19. சிறையிடாதே கருடா

4.9
(14)

கருடா 19

உடலுக்குள் இருக்க வேண்டிய உயிர் வெளியேறி அவன் மார்பில் ஊஞ்சலாடுவது போல் இதமாக உணர்ந்தவன், அணைக்காமல் நின்று கொண்டிருக்கும் ரிதுவை மெல்லத் தன்னிடமிருந்து பிரித்தான். அடம் பிடிக்காமல் விலகி நின்றவள், பழையபடி பால்கனிக் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிலவைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். அவளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான் கருடேந்திரன்.

நொடிகள் காதலோடு கடந்தது. பால்கனிக் கம்பியைப் பற்றிக் கொண்டிருந்த அவள் கை மீது கை வைத்தவன், மற்றொரு கையால் தோள் மீது கை வைத்தான். அவளிடமிருந்து எதிர்ப்போ, ஆதரவோ வரவில்லை என்பதை உணர்ந்தவன் எவை தனக்கானது என்று தெரிந்து கொள்ளக் கம்பியில் இருந்த இருவரின் கையையும் எடுத்து அவள் வயிற்றோடு சுற்றிக் கொள்ள, அடிவயிறு சில்லென்றானதால் சுருங்கியது.

தனக்கானது எது என்று தெரிந்து கொண்டதில் ஆர்வம் அதிகரிக்க, இடையை இறுக்கிக் கொண்டான் அவன் இடையோடு. அவன் கொடுத்த அழுத்தம் தாங்காது திரும்பி நின்றவள், கருடன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளிவிட முயன்றாள். அவள் விருப்பம் அறிந்து அதை நிறைவேற்ற விரும்பாது இன்னும் நெருங்கி நின்று நெற்றி முட்டினான்.

தொட்டால் சுருங்கிக் கொள்ளும் தொட்டாச்சிணுங்கி போல், நெற்றி முட்டியதும் தலை குனிந்து கொண்டு குறுகியவள் கன்னங்களைப் பற்றியவன், தன்னைப் பார்க்க வைத்தான். ஒரே ஒரு நொடி அவன் விழியோடு தன் விழியை உறவாட விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். ஒரு நொடி என்றாலும், அதில் அவள் காட்டிய பேரன்பை உணர்ந்தவன், கன்னத்தில் இருந்த கைகளுக்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் தன்னைப் பார்க்க வைத்தான்.

எதற்கும் அஞ்சாதவள் இமைகள் படபடத்தது. தன்னைப் பார்ப்பதும், விழியைத் திருப்புவதுமாகப் போராடிக் கொண்டிருக்கும் அந்த முல்லைப் பூ விழிகளைப் போதுமென்றவரை ரசித்தவன், “ரிது” என மெல்ல அழைத்தான்.

சலனங்களை ஒதுக்கி வைத்து அவன் மீதான கோபத்தை அம்பாகப் பாய்ச்ச, தன்னைத் தேடிய உணர்வுகளுக்கு எப்படி ஆறுதல் அளிப்பது என்று தெரியாமல் மருகியவன், இரு புருவங்களுக்கு மத்தியில் மென்மையான முத்தத்தைப் பதித்து நெருங்கினான். எதற்காக வருகிறான் என அறிந்தும் அவள் நகரவில்லை. உரிமையாக நெருங்கியவன், ஒரு நொடி தடுமாறிக் காதலோடு முதல் முத்தத்தைப் பதித்தான்.

தாலி கட்டிய அன்றைய நாளைத் தவிர வேறு எந்த நாளிலும், மனையாள் பொட்டு வைத்துப் பார்த்ததில்லை கருடேந்திரன். இன்று அவன் இட்ட முத்தத்தில், எச்சில் பொட்டு போல் மின்னிக் கொண்டிருந்தது. அதன் மினுப்பு மீண்டும் முத்தமிட வைத்தது. இந்த முறை மிச்சம் இருந்த இடைவெளியைக் குறைத்து அவள் தேகங்களோடு உரசி நின்றவன், உதட்டைக் குவித்துச் சின்னச் சத்தத்தோடு இதழ் பதித்தான்.

முதல் முத்தத்திற்கும், இரண்டாம் முத்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவள் விழி உயர்த்த, “சாரி…” என்றான் ஏக்கத்தோடு.

“எனக்கு எதுக்குச் சாரி சொல்ற? உன்ன நான் தேடலை!”

“அப்படியா!” என்றவனின் மூச்சுக்காத்து அவள் இதழோடு ஒட்டி விலகியது.

பதில் பேச முடியாமல் தத்தளித்தவளின் உள்ளங்கை வியர்த்தது. உடலுக்குள் உருண்டு உருவான பனிக்கட்டி, தொண்டைக் குழியில் வந்து நின்று மீண்டும் அடி வயிற்றுக்கு ஓடியது. வியர்த்த உள்ளங்கையை இறுக்கமாக மூடிக்கொண்டவள், குளிரும் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் நொந்து போனாள்.

“நீ என்னைத் தேடுன…”

“இல்ல!”

“பொய் சொல்ற.”

“உன்னை எதுக்காக நான் தேடணும். நீ எனக்கு யாரு?”

“ம்ம்!” மெல்லியதாக முனங்கியவன், கீழ்த்தாடையை மீசையால் உரசி இடது கன்னத்தில் முத்தம் பதித்து, “அப்படியே கால் போன போக்குல எங்கயாவது போய் இருப்பேன். திடீர்னு ஏதோ ஒன்னு, என்னைத் துரத்துற மாதிரி இருந்துச்சு. இந்தப் பிரபஞ்சம், எங்கயும் போகாதன்னு பிடிச்சு வச்ச மாதிரி உடம்பெல்லாம் வலி… என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல. எங்க இருக்கேன்னு சுத்திமுத்திப் பார்க்கும் போது எல்லாமே நீயா இருக்க… பிரம்மையோனு கண்ணக் கசக்கிட்டுப் பார்த்தா உன்னைக் காணோம்.‌” என்றவன் முத்தமிட்ட இடது கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டான்.

அவன் பேச்சோடு தன் சிந்தனையை ஒன்றாக்கியவள், அவை நின்றதில் புருவம் சுருக்க, அதைக் கட்டை விரலால் நீவி விட்டவன் முத்தமும் பதித்து, “உன்னைத்தான் எனக்குப் பிடிக்காதே.” என்றிடும் நேரம் வீம்புக்கு விலகினாள்.

சொல்ல வருவதைக் கேட்காமல், முரண்டு பிடிக்கும் தன்னவளின் இடையோடு கை நுழைத்துத் தன் உடலோடு சேர்த்துக் கொண்டவன், “அப்படின்னு நினைச்சுத்தான் ரெண்டு அடி எடுத்து வச்சேன். அதுக்கு மேல நகர முடியலடி! ஏதோ ஒரு சத்தம், உன்ன ஒருத்தி தேடிகிட்டு இருக்கான்னு சொல்லிட்டுப் போச்சு.” என்று விட்டு நெற்றி முட்டிட, இப்போது அவள் பார்வை அவனை மட்டுமே வட்டமிட்டது.

“அதுக்கு மேல அங்க இருக்க முடியல. என்னைத் தேடி அலைஞ்ச உன்னை இப்படிச் சேர்த்துப் பிடிக்க வேகமா ஓடி வந்துட்டேன்.”

அவன் மீதான பார்வையைத் தவிர்க்க முடியாது, அவனுக்குள் அவளாக மாறிப் போனவளின் கைகள் மெல்ல உயர்ந்தது. மனைவியின் எண்ணம் புரிந்து உயர்ந்த தோள்களை அவள் பக்கமாகச் சரிக்கப் பற்றிக் கொண்டது அவள் கைகள். தூரம் என்ற சொல்லுக்குப் பொருள் இல்லாது போனது அவர்களுக்குள்.

முட்டத் தயாராக நிற்கும் அவள் மூக்கு நுனியில் மயங்கி, லேசாக உரசியவன் அங்குமொரு முத்தத்தைப் பதிக்க, எச்சிலை விட மீசையின் குறுகுறுப்புத் தான், அவளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த பெண்மையை எட்டிப் பார்க்க வைத்தது. ஒரு துளி விஷமானாலும், உயிரை எடுக்கும் வீரியம் கொண்டிருக்கும் தானே. அதேபோல் சின்னதாக உருவெடுத்து அதை உணர்வதற்கு முன்னரே விலகிப் போன வெட்கத்தைச் சரியாகக் கண்டு கொண்டவன், முகம் சிவந்து நின்றால் எப்படி இருப்பாள் என்ற ஆசையை வளர்த்துக் கொண்டான்.

வளர்ந்த ஆசை செய்யத் துணிந்தது. அவன் இல்லாது ஒப்பனை போட மறந்து, இதழ் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது. பெருவிரல் கொண்டு அவள் அதரங்களில் இருக்கும் ரேகைகளை எண்ணிக் கொண்டிருந்தான். விக்கித்த உணர்வு, எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் அவளுக்குள் அடங்கி இம்சை செய்தது. அவன் வருடலில் சுறுசுறுப்பான மூளை ஒளிந்து கொண்ட வெட்கத்தைத் தலையில் அடித்து விரட்டி விட, இதோ அவன் எதிர்பார்த்தது அவள் முகத்தில்.

அதன் பின், தாக்குப் பிடிக்குமா ஆண் மனம்? தொடத் துடித்த ஆண்மையை அப்படியே அவள் இதழுக்குப் பரிமாற்ற எண்ணி நெருங்கியவன், உதட்டால் அவள் உதட்டை உரசித் தன் ஆசைக்கு உணவளித்தான். அவை போதாது என்று முட்டிச் சண்டை போட்டது மோகம். அதன் தொந்தரவு தாங்க முடியாது தாவிக் கவ்விக் கொண்டான் இதழை. அதுவரை, வெட்கத்தில் தன்னை அறியாமல் நின்றிருந்தவள் கண்கள் விரிந்தது.

மெதுவாக உரசி, மென்மையாக முத்தமிடுவான் என எதிர்பார்த்து நின்றிருந்தவள், அவன் வேகத்தில் மிரண்டு போனாள். எந்த உத்தரவையும் அவளிடம் எதிர்பார்க்காமல், ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் வேகத்தை அதிகரித்தான். சண்டையிடும் நாள்களில் கூட, அவன் கண்கள் இந்த அதரங்களைத் தான் சுற்றி வரும். அப்படி இருக்க, அவை தன் உதட்டுக்குள் இருக்கும் பொழுது அமைதி காப்பானா?

அப்படியே கடித்துத் தின்று விடும் முடிவிலேயே அதைக் கையாண்டான். தோள்களைப் பற்றி இருந்த அவள் கைகள், வேகம் தாங்காது இறுக்கிப் பிடித்தது. அவள் பிடியை உணர்ந்தவன் இடையைச் சிதைத்துப் பழி வாங்கினான். நூல் பட்டை விட உயர்ந்த ரக மேனி, அவன் கையில் சிக்கிச் சின்னாபின்னம் ஆகியது. கட்டியவளின் அவஸ்தை உணராது அவனுக்குள் ஊற்றெடுத்த மோகத்தைத் தீர்த்துக் கொள்ளவே முனைப்பாக இருந்தான்.

மணலுக்குள் புதைந்து போன பாதச் சுவடை, அடித்து வீசும் காற்று காட்டிக் கொடுப்பது போல் அவளுக்குள் இருந்த பெண்மையை உருவி எடுத்துத் தனதாக்கிக் கொண்டவன், போதும் என்றவரை தீர்த்துக் கொண்டு விலகினான். தாலி கட்டியதற்காகச் சண்டையிட்டுப் பிரிந்ததற்காக சேர்ந்து நிற்கும் அவள் எண்ணங்களை, அவளாலே புரிந்து கொள்ள முடியவில்லை. முரட்டுத் தனமான முத்தத்தில் பெண்மையைத் தொலைத்தவள், அவன் விலகியதும் தானே தொலைந்தது போல் பயந்து விழி திறந்தாள்.

பொறுமையாக விலகியவன் இதழ்களுக்கு நடுவில் சிலந்தி வலை போல் உருவான எச்சிலை ரசித்துக் கொண்டிருந்தான். பயந்தவள் விழிகள் அந்த ரசனையைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இந்த முறை ரிதுவின் மூச்சுக்காற்று, அவன் முகத்தை உரசி மாயமாக மறைந்தது. அதில் அனைத்து எண்ணத்தையும் விரட்டி அடித்து, அவள் முகம் பார்த்தவனுக்கு எண்ணில் அடங்காத குழப்பங்கள்.

வானிலை மாற்றம் போல் திடீரென்று மாறிய அவன் பார்வையைக் கண்டு புருவம் சுருக்கியவள், “எங்க போன?” கேட்க, மிச்ச சொச்சம் ஒட்டி இருந்த மோகமும் விலகி ஓடியது.

உடனே அவளை விட்டு விலகி நின்றவன் கைப்பிடித்துத் தன் பக்கம் திருப்பியவள், “எனக்குப் பதில் வேணும்!” என்றாள்.

அவள் முகம் பார்த்துப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவன் வேகமாகக் கட்டி அணைத்தான். கருடன் இங்கு வந்த நோக்கமே வேறு. மன்னிப்பைப் பிச்சையாகக் கேட்க ஓடோடி வந்தவன் அவளிடம் தொலைந்து விட்டான். குற்ற உணர்வும், காதலும் ஒரு வழி செய்து கொண்டிருக்கிறது கருடேந்திரனை.

கோபக்காரனின் உள்ளத்தைப் படிக்கா விட்டாலும், உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதுவரை அவனை அணைக்காமல் இருந்தவள், முதுகுக்குப் பின்னால் இரு கைகளையும் நுழைத்து இறுக்கமாகச் சேர்த்துக் கொண்டாள். ஆறுதலான அணைப்பில் சுகம் கண்டவன் அவள் தோளோடு முகத்தைப் புதைத்துக் கொண்டு,

‘ஐ லவ் யூ!’ தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பத்து நிமிடங்கள் கடந்தும் அதே நிலையில் இருந்தவன், தன்னை விட்டு விலகப் பார்க்கும் அவள் செயலில் பிடித்தம் கொள்ளாது, “ப்ளீஸ்!” என ஓசை கொடுக்க, அவளுக்குள் குழப்பங்கள் அதிகரித்தது.

முன்பை விட அதிக இறுக்கத்தைக் காட்டியவன், ‘சாரி…’ ஆயிரம் முறை மனத்திற்குள் சொல்லிக் கொண்டான்.

முதுகைத் தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தியவள், “எதுவா இருந்தாலும் சொல்லு, பார்த்துக்கலாம்.” என்றிட, மனத்தில் இருப்பதை வாய் விட்டுச் சொல்லத் தைரியம் இல்லாது விலகி நின்றவன், “ரவியத் தேடிப் போனேன்.” பேச்சை மாற்றினான்.

மோகத்தில் வியர்த்த உடல் பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

ஆக்சிஜன் குறைவாகிச் சுயநினைவு இழப்பது போல் பயத்தில் மிரண்டவள், “யா..யா..யார?” கேட்டிட, அவள் தடுமாற்றம் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் கருடேந்திரன்.

“ரவி!”

“அவனைத்தான் நான் கண்காணிச்சிட்டு இருக்கேன்னு ஏற்கெனவே சொல்லி இருந்தனே. தேவை இல்லாம நீ எதுக்கு அவனைத் தேடிப்போன…”

“என்ன கண்காணிச்சுட்டு இருக்க, இப்ப அவன் ஊர்லயே இல்ல தெரியுமா?”

“ஊ..ஊர்ல இல்லையா?”

“ஆமா!”

“உனக்கு எப்படித் தெரியும்?”

“அவனோட ஸ்கூல் ஃப்ரெண்ட்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பத்தான் அவன் வைஃப் ஒரு வாரமா வீட்டுக்கு வர்றதில்லன்னு சொன்னாங்க. அவன் நம்பரும் சுவிட்ச் ஆஃப்னு வருதாம்.”

“உன்னை யாரு, வீட்டுக்கெல்லாம் போகச் சொன்னது? நான்தான் கண்டு பிடிக்கிறேன்னு சொல்லிட்டேன்ல. தேவை இல்லாம நடுவுல புகுந்து குட்டையைக் குழப்பாத…” என்றவள் முகத்தில் கோபத்தை விடப் பதற்றமே அதிகமாக இருந்தது.

“உன்னை நம்பி எவ்ளோ நாள் தான் உட்கார்ந்து இருக்கிறது. சீக்கிரம் உண்மை தெரிஞ்சால் தான உன்னை விட்டு ஓட முடியும்.”

வலது புருவத்தைத் தூக்கி அக்னியாக முறைத்தவள், “நீ என்னதான் அவன் பின்னாடி நாயா ஓடினாலும் ஒரு உண்மையையும் கண்டு பிடிக்க முடியாது.”

“ஏன்?”

“போலீஸ்க்கே பயப்படாதவன் உனக்குப் பயந்திடுவானா? நேரம் பார்த்து தான் அவனைப் பிடிக்கணும்.”

“இப்படியே சொல்லி நாளைக் கடத்து. உன்ன நம்புனா வேலைக்கு ஆகாது. ரவி எங்க போயிருக்கான்னு நானே கண்டு பிடிக்கிறேன்.”

“நான் ஒன்னும் சும்மா இல்ல. எல்லாப் பக்கமும் அவனுக்குச் செக் வெச்சிருக்கேன். எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல சிக்கிப்பான்.”

“அதுவரைக்கும், உன்கிட்டச் சிக்கிச் சின்னாபின்னம் ஆகணுமா நானு…”

“அது உன் தலைவிதி!”

“பிசாசு…”

“சொல்லிட்டாரு, தேவலோக இந்திரன்!”

“நான் இந்திரன் தான்!”

“ஆமாமா…”

“காலைல ஒரு பொண்ணு என்னை எவ்ளோ நேரம் சைட் அடிச்சுச்சு தெரியுமா? எனக்கே உடம்பெல்லாம் கூச ஆரம்பிச்சிடுச்சு. அதோட வீரியம் தாங்க முடியாமதா ஓடி வந்துட்டேன்.” என்றவன் சுதந்திரமாகக் கை, கால்களை நீட்டிப் படுத்தான் மெத்தையில்.

அவனை முறைத்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் ரிது சதிகா. கட்டியவளின் கோபத்தைக் கண்டு மனதாரச் சிரித்தவன், “எனக்கென்னமோ, சீக்கிரம் நம்ம பிரியப் போறோம்னு தோணுது.” என்றான்.

முறைப்பைக் கை விட்டவள் எவ்வித முகபாவனையும் இன்றி, “ஓ” என்று மட்டும் ஓசை கொடுக்க, “நான் இங்கிருந்து போயிட்டா ரொம்பச் சந்தோஷப்படுவல்ல.” கேட்டான்.

“ரொம்ப…”

“சீக்கிரமே உனக்கு அந்தச் சந்தோஷத்தைத் தரேன்.”

எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தவள் எண்ணத்தைக் கலைத்தது கைப்பேசி. அதை எடுத்துப் பார்த்தாள். முழு போதை மருந்தில் மிதந்து கொண்டிருந்தான் ரவி.

“ஓகே! அவன் தெளியத் தெளியக் கொடுத்துக்கிட்டே இருங்க.” எனக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அப்படியே இருக்கையில் கண்மூடிச் சாய்ந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “சாப்பிட்டியா?” மிருதுவாகக் கேட்டான்.

“என்ன திடீர்னு என் மேல அக்கறை?”

“படக்கூடாதா?”

“பணப்பேய் மேல கருணை எல்லாம் வரக்கூடாது.”

எத்தனையோ முறை இந்த வார்த்தைகளைக் கூறி இருக்கிறான் கருடேந்திரன். அப்போதெல்லாம் வலிக்காதது இப்போது வலிக்கிறது. கடினமான மனநிலையில் இருக்கிறாள் என்பதைப் புரிந்தவன் எழுந்தமர்ந்து, “உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு, அதான் கேட்டேன்.” என அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

உடனே பதிலளிக்காமல் தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு, “இந்த முகம் எந்த உணர்வையும், அவ்ளோ சீக்கிரம் பிரதிபலிக்காது. ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம சந்தோஷமா இரு.” என்றாள்.

விளையாட்டிற்கு வீசிய வார்த்தை, நோகடித்து இருக்கிறது என்பது புரிந்து அவளை நெருங்கினான். தான் நெருங்கும் வரை அமைதியாக மூடி இருந்த விழிகள், நெருங்கியதும் அங்கும் இங்கும் அலைபாய்வதைக் கவனித்தான். ரிது சதிகா முன் மண்டியிட்டவன், ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்து கொண்டிருந்த அவள் கை விரல்களைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு,

“இந்த முகம் என்கிட்டப் பிரதிபலிக்கும். எங்கிட்ட மட்டும் தான் பிரதிபலிக்கும். ரிதுவோட அழுகையைப் பார்த்தது நான் மட்டும்தான். அவ முழுசா நம்புறது இந்தக் கருடேந்திரனை மட்டும் தான். நீ என்ன நினைக்கிறன்னு உன் முகத்தை வச்சே என்னால கண்டுபிடிக்க முடியும்…” என்றதும் பட்டென்று திறந்தது அவள் விழிகள்.

உதடுகளைப் பிரிக்காமல் சிரித்தவன், “ரிது ஒரு நிலா… உலகத்துக்குப் பளிச்சுன்னு அழகைக் காட்டினாலும், அதுக்குப் பின்னாடி இருக்கற வானத்துக்கு மட்டும்தான் அதைப்பத்தி முழுசாத் தெரியும். இந்தக் கருடேந்திரன், உனக்கான வானம்! நீ எவ்ளோ மறைச்சு வச்சாலும் தன்னால தெரிஞ்சுடும்.” என்றவன் கைகளுக்குள் இருந்த கைகளைப் பிரித்துக் கொண்டவள், அவன் கைகளைப் பற்றிக் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

எதுவும் பேசாது கருடன் புருவம் உயர்த்த, கன்னத்தோடு ஒட்டி இருந்த கைகளில் முத்தமிட்டாள். அவளாகக் கொடுக்கும் முதல் முத்தம் இது. எத்தனை அறுசுவை உணவை நாக்கு சுவை பார்த்தாலும், முதல் முதலாகச் சுவைத்த தாய்ப்பாலுக்கு ஈடாகாது. அதுபோல், அவள் கொடுத்த முத்தம் மறக்காத பொக்கிஷமாக அவனது மனப் பெட்டகத்தில் சேர்ந்தது.

“இப்பச் சொல்லு, பசிக்குது தான…”

மௌனமாகத் தலையாட்டும் தன்னவள் நெற்றியில் முட்டி, “சாப்பிடப் போலாம்.” என்றான்.

அப்போதுதான் அவன் வீட்டு ஆள்கள் இங்கிருப்பது ஞாபகத்திற்கு வந்தது ரிதுவிற்கு. இன்னும் அதை உணராத கருடேந்திரன், “தூக்கிட்டுப் போகவா…” கேட்க,

“தாராளமாப் போ… உன் குடும்பம் கீழ தான் இருக்கு.” எனப் புன்னகைத்தாள்.

நாக்கைக் கடித்துக் கொண்டு தலையில் அடித்தவன், “மறந்தே போயிட்டேன்.” என்றான்.

“கீழ போ, மறக்காத அளவுக்குக் கும்மி எடுப்பாங்க.”

“நான் அடி வாங்குறதுல அவ்ளோ சந்தோசம்!”

“யா…”

“உன்னால தான் காணாமல் போனேன்னு சொல்லட்டா?”

“தாராளமா!”

“எல்லாரும் சேர்ந்து மொத்துவாங்க.”

“வாழ்க்கை முழுக்க உன்கிட்டக் குப்பை கொட்டுறதுக்கு, அவங்ககிட்ட மொத்து வாங்கிட்டுப் போகலாம்.”

“மேடம் க்கு ரொம்பத்தான் கஷ்டம் போல.”

“கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் பெருமையா சொன்ன, என்னைப் பத்தின எல்லாமே தெரியும்னு.”

“நக்கல் அதிகம்டி உனக்கு…”

“தேங்க்யூ!”

“உன் மேலப் பரிதாபப்பட்டுச் சாப்பிட்டியானு கேட்டேன் பாரு, என்னை எதைக் கொண்டு அடிக்கிறதுன்னு தெரியல.”

“என்னோட ஸ்லிப்பர் நிறைய இருக்கு, வேணும்னா யூஸ் பண்ணிக்க.”

“நீயே வேணா அடிச்சுட்டுப் போறியா?”

“குட் ஆப்ஷன்!”

“அடிங்கு…” என அவன் அடிக்கக் கை உயர்த்த, ஓடிச் சென்று கதவை லேசாகத் திறந்தவள், “அய்யோ… அம்மா, அடிக்கிறானே.” கத்த ஆரம்பித்தாள்.

கீழே இருந்த அனைவரும் பயந்து மேலே பார்க்க, அவசரமாக மனைவியின் வாயை மூடியவன், “சதிகாரி! ஏன்டி என்னைப் போட்டுத்தள்ளப் பார்க்குற. ஏற்கெனவே எப்படா நான் வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இந்தாங்க, இதுக்கும் சேர்த்து வெளுத்து விடுங்கன்னு போட்டுக் கொடுக்கிற.” என்றவன் விடாமல் அவள் தலையில் கொட்டினான்.

“ஹா ஹா ஹா… என்னடா கருடேந்திரா, நீ இவ்ளோ பயந்தாங்கொள்ளியா?”

“இது நாக்கா, இல்ல கத்தியான்னு தெரியல.”

“டெஸ்ட் பண்ணிப் பாரு!”

அவனைப் பற்றித் தெரியாமல் நாக்கை ஒய்யாரமாக நீட்டிக் கொண்டிருக்க, தாவி ஒரே கவ்வாகக் கவ்விக் கடித்துக் கதற விட்டான்.

வலி பொறுக்க முடியாது துள்ளிக் குதித்தவளின் தலைமுடியைப் பற்றி, “உன்னை எல்லாம் இப்படித்தான்டி டீல் பண்ணனும். கொஞ்சம் கொஞ்சிப் பேசினதும் கொழுப்பப் பாரு.” சுழற்ற ஆரம்பித்தான்.

கீழே இருந்த அனைவரும் மேலே ஓடி வந்தனர். வீட்டு ஆள்களின் குரலைக் கேட்டதும் கருடேந்திரன் அவள் முடியை விட, “ஹா ஹா… சிக்குனான்டி சிவனாண்டி!” என்றாள்.

அவளை முறைத்துக் கொண்டே கதவைத் திறக்கச் சென்றவன் சட்டைக் காலரைப் பிடித்துச் சுவரோடு தள்ளிவிட்டவள், ஒரு கையைச் சுவரில் ஊன்றிக்கொண்டு அவனையே தோல் உரிக்கப் பார்த்தாள்.

“விடுடி! எல்லாரும் வந்திருக்காங்க.”

நகரப் பார்த்தவனைச் சிறைப் பிடித்தாள் மற்றொரு கையையும் சுவரில் ஊன்றி. கண்ணில் காதல் வெறியோடு பார்த்துக் கொண்டிருக்க, முதலில் அந்தப் பார்வையோடு ஒட்டி உறவாடாதவன் மெல்ல அடங்கிப் போனான். அவன் மேனி எங்கும் மேய்ந்து, மீண்டும் விழிகளுக்கே வந்தவள் செயலில் அநியாயத்திற்கு வெட்கம் ஆட்கொண்டது கருடேந்திரனை. கூச்சம் தாங்க முடியாது தலை குனிந்தவன் தாடைக்குழியில், தொப்பென்று விழுந்தவள் பச்சக்கென்று அதில் முத்தமும் பதித்தாள்.

தன்னால் அவன் தலை உயர்ந்து கொள்ள, “என்னமோ என்னைப் பார்த்தா ரொமான்ஸே வராது… ஓரினச்சேர்க்கையில இன்ட்ரஸ்ட் இல்ல, அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருந்த. இப்ப என்னடா…” என உதட்டைக் குவித்து அவன் உயிரை வதைத்தாள்.

தன்னை நோக்கி வரும் அந்த இரு இதழ் அம்பை, எதிர்கொள்ளத் திராணியின்றிச் சுவரோடு சுவராக ஒடுங்கிப் போனவன் செயலைக் கண்டு கன்னத்தை அழுத்தமாகப் பிடித்தாள். வெளியே இருந்த அனைவரும், கதவு திறக்காததால் தட்ட ஆரம்பித்தனர். அதில் அவனின் மோகம் கலைந்து கதவின் மீது கவனம் திரும்ப, இரு இதழ் அம்பு கன்னத்தை அடைந்தது.

மெல்லச் சிரித்தவன், இன்னும் அவள் இதழ் தன் கன்னத்தை விட்டு விலகாததால், “கதவை உடைச்சிட்டு உள்ள வந்துடப் போறாங்க.” கெஞ்ச ஆரம்பித்தான்.

“பதில் சொல்லிட்டுக் கிளம்பு!”

“என்னடி?”

“ப்ச்!” என ஆள்காட்டி விரலால் அவன் முகத்தில் கோலம் போட்டவள் இதழைப் பிடித்து, “இப்ப எப்படி இன்ட்ரெஸ்ட் வருது? ஒருவேளை…” நக்கலாக அவனைப் பார்த்தாள்.

“ஓய்!”

“அப்ப எப்படி?”

“அவங்களைச் சமாளிச்சுட்டு வந்து பதில் சொல்றேன்.”

“முதல்ல என்னைச் சமாளி!”

அவன் எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை ரிது சதிகா. இன்னும் நெருங்கி நின்று அவனைச் சோதித்தவள், உடலோடு உடல் உரசி நோக வைத்தாள். எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தடுமாறியவன் மீசையைப் பற்களால் பிடித்து இழுக்க, வலி பொறுக்க முடியாதவன் அப்படியே அவளை இறுக்கிப் பிடித்து உதட்டைக் கடிக்க ஆரம்பித்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் அதரங்கள், பற்களுக்கு இடையே கடிபட்டு, உருத் தெரியாமல் போன கரும்புச் சக்கை போல் ஆனது. வலி தாங்க முடியாது கண்களைச் சுருக்கும் அவளைக் கவனித்தும், பாவம் பார்க்காதவன் தன்னிடம் வந்ததை முழுவதும் மென்று தின்ற பின்பே விடுவித்தான்.

வீங்கிய உதட்டைத் தொட்டவளுக்கு வலி உயிர் போனது. அந்த வெறியில் காயம் கொடுத்தவனைக் கண்டபடி போட்டு அடிக்க, “நீதான பதில் கேட்ட?” என அடிக்கும் கைகளைப் பிடித்தவன், “இது, பாதி பதில் தான்… மீதியை அவங்களைச் சமாளிச்சிட்டு வந்து கொடுக்குறேன். அது வரைக்கும், இதையும் சேர்த்து வச்சிக்க.” எனச் சிவந்த இதழ் மீது மென்மையான முத்தத்தைப் பதித்து விட்டுக் கதவைத் திறந்தான்.

ஆளாளுக்கு ஒன்றைக் கேட்டுச் சுற்றி வளைத்தனர் கருடனை. உள்ளே இருந்தவளோ வெளியே வந்து, “நீ கிஸ் பண்ணதுல பசிக்குது… வா, சாப்பிடலாம்!” என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நகர, அனைவரும் ‘பே’ எனப் பார்த்தனர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

1 thought on “19. சிறையிடாதே கருடா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!