அவனுடைய கர்ஜனைக் குரல் அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் கேட்டிருக்கும்.
அருகில் நிற்கும் தன்னிடம் பேசுவதற்கு இப்படிக் கத்த வேண்டுமா என்ன..?
அவமானத்தில் முகம் சிவந்தது அவளுக்கு.
அடுத்து ஏதாவது சொல்லித் திட்டி விடுவானோ என்ற பயத்தில் தன் கரத்தில் வழிந்த உதிரத்தையும் புறக்கணித்துவிட்டு வேக வேகமாக சுத்தப்படுத்தி முடித்தவள் சமையல் அறைக்குள் சென்று தன்னுடைய கரத்தைக் கழுவினாள்.
உள்ளங்கையில் காயம் ஆழமாக இருக்கின்றதா எனப் பார்த்தவளுக்கு காயம் அவ்வளவு பெரிதல்ல என்பது புரிந்தது.
இனியும் தயங்கினால் மீண்டும் கத்தத் தொடங்கி விடுவான் என்பதை உணர்ந்து வேகமாக வெளியே வந்தவள் புதிய மார்பிள் தட்டு வைக்கப்பட்டிருந்த பீட்சாவை மீண்டும் தன்னுடைய கரத்தில் ஏந்திக் கொண்டாள்.
“கிட்ட வா.. ஒவ்வொரு தடவையும் உனக்கு சொல்லிக் கொடுக்க முடியாது. நாளைக்கு இதெல்லாம் பெர்பெக்ட்டா இருக்கணும்..” என அவன் அழுத்தமாகக் கூற சரி என ஆடியது அவளுடைய தலை.
இந்த பீட்சாவின் ஒரு துண்டை கடித்து உண்டால் என்ன.?
இது என்ன அவ்வளவு பெரிய வேலையா..?
இதை நான்தான் அவனுக்கு செய்தாக வேண்டுமா..?
வேறு வழி இல்லையே.
பீட்சாவை எடுத்து அவனுடைய வாய்க்கு அருகே கொண்டு சென்றாள் அவள்.
ஃபோனை பார்த்தவாறே சில துண்டுகளை அவள் கொடுக்க கொடுக்க கடித்து மென்றவன் “போதும்..” எனக் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட அவன் செல்லும் வரை அப்படியே நின்றவள் அவன் மேலே அறைக்குள் சென்றதும்தான் அங்கே இருந்த இருக்கை ஒன்றில் தொப்பென அமர்ந்தாள்.
இன்னும் அவளுடைய கரம் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.
எப்போது இருந்து நான் இப்படி கோழையாகிப் போனேன்..?
ஒருவனின் அதட்டலுக்குக் கூட இப்படி என்னுடைய உடல் நடுங்குகின்றதே.
அக்கணம் தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்தாள் செந்தூரி.
அதே நேரம் அங்கே நின்ற வேலையாளோ மீண்டும் அவளின் முன்பு இன்னொரு மார்பிள் தட்டைக் கொண்டு வந்து வைத்தவன் அவளுக்கும் உணவைப் பரிமாற “வேணாம்..” என மறுத்தாள் அவள்.
“ஏன் மேடம் பீட்சா பிடிக்காதா..? இல்லைன்னா வேற டிஷ் வைக்கட்டுமா..?” என அவன் பணிவாகக் கேட்க அதற்கும் வேண்டாம் என தலையசைத்தாள் அவள்.
“பசிக்கல அண்ணா. கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேனே..” என சோர்வான குரலில் அவள் கூற ஒரு நொடி அந்த வேலையாளின் கண்களில் பரிதாப உணர்வு தோன்றி மறைந்தது.
“ஓகே மேடம்..” என அவளைப் பார்த்து தலையை இடைவரை குனிந்து நிமிர்ந்தவன் அவள் முன்னே வைத்திருந்த தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட அப்படியே அந்த உணவு மேசையின் மீது தன் தலையை சாய்த்து படுத்துக் கொண்டாள் செந்தூரி.
வேண்டுமென்றே அவன் தன்னை நோகடிப்பது அவளுக்குப் புரியத்தான் செய்தது.
எவ்வளவோ தன்னைத் திடப்படுத்த முயன்றும் முடியாது அழுகை பெருக சில நிமிடங்கள் அப்படியே மேஜை மீது படுத்திருந்து கண்ணீர் சிந்தினாள் அவள்.
எப்போது இந்த நரகத்திலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும்..?
மீண்டும் என்னுடைய பழைய வாழ்க்கைக்குள் நான் எப்போது நுழைவேன்..?
இவனிடம் கைகட்டி தலை கவிழ்ந்து இப்படி ஒரு நிலையில் வாழும் வாழ்க்கை சீக்கிரமே முடிந்துவிட வேண்டும் இறைவா எனப் பிரார்த்தித்தது அவளுடைய மனம்.
அந்த இடமே சற்று நேரத்தில் யாரும் இன்றி வெறிச்சோடிப் போய்விட அவளுக்கோ அது சற்றே நிம்மதியைக் கொடுத்தது.
மேலே அறைக்குள் செல்லவே விருப்பமின்றி அப்படியே மேசையில் படுத்துக் கிடந்தவளுக்கு கண்கள் சிவந்து கன்னங்கள் கண்ணீரில் நனைந்து போயின.
இப்படியே இரவு முழுவதும் உறங்கிவிட்டால் கூட நிம்மதியாக இருக்குமே.
ஆனால் அதற்கு அவன் அனுமதிப்பானா..?
தன்னுடைய கரத்தை விரித்துப் பார்த்தாள். சின்னக் கீறல் என்பதால் உதிரம் நின்று காய்ந்து போயிருந்தது.
அதே கணம் மீண்டும் ஒருவன் அவள் அருகே வந்து நின்றான்.
அவளோ கேள்வியாக அந்த வேலையாளைப் பார்க்க,
“மேடம் சார் உங்கள ரூமுக்கு வரச் சொன்னாரு..” என்றான் அவன்.
அபாயச் சங்கு ஒலித்து விட்டது.
இனி எப்படித் தப்பிப்பது..?
படுக்கையில் தன்னை பலவந்தப்படுத்தப் போகின்றானோ..?
இத்தனை வருடங்களாக கட்டிக் காத்த அவளுடைய கற்பு ஒரு ஆணவக்காரனின் கைப்பிடிக்குள் காணாமற் போகப் போகின்றதோ..?
கொடுமைப்படுத்துவானோ..?
வலிக்கச் செய்வானோ..?
உடல் முழுவதும் ஊசியால் குத்தியதைப் போல வலித்தது.
“மேடம் சார் உங்கள வரச் சொன்னாரு..” என மீண்டும் அவளுக்கு நினைவு படுத்தினான் அந்த வேலையாள்.
அவளுக்குப் புரிந்து விட்டது.
இனி அவளே விரும்பினாலும் இந்த இடத்தில் அவளால் இருக்க முடியாது.
மெல்ல எழுந்து கொண்டாள்.
“போறேன்.. போயிடுறேன்..” என தடுமாறி வெளிவந்தன அவளுடைய வார்த்தைகள்.
தரைக்கு வலித்து விடுமோ என அடி மீது அடிவைத்து மெல்ல மெல்ல நடந்து படிகளில் ஏறத் தொடங்கியவளுக்கு தன் மனதை அக்கணம் திடப்படுத்தத் தெரியவில்லை.
மிகவும் பலவீனமாக இருப்பதைப் போல உணர்ந்தாள்.
எவ்வளவு மெதுவாக நடந்தும் கூட சீக்கிரமே அவனுடைய அறையின் முன்பு வந்து விட்டது போலத்தான் தோன்றியது அவளுக்கு.
கதவின் முன்பு நின்று சில நொடிகள் தாமதித்தாள்.
பதற்றத்தில் அவளுடைய கைவிரல்கள் அவள் அணிந்திருந்த ஆடையை இறுக்கப்பற்றிக் கொண்டன.
நொடிகள் நிமிடங்களாக மாற பொறுமையின்றி வேகமாக அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன் விழிகளில் கண்ணீரோடு நின்ற செந்தூரியை ஆழ்ந்து பார்த்தான்.
“இவ்வளவு தூரம் வந்தவளுக்கு பெட் ரூமுக்கு வர்றதுல என்ன தயக்கம்..?” அதட்டலாக அவனுடைய கேள்வி வெளிவந்தது.
பதில் கூறவில்லை அவள்.
தலையை நன்றாக தாழ்த்திக் கொண்டாள்.
“உள்ளே வா..” என்ற கட்டளையோடு அவன் உள்ளே சென்று விட அறைக்குள் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள் செந்தூரி.
“சோ இப்போ என்ன அட்ஜஸ்ட் பண்ண ரெடியா இருக்க..?” எனக் கேட்டவாறே அவன் தன்னுடைய ஷர்ட் பட்டன்களைக் கழற்ற அவ்வளவுதான் உடைந்து போனாள் அவள்.
எத்தனையோ முறை அவன் முன்பு கண்ணீர் சிந்தக்கூடாது என நினைத்திருந்ததெல்லாம் அவளுக்கு மறந்து போனது.
தேம்பித் தேம்பித் அழத் தொடங்கி விட்டாள் அவள்.
“ப்ச்..” சலித்தான் அவன்.
“எ. என்ன விட்ரு ப்ளீஸ்..”
“ஓ கமான் பேப்.. பிடிக்காத பொண்ண நான் திரும்பிக் கூடப் பாக்குறது கிடையாது.. எந்த பொண்ணையும் நான் வற்புறுத்தி தொடுறதும் கிடையாது.. கூல் நான் உன்ன எதுவுமே பண்ண மாட்டேன்..”
என்றதும் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
நடிக்கின்றானோ..?
பொய் சொல்லி ஏமாற்றப் பார்க்கின்றானோ என அவனுடைய விழிகளை ஆராய்ச்சியாகப் பார்த்தவளுக்கு அந்த விழிகளில் பொய் தெரியவில்லை என்றதும் சற்றே அழுகை மட்டுப்பட்டது.
“ஒரு பொண்ண வற்புறுத்தி அவ கூட செ***** வச்சிக்கிற அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போயிடல… நான் கண்ணசைச்சாலே என்னோட படுக்கைல வந்து விழ ஆயிரம் பேர் வெளிய காத்துக்கிட்டு இருக்காங்க.. நான் எதுக்காக பிடிக்காத உன்கிட்ட கெஞ்சணும்..? நோ வே… நீயே எதிர்பார்த்தா கூட அது நடக்கவே நடக்காது..” என அவன் திமிராகக் கூற,
முதல் முறையாக அவனுடைய திமிரை நினைத்து சந்தோஷப்பட்டாள் அவள்.
‘இந்த மலமாடு நம்மள எதுவும் பண்ண மாட்டான்..’ என எண்ணி வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அனைத்திற்கும் பூம்பூம் மாடு போல தலையாட்டினாள்.
கடவுள் அவளைக் கைவிடவில்லை.
இது போதுமே என எண்ணி நிம்மதி அடைந்தவளுக்கு சோபாவில் சென்று படுத்து விடலாம் என்று தோன்றியது.
அவனோ படுக்கையில் அமர்ந்தவன் “ரிமூவ் யுவர் ட்ரெஸ்..” என்றான்.
விக்கித்துப் போனாள் அவள்.
என்ன கூறுகின்றான் இவன்..?
புரியாமல் அவனையே அவள் பார்க்க “உனக்கு காதுல ஏதாவது ப்ராப்ளமா..? அடிக்கடி காது கேக்குதில்ல போல இருக்கே..!” என எள்ளலாகக் கேட்டான் அவன்.
“எ.. என்ன சொன்னீங்க..?”
“உன்னோட ட்ரஸ்ஸ ரிமூவ் பண்ணச் சொன்னேன்.”
“எது.. எதுக்கு..? பிடிக்காத பொண்ண வற்புறுத்த மாட்டேன்னு சொன்னீங்க.. இப்போ எதுக்கு இப்படி எல்லாம் சொல்றீங்க..?” என படபடத்தாள் அவள்.
“ஆமா பிடிக்காத பொண்ண வற்புறுத்தி தொட மாட்டேன்னுதான் சொன்னேன்.. இப்போ நான் உன்ன தொடப் போறது இல்ல.” என்றதும் அவளுக்கு தலை வெடிப்பது போல இருந்தது.
“ஒவ்வொரு நிமிஷமும் நீ எதுக்காக இங்க வந்து இருக்கேன்னு உனக்கு புரியணும்ல..? என் பக்கத்துல நீ எந்த நிலைமைல இருக்கேங்கிறது உன் புத்தில உறைச்சிக்கிட்டே இருக்கணும்.. உனக்கு மூணு வேலை சாப்பாடு போட்டு இங்க வேலை கொடுக்கவா உன்னை கூட்டி வந்தேன்..? என்ன நீ எதுக்காக அடிச்சியோ அந்தக் காரணத்துக்காகதான் இங்கே வந்திருக்கேன்னு உனக்கு ஒவ்வொரு இரவும் புரியணும்..
கவலைப்படாத பேப்… என்னோட கண்ட்ரோல மீறி உன் அழகைப் பார்த்து மயங்கி தொடுறதுக்கு நான் ஒன்னும் அலையுற ஆம்பள கிடையாது.. ஐ அம் ஸ்டடி…” என அவன் இமை சிமிட்டிச் சிரிக்க அவளுக்கோ இது என்ன கொடுமை என்றுதான் தோன்றியது.
இவ்வளவு பச்சையாகப் பேசுகின்றானே.
ஒரு குடும்பப் பெண்ணால் அவன் கூறுவதைப் போல எல்லாம் செய்துவிட முடியுமா என்ன..?
ஏதோ பொருட்களை வைத்து விட்டு வா என்பதைப் போல ஆடையைக் கழற்றி விட்டு வா என்று அல்லவா கூறுகின்றான்.
இப்போது அவன் தன்னை தவறாக தொடமாட்டான் என எண்ணி சந்தோஷப்படுவதா இல்லை அவன் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக இருக்கப் போகின்றோம் என்பதை நினைத்து வேதனை கொள்வதா..?
அவளால் அப்படி இருந்துவிட முடியுமா..?
சீச்சீ..!
கூச்சம் என்றால் என்ன என்பதைப் பற்றி இவன் அறிவானா..?
தன்னை ஈன்றெடுத்த அன்னையிடம் கூட தன் உடலை பார்ப்பதற்கு அனுமதியாதவள் எந்த உரிமையும் இல்லாத ஒரு கயவன் முன்பு எப்படி அந்தக் கோலத்தில் நிற்பாள்.?
இக்கணமே அவளுடைய உடலை விட்டு உயிர் பிரிந்தால் கூட நிம்மதியாக இருக்கும் என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றி விட்டது.
“இதோ பாரு பேபி.. என்ன கோபப்படுத்தாத.. மறுபடியும் மறுபடியும் ஒருத்தர்கிட்ட ஒரே விஷயத்தை நான் சொல்லவே மாட்டேன்.. உன்னோட விஷயத்துல திரும்பத் திரும்ப என்ன நீ பேச வைக்கிற.. இப்போ நீ நான் சொன்னதை பண்ணலைன்னா விபரீதம் வேற மாதிரி இருக்கும்..” என்றவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளின் தேகம் சில்லிட்டது.
“எல்லாத்துக்கும் ரெடியா தானே வந்த..?”
சாட்டை அடியாய் அவனிடமிருந்து கேள்வி வெளிவந்தது.
இதழ்களை அழுத்தமாகக் கடித்துக் கொண்டாள் அவள்.
“இ.. இதுக்கு பதிலா நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் ப்ளீஸ்.. இத மட்டும் என்ன பண்ண சொல்லாதீங்க..” என அழுகையோடு வெளிவந்தன அவளுடைய வார்த்தைகள்.
“ஊப்ஸ்… உனக்கு ஆப்ஷனே கிடையாது பேப்.. நீ இத பண்ணித்தான் ஆகணும்..” என்றன அவனுடைய தடித்த அதரங்கள்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 54
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,014
2 thoughts on “20. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
Chee nee manusaney illai
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬👿👿👿💀💀💀