19. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(19)

வரம் – 19

வீட்டுக்குள் நுழைந்த அடுத்த கணமே தன் தந்தையைத் தேடி விரைந்து அவருடைய அறைக்குள் மோஹஸ்திரா நுழைய அவளைப் பின்தொடர்ந்து வந்த ஷர்வாவும் அந்த அறைக்குள் நுழைந்தான்.

உள்ளே நின்ற வைத்தியரோ அவர்களுக்கு தனிமையைக் கொடுத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட படுக்கையில் தளர்ந்து போய் சோர்வாக படுத்திருந்த தன் தந்தையைக் கண்டு முற்றிலுமாய் உடைந்து போனாள் அவள்.

சில தினங்களுக்குள் அவருடைய உடலில் இப்படி ஒரு மாற்றமா..?

மிகப் பெருந் திகைப்பாக இருந்தது அவளுக்கு.

திடகாத்திரமாக இருந்த மனிதர் இப்படி பாதியாக நலிந்து போய் இருப்பதைச் சகிக்க முடியாது பொலபொலவென அவள் கண்ணீர் துளிகளைச் சிந்தத் தொடங்க மெல்ல அவளின் அருகே வந்து அவளுடைய கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டான் ஷர்வாதிகரன்.

அவளுடைய தந்தையோ அவள் வந்திருப்பது கூட தெரியாது மருந்தின் வீரியத்தில் அசந்து உறங்கிக் கொண்டிருக்க விம்மி வெடித்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டு சட்டென அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தாள் அவள்.

“ரா… ராம் அங்கிள் அப்பாக்கு சாதாரண அட்டாக்னு தானே சொன்னீங்க…? ஆனா ஏன் அப்பாவோட உடம்பு இப்படி பாதியா மெலிஞ்சு போய் இருக்கு…? கொஞ்ச நாள்ல அவருக்கு என்ன ஆச்சு. இவ்வளவு சோர்வா இப்படி ஒரு நிலைமைல அவரை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே கிடையாதே…” என அழுதவாறு அந்த அறையின் வெளியே நின்ற ராமிடம் கேட்க அவருக்கோ விழிகள் கலங்கின.

உண்மையைக் கூறினால் இந்தப் பெண் தாங்கிக் கொள்வாளா என்ற கேள்வி அவருக்குள் அக்கணம் எழுந்தது.
“அம்மா இந்த உலகத்த விட்டுப் போனதுக்கு அப்புறமா நம்ம ஐயா ரொம்பவே மாறிட்டாரும்மா.. இப்போ பிஸ்னஸ் லாஸ் ஆனதும் ரொம்பவே உடைஞ்சி போயிட்டாரு…” என ராம் வேதனையோடு கூற அவளோ அவரை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

“எனக்கு மட்டும் அம்மா இல்லை என்கிற வலி இல்லையா ராம் அங்கிள்..? எல்லாத்தையும் மறைச்சிட்டு நான் இங்க சிரிச்சுக்கிட்டு இருக்கிறது அப்பாக்காக மட்டும் தானே..? எனக்காக இதெல்லாம் ஓவர் கம் பண்ணி அவரால வர முடியாதா…? என்னையும் தனியா தவிக்க விட்டுட்டு போகப் போறாரா.?
எவ்வளவு கஷ்டப்பட்டு போத மருந்து எடுக்கிறத தடுத்து நிறுத்தி அதுல இருந்து அவரை வெளியே கொண்டு வந்துருக்கேன்.. எல்லாம் சரியா வர்ற இந்த நேரத்துல அவரே இப்படி உடைஞ்சு போனா நான் எப்படி அங்கிள் சமாளிப்பேன்…?” என அழுதவளைப் பார்க்கப் அவருக்கோ பாவமாகிப் போனது.

“அப்பாக்கு எதுவும் ஆகாது நீ பயப்படாதம்மா.. அவர் கண் முழிச்சதும் அவர்கிட்ட கொஞ்சம் பேசு… உன்னை பார்த்தாலே அவர் பாதி குணமாயிடுவாரு…” என வேறு வழியின்றி போலி நம்பிக்கையை அவளுக்குக் கொடுத்தார் அவர்.

“சரி அங்கிள்…” என தலையசைத்தவள் வைத்தியரை நெருங்க,

“பாப்பா…” என அழைத்தார் ராம்.

“என்ன அங்கிள்…?”

“நல்ல வேளை அரவிந்தன் தம்பியை இந்த முறையாவது அழைச்சுட்டு வந்தியே… உன்னோட அப்பாக்கு தான் எத்தனையோ முறை அரவிந்தனை வரச் சொல்லியும் ஒருமுறை கூட அரவிந்த் தம்பி வரவேயில்லைன்னு ரொம்ப மனக் கவலை.. மகளோட வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு ரொம்பவே பயந்துட்டு இருந்தாரு.. இப்போ உன்கூட இவரையும் பார்த்தா ரொம்பவே சந்தோஷப்படுவாரு..”

“ஐயோ அங்கிள் இவர் அரவிந்தன் இல்…” என அவள் கூறி முடிப்பதற்கு முன்பே
“ஹாய் மோஹஸ்திரா.. ஹாய் மிஸ்டர் அரவிந்தன்..” என்றபடி வைத்தியர் அவளை நெருங்க அவளுக்கோ ஐயோ வென்றானது.

‘ஐயோ என்னாச்சு இவங்களுக்கு என் கூட யார அழைச்சிட்டு வந்தாலும் அது அரவிந்தனாதான் இருக்கணுமா..?’ என தனக்குள் சலித்துக் கொண்டவள்,

“ஹாய் டாக்டர்..” என்றாள்.
யாருக்கும் இப்போது சொல்லி புரிய வைக்கும் நிலையில் அவள் இல்லை.

“அ… அப்பாக்கு இப்போ எதுவும் பிரச்சனை இல்ல தானே..? அவர் நல்லா தானே இருக்காரு..?” என அவள் சற்றே பதற்றத்தோடு கேட்க அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது ஒரு கணம் அமைதியாக இருந்தவர்,

“அப்பாவோட உடல்நிலை இப்ப ரொம்ப மோசமாகிட்டே போகுது.. அவர இனி கண்ணாடிப் பாத்திரம் மாதிரிதான் நீங்க பத்திரமா பாத்துக்கணும்.. எந்தவிதமான அதிர்ச்சியையும் அவருக்கு கொடுத்திடக் கூடாது… மனசு உடைஞ்சு போய் இருக்கிறதால தான் இவ்வளவு பிரச்சனையும் வருது… அவர சந்தோஷமா வச்சுக்கோங்க.,. உங்களை அதிகம் தேடுறாருன்னு ட்ரீட்மென்ட் டைம் புரிஞ்சுகிட்டேன்… முடிஞ்சா அவர் கூடவே இருக்கப் பாருங்க…”

“ஓகே டாக்டர்… நான் பாத்துக்குறேன்…”

“ம்ம்… குட்… அவர் என்ன கேட்டாலும் என்ன சொன்னாலும் அதையே பண்ணுங்க… எந்த காரணத்துக்காகவும் இனி அவர் மெண்டல் ரீதியா பலவீனம் அடையாம இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க…”

“சரி டாக்டர்.. அப்பா ஏன் இன்னும் கண் முழிக்கலை..?”

“அவர் கண் முழிச்சி இருக்குற நேரமெல்லாம் ஓவரா திங்க் பண்ணி ஸ்ட்ரெஸ் ஆகிட்டே இருக்காரு.. மருந்து கொடுத்துருக்கேன்… இப்போ ஆழ்ந்த தூக்கத்துல இருப்பாரும்மா… அவர் முழிச்சுக்க இன்னும் மூணு மணி நேரம் ஆகும்..” என வைத்தியர் கூற சோர்ந்துதான் போனாள் அவள்.

ஷர்வாவோ ராமை நெருங்கியவன் “எனக்கான ரூமை அரேஞ்ச் பண்ணிக் கொடுக்க முடியுமா..?” என சற்றே அழுத்தமாகக் கேட்க,

“சாரி தம்பி… என் கூட வாங்க.. நீங்க வந்ததுமே உங்களுக்கான ரூமை காட்டி இருக்கணும்…” என்றவர் அவனுக்கென ஒரு அறையை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தார்.

“அங்கிள் மோஹி அப்பாவோட பிஸ்னஸ் டீடைல்ஸ் பத்தி எனக்கு சொல்ல முடியுமா..? நீங்கதான் அவரோட பி ஏன்னு மோஹி என்கிட்ட சொன்னா.. அப்படி என்ன லாஸ் ஆகி இருக்குன்னு தெரிஞ்சா என்னால முடிஞ்ச ஹெல்ப்பை கண்டிப்பா பண்றேன்…” என்றவன் தானும் அதே தொழில்துறையில் இருப்பதைப் பற்றி ராமிடம் கூற ராமுக்கோ பெரும் பாரம் குறைந்ததைப் போல இருந்தது.

“நீங்களும் இதே பிஸ்னஸ் தான் பண்றீங்களா…? பாப்பா எங்ககிட்ட இத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே.. நீங்க சிபிஐல இருக்கீங்கன்னு தானே சொன்னா…” என ராம் குழம்ப தன்னை அரவிந்தன் என எண்ணி இவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவன் அவருடைய வார்த்தைகளை மறுக்க முயன்ற கணம் அந்த அறைக்குள் நுழைந்தாள் மோஹஸ்திரா.

“சிபிஐ அவரோட ஆபிசியல் வொர்க்.. அவங்க அப்பாவோட பிசினஸையும் அதோட சேர்த்து பார்த்துக்கிறாரு..” என ராம் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தவள் எதுவும் பேச வேண்டாம் என்பதைப் போல ஷர்வாவைப் பார்த்து தலையசைக்க புருவம் உச்சி மேட்டை தொடும் அளவுக்கு அவனுக்கோ உயர்ந்து தாழ்ந்தது.

ராமுக்கோ நிம்மதியாக இருந்தது.

இவனுடைய உதவி கிடைத்தால் நிச்சயம் சரிந்த தொழிலை மீண்டும் நிமிர்த்தி விடலாம் என நம்பியவர்,
“முதல்ல நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க தம்பி… கொஞ்ச நேரத்துல நானே எல்லா பைலையும் கொண்டுவந்து தரேன்… அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்து இருக்கீங்க… கொஞ்சம் தூங்கி எழுந்திருங்க…” எனக் கூற அவனுக்கும் சற்று ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்ற மறுப்பு எதுவும் கூறாமல் சரியென தலை அசைத்தவன் ராம் வெளியே சென்றதும் மோஹியைக் கேள்வியாகப் பார்த்தான்.

“சாரி ஷர்வா உங்ககிட்ட கேக்காம நான் இப்படி சொல்லி இருக்கக் கூடாது… பட் எனக்கு இப்போ வேற வழி தெரியல.. எல்லாரும் உங்கள அரவிந்தன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க… அப்படியே நினைக்கட்டும்.. அர்வி வரலைன்னு தெரிஞ்சா அப்பா ரொம்பவே உடைஞ்சி போயிடுவாரு… நிறைய தடவை அர்வி கூட பேச ட்ரை பண்ணியும் வொர்க் பிஸினால அர்வி இங்க வரவே இல்லை..
அவங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் ஃபோன்ல மட்டும்தான் பேசி இருக்காங்க.. இப்போ அப்பா கேட்டா நீங்கதான் அர்வின்னு சொல்லிடுறேன்… இப்போவும் அரவிந்தன் வரலைன்னு தெரிஞ்சா அவர் ரொம்ப வருத்தப்படுவாருன்னு தோணுது.. சோ ப்ளீஸ்.. எனக்காக ரெண்டு நாளைக்கு மட்டும் அர்வி மாதிரி நடிக்க முடியுமா..? ப்ளீஸ் அப்பாவோட உடல் நிலைக்காகத்தான் இப்படி நடிக்க சொல்றேன்.. வேற எந்த நோக்கமும் சத்தியமா எனக்கு இல்லை..” என்றாள் அவள்.

“வாட் நான்சென்ஸ்… நான் இங்க வந்தது உனக்கு ஹெல்ப் பண்றதுக்குத்தான் ஆள்மாறாட்டம் பண்ண வரல…”

“இதுவும் ஒரு வகையான உதவிதான் ஷர்வா.. எங்க அப்பாவோட நிலைமையை பார்த்தீங்க தானே..? இப்போ அவரோட மனசு அமைதியா இருக்கிறதுதான் ரொம்ப முக்கியம்… நீங்க நினைச்சீங்கன்னா அந்த அமைதியை அவருக்கு கொடுக்க முடியும்..”

“பட் இது சரியா வருமா மோஹி..? ஆல்ரெடி உங்க அப்பாவும் அரவிந்தனும் கால்ல பேசி இருக்காங்கன்னு சொன்னியே… என்னால மிமிக்ரி எல்லாம் பண்ண முடியாது… என்னோட வாய்ஸ் வச்சு நான் வேற ஆள்னு அவரால கண்டுபிடிக்க முடியாதா..?”

“கால் பேசிருக்காங்கதான்… பட் அதுக்காக அடிக்கடி பேசியது கிடையாது… இதுவரைக்கும் மூணு தடவை தான் ரெண்டு பேரும் பேசி இருக்காங்க.. அப்பா இப்போ இருக்க நிலைமைல வாய்ஸ் நோட்டிஸ் பண்றது எல்லாம் முடியாத காரியம்… சோ அத பத்தி நீங்க கவலை பட வேண்டாம்.. அவர் பொண்ணு கூட அவரோட வருங்கால மாப்பிள்ளை துணையாக இருக்காருங்கிற ஒரு நம்பிக்கையை அவருக்குக் கொடுத்தாலே போதும்..
இந்த மாதிரி சூழ்நிலைலயும் அர்வி வரலைன்னா அவரப் பத்தி அப்பா ரொம்ப தப்பா நினைச்சுருவாரு… ஆல்ரெடி அர்வி மேல அவருக்கு நல்ல அபிப்பிராயமே கிடையாது.. சோ ப்ளீஸ் எனக்காகவும் அர்விக்காகவும் உங்களால இதைப் பண்ண முடியுமா..?” என அவள் கேட்க எந்தவித மறுப்பும் இன்றி சரியென ஒத்துக்கொண்டான் அவன்.

“தேங்க்யூ சோ மச்… எங்க பிஸ்னஸ்க்காக வந்தது மட்டுமில்லாம நான் கேட்டதுமே அர்வி மாதிரி நடிக்க ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…” என சிறு புன்னகையை உதித்தவாறு அவள் கூற,

“இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல மோஹி… பட் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு..” என்றான் அவன்.

“கண்டிஷனா..? என்ன கண்டிஷன்..?” எனப் புரியாது கேட்டாள் அவள்.

“அர்வி மாதிரி நடிக்கிறேன்… ஆனா நீ என்ன அர்வின்னு கூப்பிடக்கூடாது..” என அழுத்தமாகக் கூறினான் அவன்.
அவளுக்கோ சட்டென முகம் மாறியது.

“அரவிந்தன் மாதிரி நடிச்சா அவரோட பெயரைத் தானே சொல்லிக் கூப்பிட முடியும்…” என அவளோ சற்று காரமாகக் கேட்க,

‘ஹனி, டார்லிங், ஹபின்னு எப்படி வேணாலும் என்னை கூப்பிட்டுக்கோ.. இல்லன்னா பேர மென்ஷன் பண்ணாம பேசு… அர்வின்னு மட்டும் என்னைப் பார்த்து நீ கூப்பிடவே கூடாது… இதுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே…” என அவன் அழுத்தமாய் கூற வேறு வழி இன்றி அவனை முறைத்தவாறே சரியென தலையசைத்தவள் அவனிடம் எதுவும் கூறாது அந்த அறையை விட்டு சட்டென வெளியேறினாள்.

😍😍

இன்று மொத்தமாக ஐந்து எபிசோட்ஸ் வரும் டியர்ஸ்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

1 thought on “19. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!