18. நேசம் கூடிய நெஞ்சம்

4.9
(20)

நெஞ்சம் – 18

அருணாவுடன் சென்றவளுக்கு அருணா பேசியது எதுவுமே மண்டையில் ஏறவில்லை. அவள் கன்னம் இரண்டும் குறுகுறுத்தது. இடுப்பில் அவன் தொட்ட இடம் இன்னும் அவனின் உள்ளங்கை ஸ்பரிசத்தை உணர்த்திக் கொண்டே இருந்தது. நல்ல வேளையாக அருணாவிற்கு தொலைபேசி அழைப்பு வர, இவளுக்கு தனிமை கிட்டியது. அவனின் நெருக்கம் அவளை பித்தாக்கி விடப் போகிறது என்று நினைத்துக் கொண்டாள் மலர். அந்த அளவிற்கு அவளை தொல்லை செய்தது நடந்த விஷயம். அவனையே நினைத்துக் கொண்டு வேலையை பார்த்தாள் மலர்.

மலருக்கு குறையாத அளவிற்கு அர்விந்தும் வெகுவாக டிஸ்டர்ப் ஆகி இருந்தான். அவனால் மலரை விட்டு விலகவே முடியவில்லை. அவளை அவனுடனேயே வைத்துக் கொள்ள விரும்பினான் அவன். அவள் அருகில் இருக்கையில் அவன் மனம் அடையும் நிம்மதியை அவன் நன்றாக உணர்ந்தான்.

அவன் மனதை அவளிடம் உரைப்பது என்பது தான் அவனுக்கு பயமாக இருந்தது. வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியவன் என்பதாலேயே அந்த பயம் அவனுக்கு. அவளை எந்த ஒரு காரணத்திற்காகவும் இழந்து விடக் கூடாது என்று பயந்தான். அவள், அவனுக்கு எவ்வளவு இன்றியமையாதவள் என்று  ஆள் அருகில் இல்லாதபோது புரிந்து கொண்டவன் அல்லவா!

சிறிது நேரம் என்றாலும் அவளை உணர்ந்தவனுக்கு அறைக்குள் இருப்பு கொள்ளவில்லை. அவளை கைகளால் தீண்ட முடியாவிட்டாலும் பார்வையால் தீண்டலாமே என்று எண்ணி அறையை விட்டு வெளியே வந்து டைனிங் ஹாலில் அமர்ந்தான். வந்து அமர்ந்தவனை கண்ட மலர் வித்தியாசமாக பார்த்தாள். அவள் கேட்பதற்குள், அருணா அவனை கவனித்து விட்டு,

“என்னடா இது?” என்று அவன் முகத்தை காட்டிக் கேட்டார். நல்லா கேளுங்க மா, உங்க மகன் அலைப்பறை தாங்கலை என்றது மனசாட்சி.

“ஏன்? நல்லா இல்லையா?” என்றான் தெளிவான பதில் சொல்லாமல்.

“நல்லா தான் இருக்கு! ஆனா வீட்டுக்குள்ளே எதுக்கு டா கூலர்ஸ்?” புரியாமல் குழப்பத்துடன் வினவினார் மகனிடம். அவருக்கு என்ன தெரியும்? மகன் முழு மூச்சாக சைட் அடிக்க இதெல்லாம் செய்கிறான் என்று. மலரை அவன் பார்ப்பது வீட்டினருக்கு தெரியக் கூடாது என்று இப்படி யோசித்தான் அர்விந்த். டேய் அர்வி நீயா டா இது?

“கண்ணு ஒரு மாதிரி இருக்கு, உங்க யாருக்கும் எதுவும் பரவிடக் கூடாதுனு தான் கூலர்ஸ் போட்டு இருக்கேன்.” நீ நடத்து மகனே…. மனசாட்சி சிரித்தது.

“அச்சோ, வாப்பா ஹாஸ்பிடல் போலாம்….” பதறினார் அருணா.

“பார்த்துக்கலாம் மா, நான் சொல்றேன், நீங்க வேலையை பாருங்க” என்றான். அந்நேரம் அருணாவின் தோழி அழைக்க அவர் போனுடன் அறைக்குள் சென்றார்.

அருணா அந்த பக்கம் நகன்றதும், அவனிடம் வந்த மலர்,

“கண் சிவந்து இருக்கா? தண்ணி வருதா? அரிக்குதா?” என்றாள் அக்கறையாக. அருணா அறைக்குள் சென்று விட்டார், இப்போதைக்கு வர மாட்டார் என்பதால், கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் டேபிளில் அமர்ந்திருந்தவன், எழுந்து அவளை நெருங்கி நின்றான். அவனின் நெருக்கத்தில் நகரப் போனவளை, நகர விடாமல் கையை பிடித்துக் கொண்டான். நொடியில் முகம் சிவந்து விட்டது மலருக்கு.

“என்ன சார் இது? ப்ளீஸ் சார்…. விடுங்களேன்….” கெஞ்சினாள் மலர். அவள் பேச்சிற்கும் முகத்தில் இருக்கும் உணர்வுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்ததை சிரித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான் அர்விந்த்.

“என் கண்ணை பார்க்கணுமா வேண்டாமா….ம்ம்….?” குரல் கொஞ்சியது மலரை.

“ம்ம்….” அவனின் குரல் காட்டும் உணர்வில் அவளுக்கு குரலே வெளி வரவில்லை. வயிறு, நெஞ்சம் அனைத்தும் காலியானது போல் உணர்ந்தாள். சற்று முன் தானே அவனை விட்டு பிரிய முடியாமல் பிரிந்து வந்தாள். இப்போதும் அவன் அருகாமையில் மனம் அலைப்பாய்ந்தது.

கண்ணாடியை கழட்டியவன், “என் கண்ணை பார் விழி….” என்றான் அர்விந்த் அழுத்தமாக.

அவன் கண்ணை கண்டவளுக்கு மயக்கம் வராத குறை தான். அந்த கண்களில் தான் எத்தனை மயக்கம்!! அம்மா! அவன் கண்கள் காட்டும்  உணர்வின் கனம் தாங்காமல் நின்றாள் மலர்.

அவளின் உணர்வினை கண்டவன், அதற்கு மேல் தாள முடியாமல் அவளை மெதுவாக அடுக்களைக்குள் நகர்த்திச் சென்றான். சென்றவன், துணிந்து, அவள் முகத்தை கைகளில் தாங்கி, அவள் கண்களுக்குள் பார்த்து, எவ்வித பதட்டமும் இன்றி அவள் இதழ்களை பற்றினான். போன முறை போல், எப்படி நடந்தது ஏன் நடந்தது என்றெல்லாம் இல்லாமல், இம்முறை விரும்பி தெளிந்த மனதுடன் அவளை முத்தமிட்டான் அர்விந்த். வெறும் முத்தத்துடன் நிறுத்த முடியாமல், அவள் மேனியெங்கும் அலைந்தது அர்விந்தின் கரங்கள். அவள் இதழ்களுக்கு சற்று விடுதலை அளித்து அவள் கழுத்தில் புதைந்தான். அவனின் சூடான முத்தம் அவள் கழுத்திலும் காதிலும் பதிய, சிலிர்த்து போனாள் மலர். அவன் இன்னும் இன்னும் அவள் வேண்டுமென்று கழுத்திலிருந்து கீழே இறங்க, துள்ளி விலகினாள் மலர். விலகியவள், வெட்கத்தில் அவன் முகம் பார்க்க முடியாமல் தவித்தாள். தன்னை விட்டு விலகியவளை, விலகி இருக்க முடியாமல், அவளை அருகே இழுத்தான் அர்விந்த்.

“ஸார் ப்ளீஸ்…. விடுங்க….” அவனின் கையை எடுத்து விட்டு அவனிடம் இருந்து நழுவி வெளியில் ஓடினாள் மலர். டைனிங் டேபிள் அருகே சென்று நின்று கொண்டாள். அவள் சென்று ஓரிரு நிமிடம் கழித்து தன்னை சமாளித்துக் கொண்டு வெளியே வந்தவனின் கண்கள் கண்வலிக்காரன் போல் சிவந்து கிடந்தது.

அவனின் அணைப்பு, முத்தத்திற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று கேட்க எண்ணியவள், சிவந்த அவன் கண்களை கண்டு கேட்க வந்ததை மறந்து, பதறியவளாக,

“ஐயோ என்ன இப்படி சிவந்து போச்சு?” என்றாள்.  அவன் உணர்வுகளின் வேகம் புரியவில்லை அவளுக்கு உண்மையில்.

“உன்னால தான்” என்றான் உல்லாசமாக அவன். அவளின் மேல் கட்டுக்கு அடங்காமல் பெருகும் ஆசையை தடுக்கிறாளே அவள்! அப்படி என்றால், அவளை தானே காரணம் சொல்ல வேண்டும்!

அவள் பாவமாக அவனை பார்க்க, “நீ என்கூடவே இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்ததா இது சரி ஆகி இருக்கும்!” என்று அழுத்தமாக கூறி கண்ணடித்தான் அர்விந்த். அவளிடம் காதலை சொல்லாமல் இப்படி வம்பு இழுப்பது சுகமாக இருந்தது அவனுக்கு. அவனின் உல்லாச சிரிப்பிலும் நெருக்கமான  பேச்சிலும் தன்னை மறந்து அவனை ஆசையாக பார்த்தாள் மலர்.

“ஹேய், இப்படி எல்லாம் பார்த்தே, உன்னை எங்கேயாவது கடத்திட்டு தான் போகணும்” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போது அருணா வந்தார். அவர்கள் பேச்சு தடைப்பட்டது.

“எங்கே பா போகணும்?” கடைசியாக அவன் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்தவர் அவனிடம் கேட்க, கடகடவென அவன் மூளை வேறு கணக்கு எல்லாம் போட்டு, “விழிக்கு சில திங்க்ஸ் வாங்கணும்னு சொன்னா, நானும் கடைக்கு போகணும், போறப்போ அழைச்சிட்டு போறேன்னு சொன்னேன் மா” என்றான்.

அவன் பேசும் புது விஷயத்தை ஆவென்று பார்த்துக்கொண்டு இருந்தாள் மலர். எப்படி எல்லாம் சரளமா கதை விடுறான் என்று மலைத்து போனாள். சொன்னதை உடனே செய்து விடும் பழக்கம உடையவன், அன்று மாலையே அவளை கடைக்கு அழைத்தான். டிரைவர் வரச்சொல்லி அவன் கிளம்ப. மலர் அருணாவிடம்,

“சாருக்கு கால் எதுவும் வலிக்க போகுதுமா….” என்று தயங்கினாள்.

“வீட்டுக்குள்ளேயே இருந்த பிள்ளை வெளியில் கிளம்புறான்னு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, அதெல்லாம் வலிச்சா அவன் பார்த்துக்குவான்…. நீ ரொம்ப யோசிக்காம போய்ட்டு வா” என்றார் அவர் மகனின் மாற்றத்தில் வந்த மகிழ்ச்சியுடன்.

காரில் பின்சீட்டில் மலருடன் அமர்ந்து இருந்தவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது. அவன் மனம் அவளை மட்டுமே நினைத்தது அப்போது. வேறு எந்த குழப்பமும் இல்லை அவனுக்கு. கார் கிளம்பிய சற்று நேரத்திற்கு எல்லாம், அவளை நெருங்கி அமர்ந்து அவள் விரல்களுடன் தனதை பிணைத்துக் கொண்டான் அர்விந்த். அவனின் செயலில் அவனை ஏறிட்டு பார்த்தாள். அவனின் மனம் புரியாதவளுக்கு அவனின் நெருக்கம் ஆசையை மட்டுமின்றி குழப்பத்தையும் கொடுத்தது.

அந்த கண்களில் இருந்த குழப்பத்தில்,

“ரொம்ப யோசிக்காதே…. லிவ் தி மொமண்ட்” என்றான் சிரிப்புடன்.

அவன் பேசும் விதத்திலேயே இப்போதைக்கு அவன் உருப்படியான விஷயம் எதுவும் சொல்லப் போவதில்லை என்று புரிந்துக் கொண்டாள் மலர். அவனிடம் பேச சரியான நேரம் விரைவில் அமைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் மலர்.

மால்லை அடைந்து, அவளுடன் மகிழ்ச்சியாக பேசி, சிரித்து அவளையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டான் அர்விந்தன். அவர்கள் ஏதாவது கொறிக்கலாம் என்று உணவருந்தும் இடத்திற்கு செல்ல, அங்கே அவனுடன் வேலை செய்யும் தமனை சந்தித்தான். பேச்சோடு பேச்சாக அர்விந்திடம்,

“ஹேய் மேன், சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டியா? செம ஹாப்பியா இருக்கே மேன்!” என்றான். அவன் தமிழ் என்பதால் தமிழில் தான் பேசினார்கள்.

“ஹாஹா, சிரித்த அர்விந்த், ஷி மேக்ஸ் மீ ஹாப்பி மேன்!” என்று பொதுவாக சொன்னானே தவிர, வேறு எதையும் சொல்லாமல், அப்பறம் பார்க்கலாம் என்று மலருடன் வேறு இடத்திற்கு நகர்ந்தான். பின்னர் அவர்களும் உண்டு விட்டு, அங்கிருந்து கிளம்பினார்கள். கிளம்பும் போது, நிவேதாவிடம் இருந்து அழைப்பு வந்தது அர்விந்திற்கு. அவர்களுக்குள் சண்டை ஒன்றும் இல்லையே, அதனால் தயக்கம் ஏதும் இன்றி அவளின் அழைப்பை ஏற்றான் அர்விந்த்.

“இப்போ தான் தமன் பேசினான், உன்னோட பிக் ஷேர் பண்ணான். மனசு கேட்காம தான் கால் பண்ணேன், உனக்கு முகத்தில் எல்லாம் அடி பட்டு இருக்குனு அவசரப்பட்டு அந்த வேலை செய்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்காத…. உன் லெவல் ஒன்னும் குறையலை… ப்ளீஸ்…. டோன்ட் செட்டில் பார் லெஸ்….(dont settle for less) ஆஸ் அ பிரண்ட்டா சொல்றேன்” என்றாள்.

அவள் பேச பேச அவன் முகம் கடுகடுக்க, ஆரம்பித்ததை புரியாமல் பார்த்தாள் மலர். இறுதியில் மலரிடம் இங்கேயே நில் என்று சைகை செய்து விட்டு, அவளிடம் இருந்து சற்று தள்ளி சென்றவன் கோபமாக பேசுவதை கண்டாள்.

மலரிடம் இருந்து விலகி சென்றவன், நிவேதாவிற்கு பதில் கொடுக்க,

“ஷி ஈஸ் மை எவெரிதிங்!” என்றான்.

அந்த பதிலோடு நிவேதா விட்டு இருந்திருக்க வேண்டும் ஆனால் அவள் ஈகோ அதற்கு இடம் கொடுக்காததால், “அவளை போல் ஒரு பெண் தான் உன்னோட இப்போதைய நிலைமைக்கு சரியா வருவானு உன் மனசு சொல்லிடுச்சு போல், ஓகே உன் வாழ்க்கை உன் இஷ்டம்!” என்றாள்.

“நீ முதல்ல சொன்ன மாதிரி எனக்கு ஒன்னும் குறை இல்லை இப்போ, அதே சமயம் அவளும் எந்த விதத்திலும் குறைஞ்ச பொண்ணு இல்லை! உனக்கு இன்னொரு விஷயம் சொல்றேன், நீ கேட்டதால மட்டும் நான் உனக்கு ஈஸியா டைவர்ஸ் கொடுக்கலை. எனக்கே உன்னோட வாழ இஷ்டம் இல்லை அதனால் தான் கொடுத்தேன். உன் மேல் எனக்கு லவ்வே இல்லை. நீ எனக்கு பெரிய நல்லது செஞ்சு இருக்க, தேங்க்ஸ்” என்று நிவேதாவை இன்னும் எரிச்சல் அடைய வைத்தான் அர்விந்த்.

பட்டென்று அழைப்பை துண்டித்தாள் நிவேதா. கல்யாணம் ஆகி ஒரே நாளில், வாழ்க்கையை தொடங்காமல் அவள் வாழ்க்கை மாறி போனாலும் அவளுக்கு பெயர் டைவர்சி தான். அதனால் அவளுக்கு இரண்டாம் திருமணம் செய்வதில் பல சிக்கல் வந்தது. அவள் பெற்றோர் இப்போது அவளை திட்ட, அவள் ஒரு மாதிரி குழப்பத்தில் இருந்தாள். அப்போது பார்த்து தமன் அரவிந்தை ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக பார்த்ததாக கூற, அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவள் அக்கறையாக பேசுவதாக எண்ணிக் கொண்டு பேச, அர்விந்த் பொங்கி எழுந்ததில் அவளுள் வன்மம் வளர்ந்தது. என்ன செய்ய போகிறாளோ?

நிவேதாவிடம் பேசிய பின் அங்கிருந்து கிளம்பினார்கள். இறுக்கமான முகத்துடனேயே இருந்தான் அர்விந்த். வரும் போது அவ்வளவு நெருக்கம் காட்டியவன், திரும்பும் போது தள்ளி இருந்தான். அவன் மலரை பற்றி தான் சிந்தித்து கொண்டு இருந்தான். அவளை அவன் திருமணம் செய்தால், அவளிடம் பலரும் நிவேதா மாதிரி தானே பேசுவார்கள்? அர்விந்திற்கு சில குறைகள் என்பதால் தான் அவளை திருமணம் செய்ததாக கூறுவார்கள்? அப்படி ஒரு நிலைமை அவளுக்கு எதற்கு? அவளுக்கு என்ன குறை? அவள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும்! தன் காதலால் காலத்திற்கும் அவளை பலர் குறைவாக பேசுவதை எப்படி அனுமதிப்பது? இல்லை இதைக் கண்டுகொள்ளக் கூடாதா? முதலில் மலர் இவன் காதல் என்று சொன்னால் நம்புவாளா? இதை எப்படி எடுத்துக் கொள்வாள்? எனக்கு ஏன் திருமணத்தன்று தோன்றியது ஒரு நாள் முன்பு தோன்றாமல் போனது? அவளுக்காக நான் என் திருமணத்தை நிறுத்தி இருந்தால் என் காதல் புரியும் அவளுக்கு! இப்போது என்ன சொல்வது? தலை வலித்தது அவனுக்கு அனைத்தையும் யோசித்து.

sorry for delay. finger la infection aagi numbness vanthudichu.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

1 thought on “18. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!