விஷம் – 17
காபி போடுவது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல.
எத்தனையோ முறை இதே சமையலறைக்குள் எண்ணற்ற காபிகளை அவள் தயாரித்திருக்கிறாள்.
ஆனால் இன்று தன்னவனுக்கு முதல்முறையாக கையால் தயாரித்துக் கொடுக்கப் போகின்றோம் என்றதும் பார்த்துப் பார்த்து தேன் சேகரிப்பது போல காஃபியை தயாரித்தவள் அந்த காபி கப்பை எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள்.
எந்த பந்தாவும் இன்றி தன் அன்னையுடன் நிதானமாகப் பேசிக் கொண்டிருந்த யாழவனைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது.
இன்னும் அதிகமாக அவனைப் பிடித்தும் கொண்டது.
மெல்ல அவனை நெருங்கி அவனுக்குக் காபியைக் கொடுக்க,
காபியை பருகாமல் அவளைப் பருகுவது போல பார்த்தவன் அந்த காபி கப்பை தன்னுடைய கரத்தில் எடுத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ் பேபி..” என்றவனின் அழைப்பில் அவளுக்கோ முகம் குப்பென சிவந்து போனது.
‘எதே பேபியா..?’ என்பதைப் போல தன்னுடைய அக்காவை தலை முதல் கால் வரை பார்த்து வைத்தாள் கீர்த்தனா.
‘ஐயோ இவ வேற இப்படி பார்க்கிறாளே.. இன்னைக்கு நம்மள வச்சு செய்யப் போறா.” என எண்ணியவள் தன் தங்கையின் பக்கம் திரும்பவே இல்லை.
சற்று நேரத்தில் தன்னுடைய அன்னையுடன் பேசி முடித்துவிட்டு எழுந்து கொண்ட யாழவனின் பார்வையோ அர்ச்சனாவின் மீது ஆழ்ந்து படிந்தது.
“காபி ரொம்ப நல்லா இருக்கு பேபி..” என்றான் அவன்
அவளிடமோ மௌனம்.
ஆனால் அவள் தயாரித்துக் கொடுத்த காபியை அவன் விரும்பியதில் அவளுடைய மனமோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
“இப்போ சந்தோஷமா உங்க அம்மாவும் ஓகே சொல்லிட்டாங்க.. இனி அழாம நிம்மதியா தூங்கு அச்சு பேபி… லவ் யூ..” ன்றவன் அவளிடம் தலையசைத்து விடை பெற இவளுக்கு அவன் கூறிய லவ் யூ வில் தேகம் படபடத்துப் போனது.
ஒரு பக்கம் தன்னுடைய அன்னை மறுபக்கம் அவளுடைய தங்கை இருவரும் அருகருகே நிற்கும் போது இவன் இப்படி காதலைக் கூறினால் அவளால் எங்கனம் பதில் கொடுக்க முடியும்.?
அவளைப் புரிந்து கொண்டவன் போல சிறு சிரிப்போடு அவன் வீட்டை விட்டு வெளியேற,
“அர்ச்சனா என்ன அப்படியே நிக்கிற..? மாப்பிள்ளைய அனுப்பி வச்சிட்டு வா..” என அன்னை கடிந்து கொள்ள,
“இ.. இதோ போறேன்மா..” என யாழவனின் பின்னே வேகமாக வெளியே சென்றாள் அர்ச்சனா.
“அடியே இப்போ எதுக்கு இப்படி சிரிச்சுக்கிட்டே நிக்கிற..? போய் தூங்கு போ..” என தன்னுடைய இரண்டாவது மகளை அவர் கடிந்து கொள்ள,
“அக்கா வரட்டும் அவளை கலாய்ச்சாதான் எனக்கு தூக்கம் வரும்..” எனக் கூறிய கீர்த்தனாவோ சிரித்தவாறு அறைக்குள் சென்றுவிட அன்னத்திற்கும் உதடுகளில் சிரிப்பு தவழ்ந்தது.
தன்னுடைய காரை நோக்கி நடந்து கொண்டிருந்தவன் தன் பின்னே கேட்ட கொலுசு சத்தத்தில் தன் நடையை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தான்.
அங்கே அவனுடைய மனதைக் கொய்தவள் வேகமாக ஓடி வருவதைக் கண்டதும் அவனுடைய உதடுகளோ புன்னகையில் விரிந்தன.
“இவ்வளவு வேகமா எங்க ஓடிப் போறீங்க..?” என்ற அவனுடைய கேள்விக்கு அவனைச் செல்லமாக முறைத்து வைத்தவள்,
“உங்களை வழி அனுப்பி வைக்க வந்தேன்..” என்றாள்.
“அது சரி.. நீ அழுதேங்கிற காரணத்துக்காக இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்து உங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சது நான்… ஆனா நீ உங்க அம்மாக்கு கிஸ் கொடுக்கிற..? வாட் இஸ் திஸ் பேபி..? நியாயமா பார்த்தா நீ எனக்குத்தானே முத்தம் கொடுத்துருக்கணும்…” என அவன் கூற அவளுக்கோ சட்டென கன்னங்கள் சிவந்தன.
“ஹேய் என்னடி இது..? நான் பேசினாலே உன்னோட கன்னமெல்லாம் சிவக்குது..” என ஒற்றை விரலால் அவளுடைய கன்னத்தைத் தொட முயல,
சட்டென பின்னால் நகர்ந்து நின்றவள் “ஒரு முத்தம் என்ன ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம்..” எனக் கூறினாள் அவள்.
“ரொம்ப அலையவிடாதடி..” என்றான் கரகரப்பான குரலில்.
கிளுக்கி நகைத்தாள் அவள்.
“உன்னை இப்படியே எங்க வீட்டுக்கு தூக்கிட்டுப் போகணும் போல இருக்கு..”
“அடி வாங்கப் போறீங்க யாழன்..”
“நீ அடி.. நான் வாங்கிக்கிறேன்..”
“ஐயோ யாழன்… ப்ளீஸ்..” சிணுங்கினாள் அவள்.
“பேபி ப்ளீஸ் தயவு செஞ்சு சிணுங்காத.. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு..” என்றதும் அவளுக்கோ தேகம் படபடத்து விட்டது.
“சரி அத விடுங்க நிஜமாவே காபி பிடிச்சிருந்துச்சா..?”
“ஏய் நிஜமாவே ரொம்ப சூப்பரா இருந்துச்சு டீ.. தினமும் உன் கையால காபி குடிக்கணும் போல இருக்கு..”
“நாளைக்கு ஹாஸ்பிடல் வாங்க அங்க போட்டுக் கொடுக்கிறேன்..” என்றாள் அவள்.
அவளையே ஆழ்ந்து பார்த்தவன் “ஹாஸ்பிடல்லதான் போட்டு கொடுப்பியா.. உங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டியா..?” என ஆவலோடு கேட்க,
“வீட்டுக்கு எப்படி அடிக்கடி கூப்பிட முடியும்..? அது நல்லா இருக்காதே.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க யாழன்..” என்றாள் அவள்.
“ஓகே ஓகே புரியுது..”
“எனக்காக இவ்ளோ தூரம் வந்ததுக்கு தேங்க்ஸ்..”
*லவ் யூ பேபி..”
“ஹ்ம்ம் நானும் யாழன்..” நெகிழ்ந்த குரலில் கூறினாள் அவள்.
“ஓகே பேபி அப்போ நான் கிளம்பவா..?”
“ம்ம்… பத்திரமா போயிட்டு வாங்க..”
“அப்போ எனக்கு கிஸ் கிடையாதா..?” என அவன் கேட்க அவனை முறைத்துப் பார்த்தவள்
“கிஸ் தர மாட்டேன்..” என்றாள் உறுதியாக.
“அட்லீஸ்ட் ஹக் கொடுப்பியா..?”
“நோ அதுவும் கொடுக்க மாட்டேன்..”
“ஏன்டி இப்படி தவிக்க விடுற..?”
“ஹையோ போங்க யாழன்…” என சிரித்தவாறு கூறியவள் அவனுக்கு கையசைத்து பை காண்பிக்க வேகமாக அவளை நெருங்கியவன் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தும் அவளைத் தொடவில்லை.
மூச்சுக்காற்று அவளுடன் மோதும் அளவிற்கு நெருங்கி நின்றவன் அவளை உயிர் உருவும் பார்வை பார்த்தான்.
அவளுக்கோ இதயம் வேகமாக துடிக்க பின்னால் விலக முயன்றவளிடம் “பேபி நோ… ஸ்டே ஹியர்..” என அவசரமாக கட்டளை விதித்தான் அவன்.
“எ.. என்ன பண்றீங்க யாழன்..? இவ்வளவு பக்கத்துல வந்து நின்னா எப்படி..? எனக்கு படபடப்பா இருக்கு.”
“தொடக் கூடாதுன்னு சொல்லிட்ட.. அட்லீஸ்ட் உன்னோட ஸ்மெல்லையாவது கொஞ்சம் ஸ்மெல் பண்ணிட்டுப் போறேனே..” என்றதும் அவளுக்கோ பெருமூச்சு.
அவன் அருகே இயல்பாக நிற்க முடியாமல் அவள் நெளிந்து தடுமாற சட்டென அவளுடைய வளைந்த இடையை இறுகப்பற்றி அவளை நேராக நிற்க வைத்தவன் தன்னுடைய கரத்தை அவளுடைய இடையில் இருந்து எடுக்க பிரியப்படாமல் இன்னும் அழுத்தமாக பிடிக்க அவளுக்கு நெற்றியில் வியர்வை பூக்கள் அரும்ப ஆரம்பித்து விட்டன.
“யா.. யாழன் ப்ளீஸ்..” சன்னமான குரலில் முனகினாள் அவள்.
“நீதானடி நெளிஞ்ச.. உன்ன ஸ்டெடியா நிக்க வச்சது தப்பா..?” எனக் கேட்டவாறே தன்னுடைய கையை விலக்கிக் கொண்டவன் அவளை தின்பது போல பார்த்து வைத்தான்.
“உங்க பார்வையே சரியில்ல..” என்றவள் தன்னுடைய துப்பட்டாவை சரி செய்தவாறு அவனை முறைத்துப் பார்க்க தன்னுடைய பின்னந்தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவன் “ஒரே ஒரு ஹக் மட்டும் பண்ணிக்கவா…?” எனக் கேட்டான்.
“அதெல்லாம் முடியாது மரியாதையா கிளம்புங்க..” என்றவள் அவனை விட்டு இன்னும் விலகி நிற்க தலையை மீண்டும் கோதிக் கொண்டவனுக்கு பெருமூச்சு.
“கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை வெச்சு செய்யாம விட மாட்டேன்டி..” என அவளிடம் அழுத்தமாக கூறிக்கொண்டு அவன் காரை நோக்கி நடக்க, இவளுக்கோ மூச்சடைப்பே வந்தது போல இருந்தது.
அவனுடைய முகத்தை பார்க்க முடியாமல் வேகமாக வீட்டுக்குள் நுழைந்து கொண்டவளுக்கு முகம் முழுவதும் வெட்கம்.
சிரமப்பட்டு தன்னுடைய உணர்வுகளை மறைத்தவள் உள்ளே நுழைய,
“ஹாய் பேபி..” என சிரிப்போடு அழைத்தாள் கீர்த்தனா.
“என்னடி கலாய்க்கிறியா..? கொன்னுடுவேன்..” என அர்ச்சனா மிரட்ட,
“உன்னோட ஆளுக்கு மட்டும்தான் நீ பேபியோ..? நாங்க பேபின்னு கூப்பிடக்கூடாதா..?” என அவள் மீண்டும் அவளை வம்பு இழுக்க,
“ஏய் ப்ளீஸ்டி ஓட்டாத..” என சிணுங்கியவாறு அவள் அருகே சென்று அமர்ந்தாள் அர்ச்சனா.
“அக்கா மாமா செம ஹாண்ட்ஸமா இருக்காரு..” என்றதும் அர்ச்சனாவின் உதடுகளில் புன்னகை விரிந்தது.
“அம்மா ஏதாவது என்னத் திட்டினாங்களாடி..?” எனக் கேட்டாள் அர்ச்சனா.
“சே இல்லக்கா.. மாமா பேசின பேச்சுல அப்படியே அம்மா பிளாட் ஆயிட்டாங்க..”
அதே கணம் அந்த அறைக்குள் நுழைந்த அன்னமோ,
“ரெண்டு பேரும் தூங்காம என்ன கதை அளந்துக்கிட்டு இருக்கீங்க.? அர்ச்சனா நீ நேரத்துக்கு தூங்குமா.. நாளைக்கு ஹாஸ்பிடல் லீவ் சொல்லிடு… மாப்பிள்ளை நாளைக்கு அவங்க அப்பா அம்மாவோட நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி இருக்காருல..” என்றார்.
“ஐயோ திடீர்னு லீவு எடுக்க முடியாதும்மா ஹாஃப் டே போய்ட்டு வந்துடுறேன்..”
“சரிமா முடிஞ்ச அளவு நேரத்துக்கே வந்துரு.. இப்போ தூங்கு…. கீத்துமா நீ உன்னோட ரூம்ல போய் தூங்குடா.. அக்காவை டிஸ்டர்ப் பண்ணாத..” எனக் கூறிவிட்டு அவர் சென்று விட,
“நான் டிஸ்டர்ப் பண்ணலன்னா கூட மாமா இப்போ டிஸ்டர்ப் பண்ண தானே போறாரு..” என அவள் அர்ச்சனாவின் ஒளிர்ந்து கொண்டிருந்த ஃபோனைப் பார்த்து கூறிவிட்டுச் சென்றுவிட அர்ச்சனாவோ வேகமாக தன்னுடைய போனை எட்டி எடுத்தவள் யாழனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதைக் கண்டு பூரித்துப் போனாள்.
குறுஞ்செய்தியை திறந்து பார்த்ததும் அவளுக்கு முகம் குப்பென சிவந்து போனது.
அத்தனை முத்தங்களை குறுஞ்செய்தியில் அனுப்பி வைத்திருந்தான் யாழவன்.
“குட் நைட்… தூங்குங்க..” என அவனுக்கு ஒற்றை குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பி விட்டு வெட்கத்துடன் படுக்கையில் புதைந்து கொண்டாள் அவள்.
***
யாழவனின் வீட்டிலோ அவனுடைய தந்தை சாள்ஸ் வீட்டிற்கு வர இரவு மணி பதினொன்றைத் தொட்டிருந்தது.
“என்னடா ஏதோ பேசணும்னு சொன்ன.. உங்க அப்பா வந்தாதான் பேசுவேன்னு சொன்ன.. இதோ வந்துட்டாரு.. என்னன்னு சொல்லு.. எனக்கு தூக்கம் வருது…” என்றார் ரூபாவதி.
“என்னப்பா என்ன விஷயம் சொல்லு..?” எனக் கேட்டவாறு ரூபாவதியின் அருகே வந்து அமர்ந்தார் சாள்ஸ்.
“எனக்கு அர்ச்சனாவ ரொம்ப பிடிச்சிருக்குமா.. அவளையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. அப்பா நீங்களும் அம்மாவும் நாளைக்கு அர்ச்சனா வீட்டுக்கு வரணும்..” என சுத்தி வளைக்காமல் அவன் நேரடியாக விஷயத்தை போட்டு உடைக்க,
“வாட்..?” என்ற கர்ஜனையோடு அவனை முறைத்துப் பார்த்தவாறு எழுந்து நின்றார் அவனுடைய தந்தை.
அவருடைய கர்ஜனையில் அவரை புருவம் தூக்கிப் பார்த்தான் யாழவன்.
“நம்ம ஸ்டேட்டஸ் என்ன.. அவங்க ஸ்டேட்டஸ் என்ன..? என்னோட ஹாஸ்பிடல்ல சாதாரணமா அஞ்சுக்கும் பத்துக்கும் வேலை பாக்குற ஒரு நர்ஸைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியா..? நீ எல்லா விஷயத்துலயும் சரியா முடிவெடுப்பேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. இப்படி முட்டாள் தனமா பேசுறியே யாழவா..” என அவனுடைய தந்தை கோபத்தில் கத்த,
“இனாஃப் டாட்.. மைன்ட் யோர் வேர்ட்ஸ்… நான் சொத்தையோ பணத்தையோ கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தப் போறது கிடையாது.. இந்த ஸ்டேட்டஸ வச்சு தயவுசெஞ்சு மனுஷங்களை மதிப்பிடாதீங்க.. இந்த பணத்த வெச்சு என்னோட அர்ச்சனாவையும் எடை போடாதீங்க.. இன்னும் இருவது பரம்பர உக்காந்து சாப்பிடுற அளவுக்கு நான் மட்டுமே உழைச்சு சேர்த்த காசு தாராளமா இருக்கு.. அப்படி இருக்கும்போது எதுக்காக இன்னொரு பணக்காரிய தேடணும்..? எனக்கு லைஃப் பார்ட்னர்தான் வேணும்.. பணத்துக்கு பார்ட்னர் தேவையில்லை..” எனக் கோபத்தில் கூற ரூபாவதிக்கோ சற்று பதற்றமாக இருந்தது.
கணவனின் பிடிவாதத்தையும் மகனின் பிடிவாதத்தையும் நன்றாக அறிந்து கொண்டவருக்கு இது எங்கே சென்று முடியப் போகின்றதோ என்ற பயம் இருக்கும் தானே..?
“இப்போ ஆர்த்திக்கு நான் என்ன பதில்டா சொல்றது..?” என எரிச்சலோடு கேட்டார் அவனுடைய தந்தை.
“பதில் சொல்ல முடியலைன்னா அவளை நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க… நான் வரும்போது எனக்கு பிடிக்கலைன்னு சொல்லிட்டுதான் வந்தேன்… எனக்கு அர்ச்சனாவ தான் பிடிச்சிருக்கு.. நீங்களா கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியா இருந்தா நாளைக்கு என் கூட வாங்க.. இல்லைன்னா சொல்லுங்க நான் லண்டன் போகும்போது அவளையும் கூட்டிட்டுப் போறேன்…” என்றவன் தன்னுடைய பேச்சு முடிந்தது என்பது போல அங்கிருந்து சென்றுவிட,
“என்னடி இவன் இப்படிப் பேசிட்டுப் போறான்..?”
“ஏங்க.. அவனுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழட்டும் விட்டுடுங்க..”
“எனக்கு இது சுத்தமா பிடிக்கல ரூபா…”
“உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அவன் நினைச்சதை செய்யதான் போறான்.. தயவு செஞ்சு சண்டை போட்டு என்னோட மகனை மொத்தமா லண்டனுக்கு அனுப்பிடாதீங்க.. அவன் மட்டும் கோவிச்சுட்டு போனான்னா அவன் கூட நானும் போயிருவேன்..” எனக் கண்ணீரோடு ரூபாவதி கூறிவிட்டு சென்றுவிட இவருக்கோ முகம் கோபத்தில் இறுகியது.
‘உனக்கு உன்னோட பையன பத்தி இன்னும் புரியல ரூபா.. அவனால இந்த பொண்ணு கூட மூணு மாசம் கூட தாக்குப் பிடிக்க முடியாது..’. என்றவரின் உதடுகளோ வன்மமாக சிரித்தன.
💜💜
சூப்பர் சூப்பர் சூப்பர்.நம்பியார் ரேஞ்சுக்கு சிரிக்கிறார் இந்தாளு. என்ன ஆகப் போகுதோ? ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👏👏👏👏👏😍😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️