“நாளைக்கு வர்றேன்..” என அவள் கூறியதும் தன்னிடமிருந்த பபிள்கம்மை எடுத்து மெல்லத் தொடங்கியவனுக்கு உதடுகளில் இகழ்ச்சி நகை தவழ்ந்தது.
“ஆனா எனக்கும் சில கண்டிஷன்ஸ் இருக்கு..” என்றாள் அவள்.
சட்டென பிரேக் அடித்து காரை நிறுத்தியவனுக்கு இவள் அடங்க மாட்டாளா என்ற எண்ணமே உள்ளே எழுந்தது.
“இந்த 60 லட்சம் பணம் எனக்கு வேணாம்.. நான் உங்க வீட்டுக்கு வந்ததும் நீங்க சக்கரவர்த்தி சாரோட படத்துல நடிக்கணும்.. அதே படத்துல நான் ஹீரோயினா நடிக்கணும்..” என அவள் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து சில திட்டங்களுடன் அவளுடைய கோரிக்கைகளை முன்வைக்க சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க வேண்டும் என அவள் கூறியதும் முடியவே முடியாது என மறுக்க எண்ணியவன் அதில் அவளும் கதாநாயகியாக நடிக்கக் கேட்டதும் மறுக்காது ஒரு கணம் சிந்தித்தான்.
“இன்ட்ரஸ்டிங்..” என முணுமுணுத்தன அவனுடைய உதடுகள்.
இதுவரை யாரும் அவனுக்கு இப்படி எல்லாம் கட்டுப்பாடுகள் கட்டளைகள் விதித்ததே கிடையாது.
எப்போதுமே அவன் மறுத்த படங்களில் ஒரு போதும் மீண்டும் நடிப்பதே இல்லை.
சில நொடிகள் தயங்கியவன் பின் சரிதான் என்ற முடிவோடு “ஓகே..” என ஒற்றை வார்த்தையில் அவள் கூறியதற்கு சம்மதித்திருந்தான்.
“உங்க வீட்ல நான் எத்தனை நாளைக்கு இருக்கணும்..?” நடுக்கத்துடன் வெளிவந்தன அவளுடைய வார்த்தைகள்.
“எனக்கு எப்போ சலிக்குதோ அதுவரைக்கும் நீ இருந்ததாகணும்.. நான் உன்ன போக சொல்லும் வரைக்கும் நீ என் வீட்லதான் இருக்கணு..” என அவன் கூற அவளுக்கோ முதுகுத்தண்டு சில்லிட்டது.
மரணத்துடன் போராடுவதை விட இவனுடன் போராடிப் பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தவள் அந்தப் பெட்டியிலிருந்து மோகனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
அவனுடைய வீட்டில் இருந்தாலும் அவளுடைய குடும்பத்திற்கு அவள் தானே செலவுக்கு பணம் கொடுத்தாக வேண்டும்.
அதனால்தான் தன்னுடைய வேலையை நடிகையாக அங்கேயே உறுதிப்படுத்தியவள் விழிகளை மூடிக் காரின் இருக்கையில் சாய்ந்து விட்டாள்.
அனைத்து பிரச்சனைக்கும் தன்னை பணயம் வைத்தால்தான் முடிவு கிடைக்கும் போல.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கார் நின்றுவிட அப்போதுதான் தன்னுடைய தலையை நிமிர்த்திப் பார்த்தாள் அவள்.
அவளுடைய வீட்டின் முன்புதான் கார் நின்றிருந்தது.
“நாளைக்கு காலைல ஷார்ப்பா எட்டு மணிக்கு நீ என் வீட்ல இருக்கணும்.. உன்ன பிக்கப் ட்ராப் பண்றதுக்கு எல்லாம் எனக்கு டைம் கிடையாது.. நீயே எப்படியாவது வந்து சேந்திடு..” என்றான் அவன்.
விநாயக் வாயைத் திறந்து வார்த்தைகளை உதிர்த்தாலே இவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
அப்படியே பாய்ந்து அவனுடைய மூக்கில் எண்ணற்ற குத்துகளை பரிசாக வழங்க வேண்டும் என்ற ஆசையை அடக்கியவள் காரிலிருந்து இறங்கிய கணம் வீட்டுக்குள் இருந்து கௌதமனும் மேகலாவும் வட்டிப் பணத்தோடு வெளியே வந்தனர்.
“ஆன்ட்டி செந்தூரி வந்துட்டா..” என மகிழ்ச்சியாக அவளைப் பார்த்து கத்தினான் கௌதமன்.
மேகலாவோ ஓடிவந்து தன் மகளை அணைத்துக்கொள்ள இத்தனை பாசத்துடன் தன்னை அணைத்துக் கொள்வது அன்னைதானா என வியந்து பார்த்தாள் அவள்.
“அம்மாடி உனக்கு ஒன்னும் ஆகலையே..? இதோ பணத்தைப் புரட்டியாச்சு.. அவன்கிட்ட கொடுத்திடலாம்..” என்ற அன்னையின் கரத்தில் இருந்த பத்தாயிரம் ரூபாவை பார்த்தவளுக்கு உள்ளம் வலித்தது.
“யார் அவனுங்க..? பணம் தரலைன்னா உன்னை இழுத்துட்டுப் போவாங்களா..?” என கௌதமன் திட்டத் தொடங்க காரை செலுத்த முயன்ற கௌதமன் விழிகளோ சட்டென இறங்கியிருந்த கார் கண்ணாடியின் ஊடாக வெளியே நின்ற கௌதமனை ஆழ்ந்து பார்த்தது.
அவ்வளவுதான் அவனுடைய பார்வை கௌதமின் மீது படிந்ததும் பதறிப் போனவள் சட்டென கௌதமின் கரத்தை ஒரு கரத்திலும் அன்னையின் கரத்தை மற்றைய கரத்திலும் பிடித்தவள் அவர்கள் இருவரையும் வேகமாக இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று மறைய சுருங்கிய புருவங்களுடன் தன்னுடைய காரை அங்கிருந்து கிளப்பினான் விநாயக்.
கதவைப் பூட்டிவிட்டு சற்று நேரம் விழிகளை மூடி கதவின் மீது சாய்ந்து நின்றவளுக்கு மூச்சு சீராகத் தொடங்கியது.
“என்னம்மா ஆச்சு..? நீ எதுக்கு இவன் கூட வந்த..? இவன் தானே அந்த ஹீரோ..?” என மேகலா கேள்வி கேட்க ஆம் என தலை அசைத்தாள் அவள்.
அவளாக கூறும் வரைக்கும் எதுவுமே கேட்கக்கூடாது என அமைதியாக நின்று இருந்தான் கௌதமன்.
“எல்லா பிரச்சனையும் இன்னையோட முடிஞ்சிடும் அம்மா..” என்றவள் தன் கரத்தில் வைத்திருந்த பணத்தை அன்னையிடம் கொடுத்தாள்.
“இத அந்த மோகன்கிட்ட கொடுத்து கடனை அடைச்சிடுங்க..” என்றவள் அன்னையின் கரத்தில் இருந்த பத்தாயிரம் ரூபாயைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“இந்தப் பணம் உங்களுக்கு எப்படிம்மா கிடைச்சுது..? சேகர் வந்தாரா..?” எனக் கேட்டவளின் பார்வை சேகரைத் தேடியது.
“அவர்கிட்ட கால் பண்ணி பணம் கேட்டேன்மா.. பணம் இல்லைன்னு சொல்லி ஃபோன வச்சுட்டாரு.. பிரெண்ட்ஸ்கிட்ட கேட்டு பார்க்கிறேன்னு சொன்னாரு.. ஆனா இப்போ வரைக்கும் கால் பண்ணி எதுவுமே சொல்லல.. உன்னப் பத்தி எதுவுமே விசாரிக்கலை..” என வேதனை மல்கக் கூறினார் மேகலா.
“ஓஹ்..” என்றவளுக்கு கசந்து வழிந்தது.
அவன் ஒன்றும் அவர்களைப் போல பணத்திற்கு கஷ்டப்பட்டவன் இல்லையே.
பத்தாயிரம் ஒன்றும் சேகருக்கு பெரிய விடயம் இல்லைதான்.
ஆனால் அதைக் கூட தனக்காக கொடுப்பதற்கு அவன் முன்வரவில்லையே.
எனக்கு என்னவானாலும் அவனுக்கு அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லையா..?
காதல் என்று சொன்னதும் ஏமாந்து விட்டேனோ.?
ஊமையாய்க் கதறியது அவளுடைய மனம்.
“இந்தத் தம்பிதான்மா பணம் கொடுத்தாரு..” என அவர் கௌதமனைக் காட்ட அதிர்ந்து போனாள் அவள்.
அப்போதுதான் கௌதமன் அங்கே நிற்பதே அவளுக்கு நினைவில் வந்தது.
“நீ.. நீங்க எப்படி இங்க..? உங்களுக்கு எப்படி எங்க வீடு தெரிஞ்சுது..?”
“விசாரிச்சு தேடிக் கண்டுபிடிச்சேன்.. படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சிருச்சு.. எனக்காக நீதானே ப்ரே பண்ணி இருந்த.. அதுதான் தேங்க்ஸ் சொல்லலாம்னு வந்தேன்.. இங்கே வந்து பார்த்ததுக்கு அப்புறம்தான் பிரச்சனைன்னு தெரிஞ்சுது அதனால என்கிட்ட இருந்த பணத்தைக் கொடுத்தேன்..” என்றான் அவன்.
அந்த நொடி அவளால் அதிர்ச்சியை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை.
அவளுடைய விழிகள் அப்பட்டமாய் அதிர்ந்து விரிந்தன.
யார் இவன்..?
இரண்டே இரண்டு முறை பார்த்த எனக்காக உடனே பணத்தைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறானே.!
“எனக்காக உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி கௌதம்..” நா தழுதழுத்தாள் அவள்.
“எவ்ளோ பெரிய பிரச்சனை நடந்திருக்கு.. எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாமே…?” என அவன் சற்றே வருத்தத்துடன் கேட்க,
“சாரி அந்த டைம்ல என்னால எதையுமே திங் பண்ண முடியல.. மைண்ட் அப்படியே பிளாங்காயிடுச்சு.. ரொம்ப பயந்து போய்ட்டேன்..” என்றாள் அவள்.
தன் அன்னையின் கரத்தில் இருந்த அவனுடைய பத்தாயிரம் ரூபாயை வாங்கி கௌதமிடம் கொடுத்தவள் “எனக்கு பணம் கிடைச்சிருச்சு கெளதம்.. இனி இது தேவைப்படாது.. பட் ரொம்ப ரொம்ப நன்றி..” என்றாள் செந்தூரி.
“தம்பி தேங்க்ஸ்பா.. நீ உன்னோட பைக்க மறுபடியும் வாங்கிக்கோ..” என்றதும் புரியாமல் மேகலாவைப் பார்த்தாள் அவள்.
“தம்பிகிட்டயும் பணம் இல்லம்மா அவரோட பைக்கை பக்கத்து கடைக்காரர்கிட்ட கொடுத்துட்டுதான் பணம் வாங்கி வந்திருக்கிறாரு..”
அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
எனக்காக அவனுடைய ஸ்கூட்டியைக் கொடுத்துவிட்டா பணத்தை வாங்கி வந்தான்..?
நெஞ்சம் நன்றியில் விம்ம,
“உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல..” என்றவளுக்கோ விழிகள் மீண்டும் கலங்கிவிட்டன.
“ஐயோ இதுல என்ன இருக்கு..? ப்ரண்ட்ஸ்குள்ள நோ சாரி.. நோ தேங்க்ஸ்… எனக்கு ஏதாவது பிரச்சனைனா நீ ஹெல்ப் பண்ண மாட்டியா..?” என்றவன் அவள் கொடுத்த அந்த பத்தாயிரத்தை வாங்கி தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
“விநாயக் சார்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்ட போல..?” என அவன் பிரச்சனை புரியாது சிறு முறுவலுடன் கேட்க ஆம் என்றாள் அவள்.
“ஓகே தூரி.. எல்லா பிரச்சனையும் சீக்கிரமா முடிஞ்சிடும்.. நீ கவலைப்படாத.. ஏதாவதுன்னா கண்டிப்பா எனக்கு கால் பண்ணு..” என்றவன் மேகலாவிடமும் அவளிடமும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அவன் செல்லும் வரைக்கும் மிகக் கடினப்பட்டு தன்னை நிதானமாக வைத்திருந்தவள் அவன் அந்த வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த கணமே உடைந்து போனவளாய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.
மேகலாவோ பதறி,
“என்னாச்சும்மா..?” எனத் துடிதுடித்தவாறே கேட்க,
“நாளைக்கு நான் இங்கே இருந்து அவன் வீட்டுக்கு போகணும்மா.. அவ்வளவுதான் என்னோட வாழ்க்கையே முடிஞ்சு போச்சு.. எல்லாமே முடிஞ்சு போச்சு… என்ன சுத்தி இருந்த எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு வந்திருக்கேன்.. ஆனா இனிதான் எனக்கு பிரச்சனையே ஆரம்பமாகப் போகுது போல..” என அழுகையோடு கூறியவளை அணைத்துக் கொண்ட மேகலாவுக்கோ மனம் வேதனையில் வெந்து தணிந்தது.
அனைத்தையும் ஆரம்பித்தது அவர் தானே.
இப்படி எல்லாம் பிரச்சனை வரும் என அவர் சிறிதும் கூட சிந்திக்கவே இல்லையே.
வசதியான வாழ்க்கையை வாழலாம் என ஆசைப்பட்டவர் இறுதியில் பாதாளத்திற்குள் புதைந்து போனதைப் போலத்தான் நொந்து போனார்.
“அவன்கிட்ட போறது தவிர எனக்கு வேற வழி தெரியல.. நம்மள மாதிரி கஷ்டப்பட்ட குடும்பம் வாழ்நாள் பூரா உழைச்சாலும் எழுபது லட்சம் பணத்த புரட்டவே முடியாதுமா..
இதுல நமக்கு இஎம்ஐ வாடகை கட்டவே காசு பத்தல.. இதுல வாராவாரம் அந்த பொறுக்கிக்கு எப்படி வட்டிப் பணத்தைக் கட்டுறது..? கூட்டிட்டுப் போய் என்னை எப்படி பார்த்தான் தெரியுமா..? கன்னத்த எல்லாம் தொட்டான் ராஸ்கல்..” என்றவளுக்கு உடல் அழுகையில் குலுங்கியது.
“இன்னொரு தடவ நான் அவனோட பண்ண வீட்டுக்கு போக ரெடியா இல்ல.. போலீஸ் பொறுக்கினு எல்லாருமே என்ன சீரழிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு.. அதுக்கு இவன் கூட மட்டும் இருந்துடுறேன்..” எனக் கூறியவள் எவ்வளவு முயன்றும் தாங்க முடியாது கதறி விட மேகலாவோ நொறுங்கிப் போனார்.
“என் செல்வமே..” என அவளை நெஞ்சோடு அணைத்து கதறி அழுதவருக்கு உள்ளே எதுவோ உடையும் சத்தம் கேட்க சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.
“ஐயோ அப்பா..” என அலறியவாறே செந்தூரி எழுந்து வேகமாக உள்ளே ஓட அங்கே படுக்கையில் இருந்து கீழே விழுந்த நிலையில் எழ முடியாது கண்ணீரோடு போராடிக் கொண்டிருந்தார் அவளுடைய தந்தை.
அவரை அந்த நிலையில் பார்த்ததும் அவளுக்கோ சில நொடிகள் பேச்சு மூச்சு அற்றுப் போனது.
“நா.. நான் பா.. பாத்துக்கு..றேன்… நா.. நான்ன் வே..லைக்கு போ..றேன்..” என அவர் குளறலாக மிக சிரமப்பட்டு பேச ஓடிச்சென்று தன் தந்தையை அணைத்துக் கொண்டாள் செந்தூரி.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.8 / 5. Vote count: 50
No votes so far! Be the first to rate this post.
Post Views:804
2 thoughts on “16. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
So sad
Ivanga amma konjam sariya irundhale prichanai ivlo vandhu irukathu