…
அன்பினிக்கு இயற்கை வசத்தோடு அமர்ந்து உண்ணும் பழக்கம் அவளுக்கு மன திருப்தியை கொடுப்பதாக தந்தையிடம் அடிக்கடி சொல்லி இருப்பதால் அவர்கள் உணவகத்தை நோக்கி சென்றார்கள்…
அரசி மற்றும் ஶ்ரீ ரெஷார்ட் என்று எழுதப்பட்டிருந்த அந்த பொண்ணெழுத்தில் ஶ்ரீ என்ற எழுத்து சற்று அழிந்தவை போல இருந்தது…நம்ம போகும் போது இந்த ஓனர் கிட்ட சொல்லி இத மாத்த சொல்லனும்பா…
ம்ம்ம் எல்லாம் சொல்லலாம்…என்ன சாப்பிறடா சொல்லு நான் ஆர்டர் சொல்லிட்டு வந்துறன்….
வேற என்னப்பா…சென்னா மசாலா வித் டூ சப்பாத்தி அண்ட் தேங்காய் சட்னி ப்ளஸ் தயிர்…அவ்வளவு தான் என்று முடித்தாள்…
அமைதியாக கேட்டு கொண்டு நகர்ந்தவருக்கு உள்ளம் பதை பதைத்து கொண்டு இருந்தது… மீண்டும் அந்த சம்பவம் நடந்து விடக்கூடாது என்று!…
ஓக்கே வெய்ட் யு வர் பிளேஸ் சார்…நாங்க அங்கையே கொண்டு வந்து சர்வ் பண்ணுவோம் என்று சொன்ன ஒருத்தர் தலைகுணிந்து வணக்கம் செலுத்தினார்…அனைத்து கட்டமைப்பும் பிரமிக்க வைத்திருந்தது அங்கு…
ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து விட்டு மகளோடு சென்று அமர்ந்தவருக்கு இன்பரசனின் இன்முகம் வந்து சென்றது…ஒரு நிமிடம் அவரை பற்றி யோசித்தவன் தனது தலையை தட்டி என்ன வேலை செய்யுற மூளையே…தப்பா எதையும் யோசிக்காமல் வேல முடிஞ்ச அடுத்த நொடி ஓடிடனும்னு இருக்கும் போது எதுக்கு இந்த வேண்டாத நினைப்பு எல்லாம் என்று கடிந்து கொண்டார் பாஸ்கரன்…
இந்த ஊரில் வேறு நல்ல ரெஷார்ட் இல்லை எனும் அளவுக்கு உயர்ந்திருந்த நண்பனை நினைக்கையில் பெருமையாக இருந்தாலும் மீண்டும் அந்த அனர்த்தம் எங்கள் வாழ்வில் புயல் வீசி செல்ல நான் வாய்ப்பளிக்க விரும்பவில்லை என்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டார்…
இருவரும் அமர்ந்திருந்த இடம் பக்கதில் செயற்கை நீரூற்றின் வழியாக தண்ணீர் வழிந்து வந்து மற்ற பகுதிகளுக்கு சலசலவென ஓடிக்கொண்டு இருந்தது…

தனது மகளிடமும் அவற்றை காட்டி பேசி கொண்டிருந்தவரின் முகமெல்லாம் பிரகாசம்…
ஆமா டாடி…இந்த ரெஷார்ட் முதலாளி ரொம்ப கலைநயம் மிக்கவரா இருக்காரு…போறதுக்குள்ள ஒரு டைம் ஆவது அவர நம்ம பாத்துட்டு போகனும்…
ஆமாம் டா…ட்ரை பண்ணுவோம்….அவ்வளவு தான் அதற்கு மேல் அவளிடம் பேசாமல் சிறிது நேரம் அமைதி காத்தார் மௌனத்துடன்…
உங்க பின்னாடி இருக்க புத்தா சிலையில இருந்து தண்ணீ வர மாதிரி ஒரு வாட்டர் பால்ஸ் வச்சிருக்காங்க டாடி…அத பாக்கும் போதுலாம் ரொம்ப நிம்மதியா இருக்கு…எனக்கு இந்த ப்ளேஸ் ரொம்ப பிடிச்சிருக்கு டாடி…என்று தன் மன எண்ணங்கள் அனைத்தையும் அவளது தந்தையோடு பகிர்ந்து கொண்டவள் ஜன்னா மசாலாவோடு சப்பாத்தியை தொட்டு வாயில் போட்டுக் கொண்டு ஒரு துளி அளவு தயிரை தொட்டு ரசித்து ருசி பார்த்து கொண்டாள்….

ம்ம்ம்…ஆமாடா…நல்லா சாப்பிடு…அப்புறமா நம்ம இங்க இருக்குறத சுத்தி பார்க்கலாம் என்ற தந்தை சொல் தட்டாதவளாக உணவருந்தி விட்டு பில் பே செய்துவள் இங்க இன்டீரியர் ரியல்லி குட் கைய்ஸ்…இட்ஸ் ஃபீல் இன் லைவ் ஹெவன் …
என சொல்லி கை குழுக்கி பாராட்டினாள்…அண்ட் ஒன் மோர் ஹெல்ப்…இங்க இருக்க ப்ளேஸ்லாம் கொஞ்சம் சுத்தி காட்ட முடியுமா?..
தேங்க் யூ ஃபார் யூவர் வேல்யபுல் ஃபீட்பேக் மேம்….சுயோர் மேம்…பீளீஸ் வெய்ட் ஆ மினிட்ஸ் மேம்…நாங்க ஆல் அரேன்ஜ் பண்ணிட்டு வருகிறோம் என்று அவளிடம் பணிவாக சொல்லிய பணியாளர்கள் மீதும் அவளுக்கு நல்லெண்ணம் பிறந்தது…
பின்ன இன்டர்நெட்ல ஃபைவ் ஸ்டார் வாங்குன ரெஷார்ட்னா சும்மாவா…
சொல்லிய மூளைக்கு சரியென்ற ஆமோதிப்போடு நகர்ந்தவள் ஒரு மினி குளத்தருகில் நின்றிருந்தாள்…

தாமரையோடு உறவாடிய தண்ணீரில் தனது பிம்பத்தை பார்த்து தனது சிகையை அலங்கரித்து கொண்டாள்…
அதே நேரம் மேம் இன்னைக்கு ரொம்ப பிசி செடியூல் எங்களுக்கு…உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லைனா எங்க ஓனர் உங்களுக்கு சுத்தி காட்டுறாராம்…அதுவும் உங்க பர்மிசனோடு தான் என்று தாழ்மையாக பேசி அவளை மனமுருக செய்த பெண்ணிடம் இட்ஸ் ஓக்கே மேம்…உங்க முதலாளி அவ்ளோ ஃப்ரீயா…
நோ மேம்.. அவருக்கு இயற்கைய ரசிக்கிறவங்கள ரொம்ப பிடிக்கும்…இங்க அதிகமா இந்த டைம்ல அவர்தான் இருப்பாரு…சோ அந்த டைம்ல தான் நீங்க கேட்டு இருக்கிங்க…அதான் அவரே சுத்தி காட்டுறேன்னு சொல்லிருக்காரு…
சொல்லி முடித்த பணிப்பெண் அவரிடம் சொல்லிவிட்டு வருவதாக தகவல் சொல்லிவிட்டு அகன்றாள்…
மினி குளத்தை தாண்டிய இருந்த ஒரு சிறு கூறை போன்ற பகுதியில் நால்வர் அமர்ந்து பேசும் அளவு நயமாக அமைக்கப்பட்டிருந்த குடிலை நோக்கி நகர்ந்தவள் மினி குளத்தில் போடப்பட்ட குறு பாள அமைப்பில் ஏறினாள்…
பாளத்தில் ஏறிய போது நீருற்று ஊற்றுவது போன்றும் அமைக்கப்பட்டிருக்க அங்கு வண்ணத்துப்பூச்சிகள் விளையாடி கொள்ள அவளது கண்களில் குழந்தை தனம் மின்னியது…
பாஸ்கரனும் தனது மகளின் இந்த தருணத்தை கெடுத்து விடாமல் மௌனம் காத்திருந்தார்….
டாடி வாங்க….இது ஜம்பிங் பில்லோ மாதிரி இருக்கு…மேல ஏறி இறங்கி குதிக்கும்போது செம்ம ஜாலியா இருக்கு டாடி….
ஐந்து வருடத்திற்கு பின் அவளது குழந்தை தன்மை வெளிவருவதை கண்டு நின்றிருந்தார் பாஸ்கரன்…மனதில் இது தான் சொந்த ஊரின் மகிமை போல என சிந்நித்தாலும் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவனை கண் சொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார்…
இரு ஆண்களும் நேருக்கு நேர் சந்தித்த அந்த தருணம் இறைவன் போட்ட கணக்கு கட்டியணைத்து ஆற தழுவி கொள்வார்கள் என்று…ஆனால் அங்கு அதற்கு மாறாக நடந்து கொண்டிருந்தது…
பாஸ் என்று வந்தவனை ஷ்ஷ் என்று அமைதிபடித்திய பாஸ்கரன் புத்தர் நீருற்று அருகே இன்பரசனை அழைத்து சென்று பேச தொடங்கினான்…
நாங்க இங்க ஒரு வேலையா வந்திருக்கம்…பழசு எதையும் நீ அவகிட்ட காட்டிக்காமல் ஒரு முதலாளியா மட்டும் நடந்துகிட்டா போதும்…இது என்னோட வேண்டுகோள் என்று கையெடுத்து கும்பிட்ட பாஸ்கரனை விசித்திரமாக பார்த்தார் இன்பரசன்…
நீண்ட மூச்சு ஒன்றை இழுத்து விட்டவர் சரிங்க சார் வாங்க உங்களுக்கு ப்ளேஸ்லாம் சுத்தி காட்டுறேன் என்று தனது தொழில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்…
இது ஒரு செயற்கையான குளம்… இந்த பாளத்து மேல ஏறினால் தண்ணீர் அந்த ஹோல் வழியா வெளிய வரும்…அத்தோடு பட்டர்பிளைஸும் பறக்க ஆரம்பிக்கும்….இந்த பாளமே ஒரு ரப்பர் ஸ்டேம்பிங்கால ஆனது மேம்…
தங்களின் பகுதியை பற்றி பெருமையாக பேசியவரிடம்,…
சூப்பர் சார்…இந்த அளவு அழகா யூகிச்சு பண்ணிருக்கிங்க…கிட்ஸ்லாம் இங்க வந்தா போகவே மனசு வராது…ஏன் எனக்கே இங்க இருந்து நகர தோணவில்லை என்று சொல்லி அந்த ரப்பர் ஸ்டாம்ப் பாளத்தில் விளையாடி கொண்டிருந்தாள்…
இவை அனைத்தும் உன்னுடைய கற்பனை வரைபடத்தின் மூலம் உருவானது என்று எப்படி சொல்வேன் அன்பு தங்கம் என்று எண்ணியவறுக்கு கண்கள் பனிக்க கண்ணின் ஓரமாக அவற்றை சேமித்து கொண்டார்…
நால்வர் அமரும் அந்த கூரையில் நுழைந்ததும் ஒரு புற சுவரில் ஒரு வரைபடம் வரைந்து இருப்பதை கண்டு திகைத்து நின்றாள்..
ஹலோ சார் இது டிரா பண்ணவங்க யாருன்னு தெரியுமா…
இத டிரா பண்ணது என்னோட சொந்தக்கார பொண்ணு தான் மா… பட் அன்பார்ச்சனேட்லி இப்ப அந்த பொண்ணு இங்க இல்ல….
ஓஓஓ..இட்ஸ் ஓகே சார்… பட் பியூட்டிஃபுல் ஸ்கில்….
என்னமா இது பியூட்டிஃபுல் ஸ்கில்லு… எனக்கு ஒண்ணுமே புரியாது …இதுல என்னடா இருக்குன்னு அவகிட்ட கேட்டாலும் என்கிட்ட சொல்லவே மாட்டா….
அந்த சுவற்றில் ஒரு பெண்ணின் முகம் வரையப்பட்டு அந்த முகத்தில் பற்பல வர்ணங்கள் தீட்டப்பட்டு அவற்றின் சிறு சிறு உருவங்கள் வரையப்பட்டிருந்தன…
சொல்ல வேண்டுமானால் அன்பினியின் முகத்தை வரைந்து அதற்குள் அன்பினியும் ஆதிரனும் வாழ நினைத்த வாழ்க்கையை அவள் வரைந்து வைத்திருந்தாள்…
அவனோடு பிறந்த சமயத்தில் குழந்தைகளாக படுத்திருந்தது, வளர்ந்த பின் பள்ளிக்குச் சென்றது, பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற போது ஆட்டம் பாட்டம் என ஜாலியாக இருந்தது, அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இவ்விருவரும் திருமணம் செய்து கொள்வது போலவும் திருமணத்திற்கு பின் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டது போலவும் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைத்தது போலவும் பற்பல படங்கள் இருந்தன…
சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் அந்த பிம்பங்கள் யாவரும் அறிய மாட்டார்கள்… மண்டேலா ஆர்ட் வரைந்து அதில் நுட்பமான அன்பினிக்கு இவற்றை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு துயரம் இல்லை…
சார் மேபி அந்தப் பொண்ணு உங்களுக்கு ரொம்ப சொந்தமா….
ஆமாம்மா…. வேறு எதுவும் அவர் சொல்லிக் கொள்ளவில்லை…
அந்த பொண்ணு யாரோ ஒரு பையனோட வாழ்க்கை முழுக்க வாழனும் என்ற ஆசைய இந்த ட்ரால வரைந்து இருக்காங்க…. ரொம்ப நுட்பமா மை நுட்டா வரைஞ்சு இருக்காங்க… உங்களுக்கு வெளிப்புற கண்ணுக்கு அது ஒரு பொண்ணோட முகம் மாதிரி தெரியும்…. நீங்க அதை டீப்லி உத்து பார்த்தீங்கன்னா அவங்க பிறந்தது வளர்ந்தது கல்யாணம் குழந்தை குட்டின்னு வாழ்ந்து இருக்கா… அந்த பொண்ணு எங்க இருக்காங்க… நான் அவங்கள மீட் பண்ண முடியுமா சார்…
சாரி மேம் அந்த பொண்ணு எங்க இருக்காங்கன்னு இப்ப வரைக்கும் எங்களுக்கு தெரியாது… ஸ்டடிஸ்காக வெளியூருக்கு போறேன்னு சொல்லிட்டு போன பொண்ணு இன்னும் எங்களை வந்து கூட பார்க்க முடியல… எங்க போறன்னும் என்கிட்ட சொல்லிட்டும் போகல….
சாரி சார் உங்களுடைய பர்சனல் குள்ள இன்ட்ராக்ட் பண்ணதுக்கு…
இருந்துட்டு போகுது மேம் நீங்க இவ்ளோ பேசுனதுனால தானே எனக்கு இந்த படத்தோட முழு விவரமும் புரிஞ்சுது….
ஏய் இன்பரசா வெளியே வா… உன் பையன் பண்ணி இருக்க வேலைய வந்து பாரு…. என்னோட காரை ஃபுல்லா டேமேஜ் பண்ணி இருக்கான்… ஒழுங்கு மரியாதையா அதுக்கான மொத்த பணத்தையும் குடுக்குற வழிய பாருங்க…
ரெசார்டின் முன் வாசலில் நின்று ஒருவர் கத்திக் கொண்டிருந்தார்….. அச்சத்தம் பணியாட்கள் யாவரும் தடுத்தும் இம்பரசனை வந்து சேர்ந்தது தான் மிச்சம்…
சார் கொஞ்சம் பொறுமையா இருங்க….இன்பா சார் கொஞ்சம் இம்பார்ட்டண்டான வேலைல இருக்காங்க… கண்டிப்பா உங்களுக்காக காம்ப்ளிமென்ட் நாங்க பணித்தருவோம்…
ஏய் நீ என்னம்மா இங்க வந்து வாய் பேசிட்டு இருக்க… நீயே கூளிக்கு வேலை செய்றவ…நான் இன்பரசன பார்த்து தான் பேசணும்… வெளிய வர சொல்லு அவன…
ரெசார்டின் பணியாட்களுக்கும் சரி உரிமையாளர்களுக்கும் சரி எந்தவித மரியாதையும் கொடுக்காமல் கரடு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் குணம் கொண்ட அவன் ஆதிரனின் சட்டைக் காலரை பிடித்து இழுத்து வைத்திருந்தான்….
இருடா இரு உங்க அப்பா வரட்டும்…பேசிக்கிறேன் என்று அவனை மேலும் இறுக்கினான்…
என்னாச்சு என்பது போல வெளியே வந்த இன்பரசன் மற்றும் பாஸ்கரன் மற்றும் அன்பினியை கண்டு ஆதிரனின் காலரை விட்டான் அந்த கரடு முரடானவன்….
வேறு யாரும் இல்லை அவன் தீபாவின் மங்கல கயிருக்கு சொந்தமான கணவன் என்ற பட்டத்தில் உள்ள பசுபதி… இதில் மகள் வேறு ஆங்காலஜி மருத்துவர் என்று பீத்தி திறிபவன்.. யாரிடமாவது வம்பழந்து காசு பறிப்பதில் வல்லவன்…இப்போது சும்மா இருப்பானா…
இருந்தும் அவன் அங்கு அன்பினியை அதுவும் பாஸ்கரன் மற்றும் இன்பரசனோடு எதிர்பார்க்கவில்லை…
பசுபதி போலவே அதிர்ச்சி கொண்ட இன்னொரு உயிரும் அங்கு உள்ளது…
எந்தவித கலவரமும் நடந்து விடக்கூடாது என்று தவித்துக் கொண்டிருந்த பாஸ்கரனுக்கு இப்போது மனம் துடிதுடித்து போனது… அவருடைய மகள் இந்த மாதம் கோயம்புத்தூரில் பணி என்றதும் சற்று துடித்தவர் அதிலும் அன்பு மற்றும் ஸ்ரீ ரெஷார்ட்டில் ரூம் புக் செய்துள்ளேன் என்றதும் தான் தானும் வருகிறேன் என்று சம்மதித்தார்…
எதுவெல்லாம் நடக்கக்கூடாது என்று எண்ணி இருந்தாரோ அதுவெல்லாம் இப்போது கண்கூடாக அருமையாக நடந்து கொண்டுள்ளது…அவற்றை நிருத்தவும் இயலாமல் நின்றிருந்தார்….
யார் யார் கண்களில் எல்லாம் படக்கூடாது என்று எண்ணி இருந்தாரோ அவர்கள் அனைவர் கண்ணிலும் அவரும் அவளது மகளும் பட்டு விட்டார்கள்…
இதுவரை பட்டுப்போல ஜொலித்துக் கொண்டிருந்தவளின் மனதில் பாய போகும் அம்புகளை ஒரு தந்தையாக நின்று தடுப்பாரா?..
அன்பினி..
அன்…அன்பு…அன்பினி… நீயா….
பசுபதியும் ஆதிரனும் ஒருவரை ஒருவர் அறியாது அந்த பெயரை உச்சரித்தார்கள்….
சார் இந்த ஆள் காலையிலையே வந்து உங்க வெர்க்கஸ் கிட்ட ரொம்ப பிராப்ளம் பண்ணிட்டு இருந்தான்…. இவ்ளோ பெர்பெக்டா நீங்க ரெஷார்ட் நடத்துறீங்களே உங்க வாட்ச்மேன் கிட்ட சொல்லி இவங்கள உள்ள அலோ பண்ணாதீங்கன்னு சொல்லி இருந்தா அதை அவர் செஞ்சிருப்பாரு இல்ல…
இன்டர்நெட்ல சர்ச் பண்ணாலே உங்க ரெசார்ட் ஓட பேர் வித் பாய்ண்ட்சோட வரும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு… இங்க வந்தும் கூட ஃபீல் குட்டா நான் உணர்ந்தேன்… காலைல இந்த ஆளால நடந்த ஒரு சம்பவத்தை தவிர…..
இந்த ஆள் இந்த ஆள் என்று சொல்பவனுக்கு உரித்தானவன் ஆதிரன் தான்… நான் உங்க பணியாட்கள் கிட்ட விசாரிச்ச வரைக்கும் அவங்க இவன் உங்க மகன்னு கேள்விப்பட்டேன்… தொழில் வகையில் நீங்க எந்த அளவுக்கு பர்ஃபெக்ட்டா இருக்கீங்களோ அந்த அளவுக்கு குடும்ப லெவல்ல அன் பர்ஃபெக்ட்னு எனக்கு தோணுது சார்… என்னோட ஒப்பினியன் சார் நீங்க அவங்க ரெண்டு பேரையும் என்ன பண்றீங்களோ பண்ணுங்க என்று சொல்லி விட்டு அவளது அறையை நோக்கி நகர்ந்தாள்….
பசுபதியால் அங்கே மாபெரும் அனர்த்தம் நிகழும் என்று எண்ணினால் அவனும் அமைதிப்படையாகி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்….
அனர்த்தத்திற்கு காரணமானவன் மனதிற்குள் அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒளித்துக் கொண்டன…. அந்த ஆள் அந்த ஆள் என்று அவள் சொல்கிறாளே தன்னை பற்றி எந்த நினைவும் அவளுக்கு நினைவு இல்லையா….
அவளிடம் நெருங்க முயன்ற ஆதிரனை பாஸ்கரன் நிறுத்தி வழி மறித்தார்…
ஆதி நில்லுங்க….
பாஸ்கரன் பா… எப்படி இருக்கீங்க?… நல்லா இருக்கீங்களா?.. எங்க இருக்கீங்க ?…எப்ப வந்தீங்க?.. ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட இன்ஃபார்ம் பண்ணல?… நீங்க எந்த இடத்துக்கு போறீங்கன்னு கூடவா எங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு போக மாட்டீங்க?.. வந்ததே வந்தீங்க நம்ம வீடு அவ்வளவு பெருசா இருக்கும் போது நீங்க ரெஷார்ட்ல தங்கி இருக்கீங்களா?….
இத்தனை நாள் தேடல், ஆதங்கம் என்று அனைத்தும் பாஸ்கரனை கண்டதும் கேள்விகளாக அவரிடம் மாறி உருவெடுத்து இருந்தன…
இல்ல தம்பி நாங்க எங்இ ஆபீஸ் ஒர்க்கா வந்தோம்… உங்க வீட்டுல தங்கி வேலை செஞ்சு உங்களையும் எங்களால சஞ்சல படுத்த முடியாதுல்ல…அதுவும் இல்லாமல் இங்க பெயிட் கெஸ்ட் தான்..அங்க வந்தா ஓசில என இழுக்கவும்,
பாஸ்கர் அப்பா என்ன பேசுறீங்க நீங்க?..
உண்மைதான் தம்பி நான் பேசுறேன்… இங்க நாங்க இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்க போறோம்… உன்கிட்ட நான் ஒன்னே ஒன்னு கெஞ்சி கேட்கிறேன்… உன்னால என் மவ இந்த அஞ்சு வருஷமா நொந்து நூடுல்ஸ் ஆகிட்டா… இப்பதான் ஏதோ அவளோட ப்ரொபஷனல்ல கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இருக்கா… தயவு செஞ்சு உங்க முகத்தை காட்டி அவளை தொந்தரவு பண்ணிடாதீங்க….
பாஸ்கரன் பா என்ன பேசுறீங்க… அன்பு என்ன லவ் பண்றா அதுவும் என்ன சின்ன வயசுல இருந்து அவ லவ் பண்றாப்பா…
நீங்க எல்லாம் வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் எங்க அம்மா என்ன புடிச்சு பயங்கரமா ஏசிட்டாங்க…. அப்ப தான் அவளோட லவ் எனக்கு தெரிய வந்துச்சு…. அதுவும் அவளோட ரூம்ல அவ எனக்காக வரஞ்சி வச்சு இந்த ஒவ்வொரு மண்டேலா ஆர்ட்டும் அவ என் மேல எந்த அளவு பாசம் வச்சு இருக்கா என்பதை வெளிக்காட்டுச்சு…
அவ்ளோ லவ் வச்சிருக்கவ இப்ப என்னை யாரோ ஒருத்தன் மாதிரி ட்ரீட் பண்ணிட்டு போறா…. அதை என்னால ஏத்துக்க முடியல பாஸ்கரன் பா…. தயவு செஞ்சு அவளை என்ன பார்க்க விடுங்கள்…
சொன்னா கேளு ஆதி தம்பி….
சரிடா அப்ப என்னோட மகன் பார்க்க வேண்டாம்… நான் போய் பாக்கலாம் இல்ல….
இது இன்பரசனின் அதட்டல் பேச்சு…
அவ உயிருக்கு உயிரா நினச்ச ஆதியவே நான் பார்க்க அனுமதிக்கவில்லை…. நீ எல்லாம் எம்மாத்திரம் டா….
பாஸ்கரன்ப்பா…. என்ன என்னோட அப்பாவையே இப்படி பேசுறீங்க….. ஆதங்கமாய் பாஸ்கரனிடம் சண்டைக்கு நிற்க முற்பட்டான் ஆதிரன்…
என்ன உங்க அப்பாவை எதிர்த்து பேசுனதும் அவ்வளவு கோவம் வருதா.. அவ்ளோ கோவத்த வச்சுக்கிட்டு என்னோட மகள நீ பாக்கணுமா?…
அவளைப் பார்த்தாலே உன்னோட நிம்மதி பறி போதுன்னு சொல்லி தானே அவளை அனுப்பின…. அதுக்கு அப்புறமும் எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு உன்னை பார்ப்பா.. இனிமே அவ உன்ன பார்த்தாலும் அவளுக்கு எதுவும் நியாபகம் இருக்காது…
பாஸ்கரன் சொல்லி முடித்ததும் இன்பரசனும் ஆதிரனும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் விழித்து நின்றார்கள்…
செந்தனலா?…மழையா?…
கௌசல்யா வேல்முருகன் 💝.