20. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(17)

வரம் – 20

ஷர்வாதிகரனின் முகத்திலோ புன்னகை நிலைத்திருந்தது.

அரவிந்தனின் பெயரைச் சொல்லி தன்னைக் கூப்பிடக்கூடாது என அவன் கட்டளை போல் கூறியதும் அவளுடைய முகம் சட்டென மாறிய விதத்தை எண்ணி மீண்டும் அவனுடைய முகத்தில் புன்னகை பெரிதாக விரிய தன் தலையை இடம் வலமாக அசைத்து அந்த நினைவை தன்னை விட்டு விலக்க முயன்றாள் அவன்.

அவள் அங்கிருந்து சென்றதும் அறைக் கதவைப் பூட்டிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

இப்போதெல்லாம் அடிக்கடி அவளுடைய கண்ணீரைக் காண முடிகின்றது.

அவளுடைய நேத்திரங்களில் இருந்து வழியும் கண்ணீர் தன்னை பலவீனமாக்குவதைப் போல உணர்ந்தவன் அவளிடம் கவனத்தை செலுத்தக்கூடாது என மூளைக்கு கட்டளை விதித்து விட்டு குளித்து முடித்து ஷார்ட்ஸ் ஒன்றை எடுத்து அணிந்தவாறு படுக்கையில் தொப்பென விழுந்தான்.

அரவிந்தனைப் போல நடிக்கப் போவது சரியாக வருமா என்ற கேள்வி அவனுக்குள் மீண்டும் தோன்றியது.

அடுத்த கணமே அவளுக்காக எது வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற எண்ணம் எழுந்து அந்தக் கேள்வியை அப்படியே உள்ளே தள்ளியது.

அவனுடைய சிந்தனையோ இப்போது தன்னுடைய வைரத்தின் மீது திரும்ப அரவிந்தனுக்கு அழைத்துப். பேசலாமா என எண்ணியவன் அதே கணம் தன்னுடைய அலைபேசி சிணுங்குவதைக் கண்டு அதனை எடுத்து யார் எனப் பார்த்தான்.

தன்னுடைய அன்னை அழைப்பதைக் கண்டதும் அவனுடைய முகமோ இயல்பாக மாறியது.

அடுத்த நொடியே அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்,

“ஹாய் மாம்… என்ன என்னை மிஸ் பண்றீங்க போல…?” எனக் கேட்க,
அவரோ கோபமான குரலில்,

“அதுக்குள்ள உனக்கு அப்படி என்னடா அவசரம்..? அம்மாகிட்ட கூட சொல்லாம அந்தப் பொண்ணோட வீட்டுக்கு எதுக்காகப் போன..?” என அவர் கோபமாகக் கேட்க இவனுக்கோ உடல் இறுகியது.

“அம்மா உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என்ன வேவு பார்க்காதீங்கன்னு.. நான் என்ன பண்றேன் எங்க போறேன்னு எதுக்காக ஆராய்ஞ்சிக்கிட்டே இருக்கீங்க..? திஸ் இஸ் டூ மச் மா..” என்றவனின் குரலில் அப்பட்டமாக எரிச்சல் வெளிப்பட்டது.

“டேய் நான் உன் அம்மாடா.. நீ இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்.. என்னதான் பிஸ்னஸ் விஷயம்னு நீ பொய் சொல்லிட்டு போனாலும் நீ எங்க போய் இருக்கேன்னு எனக்குத் தெரியாமப் போகும்னு நினைச்சியா..?” என அவர் சற்று அழுத்தமான குரலில் கேட்க தன்னுடைய கரத்தை சிகைக்குள் கோர்த்து அழுத்தமாக வருடியவன் “சரி ஓகே… ஃபைன் நீங்க சொன்ன இடத்துலதான் இருக்கேன் சொல்லுங்க…” என்றான்.

“அன்னைக்கு அந்தப் பொண்ணோட போட்டோவ உன்னோட ரூம்ல பார்த்தப்போவே எனக்குத் தெரிஞ்சு போச்சு… அந்த பொண்ண உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு… அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா என்ன குறைஞ்சா போயிருவ..?”

“ஐயோ அம்மா புரியாம பேசாதீங்க… என் பொறுமைக்கும் அளவு இருக்கு… அவ எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக மட்டும்தான் அங்க வந்திருந்தா…”
“எஸ் எனக்கு எல்லாமே தெரியும்.. அவ இங்க வந்தது உன்னோட எதிரி மாதிரி சண்டை போட்டது எல்லாமே நம்ம டைமண்ட்டை கண்டுபிடிக்கிறதுக்காகத் தானே..? ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சது.. நான் கூட அவ அரவிந்தனோட உண்மையான காதலின்னு நினைச்சிட்டேன்… அப்புறமாதான் இது எல்லாமே நடிப்புன்னு தெரிய வந்துச்சு.. உனக்கு அந்தப் பொண்ணை ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும்பா… அதனாலதான் அவளோட அப்பாகிட்ட ஃபோன் பண்ணி பேசினேன்..” என்றதும் அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“வாட்….? மோஹியோட அப்பா கிட்ட பேசினீங்களா…? எப்போ…?’ என அதிர்ந்து போய் கேட்டான் அவன்.
“இப்போ நீ எதுக்குடா இப்படி ஷாக் ஆகுற..? அவர்கிட்டேயும் ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பேசினேன்..” என்றார் அவர்.

“ஓ மை காட்…. என்கிட்ட கேட்காம ஏன்மா இப்படி எல்லாம் பண்றீங்க..? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..? டாமிட்…” என சினந்தவன் தன் தாயுடைய அமைதியில் நிதானித்தான்.

“அவ நிஜமாவே அரவிந்தனதான் லவ் பண்றாம்மா… என்ன லவ் பண்ணல… என்கூட சண்டை போட்டது மட்டும்தான் நாடகம்… மற்றது எல்லாமே நிஜம்தான்… அவங்க அப்பாக்கு அவ அரவிந்தனைக் காதலிக்கிறது நல்லாவே தெரியும்…” என்றான் அவன்.

“ஐயோ என்னடா சொல்ற..? அப்போ அவ உன்னைக் காதலிக்கலையா..?” என அவனுடைய அன்னை கேட்டதும் அவனுக்கோ இதயத்தில் சுருக்கென வலித்தது.

அந்த பாக்கியம்தான் தனக்கு இல்லையே என வேதனையோடு எண்ணியவன்,
“இல்லம்மா…” என்றான்.

அவனுக்கோ குரல் கரகரப்பாக மாறிவிட அவனுடைய அன்னையின் குரலும் தழுதழுத்துப் போனது.

“க.. கண்ணா… சாரிப்பா நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டு உனக்கு நல்லது பண்றேன்னு நினைச்சு இப்படி எல்லாம் பண்ணிட்டேன்… அம்மாவ மன்னிச்சிடுப்பா..” என அழுகை கலந்த குரலில் கூற பெருமூச்சோடு
“ப்ளீஸ் டோன்ட் க்ரை மாம்..”

“ம்ம்….”

“எப்படி மோஹி அப்பாவோட காண்டாக்ட் உங்களுக்குக் கிடைச்சுது..?”

“என்னப்பா என்னால இதைக்கூட கண்டுபிடிக்க முடியாதா..?” என அவர் கூற மூச்சை நிதானமாக உள்ளே இழுத்து வெளியே விட்டவன்,

“ஓகே இத நான் பாத்துக்கிறேன்.. மோஹியோட அப்பாக்கு நான் யாருன்னு தெரியுமா..?”

“ம்ம் தெரியும்…”

“வாட்… தெரியுமா…? எப்படி..? என்னோட போட்டோ பார்த்திருக்காரா…?” என அவன் சற்றே பதற்றத்தோடு கேட்க,

“ஆமாம்பா போட்டோ ஆல்ரெடி அவருக்கு அனுப்பிட்டேன்.. உடம்பு சரியில்லைன்னு சொன்னாரு.. ரெண்டு நாளைக்கு அப்புறமா அவரே பேசுறேன்னு சொன்னாரு… ஆனா இப்போ வரைக்கும் கால் பண்ணலை…” என கலக்கமான குரலில் கூறினார் ஷர்வாவின் அன்னை.

“ஓ நோ..” என தன் நெற்றியை அழுத்தமாக வருடி விட்டான் அவன்.

இப்போது அவளுடைய தந்தை தன்னைப் பார்த்தால் தான் யார் என்பதை தெரிந்து கொள்வாரே..!!

மோஹி வேறு தன்னை அரவிந்தன் என அறிமுகப்படுத்தப் போவதாக கூறியிருக்க அவள் பொய் கூறுவது அம்பலம் ஆகி விடுமே என எண்ணியவன்,

“ஓகே மாம் நான் அப்புறமா உங்களுக்கு கால் பண்றேன்…. இதுக்கு மேல நீங்க எனக்கு நல்லது பண்றதுன்னு யார் கூடவும் பேசாதீங்க ப்ளீஸ்… மோஹி அப்பாவே கால் பண்ணாலும் அதை அட்டென்ட் பண்ணாதீங்க..” என்றவன் அவர் பதில் கூறுவதற்கு முன்னரே அழைப்பைத் துண்டித்து விட்டு நேரத்தை பார்த்தான் அவன்.

இந்த அறைக்குள் அவன் வந்தே நான்கு மணி நேரம் கடந்து விட்டதை உணர்ந்தவன் மோஹஸ்திரா தன்னுடன் அரவிந்தன் வந்திருக்கிறான் என பொய் கூறுவதற்கு முதல் அவளிடம் அனைத்தையும் கூற வேண்டும் என எண்ணி அவன் வேகமாக அறையை விட்டுச் செல்ல அவனை நோக்கி வந்தார் ராம்.

“அங்கிள் மோஹி எங்க..?”

“பாப்பா அவ அப்பா கூட பேசிக்கிட்டு இருக்கா… உங்கள வரச் சொன்னாங்க…” என ராம் கூற அவனுக்கோ உடல் இறுகியது.

சரி பாத்துக்கலாம் என எண்ணியவன் தன்னுடைய முகத்தில் எதையும் காட்டாமல் மோஹஸ்திராவின் தந்தை இருந்த அறைக்குள் நுழைய மோஹியுடன் பேசிக் கொண்டிருந்த அவளுடைய தந்தையோ அவனை ஆழ்ந்து பார்த்தார்.

“அப்பா இவர்தான் அரவிந்தன்..” என அவள் தன்னுடைய தந்தைக்கு தன்னை அறிமுகப்படுத்தி வைக்க போச்சுடா என எண்ணினான் அவன்.
அரவிந்தனை அவர் இதுவரைக்கும் நேரில்தான் பார்க்கவில்லை.. புகைப்படத்தில் கூடவா பார்க்காது விட்டார்..? என எண்ணிக் கொண்டவன் எப்படியும் தன்னை இவர் கண்டு கொள்வார் என எண்ணியவாறு அவரைப் பார்க்க,

“எப்படி இருக்கப்பா..? உன்ன எத்தனை தடவை பாக்குறதுக்காக நான் கூப்பிட்டேன்… ஒரு தடவை கூட என்னைப் பார்க்க நீ வரவே இல்லையே…” என சற்று கவலை மீதூறிய குரலில் அவளுடைய தந்தை பேச அவனுக்கோ குழப்பமே கூடியது.

இவர் என்னை கண்டு கொள்ளவில்லையா..?

ஒருவேளை தன் அன்னை அனுப்பிய புகைப்படத்தை இவர் சரியாக பார்க்கவில்லையோ..?

எப்படியோ தன்னை அரவிந்தன் என அவர் நம்பி விட்டார் என எண்ணியவன்,

“சாரி அங்கிள் வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு.. அதனால தான் வர முடியல..” என அவருக்கு பதில் கொடுக்க புரிந்து கொண்டாற் போல சோர்வாக தலையை அசைத்தார் அவர்.

“என்னோட நாட்கள் ரொம்ப அதிகமா இல்லைன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு…” என குரல் நடுங்கியவாறு அவர் கூற பதறிப் போனாள் மோஹஸ்திரா.

“அப்பா அப்படியெல்லாம் எதுவுமே இல்லை… கொஞ்ச நாள்லையே நீங்க குணமாயிடுவீங்க..” என அவருடைய கையைப் பற்றியவாறு அவள் கண்ணீரோடு கூற மறுப்பாக தலை அசைத்தவர்,

“நம்ம குடும்ப லாயரை இன்னைக்கு வரச் சொல்லி இருக்கேன்.. அதே மாதிரி நான் நல்லா இருக்கும் போதே உன்னோட கல்யாணத்தையும் பார்க்கணும்னு ஆசைப்படுறேன் பாப்பா.. நீயும் இந்த தம்பியும் இங்கேயே என் முன்னாடி கல்யாணம் பண்ணிக்கோங்க… இதுதான் அப்பாவோட கடைசி ஆசை..” எனக் கூறிவிட்டு அவர் விழிகளை சோர்வாக மூடிக்கொள்ள அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“ப்பா… என்னப்பா இப்படிலாம் கடைசி ஆசை அது இதுன்னு பேசுறீங்க.. இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்பா..? முதல்ல நீங்க சரியாகி வாங்க…” என அவள் அழுகையோடு கூற அதற்கு மேல் பேச முடியாது என்பதைப்போல அவர் அப்படியே விழி மூடித் தூங்கிவிட இவளுக்கோ உள்ளமும் உடலும் ஒரு சேர அதிர்ந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

1 thought on “20. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!