20. தொடட்டுமா தொல்லை நீக்க..!

4.9
(111)

தொல்லை – 20

அஞ்சலியோ அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் திகைத்துப் போயிருந்தாள்.

பின்னே இன்று காலையில் கிளம்பலாம் என்றதும் புடவை கட்டி தயாராகி இருவருடைய ஆடைகளையும் மடித்து வைத்துவிட்டு தயாராக நின்றவள் புன்னகைத்துக் கொண்டே தன் முன்னே வந்து நின்ற தன் கணவனைக் கண்டதும் ஒரு நொடி அதிர்ந்து போனாள்.

ப்ளாக் நிற டி-ஷர்ட் அணிந்து டெனிம் ஜீன் மற்றும் கண்களில் கூலிங் கிளாஸ் உடன் சில்வர் நிற வாட்ச் அணிந்து பக்கா மாடலாக வந்து நின்ற தன் கணவனைக் கண்டதும் அவளுக்கோ விழிகளை மூடவே முடியவில்லை.

இத்தனை நாட்களும் வேட்டி சட்டையில் முறுக்கிவிட்ட மீசையோடும் கழுத்தில் மின்னும் மிகப்பெரிய தங்கச் சங்கிலியோடு பக்கா கிராமத்து காளையாக மட்டுமே அவனைப் பார்த்தவள் திடீரென முழுவதுமாக மாறிப்போய் வந்து நின்ற கதிரைக் கண்டு அதீதமாக திகைத்துப் போனாள்.

அவனுடைய முறுக்கி விட்ட மீசை காணாமல் போயிருந்தது. அதுக்கு பதிலாக சிறு மீசையும் சற்று சேவ் செய்யப்பட்ட மெல்லிய தாடியும் அவனை இன்னும் அழகனாகக் காட்டின.

கழுத்தில் அவன் போட்டிருந்த 10 பவுன் சங்கிலியையும் காணவில்லை. மெல்லிய செயின் ஒன்றில் சிறு நங்கூரம் போன்ற பென்டனை இணைத்து அணிந்திருந்தான் அவன்.

தன்னை திருமணம் செய்து கொண்டவன் இவன் தானா என்ற கேள்வியே அவளுக்குள் வந்து விட்டிருந்தது.

“ஹேய் அம்மு என்ன ஷாக் ஆகி அப்படியே நின்னுட்ட… வா கிளம்பலாம்…” என்றவன் அவளுடைய கரங்களில் இருந்த பெட்டியை வாங்கி கீழே நின்ற காரில் வைப்பதற்காக முன்னே நடந்தவிட அவளோ அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

அதன் பின்னர் இரு பெற்றோர்களிடமும் விடை பெற்று காரில் ஏறி அமர்ந்து கொண்டவளோ அடிக்கடி அவனை இமை சிமிட்டாமல் பார்த்து வைக்க அவனோ அவளுடைய பார்வையில் சிரித்து விட்டான்.

“என்னடி…”

“என்ன மாமா இது… இப்படி முழுசா மாறி நிக்கிறீங்களே… என் கண்ணையே என்னால நம்ப முடியல… சினிமால வர ஹீரோ கணக்கா இருக்கீங்க…” என கூறியவளை நெற்றி முட்டிச் சிரித்தவன்,

“சென்னைல இப்படித்தான்டி ட்ரெஸ் பண்ண முடியும்… ஆபீஸ்க்கு எல்லாம் வேட்டி சட்டையோட போக முடியாது… நான் வச்சிருந்த மாதிரி முறுக்கு மீசையோட போனா பாதி பேர் பயந்துருவானுங்க… இடத்துக்கு ஏத்த மாதிரி நம்மள மாத்திக்கணும்…” என்றான் அவன்.

“ஓஹ்..? அப்போ நானும் மாறணுமா மாமா… சினிமால ஹீரோயின் போட்டுக்கிற மாதிரி அரைகுறையா எல்லாம் என்ன ட்ரெஸ் பண்ண சொல்ல மாட்டீங்கல்ல…” என அவள் தயங்கியவாறு கேட்க,

“நோ வே… நீ உனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணலாம்… அதுக்காக எப்பவும் புடவையே கட்டிக்கிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை… சுடிதார் அழகான ஃப்ராக்னு நிறைய டிரஸ் இருக்கு.. அங்க உனக்கு ஏத்த மாதிரி நல்ல டிரஸ் நான் சூஸ் பண்ணிக் கொடுக்கிறேன்… அது உனக்கும் கண்டிப்பா பிடிக்கும்…” என்றான் அவன்.

“சூப்பர் மாமா…” என்றவளுக்கோ ஆர்வம் பிறந்தது.

வாய் வலிக்கும் வரைக்கும் தன்னுடைய தயக்கம் எல்லாம் மறந்துவிட்டு சென்னை எப்படி இருக்கும் என்ற கேள்விகளை வித்தியாச வித்தியாசமாக கேட்டு ஓயாது பேசிக் கொண்டிருந்தவள் அவளை அறியாமலேயே உறங்கிவிட, அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டான் கதிர்வேலன்.

அவன் மனம் நிறைந்து போனது.

அடுத்த சில மணி நேரங்களில் அவனுடைய ட்ரைவரோ சென்னையை வந்து அடைந்திருந்தார்.

தன் மார்பில் சாய்ந்து அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்புவதற்கு அவனுக்கு மனம் கூடவே இல்லை.

அதற்காக இப்படியே அவளை காரில் விட்டுச் சென்று விட முடியாது அல்லவா…

மெல்ல அவளுடைய கன்னத்தை வருடி “அம்மு…” என அழைக்க மெல்ல விழிகளைத் திறந்து கொண்டாள் அவள்.

“நம்ம வீடு வந்துருச்சு… வா…” என அவன் கூற உற்சாகமாக தலையசைத்தாள் அஞ்சலி.

“கேசவ்… லாங் ட்ரைவ் பண்ணதால இந்தக் காரை செட்ல விட்ரு… நம்மளோட மத்த காரை எடுத்துட்டு நீ உன்னோட ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கோ…”

“ஓகே சார்… நீங்க ஈவினிங் எங்கேயும் போறதுன்னா கால் பண்ணுங்க… நான் வந்துடுவேன்…” என்றான் கேசவன்.

“இல்ல… இன்னைக்கு ரொம்ப தூரம் ட்ரைவ் பண்ணி வந்திருக்க… உனக்கும் டயர்டா இருக்கும்… நீ ரெஸ்ட் எடுத்துக்கோ… எங்கேயும் போறதுன்னா நான் ட்ரைவ் பண்ணுறேன்… நாளைக்கு காலைல நம்ம காலேஜ்ல ஒரு ஃபங்ஷன் இருக்கு… சோ நேரத்துக்கு போகணும்… அதுக்கு மட்டும் பிக்கப் பண்ண வந்திரு…” என்றவன் அஞ்சலியுடன் அந்தக் காரில் இருந்து இறங்கினான்.

“அப்போ இந்த அண்ணா உங்க ட்ரைவரா…” எனக் கேட்டாள் அஞ்சலி.

“ஆமா… ஊருக்கு வரும்போது கேசவையும் கூட்டிட்டு வந்தேன்… என் கல்யாணத்தை பார்த்துட்டு அவனும் என் கூடவே ஒன்னா சென்னைக்கே திரும்புறேன்னு சொன்னான்…”

“ஓஹ்… ம்ம்… அப்போ நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகத்தான் ஊருக்கு வந்தீங்களா…”

“ம்ம்…”

“நிஜமாவா..?”

“ஆமாடி பொண்டாட்டி…” என்றவனுக்கு உதடுகள் சிரிப்பில் துடித்தன.

இன்னும் தன்னுடைய மனைவி எத்தனை கேள்விகளைத்தான் கேட்கப் போகின்றாளோ என எண்ணியவன் சலிக்காமல் அவள் கேட்ட அனைத்திற்கும் பதில் கூறிக் கொண்டே நடந்தான்.

“ஏங்க…” ராகமாக இழுத்தாள் அவள்.

“சொல்லுங்க…” அவளைப் போலவே இழுத்து பதில் கூறினான் அவன்.

“இங்கதான் உங்களுக்கு வீடு வேலை எல்லாம் இருக்கே… அப்போ ஏன் சென்னைல பொண்ணு பாக்காம நம்ம கிராமத்துல பார்த்தீங்க…”

“அதுவா.. இங்க இருக்க எல்லாருக்கும் நான் ஒரு கடைஞ்செடுத்த பொறுக்கின்னு தெரியும்.. எனக்கு யாருமே பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்கடி.. அதனாலதான் நல்ல பையன் மாதிரி ஊர்ல ஒரு பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்துடலாம்னு நினைச்சேன்.. கூட்டிட்டும் வந்துட்டேன்..” என அவன் சிரிக்காமல் கூறியதும் அவளோ விக்கித்துப் போய் அப்படியே நின்று விட்டாள்.

“கெ.. கெட்ட பையனா நீங்க..?” எனக் கேட்டவளின் விழிகள் கலங்குவதைக் கண்டதும் அவனுக்கோ ஐயோவென்றானது.

“ஏய் அம்மு பயந்துட்டியா..? நான் சும்மா சொன்னேன்டி..” என்றவன் அவள் அருகே நெருங்கி அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டான்.

“என்ன சொன்னாலும் நம்பிருவியா..? உன்னோட புருஷன் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்ல பையன் நம்புடி..”

“ம்ம்..” என விழிகளைத் துடைத்துக் கொண்டாள் அவள்.

“அம்மாக்கு நம்ம ஊர்லயே நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை… எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வர்ற காதல்ல பெருசா நம்பிக்கை இல்லை… அதனால வீட்ல பார்க்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன் அம்மு…” என்றவன் “எப்படி இருக்கு நம்ம வீடு…” என தன்னுடைய வீட்டைக் காட்ட பிரமித்துப் போனாள் அஞ்சலி.

“என்ன மாமா இது? இவ்வளவு பெருசா இருக்கு…”

“ம்ம்… இது மாதிரி இன்னும் நாலு வீடு இங்க இருக்கு..”

“நிஜமாவா..?”

“ஆமாடி.. இந்த வீட்டை அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னோட பிரண்ட் ஃபாரின் போறதால விக்க ட்ரை பண்ணிட்டு இருந்தான்… நம்ம கிராமத்து வீடு மாதிரி இங்க தோட்டமெல்லாம் ரொம்ப பெருசா இருக்கும்.. அதனால இந்த வீட்டை ரொம்ப பிடிச்சுப் போய் வாங்கினேன்.. மத்த வீடெல்லாம் கொஞ்சம் பிளாட் மாதிரி மாடல்.. ரொம்ப ரிச்சா இருக்கும்.. பட் என்னோட ஃபேவரைட் வீடு இதுதான்..”

“ரொம்ப அழகா இருக்கு மாமா.. இத அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே வாங்கிட்டீங்களா…? ஆனா பாக்க எல்லாமே புதுசா இருக்கே…”

“நீ வர்றதால புதுசா பெயிண்ட் எல்லாம் பண்ணி ரெடி பண்ணச் சொன்னேன்…” என்றதும் அவளுடைய முகம் மலர்ந்து போனது.

மூன்று தளங்கள் கொண்டு உயர்ந்து நின்ற அந்த வீட்டைப் பார்த்தவளுக்கு இதையெல்லாம் சுத்தம் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தோன்றி விட பகீரென இருந்தது.

“இவ்ளோ பெரிய வீட்டை எப்படி மாமா என்னால சமாளிக்க முடியும்…? இத கிளீன் பண்ணி முடிக்கறதுக்குள்ள என்னோட இடுப்பு எலும்பு உடைஞ்சிடுமே…” எனக் கேட்டவளை பார்த்துச் சிரித்தவன் “அதுக்கெல்லாம் ஆளுங்க இருக்காங்கடி… நீ இங்க எந்த வேலையும் பண்ண வேணாம்… என்ன மட்டும் பாத்துக்கோ… போதும்…” என அவன் இமை சிமிட்டிக் கூற அவளுக்கோ கன்னங்கள் சிவந்தன.

அதன் பின்னர் அந்த வீட்டை அவளுக்கு சுற்றிக் காட்டியவன் தங்களுடைய படுக்கையறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

ஊரில் இருந்ததை விட மிகப்பெரிய படுக்கையை பார்த்தவளுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 20 பேர் இந்த அறையில் தாராளமாக தங்கிக் கொள்ளலாம் என நினைத்த அஞ்சலியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் கதிர்.

அவளுக்கோ உடல் சிலிர்த்தது.

“சீக்கிரமா பிரெஷ் ஆயிட்டு வாடி…” என அவன் ஹஸ்கி குரலில் கூற அவன் எதற்காக கூறுகின்றான் என்பதை புரிந்து கொண்டவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.

“அது வந்து மாமா…” எனத் திணறியவளை தன்னை நோக்கித் திருப்பியவன் “இப்போ நமக்கு ஆபீஸியலா கல்யாணம் ஆயிடுச்சு பொண்டாட்டி… ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட வேண்டாமா…” என அவன் சிரிக்க,

“அதுதான் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே கொண்டாடிட்டீங்களே…” என சிணுங்கினாள் அவள்.

“ஏய்… அதான் அன்னைக்கே பூஜை ரூம்ல வச்சு உன் கழுத்துல தாலியை கட்டிட்டேனே…” என்றவனின் உதடுகள் அவளுடைய நெற்றியில் புதைந்து கன்னத்தை வருடி கழுத்தில் பதிய உருகிப் போனாள் பெண்ணவள்.

“உங்கள பத்தி எனக்கு எதுவுமே தெரியல மாமா…”

“இனி தெரிஞ்சுக்கோ…”

“ஆமா… உங்க கிட்ட நிறைய பேசணும்…”

“தாராளமா பேசு…” என்றவனின் உதடுகள் அவளுடைய முதுகில் புதைய அவளுக்கு தேகம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

அவனுடைய கரங்களோ கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறி அவளுடைய உடலில் பயணிக்கத் தொடங்க சட்டென அவனை விட்டு விலகியவள்,

“நான் குளிச்சிட்டு வந்துடுறேனே…” என்றாள்.

“அம்மு… சேர்ந்து குளிக்கலாமா…” என அவன் ஆசையாய் கேட்க இவளுக்கு தேகம் படபடத்துப் போனது.

“அச்சோ வேணாம் மாமா…”

“ஏன்டி…” “எனக்கு கூச்சமா இருக்கும்…”

“ஹா ஹா… இன்னைக்கு நைட்டோட எல்லா கூச்சத்தையும் இல்லாம ஆக்குறேன்…” என்றான் அவன் லஜ்ஜையின்றி.

அவளோ சிணுங்கிக் கொண்டே தன்னுடைய மாற்று உடையை எடுத்துக் கொண்டவள் “போங்க மாமா… நீங்க ரொம்ப மோசம்..” என்றவாறு குளியல் அறைக்குள் வேகமாக புகுந்து விட சிரித்துக் கொண்டே தன்னுடைய முடியை அழுத்தமாக வருடிவிட்டவனுக்கு மனம் முழுவதும் நிம்மதி பரவியது.

அதே கணம் அவனுடைய அலைபேசி சிணுங்குவதை உணர்ந்து யாரென எடுத்துப் பார்த்தவன் மதுராவின் எண்ணில் இருந்து அழைப்பு வருவதை உணர்ந்து அதை ஏற்று காதில் வைத்தான்.

அதே கணம் குளியல் அறைக்குள் துண்டு எடுக்காமல் சென்ற அஞ்சலியோ மீண்டும் அறைக்குள் நுழைய “சொல்லு மதுரா…” என்ற கணவனின் குரலில் அதிர்ந்து நின்றாள் அவள்.

அவனோ அவளை தன்னருகே பார்வையால் வரும்படி அழைத்தவன் போனை ஸ்பீக்கரில் போட மறுபக்கம் பேசிய மதுராவின் குரல் அஞ்சலிக்கும் கேட்டது.

“தேங்க்யூ சோ மச் கதிர்… நான் கேட்ட பணத்தை உடனே கொடுத்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்…” என்றாள் அவள்.

“இட்ஸ் ஓகே… படிக்கிறதுக்காகத் தானே இவ்வளவும் பண்ணின… நல்லா படி… அப்புறம் முடிஞ்சா உங்க அம்மாக்கு கால் பண்ணி பேசிடு… வீட்ல எல்லாருக்கும் உண்மைய தெரியப்படுத்திட்டேன்… இப்போ எந்த பிரச்சனையும் இருக்காது… நானும் அஞ்சலியும் எல்லார் முன்னாடியும் முறைப்படி கல்யாணம் பண்ணி கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிட்டோம்… இனி நீ பயந்து சென்னைலயே இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை… உங்க அம்மாகிட்ட பேசு… முடிஞ்சா லீவு கிடைக்கும்போது ஊருக்கு போயிட்டு வா…” என அவன் கூறியதும்,

“வாவ்… ரெண்டு பேரும் முறைப்படி கல்யாணமே பண்ணிக்கிட்டீங்களா…? கங்கிராஜுலேஷன்ஸ்… எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு… அஞ்சலி உங்களுக்கு சூப்பரா செட்டாவா…” என அவள் மகிழ்ச்சி குரலில் பேச அஞ்சலியின் முகமோ மலர்ந்தது.

“சூப்பரா செட் ஆனதால தானே விடாம அவளை கெட்டியாக பிடிச்சுக்கிட்டேன்…” என கதிர் கூற அஞ்சலியின் முகமோ சிவந்து போனது.

“சும்மா இருங்க மாமா…” என அவள் வெட்கத்தோடு கூற அவளின் குரலை மறுபக்கத்தில் இருந்து கேட்ட மதுராவோ “ஏய் கள்ளி… வெட்கப்படுறியா…” என அவளிடம் பேச தொடங்கினாள் மதுரா.

“போ மது அக்கா…” என சிணுங்கியவளின் சிவந்த முகத்தை ரசித்துப் பார்த்தான் கதிர்.

“இப்போதான் அஞ்சு… எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு…”

“அக்கா நீ எப்படி இருக்க… நல்லா இருக்க தானே…”

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் அஞ்சு… இங்க எல்லாமே சூப்பரா இருக்கு…”

“ஆமாக்கா… நிஜமாவே இங்க எல்லாமே சூப்பரா இருக்கு… ரொம்ப பெரிய பெரிய பில்டிங்ஸ்… பீச்னு வரும்போது எல்லாத்தையும் பாத்துட்டேதான் வந்தேன்… சூப்பரா இருக்கு…” எனக் கூறிய அஞ்சலியின் குரலில் திகைத்துப் போனாள் மதுரா.

“என்னடி சொல்ற… இப்ப நீ எங்க இருக்க…” எனக் கேட்டாள் அவள்.

“ஐயோ சாரிக்கா… உன்கிட்ட சொல்லவே மறந்துட்டேனே… நான் மாமா கூட சென்னை வந்திருக்கேன்… இப்போ சென்னைலதான் இருக்கேன்…” என்றாள் அஞ்சலி.

“என்னது சென்னை வந்து இருக்கியா… ஏன்…?” அதிர்ந்து போய் கேட்டாள் மதுரா.

“மாமாவோட ஆபீஸ் இங்க சென்னைலதான் இருக்காம் மது அக்கா…”

“ஆபீஸா… கதிர் நீங்க என்ன வேலை பாக்குறீங்க…? சென்னைலயா வேலை பாக்குறீங்க…” என அதிர்ந்தவளாய் கதிரிடம் கேட்டாள் மதுரா.

அவளுடைய கேள்வியில் சிரித்தவன் “நான் வேலை பார்க்கல… நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறேன்…” என்றான் அவன்.

மதுராவோ புரியாமல் “புரியல கதிர்…” என்றாள்.

“நாளைக்கு நான் உன்னோட காலேஜுக்கு வருவேன்… அப்போ சொல்றேன்…” என்றவன் துண்டை எடுத்த அஞ்சலியோ கால் தடுமாறி தரையில் சரிந்து விட,

“ஏய் அம்மு… என்னடி ஆச்சு… அடிபட்டிருச்சா… பார்த்து நடக்க மாட்டியா…” எனப் பதறியவன் வேகமாக அவளுடைய காலைப் பற்றி பரிசோதிக்க,

“அச்சோ மாமா… எனக்கு அடியே படல… கால விடுங்க…” என்றாள் அஞ்சலி.

“கொஞ்ச நேரத்துல பதறிப் போயிட்டேன் அம்மு…” என்றவன் அப்படியே குனிந்து அவளுடைய கால்களில் முத்தமிட வெட்கத்தோடு தன் கால்களை இழுத்துக் கொண்டவள்,

“கூசுது மாமா…” எனச் சிணுங்கினாள்.

கதிரோ அப்போதுதான் அழைப்பை துண்டிக்காததை உணர்ந்தவன் “ஓ மை காட்… சாரி மதுரா நீ லைன்ல இருந்ததையே மறந்து போயிட்டேன்… நான் அப்புறமா பேசுறேன்…” என்றான்.

அவர்களுடைய உரையாடலைக் கேட்டுத் திணறிப் போய் இருந்த மதுராவோ கதிரின் கூற்றுக்கு திணறியவாறு “சரி…” எனக் கூற,

“மாமா… அக்காகிட்ட நான் பேசணும்… போன கொடுங்க…” என்றாள் அஞ்சலி.

அழைப்பைத் துண்டிக்கப் போன மதுராவின் கரங்களோ அஞ்சலியின் குரலைக் கேட்டு அப்படியே அசைவற்று நின்றன.

“உனக்கு புது போன் வாங்கி கொடுக்குறேன் அம்மு… அதுல நீ உங்க அக்கா கூட அம்மா கூட யார் கூட வேணாலும் பேசு… இப்போ நீ என்னை மட்டும் கவனி…” என்றவன் ஃபோனை தூக்கி படுக்கையில் போட்டு விட்டு அஞ்சலியை நெருங்கி அணைத்துக் கொள்ள கலகலவென சிரித்த அஞ்சலியின் குரலை கேட்க முடியாமல் சட்டென அழைப்பைத் துண்டித்தாள் மதுரா.

அவளுடைய முகமோ இறுகிப்போனது.

🔥🌹🔥

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 111

No votes so far! Be the first to rate this post.

1 thought on “20. தொடட்டுமா தொல்லை நீக்க..!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!